acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ”பாகிஸ்தான் மற்றும் சீனா ஏற்படுத்தும் தடைகளை இது நிவர்த்தி செய்யும்..!” புதுதில்லி பிரகடனம் குறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங் first appeared on Madras Murasu.
]]>தில்லியில் நடந்து முடிந்த ஜி 20 உச்சி மாநாடு மற்றும் ஜி 20 புதுதில்லி பிரகடனம் ஆகியவை குறித்து மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் பேசினார். உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (ஐ.எம்.இ.சி) சிறப்புகள் குறித்து அப்போது அவர் குறிப்பிட்டார். ஜி 20 பாரத்-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடமானது, பிரிவினைக்குப் பிந்தைய இந்தியாவின் தேடலை மீட்டெடுக்கிறது என்று அவர் கூறினார். இதன் மூலம், பாகிஸ்தானால் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் சீனாவால் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படும் என்று அவர் கூறினார்.
புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது, உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான கூட்டு செயல்பாடு (பி.ஜி.ஐ.ஐ) மற்றும் ஐ.எம்.இ.சி.க்கான கூட்டு செயல்பாடு குறித்து அமெரிக்க அதிபர் திரு. ஜோ பைடனுடன் இணைந்து நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பின்னர் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐ.எம்.இ.சி எனப்படும் இந்த இந்தியா – மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்தார்.
வளைகுடா பிராந்தியத்தை இந்தியாவுடன் இணைக்கும் கிழக்கு வழித்தடம் மற்றும் வளைகுடா பிராந்தியத்தை ஐரோப்பாவுடன் இணைக்கும் வடக்கு வழித்தடம் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த ஐ.எம்.இ.சி எனப்படும் இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம். இதில் ரயில் மற்றும் கப்பல்-ரயில் போக்குவரத்துக் கட்டமைப்பு மற்றும் சாலைப் போக்குவரத்து பாதைகள் அடங்கும்.
இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய யூனியன், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை இந்த ஐ.எம்.இ.சி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இது குறித்து மேலும் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், சிறந்த போக்குவரத்து இணைப்பு வர்த்தகத்தை அதிகரிக்கும் என்று கூறினார். பாகிஸ்தான் மற்றும் சீனாவின் சொந்த திட்டங்களால் உருவாக்கப்பட்ட தடைகளை நீக்க இந்த ஐ.எம்.இ.சி உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியா ஒரு வழியைக் கண்டறிந்துள்ளது என்றும் அது பொருளாதார காரணங்களுக்காக மட்டுமல்லாமல், உலக சமூகத்தின் அதிக ஒருங்கிணைப்புக்காகவும் அமைந்துள்ளது என்றும் திரு ஜிதேந்திர சிங் கூறினார்.
ஜி 20 தில்லி பிரகடனம் உக்ரைன் போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை மிகவும் நியாயமான வழியில் கையாண்டது என்று அவர் தெரிவித்தார்.
முன்னணி உயிரி எரிபொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோராக உள்ள இந்தியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தலைமையிலான உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி, 2070-ம் ஆண்டுக்குள் இந்தியா கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியம் என்ற அளவுக்கு கொண்டு வருவதற்கான இலக்குகளை அடைய பெரிதும் உதவும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.
ஜி 20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் சேர்க்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அமைச்சர், ஜி 20 என்பதை ஜி 21 ஆக மாற்றியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி வரலாற்றில் இடம்பெற்றுள்ளதாக கூறினார். இந்தியாவால் வழிநடத்தப்படுவதற்கு உலகம் தயாராக உள்ளது என்பதை புதுதில்லி உச்சிமாநாடு தெளிவாக நிரூபிக்கிறது என்று ஜிதேந்திர சிங் கூறினார்.
The post ”பாகிஸ்தான் மற்றும் சீனா ஏற்படுத்தும் தடைகளை இது நிவர்த்தி செய்யும்..!” புதுதில்லி பிரகடனம் குறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங் first appeared on Madras Murasu.
]]>The post ”காந்தியின் லட்சியத்தை பின்பற்றுவது முக்கியம்..!” ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி first appeared on Madras Murasu.
]]>இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், லட்சியமிக்கதாகவும், தீர்க்கமானதாகவும், உலகளாவிய தெற்கின் வளர்ச்சி, கவலைகளுக்கு தீவிரமாக குரல் கொடுக்கும் செயல் சார்ந்ததாகவும் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காந்தியின் நோக்கத்தை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான மனித நேயத்தை மையமாகக் கொண்ட வழிக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறினார்.

‘ஒரே பூமி’, ‘ஒரே குடும்பம்’ மற்றும் ‘ஒரே எதிர்காலம்’ குறித்த அமர்வுகளுக்குத் தலைமை தாங்குவதாகவும், வலுவான, நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சீரான வளர்ச்சியை மேம்படுத்துவது உள்பட உலக சமூகத்திற்கு முக்கிய அக்கறை கொண்ட பல பிரச்சினைகளை உள்ளடக்குவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்காக பல தலைவர்கள் மற்றும் தூதுக்குழுத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவதையும் அவர் குறிப்பிட்டார்.
குடியரசுத்தலைவர் செப்டம்பர் 9 ஆம் தேதி தலைவர்களுக்கு இரவு விருந்து அளிப்பார் என்று பிரதமர் மேலும் கூறினார். செப்டம்பர் 10 அன்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்துவார்கள். அதே நாளில் நிறைவு விழாவில், ஜி 20 தலைவர்கள் ஆரோக்கியமான ‘ஒரே பூமி’ க்கான ‘ஒரே குடும்பம்’ போன்ற நிலையான மற்றும் சமத்துவமான ‘ஒரே எதிர்காலத்திற்கான’ தங்கள் கூட்டு பார்வையை பகிர்ந்து கொள்வார்கள்.

சமூக ஊடகத்தில் இதனைப் பகிர்ந்து, பிரதமர் கூறியிருப்பதாவது:
“2023 செப்டம்பர் 09-10 தேதிகளில் புது தில்லியின் புகழ்பெற்ற பாரத மண்டபத்தில் 18 வது ஜி20 உச்சிமாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. இந்தியா நடத்தும் முதல் ஜி20 உச்சி மாநாடு இதுவாகும். அடுத்த இரண்டு நாட்களில் உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்க்கிறேன்.
புதுதில்லி ஜி20 உச்சி மாநாடு மனித நேயத்தை மையமாகக் கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் ஒரு புதிய பாதையை வகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது என் உறுதியான நம்பிக்கை.
The post ”காந்தியின் லட்சியத்தை பின்பற்றுவது முக்கியம்..!” ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி first appeared on Madras Murasu.
]]>The post ”இந்தியாவின் முன்னேற்றத்தைப் பாராட்டிய உலக வங்கி தயாரித்த ஜி20 ஆவணம்..!” first appeared on Madras Murasu.
]]>டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) இந்தியாவில் ஒரு மாறுதலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இது அனைவரையும் உட்படுத்திய பொருளாதாரத்திற்கு அப்பாலும் நீட்டித்துள்ளது. உலக வங்கியால் தயாரிக்கப்பட்ட அனைவரையும் உட்படுத்திய பொருளாதாரத்திற்கான ஜி20 உலகளாவிய கூட்டாண்மை ஆவணம் (https://www.g20.org/content/dam/gtwenty/gtwenty_new/document/G20_POLICY_RECOMMENDATIONS.pdf) மத்திய அரசின் கீழ் கடந்த தசாப்தத்தில் இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பாராட்டியுள்ளது.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை வடிவமைப்பதில் மத்திய அரசு எடுத்த அற்புதமான நடவடிக்கைகள் மற்றும் அரசு கொள்கை மற்றும் ஒழுங்குமுறையின் முக்கியப் பங்கை இந்த ஆவணம் எடுத்துக்காட்டுகிறது.
அனைவரையும் உட்படுத்திய பொருளாதாரம்: இந்தியாவின் டிபிஐ அணுகுமுறையைப் பாராட்டிய உலக வங்கி ஆவணம், சுமார் ஐம்பது ஆண்டுகள் தேவைப்படுவதை வெறும் 6 ஆண்டுகளில் இந்தியா சாதித்துள்ளது.
ஜன்தன், ஆதார், செல்பேசி ஆகியவற்றை இணைத்த பணப்பரிவர்த்தனை, வயதுவந்தோரில் 2008 ஆம் ஆண்டில் 25% ஆக இருந்தது. கடந்த 6 ஆண்டுகளில் 80%-க்கும் அதிகமாகியுள்ளது. இதற்காக டிபிஐ-களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
2015 மார்ச் மாதத்தில் 147.2 மில்லியனாக இருந்த பிரதமரின் மக்கள் நிதித்திட்ட கணக்குகளின் எண்ணிக்கை ஜூன் 2022-ல் 462 மில்லியனாக மூன்று மடங்கு உயர்ந்துள்ளது; இந்தக் கணக்கு வைத்திருப்போரில் 56 சதவீதம் பேர் பெண்கள். இந்த எண்ணிக்கை 260 மில்லியனுக்கும் அதிகமாகும்
2023 மே மாதத்தில் மட்டும் சுமார் 14.89 டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள 9.41 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் நடந்துள்ளன.
2022-23 நிதியாண்டில், யுபிஐ பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீதமாகும்.
பிப்ரவரி 2023-ல் செயல்படுத்தப்பட்ட இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான யுபிஐ-பேநவ் இணைப்பு, ஜி20-ன் அனைவரையும் உட்படுத்திய பொருளாதார முன்னுரிமைகளுடன் இணைந்துள்ளது. மேலும் விரைவான, குறைந்த செலவிலான, மிகவும் வெளிப்படையான, எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.
The post ”இந்தியாவின் முன்னேற்றத்தைப் பாராட்டிய உலக வங்கி தயாரித்த ஜி20 ஆவணம்..!” first appeared on Madras Murasu.
]]>