Madras Murasu

ரயில்வேயில் 4,029 பணியிடம்..! டிப்ளமோ, டிகிரி பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய ரயில்வேயில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRB) சார்பில் Centralised Employment Notice (CEN) No. 04/2026 வெளியிடப்பட்டு, தற்போது 4,029 பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

முதலில் வெளியிடப்பட்ட விரிவான CEN 04/2026 அறிவிப்பில் 3,993 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. பின்னர் 18 ஆகஸ்ட் 2026 அன்று வெளியான Corrigendum-1 மூலம் Chemical & Metallurgical Assistant (CMA) பணிக்கு 35 இடங்களும், JE/Electrical/TRS பிரிவில் ஒரு இடமும் சேர்க்கப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 4,029 ஆக உயர்ந்துள்ளது.

எந்தப் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு?

இந்த ஆட்சேர்ப்பில் முக்கியமாக,

  • Junior Engineer (JE)
  • Depot Material Superintendent (DMS)
  • Chemical & Metallurgical Assistant (CMA)

ஆகிய பணிகள் இடம்பெற்றுள்ளன. JE பணிகளில் Electrical, Civil & Allied Engineering, Mechanical, Signal & Telecommunication உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன.

4,029 பணியிடங்கள் எப்படி?

முதற்கட்ட விரிவான அறிவிப்பில் 3,993 இடங்கள் அறிவிக்கப்பட்டன. பின்னர்:

CMA – 35 பணியிடங்கள்
JE/Electrical/TRS – 1 பணியிடம்

என கூடுதலாக 36 இடங்கள் சேர்க்கப்பட்டதால்,

3,993 + 36 = 4,029 பணியிடங்கள்

என்ற நிலைக்கு ஆட்சேர்ப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கல்வித்தகுதி

JE உள்ளிட்ட பொறியியல் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு Diploma in Engineering அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட பிரிவில் B.E./B.Tech படித்தவர்களும் தகுதி பெறும் பணிகள் உள்ளன. (Three years Diploma in Engineering or Bachelor’s degree in
Engineering/Technology),

பாடங்கள் : Mechanical and Allied Engineering, Electrical and Allied Engineering, Electronics and Allied Engineering, Civil and Allied Engineering (B.Sc. in Civil Engineering of 3 years duration.). மேலும், புதியதாக சேர்க்கப்பட்ட CMA பணிக்கு Physics மற்றும் Chemistry பாடங்களுடன் B.Sc. படித்திருப்பது உள்ளிட்ட குறிப்பிட்ட கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிப்பதற்கு முன் தாங்கள் தேர்வு செய்யும் Category Number-க்கான கல்வித்தகுதியை சரிபார்ப்பது அவசியம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 33 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். வயது கணக்கிடும் தேதி 01.01.2027 ஆகும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?

இந்தப் பணிகள் 7-வது மத்திய ஊதியக் குழுவின் Pay Level-6 கீழ் வருகின்றன.

ஆரம்ப அடிப்படை ஊதியம்: ₹35,400

இதனுடன் விதிமுறைகளின்படி DA, HRA மற்றும் பிற அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.

முக்கிய தேதிகள்

ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: 14.08.2026
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.09.2026 இரவு 11.59 மணி
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 15.09.2026
விண்ணப்பத் திருத்த காலம்: 16.09.2026 முதல் 25.09.2026 வரை
Scribe விவரங்களைச் சமர்ப்பிக்கும் காலம்: 26.09.2026 முதல் 30.09.2026 வரை

CBT-I மற்றும் CBT-II தேர்வு தேதிகள் பின்னர் RRB மூலம் அறிவிக்கப்படும்.

தேர்வு முறை

தேர்வு நடைமுறை பொதுவாக:

முதற்கட்ட CBT → இரண்டாம் கட்ட CBT → ஆவணச் சரிபார்ப்பு → மருத்துவப் பரிசோதனை

என்ற அடிப்படையில் நடைபெறும். CBT தேர்வுகளில் தவறான பதில்களுக்கு 1/3 மதிப்பெண் கழிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

பொதுப் பிரிவினருக்கு ₹500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC, ST, முன்னாள் ராணுவத்தினர், PwBD, பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் மற்றும் EBC உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவினருக்கு ₹250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வில் கலந்து கொண்ட பிறகு விதிமுறைகளின்படி கட்டணத் தொகை திருப்பி வழங்கப்படும்.

சென்னை RRB-க்கு எத்தனை இடங்கள்?

சமீபத்திய திருத்தப்பட்ட பட்டியலின்படி RRB சென்னை பகுதியில் 377 பணியிடங்கள் உள்ளன. இதில் புதியதாக சேர்க்கப்பட்ட CMA பணியிடங்களும் அடங்குகின்றன. RRB வாரியாக Kolkata 457, Mumbai 411, Chennai 377, Prayagraj 341, Guwahati 333 உள்ளிட்ட எண்ணிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியது

விண்ணப்பதாரர்கள் ஒரே ஒரு RRB-ஐ மட்டுமே தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட RRB-களுக்கு விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதுடன், விதிமுறைகளின்படி தகுதி நீக்கம் செய்யப்படலாம். மேலும், தேர்வு செய்யும் RRB என்பது தேர்வு/ஆட்சேர்ப்பு நிர்வாகத்திற்கானது; அது எதிர்கால பணியிடம் அந்த நகரிலேயே இருக்கும் என்று பொருளல்ல.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வித்தகுதி, வயது, சமூகப் பிரிவு, மருத்துவத் தரநிலை, Category Number மற்றும் RRB வாரியான காலியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

ரயில்வேயில் நிரந்தர அரசு வேலை பெற விரும்பும் Diploma, B.E./B.Tech மற்றும் தொடர்புடைய B.Sc. படித்த இளைஞர்களுக்கு CEN 04/2026 ஒரு முக்கியமான வேலைவாய்ப்பு வாய்ப்பாக அமைந்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 13 செப்டம்பர் 2026 என்பதால், கடைசி நேரம் வரை காத்திருக்காமல் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிப்பது நல்லது.

அதிகாரப்பூர்வ RRB இணையதளங்களில் மட்டுமே அறிவிப்புகளைப் பார்த்து விண்ணப்பிக்க வேண்டும். RRB தளமும் போலி இணையதளங்கள் மற்றும் இடைத்தரகர்கள் குறித்து விண்ணப்பதாரர்களை எச்சரித்துள்ளது. அதிகாரப்பூர்வ இணையத்தளம் : https://www.rrbapply.gov.in/#/auth/landing

 

Scroll to Top