acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது..!’’ கே.பாலகிருஷ்ணன் first appeared on Madras Murasu.
]]>ஒருபோதும் வெற்றிபெறாது
2011-2012 ஆம் ஆண்டுகளில் ஜெய லலிதா முதலமைச்சராக இருக்கும் போது, பொன்முடி மீது போடப்பட்ட ஒரு வழக்கின் மீது 11 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை மூக்கை நுழைத் திருக்கிறது. ஏற்கனவே, அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இரண்டு வழக்குகளில் அவர் விடுதலையும் பெற்றி ருக்கிறார். அமலாக்கத் துறையினர் சோத னை நடத்தும் இந்த வழக்கும் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
திடீரென அமைச்சர் வீட்டில் சோதனை நடத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது. அடுத்து நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்குள் திமுக அமைச்சர்கள் மீது ஏதாவது பழைய வழக்கு இருந்தால் அதை தூசி தட்டி அதன்மூலம் சோதனை நடத்தி தமிழ்நாட்டு மக்களிடையே ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விடலாம். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கலாம் என்றும் திட்டமிட்டுச் செயல்படுகிறது ஒன்றிய பாஜக அரசு. பாஜகவின் இந்த முயற்சி தமிழ்நாட்டில் ஒருபோதும் வெற்றிபெறாது. இந்த சோதனைகள் அனைத்தும் பாஜகவிற்கு எதிராகத்தான் அமையும்.
நடவடிக்கை என்று கூறுவது ஏமாற்று வேலை
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் நடைபெறு கிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் கலந்துகொள்கிறார். இந்த சூழ்நிலையில், திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அமலாக்கத் துறையின் மூலம் இந்த சோதனை நடத்தப்படுகிறது. அமலாக்கத் துறை சட்ட ரீதியாக செயல்பட வேண்டிய தனித்துறை என்ற நிலை மாறி, பாஜகவின் கைப்பாவை யாக மாறியுள்ளது. பாஜகவின் துணை அமைப்பு போல் செயல்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறுகிறார்கள். அப்படியானால் இந்த சோதனை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் நடத்தப்படுவது ஏன்? பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் நடைபெறவில்லையா? தமிழ்நாட்டிலுள்ள பாஜக தலைவர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டும் புகாரும் உள்ளது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்து வதில்லையே ஏன்? நமது அண்டை மாநிலமான புதுச்சேரி அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் உள்ளன. ஏன் அவர்கள் மீது எந்த வழக்கும் பதியவில்லை? சோதனையும் நடத்துவ தில்லை? ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறுவது ஏமாற்று வேலை. அமலாக்கத்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை யைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் இப்படிப்பட்ட சோதனை நடைபெறுகிறது.
முழுமையாக மூழ்கி விடும்
விலை வாசி உயர்வு, ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை களால் மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காய்கறிகள் உள்ளிட்டு அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. இந்த பிரச்சனை களில் இருந்து மக்களை திசை திருப்பவே இப்படிப்பட்ட சோதனைகளை ஏவி விடுகின்றனர். வருகிற 2024 மக்களவை தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவதற்கு தயாராகிவிட்டனர். இதனால், பாஜக என்னும் கப்பல் முழுமையாக மூழ்கி விடும். அது ஒரு போதும், இந்த முறை கரை சேராது என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,“ அமைச்சர் பொன்முடி மீதான வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வழங்கட்டும். அதுவரைக்கும் பொறுத்திருக்க முடியாமல் அமலாக்கத்துறை மூலம் திமுகவை-யும் அதன் கூட்டணி கட்சிகளையும் மிரட்டலாம் என்று பாஜக நினைக்கிறது. இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது” என்றார்.
சோதனை நடத்தி மிரட்டப் பார்க்கிறார்கள்
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாஜகவிற்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளை பிரித்துவிட்டால் எளிதில் வெற்றிபெற்று விடலாம் என பாஜக நினைக்கிறது. அதனால்தான் இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டும் என பாஜக முயற்சிக்கிறது. தமிழ்நாட்டில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியவில்லை என்பதனால் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தி மிரட்டப் பார்க்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
The post ’’அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது..!’’ கே.பாலகிருஷ்ணன் first appeared on Madras Murasu.
]]>The post ’’தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைக்கு எதிராக தொடர்ந்து பேசுவதா?’’ கர்நாடக துணை முதல்வருக்கு சி.பி.ஐ(எம்) கண்டனம் first appeared on Madras Murasu.
]]>காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார் அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார். அப்போது பெண்ணை ஆற்று பிரச்சனையில் தீர்ப்பாயம் அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியதாகும்.
தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 121 கனஅடியாக இருந்தது ஒரே நாளில் 117 அடியாக சரிந்தது. இதனால் அணையின் நீர் இருப்பும் குறைகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் இருந்து கூடுதலான நீரை பெற வேண்டிய நிலை எழுந்துள்ளது. இப்படியான உடனடி பிரச்சனைகள் உள்ள சூழலில், ஏற்கனவே நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்ட பிரச்சனைகளை புதிதாக குழப்பும் முயற்சியை கர்நாடக அரசாங்கம் தொடர்கிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக எந்தவொரு கட்டுமானத்தை உருவாக்கவும் தமிழ்நாட்டின் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு தன்னிச்சையாக கூறிவந்தது. முன்பு, பாஜக ஆட்சியில் மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்காக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அணை கட்டுமானப் பணிக்கு ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு ரூ.1000 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. மேலும், டி.பி.ஆர் அறிக்கை தயாரிக்க நீர்வளக்குழு அனுமதியளித்தது.
தற்போது கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், துணை முதல்வரும் நீர்ப்பாசன அமைச்சருமான டி.கே.சிவக்குமார் மேகேதாட்டு பகுதியில் அணை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறார். கீழ்மடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதியை பெறாமலே, குழப்பமான கருத்துக்களை முன்வைத்து நாட்டு மக்களை திசைதிருப்புகிறார். அண்மையில் இது தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த டி.கே.சிவக்குமார். மேகதாது அணைக்கு ஒன்றிய அரசின் அனுமதியை கோரியிருப்பதுடன், பெண்ணை ஆற்று பிரச்சனையில் தீர்ப்பாயம் ஏற்படுத்துவதையும் எதிர்த்திருக்கிறார். ஏற்கனவே நீதிமன்றத்தில் உள்ள பிரச்சனைகளில், அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் உண்மைக்கு நேர் எதிராக அமைந்துள்ளன.
காவிரியில் உரிய நீரை உடனடியாக திறந்துவிட தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கினை ஒன்றிய அரசாங்கம் கண்டிப்பதுடன், இனியேனும் இப்பிரச்சனையை குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு அணுக வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டின் நியாயமான நீர் பங்கீட்டு உரிமையை ஏற்பதுடன், புதிய குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் எனவும், மேகேதாட்டு பகுதியில் அணை ஏற்படுத்துவதற்கான எந்த அனுமதியையும் ஒன்றிய அரசு வழங்கக் கூடாது என சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.
The post ’’தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைக்கு எதிராக தொடர்ந்து பேசுவதா?’’ கர்நாடக துணை முதல்வருக்கு சி.பி.ஐ(எம்) கண்டனம் first appeared on Madras Murasu.
]]>The post ’’தமிழக பெண்களிடம் ஆந்திர போலீஸ் பாலியல் வல்லுறவு..!’’ நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல் first appeared on Madras Murasu.
]]>கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், புலியாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன், 5 பெண்கள் உட்பட 9 குறவர் இன மக்களை கடந்த 11.06.2023 அன்று இரவு ஆந்திரா சித்தூர் காவல்துறையினர் கடத்திச் சென்று ஒருவார காலமாக அடைத்து வைத்து அடித்து, இரண்டு பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்து, பெண்களின் மர்ம உறுப்புகளில் மிளகாய் பொடி தூவி, இரும்புக் கம்பியால் கொடூரமாக குத்தி சித்திரவதை செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், சித்தூர் காவல்துறையினரின் இந்த சட்டவிரோத, கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
சித்தூர் காவல்துறை – ஐந்து நாட்களாக லாக்கப்:
கடந்த சில ஆண்டு காலமாக திருடு என்ற பெயரில் எது எங்கு நடந்தாலும் குறவர் இன மக்கள் தான் திருடியிருப்பார்கள் என்று வெள்ளையர் ஆட்சி காலத்திலிருந்து இன்று வரை ஆந்திரா, தமிழ்நாடு மாநில காவல்துறையினர் மிக மோசமான நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 11.6.2023ந் தேதியன்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம், புலியாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 35) என்பவரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல ஆந்திர மாநிலம், சித்தூர் காவல்துறையினர் வந்துள்ளனர்.
எதற்காக இரவு நேரத்திலேயே அழைத்துச் செல்கிறீர்கள் என்று கேட்ட பிரியா என்கிற அருணா (வயது 27) கண்ணம்மாள் (வயது 65), ஸ்ரீதர் (வயது 7) ஆகியோரையும் அடித்து வண்டியில் கடத்திச் சென்றுள்ளனர். இதனை அறிந்த ஐயப்பனின் சகோதரி சத்யா (வயது 40) என்பவர் ஜூன் 12ந் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆன்லைன் மூலமாக புகார் செய்துள்ளார். இந்த செய்தியை அறிந்த ஆந்திர காவல்துறையினர் புகார் செய்த சத்யா, கணவர் ரமேஷ் (வயது 55), மருமகள் பூமதி (வயது 24) ஆகியோரையும் அதே சித்தூர் காவல்துறையினர் இரவோடு, இரவாக கடத்திச் சென்று கூடகலப்பட்டு கிரைம் காவல் நிலையத்தில் அனைவரையும் ஐந்து நாட்களாக லாக்கப்பிலேயே அடைத்து வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை:
இச்சம்பவம் அறிந்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் பி. டில்லிபாபு மற்றும் குறவன் பழங்குடியின சங்கத்தினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், வழக்கறிஞர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஊத்தங்கரை துணை கண்காணிப்பாளர் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவர்களை மீட்க வலியுறுத்தியதின் அடிப்படையில் அழைத்துச் சென்ற 7 பேர்களில் மூன்று பெண்கள் ஒரு சிறுவன், ரமேஷ் ஆகியோரை மட்டும் சித்தூர் காவல்துறையினர் கிருஷ்ணகிரி மத்தூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஐயப்பன் மற்றும் பூமதி ஆகியோரை விடுவிக்கவில்லை.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பிரியா என்கிற அருணா, சத்யா, கண்ணம்மாள், ரேணுகா ஆகியோரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர்கள், குறவர் பழங்குடி சங்கத் தலைவர்கள் நேரில் சென்று விசாரித்த போது, இப்பெண்கள் சித்தூர் காவல்நிலைய காவலர்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார்கள் என்றும், எங்களுடைய மர்ம உறுப்புகளில் மிளகாய் பொடி தூவி சித்தரவதை செய்தார்கள் என்றும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீரும், கபலையுமாக தெரிவித்துள்ளனர். உடனே இவர்களை கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வரப்படுகிறது. ஆந்திர மாநில காவல்துறையினரின் இந்த சட்டவிரோத காட்டுமிராண்டித்தனமான அராஜக நடவடிக்கை தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
பாலியல் வல்லுறவு – சித்தரவதை :
எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட குறவர் இன பெண்களை பாலியல் வன்முறை செயலில் ஈடுபட்டு, கொடுமையான சித்தரவதை நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆந்திரா மாநிலம், சித்தூர் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு அரசும், காவல்துறையும் ஆந்திர மாநில அரசுடனும், காவல்துறையுடனும் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி குற்றமிழைத்த காவலர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வல்லுறவு, சித்தரவதைக்குள்ளாக்குதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான தண்டனை பெற்று தருவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மேலும், பாலியல் வல்லுறவுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகி, உடலாலும், மனதாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட இப்பெண்களுக்கு தீருதவி நிவாரணமாக தலா ரூ. 25 லட்சம் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
The post ’’தமிழக பெண்களிடம் ஆந்திர போலீஸ் பாலியல் வல்லுறவு..!’’ நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல் first appeared on Madras Murasu.
]]>The post ’’ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம்..!’’ மார்க்சிஸ்ட் first appeared on Madras Murasu.
]]>மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாவட்டம், ஓமலூர் பொறியியல் கல்லூரி பட்டியலின மாணவர் கோகுல்ராஜ் வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக கொடூரமான முறையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்ததுடன் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கிட வேண்டுமென குரலெழுப்பினர்.
இந்த கொடூர குற்றச் செயலில் ஈடுபட்ட யுவராஜூம் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று பின்னர் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு கடந்த ஆண்டு யுவராஜூக்கும் அவரது கார் ஓட்டுநருக்கும் சாகும் வரை 3 ஆயுள் சிறை தண்டணையும், எஞ்சிய 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவிற்கு எதிராக யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவினை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சாட்சிகளை தீர விசாரித்ததுடன், குற்றம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். பிறகு இன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ததுடன், மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இவ்வழக்கில் ஆஜராகி சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர் பாப்பா மோகன் -க்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
இத்தீர்ப்பு சாதி ஆணவப் படுகொலைகளில் ஈடுபடும் சாதிவெறியர்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும் என நம்புகிறோம். சாதி மறுப்பு திருமணம் மற்றும் காதல் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு இல்லாத காரணத்தினால் அடிக்கடி சாதி ஆணவப் படுகொலைகள் நிகழ்கின்றன. சமீபத்தில் கூட கிருஷ்ணகிரியில் சாதி ஆணவப் படுகொலை நடந்தது. நாகரீக சமுதாயத்தில் இதுபோன்ற படுகொலைகள் நடப்பது ஏற்புடையதல்ல. எனவே, தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
The post ’’ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம்..!’’ மார்க்சிஸ்ட் first appeared on Madras Murasu.
]]>