acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ‘’கல்வி பங்களிப்பு ஈடு இணையில்லாதது..! காமராஜர் பிறந்த நாளில் பிரதமர் மோடி first appeared on Madras Murasu.
]]>சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“திரு கே காமராஜ் அவர்களை அவரது பிறந்த தினத்தில் நினைவுகூர்கிறேன். அவரின் தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைமைப் பண்புக்காகவும், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய பணிகளுக்காகவும் பெரிதும் மதிக்கப்படுகிறார். கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையில்லாதது. அவரது எண்ணங்களை நிறைவேற்றவும், நீதியும், கருணையும் மிகுந்த சமூகத்தை உருவாக்கவும் நாம் உறுதியேற்போம்”

காமராஜர் வரலாறு:
பெருந்தலைவர் என்றும், கிங் மேக்கர் என்றும், கல்விக் கண் திறந்தவர் என்றும் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா இன்று கல்வித் திருவிழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர். விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் – சிவகாமி அம்மாள் தம்பதிக்கு 1903 ஜூலை 15 அன்று மகனாகப் பிறந்தவர் காமராஜர். எளிய குடும்பத்தில் பிறந்தவர், 6 வயதுச் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தார். 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே பள்ளிச் செல்வதை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளானவர். தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அர்ப்பணிப்பதற்காக திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தவர். எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்தார்.

பல்கலைக்கழகப் படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக் கொண்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, 1954 முதல் 1963 வரை முதலமைச்சராக இருந்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் 11-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்தார். பதவியைச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவே கருதினார். சேவையில் முழுநேரம் ஈடுபடுவதற்காகப் பதவியைத் துறக்கவும் அவர் தயங்கியதில்லை. ஏழை எளிய மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற இலட்சியப் பிடிப்போடு பாடுபட்டு, இந்தியாவில் தமிழ்நாட்டிற்குத் தனிப் பெருமை தேடித் தந்தார். ஜவஹர்லால் நேரு மறைந்தபோது இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் தனிப் பெருந்தலைவராக காமராஜர் செயல்பட்டார்.
காமராஜர் கர்ம வீரர் என்றும், கிங் மேக்கர் என்றும், ஏழைப் பங்காளன் போன்றும் போற்றப்பட்டவர். இளம் வளதியலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பல முறை சிறை சென்றார். நாட்டு விடுதலைக்காக 9 ஆண்டுகள் சிறையிலிருந்தார். 1940-ல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். 1964-ல் அகில இந்திய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நேருவின் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமரை இருமுறை தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர் காமராஜர். அதனால்தான் அவர் ‘கிங் மேக்கர்’ என அழைக்கப்படுகிறார்.

அதோடு, 1936-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலராகவும், 1937-ல் எம்.எல்.ஏ.வாகவும், 1940 முதல் 1954 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராகவும், 1941-ல் விருதுநகர் நகராட்சி தலைவராகவும், 1946-ல் எம்.எல்.ஏ.வாகவும், 1947-ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், 1949-ல் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராகவும், 1952-ல் எம்.பி.யாகவும், 1954 முதல் 1963 வரை தமிழக முதல்வராகவும், 1963 முதல் 1967 வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் 1969 மற்றும் 1971ல் எம்.பி.யாகவும் பொறுப்பு வகித்தவர் காமராஜர். 1972-ல் தாமிர பத்திர விருதும், 1976-ல் பாரத ரத்னா விருதும் பெற்றவர். காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாளில் 1975-ல் காமராஜர் மறைந்தார்.
பல்வேறு பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராஜரின் விருதுநகர் வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தில், பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் காமராஜர் வாழ்ந்த வீடு, நினைவு இல்லமாக உள்ளது. காமராஜர் பயன்படுத்திய பொருட்கள் அங்கு, காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
The post ‘’கல்வி பங்களிப்பு ஈடு இணையில்லாதது..! காமராஜர் பிறந்த நாளில் பிரதமர் மோடி first appeared on Madras Murasu.
]]>The post ”காந்தியின் லட்சியத்தை பின்பற்றுவது முக்கியம்..!” ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி first appeared on Madras Murasu.
]]>இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், லட்சியமிக்கதாகவும், தீர்க்கமானதாகவும், உலகளாவிய தெற்கின் வளர்ச்சி, கவலைகளுக்கு தீவிரமாக குரல் கொடுக்கும் செயல் சார்ந்ததாகவும் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காந்தியின் நோக்கத்தை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான மனித நேயத்தை மையமாகக் கொண்ட வழிக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறினார்.

‘ஒரே பூமி’, ‘ஒரே குடும்பம்’ மற்றும் ‘ஒரே எதிர்காலம்’ குறித்த அமர்வுகளுக்குத் தலைமை தாங்குவதாகவும், வலுவான, நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சீரான வளர்ச்சியை மேம்படுத்துவது உள்பட உலக சமூகத்திற்கு முக்கிய அக்கறை கொண்ட பல பிரச்சினைகளை உள்ளடக்குவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்காக பல தலைவர்கள் மற்றும் தூதுக்குழுத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவதையும் அவர் குறிப்பிட்டார்.
குடியரசுத்தலைவர் செப்டம்பர் 9 ஆம் தேதி தலைவர்களுக்கு இரவு விருந்து அளிப்பார் என்று பிரதமர் மேலும் கூறினார். செப்டம்பர் 10 அன்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்துவார்கள். அதே நாளில் நிறைவு விழாவில், ஜி 20 தலைவர்கள் ஆரோக்கியமான ‘ஒரே பூமி’ க்கான ‘ஒரே குடும்பம்’ போன்ற நிலையான மற்றும் சமத்துவமான ‘ஒரே எதிர்காலத்திற்கான’ தங்கள் கூட்டு பார்வையை பகிர்ந்து கொள்வார்கள்.

சமூக ஊடகத்தில் இதனைப் பகிர்ந்து, பிரதமர் கூறியிருப்பதாவது:
“2023 செப்டம்பர் 09-10 தேதிகளில் புது தில்லியின் புகழ்பெற்ற பாரத மண்டபத்தில் 18 வது ஜி20 உச்சிமாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. இந்தியா நடத்தும் முதல் ஜி20 உச்சி மாநாடு இதுவாகும். அடுத்த இரண்டு நாட்களில் உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்க்கிறேன்.
புதுதில்லி ஜி20 உச்சி மாநாடு மனித நேயத்தை மையமாகக் கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் ஒரு புதிய பாதையை வகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது என் உறுதியான நம்பிக்கை.
The post ”காந்தியின் லட்சியத்தை பின்பற்றுவது முக்கியம்..!” ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி first appeared on Madras Murasu.
]]>The post ’’அமெரிக்கா செல்வது ஏன்..?’’ பிரதமர் மோடி வெளியிட்ட தகவல் first appeared on Madras Murasu.
]]>அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன், முதல் பெண்மணி டாக்டர். ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். இந்த சிறப்பு அழைப்பு, நமது ஜனநாயக நாடுகளுக்கிடையிலான வீரியமான உயிர்ப்புமிக்க கூட்டாண்மையின் பிரதிபலிப்பாகும்.
நான் நியூயார்க்கில் இருந்து எனது பயணத்தைத் தொடங்குகிறேன், அங்கு நான் ஜூன் 21 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில், ஐ.நா தலைவர்கள் மற்றும் சர்வதேச சமுதாயத்தினருடன் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறேன். 2014 டிசம்பர் மாதம் சர்வதேச யோகா தினத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் முன்மொழிவை ஆதரித்த இடத்தில் இந்த சிறப்பு கொண்டாட்டத்தை நான் எதிர்நோக்கியுள்ளேன்.
அதன்பிறகு நான் வாஷிங்டன் டி.சி.க்கு பயணம் செய்யவுள்ளேன். 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு நான் மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பின்னர் பலமுறை அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தப் பயணம் எங்கள் கூட்டாண்மையின் வலிமையையும், பன்முகத்தன்மையையும் வளப்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும்.
இந்தியா-அமெரிக்க உறவுகள், துறைகள் தோறும் ஆழமான ஈடுபாடுகளுடன் கூடிய பன்முகத்தன்மை கொண்டவை ஆகும். பொருட்கள் மற்றும் சேவைகளில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு துறைகளில் நாம் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறோம். சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மீதான முயற்சியானது பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு, விண்வெளி, தொலைத்தொடர்பு, குவாண்டம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பயோடெக் துறைகளில் புதிய பரிமாணங்களையும் விரிவுபடுத்தப்பட்ட ஒத்துழைப்பையும் சேர்த்துள்ளது. தடையற்ற, வெளிப்படையான, உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியம் பற்றிய நமது பகிரப்பட்ட பார்வையை மேலும் மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஒத்துழைத்து வருகின்றன.
அதிபர் பைடன் மற்றும் பிற மூத்த அமெரிக்க தலைவர்களுடனான எனது கலந்துரையாடல்கள், நமது இருதரப்பு ஒத்துழைப்பை, ஜி20, குவாட் மற்றும் ஐபிஈஎஃப் போன்ற பலதரப்பு மன்றங்களிலும் ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பை வழங்கும்.
அதிபர் பைடன் மற்றும் முதல் பெண்மணி டாக்டர். ஜில் பைடன், முக்கிய விருந்தினர்கள் ஆகியோருடன் அரசு விருந்தில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு கட்சிகளும் எப்போதும் வலுவான ஆதரவை வழங்கி வருகின்றன. எனது பயணத்தின் போது, நாடாளுமன்றத்தின் தலைமையின் அழைப்பின் பேரில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வில் நான் உரையாற்றவுள்ளேன்.
நமது இருநாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கையை வளர்ப்பதில் வலுவான மக்களுக்கு இடையிலான இணைப்புகள் கருவியாக உள்ளன. நமது சிறந்த சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் துடிப்பான இந்திய-அமெரிக்க சமூகத்தைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவை மேம்படுத்துவதற்கும், நெகிழ்வுத்தன்மை கொண்ட உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதற்குமான வாய்ப்புகள் குறித்து விவாதிக்க சில முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளை நான் சந்திக்கவிருக்கிறேன்.
எனது அமெரிக்கப் பயணம் ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் சுதந்திரத்தின் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் நமது உறவுகளை வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். பகிரப்பட்ட உலகளாவிய சவால்களை சந்திப்பதில் இரு நாடுகளும் ஒன்றாக வலுவாக நிற்கின்றன.
அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியின் அழைப்பின் பேரில் நான் வாஷிங்டன் டி.சி.யிலிருந்து கெய்ரோவுக்குச் செல்லவிருக்கிறேன். முதன்முறையாக நெருக்கமான மற்றும் நட்பு நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பிரதம விருந்தினராக அதிபர் சிசியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைந்தோம். சில மாத கால இடைவெளியிலான இந்த இரண்டு பயணங்களும் எகிப்து உடனான நமது வேகமாக வளர்ந்து வரும் கூட்டாண்மையின் பிரதிபலிப்பாகும், இது அதிபர் சிசியின் பயணத்தின் போது பாதுகாப்புத் தொடர்பான ஒத்துழைப்பாக உயர்த்தப்பட்டது.
நமது நாகரிக மற்றும் பன்முகக் கூட்டாண்மைக்கு மேலும் உத்வேகத்தை அளிக்க அதிபர் சிசி மற்றும் எகிப்திய அரசின் மூத்த உறுப்பினர்களுடனான எனது கலந்துரையாடல்களை எதிர்நோக்கியுள்ளேன். எகிப்தில் உள்ள துடிப்பான இந்திய வம்சாவளி மக்களுடன் உரையாடும் வாய்ப்பும் எனக்கு கிடைக்கவுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி அறிக்கையில் கூறியுள்ளார்.
The post ’’அமெரிக்கா செல்வது ஏன்..?’’ பிரதமர் மோடி வெளியிட்ட தகவல் first appeared on Madras Murasu.
]]>The post ‘’2021 ஆம் ஆண்டு காந்தி அமைதி பரிசு – கீதா பதிப்பகம்..!’’ மோடி வாழ்த்து first appeared on Madras Murasu.
]]>அதன், மூலம் இந்து மதமான சனாதன தர்மத்தின் கொள்கைகளை பொது மக்களிடையே பரப்புவதும் பரப்புவதும் இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். மேற்கு வங்காளத்தில் கோரக்பூரில் உள்ள கீதா பதிப்பகம் உள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசு கோரக்பூரில் உள்ள கீதா பதிப்பகத்துக்கு கிடைத்துள்ளது. அதற்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்,
“2021 ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசு பெறும் கோரக்பூரில் உள்ள கீதா பதிப்பகத்தை நான் வாழ்த்துகிறேன். கடந்த 100 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களை மேம்படுத்துவதில் அவர்கள் பாராட்டத்தக்க பணிகளைச் செய்துள்ளனர். என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

The post ‘’2021 ஆம் ஆண்டு காந்தி அமைதி பரிசு – கீதா பதிப்பகம்..!’’ மோடி வாழ்த்து first appeared on Madras Murasu.
]]>The post ’’யோகா தினம் – ஊடகங்களுக்கு 33 விருதுகள்..!’’ தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் first appeared on Madras Murasu.
]]>மொத்தம் 33 விருதுகள் :
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இரண்டாவது ஊடகத் துறை விருதுகள் தொடர்பான அறிவிப்பை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 09.06.2023 அன்று வெளியிட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான விருதுகளில், 22 இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் செயல்படும் அச்சு, தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகிய மூன்று பிரிவுகளில் 33 விருதுகள் வழங்கப்படுகின்றன.

1) செய்தித்தாள்களில் யோகா தொடர்பாக சிறப்பாக வெளியிடப்படும் தகவல்களுக்காக செய்தித் தாள் பிரிவின் கீழ் 22 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும் செய்தித் தாள்களுக்கு 11 விருதுகள் வழங்கப்படுகிறது.
2) மின்னணு ஊடகங்களில் (தொலைக்காட்சி) யோகா தொடர்பாக சிறப்பாக வெளியிடப்படும் தகவல்களுக்காக தொலைக்காட்சிப் பிரிவின் கீழ் 22 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு 11 விருதுகள் வழங்கப்படுகிறது.
3) மின்னணு ஊடகங்களில் (வானொலி) யோகா தொடர்பாக சிறப்பாக வெளியிடப்படும் தகவல்களுக்காக வானொலிப் பிரிவின் கீழ் 22 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும் வானொலி நிறுவனங்களுக்கு 11 விருதுகள் வழங்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டிற்கான விருதுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி அன்று கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினம், உலகம் முழுவதும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்றும் இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
தேசங்களின் எல்லைகள் மற்றும் கலாச்சாரங்களைத் தாண்டி, யோகா கோடிக் கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கான அணுகுமுறை காரணமாக யோகா பலரது ஆர்வத்தை ஈர்த்து, உலகளாவிய நிகழ்வாக இந்த யோகா தினம் மாறியுள்ளது என்று அவர் கூறினார்.
யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதிலும், யோகாவின் திறன்களை வெளிப்படுத்துவதிலும் ஊடகங்களின் பங்கு முக்கியமானது என்றும் அவற்றின் முயற்சி இல்லாமல் யோகா தொடர்பான தகவல்களை பெரிய அளவில் பிரபலப்படுத்தி இருக்கும் இந்த முயற்சி சாத்தியமாகியிருக்காது என்றும் அவர் தெரிவித்தார். இதை அங்கீகரிக்கும் வகையில், சர்வதேச யோகா தின விருதுகளை இரண்டாவது முறையாக வழங்கத் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் யோகா தொடர்பான தகவல்களைப் பரப்புவதில் ஊடகங்கள் வகிக்கும் பங்கை இந்த விருது அங்கீகரித்துப் பாராட்டுவதாக அவர் கூறினார். யோகா என்ற பழமையான கலையையும் அதன் பல நன்மைகளையும் ஊக்குவிப்பதில் ஊடகங்களுக்கு உள்ள மகத்தான சக்தியையும் பொறுப்பையும் அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
யோகா தொடர்பான புரிதலை ஏற்படுத்தவும், அதை ஊக்குவிக்கவும், ஊடகங்கள் ஒரு ஊக்க சக்தியாக விளங்குவதாகவும் அவர் கூறினார். அனைத்து வயதினரும், எல்லா பின்னணி கொண்டவர்களும், பின்பற்றக் கூடிய உலகளாவிய நடைமுறையாக யோகாவைக் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் வெற்றி பெற்றுள்ளன என்று திரு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
இந்த விருதுகள் ஒரு சுதந்திரமான நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

10.06.2023 முதல் 25.06.2023 வரையில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் யோகா தொடர்பான கட்டுரைகள் அல்லது ஒளிபரப்பப்படவுள்ள ஆடியோ/வீடியோ உள்ளடக்கங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். விருதுக்கு விணன்ணப்பிக்கும்போது அவை தொடர்பான காட்சிகள் மற்றும் விவரங்களை, குறிப்பிட்ட வடிவத்தில் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும். விருது தொடர்பான படைப்புகளைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கக் கடைசி தேதி 2023 ஜூலை 1 (01.07.2023) ஆகும்.
இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் இணையதளமான https://pib.gov.in/indexd.aspx மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையதளமான https://mib.gov.in/ ஆகியவற்றில் காணலாம்.
சர்வதேச யோகா தின ஊடக விருதுகள்
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் யோகாவை பரப்புவதில் ஊடகங்களின் சிறந்த பங்களிப்பைப் பாராட்டும் வகையில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் 2019-ம் ஆண்டில் முதலாவது சர்வதேச யோகா தின ஊடக விருதுகளை (AYDMS) அறிவித்தது. அந்த விருது 07.01.2020 அன்று வழங்கப்பட்டது. அதன் பின்னர் கொவிட் பெருந்தொற்று பாதிப்புக் காரணமாக இந்த விருதில் இடைவெளி ஏற்பட்டது. தற்போது அந்த விருதுகளை மீண்டும் வழங்க தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
The post ’’யோகா தினம் – ஊடகங்களுக்கு 33 விருதுகள்..!’’ தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் first appeared on Madras Murasu.
]]>The post மணிப்பூர் கலவரம் 54 உயிர் பலி. அமைதி வேண்டும்..! சிபிஐ(எம்) first appeared on Madras Murasu.
]]>The post மணிப்பூர் கலவரம் 54 உயிர் பலி. அமைதி வேண்டும்..! சிபிஐ(எம்) first appeared on Madras Murasu.
]]>