Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#ஐஐடிமெட்ராஸ் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Tue, 05 Sep 2023 08:12:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ படிப்பு மாணவர் சேர்க்கை..!’’ அக்டோபர் 19 கடைசிநாள்- ஐ.ஐ.டி மெட்ராஸ் அறிவிப்பு https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2582%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/#respond Tue, 05 Sep 2023 08:12:20 +0000 https://madrasmurasu.com/?p=6125 ஐ.ஐ.டி மெட்ராஸ் தனது எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 19 அக்டோபர் 2023 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://doms.iitm.ac.in/emba/ என்ற ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.  சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) மேலாண்மைக் கல்வித்துறையின் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கான எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ பாடத்திட்டத்தில் ‘சர்வதேச ஆழ்ந்த கற்றல்’ என்ற பாடத் தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது. கற்றல் ஆழமாக இருப்பின், அந்தக் கற்றல் மிகவும் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். […]

The post ’’எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ படிப்பு மாணவர் சேர்க்கை..!’’ அக்டோபர் 19 கடைசிநாள்- ஐ.ஐ.டி மெட்ராஸ் அறிவிப்பு first appeared on Madras Murasu.

]]>
ஐ.ஐ.டி மெட்ராஸ் தனது எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 19 அக்டோபர் 2023 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://doms.iitm.ac.in/emba/ என்ற ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) மேலாண்மைக் கல்வித்துறையின் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கான எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ பாடத்திட்டத்தில் ‘சர்வதேச ஆழ்ந்த கற்றல்’ என்ற பாடத் தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது. கற்றல் ஆழமாக இருப்பின், அந்தக் கற்றல் மிகவும் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

உலகளாவிய தலைமைத்துவம், கலாச்சார நுண்ணறிவு ஆகியவை தான் சர்வதேச ஆழ்ந்த கற்றல் பாடத்திட்டத்தின் மையக் குறிக்கோளாகும். இந்த முன் முயற்சியின் ஒரு பகுதியாக, எக்சிகியூட்டிவ் எம்பிஏ பாடத்திட்டத்தின் ’23 மற்றும் ’24 பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் 9 நாள் ஆழ்ந்த கற்றல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரிலும், ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸ், லில்லே ஆகிய நகரங்களிலும் IESEG ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் என்ற கல்வி நிறுவனத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

உலகளாவிய கலாச்சாரங்களை அறிந்து கொள்ளவும், ஐரோப்பா போன்ற சிக்கலான சமூக-கலாச்சார அமைப்பைக் கொண்ட பிராந்தியத்தில் எவ்வாறு வணிகம் நடைபெறுகிறது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளவும் இந்த வகுப்பறை அமர்வு ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது.

ஐரோப்பாவில் புத்தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டு மையமாகத் திகழும் புகழ் வாய்ந்த டெகத்லானில் உள்ள கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தைப் பற்றி மாணவர்கள் பார்வையிட்டனர். அதே போன்று பிரான்சின் போக்குவரத்து கட்டமைப்புக் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் போர்ட்ஸ்-டி-லில்லே (பிரான்சின் மிகப் பெரிய உள்நாட்டு நதித்துறை முகம்) பற்றிய ஒருபார்வையும் அறிய முடிந்தது. அதே போன்று ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் ஐரோப்பிய நிர்வாகத்தின் சிக்கலான இயக்கவியல் பற்றிய புரிதல் மாணவர்களுக்கு தெரியவந்தது. சமூக-கலாச்சார அனுபவத்தைப் பெறும் வகையில் சொய்ரி எனப்படும் பிரெஞ்சு குடும்பங்களில் நடைபெறக் கூடிய விருந்துடன் இந்த நிகழ்வு நிறைவடைந்தது.

மேலாண்மைக் கல்வித்துறை அடுத்த பிரிவுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக் கடைசி நாள் 19 அக்டோபர் 2023. விருப்பமுள்ள மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். https://doms.iitm.ac.in/emba/

இப்பாடத் திட்டத்தின் தனித்துவ அம்சங்களை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் மேலாண்மைக் கல்வித்துறைத் தலைவர் பேராசிரியை எம்.தேன்மொழி கூறும் போது, “நவீன பாடத்திட்டம், செயல்திட்டம், டிஜிட்டல் முறையில் கவனம் செலுத்துதல், வலுவான குழுக் கற்றல் ஆகியவை தொழில் வல்லுநர்களை புதிய மாற்றத்தையும், நிறுவனங்களில் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் தலைவர்களாக மேம்படுத்துகின்றன” எனக் குறிப்பிட்டார்.

வணிகப் பிரச்சனைகளுக்கு கோட்பாடு கருத்துகளை பயன்படுத்தும் மூன்று திட்டங்கள் உள்பட கடுமையான, நடைமுறை சார்ந்த பாட நெறிமுறைகளை இந்த இரண்டாண்டு பாடத்திட்டம் உள்ளடக்கியதாகும். டிஜிட்டல் பொருளாதாரம், உலகளாவிய உத்திகள், தொழில்துறையின் 4.0 தொழில்நுட்பங்கள் போன்ற தொழில் துறைக்கு தேவையான களங்களில் அதிநவீன அறிவை வழங்குவது எக்சிகியூட்டிவ் எம்பிஏ பாடத்திட்டத்தின் தனித்துவ விற்பனைப்புள்ளியாகும் (USP).

முக்கிய மேலாண்மைக் கருத்துகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள், நிஜ உலகின் சவால்கள், வணிகக்களங்களுக்கான ஒருங்கிணைந்த சிந்தனைகள், உலகளாவிய முன்னோக்குகள், முடிவெடுத்தலில் பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உட்பொதித்தல் போன்ற பல்வேறு அம்சங்களில் எக்சிகியூட்டிவ் எம்பிஏ பாடத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

இத்திட்டம் குறித்து விவரித்த ஐஐடி மெட்ராஸ் மேலாண்மைக் கல்வித்துறை EMBA திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்டி ஜே. கமலநாபன் கூறுகையில், “கிளாசிக்ஸ் தவிர இப்பாடத்திட்டத்தில் இணையப் பாதுகாப்பு மற்றும் அதன் பயன்பாடுகள், நிச்சயமற்ற சூழலில் முடிவெடுத்தல், நிறுவனத் தலைமை மற்றும் மாற்றம், முதலீட்டு மேலாண்மை போன்ற சமகால வணிகத்திற்கு அவசியமான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன” எனக்குறிப்பிட்டார்.

ஐஐடி மெட்ராஸ் மேலாண்மைக் கல்வித்துறை EMBA திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை வி.விஜயலட்சுமி கூறும் போது, “வணிகத்தில் செயற்கை நுண்ணறிவு, வடிவமைப்பு சிந்தனை, தொழில் முனைவு, வணிகத்தில் நிலைத்தன்மை, நவீன உற்பத்தி செயல்முறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மாணவர்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ளமுடியும்” என்றார்.

பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் இடைக்கால பணியில் தகுதி சேர்க்கும் வகையில் பாடநெறியின் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஆழ்ந்த செயல்பாட்டு மற்றும் பரந்த தொழில் துறைகள் அறிவு
வரைமுறைக்கு உட்பட்டு வணிக முடிவு எடுக்க ஏதுவாக
ஒருங்கிணைந்த முன்னோக்கு

உலகளாவியவணிக அமைப்பிற்குபங்களிப்பைவழங்கும்வகையில்
தலைமைத்துவப் பண்புகள்

ஜனவரி 2024 முதல், மாற்று வார இறுதி நாட்களில் நேரடி வகுப்புகள் நடைபெறும்.

மாணவர் சேர்க்கைக்கு தகுதியாக, ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பில் 60% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். குறைந்தபட்சம் 3 வருட பணிஅனுபவம் அவசியம். நுழைவுத் தேர்வு மற்றும் மேலாண்மை கல்வித்துறையால் காணொலி வாயிலாக நடத்தப்படும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

The post ’’எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ படிப்பு மாணவர் சேர்க்கை..!’’ அக்டோபர் 19 கடைசிநாள்- ஐ.ஐ.டி மெட்ராஸ் அறிவிப்பு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/feed/ 0
’’அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!’’ https://madrasmurasu.com/5895-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5895-2 https://madrasmurasu.com/5895-2/#respond Wed, 09 Aug 2023 10:15:07 +0000 https://madrasmurasu.com/?p=5895 நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (9.8.2023) பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில், அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் […]

The post ’’அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!’’ first appeared on Madras Murasu.

]]>
நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (9.8.2023) பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில், அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்தினார்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணையதள வசதிகள், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட “இல்லம் தேடி கல்வி”, “நம் பள்ளி நம் பெருமை”, “எண்ணும் எழுத்தும்”, “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்”, “அனைவருக்கும் ஐஐடி” போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திறன் வகுப்பறைகள் அமைத்தல், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும் என்றும் 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்” என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், நாட்டின் முதன்மை உயர்கல்வி நிலையங்களான இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT), தேசிய தொழில்நுட்ப கழகம் (NIT), தேசிய பேஷன் தொழில்நுட்ப கழகம் (NIFT), இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU), தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (NLU), தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களில் கல்வி பயின்றிட JEE, CUET, National Aptitude Test in Architecture போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ள அரசு பள்ளிகளைச் சார்ந்த சுமார் 225 மாணவ, மாணவியர்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் அவர்களின் கல்விச் செலவினத் தொகை முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது. இதன்மூலம் அம்மாணவ, மாணவியர் உயர்கல்வியை எவ்வித தடையுமின்றி பயில இயலும்.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக கடந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் 25 மாதிரிப் பள்ளிகள் (Model Schools) தொடங்கப்பட்டது. இம்மாதிரிப் பள்ளிகள் அனைத்தும் உண்டு உறைவிடப் பள்ளிகளாக செயல்பட்டு வருகிறது. இம்மாதிரிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில், முதன்மைக் கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயில விருப்பமுள்ள மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தக் கல்வியாண்டில், மேலும் 13 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு, தற்போது 38 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மாதிரிப் பள்ளிகளில் அளிக்கப்பட்ட சிறப்புப் பயிற்சிகளின் காரணமாக இன்றைக்கு சுமார் 225 அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம், தனியார் பள்ளி மாணவர்களால் மட்டும்தான் நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பயில முடியும் என்ற எண்ணத்தை உடைத்து, அரசுப் பள்ளி மாணவர்களாலும் அத்தகைய முன்னோடி கல்வி நிலையங்களில் சேர்ந்து பயில முடியும் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில், தைவான் நாட்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ள கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவி ஜெயஸ்ரீ பேசியபோது, தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி பெற்று தைவான் நாட்டின் குன் ஷான் (Kun Shan) பல்கலைக்கழகத்தில் இளங்கலை இயந்திர பொறியியல் படிக்க தேர்வாகியுள்ளதாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்தூர் என்ற குக்கிராமத்தில் பிறந்து கடல் கடந்து வேறொரு நாட்டிற்கு கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றும், “நான் முதல்வன்”, “இல்லம் தேடி கல்வி”, “புதுமைப் பெண்”, “வானவில் மன்றம்” போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி தன்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் -க்கு, மாணவச் சமுதாயத்தின் சார்பில் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

The post ’’அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/5895-2/feed/ 0
’’ஐஐடிமெட்ராஸ் 2022-23ம் ஆண்டில் ரூ.231 கோடி நன்கொடை திரட்டியது..!’’ நிதி திரட்டும் குழுவை வலுப்படுத்த நடவடிக்கை https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-2022-23%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2590%25e0%25ae%2590%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25b8%25e0%25af%258d-2022-23%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-2022-23%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/#respond Mon, 19 Jun 2023 11:26:07 +0000 https://madrasmurasu.com/?p=4186 சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), அதனுடன் இணைந்து செயல்படும் முன்னாள் மாணவர்கள், தொழில்துறையினர், தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஆகியோரிடம் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.231 கோடியை 2022-23ம் ஆண்டில் திரட்டியுள்ளது. சமூகம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்த ஒரே நிதியாண்டில் திரட்டப்பட்ட அதிகபட்சத் தொகை இதுவாகும். நிதி திரட்டலைப் பொறுத்தவரை 2022-ல் திரட்டப்பட்ட ரூ.131 கோடியுடன் ஒப்பிடுகையில் 76 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ரூ.1 கோடிக்கு மேல் இக்கல்வி நிறுவனத்திற்கு நிதி வழங்கிய […]

The post ’’ஐஐடிமெட்ராஸ் 2022-23ம் ஆண்டில் ரூ.231 கோடி நன்கொடை திரட்டியது..!’’ நிதி திரட்டும் குழுவை வலுப்படுத்த நடவடிக்கை first appeared on Madras Murasu.

]]>

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), அதனுடன் இணைந்து செயல்படும் முன்னாள் மாணவர்கள், தொழில்துறையினர், தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஆகியோரிடம் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.231 கோடியை 2022-23ம் ஆண்டில் திரட்டியுள்ளது. சமூகம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்த ஒரே நிதியாண்டில் திரட்டப்பட்ட அதிகபட்சத் தொகை இதுவாகும்.

நிதி திரட்டலைப் பொறுத்தவரை 2022-ல் திரட்டப்பட்ட ரூ.131 கோடியுடன் ஒப்பிடுகையில் 76 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ரூ.1 கோடிக்கு மேல் இக்கல்வி நிறுவனத்திற்கு நிதி வழங்கிய நன்கொடையாளர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 64 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு திரட்டப்பட்ட மொத்த நிதியின் வளர்ச்சி விகிதம், கடந்த 10 ஆண்டுகளில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தத் தொகை அனைத்தும் முன்னாள் மாணவர்களிடம் இருந்தும், தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்தும் பெறப்பட்டவையாகும். இதுதவிர உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம், மானியங்கள் ஆகியவற்றின் வாயிலாகவும் நிதி திரட்டப்பட்டது.

இக்கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இந்தியா மற்றும் உலகளவில் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் மட்டும் ஏறத்தாழ ரூ.96 கோடி அளவுக்கு தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, குறிப்பிட்ட பொருள் குறித்த ஆய்வுக்கான ஆராய்ச்சிப் பேராசிரியர்களை நியமித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில்துறையினரின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா கூறுகையில், ’ஒவ்வோர் ஆண்டும் முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நன்கொடையாளர்கள் அளித்து வரும் ஆதரவு சர்வதேச அரங்கில் நமது வெற்றிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது, என்றார்.

சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 56 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 40 புதிய நிறுவனங்கள் கூட்டு முயற்சியில் கைகோர்த்துள்ளன. ஐஐடி மெட்ராஸ் நிதி திரட்டும் பணிகளை மேற்கொள்வதற்காக “இன்ஸ்டிடியூஷனல் அட்வான்ஸ்மெண்ட்” அலுவலகத்தில் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு குழு தொழில்ரீதியாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரம், பருவநிலை மாற்றம், ஆற்றல், திறன் மேம்பாடு, விவசாயம் போன்ற சமூகம் தொடர்பான துறைகளில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், வரிசைப்படுத்தவும் கவனம் செலுத்தும் வகையில் எங்களது பயனர்கள் பல்துறைசார் சிறப்பு மையங்களை உருவாக்க எங்களுக்கு உதவுகின்றனர். உதவித்தொகை மற்றும் ஃபெல்லோஷிப் மூலம் மாணவர்களுக்குத் தேவைப்படும் நிதியுதவியையும் வழங்குகின்றனர்’ என்றார்.

சென்னை ஐஐடியுடன் தொடர்புடைய உலகத்தரம் வாய்ந்த ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முன்னாள் மாணவர்களுடன் பரந்த அளவில் பணியாற்றி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

2023-24 ம் நிதியாண்டிற்கான இக்கல்வி நிறுவனத்தின் முக்கிய நிதி திரட்டும் இலக்குகளாக, முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும், அமெரிக்காவிலும் முன்னாள் மாணவர்களிடையே நிதி திரட்டும் குழுவை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

The post ’’ஐஐடிமெட்ராஸ் 2022-23ம் ஆண்டில் ரூ.231 கோடி நன்கொடை திரட்டியது..!’’ நிதி திரட்டும் குழுவை வலுப்படுத்த நடவடிக்கை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-2022-23%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/feed/ 0