Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#மோடி - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Thu, 09 Nov 2023 08:18:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’பாரதத்தின் அதிகாரத்தை முடிவு செய்யும் இடம் மலைக்கோட்டை..!’’ திருச்சியில் முழங்கிய அண்ணாமலை https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588 https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#respond Thu, 09 Nov 2023 07:57:19 +0000 https://madrasmurasu.com/?p=7473 ’’என்றுமே, பாரதத்தின் அதிகாரத்தை முடிவு செய்யும் இடம் மலைக்கோட்டை. தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம்’’ என்று திருச்சியில் அண்ணாமலை முழங்கினார். திருச்சியில் நடந்த ’என் மண் என் மக்கள்’ பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை, அவரது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது: என் மண் என் மக்கள் பயணம், சங்க காலத்தில் இருந்து நிகழ்காலம் வரை ஆன்மீகம், வீரம், பாதுகாப்பு, அரண் என அனைத்துத் தளத்திலும் மையப்புள்ளியாக, என்றுமே பாரதத்தின் அதிகாரத்தை முடிவு […]

The post ’’பாரதத்தின் அதிகாரத்தை முடிவு செய்யும் இடம் மலைக்கோட்டை..!’’ திருச்சியில் முழங்கிய அண்ணாமலை first appeared on Madras Murasu.

]]>
’’என்றுமே, பாரதத்தின் அதிகாரத்தை முடிவு செய்யும் இடம் மலைக்கோட்டை. தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம்’’ என்று திருச்சியில் அண்ணாமலை முழங்கினார்.

திருச்சியில் நடந்த ’என் மண் என் மக்கள்’ பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை, அவரது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

என் மண் என் மக்கள் பயணம், சங்க காலத்தில் இருந்து நிகழ்காலம் வரை ஆன்மீகம், வீரம், பாதுகாப்பு, அரண் என அனைத்துத் தளத்திலும் மையப்புள்ளியாக, என்றுமே பாரதத்தின் அதிகாரத்தை முடிவு செய்யும் இடமாக, மலைக்கோட்டை அமைந்திருக்கும் திருச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது பேரன்பு கொண்ட பொதுமக்கள் சூழ வெகு சிறப்பாக நடந்தேறியது. திருச்சிக்கு தி.மு.க அளித்த வாக்குறுதிகள் பற்றி விவரிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழின் சிறப்புக்களைக் கல்வெட்டுக்களில் பதித்து காலத்திற்கும் நிலைபெறச் செய்த நிகரில்லா மாவீரன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் ஆண்ட மண். வாஞ்சிநாதனுக்கு குரு, பாரதியாருக்கு நண்பர், வஉசி அவர்களின் வழக்கறிஞரான வ.வே.சு ஐயர் பிறந்த மண். அளப்பறியா தமிழ் தொண்டுக்கு சொந்தக்காரர். தமிழிசை இயக்கத்தை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரப்பிய கி.ஆ.பெ பிறந்த மண். தமிழகத்தின் இரு மொழி கொள்கையால் தமிழ் வளரவில்லை என்பதை அறிந்து, மும்மொழிக் கொள்கை வந்தாலும் தவறில்லை. ஆனால், தமிழை கட்டாய பாடம் ஆக்கவேண்டும் என்று வலியுறுத்தியவர். கி.ஆ.பெ அவர்களின் கோரிக்கையை நமது பாரத பிரதமர் நிறைவேற்றியிருக்கிறார். 5 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தாய் மொழியை கற்கவேண்டும் என்று 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய கல்வி கொள்கை தெரிவிக்கிறது.

திருச்சியின் வரலாற்றை யார் எழுதினாலும் பி.ஆர்.தேவரைச் சொல்லாமல் எழுதினால் அந்த வரலாறு முழுமையடையாது. தன் குடும்பத்தின் சொத்தினைத் திருச்சி மக்களுக்கும் விடுதலைப்போருக்கும் வழங்கியவர் பி.ரத்தினவேல் தேவர். திருச்சியின் தாகம் தீர்த்த தலைவர் என்று போற்றப்படுபவர். திருச்சி நகராட்சியின் வரலாற்றில் 5 முறை தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 13 ஆண்டுகள் 6 மாதங்கள் நகராட்சி நிர்வாகத்தை நடத்திய ஒரே தலைவர் பி.ஆர்.தேவர் தான்.

மாமன்னன் ராஜராஜ சோழனால் வெட்டப்பட்டது திருச்சியில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால். தொடர்ந்து கழிவு நீரை அங்கே கொட்டுவது மற்றும் ஆக்கிரமிப்புகளால், தென் தமிழகத்தில் தாமிரபரணி, கொங்கு பகுதியில் நொய்யல், சென்னையில் கூவம் போல் திருச்சியின் உய்யக்கொண்டான் வாய்க்காலை சீரழித்து விட்டனர்.

திருச்சி மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நமது மத்திய அரசு 4591 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. திருச்சி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு 951 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 1548 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் 1151 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நிறைவுபெற்றுவிட்டன. 45,376 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலம் வீடு, 3,94,338 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,02,252 வீடுகளில் இலவச கழிப்பறைகள் , 1,35,861 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 97,097 பேருக்கு , 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,47,248 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், திருச்சி மாவட்டத்திற்கு முத்ரா கடன் உதவி 8,018 கோடி ரூபாய். இவை திருச்சி மாவட்டத்துக்கு மத்திய அரசு செய்துள்ள நலத் திட்டங்கள்.

கடன் தொகையினை ஈடுகட்ட, நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பெயரில், அடமான சொத்தை ஐப்தி செய்ய சென்ற துணை வட்டாட்சியர் மீது, அமைச்சர் நேருவின் வலதுகரமான பகுதிச் செயலாளர் உள்ளிட்ட நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். நேரு ஒருத்தர் தான் பணக்காரராக இருக்கணும் என்று இவரது சொந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி புலம்புகிறார். அரசு அதிகாரிகளுக்கு ஆபாச அர்ச்சனை, கட்சி தொண்டர்களை அடிப்பது என்று ரொம்ப பிஸியாக இருக்கிறார் குறுநில மன்னர் நேரு. இதற்கிடையில், துறை பணிகளை எப்படிக் கவனிப்பார்?

வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத அடாவடி திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம்.

The post ’’பாரதத்தின் அதிகாரத்தை முடிவு செய்யும் இடம் மலைக்கோட்டை..!’’ திருச்சியில் முழங்கிய அண்ணாமலை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/feed/ 0
”பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் தமிழ்நாட்டில் இதுவரை 14,000 பேர் பதிவு செய்துள்ளனர்..!” https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25be-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf/#respond Fri, 03 Nov 2023 09:04:36 +0000 https://madrasmurasu.com/?p=7354 தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக 31.10.2023 வரை 14 ஆயிரத்து 211 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர். 31.10.2023 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5510 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 1568 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2287 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1282 பேரும் பதிவு செய்துள்ளனர். இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் 384 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 1286 பேரும், […]

The post ”பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் தமிழ்நாட்டில் இதுவரை 14,000 பேர் பதிவு செய்துள்ளனர்..!” first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக 31.10.2023 வரை 14 ஆயிரத்து 211 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர். 31.10.2023 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5510 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 1568 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2287 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1282 பேரும் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் 384 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 1286 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 1894 பேரும் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயனடைய தேர்வு செய்யப்படுவதற்கு மூன்றடுக்கு சரிபார்ப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.

பதிவு செய்தவர்கள் தொடர்பான மூன்று கட்ட சரிபார்ப்பு நடைமுறைகளுக்குப் பின்னர் இத்திட்டத்தில் பயனடைவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இத்திட்டம் 17.09.2023 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. https://pmvishwakarma.gov.in/ என்ற இணையம் மூலம் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

The post ”பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் தமிழ்நாட்டில் இதுவரை 14,000 பேர் பதிவு செய்துள்ளனர்..!” first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0
’’எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும்..!’’ பிரதமர் மோடி https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2587%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/#respond Thu, 02 Nov 2023 06:58:37 +0000 https://madrasmurasu.com/?p=7322 “மாற்றுத் திறனாளிகள் விளையாட்டில் வெற்றி பெறுவது என்பது விளையாட்டில் மட்டும் உத்வேகம் அளிக்கும் விசயம் அல்ல – அது வாழ்க்கையில் உத்வேகம் அளிக்கும் விசயம். ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் பங்கேற்பது மனிதக் கனவுகளின் வெற்றி. நாம் நமது பெருமைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும்” என்று ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். புதுதில்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டு […]

The post ’’எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும்..!’’ பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
“மாற்றுத் திறனாளிகள் விளையாட்டில் வெற்றி பெறுவது என்பது விளையாட்டில் மட்டும் உத்வேகம் அளிக்கும் விசயம் அல்ல – அது வாழ்க்கையில் உத்வேகம் அளிக்கும் விசயம். ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் பங்கேற்பது மனிதக் கனவுகளின் வெற்றி. நாம் நமது பெருமைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும்” என்று ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

புதுதில்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட இந்தியக் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த சாதனை படைத்த விளையாட்டு வீரர்களைப் பாராட்டவும், எதிர்கால போட்டிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கவும் பிரதமரின் ஒரு முயற்சியாக இந்த செயல்பாடு அமைந்துள்ளது.

மோடி நன்றி தெரிவித்தார்

பாரா விளையாட்டு வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அவர்களைச் சந்திக்கவும், அவர்களின் அனுபவங்களைக் கேட்கவும் ஆவலாக இருப்பதாகக் கூறினார். வீரர்கள் இங்கு வரும்போதெல்லாம் புதிய நம்பிக்கைகளையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வருவதாகப் பிரதமர் கூறினார். தாம் இங்கு வந்திருப்பது ஒரு விஷயத்திற்காக மட்டுமே என்றும், அது பாரா தடகள வீரர்களின் வெற்றிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக எனவும் அவர் தெரிவித்தார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் முன்னேற்றங்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்ததாக அவர் கூறினார். இந்திய வீரர்களின் பங்களிப்புகளைப் பாராட்டிய பிரதமர், அவர்களின் பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினரையும் பாராட்டினார். நாட்டின் 140 கோடி மக்கள் சார்பாக அவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

மிகப்பெரிய சாதனை

விளையாட்டுகள் மிகவும் போட்டித்தன்மை கொண்டவை எனக் கூறிய பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடும்போது தங்களுக்குள் ஏற்படும் போட்டி குறித்து எடுத்துரைத்தார். விளையாட்டு வீரர்களின் மிக உயர்ந்த பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார். வீரர்கள் அனைவரும் இங்கிருந்து சென்று சிலர் வெற்றியாளர்களாக திரும்பி வந்துள்ளனர் என்றும் மேலும் சிலர் கற்றுக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் யாரும் தோல்வியடைந்து திரும்பி வரவில்லை என்று பிரதமர் தெரிவித்தார். விளையாட்டில் தோல்வி என்பது இல்லை எனவும் வெற்றி அல்லது கற்றுக் கொள்ளுதல் மட்டுமே உண்டு என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 140 கோடி மக்களிடையே இந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாரா தடகள வீரர்களுக்கு மிகப்பெரிய சாதனை என்றும் அவர் கூறினார். இந்த வீரர்களின் வெற்றி முழு நாட்டிற்கும் உத்வேகம் அளிப்பதுடன் மக்கள் மத்தியில் ஒரு பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

வெற்றிகரமான பதக்க எண்ணிக்கை

இந்த 111 பதக்கங்கள் வெறும் எண்கள் அல்ல எனவும் 140 கோடி மக்களின் கனவுகள் என்றும் அவர் கூறினார். இந்த எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என்றும், தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோல் பதக்கப் பட்டியலில் இந்தியா 15 வது இடத்திலிருந்து முதல் 5 இடத்திற்கு முன்னேறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் விளையாட்டுத் துறையில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் பெற்ற வெற்றி மிகப் பெரிய வெற்றி என்றார். ஆகஸ்ட் மாதம் புத்தபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆண்கள் அணியின் முதல் தங்கப் பதக்கம், டேபிள் டென்னிஸில் பெண்கள் இணையின் முதல் பதக்கம், ஆண்கள் பேட்மிண்டன் அணியின் தாமஸ் கோப்பை வெற்றி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 28 தங்கப் பதக்கங்கள் உள்பட 107 பதக்கங்கள் மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான பதக்க எண்ணிக்கை ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் உற்சாகப்படுத்தும்

பாரா விளையாட்டுகளின் சிறப்புத் தன்மையை எடுத்துரைத்த பிரதமர், மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு வெற்றி என்பது விளையாட்டில் மட்டும் உத்வேகமளிக்கும் விசயம் அல்ல என்றும் அது வாழ்க்கையில் உத்வேகம் அளிக்கும் விசயம் என்றும் குறிப்பிட்டார். விரக்தியின் பிடியில் எவ்வளவு ஆழமாக இருந்தாலும் செயல்திறன் எந்தவொரு நபரையும் மீண்டும் உற்சாகப்படுத்தும் என்று பிரதமர் கூறினார். விளையாட்டு சமூகமாக இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும், விளையாட்டு கலாச்சாரம் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். 2030-ம் ஆண்டு இளைஞர் ஒலிம்பிக் மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா முயற்சிக்கிறது என்று அவர் கூறினார்.

விளையாட்டில் குறுக்குவழிகள் எதுவும் இல்லை என்று கூறிய பிரதமர், வீரர்கள் தங்கள் சொந்த திறன்களை நம்புகிறார்கள் என்றார். ஆனால் ஒரு சிறிய உதவி பன்மடங்கு பலன்களை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். குடும்பங்கள், சமூகம், நிறுவனங்கள் மற்றும் பிற ஆதரவுச்சூழல்கள் இணைந்து கூட்டு ஆதரவு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

டாப்ஸ் எனப்படும் ஒலிம்பிக் பதக்கம்

சமூகம் முந்தைய காலங்களைப் போலல்லாமல், இப்போது விளையாட்டை ஒரு தொழில்முறையாக அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். அரசுக்காக விளையாட்டு வீரர்கள்’ என்ற நிலை மாறி விளையாட்டு வீரர்களுக்கான அரசு என்ற அணுகுமுறையில் தற்போதைய அரசு மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களின் கனவுகளை அரசு அங்கீகரிப்பதை, அதன் கொள்கைகள், அணுகுமுறை மற்றும் சிந்தனையில் காணலாம் என்று பிரதமர் கூறினார். முந்தைய அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கான உள்கட்டமைப்பு, பயிற்சி வசதிகள் மற்றும் பண உதவி போன்றவற்றை முறையாக வழங்காததால் வீரர்கள் வெற்றியை எட்டுவதில் பெரும் தடை ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில், நாடு பழைய முறைகள் மற்றும் பழைய அணுகுமுறையிலிருந்து மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார். அரசின் இன்றைய அணுகுமுறை விளையாட்டு வீரர்களை மையமாகக் கொண்டது என்று கூறிய பிரதமர், அது தடைகளை அகற்றி அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பதை சுட்டிக் காட்டினார். ஆற்றலுடன் இணைந்த தளம் செயல்திறனை வெளிப்படுத்தும் என்று அவர் கூறினார். ஆற்றல் என்பது தேவையான தளத்தைப் பெறும்போது செயல்திறன் ஊக்கம் பெறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். விளையாட்டு வீரர்களை அடித்தள நிலையில் இருந்து அடையாளம் கண்டு அவர்களின் திறமையை வளர்ப்பதன் மூலம் வெற்றிக்கு வழிவகுக்கும் கேலோ இந்தியா திட்டத்தைப் பிரதமர் குறிப்பிட்டார். டாப்ஸ் எனப்படும் ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்ட முன்முயற்சி மற்றும் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் பயிற்சி மையம் ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார்.

பெருமை சேர்ப்பார்கள்

சிரமங்களை எதிர்கொள்ளும் விளையாட்டு வீரர்களின் மீள்திறன் நாட்டுக்கு மிகப்பெரிய பங்களிப்பாகும் என்று பிரதமர் கூறினார். வீரர்கள் இதுவரை கடக்க முடியாத தடைகளை கடந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இந்த உத்வேகம் எல்லா இடங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் பாராட்டினார். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பாரா தடகள வீரர்களிடமிருந்து உத்வேகம் பெறுகிறார்கள் என அவர் தெரிவித்தார். ஒவ்வொரு போட்டியிலும் இந்த வீரர்கள் பங்கேற்பது மனித கனவுகளின் வெற்றி என அவர் குறிப்பிட்டார். இந்த வீரர்கள் கடினமாக உழைத்து நாட்டிற்கு மேலும் பெருமை சேர்ப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த அரசு விளையாட்டு வீரர்களுடன் உள்ளது எனவும் நாடும் வீரர்களுடன் உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

வளரந்த இந்தியாவாக மாறும்

நாம் நமது பெருமைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார். நாம் உலகின் முதல் 5 பொருளாதாரங்களில் ஒன்றாக முன்னேறியுள்ள சூழலில் அடுத்த பத்து ஆண்டிற்குள் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக முன்னேறுவோம் என அவர் தெரிவித்தார். 2047-ம் ஆண்டில் இந்த நாடு வளரந்த இந்தியாவாக மாறும் என உறுதியாகக் கூறுவதாகத் தெரிவித்துப் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், இந்திய பாராலிம்பிக் குழுத் தலைவர் தீபா மாலிக், மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் நிசித் பிரமானிக் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

2018-ம் ஆண்டு செயல்திறனைவிட 54 சதவீதம் அதிகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 29 தங்கப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 111 பதக்கங்களை வென்றது. அண்மையில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மொத்த பதக்க எண்ணிக்கை முந்தைய 2018-ம் ஆண்டு செயல்திறனைவிட 54 சதவீதம் அதிகமாகும். 29 தங்கப் பதக்கங்களை இப்போட்டியில் இந்தியா வென்றுள்ளது. இது 2018-ல் வென்றதை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள், அவர்களின் பயிற்சியாளர்கள், இந்திய பாராலிம்பிக் கமிட்டி மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகள், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post ’’எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும்..!’’ பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/feed/ 0
’’வளர்ந்த பாரதத்தின் புதிய பயணத்தைத் தொடங்குவோம்..!’’ அமிர்தக் கலச யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25b3%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4/#respond Wed, 01 Nov 2023 05:26:56 +0000 https://madrasmurasu.com/?p=7282 ’’நாம் எடுத்த உறுதியையும், வரும் தலைமுறைக்கு நாம் அளித்துள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய ஒவ்வொரு இந்தியரின் பங்களிப்பும் முக்கியம். அமிர்தப் பெருவிழாவின் மூலம் வளர்ந்த பாரதத்தின் அமிர்த காலத்தின் புதிய பயணத்தைத் தொடங்குவோம்’’ என்று  பிரதமர் நரேந்திர மோடி பேசினார். என் மண் என் தேசம் இயக்கத்தின் அமிர்தக் கலச யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட அமிர்தப் பூங்கா […]

The post ’’வளர்ந்த பாரதத்தின் புதிய பயணத்தைத் தொடங்குவோம்..!’’ அமிர்தக் கலச யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி first appeared on Madras Murasu.

]]>
’’நாம் எடுத்த உறுதியையும், வரும் தலைமுறைக்கு நாம் அளித்துள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய ஒவ்வொரு இந்தியரின் பங்களிப்பும் முக்கியம். அமிர்தப் பெருவிழாவின் மூலம் வளர்ந்த பாரதத்தின் அமிர்த காலத்தின் புதிய பயணத்தைத் தொடங்குவோம்’’ என்று  பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

என் மண் என் தேசம் இயக்கத்தின் அமிர்தக் கலச யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட அமிர்தப் பூங்கா மற்றும் அமிர்தப் பெருவிழா நினைவுச் சின்னத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் என் மண் என் தேசம் இயக்கத்தின் அமிர்தக் கலச யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி 31-10-2023 அன்று பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் நிறைவாகவும் அமைந்தது. இந்த நிகழ்ச்சியின் போது, அமிர்தப் பூங்கா மற்றும் அமிர்தப் பெருவிழா நினைவுச் சின்னத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், நாட்டின் இளைஞர்களுக்கான எனது இளைய பாரதம் – எனது பாரதம் (மேரா யுவ பாரத்’ – மை பாரத்) தளத்தை தொடங்கி வைத்தார்.

காந்தியின் தண்டி யாத்திரை

சிறப்பாக செயல்படும் முதல் 3 மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் மற்றும் அமைச்சகங்கள் அல்லது துறைகளுக்கு விடுதலையின் அமிர்தப் பெருவிழா விருதுகளை நரேந்திர மோடி வழங்கினார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்கள் ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்து விருதுகளைப் பெற்றன. அமைச்சகங்களைப் பொறுத்தவரை வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை முதல் இடங்களையும் ரயில்வே கல்வி அமைச்சகங்கள் கூட்டமாக 3-ம் இடத்தையும் பிடித்து விருது பெற்றன.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு கடமைப் பாதை ஒரு யாகத்தைக் காண்கிறது என்று குறிப்பிட்டார். மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையால் ஈர்க்கப்பட்டு விடுதலையின் அமிர்தப் பெருவிழா, 2021 மார்ச் 12 ஆம் தேதி தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். சர்தார் படேலின் பிறந்த நாளான 2023 அக்டோபர் 31 ஆன இன்று விடுதலையின் அமிர்தப் பெருவிழா நிறைவடைவதாக அவர் கூறினார். ஒவ்வொரு இந்தியரும் பங்கேற்ற தண்டி யாத்திரையை ஒப்பிட்டு, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவும் மக்களின் பங்கேற்பில் ஒரு புதிய சாதனையை உருவாக்கியது என்று பிரதமர் மோடி கூறினார். தண்டி யாத்திரை சுதந்திரத்தின் சுடர்களை மீண்டும் உயிர்ப்பித்தது என்று கூறிய அவர், அதேபோல் அமிர்த கால இந்தியாவின் 75 ஆண்டுகால வளர்ச்சிப் பயணத்தின் தீர்மானமாக இது மாறி இருக்கிறது என்று நரேந்திர மோடி கூறினார்.

எனது பாரதம் என்ற ஒரு புதிய தீர்மானம்

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் 2 ஆண்டு கால கொண்டாட்டங்கள் என் மண் என் தேசம் இயக்கத்தின் மூலம் நிறைவடைவதாக அவர் தெரிவித்தார். நினைவுச் சின்னத்தின் அடிக்கல் நாட்டு விழா, இன்றைய வரலாற்று சிறப்புமிக்க அமைப்பை எதிர்கால சந்ததியினருக்கு நினைவூட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சிறந்த செயல்திறன் கொண்ட விருதுகளைப் பெற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அமைச்சகங்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

ஒரு மாபெரும் கொண்டாட்டத்திற்கு விடைகொடுக்கும்போது, (மை பாரத்) எனது பாரதம் என்ற ஒரு புதிய தீர்மானத்தைத் தொடங்குவதாக என்று அவர் சுட்டிக்காட்டினார். 21 ஆம் நூற்றாண்டில் தேசத்தைக் கட்டமைப்பதில் எனது பாரதம் ஒரு பெரிய பங்கை வகிக்கப் போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஐந்து உறுதிமொழிகள்

இந்திய இளைஞர்களின் கூட்டு வலிமையை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவின் இளைஞர்கள் ஒவ்வொரு இலக்கையும் எவ்வாறு ஒழுங்கமைத்து அடைய முடியும் என்பதற்கு என் மண் என் தேசம் இயக்கம் ஒரு நேரடி எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் எண்ணற்ற இளைஞர்களின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, நாடு முழுவதிலுமிருந்து 8500 அமிர்தக் கலசங்கள் கடமைப் பாதையை அடைந்துள்ளதாகவும், கோடிக்கணக்கான இந்தியர்கள் பஞ்ச் பிரான் எனப்படும் ஐந்து உறுதிமொழிகளை எடுத்து, இணையதளத்தில் புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளதாகவும் கூறினார்.

கடமையின் உணர்வை நினைவூட்டும்

விடுதலையின் அமிர்தப் பெருவிழா நிறைவுக்கு மண் ஏன் ஒரு அங்கமாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை விளக்கிய பிரதமர் மோடி, ஒரு கவிஞரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார். நாகரிகங்கள் செழித்து வளர்ந்த, மனிதர்கள் முன்னேறிய மண், சிறந்த முத்திரையைக் கொண்டுள்ளது என்று கூறினார். இந்திய மண்ணுக்கு விழிப்புணர்வு உள்ளது என்றும் நாகரிகத்தின் வீழ்ச்சியைத் தடுக்கும் ஒரு வாழ்க்கை வடிவம் அதற்கு உள்ளது என்றும் கூறிய திரு நரேந்திர மோடி, இந்தியா இன்னும் வலுவாக இருந்தாலும் பல நாகரிகங்கள் எவ்வாறு சரிந்தன என்பதைக் குறிப்பிட்டார். இந்திய மண் ஆன்மீகத்தின் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்குகிறது என்று அவர் கூறினார். இந்தியாவின் வீரத்தின் எண்ணற்ற கதைகளை எடுத்துரைத்த அவர், ஷாஹீத் பகத் சிங்கின் பங்களிப்புகளையும் குறிப்பிட்டார். ஒவ்வொரு குடிமகனும் தாய்நாட்டின் மண்ணில் எவ்வாறு ஆழமாக வேரூன்றியுள்ளார் என்பதை எடுத்துரைத்த பிரதமர் மோடி, இந்திய மண்ணுக்கான கடன்களை திருப்பிச் செலுத்தாவிட்டால் வாழ்க்கையில் என்ன பலன் என்று கேள்வி எழுப்பினார். தில்லிக்கு வந்துள்ள ஆயிரக்கணக்கான அமிர்தக் கலசத்தின் மண் அனைவருக்கும் கடமையின் உணர்வை நினைவூட்டும் என்றும், வளர்ந்த பாரதத்தின் உறுதியை அடைய ஒவ்வொருவருக்கும் ஊக்கமளிக்கும் என்றும் அவர் கூறினார். தேசத்தைக் கட்டமைப்பதில் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒரே பாரதம் உன்னத பாரதம்

நாடு முழுவதிலுமிருந்து மரக்கன்றுகளுடன் நிறுவப்படும் அமிர்தப் பூங்கா, வரும் தலைமுறையினருக்கு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது பற்றிக் கற்பிக்கும் என்று பிரதமர் கூறினார். அனைத்து மாநிலங்களின் மண்ணைச் சேர்ந்த 75 பெண் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள கலைப்படைப்புகள் குறித்து பிரதமர் கூறினார்.

சுமார் 1000 நாள் நடைபெற்ற விடுதலையின் அமிர்தப் பெருவிழா இயக்கத்தின் மிகவும் சாதகமான தாக்கம் இந்தியாவின் இளம் தலைமுறையினர் மீது ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இன்றைய தலைமுறையினர் அடிமைத்தனத்தை அனுபவிக்கவில்லை என்றும், சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர், தாம்தான் என்றும் அவர் கூறினார். அந்நிய ஆட்சியின் போது சுதந்திரத்திற்கான இயக்கம் இல்லாத ஒரு தருணம் கூட இல்லை என்பதையும், எந்தவொரு பிரிவினரும் அல்லது பிராந்தியமும் இதில் இருந்து விடுபடவில்லை என்று அவர் கூறினார்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தரவுத்தளம்

அமிர்தப் பெருவிழா, ஒரு வகையில், வரலாற்றின் காணாமல் போன பக்கங்களை எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு சேர்த்துள்ளது என்று பிரதமர் கூறினார். இந்திய மக்கள் அமிர்தப் பெருவிழாவை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கத்தின் வெற்றி ஒவ்வொரு இந்தியரின் வெற்றி என்று அவர் கூறினார். சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் குடும்பங்கள் மற்றும் கிராமங்களின் பங்களிப்பைப் பற்றி மக்கள் அறிந்து கொண்டனர் என்றும் மாவட்ட வாரியாக சுதந்திரப் போராட்ட வீரர்களின் தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வந்தே பாரத் ரயில்

விடுதலையின் அமிர்தப் பெருவிழாக் காலத்தில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், உலகின் முதல் 5 பொருளாதாரங்களுக்கு இந்தியா முன்னேறியது என்றும் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது எனவும் ஜி20 உச்சிமாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றும் கூறினார். அதேபோல் ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய பாரா விளையாட்டுகளில் 100 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா, மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார். ஏற்றுமதி, விவசாய விளைபொருட்கள், வந்தே பாரத் ரயில் கட்டமைப்பின் விரிவாக்கம், அமிர்த பாரத ரயில் நிலைய இயக்கம் தொடக்கம், நாட்டின் முதல் பிராந்திய விரைவு ரயில் நமோ பாரத், 65,000 க்கும் மேற்பட்ட அமிர்த நீர் நிலைகளை உருவாக்குதல், இந்தியாவின் சொந்த 5ஜி அறிமுகம் மற்றும் விரிவாக்கம், உள்கட்டமைப்பு இணைப்பை மேம்படுத்த பிரதமரின் விரைவு சக்திப் பெருந்திட்டத்தின் அறிமுகம் போன்றவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பழங்குடியினர் பெருமை தினம்

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின்போது, ராஜபாதையில் இருந்து கடமைப் பாதைக்கான பயணத்தை நாடு நிறைவு செய்தது என்று அவர் கூறினார். அடிமைத்தனத்தின் பல அடையாளங்களை நீக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை, கடற்படைக்குப் புதிய சின்னம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு ஊக்கமளிக்கும் பெயர்கள், பழங்குடியினர் பெருமை தினம், சாஹிப்சாதே நினைவாக வீர பாலகர் தின பிரகடனம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14 அன்று பிரிவினை துயரத்தை நினைவுகூரும் தினம் போன்றவற்றையும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்குப் புதிய ஆற்றல்

ஒரு விசயத்தின் முடிவு எப்போதுமே புதிய ஒன்றின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று பிரதமர் கூறினார். அமிர்தப் பெருவிழாவின் நிறைவில் எனது பாரதம் (மை பாரத்) தொடங்கப்பட்டதை குறிப்பிட்ட அவர், இந்த எனது பாரதம் இந்தியாவின் இளைஞர் சக்தியின் பிரகடனம் என்றார். நாட்டின் ஒவ்வொரு இளைஞரையும் ஒரே தளத்தில் கொண்டு வரவும், தேசத்தைக் கட்டமைப்பதில் அதிக பங்கேற்பை உறுதிப்படுத்தவும் இது ஒரு சிறந்த தளமாக மாறும் என்று கூறினார். மை பாரத் இணையதளம் தொடங்கப்பட்டது குறித்துப் பேசிய அவர், இளைஞர்களுக்காக நடத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்த தகவல்கள் இந்தத் தளத்தில் சேர்க்கப்படும் என்றார். இளைஞர்கள் இயன்றவரை இதனுடன் இணைந்து, இந்தியாவுக்குப் புதிய ஆற்றலைக் கொடுக்க வேண்டும் எனவும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

வரும் தலைமுறைக்கு நாம் அளித்துள்ள வாக்குறுதி

ஒவ்வொரு குடிமகனின் பொதுவான தீர்மானங்களை நிறைவேற்றுவதே இந்தியாவின் சுதந்திரம் என்று கூறியதோடு, அதை ஒற்றுமையுடன் பாதுகாக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உறுதிப்பாட்டைக் குறிப்பிட்ட அவர், சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது இன்றைய இந்த சிறப்பான நாள் தேசத்தால் நினைவுகூரப்படும் என்றார். நாம் எடுத்த உறுதியையும், வரும் தலைமுறைக்கு நாம் அளித்துள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய ஒவ்வொரு இந்தியரின் பங்களிப்பும் முக்கியம் என்று அவர் தெரிவித்தார். அமிர்தப் பெருவிழாவின் மூலம் வளர்ந்த பாரதத்தின் அமிர்த காலத்தின் புதிய பயணத்தைத் தொடங்குவோம் என்று கூறி, பிரதமர் நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி : என் மண் என் தேசம்

என் மண் என் தேசம் இயக்கம் என்பது நாட்டிற்காக மிக உயர்ந்த தியாகம் செய்த வீரர்கள் மற்றும் வீரங்கனைகளுக்கு அஞ்சலி செலுத்துவதாகும். மக்கள் பங்களிப்புடன், இந்த இயக்கம் நாடு முழுவதும் கிராமம், வட்டாரம், நகர்ப்புற உள்ளாட்சி, மாநில மற்றும் தேசிய அளவில் பல நடவடிக்கைகள் மற்றும் விழாக்களை உள்ளடக்கியதாக இருந்தது. உன்னத தியாகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கும் வகையில் நினைவுச்சின்னம் கட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இதில் நடைபெற்றன. நினைவுச் சின்னத்துடன் மக்கள் எடுத்த ‘பஞ்ச பிராண்’ ஐந்து உறுதிமொழிகள் பழங்குடி இனங்களின் மரக்கன்றுகளை நடுதல், அமிர்தப் பூங்காவை உருவாக்குதல், சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் பாராட்டு விழாக்கள் ஆகியவையும் நடைபெற்றன.

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2.3 லட்சத்துக்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்கள் கட்டப்பட்டதன் மூலம் இந்த இயக்கம் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. கிட்டத்தட்ட 4 கோடி பஞ்ச் பிராண் உறுதிமொழி ஏற்கப்பட்டு புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 2.36 கோடிக்கும் அதிகமான நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அத்துடன் நாடு முழுவதும் 2.63 லட்சம் அமிர்தப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பெரிய அமிர்தக் கலசத்தில் ஒரே பாரதம்

என் மண் என் தேசம் இயக்கத்தில் அமிர்தக் கலச யாத்திரையும் அடங்கும். இதில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், நகர்ப்புறங்களில் உள்ள வார்டுகளிலிருந்தும் மண் மற்றும் அரிசி தானியங்கள் சேகரிக்கப்பட்டன. வட்டார அளவில் அனைத்து கிராமங்களின் மண்ணும் கலக்கப்பட்டு பின்னர் மாநில தலைநகருக்கு அனுப்பப்பட்டது. ஆயிரக்கணக்கான அமிர்தக் கலச யாத்ரிகர்களுடன் மாநில அளவில் இருந்து மண் தேசியத் தலைநகருக்கு அனுப்பப்பட்டது.

30-10-2023 அன்று நடைபெற்ற அமிர்தக் கலச யாத்திரையில், அந்தந்த வட்டங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் கலசத்திலிருந்து மண்ணை ஒரு பெரிய அமிர்தக் கலசத்தில் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வில் கலந்தன. பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட அமிர்தப் பூங்கா மற்றும் அமிர்தப் பெருவிழா நினைவுச்சின்னம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மண்ணிலிருந்து கட்டப்படும்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழா நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக என் மண் என் தேசம் இயக்கம் திட்டமிடப்பட்டது. இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் விடுதலையின் அமிர்தப் பெருவிழா 12 மார்ச் 2021 அன்று தொடங்கியது. அதன் பின்னர் நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் பொதுமக்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டன.

எனது பாரதம் (மை பாரத்)

மேரா யுவ பாரத் – மை பாரத் (எனது இளைய பாரதம் – எனது பாரதம்) நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு நிலையான முழு அரசுத் தளமாக செயல்பட ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு இளைஞருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மை பாரத் அரசின் முழு நடைமுறைகளிலும் ஒரு சாத்தியமான செயல்முறையை வழங்க, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். இதனால் அவர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளவும் வளர்ந்த பாரதத்தைக் கட்டமைப்பதற்காகப் பங்களிக்கவும் முடியும். இளைஞர்களை சமூக மாற்றத்துக்கான முகவர்களாகவும், தேசத்தை உருவாக்குபவர்களாகவும் மாற ஊக்குவிப்பதும், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக செயல்படுவதும் மை பாரத் (எனது பாரதம்) திட்டத்தின் நோக்கமாகும். அந்த வகையில், ‘மை பாரத்’ (எனது பாரதம்) நாட்டில் இளைஞர்களின் தலைமையிலான வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.

The post ’’வளர்ந்த பாரதத்தின் புதிய பயணத்தைத் தொடங்குவோம்..!’’ அமிர்தக் கலச யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4/feed/ 0
’’செயற்கை நுண்ணறிவு உலகளாவிய உச்சிமாநாடு..!’’ சுந்தர் பிச்சைக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%b3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588-%25e0%25ae%25a8%25e0%25af%2581%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%2581-%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25ae%25b3 https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%b3/#respond Tue, 17 Oct 2023 07:39:19 +0000 https://madrasmurasu.com/?p=6935 கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வாயிலாக உரையாடினார். இந்த உரையாடலின் போது, இந்தியாவில் மின்னணு உற்பத்தி சூழலை விரிவுபடுத்துவதில் கூகுளின் திட்டம் குறித்துப் பிரதமரும், திரு. சுந்தர் பிச்சையும் விவாதித்தனர். இந்தியாவில் குரோம்புக்குகளைத் தயாரிப்பதில் ஹெச்பி நிறுவனத்துடன் கூகுள் கொண்டுள்ள கூட்டாண்மையைப் பிரதமர் மோடி பாராட்டினார். கூகுளின் 100 மொழிகள் என்ற முன்னெடுப்பை அங்கீகரித்த பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு முறையை இந்திய […]

The post ’’செயற்கை நுண்ணறிவு உலகளாவிய உச்சிமாநாடு..!’’ சுந்தர் பிச்சைக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வாயிலாக உரையாடினார்.

இந்த உரையாடலின் போது, இந்தியாவில் மின்னணு உற்பத்தி சூழலை விரிவுபடுத்துவதில் கூகுளின் திட்டம் குறித்துப் பிரதமரும், திரு. சுந்தர் பிச்சையும் விவாதித்தனர். இந்தியாவில் குரோம்புக்குகளைத் தயாரிப்பதில் ஹெச்பி நிறுவனத்துடன் கூகுள் கொண்டுள்ள கூட்டாண்மையைப் பிரதமர் மோடி பாராட்டினார்.

கூகுளின் 100 மொழிகள் என்ற முன்னெடுப்பை அங்கீகரித்த பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு முறையை இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகளை ஊக்குவித்தார். நல்லாட்சி என்ற கருத்தாக்கத்தில் செயற்கை நுண்ணறிவு முறையை ஊக்குவிக்க வேண்டும் என்று திரு சுந்தர்பிச்சையிடம் வலியுறுத்தினார்.

காந்திநகரில் உள்ள குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப மையத்தில் (கிஃப்ட்) தனது உலகளாவிய ஃபின்டெக் செயல்பாட்டு மையத்தைத் திறக்கும் கூகுளின் திட்டங்களைப் பிரதமர் மோடி வரவேற்றார்.

ஜிபே, யுபிஐ ஆகியவற்றின் வலிமை மற்றும் வரம்பைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவில் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான கூகுளின் திட்டங்கள் குறித்து திரு சுந்தர் பிச்சை பிரதமரிடம் தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் பங்களிப்பதில் கூகுளின் உறுதிப்பாட்டையும் அவர் தெரிவித்தார்.

2023 டிசம்பரில் புதுதில்லியில் இந்தியா நடத்தும் செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை உச்சிமாநாட்டிற்குப் பங்களிக்குமாறு கூகுளின் சுந்தர்பிச்சைக்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

The post ’’செயற்கை நுண்ணறிவு உலகளாவிய உச்சிமாநாடு..!’’ சுந்தர் பிச்சைக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%b3/feed/ 0
”உள்ளூர் எம்.பி.யுடன் இணைய உதவும் நமோ செயலி..! பிரதமர் மோடி https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf-%25e0%25ae%25af%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a3%25e0%25af%2588%25e0%25ae%25af https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af/#respond Tue, 17 Oct 2023 07:32:16 +0000 https://madrasmurasu.com/?p=6932 ’’உள்ளூர் எம்.பி.யுடன் இணைய உதவும் குறிப்பிடத்தக்க அம்சம் நமோ செயலியில் உள்ளது’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு கொள்ள உதவும் குறிப்பிடத்தக்க அம்சம் நமோ செயலியில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த வசதி, நமது ஜனநாயக உணர்வை மேம்படுத்துவதில் நீண்ட தூரம் செல்லும் என்று பிரதமர் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைப்பை ஆழப்படுத்தவும், அவருடனான தொடர்பை எளிதாக்கவும், ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்கவும் […]

The post ”உள்ளூர் எம்.பி.யுடன் இணைய உதவும் நமோ செயலி..! பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
’’உள்ளூர் எம்.பி.யுடன் இணைய உதவும் குறிப்பிடத்தக்க அம்சம் நமோ செயலியில் உள்ளது’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு கொள்ள உதவும் குறிப்பிடத்தக்க அம்சம் நமோ செயலியில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த வசதி, நமது ஜனநாயக உணர்வை மேம்படுத்துவதில் நீண்ட தூரம் செல்லும் என்று பிரதமர் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைப்பை ஆழப்படுத்தவும், அவருடனான தொடர்பை எளிதாக்கவும், ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்கவும் இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“நமோ செயலியில் மிகவும் சுவாரஸ்யமான அம்சம் உள்ளது, இது நமது ஜனநாயக உணர்வை மேம்படுத்துவதற்கு நீண்ட தூரம் செல்லும். இது உங்கள் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைப்பை ஆழப்படுத்தவும், அவருடனான ஈடுபாட்டை எளிதாக்கவும், ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்கவும் உதவும். சுவாரஸ்யமான கலை நிகழ்ச்சிகள் முதல் துடிப்பான விளையாட்டுப் போட்டிகள் வரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வாக்காளர்கள் இணைவதை எளிதாக்கும்.

நமோ செயலி இணைப்பு இது Nm-4.com/mymp”

The post ”உள்ளூர் எம்.பி.யுடன் இணைய உதவும் நமோ செயலி..! பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af/feed/ 0
”தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணி..!” ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுபாஷ் சந்திர கார்க் புத்தகத்தில் பகீர் தகவல் https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b1%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf/#respond Tue, 17 Oct 2023 05:34:26 +0000 https://madrasmurasu.com/?p=6924 ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் 2018 ஆம் ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தத் தருணத்தில் என்ன நடந்தது என்பதை தற்போது வெளிவந்துள்ள We Also Make Policy புத்தகம் விரிவாக விளக்குகிறது. புத்தகத்தை எழுதியிருப்பது அப்போதைய நிதித் துறைச் செயலரான சுபாஷ் சந்திர கார்க். 2018 மார்ச் – ஏப்ரல் காலகட்டத்தில் இந்திய அரசின் தேர்தல் பாண்ட் திட்டத்திற்கு உர்ஜித் படேல் பல வகைகளில் முட்டுக்கட்டை போட்டார். முதலில் […]

The post ”தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணி..!” ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுபாஷ் சந்திர கார்க் புத்தகத்தில் பகீர் தகவல் first appeared on Madras Murasu.

]]>
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் 2018 ஆம் ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தத் தருணத்தில் என்ன நடந்தது என்பதை தற்போது வெளிவந்துள்ள We Also Make Policy புத்தகம் விரிவாக விளக்குகிறது. புத்தகத்தை எழுதியிருப்பது அப்போதைய நிதித் துறைச் செயலரான சுபாஷ் சந்திர கார்க்.

2018 மார்ச் – ஏப்ரல் காலகட்டத்தில் இந்திய அரசின் தேர்தல் பாண்ட் திட்டத்திற்கு உர்ஜித் படேல் பல வகைகளில் முட்டுக்கட்டை போட்டார். முதலில் வங்கிகளே இந்த பாண்ட்களை வழங்கலாம் என்பதற்கு ஒப்புக் கொண்டவர், பிறகு ரிசர்வ் வங்கிதான் அதனை வழங்கும் என்றார். அதுவும் டிஜிடல் முறையில்தான் வழங்கப்படும் என்றார். இதன் மூலம் அந்தப் பணத்தை வழங்குபவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்பதால் அந்தத் திட்டம் துவங்கப்படாமலேயே இருந்தது.

பணவீக்கத்தைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வந்தது. பிராம்ப்ட் கரெக்டிவ் ஆக்ஷன் திட்டத்தின் கீழ் 8 பொதுத் துறை வங்கிகளைக் கொண்டுவந்ததால், அவற்றால் கடன் கொடுக்க முடியவில்லை. ரூபாய் – டாலர் மதிப்பை சரியாமல் வைத்துக்கொள்ள சந்தையில் டாலர்களையும் விற்றுவந்தது.
ஆனால், அரசு எவ்வளவுக்கெவ்வளவு இவை குறித்தெல்லாம் விவாதிக்க விரும்பியதோ, அந்த அளவுக்கு விலகிச் சென்றார் உர்ஜித் படேல். இந்த நிலையில்தான், பொருளாதாரம் குறித்து விவாதிக்க கூட்டம் ஒன்றை நடத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. செப்டம்பர் 14ஆம் தேதி இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஆளுநர் உர்ஜித் படேல், சில ஆலோசனைகளை முன்வைத்தார். அதில் நான்கு யோசனைகள் குறிப்பானவை.

1. நீண்ட கால முதலீடுகளுக்கு கிடைக்கும் லாபத்திற்கான வரியை ரத்து செய்வது.

2. நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க பொதுத்துறை பங்கு விற்பனையை அதிகரிக்க வேண்டும்.

3. ஆசிய கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி, நியு டெவலப்மெண்ட் வங்கி ஆகியவற்றை அணுகி இந்திய பங்குகளில் முதலீடுசெய்யும்படி கோருவது.

4. பல நிறுவனங்களுக்கு இந்திய அரசு கொடுக்க வேண்டியிருக்கும் தொகையைக் கொடுப்பது.

இதில் எல்லா யோசனைகளுமே அரசு செய்ய வேண்டியதாக இருந்தது. ரிசர்வ் வங்கி செய்ய வேண்டியது என எதுவுமே இல்லை. இதைக் கேட்டு நிதியமைச்சர் அருண் ஜேட்லி விரக்தியடைந்தார். இந்த ஆலோசனைகளில் உள்ள சிக்கல்களை நிதித் துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் விளக்கினார்.

ஆளுநர் உர்ஜித் படேல் சொல்வதை கவனமாகவும் மிகப் பொறுமையாகவும் கேட்டார் பிரதமர் மோடி. இரண்டு மணி நேரமாக முன்வைக்கப்பட்ட விளக்கங்கள், விவாதங்கள் ஆகியவற்றுக்குப் பிறகும் எந்தத் தீர்வும் ஏற்படவில்லை. ரிசர்வ் வங்கி நிலைமையைப் புரிந்துகொள்ளவில்லை என பிரதமர் நினைத்தார். பொருளாதார நிலையைச் சரிசெய்யவும் அரசுடன் உள்ள கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கவும் அர்த்தமுள்ள எதையும் செய்யவும் விரும்பவில்லை என்பதையும் புரிந்துகொண்டார்.

இந்தத் தருணத்தில் பிரதமர் மோடி முழுவதுமாகப் பொறுமையிழந்தார். நேரடியாக உர்ஜித்துடன் பேச ஆரம்பித்தார். யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காத, நீண்ட கால முதலீட்டு லாபம் மீதான வரியை திரும்பப் பெற வேண்டும் என்ற யோசனையை முன்வைத்ததற்காகவும் நிதியாண்டின் மத்தியில் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் எனக் கோரியதற்காகவும் ஆளுநர் உர்ஜித் படேலைக் கடுமையாக விமர்சித்தார். ரிசர்வ் வங்கியில் சேர்ந்திருக்கும் பணத்தை எதற்கும் பயன்படாமல் வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டி பணக் குவியல் மீது உட்கார்ந்திருக்கும் பாம்போடு உர்ஜித் பட்டேலை அவர் ஒப்பிட்டார்” என்கிறது இந்தப் புத்தகம்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுபாஷ் சந்திர கார்க் எழுதிய இந்த நூலில், இந்தியாவில் சமீப காலத்தில் பெரிதும் விவாதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் எப்படி மேற்கொள்ளப்பட்டன என்பதன் பின்னணித் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணி, ஏ.டி.எம்-மில் திடீரென ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு, ஆறு விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்டது, க்ரிப்டோ கரென்சி குறித்த சட்ட மசோதா, 2018, 2019 ஆம் ஆண்டு பட்ஜெட்கள் உருவான விதம் போன்றவை குறித்து விரிவான தகவல்களை இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார் சுபாஷ் சந்திர கார்க்.

வெளியீடு: ஹார்ப்பர் காலின்ஸ், விலை: ரூ. 799

The post ”தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணி..!” ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுபாஷ் சந்திர கார்க் புத்தகத்தில் பகீர் தகவல் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf/feed/ 0
’’எனது இளைய பாரதம் என்ற தன்னாட்சி அமைப்பு..!’’ மத்திய அமைச்சரவை ஒப்புதல் https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25b3%25e0%25af%2588%25e0%25ae%25af-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1-%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4/#respond Thu, 12 Oct 2023 11:19:00 +0000 https://madrasmurasu.com/?p=6806 பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இளைஞர் மேம்பாடு மற்றும் இளைஞர்கள் தலைமை தாங்கும் வளர்ச்சிக்குத் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஒரு பரந்த நடைமுறையாக செயல்படவும், இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், அரசின் அனைத்துத் தரப்பிலும் வளர்ந்த பாரதத்தை உருவாக்கவும், சமமான அணுகலை வழங்குவதற்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான மேரா யுவ பாரத் (எம்.ஒய் பாரத்) எனும் எனது இளையபாரதம் என்ற அமைப்பை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டது. தாக்கம்: மேரா யுவ பாரத்தின் முதன்மை நோக்கம், […]

The post ’’எனது இளைய பாரதம் என்ற தன்னாட்சி அமைப்பு..!’’ மத்திய அமைச்சரவை ஒப்புதல் first appeared on Madras Murasu.

]]>
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இளைஞர் மேம்பாடு மற்றும் இளைஞர்கள் தலைமை தாங்கும் வளர்ச்சிக்குத் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஒரு பரந்த நடைமுறையாக செயல்படவும், இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், அரசின் அனைத்துத் தரப்பிலும் வளர்ந்த பாரதத்தை உருவாக்கவும், சமமான அணுகலை வழங்குவதற்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான மேரா யுவ பாரத் (எம்.ஒய் பாரத்) எனும் எனது இளையபாரதம் என்ற அமைப்பை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தாக்கம்:

மேரா யுவ பாரத்தின் முதன்மை நோக்கம், அதனை இளைஞர்களின் மேம்பாட்டிற்கான ஒரு முழு அரசுத் தளமாக மாற்றுவதாகும். புதிய ஏற்பாட்டின் கீழ், வளங்களை அணுகுதல் மற்றும் வாய்ப்புகளுக்கான இணைப்புடன், இளைஞர்கள் சமூக மாற்ற முகவர்களாகவும், தேசத்தை உருவாக்குபவர்களாகவும் மாறுவார்கள். இது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக இளைஞர்களின் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்த முயல்கிறது.

விவரங்கள்:

தேசிய இளைஞர் கொள்கையில் ‘இளைஞர்’ என்ற வரையறையின்படி, 15-29 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மேரா யுவ பாரத் என்ற தன்னாட்சி அமைப்பு பயனளிக்கும். வளரிளம் பருவத்தினருக்கான திட்டக் கூறுகளைப் பொறுத்தவரை, பயனாளிகள் 10-19 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பார்கள்.

மேரா யுவ பாரத் நிறுவப்படுவது பின்வருவனவற்றுக்கு வழிவகுக்கும்:

இளைஞர்களின் தலைமைத்துவ மேம்பாடு:

அனுபவ கற்றல் மூலம் திறன் ஆளுமையை மேம்படுத்துதல்.

இளைஞர்களை சமூகத் தலைவர்களாக மாற்ற வகை செய்தல்

இளைஞர்களை வளர்ச்சியின் “செயலூக்க இயக்கிகளாக” மாற்றுவதற்கு அரசு கவனம் செலுத்துதல்.

இளைஞர்களின் விருப்பங்களுக்கும், சமூகத் தேவைகளுக்கும் இடையில் சிறந்த சீரமைப்பு.

நடைமுறையில் உள்ள திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் செயல்திறனை மேம்படுத்துதல்.

இளைஞர்கள் மற்றும் அமைச்சகங்களுக்கு இடையே ஒற்றை நிறுத்தமாக செயல்படுதல்.

மையப்படுத்தப்பட்ட இளைஞர் தரவு தளத்தை உருவாக்குதல்.

அரசின் முன்முயற்சிகளுடன் இளைஞர்களின் தொடர்பை இருவழியிலும் மேம்படுத்துதல்

இயற்பியல் சூழல் முறையை உருவாக்கும் அணுகலை உறுதிசெய்தல்.

பின்னணி

அதிவேகத் தகவல்தொடர்புகள், சமூக ஊடகங்கள், புதிய டிஜிட்டல் வாய்ப்புகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் சூழலைக் கொண்ட வேகமாக மாறிவரும் உலகில், ‘முழு அரசு அணுகுமுறை’ என்ற கொள்கைகளால் வழிநடத்தப்படும் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கும் அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் அரசு ஒரு புதிய தன்னாட்சி அமைப்பின் வடிவத்தில் அதாவது மேரா யுவ பாரத் என்ற பெயரில் பரந்த அளவிலான நடைமுறையை நிறுவ முடிவு செய்துள்ளது.

The post ’’எனது இளைய பாரதம் என்ற தன்னாட்சி அமைப்பு..!’’ மத்திய அமைச்சரவை ஒப்புதல் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4/feed/ 0
’’வள்ளலார் இன்று இருந்திருந்தால் – மதுக்கூர் இராமலிங்கம்..!’’ https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/#respond Tue, 10 Oct 2023 04:28:52 +0000 https://madrasmurasu.com/?p=6728 வள்ளலார் உயிரோடு இருந்திருந்தால், மகளிர் இடஒதுக்கீட்டை பாராட்டியிருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் திருவுருவச் சிலையை காணொலி மூலம் திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா 2029 ஆம் ஆண்டு தேர்தலின் போதுதான் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதைப் படித்தால், வள்ளலார் ஒருவேளை ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்ற பாடலை மீண்டும் பாடியிருக்கக் கூடும். […]

The post ’’வள்ளலார் இன்று இருந்திருந்தால் – மதுக்கூர் இராமலிங்கம்..!’’ first appeared on Madras Murasu.

]]>
வள்ளலார் உயிரோடு இருந்திருந்தால், மகளிர் இடஒதுக்கீட்டை பாராட்டியிருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் திருவுருவச் சிலையை காணொலி மூலம் திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா 2029 ஆம் ஆண்டு தேர்தலின் போதுதான் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதைப் படித்தால், வள்ளலார் ஒருவேளை ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்ற பாடலை மீண்டும் பாடியிருக்கக் கூடும்.

ஆண்டவருக்கு நன்றி சொன்னவர்

ஒன்றிய பாஜக அரசின் பத்தாண்டு கால ஆட்சியை ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டால், வள்ளல் பெருமான் ஒருவேளை ‘கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக’ என்று சபித்து, ‘அருள் நயந்த நன்மார்க்க ஆள்க’ என்று இந்தியா கூட்டணிக்கு வரவேற்பு அளித்திருக்கக் கூடும்.

இளைஞர்கள் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் புலமை பெற வேண்டும் என்று வள்ளலார் விரும்பியதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இடும்பை மிகுந்த சமஸ்கிருத மொழியின்பால் என்னை ஒட்டவிடாமல், தமிழின்பால் கொண்டு சேர்த்ததற்காக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு நன்றி சொன்னவர் வள்ளலார் என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டியுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் கல்விக் கட்டமைப்பு மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது என்றும் தேசிய கல்விக்கொள்கை கல்வித்துறையில் சிறந்த மாற்றங்களை கொண்டு வந்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எல்லோருக்கும் கல்வி தர வேண்டும் என்பதற்காக ஞானசபையை உருவாக்கிய வள்ளலார், நிச்சயமாக இன்றைய ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை ஆதரித்து இருக்கமாட்டார்.

அரிசிக்கு ஜிஎஸ்டி வரி போடுவது சரிதானா?

வள்ளலார், மிக எளிமையான ஆடைகளையே அணிவார். காவி உடையை வெறுத்த அவர், வெள்ளை ஆடையை உடுத்துவார். இடுப்பில் உடுத்தும் ஆடையை முழங்கால் மறையும் அளவுக்கே உடுத்துவார். மேலாடையை உடல் முழுவதும் போர்த்தி இருப்பார். தலையைச் சுற்றி முக்காடாக அணிந்திருப்பார். சில சமயங்களில், ஓர் ஆடையையே கீழும் மேலுமாக உடுத்தி யிருப்பார் என்று அவருடைய சீடர்கள் கூறுகின்றனர். ஒரு மணிநேரத்திற்கு, ஒரு ஆடையை மாற்றுகிற, லட்சக்கணக்கில் ஆடை அலங்காரத்திற்கு செலவு செய்கிறவர்களுக்கு வள்ளலாரின் எளிமை பிடிக்குமா என்று தெரியவில்லை.

ஒருவரும் பட்டினி இல்லாதிருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்வோம் என்று பிரதமர் கூறியுள்ளார். இவ்வாறு பட்டினி இல்லாதிருக்க வேண்டுமானால், அரிசிக்கும், கோதுமைக்கும் ஜிஎஸ்டி வரி போடுவது சரிதானா? என்று பரிசீலிக்க வேண்டும். பொது விநியோக முறைக்கு மாநிலங்களுக்கு உணவு தானியங்களை தர மறுப்பதும் முறைதானா என்று வள்ளலார் இருந்தால் நிச்சயம் கேட்டிருப்பார்.

சாத்திரக் குப்பைகள்

மனுமுறை கண்ட வாசகம் எனும் நூலில், அவர் பாடியுள்ள சில வரிகள் ஏனோ பிரதமரின் பேச்சை படித்த போது நினைவுக்கு வந்தன. ‘நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! களவு செய்வோருக்கு உளவு சொன்னேனோ! குடிவரி உயர்த்தி கொள்ளை கொண்டேனோ! ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ! உயிர்க் கொலை செய்வோருக்கு உபகாரஞ் செய்தேனோ! பொது மண்டபத்தை போய் இடித்தேனோ! ஆசை காட்டி மோசம் செய்தேனோ! பசித்தோர்

முகத்தை பாராதிருந்தேனோ! பகை கொண்டு அயலார் பயிரை அழித்தேனோ!’ என்றெல்லாம் வள்ளலார் யாரை நினைத்து பாடி வைத்தாரோ.

இந்த விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வழக்கம்போல சனாதனத்தை அள்ளி வள்ளலார் மீது பூசியிருக்கிறார். ‘மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது; வருணாசிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது’ என்றும், ‘சாதிசமயங்களில் வீதி பல வகுத்த சாத்திரக் குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று’ என்றும், ‘சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்’ என்றும், ‘பிறசமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய்’ என்றும் பாடியவர் வள்ளலார்.

இத்துடன் நிறுத்திக் கொள்ளட்டும்

ஆளுநர் மாளிகையில் வள்ளல் பெருமானுக்கு சிலை வைத்தால் மட்டும் போதாது. அவர் பாடல்களின் உட்பொருளை புரிந்து கொள்வதும் அவசியம். ஆளுநர் அந்த விழாவில் என்னை அவமானப்படுத்தினாலும், நான் அவர்களை ஒதுக்க முடியாது. அதுதான் சனாதனம் என்று கூறியுள்ளார். உண்மையில், இதை இவர் நம்புவாரே யானால், வள்ளலாரை அவமானப்படுத்துவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளட்டும்.

‘வேத ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர்; வேத ஆகமத்தின் விளைவறிவீர் – சூதாகச் சொன்னவலால் உண்மை வெளித் தோன்ற உரைக்கவில்லை, என்ன பயனோ இவை’ என்பது வள்ளலார் வாக்கு. ஆனாலும் இன்றைக்கும் சிலர் வீண்வாதம் ஆடுகின்றார். அதற்காக வள்ளலாரையே வளைக்கப் பார்க்கிறார்கள்.

வள்ளலார் தனது இறுதிப் பேருரையில் ‘இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடையாகி சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார, சங்கல்ப, விகற்பங்களும், வருணம், ஆசிரம் முதலிய உலகாச்சார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்’ என்று வேண்டியுள்ளார்.

ஆளுநர் அருள்கூர்ந்து வள்ளலாரை விட்டுவிடுமாறு வேண்டுகிறோம்.

தீக்கதிர் – மதுக்கூர் இராமலிங்கம்

The post ’’வள்ளலார் இன்று இருந்திருந்தால் – மதுக்கூர் இராமலிங்கம்..!’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0
’’அதிமுக – பாஜக தீடீர் சமரசமா..?’’ இருதரப்பு தலைவர்களும் அமைதி காப்பதால் தொண்டர்கள் குழுப்பம் https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%a4%e0%af%80%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25ae%2595-%25e0%25ae%25a4%25e0%25af%2580%25e0%25ae%259f%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25ae%25b0 https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%a4%e0%af%80%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0/#respond Thu, 21 Sep 2023 12:27:35 +0000 https://madrasmurasu.com/?p=6474 பேரறிஞர் அண்ணா பற்றி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. தரப்பில் அண்ணாமலை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தி.மு.க தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் கடந்த 17-ந்தேதி அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். இது அ.தி.மு.க.வினருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அண்ணாமலை பேசிய வீடியோ பதிவை முழுமையாக பார்த்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கடும் கோபம் அடைந்தார். […]

The post ’’அதிமுக – பாஜக தீடீர் சமரசமா..?’’ இருதரப்பு தலைவர்களும் அமைதி காப்பதால் தொண்டர்கள் குழுப்பம் first appeared on Madras Murasu.

]]>
பேரறிஞர் அண்ணா பற்றி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. தரப்பில் அண்ணாமலை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தி.மு.க தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் கடந்த 17-ந்தேதி அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.

இது அ.தி.மு.க.வினருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அண்ணாமலை பேசிய வீடியோ பதிவை முழுமையாக பார்த்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கடும் கோபம் அடைந்தார். இதையடுத்து அ.தி.மு.க. தரப்பில் இருந்து அண்ணாமலைக்கு அதிரடியாக பதில் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 18-ந்தேதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் “பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எல்லை மீறி செல்கிறார். அவரிடம் அரசியல் தலைவருக்கான பக்குவம் இல்லை. அவர் தலைவராக இருக்கும்வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது. இப்போது எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்” என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

இதற்கு பாஜக துணைத் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களது கருத்துகளை பதிவிட்டனர். அ.தி.மு.க. தலைமையை விமர்சித்தும், தங்களால் தனியாக நிற்கவும் முடியும் என்றும் ஆவேசமாக பதிவிட்டனர். இது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை மேலும் பிளவுப்படுத்தும் வகையில் இருந்தது.

அண்ணாமலை தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காததால் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பா.ஜ.க. மீது தொடர் தாக்குதலை நடத்தினார்கள். சமூக வலைத்தளங்கள் மூலம் பா.ஜ.க.வுக்கு எதிரான பிரசாரத்தை ஆரம்பித்தனர். இதை அறிந்த பாரதிய ஜனதா மேலிட தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அ.தி.மு.க.வுடன் ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வர பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி சமூக வலைதளங்களில் அ.தி.மு.க.வை விமர்சிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் கூட்டணி தொடர்பாக இனி தமிழக பா.ஜ.க. தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அமைதியாகி விட்டனர்.

இதனால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சற்று இறங்கி வந்துள்ளனர். பாரதிய ஜனதாவுடன் இப்போதைக்கு மோதல் போக்கை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஒருமித்த முடிவை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தேவையற்ற கருத்துக்களை கூறி சர்ச்சையை அதிகரிக்க வேண்டாம் என்றும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக மட்டும் நாகரிகமாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் அதிமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவு ஒன்றை அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜக பற்றியோ, கூட்டணி பற்றியோ அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் விமர்சனம் செய்து பேசக்கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

பொதுவெளியில் பாஜக பற்றி பேசினால் குழப்பம் ஏற்படுத்தும் என்பதால் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவுரையை வழங்கியிருக்கிறார். இதனால் அதிமுக-பாஜக மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்பு தலைவர்களும் அமைதி காப்பதால் கட்சி தொண்டர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்கிறார்கள். இந்த திடீர் அமைதி குறித்து இரு கட்சி தொண்டர்களுக்கு இடையே வரவேற்பும் எதிர்ப்பும் நிலவுகிறது. கீழ் மட்டத்தில் உள்ள தொண்டர்கள் ’சண்டையா, நட்பா’ என்ற குழப்பத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

The post ’’அதிமுக – பாஜக தீடீர் சமரசமா..?’’ இருதரப்பு தலைவர்களும் அமைதி காப்பதால் தொண்டர்கள் குழுப்பம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%a4%e0%af%80%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0/feed/ 0