Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#திருமா #திருமாவளவன் #விசிக - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Sun, 14 May 2023 05:43:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 “பாஜக கூட்டணி உறவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது..!” விடுதலைச் சிறுத்தைகள் கட்சி! https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25ae%2595-%25e0%25ae%2595%25e0%25af%2582%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a3%25e0%25ae%25bf-%25e0%25ae%2589%25e0%25ae%25b1%25e0%25ae%25b5%25e0%25af%2588-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95/#respond Sun, 14 May 2023 05:22:41 +0000 https://madrasmurasu.com/?p=1796 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., வெளியிட்ட அறிக்கை: கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 104 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி மோசடியாக ஆட்சி அமைத்த பாஜகவின் ஊழல் ஆட்சியையும் , மதவெறி அரசியலையும் பெரும்பான்மை சமூகமான இந்துக்களே தற்போது மரண அடி கொடுத்து வீழ்த்தியுள்ளனர். மதச்சார்பின்மையே இந்தியாவின் உயிர்நாடி என்பதை […]

The post “பாஜக கூட்டணி உறவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது..!” விடுதலைச் சிறுத்தைகள் கட்சி! first appeared on Madras Murasu.

]]>
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., வெளியிட்ட அறிக்கை:

கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 104 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி மோசடியாக ஆட்சி அமைத்த பாஜகவின் ஊழல் ஆட்சியையும் , மதவெறி அரசியலையும் பெரும்பான்மை சமூகமான இந்துக்களே தற்போது மரண அடி கொடுத்து வீழ்த்தியுள்ளனர்.

மதச்சார்பின்மையே இந்தியாவின் உயிர்நாடி என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்துக்களின் காவலர்களாக்க் காட்டிக்கொள்ளும் போலிகளுக்கு தக்கப் பாடம் புகட்டியுள்ள கர்நாடக மாநில வாக்காளர்களுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். இந்த வெற்றியைச் சாதித்துள்ள  ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் அடர்த்தியாக வாழும் பெங்களூரு பகுதிகளில் பத்து சட்டமன்றத் தொகுதிகளில் விசிக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டோம். விசிக சார்பில் பிரச்சாரம் செய்யப்பட்ட 11 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருக்கிறது என்பது பெரு மகிழ்ச்சியளிக்கிறது.

காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களை வென்றது மட்டுமின்றி அதிகமான வாக்கு சதவீதத்தையும் பெற்றிருக்கிறது. இதுவரை கர்நாடகாவில் ஆட்சி அமைத்த கட்சிகளிலேயே 43 விழுக்காடு வாக்காளர்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாக காங்கிரஸ் இந்தத் தேர்தலில் சாதனை புரிந்துள்ளது.

காங்கிரசுக்கு வாக்களித்த 43 சதவீத வாக்காளர்களில் சுமார் 35 சதவீதத்தினர் இந்துக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மதசார்பற்ற ஜனதாவுக்கு கிடைத்துள்ள 13.3 சதவீத வாக்குகள் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றுக்கு எதிராக அளிக்கப்பட்டவையே ஆகும். எனினும் அதில் சரிபாதிக்கும் மேலாக பாஜகவுக்கு எதிரானவையே ஆகும்.

ஒட்டுமொத்தத்தில் காங்கிரசுக்கு கிடைத்துள்ள 43 சதவீதத்துடன் மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு கிடைத்துள்ள வாக்குகளில் 6 சதவீத்தையும் சேர்த்தால் சுமார் 50 சதவீத மக்கள் பாஜகவை எதிர்த்து வாக்களித்துள்ளனர். அதில் சிறுபான்மையினர் வாக்குகளைக் கழித்துப் பார்த்தால் சுமார் 40 சதவீத்த்துக்கும் மேலான இந்துக்கள் பாஜகவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர் என்பது தெளிவாகிறது. இதன்மூலம். இந்துக்கள் எல்லாம் தங்களைத் தான் ஆதரிக்கிறார்கள் என்கிற பாஜகவின் பொய்ப் பிரச்சாரத்தை இந்தத் தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்தி உள்ளன.

எந்த ஒரு மாநிலத்திலும் மக்கள் இணக்கமாக அமைதியோடு வாழ்வதைத்தான் விரும்புகிறார்கள். அவர்களைப் பிரித்தாளும் சூது- சூழ்ச்சி நீண்ட காலம் கை கொடுக்காது என்பதற்கு இந்த மக்களின் தீர்ப்பு ஒரு சாட்சி.
கர்நாடகாவில் பாஜக தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாஜக முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அத்துடன், இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக படுதோல்வியைத் தான் சந்திக்கும்.

2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் முன்னறிவிப்பாக இருக்கின்றன. மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்பது இப்போது தெளிவாகத் தெரிந்துவிட்டது.

கர்நாடகாவிலிருந்து பாஜகவை விரட்டியதன் மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்குச் சற்றே ஆறுதல் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்திலிருந்துதான் மதவாத நச்சுக் கிருமிகளைத் தமிழ்நாட்டிலும் பிற அண்டை மாநிலங்களிலும் பரப்பி வந்தனர். இப்போது அந்த பேராபத்தின் தீவிரம் குறைந்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவை தூக்கிச் சுமந்து வரும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பாஜகவுடன் கொண்டுள்ள தங்களது கூட்டணி உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

கர்நாடக தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி தான் என்றாலும், இந்த வெற்றியை நாடு தழுவிய வெற்றியாகக் கொண்டாட வேண்டிய கடமை அனைத்து சனநாயக அமைப்புகளுக்கும் குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கும் உள்ளது.

இதன்மூலம் பாஜகவை ஒட்டுமொத்தமாக ஆட்சி அதிகார பீடத்திலிருந்து துடைத்தெறிவதற்கு எதிர்க்கட்சிகளின் ஐக்கியம் இன்றியமையாததாகும். எனவே, பாஜக எதிர்ப்பு சக்திகள் யாவும் ஒன்றுபட்டு திட்டமிட்ட முறையில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்”.

The post “பாஜக கூட்டணி உறவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது..!” விடுதலைச் சிறுத்தைகள் கட்சி! first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95/feed/ 0
‘’ஈராண்டு கால திமுக ஆட்சி: ஏழை எளியோருக்கு மகிழ்ச்சி..! இனப் பகையோருக்கு மிரட்சி..!’’ – தொல். திருமாவளவன் https://madrasmurasu.com/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2588%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595-%25e0%25ae%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/#respond Mon, 08 May 2023 11:46:21 +0000 https://madrasmurasu.com/?p=1338 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர்- தலைவர் தொல். திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:  திமுக ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த ஆட்சி நிர்வாகத்தால் ஏழை – எளியோருக்கு மகிழ்ச்சி! கொள்கை அடிப்படையிலான இனப்பகையோருக்கு மிரட்சி! பெண்களுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை மற்றும் நகர்ப்புறங்களில் பெண்களுக்கு கட்டணமில்லாத பேருந்து பயணம் போன்ற நலத்திட்டங்களைப் பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் சாதனைகளைப் படைத்துள்ளது. இது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. […]

The post ‘’ஈராண்டு கால திமுக ஆட்சி: ஏழை எளியோருக்கு மகிழ்ச்சி..! இனப் பகையோருக்கு மிரட்சி..!’’ – தொல். திருமாவளவன் first appeared on Madras Murasu.

]]>
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர்- தலைவர் தொல். திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை: 
திமுக ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த ஆட்சி நிர்வாகத்தால் ஏழை – எளியோருக்கு மகிழ்ச்சி! கொள்கை அடிப்படையிலான இனப்பகையோருக்கு மிரட்சி! பெண்களுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை மற்றும் நகர்ப்புறங்களில் பெண்களுக்கு கட்டணமில்லாத பேருந்து பயணம் போன்ற நலத்திட்டங்களைப் பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் சாதனைகளைப் படைத்துள்ளது. இது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி தமிழ்நாட்டு மக்களின் நல்லாதரவோடு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ‘திராவிட முன்மாதிரி’ ஆட்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியா முழுவதும் இந்த திராவிட முன்மாதிரி ஆட்சி நிர்வாகம் பரவ வேண்டும் என வாழ்த்துகிறோம்.
தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவோடு பொறுப்பேற்ற மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் காலத்தில் சொன்னவற்றை மட்டுமின்றி , சொல்லாத பல திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி இருக்கிறார். உலகின் வளர்ந்த நாடுகள்கூட பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில், தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தி வருகிறார்.
தமிழ்நாடு அரசின் கடன் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி குறைக்கப்பட்டு, வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதிய நிதியை ஒதுக்கும் பொருளாதார உறுதிநிலை இப்போது ஏற்பட்டு இருக்கிறது. பல நாடுகளில் இருந்தும் முதலீடுகளை ஈர்ப்பதன் காரணமாக புதிய தொழில்கள் தொடங்கப்படுகின்றன. வளர்ச்சியில் பின்தங்கி இருந்த மாவட்டங்களில் கூட ‘சிப்காட்’ வளாகங்கள் உருவாக்கப்பட்டு இலட்சக் கணக்கானோர் வேலைவாய்ப்பைப் பெறக்கூடிய நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
வேளாண் தொழிலுக்கு உரிய அக்கறை காட்டப்படுவதால் உணவுப் பொருள் உற்பத்தி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டிச் சென்றிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக நலிவடைந்து வந்த பள்ளிக் கல்வியும் உயர்கல்வியும் புது வேகம் பெற்றிருக்கின்றன.
பேரிடர் காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் இழந்த கல்வியை மீட்டுத் தருவதற்கு ‘இல்லம் தேடிக் கல்வி’ , ‘எண்ணும் எழுத்தும்’ , ‘காலை சிற்றுண்டித் திட்டம்’
முதலான திட்டங்கள் பேருதவியாக விளங்குகின்றன.
இதனால் பள்ளி மாணவர்களிடையே இடை நிற்றல் வெகுவாகக் குறைந்து இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஆர்வத்தோடு ஆயிரக்கணக்கான புதிய மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். பெண்கள் உயர் கல்வி பெறுவதை ஊக்குவிக்கும்
‘புதுமைப்பெண்’ திட்டத்தால் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 29% உயர்ந்திருக்கிறது.
நல்லாட்சி என்பது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் சனநாயகப் பண்பு கொண்டதாக இருக்கும் என்பதற்கேற்ப தொழிலாளர்களின் குரலை மதித்து தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது பாராட்டுக்குரியது. நலத்திட்டங்களையும், நல்ல நிர்வாகத்தையும் வழங்குவது மட்டுமின்றி தற்போது இந்திய நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சனாதன சமூகப் பிரிவினைவாதத்துக்கு எதிராக உறுதியோடு கருத்தியல் சமர் புரிவதிலும் நமது முதலமைச்சர் முன்னணியில் நிற்கிறார்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் வாக்கும், ‘எல்லார்க்கும் எல்லாமும்’ என்ற சமதர்ம நோக்கும்தான் திராவிட முன்மாதிரி ஆட்சியின் உள்ளீடு என முதலமைச்சர் கூறியிருப்பது சனாதன சக்திகளுக்கு சரியான பதிலடி ஆகும்.
இரண்டாண்டு காலத்தில் எண்ணிலடங்கா சாதனைகளைச் செய்துள்ள தமிழ்நாடு அரசைப் பாராட்டுகிறோம். இந்தத் திராவிட முன்மாதிரி அரசின் சாதனைகள் தொடர அனைத்து விதங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உற்ற துணையாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்!.

The post ‘’ஈராண்டு கால திமுக ஆட்சி: ஏழை எளியோருக்கு மகிழ்ச்சி..! இனப் பகையோருக்கு மிரட்சி..!’’ – தொல். திருமாவளவன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed/ 0