acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’இதுவரையில் எந்த ஒரு ஆளுநரும் தன்னிச்சையாக தேடுதல் குழுவினை அமைத்ததில்லை..!’’ அமைச்சர் க.பொன்முடி first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் உயர்கல்வி துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக்கழகங்களுக்கென தனித்தனியே சட்டம் மற்றும் விதிகள் உள்ளன. இவற்றின்படி துணை வேந்தரின் பதவிக்காலம் முடிந்தவுடன் அதனை நிரப்ப தேடுதல் குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் துணைவேந்தர் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார். உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைக் கழக சட்டவிதிகளில், ஆளுநர், துணை வேந்தரை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவினை அமைக்க வழிமுறை இல்லை.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் 17.10.2022 அன்றும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் 30.11.2022 அன்றும் முடிவடைந்ததால், தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களின் விதிகளின்படி நியமனம் செய்யப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலோடு தமிழ்நாடு அரசிதழில் முறையே 20.09.2022 மற்றும் 19.10.2022 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதுவரையில் எந்த ஒரு ஆளுநரும் தன்னிச்சையாக தேடுதல் குழுவினை அமைத்ததில்லை. அதற்கு விதிகளில் வழிவகையும் இல்லை. தேர்வுக்குழு குறித்த விவரங்களை அரசு தான் அரசிதழில் வெளியிடும். இதுநாள் வரையிலும் தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிட்டு, அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது ஆளுநர், நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிராக தேடுதல் குழுவை தன்னிச்சையாக முடிவு செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள இந்த தேடுதல் குழு முழுக்க முழுக்க பல்கலைக்கழக சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு மாறானது. அரசின் அலுவல் விதிகளின்படி அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும், ஆனால் ஆளுநர் தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டது, மரபு மற்றும் விதிகளுக்கு முரணானது.
தெலுங்கானா மற்றும் குஜராத் மாநில பல்கலைக்கழகங்களில் உள்ளது போல் பல்கலைக்கழக துணைவேந்தரை தெரிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு அளிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா சட்டமன்ற பேரவையில் 25.04.2022 அன்று நிறைவேற்றப்பட்டு, 28.04.2022 அன்று ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இது நாள்வரையில் அந்த மசோதாவிற்கு ஆளுநரிடமிருந்து ஒப்புதல் பெறப்படவில்லை. ஆளுநர் தன்னிச்சையாக பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைத்து வெளியிடப்பட்ட அறிக்கையினை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும்.
The post ’’இதுவரையில் எந்த ஒரு ஆளுநரும் தன்னிச்சையாக தேடுதல் குழுவினை அமைத்ததில்லை..!’’ அமைச்சர் க.பொன்முடி first appeared on Madras Murasu.
]]>The post ’’அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது..!’’ கே.பாலகிருஷ்ணன் first appeared on Madras Murasu.
]]>ஒருபோதும் வெற்றிபெறாது
2011-2012 ஆம் ஆண்டுகளில் ஜெய லலிதா முதலமைச்சராக இருக்கும் போது, பொன்முடி மீது போடப்பட்ட ஒரு வழக்கின் மீது 11 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை மூக்கை நுழைத் திருக்கிறது. ஏற்கனவே, அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இரண்டு வழக்குகளில் அவர் விடுதலையும் பெற்றி ருக்கிறார். அமலாக்கத் துறையினர் சோத னை நடத்தும் இந்த வழக்கும் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
திடீரென அமைச்சர் வீட்டில் சோதனை நடத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது. அடுத்து நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்குள் திமுக அமைச்சர்கள் மீது ஏதாவது பழைய வழக்கு இருந்தால் அதை தூசி தட்டி அதன்மூலம் சோதனை நடத்தி தமிழ்நாட்டு மக்களிடையே ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விடலாம். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கலாம் என்றும் திட்டமிட்டுச் செயல்படுகிறது ஒன்றிய பாஜக அரசு. பாஜகவின் இந்த முயற்சி தமிழ்நாட்டில் ஒருபோதும் வெற்றிபெறாது. இந்த சோதனைகள் அனைத்தும் பாஜகவிற்கு எதிராகத்தான் அமையும்.
நடவடிக்கை என்று கூறுவது ஏமாற்று வேலை
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் நடைபெறு கிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் கலந்துகொள்கிறார். இந்த சூழ்நிலையில், திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அமலாக்கத் துறையின் மூலம் இந்த சோதனை நடத்தப்படுகிறது. அமலாக்கத் துறை சட்ட ரீதியாக செயல்பட வேண்டிய தனித்துறை என்ற நிலை மாறி, பாஜகவின் கைப்பாவை யாக மாறியுள்ளது. பாஜகவின் துணை அமைப்பு போல் செயல்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறுகிறார்கள். அப்படியானால் இந்த சோதனை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் நடத்தப்படுவது ஏன்? பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் நடைபெறவில்லையா? தமிழ்நாட்டிலுள்ள பாஜக தலைவர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டும் புகாரும் உள்ளது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்து வதில்லையே ஏன்? நமது அண்டை மாநிலமான புதுச்சேரி அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் உள்ளன. ஏன் அவர்கள் மீது எந்த வழக்கும் பதியவில்லை? சோதனையும் நடத்துவ தில்லை? ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறுவது ஏமாற்று வேலை. அமலாக்கத்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை யைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் இப்படிப்பட்ட சோதனை நடைபெறுகிறது.
முழுமையாக மூழ்கி விடும்
விலை வாசி உயர்வு, ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை களால் மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காய்கறிகள் உள்ளிட்டு அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. இந்த பிரச்சனை களில் இருந்து மக்களை திசை திருப்பவே இப்படிப்பட்ட சோதனைகளை ஏவி விடுகின்றனர். வருகிற 2024 மக்களவை தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவதற்கு தயாராகிவிட்டனர். இதனால், பாஜக என்னும் கப்பல் முழுமையாக மூழ்கி விடும். அது ஒரு போதும், இந்த முறை கரை சேராது என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,“ அமைச்சர் பொன்முடி மீதான வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வழங்கட்டும். அதுவரைக்கும் பொறுத்திருக்க முடியாமல் அமலாக்கத்துறை மூலம் திமுகவை-யும் அதன் கூட்டணி கட்சிகளையும் மிரட்டலாம் என்று பாஜக நினைக்கிறது. இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது” என்றார்.
சோதனை நடத்தி மிரட்டப் பார்க்கிறார்கள்
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாஜகவிற்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளை பிரித்துவிட்டால் எளிதில் வெற்றிபெற்று விடலாம் என பாஜக நினைக்கிறது. அதனால்தான் இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டும் என பாஜக முயற்சிக்கிறது. தமிழ்நாட்டில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியவில்லை என்பதனால் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தி மிரட்டப் பார்க்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
The post ’’அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது..!’’ கே.பாலகிருஷ்ணன் first appeared on Madras Murasu.
]]>The post ’’பொறியியல் கல்லூரி கலந்தாய்வு ஜூலை 22 தொடக்கம்..! அமைச்சர் க.பொன்முடி first appeared on Madras Murasu.
]]>பொறியியல் கல்லூரிகளில் சேர 2.29 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் 1.88 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணத்துடன் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். இவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த ஜூன் 6 ஆம் தேதி வெளியானது.
தொடர்ந்து, ஜூன் 20 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதனைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 102 மாணவர் கள் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப் பெண் பெற்றுள்ளனர். இதில் 1,06,384 மாணவர்கள், 72,558 மாணவிகள், மூன்றாம் பாலினத் தவர்கள் 17 பேர் என 1,78,959 பேர் மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றனர்.
தகுதியின்மை காரணமாக 3,828 விண்ணப்பங்களும், ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு காரணமாக 5,060 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த கல்வியாண் டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி 13.7.2023 வெளியிட்டார். இதன்படி, பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கு கிறது. ஜூலை 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜூலை 28 ஆம் தேதியில் இருந்து 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதியிலிருந்து தொடங்கி ஆகஸ்ட் 9 வரை முதல் சுற்று கலந்தாய்வும், ஆகஸ்ட் 9 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை 2ஆம் சுற்று கலந் தாய்வும் நடைபெறுகிறது. செப் டம்பர் 15ஆம் தேதிக்குள் 3 சுற்று கலந்தாய்வு முடிந்த பிறகு காலியிடங்கள் இருக்கும் பட்சத்தில் சிறப்பு கலந்தாய்வு நடைபெறும்.
“வழக்கமாக 4 சுற்றுகளாக நடத்தப்படும் கலந்தாய்வு, இந்த ஆண்டு 3 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் 11,804 பேருக்கு, 7.5% இட ஒதுக் கீட்டின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; 236 பேர் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளனர்.
பொறியியல் படிப்புகளில் காலியிடங்கள் இல்லாமல் அனைத்து இடங்களையும் நிரப்புவதற்கான வழிமுறைகளை கையாள, முயற்சி கள் மேற்கொள்ளப்படும்” என்று அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
The post ’’பொறியியல் கல்லூரி கலந்தாய்வு ஜூலை 22 தொடக்கம்..! அமைச்சர் க.பொன்முடி first appeared on Madras Murasu.
]]>The post “அமைச்சர் பொன்முடி வாக்குறுதி என்னாச்சு?” டாக்டர் அன்புமணி கேள்வி first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாட்டில் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை இடைநிலை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் நேரடியாக பணியமர்த்துவது குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவெடுத்து அறிவிக்கப் படும் என்று உறுதியளித்து இன்றுடன் 25 நாட்களாகியும் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. 80 ஆயிரத்திற்கும் கூடுதலான தகுதித்தேர்வு வெற்றியாளர்களின் எதிர்காலம் குறித்த விவகாரத்தில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு பத்தாண்டுகளாக ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. தங்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும்; பணி வழங்க வடிவமைக்கப்பட்டுள்ள சமூகநீதிக்கு எதிரான நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அதை செய்ய வேண்டிய தமிழக அரசு, அதற்கு மாற்றாக 2018-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் போட்டித் தேர்வை திணித்தது. அதாவது ஒருவர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றாலும், மீண்டும் ஒரு போட்டித் தேர்வில் வென்றால் தான் ஆசிரியராக முடியும். இந்த அநீதிக்கு எதிராக தகுதித் தேர்வில் வென்றவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்; அவர்களுக்கு பா.ம.க. துணை நிற்கிறது.
ஆண்டுக்கு ஒரு போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லாத நிலையில், கடந்த மே 9-ஆம் நாள் முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். ஐந்தாவது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்த நிலையில், மே 13-ஆம் நாள் அரசின் சார்பில் அவர்களுடன் பேச்சு நடத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அடுத்த ஒரு வாரத்தில் இந்த சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். அதன்பின் இன்றுடன் 25 நாட்கள் நிறைவடைந்து விட்டன.
ஆனால், தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக ஆசிரியர்களாக அமர்த்துவது பற்றி அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இன்னும் கேட்டால், இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான பணிகளைக் கூட தமிழக அரசு தொடங்கவில்லை.
தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக ஆசிரியர்களை நியமிப்பதில் ஒரு சட்ட சிக்கல் இருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. உண்மையில் தகுதித் தேர்வை ரத்து செய்வதில் தான் சட்ட சிக்கல்கள் உள்ளன; போட்டித்தேர்வை ரத்து செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 10ஆம் வகுப்பு வரையிலும் இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதி வழங்குகிறது.
அதற்காக மத்திய அரசு விதித்த நிபந்தனையின்படி 2012 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதனால், தகுதித் தேர்வை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அதற்குப் பிறகும் போட்டித் தேர்வுகளை நடத்த வேண்டிய தேவை தமிழக அரசுக்கு இல்லை. இது தொடர்பாக 2018-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட பள்ளிக்கல்வித் துறையின் 149-ஆம் எண் அரசாணையை ரத்து செய்து ஆணையிட்டாலே போதுமானது.
பள்ளிக்கல்வித்துறையில் அண்மைக்காலமாக சில சரியான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வித்துறையின் ஆணையர் பொறுப்பை அகற்றி விட்டு, மீண்டும் இயக்குனர் பதவிக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அதற்கான ஆணையை நேற்று பிறப்பித்திருக்கிறது. அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 5 மாதங்களில் எந்தப் பணிக்கும் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படாததை நான் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதே போல், பள்ளிக்கல்வித்துறையில் கடந்த காலங்களில் நிகழ்ந்த அனைத்து தவறுகளும் திருத்தப்பட வேண்டும்; அதில் தகுதித்தேர்வில் வென்றோருக்கு பணி வழங்குவது முதன்மையாக இருக்க வேண்டும்.
இந்த நோக்கங்களை நிறைவேற்றும் வகையிலும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மூலம் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் அரசாணை 149-ஐ நீக்கி விட்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். அத்துடன், ஏற்கனவே இருந்தவாறு ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 57-ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
The post “அமைச்சர் பொன்முடி வாக்குறுதி என்னாச்சு?” டாக்டர் அன்புமணி கேள்வி first appeared on Madras Murasu.
]]>