Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#சுப்ரீம்கோர்ட் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Fri, 03 Nov 2023 08:49:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” முரசொலி https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%258a%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95/#respond Fri, 03 Nov 2023 08:49:29 +0000 https://madrasmurasu.com/?p=7349 ’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” என்று திமுக அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது. அதன் விபரம் வருமாறு: தான் பதில் சொல்ல வேண்டியவை எதற்கும் பதில் சொல்லாமல் –- ஆரிய சனாதன வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவரைச் சட்டத்தின் நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்கிறது தமிழ்நாடு அரசு. இனி ஆளுநர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் அவரது முகம் […]

The post ’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” முரசொலி first appeared on Madras Murasu.

]]>
’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” என்று திமுக அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது. அதன் விபரம் வருமாறு:

தான் பதில் சொல்ல வேண்டியவை எதற்கும் பதில் சொல்லாமல் –- ஆரிய சனாதன வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவரைச் சட்டத்தின் நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்கிறது தமிழ்நாடு அரசு. இனி ஆளுநர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் அவரது முகம் கிழித்தெறியப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதல், தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதையே வழக்கமாக கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளுக்கு உடனுக்குடன் கையெழுத்து போடாமல், ஒவ்வொரு கோப்புக்கும் விளக்கம் கேட்பதையே வழக்கமாக வைத்துள்ளார். அரசியல் எதிரி போன்று செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டமன்றமானது தனது கடமைகளைச் செய்ய விடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்.

அரசியல் சாசன பிரிவுகள் 200 மற்றும் 163–-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள தமிழ்நாடு அரசு, ‘நீட்’ விலக்கு மசோதா, பல்கலைக்கழக சட்டங்களை திருத்துவதற்கான மசோதா உள்ளிட்ட 12 மசோதாக்கள், 4 நடவடிக்கை உத்தரவுகள், 54 கைதிகளின் முன்கூட்டி விடுதலை தொடர்பான கோப்புகள் உள்ளிட்டவை தமிழ்நாடு ஆளுநரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பதவி ஒரு சம்பிரதாய பதவி என்றும், ஆளுநர் அமைச்சரவை ஆலோசனையின்படி செயல்படக் கடமைப்பட்டவர் எனவும் முந்தைய வழக்குகளில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள தமிழ்நாடு அரசு, மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க சர்க்காரியா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தாமதிப்பதன் மூலம் பேரவை செயல்பாடுகளையே ஆளுநர் தடுக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக அவரது செயல்பாடுகள் அனைத்தும் உள்ளது. பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது மட்டுமின்றி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் ஆளுநர் தாமதம் செய்கிறார். சரியான காரணங்களை தெரிவிக்காமல், அரசு அனுப்பும் கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார். ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளை அரசு உரிய விளக்கத்துடன் மீண்டும் அனுப்பியபோதும் ஆளுநர் ஒப்புதல் தர மறுக்கிறார்.

அரசால் அனுப்பப்படும் கோப்புகள், அரசாணைகள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் தாமதிக்கும், ஆளுநரின் இந்த நடவடிக்கையால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு அவசர சட்டமும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 6 வாரங்களில் அது நிரந்தரச் சட்டமாகியிருக்க வேண்டும். தற்போது வரை 12க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளார். இதனால் பல வகையில் அரசால் துரிதமாகச் செயல்பட முடியவில்லை.

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத்திருத்தம், மாநிலப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குதல், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்தை உருவாக்குவது உள்ளிட்ட மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றை முடக்கி வைத்திருக்கிறார். இதனால் பல்கலைக் கழகங்கள் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தின் நோக்கத்தையே சிதைக்கிறார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த விஜயபாஸ்கர், ரமணா, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீதான ஊழல் புகாரில் வழக்குப்பதிவு செய்ய 2022 செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. இதுவரை அனுமதி தராமல் ஆளுநர் இழுத்தடித்து வருகிறார். அமைச்சராக செந்தில்பாலாஜியை நீடிக்கக் கூடாது என்று சொல்லி பெரிய பிரச்சினையைக் கிளப்பிய ஆளுநர் ரவி, கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் அமைச்சர்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதில்தான் அவரது உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வருகிறது.

“நான் திருப்பி அனுப்பவில்லை என்றால் நிராகரித்ததாக அர்த்தம்” என்று ஆணவமாகச் சொன்னவர் இந்த ஆர்.என்.ரவி. அந்தளவுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை கரைத்துக் குடித்தவர் அவர். எந்த சட்டமாக இருந்தாலும் ஒரு முறை விளக்கம் கேட்கலாம். திருப்பி அனுப்பலாம். இரண்டாவது முறை அரசு அனுப்பினால், அதனை ஆளுநர் ஏற்கத்தான் வேண்டும். அதைச் செய்வது இல்லை. அப்படியே ஊறுகாய் பானையில் ஊறப்போட்டு விடுவார். இதுதான் அவரது தந்திரம் ஆகும்.

நீட் விலக்கு மசோதாவை அரசியல் உள்நோக்கத்தோடு நிறுத்தி வைத்தார் என்றால், ஆன்லைன் ரம்மி மசோதாவையும் நிறுத்தி வைத்தார். ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து பேசினார். இதை விட வெட்கக்கேடு இருக்க முடியுமா? ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு முன்னதாக பொதுமக்கள் கருத்தை தமிழ்நாடு அரசு கேட்டது. ‘இதற்கெல்லாமா பொதுமக்கள் கருத்தை கேட்பார்கள்?’ என்று கிண்டல் செய்தது பா.ஜ.க. ஆனால், ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களையே சந்தித்து பேசினார் ரவி. அப்போது பா.ஜ.க.வால் வாயைத் திறக்க முடியவில்லை.

ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளன்று ஆளுநர் உரையாற்ற வேண்டும் என்பது ஒரு வழக்கம். அரசு தயாரித்து தரும் உரையை வாசித்து விட்டுச் செல்ல வேண்டும். அதையே மாற்றியும் திருத்தியும் நீக்கியும் சேர்த்தும் தன் இஷ்டத்துக்கு தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டவர் ஆளுநர் என்பதை அகில இந்திய ஊடகங்கள் அனைத்துமே கண்டித்தன. அதன்பிறகும் அவர் திருந்துவதாகத் தெரியவில்லை.

உச்சநீதிமன்ற வழக்குக்குப் பிறகாவது திருந்துவாரா என்பதைப் பார்ப்போம்.

The post ’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” முரசொலி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95/feed/ 0
‘’திருமண முறை மாறாத ஒன்றல்ல..!’’ தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a3-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b1%25e0%25ae%25be%25e0%25ae%25a4-%25e0%25ae%2592%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25b2 https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2/#respond Wed, 18 Oct 2023 04:39:56 +0000 https://madrasmurasu.com/?p=6961 ’’ஒரே பாலினத் தம்பதிகளின் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, 3:2 என்ற பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது’’. ஒரே பாலினத் தம்பதிகளின் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க மறுப்பது, அரசியலமைப்பு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையை மீறுவது மற்றும் பாரபட்சம் காட்டுவதாக அமையும் என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் ஆகியோர் தங்களின் தீர்ப்புகளை வழங்கிய நிலையில், ஒரே பாலினத் தம்பதிகள் சேர்ந்து வாழ்வதில் சட்டம் […]

The post ‘’திருமண முறை மாறாத ஒன்றல்ல..!’’ தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் first appeared on Madras Murasu.

]]>
’’ஒரே பாலினத் தம்பதிகளின் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, 3:2 என்ற பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது’’.

ஒரே பாலினத் தம்பதிகளின் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க மறுப்பது, அரசியலமைப்பு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையை மீறுவது மற்றும் பாரபட்சம் காட்டுவதாக அமையும் என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் ஆகியோர் தங்களின் தீர்ப்புகளை வழங்கிய நிலையில், ஒரே பாலினத் தம்பதிகள் சேர்ந்து வாழ்வதில் சட்டம் குறுக்கிட முடியாது என்றாலும், அவர்களின் திருமணம், தத்தெடுப்பு உரிமைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்று நீதிபதிகள் ரவீந்திர பட், ஹீமா கோலி மற்றும் பி.எஸ்.நரசிம்மா அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேநேரம், ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்காத காரணத்தாலேயே சிறப்புத் திருமணம் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்பதையும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற நீதிபதிகள் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

உரிமை கோரி தாக்கலான 21 மனுக்கள்

ஒரே பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. “திருமணத்துக்கான இணையரைத் தேர்வு செய்யும் உரிமை எல்.ஜி.பி.டி.க்யூ. (Lesbian, Gay, Bisexual, Trans gender, Queer or Questioning pers ons or the community – LGBTQ) சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்படவேண்டும்; ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் எதிரானது. மேலும், இது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14 மற்றும் 21-ஐ மீறுவதாகும்” என்று இந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டு இருந்தன.

ஒன்றிய பாஜக அரசு எதிர்ப்பு

ஆனால், இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஒன்றிய அரசு ஆட்சேபம் தெரிவித்தது. “ஒரே பாலினத் தம்பதிகளின் திருமண விவகாரத்தில் நாடாளுமன்றம் மட்டுமே முடிவெடுக்க முடியும். நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மேலும், திருமணம் என்பது ஒர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மட்டுமே நடக்க முடியும்” என ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.

மத அமைப்புகளும் கூப்பாடு

ஜமாத்துல் உலமா இ- ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், “ஒரே பாலினத்தவரின் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது மிகவும் அபாயகரமான நடவடிக்கையாகும். இதை நாடாளுமன்றம் எப்போதும் முன்னெடுக்காது என்பதால், நீதிமன்றமும் இதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கக் கூடாது” என்றார். மேலும், “ஒரே பாலின திருமணம் போன்ற கருத்துக்கள் தீவிர நாத்திக உலகக் கண்ணோட்டங்களைக் கொண்ட மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து தோன்றியதாகவும், அதை இந்தியாவின் மீது திணிக்கக்கூடாது” என்றும் குறிப்பிட்டார்.

இதேபோல ஆர்எஸ்எஸ்-சின் மகளிர் பிரிவான சம்வர்தினி நியாஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது என்பது, இந்து திருமண சட்டத்தின் அடிப்படையையே தோல்வியடையச் செய்யும்” என்று குரல் எழுப்பினார்.

“ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது இந்திய பாரம்பரியத்தின் வேரை அசைத்து, சமூகத்தை தலைகீழாக்கும். ஒரே பாலின தம்பதிகளால் வளர்க்கப்படும் குழந்தைகளின் வளர்ச்சியும், குண நலனும் பாதிக்கப்படும். மேற்கத்திய நாடுகளின் தாராள நடத்தைகளை நமது நாட்டின் இந்து கலாச்சாரத்தின் மீது திணிப்பதாக இது அமையும்” என்றும் கூறினார். இந்நிலையில் தனது தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், ஹீமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வை ஏற்படுத்திய தலை மை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், 2023 ஏப்ரலில் துவங்கி 10 வேலை நாட்கள் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டார்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த மே 11 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், செவ்வாயன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை வழங்கியது. முதலில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தனது தீர்ப்பை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: ஒரு நபரின் பாலினம் அவர்களின் பாலினத் தேர்வுடன் தொடர்புடையது அல்ல. அதாவது திருநங்கை என்பது அவர்களின் பாலினம். அவர்கள் ஆண்களைத் திருமணம் செய்வது பாலின தேர்வு. ஒரு திருநங்கை, ஆணைத் திருமணம் செய்து கொள்ள முடியும். அத்தகைய திருமணம் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒரு திருநங்கை இது போல திருமணம் செய்து கொள்ள சட்டம் உள்ள போது, திருநங்கைக்கும்- திருநங்கை க்கும் இடையிலான திருமணம், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணங்களும் சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படலாம்.

திருமண அமைப்பு மாறாத ஒன்றல்ல!

சிறப்புத் திருமண சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர முடியாது என்று கூற முடியாது. திருமணம் ஒரு நிலையான மற்றும் என்றும் மாறாத அமைப்பு என கூறுவது சரியல்ல, திருமணத்தில் பல சீர்திருத்தங்கள் சட்டங்களால் கொண்டு வரப்பட்டுள்ளன. நமது முன்னோர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்காத பல விஷயங்கள் இன்று ஏற்கப்படும் நிலைமை உருவாகி உள்ளது. முன்னர் நடைமுறைப் படுத்தப்பட்ட குழந்தைத் திருமணம், சதி எனும் உடன் கட்டை ஏறுதல் ஆகியவை இன்று நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன.

நீதிமன்றம் தலையிட உரிமை உண்டு

திருமணம் சார்ந்த ஒரே பாலினத்தவர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்ற ஒன்றிய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. திருமணம் சார்ந்த சட்டத்தின் சரத்துகளை நீதிமன்றம் ஆய்வுக்கு உட்படுத்த முடியும். ஒரு சட்டம் செல்லுமா? செல்லாதா? என்பதை ஆராயக் கூடிய அதிகாரத்தை நீதிமன்றத்திடம் இருந்து பிரித்து விட முடியாது. குடும்ப விவகாரங்களில் நீதிமன்றங்களின் தலையீட்டை நிராகரிக்க முடியாது. இது நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டதுதான். அத்தகைய நீதிமன்றத் தலையீடு இல்லாமல் போனால் பலவீனமானவர்கள் பாதிக்கப்படுவர்கள். பொதுமக்களின் அடிப்படை உரிமையை நீதிமன்றமே பாதுகாக்கும்.

நாடாளுமன்ற அதிகாரத்திற்குள் வரவில்லை

அதற்காக, திருமண சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்றத்தை, நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது. நீதிமன்றங்கள் சட்டங்களை இயற்ற முடியாது; நாடாளுமன்றம்தான் சட்டத்தை இயற்ற வேண்டும்; திருமண சட்டத் சீர்திருத்தம் குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும். சிறப்புத் திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அது நாட்டை விடுதலைக்கு முந்தைய காலத்துக்குதான் இழுத்துச் செல்லும்.

பணம், வாழ்விடம் தீர்மானிக்கவில்லை

தன்பாலின உறவு என்பது நகர்ப்புற கருத்தோ அல்லது சமூகத்தின் உயர் வகுப்பினருக்கானது மட்டும் அல்ல. இது பொதுவானது. எந்த தரப்பினர் வேண்டுமானாலும் இதில் ஈடுபடலாம். ஒயிட் காலர் வேலையில் உள்ள பணக்கார ஆங்கிலத்தில் பேசும் ஆண்களை மட்டுமே தன்பாலின உறவாளர்கள் என்று கூறிக்கொள்ள முடியாது. ஒரு கிராமத்தில் விவசாய வேலை செய்யும் பெண் கூட தன்பாலின உறவாளர்களாக இருக்கலாம். மேலை நாடுகளில், பணக்காரர்களின் பகுதிகளில் மட்டுமே தன்பாலின உறவாளர்கள் உள்ளனர் என்ற கருத்தை முதலில் மாற்ற வேண்டும். முதலில் இதை ஒழிக்க வேண்டும். நகரத்தில் வாழும் எல்லோரும் பணக்காரர்கள் என்றும் சொல்ல முடியாது. ஒருவரின் சாதி, பொருளாதாரம் இதை எல்லாம் தாண்டி ஒருவர் ஒரே பாலின உறவாளர்களாக இருக்க முடியும்.

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது தனி உரிமை

அந்த வகையில், இந்த நீதிமன்றம் ஒரே பாலின உறவாளர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டவில்லை. அதுமட்டுமல்ல, பாலியல் நோக்குநிலையின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட முடியாது என்பதை அங்கீகரித்துள்ளது. வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது ஒருவரின் வாழ்க்கைப் போக்கைத் தேர்ந்தெடுப்பதன் ஒரு பகுதியாகும். சிலர் இதை தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவாகக் கருதலாம். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21-ஆவது பிரி வின் கீழ் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரத்துக்கான உரிமை ஆகியவற்றின் அடிப்படையுடன் தொடர்புடையது. தன்பாலின தம்பதிகள் மட்டுமே நல்ல பெற்றோராக இருக்க முடியும் என்று சட்டம் கருத முடியாது. இது பாகுபாடு காட்டுவதாக அமையும். எனவே, ஒரே பாலின தம்பதிகளுக்கான தத்தெடுப்பு விதிமுறைகள் அரசியலமைப்பை மீறும் வகையில் உள்ளது. தன்பாலின தம்பதிகளுக்கு பாகுபாடுகாட்டுகின்றன.

பால் புதுமையரும் குழந்தையை தத்தெடுக்க முடியும்

குழந்தையை தத்தெடுக்க பால்புதுமை தம்பதிகளுக்கு உரிமை உள்ளது. பால்புதுமை தம்பதிகள் உள்பட திருமணம் செய்து கொள்ளாத தம்பதிகளும் குழந்தையை தத்தெடுக்க உரிமை உள்ளது. ஒரே பாலின தம்பதிகளால் குழந்தைகளை சரியாக வளர்க்க முடியாது என்பதற்கான ஆதாரப்பூர்வமான தரவுகள் இல்லை. ஒரே பாலின தம்பதிகள் சமூகத்தில் அனைவரையும் போல சமமாக வாழ அடிப்படை உரிமை உள்ளது. யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க அவர்களுக்கு தான் சுதந்திரம் இருக்கிறது. ஒரே பாலின உறவாளர்கள் (பால் புதுமையர்) உட்பட அனைத்து நபர்களும் தங்கள் வாழ்க்கையின் தார்மீக தரத்தை தீர்மானிக்க உரிமை உண்டு. எதிர்பால் ஈர்ப்பு தம்பதிகளுக்கு செல்லும் பலன்கள், உதவிகள் ஆகியவை தன்பாலின தம்பதிகளுக்கு மறுக்கப்பட்டால் அது அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். தனிச்சட்டம் உள்பட தற்போதுள்ள சட்டங்களின்படி, எதிர்பால் ஈர்ப்பு உறவுகளில் மருவிய பாலினத்தவர் திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது.

காவல்துறை துன்புறுத்தக் கூடாது

பாலியல் அடையாளங்களை கண்டறிவதற்காக பால்புதுமை தம்பதிகளை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை துன்புறுத்தக்கூடாது. பால்புதுமை தம்பதியினரின் உறவு தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பு போலீசார் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும். பாலின மாற்று சிகிச்சை, குடும்பத்துடன் சேர்ந்து வாழுதல் என்கிற நிபந்தனைகளை தன்பாலின உறவாளர்களுக்கு கட்டாயமாக்கக் கூடாது” இவ்வாறு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

The post ‘’திருமண முறை மாறாத ஒன்றல்ல..!’’ தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2/feed/ 0
”பெண் என்பவர் பெண் தான்; இழி வார்த்தைகளைத் தூக்கி எறியுங்கள்..!” – பா.ஹேமாவதி https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b4 https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b4/#respond Fri, 29 Sep 2023 05:29:59 +0000 https://madrasmurasu.com/?p=6599 பாலின நிகர்நிலையை நோக்கிய உந்துதலாக உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள கையேடு, நீதிமன்ற தீர்ப்புகள், வழக்குகள் மற்றும் வாதங்களின் போது, தற்போது பெண்களைக் குறிக்க பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் புறந்தள்ளியுள்ளது. எத்தனை எத்தனை இழி வார்த்தைகள் வழக்கறிஞர்களின் வாதங்கள் மட்டுமல்ல; நீதி பதிகளின் தீர்ப்புகளிலும் கூட, இதுநாள் வரை பெண் களைக் குறிக்க ‘வேசி’, ‘நடத்தை சரியில்லாதவள்’,‘ஒழுக்கம் கெட்டவள்’, ‘கற்புள்ள பெண்’, ‘மயக்கும்பெண்’, ‘விரும்பத்தகாத பெண் ‘ ‘பரத்தையர்’, ‘தளர்வான ஒழுக்கமுள்ள பெண்’, ‘காமக்கிழத்தி’, ‘ஊதாரி பெண்’, ‘அலங்காரம் செய்பவர்’ […]

The post ”பெண் என்பவர் பெண் தான்; இழி வார்த்தைகளைத் தூக்கி எறியுங்கள்..!” – பா.ஹேமாவதி first appeared on Madras Murasu.

]]>
பாலின நிகர்நிலையை நோக்கிய உந்துதலாக உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள கையேடு, நீதிமன்ற தீர்ப்புகள், வழக்குகள் மற்றும் வாதங்களின் போது, தற்போது பெண்களைக் குறிக்க பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் புறந்தள்ளியுள்ளது.

எத்தனை எத்தனை இழி வார்த்தைகள்

வழக்கறிஞர்களின் வாதங்கள் மட்டுமல்ல; நீதி பதிகளின் தீர்ப்புகளிலும் கூட, இதுநாள் வரை பெண் களைக் குறிக்க ‘வேசி’, ‘நடத்தை சரியில்லாதவள்’,‘ஒழுக்கம் கெட்டவள்’, ‘கற்புள்ள பெண்’, ‘மயக்கும்பெண்’, ‘விரும்பத்தகாத பெண் ‘ ‘பரத்தையர்’, ‘தளர்வான ஒழுக்கமுள்ள பெண்’, ‘காமக்கிழத்தி’, ‘ஊதாரி பெண்’, ‘அலங்காரம் செய்பவர்’ போன்ற இழிவான சொற்களே பல ஆண்டுகளாக நீதித்துறையால் பயன் படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற வார்த்தைகள் அனைத்தையும் ஒழித்துக் கட்டுகிறது இந்தக் கையேடு. வழக்கு எப்படிப்பட்டதாக இருந்தாலும், குற்றம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், ‘பெண்’ என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கையேடு கூறியுள்ளது.

மேலும், ‘பாலியல் தொடர்பு கொண்டவள்’ என்ற வார்த்தைக்கு பதிலாக, ‘திருமணத்திற்கு வெளியே உறவு’ என்றும் மாற்றியுள்ளது. இல்லாள், கடமை தவறாத மனைவி, கீழ் படிதலான மனைவி, நல்ல மனைவி என்பதற்கு பதிலாக ‘மனைவி’ என்று மாற்றியுள்ளது. ‘விபச்சாரி’ என்ற வார்த்தையை ‘பாலியல் தொழிலாளி’ என்றும்; திருமணத்திற்கு வெளியே பிறந்த குழந்தையை ‘திருமணம் ஆகாத பெற்றோ ருக்கு பிறந்த குழந்தை’; குழந்தை விபச்சாரம் என்பதை ‘கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தை’; ‘ஈவ்டீசிங்’ என்பதை ‘தெரு பாலியல் துன்புறுத்தல்’ என மாற்றிப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது கையேடு. திரு நங்கைகளை சரியாக புரிந்து கொள்ளும் வகையில் ‘மாற்றுப் பாலினத்தவர்’ போன்ற மரியாதையான வார்த்தையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இந்த கையேடு கூறியுள்ளது.

ஆணாதிக்க கற்பிதங்கள்

‘பெண்கள் அதிக உணர்ச்சி வசப்படுபவர்கள்; முடிவுகளை எடுக்க தெரியாதவர்கள்’; ‘வீட்டு வேலையைத் தாண்டி வேலைக்குப் போகாத பெண்கள் வீட்டிற்கு பங்களிப்பதில்லை’; குழந்தைகள், முதியோர்களை பெண்கள்தான் கவனிக்க வேண்டும் – என்பன உள்ளிட்ட பொதுவான கற்பிதங்கள் நீதிமன்ற வாதங்களிலும் தீர்ப்புகளிலும் வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டி, இதுபோன்ற வேலைகளை “அனைத்து பாலின மக்களும் செய்ய சமமான திறன் கொண்டவர்கள்; பெண்கள் மட்டுமே இது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும் என்று ஆண்கள் பெரும்பாலும் நிபந்தனை விதிக்கிறார்கள்” என்று கையேடு விவரிக்கிறது.

ஊதியமற்ற உழைப்பின் மதிப்பு என்ன?

அதேவேளையில் ஆண்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவான வேலைகளையே பெண்கள் செய்வதாக நம்பப்படுகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “பெண்களின் ஊதியமற்ற உழைப்பு குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்திற்கு பங்களிப்பது மட்டு மல்லாமல், பணச்சேமிப்பையும் ஏற்படுத்துகிறது; அவர்களின் பங்களிப்புகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை, ஏனென்றால் அத்தகைய வேலை, குறைந்த மதிப்புடையது என்று ஆண்கள் நம்புவதாக” கையேடு கூறுகிறது. பொழுதுபோக்காக பெண் குடிப்பதன் மூலமோ புகைப்பிடிப்பதன் மூலமோ தன்னைத் தொடுவதற்கு அனுமதி தந்ததாக கூறும் வாதத்தை ஏற்க முடியாது; ஒரு பெண், இல்லை என்று சொன்னால், இல்லை என்று தான் அர்த்தம் எனச் சுட்டிக்காட்டுகிறது.

அதிகம் பாதிக்கப்படும் பாலியல் தொழிலாளி

பெண் பாலியல் தொழிலாளியை பலாத்காரம் செய்தால் அது குற்றமாகாது என்றே கற்பிதம் செய்யப் பட்டிருக்கிறது. பாலியல் தொழிலாளிகள் தங்கள் தொழிலின் அடிப்படையில் அனைத்து ஆண்களுட னும் பாலியல் உறவில் ஈடுபட சம்மதிக்கமாட்டார்கள்; விருப்பம் இல்லாமல் நடைபெறும் பலாத்காரம் என்பது பாலியல் வன்புணர்வுக் குற்றமாகும்; பாலியல் வன்புணர்வுக்கு மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களில் பாலியல் தொழிலாளர்களும் அடங்குவர் என்பதை விவரிக்கிறது.

பெண்கள் சொல்வதே பொய் தானா?

“பெண் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை எதிர்த்து புகாரளிப்பதில் பெரும் சிரமம் உள்ளது. குற்றவாளி ஒரு குடும்ப உறுப்பினராக, ஒரு முத லாளியாக, அப்பெண்ணின் மீது அதிகாரம் செலுத்தும் நபராகக் கூட இருக்கலாம். எனவே, உயிர் பிழைத்த பாதிக்கப்பட்ட பெண், நீதி கேட்டுப் போராடுவதில் உள்ள சவாலும், ஆண்கள் முன்னிலையில் (காவல்அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உட்பட) பாலியல் வன்கொடுமைகளைப் புகாரளிப்பதில் பெண்களுக்கு உள்ள தயக்கமும், கொடுமை களுக்கு சாதகமான அம்சங்களாக உள்ளன. இதனைப் பயன்படுத்தி, ‘பெண்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்’ என்று கூறும் வாதம் தவறானது; ஒவ்வொரு வழக்கும் அதன் தன்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர, பெண்களின் நேர்மையைப் பற்றிய அனுமானங்களை நீதிமன்றங்களே உருவாக்கக் கூடாது” என்று கையேடு அறிவுறுத்துகிறது.

நீதி வழங்குவதில் பரந்த இடைவெளி

இந்திய நீதிமன்றங்கள் நீதியின் ஜோதியாகவும், மனித உரிமைகளைச் செயல்படுத்துவதற்கு உந்து சக்தியாகவும் இருக்க வேண்டும். ஆனால், மாவட்ட மற்றும் உயர்நீதிமன்றங்கள் மட்டத்தில் பெண்கள் பிரச்சனைகள் தொடர்பான விஷயங்களில் நீதி வழங்குவதில் பரந்த இடைவெளி உள்ளது. பெரும்பாலும் பாலியல் குற்றங்களில் சட்ட உண்மைகளை விட, நீதிமன்றங்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் நடத்தையில் கவனம் செலுத்துவதைக் காணலாம். பஞ்சாப் மாநிலத்தில் குர்மித் சிங் வழக்கில் “ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண்கள் பொய் சொல்கிறார்கள்” என்று உயர்நீதிமன்றம் கூறியது; அபர்ணா பட் பாலியல் வன்புணர்வு வழக்கில், “பெண்கள் அநாகரீகமாக நடந்து கொண்டதால், ஆடைகளால் நடவடிக்கையை தூண்டியதால், “இந்திய” பெண்களுக்குத் தகுதியற்ற முறையிலான நடத்தையால்தான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார்” என்று கூறியது;

மதுரா வழக்கில் பாதிக் கப்பட்ட மைனர் (சிறுமி), தன் விருப்பத்தின் பேரில் தான் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டதாகவும், “உடலுறவில் ஈடுபடுவது அச்சிறுமிக்கு பழக்கம்” என்றும் கூறியது; பீகார் நீதிமன்றத்தில், “நல்ல பெண்கள் என்றால், பாலியல் வன்புணர்வை விட மரணத்தை விரும்புவார்கள்” என்று கூறியது; தருண் தேஜ்பால்வழக்கில் (2019), பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படங்கள் வெளித் தோற்றத்தில் “மகிழ்ச்சியாக” இருப்பதாக கோவா நீதிமன்றம் கூறியது; கர்நாடகா நீதிமன்றம் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கும் போது, “பலாத்காரத்தில் இருந்து தப்பிய பெண் பாதிக்கப்பட்டவரைப் போல் தோன்றவில்லை; வன் புணர்வுக்குப் பிறகு தூங்குவது இந்தியப் பெண்ணு க்குத் தகுதியற்றது” என்று கூறியது- என, இந்திய நீதிமன்றங்கள், பெண்களை வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு வழக்குகளில் எந்த அளவிற்கு இழி வாக சித்தரித்துள்ளன என்பதை, உச்சநீதிமன்றத்தின் கையேடு வருத்தத்துடன் பதிவு செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டால் பாலியல் குற்றத்திலிருந்து தப்பிவிடலாம் என்று தீர்வு கூறுவது; பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய நபர் சொல்லும் வாதத்தைக் கேட்டு பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்வது; ஆடைகளைக் களையாமல் மார்பகங்களைப் பிடிப்பதும், தொடுவதும் பாலியல் துன்புறுத்தலில் சேராது போன்ற ஏராளமான தீர்ப்புகளே, இந்த கையேடு வெளிவரக் காரணமாகும்.

நீதிபதிகளின் பொறுப்பு

இந்த கையேடு நீதிபதிகளுக்கும், வழக்குரைஞர்களுக்கும் வழிகாட்டியாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஒரு நீதிபதி பயன்படுத்தும் மொழியின் வார்த்தைகள் சட்டத்தின் விளக்கத்தை மட்டுமல்ல, சமூகத்தைப் பற்றிய அவர்களின் உணர்வையும் பிரதிபலிக்கிறது. அனைத்து வகையான பாலினச் சார்புகளுக்கு எதிராகவும் நீதிபதிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்; ஒவ்வொரு நபரும், அவர்களின் பாலின அடையாளத்தைப் பொருட்படுத்தாமல், சட்டத்தின் முன் சமமாகவும் கண்ணியமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உரத்துக்கூறுகிறது. இது நிச்சயம் ஓர் அதிர்வை ஏற்படுத்தும். இனியாவது, பெண் குறித்த இழி வார்த்தைகள் தூக்கி எறியப்படட்டும். பெண் என்பவர் பெண் தான்.

கட்டுரையாளர்: சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்- பா.ஹேமாவதி

The post ”பெண் என்பவர் பெண் தான்; இழி வார்த்தைகளைத் தூக்கி எறியுங்கள்..!” – பா.ஹேமாவதி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b4/feed/ 0