Madras Murasu

சென்னையில் பிரதமர் மோடி..! முழு விபரம்

பிரதமர் நரேந்திர மோடி நாளை 2026 அக்டோபர் 11 தமிழ்நாட்டின் சென்னைக்கு வருகை தரவுள்ளார். காலை சுமார் 11:30 மணியளவில், அவர் சென்னை மெட்ரோவில் போரூர் புறவழிச்சாலை நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் வரை சென்று திரும்புகிறார். மதியம் சுமார் 12:15 மணியளவில், அவர் சென்னையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்கிறார். அதைத் தொடர்ந்து, அவர் சென்னை ஐஐடி-ல் உள்ள மூளை ஆராய்ச்சி மையத்தை நேரில் பார்வையிடுவார்.

பிற்பகல் சுமார் 1:30 மணியளவில், ரூ.13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், அவர் இந்நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். சுமார் ரூ.4,900 கோடி செலவில் கட்டப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமான பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர், தேசிய நெடுஞ்சாலை 744-ன் 36 கிலோ மீட்டர் நீளமுள்ள, நான்கு வழிச்சாலையான வடுகப்பட்டி – தெற்கு வெங்கநல்லூர் சாலையைத் திறந்து வைக்கிறார்.  மேலும் அவர் தேசிய நெடுஞ்சாலை 744ஏ-ன் 30 கிலோ மீட்டர் நீளமுள்ள, நான்கு வழிச்சாலையான மதுரை சுற்றுச் சாலைப் பகுதியையும் திறந்து வைக்கிறார். தேசிய நெடுஞ்சாலை 83-ன் நாகப்பட்டினம்-தஞ்சாவூர் பிரிவில் நான்கு வழி திருவாரூர் புறவழிச் சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

ரூ.750 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். காரைக்கால்-பேரளம் ரயில் பாதையையும், கோயம்புத்தூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள மூன்று ரயில் மேம்பாலங்களையும் அவர் திறந்து வைக்கிறார். அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட பழனி, வேலூர் கண்டோன்மென்ட், அம்பாசமுத்திரம், பரமக்குடி, நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள ஐந்து ரயில் நிலையங்களையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

தமிழ்நாட்டில் கடல்சார் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், சரக்கு கையாளும் திறனை அதிகரிக்கவும், துறைமுகம் தொடர்பான பல திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். சென்னை துறைமுகத்தில் நான்கு உள்கட்டமைப்புத் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர், சென்னையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனத்தின் மணலி சுத்திகரிப்பு நிலையத்தில் குரூப் II/III லூப் ஆயில் பேஸ் ஸ்டாக்ஸ் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர், சென்னை ஐஐடி-யில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சென்னையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டங்களிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவை அக்டோபர் 11, 2026 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படுகிறது. நாளை முதல் பயணிகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் இந்த புதிய மெட்ரோ பாதையின் முழு ரயில் கால அட்டவணை மற்றும் நிலையங்களின் விவரங்கள் இதோ: 
🕒 ரயில் இயக்கப்படும் நேரங்கள் மற்றும் இடைவெளி
இந்த வழித்தடத்தில் தினசரி காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை இரு மார்க்கங்களிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். 
  • பீக் ஹவர்ஸ் (Peak Hours – மக்கள் கூட்டம் அதிகமுள்ள நேரம்):
      • நேரம்: காலை 8:00 முதல் 11:00 வரை மற்றும் மாலை 5:00 முதல் இரவு 8:00 வரை.
      • இடைவெளி: ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில் இயக்கப்படும்.

  • நான்-பீக் ஹவர்ஸ் (Non-Peak Hours – இதர நேரங்கள்):
      • நேரம்: காலை 7:00 – 8:00, காலை 11:00 – மாலை 5:00 மற்றும் இரவு 8:00 – 9:00.
      • இடைவெளி: ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில் இயக்கப்படும். 

  • ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள்: நாள் முழுவதும் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படும். 
  • கடைசி ரயில்: இரு முனையங்களிலிருந்தும் (பூந்தமல்லி பைபாஸ் & வடபழனி) அன்றைய தினத்தின் கடைசி ரயில் இரவு 9:00 மணிக்குக் கிளம்பும்.
Scroll to Top