Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#ஐஏஎஸ் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Fri, 04 Aug 2023 11:41:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது சிபிஐ பதிந்துள்ள வழக்குகள் எத்தனை தெரியுமா..?’’ https://madrasmurasu.com/%e0%ae%90-%e0%ae%8f-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2590-%25e0%25ae%258f-%25e0%25ae%258e%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%90-%e0%ae%8f-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81/#respond Fri, 04 Aug 2023 11:41:16 +0000 https://madrasmurasu.com/?p=5784 கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு எதிராக, சிபிஐ 135 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார். நாட்டில் 2018, 2019, 2020, 2021, 2022 மற்றும் 2023 (30.06.2023 வரை) ஆகிய கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மீது சிபிஐ 135 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இவை வழக்கமான வழக்குகள் மற்றும் ஆரம்பகட்ட விசாரணை நிலை வழக்குகள் ஆகும். இந்த 135 […]

The post ’’ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது சிபிஐ பதிந்துள்ள வழக்குகள் எத்தனை தெரியுமா..?’’ first appeared on Madras Murasu.

]]>
கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு எதிராக, சிபிஐ 135 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.

நாட்டில் 2018, 2019, 2020, 2021, 2022 மற்றும் 2023 (30.06.2023 வரை) ஆகிய கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மீது சிபிஐ 135 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இவை வழக்கமான வழக்குகள் மற்றும் ஆரம்பகட்ட விசாரணை நிலை வழக்குகள் ஆகும்.

இந்த 135 வழக்குகளில், 57 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 5 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் (அதாவது, 2018 முதல் 2022 வரை), மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் முதல் கட்ட பரிந்துரையின்படி 12,756 அதிகாரிகள் மீதும், இரண்டாம் கட்ட பரிந்துரையின்படி 887 அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில், 719 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்க அறிவுறுத்தப்பட்டது.

இந்தத் தகவலை மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

The post ’’ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது சிபிஐ பதிந்துள்ள வழக்குகள் எத்தனை தெரியுமா..?’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%90-%e0%ae%8f-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81/feed/ 0
’’ஐஏஎஸ் தேர்வு எழுதும் ஆயிரம் பேருக்கு மாதம் ரூ.7500..!’’ விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17 கடைசி நாள் https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%8f%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2590%25e0%25ae%258f%25e0%25ae%258e%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%2581-%25e0%25ae%258e%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2586 https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%8f%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86/#respond Fri, 04 Aug 2023 11:21:32 +0000 https://madrasmurasu.com/?p=5774 தமிழ்நாட்டில் இருந்து ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 7,500 ஊக்கத் தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் “நான் முதல்வன்’ திட்டம், போட்டித் தேர்வு மாணவர்களுக்கு உதவும்வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முன்னெடுப்பைத் செய்துள்ளது. குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில், 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாகத் […]

The post ’’ஐஏஎஸ் தேர்வு எழுதும் ஆயிரம் பேருக்கு மாதம் ரூ.7500..!’’ விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17 கடைசி நாள் first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாட்டில் இருந்து ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 7,500 ஊக்கத் தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் “நான் முதல்வன்’ திட்டம், போட்டித் தேர்வு மாணவர்களுக்கு உதவும்வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முன்னெடுப்பைத் செய்துள்ளது. குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில், 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாகத் தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.7,500 வழங்குவதற்கான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குத் தயாராவதற்காக ரூ.25,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதோடு அவர்களது செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தோடும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வயது வரம்பு..!

ஐ.ஏ.எஸ். ஆர்வலர்களுக்கான இந்த மாதாந்திர ஊக்கத்தொகைத் திட்டமானது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் செயல்படுத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக, ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதைக் கருத்தில் கொண்டு அகில இந்திய போட்டித் தேர்வுகளில் மீண்டும் தமிழ்நாட்டை முன்னிலைக்குக் கொண்டுவருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியும் பாடக்குறிப்புகளும் கிடைப்பதை இத்திட்டம் உறுதிசெய்ய முனைந்துள்ளது.

மதிப்பீட்டுத் தேர்வை எழுத ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 21. பொதுப் பிரிவினருக்கான அதிகபட்ச வயது 32. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் சீர்மரபினருக்கும் அதிகபட்ச வயது 35, பட்டியல் வகுப்பினருக்கும் பழங்குடியினருக்கும் அதிகபட்ச வயது 37, மாற்றுத் திறனாளிகள் 42 வயதைக் கடந்திருக்கக் கூடாது. ஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பின் அடிப்படையில் மதிப்பீட்டுத் தேர்வுக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்..!

மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாக தேர்வுசெய்யப்பட உள்ள 1,000 மாணவர்களில் 21-22 வயது கொண்ட புதிய ஆர்வலர்கள் 50 பேருக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். பட்டப்படிப்பின் போதே, போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு மிகப் பெரிய பயனளிக்கும். மருத்துவம், கால்நடை அறிவியல் மற்றும் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு மாணவர்களுக்குச் சலுகை அளிக்கப்படும். என்றாலும், அது குறித்து திறன் மேம்பாட்டுக் கழகமே முடிவுசெய்யும். மதிப்பீட்டுத் தேர்வுக்கு https://nmcep.tndge.org/apply_now என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள், 17.08.2023 ஆகும்.

10.09.2023 அன்று முற்பகல் தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களிலும் மதிப்பீட்டுத் தேர்வு நடைபெறவுள்ளது. சரியான விடைகளைத் தேர்வுசெய்யும் வகையில் 150 கேள்விகளைக் கொண்டதாக இத்தேர்வு அமையும். 100 கேள்விகள் பொது அறிவு பிரிவிலிருந்தும் 50 கேள்விகள் சி-சாட் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகளுக்கான திறனறிவு பிரிவிலிருந்தும் கேட்கப்படும். தவறான கேள்விகளுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் கிடையாது. வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். தேர்வுக்கான கால அளவு, 3 மணி நேரம்.

ஆயிரம் மாணவ-மாணவிகள்..!

இத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் 1,000 மாணவர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படும். இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி இந்தப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த மதிப்பெண் பட்டியலிலிருந்து சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கிவரும் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சித் தேர்வு மையம், கோயம்புத்தூரிலும் மதுரையிலும் இயங்கிவரும் அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணி பயிற்சி நிலையங்களுக்கும் சேர்க்கை நடைபெறும். சென்னை பயிற்சி மையத்தில் 225 மாணவர்களுக்கு உண்டு உறைவிட வசதியுடன் முழுநேரப் பயிற்சியும் 100 மாணவர்களுக்குப் பகுதிநேரப் பயிற்சியும் அளிக்கப்பட்டுவருகிறது. கோயம்புத்தூர், மதுரை பயிற்சி நிலையங்களில் தலா 100 மாணவர்களுக்கு முழுநேரப் பயிற்சியளிக்கப்பட்டுவருகிறது.

சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தை நடத்திவரும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி, டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, சீருடைப் பணியாளர் தேர்வாணைம் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் உதவும் வகையில் இணையம் வழியாகப் பயிற்சியளித்து வருவது குறிப்பிடத்தக்கது. AIM TN என்ற யூ-டியூப் தளத்தில் இந்தப் பயிற்சிக் காணொளிகள் பார்க்கக் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டின் முத்திரை..!

இது தவிர வங்கித் துறை, ரயில்வே துறை, எஸ்எஸ்சி உள்ளிட்ட ஒன்றிய அரசின் மற்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும்வகையில் கட்டணமில்லாப் பயிற்சித் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றுவருகிறது. இத்திட்டத்தின் கீழ், 5000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கட்டணமில்லா பயிற்சி, பாடநூல்கள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

ஐஏஎஸ் தேர்வுகளுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி, எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சிறப்புக் கவனம், ஊரக மாணவர்களுக்கும் பயன்படும்வகையில் வல்லுநர்களின் காணொளி வகுப்புகள் என்று போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு ஏற்ற ஒரு சூழலைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது. அரசுப் பணிகளின் வாயிலாக நாடு முழுவதும் தமிழ்நாட்டின் முத்திரையைப் பதிக்க கல்லுரி மாணவர்கள் தயாராக வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

The post ’’ஐஏஎஸ் தேர்வு எழுதும் ஆயிரம் பேருக்கு மாதம் ரூ.7500..!’’ விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17 கடைசி நாள் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%8f%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86/feed/ 0
’’குடிமைப் பணி, வனப் பணி முதல் நிலைத் தேர்வு ரிசல்ட் வெளியானது..!’’ https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a3%25e0%25ae%25bf-%25e0%25ae%25b5%25e0%25ae%25a9%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a3%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%ae/#respond Mon, 12 Jun 2023 12:17:02 +0000 https://madrasmurasu.com/?p=3777 குடிமைப்பணித் (முதல்நிலை) தேர்வு கடந்த 28.05.2023 அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வில் தேர்ச்சிப்பெற்று குடிமைப்பணித் (முதன்மை) தேர்வு 2023-க்கு தகுதிப்பெற்றவர்களின் தேர்வு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபோல வனத்துறைக்கு (Indian Forest Service) தேர்வானவர்கள் பெயர் பட்டியலும் வெளியாகி இருக்கிறது. தேர்வு விதிகளின் படி, இந்த அனைத்து தேர்வர்களும் முதன்மைத் தேர்வு 2023-க்காக விரிவான விண்ணப்பம் ஃபார்ம் -1 (டிஏஎப்-1)-1ல் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள், விண்ணப்ப தேதி, சமர்ப்பிப்பு ஆகிய விவரங்கள் […]

The post ’’குடிமைப் பணி, வனப் பணி முதல் நிலைத் தேர்வு ரிசல்ட் வெளியானது..!’’ first appeared on Madras Murasu.

]]>
குடிமைப்பணித் (முதல்நிலை) தேர்வு கடந்த 28.05.2023 அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வில் தேர்ச்சிப்பெற்று குடிமைப்பணித் (முதன்மை) தேர்வு 2023-க்கு தகுதிப்பெற்றவர்களின் தேர்வு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபோல வனத்துறைக்கு (Indian Forest Service) தேர்வானவர்கள் பெயர் பட்டியலும் வெளியாகி இருக்கிறது.

தேர்வு விதிகளின் படி, இந்த அனைத்து தேர்வர்களும் முதன்மைத் தேர்வு 2023-க்காக விரிவான விண்ணப்பம் ஃபார்ம் -1 (டிஏஎப்-1)-1ல் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள், விண்ணப்ப தேதி, சமர்ப்பிப்பு ஆகிய விவரங்கள் ஆணையத்தின் இணைய தளத்தில் அறிவிக்கப்படும்.

இறுதித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டப் பிறகு, முதல்நிலைத் தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண்கள், கட்-ஆஃப் மதிப்பெண்கள், விடைகள் ஆகியவை ஆணையத்தின் இணையதளமான https://upsc.gov.in-ல் வெளியிடப்படும்.

தேர்வர்கள், தங்களுக்கானத் தகவல்கள், தெளிவுகள் ஆகியவற்றை புதுதில்லி ஷாஜகான் சாலையில் உள்ள டோல்பூர் இல்லத்தில் உள்ள தேர்வுக்கூடக் கட்டிடம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் அணுகி தெரிந்து கொள்ளலாம். மேலும் 011-23385271, 011-23098543 அல்லது 011-23381125 என்ற தொலைப்பேசி எண்கள் மூலம் தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.upsc.gov.in/

மொத்தம் 1,105 காலிப்பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் பலலட்சம் பேர் எழுதினார்கள். அதில், முதல் நிலைத்தேர்வில் பங்கேற்றவர்களில் 14,624 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களது விபரம் தேர்வாணையத்தின் இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது.

குடிமைப் பணி விபரம்:

(i) Indian Administrative Service
(ii) Indian Foreign Service
(iii) Indian Police Service
(iv) Indian Audit and Accounts Service, Group ‘A’
(v) Indian Civil Accounts Service, Group ‘A’
(vi) Indian Corporate Law Service, Group ‘A’
(vii) Indian Defence Accounts Service, Group ‘A’
(viii) Indian Defence Estates Service, Group ‘A’
(ix) Indian Information Service, Group ‘A’
(x) Indian Postal Service, Group ‘A’
(xi) Indian P&T Accounts and Finance Service, Group ‘A’
(xii) Indian Railway Protection Force Service, Group ‘A’
(xiii) Indian Revenue Service (Customs & Indirect Taxes) Group ‘A’
(xiv) Indian Revenue Service (Income Tax) Group ‘A’
(xv) Indian Trade Service, Group ‘A’ (Grade III)
(xvi) Indian Railway Management Service, Group ‘A’
(xvii) Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade)
(xviii) Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service (DANICS), Group ‘B’
(xix) Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service (DANIPS), Group ‘B’
(xx) Pondicherry Civil Service (PONDICS), Group ‘B’
(xxi) Pondicherry Police Service (PONDIPS), Group ‘B’

வனத்துறை: வனப்பணி: (IFS)

குடிமைப் பணிக்கும் வனத்துறைக்கும் பொதுவானதுதான் இந்த முதல் நிலைத்தேர்வு. இதில், விண்ணப்பத்தாரர்கள் விருப்பம் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் வனத்துறை முதன்மைத் தேர்வுக்கு (மெயின்) 1,958 பேர் தேர்வாகி இருக்கிறார்கள். இந்திய வனத்துறை அதிகாரி (Indian Forest Service) பணிக்கு 150 பேர் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். வனத்துறை முதன்மைத் தேர்வு, அதன்பிறகு நேர்முகத் தேர்வு நடைபெறும். வனத்துறை அதிகாரி இறுதி பட்டியல் வெளியாகும்.

The post ’’குடிமைப் பணி, வனப் பணி முதல் நிலைத் தேர்வு ரிசல்ட் வெளியானது..!’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%ae/feed/ 0
ஐ.ஏ.எ.ஸ் தேர்வில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர் சூரஜ்..!’’ வீல் சேரில் வாழ்ந்தவரின் வெற்றிச் சரித்திரம் https://madrasmurasu.com/%e0%ae%90-%e0%ae%8f-%e0%ae%8e-%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2590-%25e0%25ae%258f-%25e0%25ae%258e-%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%25ae https://madrasmurasu.com/%e0%ae%90-%e0%ae%8f-%e0%ae%8e-%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae/#respond Mon, 05 Jun 2023 13:33:47 +0000 https://madrasmurasu.com/?p=3443 இந்திய குடிமைப் பணிக்கானத் தேர்வில் வெற்றி பெற்ற 933 பேரில் மாற்றுத் திறனாளிகள் 41 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதில் ஒருவர் சூரஜ். எந்த பயிற்சி மையத்துக்கும் போகாமல் லட்சம் லட்சமாக செலவு செய்யாமல் தனது சுயஉழைப்பின் மீது நம்பிக்கை வைத்து அதில் வெற்றி பெற்று சாதனையாளராகி சரித்திரம் படைத்துள்ளார். யுபிஎஸ்சி நடத்தும் குடிமைப் பணியாளர் தேர்வில் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி), ஐபிஎஸ் (இந்திய காவல் பணி), ஐஎஃப்எஸ் (இந்திய வெளியுறவு பணி) […]

The post ஐ.ஏ.எ.ஸ் தேர்வில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர் சூரஜ்..!’’ வீல் சேரில் வாழ்ந்தவரின் வெற்றிச் சரித்திரம் first appeared on Madras Murasu.

]]>
இந்திய குடிமைப் பணிக்கானத் தேர்வில் வெற்றி பெற்ற 933 பேரில் மாற்றுத் திறனாளிகள் 41 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதில் ஒருவர் சூரஜ். எந்த பயிற்சி மையத்துக்கும் போகாமல் லட்சம் லட்சமாக செலவு செய்யாமல் தனது சுயஉழைப்பின் மீது நம்பிக்கை வைத்து அதில் வெற்றி பெற்று சாதனையாளராகி சரித்திரம் படைத்துள்ளார்.

யுபிஎஸ்சி நடத்தும் குடிமைப் பணியாளர் தேர்வில் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி), ஐபிஎஸ் (இந்திய காவல் பணி), ஐஎஃப்எஸ் (இந்திய வெளியுறவு பணி) மற்றும் குரூப்-ஏ, குரூப்-பி பணியிடங்களுக்கான குடிமைப் பணிகளுக்கானத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி), முதன்மைத் தேர்வு (மெயின்) மற்றும் ஆளுமைத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.

இதில் முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி நடத்தப்பட்டு, அதே மாதத்தில் தேர்வு முடிவுகளும் வெளியிடப் பட்டன. முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 16 முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, டிசம்பர் 6-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது. இறுதித் தேர்வான ஆளுமைத் தேர்வு கடந்த 18-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் கடந்த 23.5.2023 அன்று வெளியிடப்பட்டது.

இதில் அனைத்து வகுப்பினரும் போட்டியிடக்கூடிய பொதுப் பிரிவில் 345 பேர், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினர் (EWS ) 99 பேர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC ) 263 பேர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் (SC ) 154 பேர், பழங்குடியினர் (ST ) 72 பேர், மாற்றுத்திறனாளிகள் 41 உள்பட மொத்தம் 933 பேரை குடிமைப் பணிகளில் நியமனம் செய்ய யுபிஎஸ்சி பரிந்துரைத்தது.

சூரஜ் வெற்றிச் சரித்திரம்:

குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றிபெற்றுள்ள ஒவ்வொரு தகுதியான மாணவரின் பயணமும் ஒருவருக்கொருவர் வேறுபட்டது. அதில் ஆயிரம் சுவராஸ்யங்கள் புதைந்து கிடக்கின்றன. 933 பேரில் 917-வது ரேங்க் பெற்ற, உத்திரபிரதேசத்தின் கஸ்வா குரவலியைச் சேர்ந்த சூரஜ் திவாரி (வயது27), ‘நிலைமை எவ்வளவு கடினமாக இருந்தாலும், முயற்சி செய்பவர்கள் ஒருபோதும் தோற்க மாட்டார்கள்’ என்பதற்கு உதாரணம். ஏழு கடல் தாண்டியதை விட சிவில் சர்வீஸ் தேர்வில் தகுதி பெறுவதே சூரஜ் திவாரிக்கு பெரிய விஷயமாக இருந்தது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுராஜ், ரயில் விபத்தில் தனது வலது கை, இரண்டு கால்களை இழந்த நிலையிலும், மனம் தளராமல் யுபிஎஸ்சி தேர்வெழுதி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். உ.பி-யில் மெயின்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுராஜ், கடந்த 2017-ஆம் ஆண்டு காசியாபாத்தின் தாத்ரி பகுதியில் நடந்த ரயில் விபத்தொன்றில் சிக்கி தனது வலது கை, இடது கையில் இரண்டு விரல்கள், இரண்டு கால்களையும் இழந்தவர். கை, கால்களை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல், குடிமைப் பணித் தேர்வுக்குப் படித்து, தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார்.

சூரஜ் திவாரியுடன் ஒரு உரையாடலில், அவர் தனது வெற்றி மந்திரத்தைப் பகிர்ந்து கொண்டார். ’’நான் சுயமாகப் படித்தேன். எந்த பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொள்ளவில்லை. படிப்பைத் தவிர வேறு எதிலும் எனது கவனத்தை செலுத்தவில்லை. இந்த வெற்றி ஒன்றே என்னையும் எனது குடும்பத்தையும் காப்பாற்றும் எதிர்காலம் என்று முழுமையாக நம்பினேன். அதில் வெற்றிபெற்றுவிட்டேன். இப்போது பலருக்கு நான் முன்மாதிரி’’ என்கிறார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் சூரஜ். அவரது தந்தை, ராஜேஷ் திவாரி, ஒரு தையல் தொழிலாளி, குராவ்லியில் ஒரு சிறிய சேலை கடை வைத்துள்ளார்.

2017 இல், சூரஜ் புதுடெல்லியில் உள்ள தனது கல்லூரியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது. ஜனவரி 29, 2017 அன்று அவர் ஒரு ரயில் நிலையத்தில் ஒரு விபத்தைச் சந்தித்தார். அவரது இரண்டு கால்களும் முழங்காலுக்கு மேல் இருந்தும் வலது கை முழங்கைக்குக் கீழேயும் இழந்ததால், அவர் படுக்கையில் மூழ்கி, அவரது இயற்கை உபாதைகளுக்கு கூட குடும்ப உறுப்பினர்களையே முழுமையாக நம்பியிருந்தார்.

இந்த சோகம் அவரது நடை மற்றும் எழுதும் திறனை மட்டுமல்ல, மனச்சோர்வையும் ஏற்படுத்தியது. சூரஜின் சிகிச்சை 4 மாதங்கள் தொடர்ந்தது. வீட்டின் நிலையும் மோசமடையத் தொடங்கியது, சிறிது நேரம் கழித்து சூரஜின் சகோதரர்களில் ஒருவரும் இறந்தார். இது அவரது வாழ்க்கையின் இருண்ட கட்டம் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறினர். ஆனால், சூரஜ் நிலைமையை தோற்கடித்தார்.

கோவிட்-19 இன் போது, அவர் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார். அவர் தனது முதல் முயற்சியிலேயே எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றார், ஆனால் நேர்காணலுக்கு ஒரு சில மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால் அதற்கு அழைக்கப்படவில்லை. இரண்டாவது முயற்சியில் அவர் தகுதி பெற்றார். முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அவரது வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

சூரஜ் கல்லூரி நண்பர்கள் கூறுகையில், டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி எங்களுடன் படித்தான். படிப்பு வரவில்லை என்பதால் கடைசி 6 மாதம் கல்லூரிக்கு வரவில்லை. பின்னர், பிஏ ருஷ்யன் படிப்பு முடித்தான். சூரஜ் கடின உழைப்பு ஐஏஎஸ் தேர்வெழுதும் பலருக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. அவரை உதாரண புருஷ்ன் என்று இப்போதே பலரும் பேசத்தொடங்கி விட்டனர். இப்போது சூரஜ், எங்களுக்கு வழிகாட்டி’’ என்றார்.

சூரஜ், ‘’நன்றாக இருந்த நான், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கால்கள் அகற்றப்பட்ட நிலையில் துடிதுடித்துப் போனேன். எனது வாழ்க்கை பாதையை நிர்ணயித்துக் கொண்டேன். பெற்றோர் நண்பர்கள் துணையுடன் வெற்றி பெற்றுவிட்டேன். உழைப்பு மட்டுமே நிஜம். 2017-க்கு பிறகு எங்கள் வீட்டுக்கு தீபாவளித் திருநாள் இப்போதுதான் திரும்பி வந்ததுள்ளது’’ என்று மகிழ்ச்சியுடன் அம்மா ஆஷா தேவையை பார்த்துக் கொண்டே கூறினார்.

வாழ்த்துகள் சூரஜ்..!

The post ஐ.ஏ.எ.ஸ் தேர்வில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர் சூரஜ்..!’’ வீல் சேரில் வாழ்ந்தவரின் வெற்றிச் சரித்திரம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%90-%e0%ae%8f-%e0%ae%8e-%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae/feed/ 0