Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#நான்முதல்வன் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Mon, 16 Oct 2023 04:00:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 குடிமைப்பணி (ஐஏஎஸ்) தேர்வெழுதும் மாணவர்களுக்கு ரூ.7500 ஊக்கத்தொகை அமைச்சர் உதயநிதி வழங்கினார் https://madrasmurasu.com/6861-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=6861-2 https://madrasmurasu.com/6861-2/#respond Mon, 16 Oct 2023 03:51:20 +0000 https://madrasmurasu.com/?p=6861 நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் திறன் இடைவெளியைக் குறைப்பதும், ஒன்றிய அரசுப் பணிகளில் தமிழக மாணவர்களின் விகிதாச்சாரத்தை அதிகரிப்பதும், அவர்களுக்குத் தரமான பயிற்சியை கட்டணமில்லாமல் வழங்குவதும் இப்பிரிவின் முக்கிய நோக்கமாகும். UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு இந்நிலையில் […]

The post குடிமைப்பணி (ஐஏஎஸ்) தேர்வெழுதும் மாணவர்களுக்கு ரூ.7500 ஊக்கத்தொகை அமைச்சர் உதயநிதி வழங்கினார் first appeared on Madras Murasu.

]]>
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் திறன் இடைவெளியைக் குறைப்பதும், ஒன்றிய அரசுப் பணிகளில் தமிழக மாணவர்களின் விகிதாச்சாரத்தை அதிகரிப்பதும், அவர்களுக்குத் தரமான பயிற்சியை கட்டணமில்லாமல் வழங்குவதும் இப்பிரிவின் முக்கிய நோக்கமாகும்.

UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு

இந்நிலையில் 2023-24க்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசுக் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 1000 மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலை தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.7,500 வீதம், பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது சமீப காலமாக UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றியமைக்க தமிழக அரசால் எடுக்கப்பட்டிருக்கும் மாபெரும் முயற்சியாகும்.

கல்வி ஊக்கத்தொகை

இதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணி முதல்நிலை தேர்வு முடிவுகள் 12.06.2023 அன்று வெளியான நிலையில் அதில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு, இதுவரை 435 மாணவர்களுக்கு தலா ரூ.25000 வீதம் ரூ.1,08,75,000 (ரூபாய் ஒரு கோடியே எட்டு லட்சத்து எழுபத்தையாயிரம்) முதன்மைத் தேர்வுக்கு தயாராவதற்கான ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையானது, மாணவர்களை தேர்வுக்குத் தயாராகும் செலவீனங்களிலிருந்து விடுவித்து, தேர்வின் அடுத்தடுத்த நிலைகளை வெற்றிகொள்ள ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாததிற்கு ரூ.7500

கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி போட்டித்தேர்வு பிரிவால் நடத்தப்பட்ட ஒன்றிய அரசின் முதல்நிலை தேர்வுக்கான உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு (UPSC Prelims Scholarship Exam) நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 52,225 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 32,638 மாணவர்கள் ஊக்கத்தொகைக்கான தேர்வை எழுதினர். அத்தேர்வில் தேர்வான 1000 மாணவர்களுக்கு இனி வரும் 10 மாததிற்கு ரூ.7500 வீதம் என ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படும்.

1000 மாணவர்

இதன் தொடர்ச்சியாக, UPSC முதல்நிலை தேர்வின் ஊக்கதொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவானது கடந்த 10.09.2023 அன்று அரசு தேர்வுகள் இயக்ககம், நடத்தியது. இத்தேர்வுக்கான முடிவுகள் 27.09.2023 அன்று வெளியான நிலையில், 7.10.2023 முதல் 10.10.2023 வரை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் மாத ஊக்கத்தொகை வழங்கும் விழா இன்று (14.10.2023), சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

அமைச்சர் உதயநிதி

குடிமைப் பணிகளுக்குத் தயாராகி வரும் மாணவர்களை செலவுகளின் அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் இத்திட்டமானது சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் வருவதால், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்விழாவுக்கு தலைமை வகித்து, மாணவர்களுக்கு முதல் மாத ஊக்கத்தொதைக்கான வரைவோலையினை வழங்கினார்.

குறிப்பு: தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்வது, ஊக்கத்தொகை பெறுவது, பாடம் படிப்பது தொடர்பாக https://www.civilservicecoaching.com/ என்ற இணையத்தளத்தை பார்க்கவும்.

The post குடிமைப்பணி (ஐஏஎஸ்) தேர்வெழுதும் மாணவர்களுக்கு ரூ.7500 ஊக்கத்தொகை அமைச்சர் உதயநிதி வழங்கினார் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/6861-2/feed/ 0
’’அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!’’ https://madrasmurasu.com/5895-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5895-2 https://madrasmurasu.com/5895-2/#respond Wed, 09 Aug 2023 10:15:07 +0000 https://madrasmurasu.com/?p=5895 நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (9.8.2023) பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில், அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் […]

The post ’’அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!’’ first appeared on Madras Murasu.

]]>
நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (9.8.2023) பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில், அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்தினார்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணையதள வசதிகள், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட “இல்லம் தேடி கல்வி”, “நம் பள்ளி நம் பெருமை”, “எண்ணும் எழுத்தும்”, “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்”, “அனைவருக்கும் ஐஐடி” போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திறன் வகுப்பறைகள் அமைத்தல், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும் என்றும் 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்” என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், நாட்டின் முதன்மை உயர்கல்வி நிலையங்களான இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT), தேசிய தொழில்நுட்ப கழகம் (NIT), தேசிய பேஷன் தொழில்நுட்ப கழகம் (NIFT), இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU), தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (NLU), தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களில் கல்வி பயின்றிட JEE, CUET, National Aptitude Test in Architecture போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ள அரசு பள்ளிகளைச் சார்ந்த சுமார் 225 மாணவ, மாணவியர்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் அவர்களின் கல்விச் செலவினத் தொகை முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது. இதன்மூலம் அம்மாணவ, மாணவியர் உயர்கல்வியை எவ்வித தடையுமின்றி பயில இயலும்.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக கடந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் 25 மாதிரிப் பள்ளிகள் (Model Schools) தொடங்கப்பட்டது. இம்மாதிரிப் பள்ளிகள் அனைத்தும் உண்டு உறைவிடப் பள்ளிகளாக செயல்பட்டு வருகிறது. இம்மாதிரிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில், முதன்மைக் கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயில விருப்பமுள்ள மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தக் கல்வியாண்டில், மேலும் 13 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு, தற்போது 38 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மாதிரிப் பள்ளிகளில் அளிக்கப்பட்ட சிறப்புப் பயிற்சிகளின் காரணமாக இன்றைக்கு சுமார் 225 அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம், தனியார் பள்ளி மாணவர்களால் மட்டும்தான் நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பயில முடியும் என்ற எண்ணத்தை உடைத்து, அரசுப் பள்ளி மாணவர்களாலும் அத்தகைய முன்னோடி கல்வி நிலையங்களில் சேர்ந்து பயில முடியும் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில், தைவான் நாட்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ள கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவி ஜெயஸ்ரீ பேசியபோது, தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி பெற்று தைவான் நாட்டின் குன் ஷான் (Kun Shan) பல்கலைக்கழகத்தில் இளங்கலை இயந்திர பொறியியல் படிக்க தேர்வாகியுள்ளதாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்தூர் என்ற குக்கிராமத்தில் பிறந்து கடல் கடந்து வேறொரு நாட்டிற்கு கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றும், “நான் முதல்வன்”, “இல்லம் தேடி கல்வி”, “புதுமைப் பெண்”, “வானவில் மன்றம்” போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி தன்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் -க்கு, மாணவச் சமுதாயத்தின் சார்பில் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

The post ’’அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/5895-2/feed/ 0
’’ஐஏஎஸ் தேர்வு எழுதும் ஆயிரம் பேருக்கு மாதம் ரூ.7500..!’’ விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17 கடைசி நாள் https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%8f%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2590%25e0%25ae%258f%25e0%25ae%258e%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%2581-%25e0%25ae%258e%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2586 https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%8f%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86/#respond Fri, 04 Aug 2023 11:21:32 +0000 https://madrasmurasu.com/?p=5774 தமிழ்நாட்டில் இருந்து ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 7,500 ஊக்கத் தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் “நான் முதல்வன்’ திட்டம், போட்டித் தேர்வு மாணவர்களுக்கு உதவும்வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முன்னெடுப்பைத் செய்துள்ளது. குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில், 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாகத் […]

The post ’’ஐஏஎஸ் தேர்வு எழுதும் ஆயிரம் பேருக்கு மாதம் ரூ.7500..!’’ விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17 கடைசி நாள் first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாட்டில் இருந்து ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 7,500 ஊக்கத் தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் “நான் முதல்வன்’ திட்டம், போட்டித் தேர்வு மாணவர்களுக்கு உதவும்வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முன்னெடுப்பைத் செய்துள்ளது. குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில், 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாகத் தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.7,500 வழங்குவதற்கான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குத் தயாராவதற்காக ரூ.25,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதோடு அவர்களது செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தோடும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வயது வரம்பு..!

ஐ.ஏ.எஸ். ஆர்வலர்களுக்கான இந்த மாதாந்திர ஊக்கத்தொகைத் திட்டமானது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் செயல்படுத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக, ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதைக் கருத்தில் கொண்டு அகில இந்திய போட்டித் தேர்வுகளில் மீண்டும் தமிழ்நாட்டை முன்னிலைக்குக் கொண்டுவருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியும் பாடக்குறிப்புகளும் கிடைப்பதை இத்திட்டம் உறுதிசெய்ய முனைந்துள்ளது.

மதிப்பீட்டுத் தேர்வை எழுத ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 21. பொதுப் பிரிவினருக்கான அதிகபட்ச வயது 32. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் சீர்மரபினருக்கும் அதிகபட்ச வயது 35, பட்டியல் வகுப்பினருக்கும் பழங்குடியினருக்கும் அதிகபட்ச வயது 37, மாற்றுத் திறனாளிகள் 42 வயதைக் கடந்திருக்கக் கூடாது. ஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பின் அடிப்படையில் மதிப்பீட்டுத் தேர்வுக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்..!

மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாக தேர்வுசெய்யப்பட உள்ள 1,000 மாணவர்களில் 21-22 வயது கொண்ட புதிய ஆர்வலர்கள் 50 பேருக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். பட்டப்படிப்பின் போதே, போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு மிகப் பெரிய பயனளிக்கும். மருத்துவம், கால்நடை அறிவியல் மற்றும் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு மாணவர்களுக்குச் சலுகை அளிக்கப்படும். என்றாலும், அது குறித்து திறன் மேம்பாட்டுக் கழகமே முடிவுசெய்யும். மதிப்பீட்டுத் தேர்வுக்கு https://nmcep.tndge.org/apply_now என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள், 17.08.2023 ஆகும்.

10.09.2023 அன்று முற்பகல் தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களிலும் மதிப்பீட்டுத் தேர்வு நடைபெறவுள்ளது. சரியான விடைகளைத் தேர்வுசெய்யும் வகையில் 150 கேள்விகளைக் கொண்டதாக இத்தேர்வு அமையும். 100 கேள்விகள் பொது அறிவு பிரிவிலிருந்தும் 50 கேள்விகள் சி-சாட் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகளுக்கான திறனறிவு பிரிவிலிருந்தும் கேட்கப்படும். தவறான கேள்விகளுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் கிடையாது. வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். தேர்வுக்கான கால அளவு, 3 மணி நேரம்.

ஆயிரம் மாணவ-மாணவிகள்..!

இத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் 1,000 மாணவர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படும். இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி இந்தப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த மதிப்பெண் பட்டியலிலிருந்து சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கிவரும் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சித் தேர்வு மையம், கோயம்புத்தூரிலும் மதுரையிலும் இயங்கிவரும் அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணி பயிற்சி நிலையங்களுக்கும் சேர்க்கை நடைபெறும். சென்னை பயிற்சி மையத்தில் 225 மாணவர்களுக்கு உண்டு உறைவிட வசதியுடன் முழுநேரப் பயிற்சியும் 100 மாணவர்களுக்குப் பகுதிநேரப் பயிற்சியும் அளிக்கப்பட்டுவருகிறது. கோயம்புத்தூர், மதுரை பயிற்சி நிலையங்களில் தலா 100 மாணவர்களுக்கு முழுநேரப் பயிற்சியளிக்கப்பட்டுவருகிறது.

சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தை நடத்திவரும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி, டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, சீருடைப் பணியாளர் தேர்வாணைம் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் உதவும் வகையில் இணையம் வழியாகப் பயிற்சியளித்து வருவது குறிப்பிடத்தக்கது. AIM TN என்ற யூ-டியூப் தளத்தில் இந்தப் பயிற்சிக் காணொளிகள் பார்க்கக் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டின் முத்திரை..!

இது தவிர வங்கித் துறை, ரயில்வே துறை, எஸ்எஸ்சி உள்ளிட்ட ஒன்றிய அரசின் மற்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும்வகையில் கட்டணமில்லாப் பயிற்சித் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றுவருகிறது. இத்திட்டத்தின் கீழ், 5000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கட்டணமில்லா பயிற்சி, பாடநூல்கள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

ஐஏஎஸ் தேர்வுகளுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி, எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சிறப்புக் கவனம், ஊரக மாணவர்களுக்கும் பயன்படும்வகையில் வல்லுநர்களின் காணொளி வகுப்புகள் என்று போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு ஏற்ற ஒரு சூழலைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது. அரசுப் பணிகளின் வாயிலாக நாடு முழுவதும் தமிழ்நாட்டின் முத்திரையைப் பதிக்க கல்லுரி மாணவர்கள் தயாராக வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

The post ’’ஐஏஎஸ் தேர்வு எழுதும் ஆயிரம் பேருக்கு மாதம் ரூ.7500..!’’ விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17 கடைசி நாள் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%8f%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86/feed/ 0