Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
பசுமை - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Sat, 02 Mar 2024 06:22:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.15 ஆயிரம் சேமிக்கும் பிரதமர் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம்..! முழு விபரம் https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2592%25e0%25ae%25b5%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b0 https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0/#respond Sat, 02 Mar 2024 06:22:50 +0000 https://madrasmurasu.com/?p=8805 பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ. 15 ஆயிரம் சேமிக்கும் அற்புதமான திட்டம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்றால் என்ன? இந்த திட்டத்தில் சேர்வது எப்படி? இத்திட்டத்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்னும் மத்திய […]

The post ’’ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.15 ஆயிரம் சேமிக்கும் பிரதமர் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம்..! முழு விபரம் first appeared on Madras Murasu.

]]>
பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ. 15 ஆயிரம் சேமிக்கும் அற்புதமான திட்டம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்றால் என்ன? இந்த திட்டத்தில் சேர்வது எப்படி? இத்திட்டத்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்னும் மத்திய அரசின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சார அலகுகளை அமைப்பவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். சூரிய சக்தி மின்சாரத்தை தாயரிக்கும் இந்த அலகுகளை அமைக்கும் வீடுகள் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை மின்சாரத்தை இலவசமாக பெறலாம். ரூ. 75,021 கோடி ஒதுக்கீட்டுடன் கூடிய இந்த லட்சியத் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை பிப்ரவரி 29ம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?

இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் இரண்டு கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி அலகை அமைத்தால், 60 சதவீத மானியம் கிடைக்கும். இரண்டு முதல் 3 கிலோ வாட் உற்பத்தித் திறனுக்கு கூடுதலாக 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதிகபட்ச வரம்பு 3 கிலோ வாட் உற்பத்தி திறன் ஆகும்.

ஒரு கிலோ வாட் அமைப்புக்கு ரூ.30,000 மானியம் கிடைக்கும். இரண்டு கிலோ வாட் அமைப்புக்கு ரூ. 60,000மும், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் அமைக்கப்படும்  அலகுக்கு ரூ.78,000மும் மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி என்ன?

இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும். சூரிய சக்தி தகடுகளை அமைப்பதற்கு ஏற்ற வகையிலான கூரை கொண்ட சொந்த வீடு இருக்கவேண்டும்.  அந்த வீட்டிற்கு மின்சார இணைப்பு கட்டாயம் இருக்கவேண்டும். வேறு எந்தத் திட்டத்தின் மூலமும் சூரிய சக்தி மின்சாரத்திற்காக மானியம் பெறுபவராக இருக்கக் கூடாது.

இத்திட்டத்தில் எவ்வாறு சேர்வது?

இந்தத் திட்டத்தில் சேர ஆர்வமுடையவர்கள் www.pmsuryaghar.gov.in என்ற தேசிய தளத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். மின்சார விநியோகம் செய்யும் நிறுவனம் மற்றும் மாநிலத்தை அதில் குறிப்பிட வேண்டும். இந்தத் தளத்தில், திட்டத்தில் சேர்வதற்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கும். மேற்கூரை சூரிய சக்தி தகடுகளை அமைக்கும் நிறுவனங்களையோ அல்லது தனிநபர்களையோ நுகர்வோர் தேர்வு செய்து கொள்ளலாம்.

மின் நுகர்வோர் கடன் வசதி பெறமுடியுமா?

மின்சார நுகர்வோர் சோலார் மின் அமைப்புகளை நிறுவுவதற்கு கடன் வசதியும் இத்திட்டத்தில் உள்ளது. 3 கிலோ வாட் அமைப்புகளை நிறுவ 7 சதவீதம் என்ற குறைந்த வட்டியில் கடன் பெறலாம். ரிசர்வ் வங்கியின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகித்ததிற்கு ஏற்ப கடன் விகிதம் மாறுபடும். உதாரணத்திற்கு தற்போதைய  6.5% என்ற ரெப்போ வட்டி விகிதம், 5.5 % மாக குறைந்தால், இந்தத் திட்டத்தின் 7% வட்டி என்பது 6% மாக குறையும்.

மானியம் பெறுவதற்கான வழிமுறை என்ன?

மானியத்தை பெறுவதற்கு முதலில் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். மாநிலம் மற்றும் மின் விநியோக நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட வேண்டும். மின் இணைப்பு எண், செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

இதனையடுத்து மின் இணைப்பு எண் மற்றும் செல்பேசி எண்ணை லாக் இன் செய்ய வேண்டும். படிவத்தின் அடிப்படையில் மேற்கூரை சூரிய சக்தி இணைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

உரிய அனுமதி பெற்றபின், பதிவு செய்துள்ள விற்பனையாளர் மூலம் சூரிய சக்தி தகடுகளை வீட்டின் மேற் கூரையில் நிறுவலாம். சூரிய சக்தி அளவு நிறுவப்பட்ட பின்பு அதன் விவரங்களைத் தெரிவித்து மீட்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மின் விநியோக நிறுவனம், மீட்டரைப் பொருத்திய பின்பு அமைப்புச் சான்றிதழை இணையதளத்தின் மூலம் பெற்று கொள்ளலாம். இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர், நுகர்வோர் தங்களது  வங்கிக் கணக்கு விவரங்களை கேன்சல் செய்யப்பட்ட காசோலை மூலம் தளத்தில் தெரிவிக்கலாம். அடுத்த 30 நாட்களுக்குள் உங்களுக்கான மானியம் உங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

இத்திட்டத்தில்  வீடுகள் ஏன் சேர்க்கப்படுகின்றன?

மக்கள், தங்கள் மின்சாரக் கட்டணத்தைச் சேமிப்பதற்காகவே இந்தத் திட்டத்தில் வீடுகள்  சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. மேலும் உபரியாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கானத் தொகையை மின் விநியோக நிறுவனங்களிடமிருந்து பெற்று கூடுதல் வருமானத்தை ஈட்டலாம்.

பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம், 3 கிலோ வாட் சூரிய மின் சக்தி அலகை நிறுவி, மாதத்தில்  300 யூனிட் மின்சாரத்தை நுகரும் வீட்டுக்கு ஓராண்டில் தோராயமாக ரூ. 15 ஆயிரம் சேமிப்பை உத்தரவாதப்படுத்துகிறது. இத்தகையை வீடுகள் தங்களது சொந்த மின்சாரத்தை உற்பத்தி செய்து, சுமார் ரூ. 1,800 முதல் ரூ. 1875 வரை சேமிக்கலாம்.

சோலார் அலகை நிறுவுவதற்கு பெறும் கடனுக்கான மாதாந்திர தவணையாக ரூ. 610 செலுத்தியப் பின்னர், மாதத்திற்கு ரூ. 1265 வீதம் தோராயமாக ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் மிச்சப்படுத்தலாம். கடன் பெறாத வீடுகளின் சேமிப்பு மேலும் அதிகமாக இருக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதன் மூலம், பசுமைப் பூமி என்னும் லட்சியத்திற்கான பங்களிப்பை வழங்கும் வாய்ப்பும் கிட்டும்.

The post ’’ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.15 ஆயிரம் சேமிக்கும் பிரதமர் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம்..! முழு விபரம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0/feed/ 0
’’பறவைகள் கணக்கெடுப்பு பணி..!’’ தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25b1%25e0%25ae%25b5%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25aa https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa/#respond Sat, 23 Dec 2023 05:50:16 +0000 https://madrasmurasu.com/?p=8363 ’’தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியில் கலந்து கொள்ள ’பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள்’ ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சார்ந்த மாவட்ட வனத்துறையில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்’’. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி 2023-24 ஆம் வருடத்திற்கான […]

The post ’’பறவைகள் கணக்கெடுப்பு பணி..!’’ தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு first appeared on Madras Murasu.

]]>
’’தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியில் கலந்து கொள்ள ’பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள்’ ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சார்ந்த மாவட்ட வனத்துறையில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்’’.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி 2023-24 ஆம் வருடத்திற்கான பறவைகள் கணக்கெடுப்பானது நீர் பறவைகள் மற்றும் நிலப்
பறவைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. நீர் பறவைகளின் கணக்கெடுப்பானது இவ்வருடம் ஜனவரி மாதம் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும், நிலப் பறவைகளின் கணக்கெடுப்பானது மார்ச் மாதம் 02 மற்றும் 03 தேதிகளிலும்
நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பறவைகள் கணக்கெடுப்பிற்காக தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டியுள்ளதால் நீர் பறவைகளின் கணக்கெடுப்பிற்காக ஒரு கோட்டத்திற்கு குறைந்தது 25 இடங்கள் வீதமும், நிலப் பறவைகளின் கணக்கெடுப்பிற்காக ஒரு
கோட்டத்திற்கு குறைந்தது 25 இடங்கள் வீதமும், கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

பறவைகள் கணக்கெடுப்பானது தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளதால் இதில் அனுபவம் வாய்ந்த பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள்
மற்றும் வனத் துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந்த நிகழ்வில் அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்க விரும்பினால், அவர்கள் கணக்கெடுப்புக்கு முன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த கியூ ஆர் கோடு மூலமும் பதிவு செய்யலாம்.

முன்பதிவு செய்ய https://www.forests.tn.gov.in/ என்ற தளத்தை பார்க்க வேண்டும்.

The post ’’பறவைகள் கணக்கெடுப்பு பணி..!’’ தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa/feed/ 0
’’பட்டாசு வேண்டாம் ப்ளீஸ்..!’’ சேலத்தில் விநோத பிரசாரம் https://madrasmurasu.com/7526-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=7526-2 https://madrasmurasu.com/7526-2/#respond Sat, 11 Nov 2023 08:07:56 +0000 https://madrasmurasu.com/?p=7526 “தயவு செய்து பட்டாசு வெடிக்க வேண்டாம்” என்று சேலம் மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ உருக்கமான வேண்டுகோளை வாட்ஸ் அப் மூலம் விடுத்துள்ளார். அய்யாசாமி பசுமை பூங்காவில் வாழும் ’’வவ்வால்களை பாதுகாப்போம்’’ என்று பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை பகுதி 34 வது கோட்டத்திற்கு உட்பட்ட அய்யாசாமி பசுமை பூங்காவில் பல ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அப்பகுதி மக்களை வவ்வாலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தீபாவளி […]

The post ’’பட்டாசு வேண்டாம் ப்ளீஸ்..!’’ சேலத்தில் விநோத பிரசாரம் first appeared on Madras Murasu.

]]>
“தயவு செய்து பட்டாசு வெடிக்க வேண்டாம்” என்று சேலம் மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ உருக்கமான வேண்டுகோளை வாட்ஸ் அப் மூலம் விடுத்துள்ளார். அய்யாசாமி பசுமை பூங்காவில் வாழும் ’’வவ்வால்களை பாதுகாப்போம்’’ என்று பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை பகுதி 34 வது கோட்டத்திற்கு உட்பட்ட அய்யாசாமி பசுமை பூங்காவில் பல ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அப்பகுதி மக்களை வவ்வாலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடப்பட வேண்டும் என்று சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகரன் மற்றும் 34 வது மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ உள்ளிட்டோர் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வாட்ஸ் அப் மூலம் விழிப்புணர்வு

அப்போது, அய்யாசாமி பசுமை பூங்காவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வவ்வாலின் நன்மை குறித்தும், அவற்றை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வவ்வால்கள் பெரும் பங்கு வகித்து வருவதாகவும் எடுத்துக் கூறினர். அதன் பின்னர், அய்யாசாமி பசுமை பூங்காவின் அருகில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று வவ்வாலை பாதுகாக்க அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். மேலும், 34 வது கோட்டத்திற்கு உட்பட்ட 5000 குடும்பங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வவ்வாலின் நன்மை குறித்தும், சுற்றுச்சூழலுக்கு வவ்வால் செய்யும் நன்மை குறித்தும் குறுஞ்செய்தி அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார் மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ.

வவ்வால்களை காப்பாற்றுவோம்

இதுகுறித்து பேசிய மாமன்ற உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ஈசன் இளங்கோ, “சேலம் மாநகர பகுதியில் இருக்கக்கூடிய மிகவும் பழமையான பூங்காவாக அய்யாசாமி பசுமை பூங்கா அமைந்துள்ளது. இங்கு இருக்கக்கூடிய மரங்களிலே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் வாழ்ந்து வருகிறது. அந்த வவ்வால்களை காப்பாற்றுவதற்காக இப்பகுதி மக்களிடம் அதிக ஒலி-ஒளி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தேன். அந்த வெடி அதிர்வுகள், புகைகள் மிகவும் அபூர்வமான இந்த வவ்வால் இனத்தையே அழித்துவிடும்; அவை இடம் பெயர்ந்து போய்விடும் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டேன். வவ்வால் இருப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து துண்டு பிரசுரங்களை பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வந்தவர்களிடம் வழங்கினேன். அதேபோல அய்யாசாமி பூங்கா சுற்றி இருக்கக்கூடிய பகுதியில் இல்லங்களுக்கு சென்று கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.

பட்டாசு வெடிக்க மாட்டோம்

கவுன்சிலர் ஈசன் இளங்கோ, மேலும் கூறுகையில், “வவ்வால்கள் விவசாய நிலங்களை அழிக்கக்கூடிய பூச்சிகளை சாப்பிட்டு அந்த பயிர்களை காக்கும் உற்ற தோழனாக திகழ்கின்றது. ஒரு வவ்வால், ஒரு மணி நேரத்தில் 1,200 கொசுக்களை அழிப்பதாக ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள். எனவே கொசுக்களின் எதிரியான வவ்வால், நம்முடைய நண்பன். மகரந்த சேர்க்கை மூலமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வளர்வதற்கு காரணமாகவும் வவ்வால்கள் இருக்கின்றது என்று மக்களிடத்தில் எடுத்து கூறியுள்ளேன். இதற்கு ஆதரவு  தருவோம் என்று இப்பகுதி மக்கள் கூறி இருக்கின்றார்கள். வவ்வால்கள் வசிக்கக்கூடிய பகுதியில் இருக்கும் பொதுமக்கள் 5000 பேருக்கு, ‘தயவு செய்து பட்டாசு வெடித்து அதிக வெடி சத்தத்தை எழுப்பி புகைகளை கிளப்பி இங்கு வசிக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான வவ்வால்களை அளித்து விடாதீர்கள்’ என்று வாட்ஸ்அப் குரூப் மூலமாக செய்தி அனுப்பி இருக்கின்றேன். அதற்கும் நல்ல பதில் வந்து கொண்டிருக்கின்றது. நிச்சயமாக நாங்கள் ஒரு பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை வேறு விதமாகத்தான் கொண்டாடுவோம். பட்டாசு வெடிக்க மாட்டோம் என்று பொதுமக்கள் செய்தி அனுப்பி கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

’எனது குப்பை எனது பொறுப்பு’’ முதலமைச்சர் தளபதி..!

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு இடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கினார் ஈசன் இளங்கோ. அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அவர்களுடைய கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். தீபாவளி அன்று உருவாகும் குப்பைகளை, கழிவுகளை எப்படி பிரித்தெடுத்து அகற்ற வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களையும் அப்போது தெரிவித்தார் ஈசன் இளங்கோ. ’’எனது குப்பை எனது பொறுப்பு’’ என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் உத்தரவுப்படி, தூய்மைப்பணியாளர்களும் பொதுமக்களும் செயல்பட வேண்டும் என்று தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது 34 வது கோட்டம், கவுன்சிலர் ஈசன் இளங்கோ கேட்டுக் கொண்டார்.

The post ’’பட்டாசு வேண்டாம் ப்ளீஸ்..!’’ சேலத்தில் விநோத பிரசாரம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/7526-2/feed/ 0
’’புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் வருவாயை அதிகரிக்க வேண்டும்..!’’ அமைச்சர் மதிவேந்தன் https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%25b1%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%95/#respond Thu, 09 Nov 2023 05:03:58 +0000 https://madrasmurasu.com/?p=7465 புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் அதிக நிதி கிடைக்கும் வகையில், புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் வருவாயை அதிகரிக்க புலிகள் காப்பக மேலாண்மையிடம் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (08.11.2023) மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு முன்னிலையில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்  தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு புலிகள் காப்பகங்களின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம். புலிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன், […]

The post ’’புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் வருவாயை அதிகரிக்க வேண்டும்..!’’ அமைச்சர் மதிவேந்தன் first appeared on Madras Murasu.

]]>
புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் அதிக நிதி கிடைக்கும் வகையில், புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் வருவாயை அதிகரிக்க புலிகள் காப்பக மேலாண்மையிடம் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை:
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (08.11.2023) மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு முன்னிலையில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்  தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு புலிகள் காப்பகங்களின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்.
புலிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன், புலிகள் காப்பகங்களை நிர்வகிப்பதற்கு ஆதரவாக, மாநிலத்தின் அனைத்து புலிகள் காப்பகங்களிலும் புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையை (TCFT) தமிழ்நாடு அமைத்துள்ளது. புலிகள் காப்பகங்களின் பல்லுயிர் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் உள்ளூர் சமூகங்களை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் மேம்பாட்டு முயற்சிகளை ஊக்குவிப்பதில் புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை மூலம் நடைபெறுகின்றன. புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை என்பது, புலிகள் காப்பகத்திற்குகிடைக்கப்பெறும் நிதி வருவாயைக் கொண்டு, வன உயிரின பாதுகாப்பு முயற்சிகளுக்கும், வனப்பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் உள்ளுர் சமூக நலனுக்காகவும், அந்நிதியை திரும்ப பயன்படுத்துவதற்கு சிறப்பு நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு சட்டப்பூர்வமான அமைப்பாகும்.
புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை
புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையில் கிடைக்கப்பெறும் நிதியானது, புலிகள் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், புலிகளின் வாழ்விடப் பாதுகாப்பிற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களைத் திரட்டுவதற்கும், சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு ஊக்கமளிப்பதற்கும், புலிகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புலிகள் காப்பக நிர்வாகத்திற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை சூழல் சுற்றுலா, சரணாலய நுழைவுக்கட்டணம், நினைவுப்பொருட்கள் விற்பனை வருவாய் மற்றும் நன்கொடை மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் இனங்களை பெற்று பிற பங்குதாரர்களுடன் ஒத்துழைத்து, புலிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உதவி செய்து காப்பகங்கள் திறம்பட நிர்வகிப்பதற்கும் பெரும் பங்கு வகிக்கின்றன. வாழ்விட மேம்பாடு, வனவிலங்கு பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு, திறன் மேம்பாடு, விழிப்புணர்வு உருவாக்கம், வாழ்வாதார மேம்பாடு, மனித – வனஉயிரின மோதல் தணிப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக அறக்கட்டளை நிதி பயன்படுத்தப்படுகிறது.
அரசு சாரா அமைப்பு
ஒவ்வொரு புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையும் அதற்கென ஏற்படுத்தப்பட்ட ஆளுமை குழுவின் வழிகாட்டுதலின்படி இயங்குகிறது. ஆளுமைக்குழு என்பது ஒவ்வொரு புலிகள் காப்பக அறக்கட்டளையின் உயரிய குழு ஆகும். இது, அறக்கட்டளையின் முக்கிய முடிவுகளை எடுக்கவும், கொள்கைகளை வகுக்கும் குழுவாகவும் உள்ளது. இக்குழுவின் தலைவராக வனத்துறை அமைச்சர் செயல்படுகிறார். மற்றும் துணைத்தலைவராக அரசின் கூடுதல் தலைமை செயலர் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை) செயல்படுவார்.  இக்குழுவில், அந்தந்த புலிகள் காப்பகத்திலுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு சாரா அமைப்புகளின் வன பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்தந்த மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் மூத்த அலுவலர்கள், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (HoFF), முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரினக் காப்பாளர், முதன்மை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (புலிகள் திட்டம்), கள இயக்குநர்கள், ஆளுமைக்குழுவின் அலுவல் வழி உறுப்பினர்களாகவும் இருப்பர்.
அமைச்சர் (வனத்துறை) டாக்டர் மதிவேந்தன்
மேலும், மாநிலத்தில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்களின் ஆளுமைக்குழுவின் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் 08.11.2023 அன்று நடைபெற்றது.
கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதி உறுப்பினர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் நிபுணர்களின் ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புலிகள் பாதுகாப்பிற்கும், உள்ளூர் சமூகங்களின் முன்னேற்றத்திற்கான தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் அளித்தனர். ஆளுமைக்குழு, அறக்கட்டளைகளின் செயல்பாட்டை ஆய்வு செய்து, வருடாந்திர செயல்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தனர். அமைச்சர் (வனத்துறை) டாக்டர் மதிவேந்தன், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் அதிக நிதி கிடைக்கும் வகையில், அறக்கட்டளையின் வருவாயை அதிகரிக்க புலிகள் காப்பக மேலாண்மையிடம் கோரிக்கை விடுத்தார்.
புதிய வெளிச்சம்
சபாநாயகர் மு.அப்பாவு, இத்துறையின் பாதுகாப்பு முயற்சிகள் குறித்து திருப்தி தெரிவித்ததுடன், பழமையான பகுதியைப் பாதுகாக்க அதிகாரிகள் அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதிகளின் ஒருமைப்பாட்டை பராமரிக்கவும், ஆக்கிரமிப்பு அந்நிய இனங்களின் பரவலுக்கு நீண்டகால தீர்வு காணவும் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  கோரிக்கை விடுத்தார்.
அறக்கட்டளையின் துணைத் தலைவரும், அரசின் கூடுதல் தலைமைச் செயலாளருமான சுப்ரியா சாஹு, புலிகள் காப்பக நிர்வாகத்தை, புலிகள் காப்பகத்தின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புச் சூழலில் தமிழக அரசின் புதிய முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பின் பலன்களைப் பயன்படுத்தி, மாநிலத்தின் புலிகள் பாதுகாப்பை புதிய வெளிச்சத்துக்குக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு
இந்நிகழ்ச்சியில் சுற்றுசூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் துறைத் தலைவர் சுப்ரத் முஹபத்ர, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரினக் காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ரா.ரெட்டி முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (புலிகள் திட்டம்) ராகேஷ்குமார்டோக்ரா சிறப்பு செயலாளர் (சுற்று சூழல் காலநிலை மாற்றம்) அன்ராக் மிஷ்ரா, சிறப்பு செயலாளர் (வனம்) தெ.ரிட்டோ சிரியாக் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post ’’புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் வருவாயை அதிகரிக்க வேண்டும்..!’’ அமைச்சர் மதிவேந்தன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%95/feed/ 0
’’கோயம்பேடு மார்க்கெட்டில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும்..!’’ அமைச்சர் பி.கே.சேகர்பாபு https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/#respond Thu, 02 Nov 2023 09:00:12 +0000 https://madrasmurasu.com/?p=7325 ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் போக்குவரத்து நெரிசல் அவ்வபோது ஏற்படுகிறது. அதை ஒழுங்கு படுத்திக்கொண்டுதான் வருகின்றோம். வருங்காலங்களில் போக்குவரத்திற்கும் பாதகம் இல்லாமல் கடைகளை வைத்திருப்பவர்களுக்கும் வாழ்வாதாரமும் எந்தவித பாதிப்பும் இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி அளித்தார். சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்திலுள்ள அண்ணா கனி அங்காடிகளை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, ஆய்வு செய்தார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் […]

The post ’’கோயம்பேடு மார்க்கெட்டில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும்..!’’ அமைச்சர் பி.கே.சேகர்பாபு first appeared on Madras Murasu.

]]>
‘’கோயம்பேடு மார்க்கெட்டில் போக்குவரத்து நெரிசல் அவ்வபோது ஏற்படுகிறது. அதை ஒழுங்கு படுத்திக்கொண்டுதான் வருகின்றோம். வருங்காலங்களில் போக்குவரத்திற்கும் பாதகம் இல்லாமல் கடைகளை வைத்திருப்பவர்களுக்கும் வாழ்வாதாரமும் எந்தவித பாதிப்பும் இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி அளித்தார்.

சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்திலுள்ள அண்ணா கனி அங்காடிகளை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, ஆய்வு செய்தார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரால் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட கோயம்பேடு அங்காடியில் சுமார் 86 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கின்ற காய்கறி அங்காடி, மலர் அங்காடி, கனி அங்காடி மற்றும் உணவு தானிய அங்காடி என்று மொத்தமாக 3941 கடைகள் அமைந்திருக்கின்ற இந்த கோயம்பேடு மார்கெட்டில் இன்றைக்கு கனி அங்காடியை ஆய்வு செய்தோம். அதில் இருக்கின்ற 992 கடைகள், அந்த கடைகளிலே ஏற்படுகின்ற கழிவுகள் அந்த கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்ந்து அந்த அங்காடி பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்வது என்று பல்வேறு நிலைகளில் இன்று ஆய்வினை மேற்கொண்டுள்ளோம்.

கண்காணிப்பு கேமரா

மழைக்காலங்களில் ஏற்படுகின்ற மழைநீர் தேக்கத்தை நிறந்தரமாக தீர்வு காணுவதற்கு சுமார் 2.5 கிலோ மீட்டர் அளவிற்கு மழைநீர் கால்வாய் புதியதாக கட்ட வேண்டும் என்று பொறியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள் இருந்தாலும் முதல் கட்டமாக அந்த கால்வாய் அமைந்திருக்கின்ற முழுவதுமாக தூர் வாரப்பட வேண்டுமென்று அறிவுறுத்திருக்கின்றோம். அந்த வழியிலே விரைவாக இந்த பணிகளை மேற்கொள்வதற்கு முழுவீழ்ச்சில் நடவடிக்கை எடுப்பதற்கு இப்பொழுது பணிகள் துவங்கப்பட இருக்கின்றது. அதேபோல் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு கோயம்போடு அங்காடி மேம்பாட்டிற்காக சுமார் 20 கோடி ரூபாய் ஒதிக்கீடு செய்யப்பட்டது. அதில் புதியதாக நுழைவு வாயில் அதேபோல் நீரோட்டு நிலையம் அறிவிப்பது பொது அறிவிப்பு சாதனங்கள், கண்காணிப்பு கேமரா பொருத்துகின்ற பணி, உயர்மட்ட மின் விளக்குகள் அமைக்கின்ற பணிகள், சிதலமடைந்த மின் விளக்குகளை புதுப்பித்தல், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் பொருந்தும் பணிகள் மொத்தமாக ரூபாய் 13 கோடி அளவில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளுக்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு, கூடிய விரைவில் அந்த பணிகளும் மேற்கொள்ளப்படும்.

மேலும், 2023 -2024 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையில் கோயம்பேடு அங்காடியை நவீனப்படுத்துவதற்கு ரூபாய் 10 கோடியை ஒதுக்கீடு செய்தோம். இவ்வகையில் கோயம்பேடு மலர் அங்காடிக்கு அருகே எழில்மிகு பூங்கா அமைத்தல், அங்காடியில் சூரியஒளி மின்சார கட்டமைப்பை உருவாக்குதல், 24 மணி நேர ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை அமைத்தல், அங்காடிக்கென பிரத்யேக இணைய வலைதளம் உருவாக்குதல் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணியாணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிரந்திர நடவடிக்கை

அதேபோல், நம்முடைய கோயம்பேடு அங்காடியில் பல கடைகள் உணவு தானிய பகுதிகளிலே கடைகள் சில காலியாக இருக்கின்றன. அவைகளை மறு ஏலத்திற்கு கொண்டு வரவும், அதேபோல் பழ அங்காடிகளில் காலியாக இருக்கின்ற கடைகளை மறு ஏலத்திற்கு கொண்டு வந்து வியாபரத்துக்கு அந்த கடைகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம். கோயம்பேடு மார்க்கெட்டில் சேருகின்ற தினசரி கழிவுகளை அகற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருக்கின்ற ஒப்பந்ததாரர் பணி செய்கின்ற ஆட்களின் எண்ணிக்கையை மேலும் கூட்டுவதென்று முடிவு செய்திருக்கின்றோம்.

கோயம்பேடு மார்க்கெட்டில் போக்குவரத்து நெரிசல் அவ்வபோது ஏற்படுகிறது. அதை ஒழுங்கு படுத்திக்கொண்டுதான் வருகின்றோம். நிரந்திர நடவடிக்கை எடுப்பதற்கு அங்காடி நிர்வாக குழுவின் முதன்மை நிர்வாக அலுவலரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருங்காலங்களில் போக்குவரத்திற்கும் பாதகம் இல்லாமல் அந்த கடைகளை வைத்திருப்பவர்களுக்கும் வாழ்வாதாரமும் எந்தவித பாதிப்பும் இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

ஏ.எம்.வி.பிரபாகர ராஜா எம்.எல்.ஏ

இந்த ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, சென்னைப் பெருநகர வளர்ச்சி‌க் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, அங்காடி நிர்வாக குழுவின் முதன்மை நிர்வாக அலுவலர் எம்.இந்துமதி, கண்காணிப்பு பொறியாளர் என்.சீனிவாச ராவ் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post ’’கோயம்பேடு மார்க்கெட்டில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும்..!’’ அமைச்சர் பி.கே.சேகர்பாபு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/feed/ 0
’’டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி செய்வது எப்படி..?’’ தமிழ்நாடு வேளாண்மைத்துறை அதிரடி ஆலோசனை https://madrasmurasu.com/%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259f%25e0%25af%2586%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25be-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/#respond Wed, 01 Nov 2023 07:41:49 +0000 https://madrasmurasu.com/?p=7291 ‘‘நவம்பர் 15-ம் தேதிக்கு முன்பு மழை பொழிவு பெறப்படின் ஆடுதுறை 45, 53, 56, 57, கோ 51, அம்பை 16 போன்ற இரகங்களை நேரடி விதைப்பு முறையில் பயிரிடலாம். பருவமழை பொய்த்தால் பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களை, மார்கழிப் பின் பட்டத்தில் சாகுபடி செய்யலாம்” என்று டெல்டா பகுதி விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. தலைமை செயலகத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் டெல்டா பகுதியில் […]

The post ’’டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி செய்வது எப்படி..?’’ தமிழ்நாடு வேளாண்மைத்துறை அதிரடி ஆலோசனை first appeared on Madras Murasu.

]]>
‘நவம்பர் 15-ம் தேதிக்கு முன்பு மழை பொழிவு பெறப்படின் ஆடுதுறை 45, 53, 56, 57, கோ 51, அம்பை 16 போன்ற இரகங்களை நேரடி விதைப்பு முறையில் பயிரிடலாம். பருவமழை பொய்த்தால் பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களை, மார்கழிப் பின் பட்டத்தில் சாகுபடி செய்யலாம்” என்று டெல்டா பகுதி விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

தலைமை செயலகத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 31.10.2023 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி. அபூர்வா, வேளாண்மைத் துறை ஆணையர் முனைவர் இல. சுப்பிரமணியன், வேளாண்மை கூடுதல் இயக்குநர் ஸ்ரேயா பி. சிங்., தலைமைப் பொறியாளர் (வே. பொ.) ஆர்.முருகேசன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கீழ்க்கண்டவாறு டெல்டா விவசாயிகளுக்கு சம்பா சாகுபடிக்கான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. 

நவம்பர் 15-ம் தேதிக்கு முன்பு மழை பொழிவு பெறப்படின், குறுகிய கால நெற்பயிர் இரகங்களான ஆடுதுறை 45, 53, 56, 57, கோ 51. அம்பை 16 போன்ற இரகங்களை நேரடி விதைப்பு முறையில் பயிரிடலாம். பருவமழை பொய்த்தால், குறுகியகாலப் பயிர்களான பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களை, மார்கழிப் பின் பட்டத்தில் சாகுபடி செய்யலாம்.

தற்போது, நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்களில் வறட்சி ஏற்படும் பட்சத்தில் வறட்சியைத் தாங்கும் தன்மையை ஏற்படுத்தும். பிங்க் பிக்மெண்ட்டட் ஃபேக்கல்டேடிவ் மெத்தைலோ ட்ரோஃப் என்ற உயிரினக் காரணியை ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி என்ற வீதத்தில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நிலத்தடி நீரை (கிணறுகள், உறைக் கிணறுகள், ஆழ்துளை குழாய்க் கிணறுகள்) தேவைக்கேற்றவாறு, சிக்கனமாக விவசாயிகள் பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் 15.11.2023 க்குள் பயிர் காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post ’’டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி செய்வது எப்படி..?’’ தமிழ்நாடு வேளாண்மைத்துறை அதிரடி ஆலோசனை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/feed/ 0
”தேசிய நீர் விருதுகள் 2023-க்கு விண்ணப்பிக்க டிசம்பர் 15-ம் தேதி கடைசி நாள்..!” https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2023-%e0%ae%95%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-2023-%25e0%25ae%2595%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2023-%e0%ae%95%e0%af%8d/#respond Wed, 01 Nov 2023 05:09:52 +0000 https://madrasmurasu.com/?p=7279 தேசிய நீர் விருதுகள் 2023 க்கான பரிந்துரை மற்றும் விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை www.awards.gov.in என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் வளத் துறையில் மக்களின் பணிகளை அங்கீகரிப்பதற்காகவும் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான அம்சங்களில் பணியாற்ற மக்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்குடனும் தேசிய நீர் விருதுகள், மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றன. சிறந்த மாநில / யூனியன் பிரதேச அரசுகள், […]

The post ”தேசிய நீர் விருதுகள் 2023-க்கு விண்ணப்பிக்க டிசம்பர் 15-ம் தேதி கடைசி நாள்..!” first appeared on Madras Murasu.

]]>
தேசிய நீர் விருதுகள் 2023 க்கான பரிந்துரை மற்றும் விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை www.awards.gov.in என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் வளத் துறையில் மக்களின் பணிகளை அங்கீகரிப்பதற்காகவும் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான அம்சங்களில் பணியாற்ற மக்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்குடனும் தேசிய நீர் விருதுகள், மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றன.

சிறந்த மாநில / யூனியன் பிரதேச அரசுகள், சிறந்த மாவட்டம், சிறந்த கிராம ஊராட்சிகள், சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள். சிறந்த பள்ளி அல்லது கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் அல்லாத பிற சிறந்த நிறுவனங்கள், சிறந்த தொழில் நிறுவனங்கள், சிறந்த தொண்டு நிறுவனங்கள், சிறந்த நீர் பயனீட்டாளர் சங்கங்கள், சிறந்த தனிநபர்கள் என 10 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். சிறந்த மாவட்டங்கள் பிரிவில் மட்டும் 5 விருதுகள் வழங்கப்படும். மற்ற பிரிவுகளில் தலா 3 விருதுகள் வழங்கப்படும்.

விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் நீர்வள மேம்பாடு தொடர்பாக குறிப்பிட்ட சில பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அனைத்துப் பிரிவினரும் பரிந்துரைக்கப்பட்ட படிவங்களின்படி www.awards.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விருதுகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2023, டிசம்பர் 15 ஆகும்.

The post ”தேசிய நீர் விருதுகள் 2023-க்கு விண்ணப்பிக்க டிசம்பர் 15-ம் தேதி கடைசி நாள்..!” first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2023-%e0%ae%95%e0%af%8d/feed/ 0
’’பள்ளிக்கரணை சதுப்பு நிலம் காப்பாற்றப்படுமா..?’’ https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25a3%25e0%25af%2588-%25e0%25ae%259a%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf/#respond Thu, 19 Oct 2023 11:22:58 +0000 https://madrasmurasu.com/?p=7023 ’’பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இராம்சர் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை சீரழிவில் இருந்து காக்கும் பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது’’ என்று டாக்டர் அன்புமணி கூறியுள்ளார். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் இராம்சர் ஈர நிலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பகுதிகளில் ஒன்றான பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமிப்புகளால் மிக மோசமாக சீரழிக்கப்படுவதாகவும், அதைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்திய தலைமைக் கணக்காயர் அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது. […]

The post ’’பள்ளிக்கரணை சதுப்பு நிலம் காப்பாற்றப்படுமா..?’’ first appeared on Madras Murasu.

]]>
’’பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இராம்சர் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை சீரழிவில் இருந்து காக்கும் பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது’’ என்று டாக்டர் அன்புமணி கூறியுள்ளார்.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டின் இராம்சர் ஈர நிலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பகுதிகளில் ஒன்றான பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமிப்புகளால் மிக மோசமாக சீரழிக்கப்படுவதாகவும், அதைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்திய தலைமைக் கணக்காயர் அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது. பல பத்தாண்டுகளாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சீரழிக்கப்படுவது குறித்து தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டாலும், அதன் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

சட்டவிரோத கட்டிடங்கள்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் எவ்வாரெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், அதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்தும் இந்திய தலைமைக் கணக்காயர் அலுவலகம் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் 2005 ஆம் ஆண்டு செயற்கைக் கோள் வரைபடத்தையும், 2021 ஆம் ஆண்டு செயற்கைக்கோள் வரைபடத்தையும் ஒப்பிட்டு இடைப்பட்ட காலத்தில் சதுப்பு நிலம் எந்த அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது; நீர்த்தேக்கப் பகுதிகளில் எந்த அளவுக்கு சட்டவிரோத கட்டிடங்கள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன என்பது குறித்தும் தலைமைக் கணக்காயர் அலுவலகம் விரிவாக விளக்கியுள்ளது. கோவிலம்பாக்கம் ஏரியிலும் 2002-2021 காலத்தில் மிகப்பெரிய அளவில் ஆக்கிரமிப்புகளும், கட்டுமானப் பணிகளும் செய்யப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

பசுமைத் தாயகம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமிப்புகளால் சீரழிக்கப்படுவதும், மத்திய, மாநில அரசு அமைப்புகளே அதற்கு துணையாக இருந்திருப்பதும் புதிய செய்திகள் அல்ல. இதுதொடர்பாக ஏராளமாக செய்திகள் ஏற்கனவே வெளிவந்திருக்கின்றன. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை கண்டித்தும், அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் அமைப்பும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளன. பல போராட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், நானும் கலந்து கொண்டிருக்கிறோம்.

சதுப்பு நிலம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சிறப்புகளை ஆவணப்படுத்தி, அதற்கு இராம்சர் ஈரநிலம் என்ற தகுதியை தமிழக அரசு பெற்றுக் கொடுத்திருந்தாலும் கூட, அதன் சிறப்புகளை உணர்ந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழகத்தை கடந்த சில பத்தாண்டுகளாக ஆட்சி செய்த அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
பள்ளிக்கரணை பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலம் சென்னைக்கு இயற்கை கொடுத்த கொடையாகும். மழை நிறைந்த காலத்தில் அதிக நீரைத் தேக்கி வைத்துக்கொண்டு, கோடை காலத்தில் சீராக வெளிவிடும் திறன் இதற்கு உண்டு. அதுமட்டுமின்றி 350-க்கும் கூடுதலான உயிரினங்களுக்கும், 200-க்கும் கூடுதலான தாவரங்களுக்கும் வாழ்க்கையளிக்கும் பல்லுயிர் வாழ்விடமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் திகழ்கிறது. ஆனால், இந்த அரிய நிலம் தொடர்ந்து சீரழிவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

குப்பைகள்

1956 ஆம் ஆண்டில் அடையாற்றின் உட்புறத்தில் தொடங்கி பக்கிங்காம் கால்வாய் வரையிலும், கிண்டி முதல் சிறுசேரி வரையிலும் 15,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆக்கிரமிப்புகள் காரணமாக 1,725 ஏக்கராக சுருங்கி விட்டது. அதுமட்டுமின்றி, பொக்கிஷமாக காக்கப் பட வேண்டிய இந்த நிலத்தின் 191 ஏக்கர் குப்பைமேடாக அறிவிக்கப்பட்டு, தினமும் 2000 டன்னுக்கும் கூடுதலான குப்பைகள் கொட்டப்படுகிறது. அதனால், சதுப்பு நிலம் அதன் தன்மையை இழக்கிறது.

கால்வாய் அமைக்கும் பணிகள்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இராம்சர் ஈர நிலமாக அறிவிக்கப்பட்ட பிறகு, நடப்பாண்டின் தொடக்கத்தில், 10 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது மட்டுமின்றி, அந்த நிலத்தில் 40 அடி சாலையும் அமைக்கப்பட்டது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகள் காரணமாக அதன் சுற்றுப்பகுதிகளில் மழைநீர் தேங்கத் தொடங்கியதையடுத்து, அதை வெளியேற்றுவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மிகப்பெரிய கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சதுப்புநிலத்தில் செயற்கையாக வடிகால்வாய் அமைத்தால் அது சதுப்பு நிலத்தின் நீர் தேக்கும் தன்மையை கெடுத்து விடும் என்பதால் அத்திட்டத்துக்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

தமிழகத்தில் சீரழிகிறது

இப்படியாக, கடந்த காலங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரழிப்பதற்கான நடவடிக்கைகள் மட்டும் தான் மேற்கொள்ளப்பட்டனவே தவிர, இயற்கையின் கொடையான அந்த நிலத்தை பாதுகாக்க தமிழக அரசால் சிறு துரும்பு கூட கிள்ளிப் போடப்படவில்லை. இயற்கை மீதும், சூழலியல் மீதும் அக்கறை கொண்ட நாடுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அமைந்திருந்தால், அதை அந்த நாட்டு அரசும், மக்களும் கொண்டாடிக் கொண்டு இருப்பார்கள்; தமிழகத்தில் தான் அந்த நிலம் சீரழிகிறது.

மீட்டெடுக்க சிறப்புத் திட்டம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இராம்சர் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை சீரழிவில் இருந்து காக்கும் பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. அதனால், இழந்த நிலங்களை மீட்டெடுத்தல், அதன் பல்லுயிர் வாழும் சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அதன் பழைய நிலைக்கு மீட்டெடுக்க சிறப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.

The post ’’பள்ளிக்கரணை சதுப்பு நிலம் காப்பாற்றப்படுமா..?’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf/feed/ 0
’’பனைமரங்களும் பணம் காய்க்கும் மரங்கள் தான்..!’’ டாக்டர் ராமதாஸ் https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a3%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/#respond Sat, 14 Oct 2023 11:16:31 +0000 https://madrasmurasu.com/?p=6852 ’’பணம் காய்க்கும் 14 வகை மரங்களை நீங்களும் பார்க்கலாம்; நடலாம்!. பனைமரங்களும் பணம் காய்க்கும் மரங்கள் தான்’’ என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: திண்டிவனத்தையடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள கல்விக் கோயிலில் வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் 14 வகையான 4200 மரக்கன்றுகள் எனது மேற்பார்வையில் நடப்பட்டதை இந்தப் பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். அந்த 14 வகை மரங்களில் நாவல் தவிர்த்து மீதமுள்ள 13 வகையான மரங்கள் அடுத்த […]

The post ’’பனைமரங்களும் பணம் காய்க்கும் மரங்கள் தான்..!’’ டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.

]]>
’’பணம் காய்க்கும் 14 வகை மரங்களை நீங்களும் பார்க்கலாம்; நடலாம்!. பனைமரங்களும் பணம் காய்க்கும் மரங்கள் தான்’’ என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

திண்டிவனத்தையடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள கல்விக் கோயிலில் வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் 14 வகையான 4200 மரக்கன்றுகள் எனது மேற்பார்வையில் நடப்பட்டதை இந்தப் பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். அந்த 14 வகை மரங்களில் நாவல் தவிர்த்து மீதமுள்ள 13 வகையான மரங்கள் அடுத்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு பணம் காய்ப்பவை; அதாவது வளர்ப்பவர்களுக்கு பெரும் இலாபத்தைத் தரக்கூடியவை.

இவை மட்டுமல்ல… அதிசயமரங்கள் என்று நான் போற்றி வரும் பனைமரங்களும் பணம் காய்க்கும் மரங்கள் தான். ஒரு ஏக்கரில் 10 அடிக்கு ஒன்று வீதம் பனை மரக் கன்றுகளை நடலாம். ஒரு ஏக்கரில் 400 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க முடியும். அவற்றுக்கான பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு. பனை மரங்கள் 20 முதல் 22 ஆண்டுகளில் முழுமையாக வளர்ந்து பயன் தரத் தொடங்கும். பனை மரத்தில் இருந்து பனங்கற்கண்டு, பனை வெல்லம் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம், இன்றைய மதிப்பில் ஒரு பனை மரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.4,000 வருவாய் ஈட்ட முடியும். ஒரு ஏக்கரில் இருந்து ரூ.16 லட்சம் வருவாய் ஈட்ட இயலும். அதனால் தான் சொல்கிறேன்… பனைமரங்களும் பணம் காய்க்கும் மரங்கள் தான்.

கல்விக்கோயில் வளாகத்தில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான பனை மரங்கள் இருக்கும் நிலையில், மேலும் 1000 பனை மரங்களை வளர்க்கும் நோக்குடன் அதற்கான விதைகளை சில மாதங்களுக்கு முன் எனது மேற்பார்வையில் நட்டிருக்கிறோம். கல்விக்கோயிலில் நடப்பட்டுள்ள இந்த பணம் காய்க்கும் மரக்கன்றுகள் நன்றாக வளரத் தொடங்கியுள்ளன. அவற்றை பார்வையிட விரும்பும் மக்கள் கல்விக்கோயிலுக்கு சென்று பார்வையிடலாம்.

பார்வையிடுவதுடன் உங்களின் பணி நிறைவடைந்து விடக் கூடாது. நீங்களும் உங்கள் வீடுகளிலோ, நிலமிருந்தால் அவற்றிலோ இந்த மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாம். உங்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் கைகளால் அவற்றை நட்டு, அவை வளர்வதை பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையாது.

இந்த பணம் காய்க்கும் மரக்கன்றுகளுக்கு எங்கே போவது என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். உங்கள் ஊருக்கு அருகிலுள்ள வனத்துறை அலுவலகங்கள் மற்றும் பண்ணைகளை அணுகி, உங்களின் திட்டத்தைத் தெரிவித்தால் அவர்கள் நீங்கள் கேட்கும் மரக்கன்றுகளை தருவார்கள்.

எனவே, இனியும் என்ன தாமதம்…. பணம் காய்க்கும் மரக்கன்றுகளை பாருங்கள்…. உங்கள் வீடுகளிலும் நட்டு வளருங்கள்.

மரம் வளர்க்கும் அறமே மாபெரும் அறம்!

இவ்வாறு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

குறிப்பு: இலவச மரக்கன்றுகளுக்கு 1800-599-7634 இந்த எண்ணில் அழைக்கலாம். தமிழக அரசின் வனத்துறை. 

The post ’’பனைமரங்களும் பணம் காய்க்கும் மரங்கள் தான்..!’’ டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/feed/ 0
’’விவசாயிகளின் மனங்களில் வாழ்கிறார் எம்.எஸ்.சுவாமிநாதன..!’’ மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத் https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2 https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/#respond Wed, 11 Oct 2023 04:48:21 +0000 saminathan]]> https://madrasmurasu.com/?p=6758 இந்தியாவின் முன்னணி வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் 1925 ஆம் ஆண்டு பிறந்து 2023 ஆம் ஆண்டில் மறைந்தார். வேளாண் ஆய்வு, கொள்கை, திட்டமிடல் போன்றவற்றில் அவரின் பங்களிப்பு இருக்கிறது. விவசாயத்தின் வளர்ச்சியை, அதிகரிக்கும் விளைச்சலை கொண்டு மதிப்பிடாமல், விவசாயிகளின் வருமானத்தை கொண்டு மதிப்பிட வேண்டும் என்று சொன்னார். பெரும்பாலான இந்திய விவசாயிகளுக்கு தெரிந்திருக்கும் சில ஆங்கில வார்த்தைகளில் ‘சுவாமிநாதன் ரிப்போர்ட்’ அல்லது ‘சுவாமிநாதன் கமிஷன் ரிப்போர்ட்’ ஆகியவையும் நிச்சயமாக இருக்கும். அந்த அறிக்கை முன் வைக்கும் […]

The post ’’விவசாயிகளின் மனங்களில் வாழ்கிறார் எம்.எஸ்.சுவாமிநாதன..!’’ மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத் first appeared on Madras Murasu.

]]>
இந்தியாவின் முன்னணி வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் 1925 ஆம் ஆண்டு பிறந்து 2023 ஆம் ஆண்டில் மறைந்தார். வேளாண் ஆய்வு, கொள்கை, திட்டமிடல் போன்றவற்றில் அவரின் பங்களிப்பு இருக்கிறது. விவசாயத்தின் வளர்ச்சியை, அதிகரிக்கும் விளைச்சலை கொண்டு மதிப்பிடாமல், விவசாயிகளின் வருமானத்தை கொண்டு மதிப்பிட வேண்டும் என்று சொன்னார். பெரும்பாலான இந்திய விவசாயிகளுக்கு தெரிந்திருக்கும் சில ஆங்கில வார்த்தைகளில் ‘சுவாமிநாதன் ரிப்போர்ட்’ அல்லது ‘சுவாமிநாதன் கமிஷன் ரிப்போர்ட்’ ஆகியவையும் நிச்சயமாக இருக்கும். அந்த அறிக்கை முன் வைக்கும் முக்கியமான பரிந்துரையும் அவர்களுக்கு தெரியும்: குறைந்தபட்ச ஆதார விலை (MSP) = ஒருங்கிணைந்த உற்பத்திச் செலவு + 50 சதவிகிதம் (C2 + 50 சதவிகிதம் என்றும் குறிப்பிடப்படும்).

அரசாங்கத்தாலோ அதிகாரவர்க்கத்தாலோ அறிவியல் நிறுவனங்களாலோ மட்டும் நினைவு கூரப்படுபவர் அல்ல எம்.எஸ்.சுவாமிநாதன். விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் (NCF) அறிக்கையை அமல்படுத்தக் கோரும் கோடிக்கணக்கான விவசாயிகளின் மனங்களில் நிறைந்தவர் அவர். பெரிய பங்களிப்பும் தாக்கமும் ஏற்படுத்தக் கூடிய தேசிய விவசாயிகள் ஆணையம் (NCF) அறிக்கைகளை ‘சுவாமிநாதன் அறிக்கை’ என்றுதான் இந்திய விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில் அந்த ஆணையத்தின் தலைவராக அவர் இருந்தார். ஆனால் அந்த அறிக்கைகளை இருட்டடிப்புச் செய்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, (UPA) மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆகிய இரு அரசாங்கங்களும் ஏமாற்றின.

முதல் அறிக்கை டிசம்பர் 2004-ல் சமர்ப்பிக்கப்பட்டது. கடைசி அறிக்கை அக்டோபர் 2006-ல் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அவற்றின் பொருட்டு நாம் கேட்கும் விவசாய நெருக்கடியை விவாதிக்கும் நாடாளுமன்ற சிறப்பு அமர்வு என்பது நடக்கவே இல்லை. அந்தப் பிரச்சனை சார்ந்து ஒருமணி நேர விவாதம் கூட நாடாளுமன்றத்தில் நடக்கவில்லை. முதல் அறிக்கை வந்து 19 வருடங்கள் ஆகிவிட்டன. 2014 ஆம் ஆண்டில் சுவாமிநாதன் அறிக்கையையும் அதன் குறிப்பான அம்சமான குறைந்தபட்ச ஆதார விலை பரிந்துரையையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது மோடி அரசாங்கம். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அவர்கள், அத்தகைய பரிந்துரையை அமல்படுத்தினால் சந்தை விலைகள் பாதிப்படையும் என வேகவேகமாக பிரமாணப் பத்திரத்தை அளித்தனர்.

ஒருவேளை அந்த அறிக்கைகள், விவசாயிகளு க்கு அதிகச் சார்புடன் இருப்பதாக ஐமுகூவும் தேஜ கூ-வும் கருதியிருக்கலாம். ஏனெனில் இரு அரசாங்கங்களும் இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்க முயன்று கொண்டிருந்தன. சுதந்திரத்துக்கு பிறகு விவசாயத்தை ஆக்கப்பூர்வமாக அணுகிய ஒரே விஷயம் அறிக்கைதான். அதை அளித்த சுவாமிநாதனை பொறுத்தவரை, விவசாய வளர்ச்சியை விளைச்சல் அடிப்படையில் அல்லாமல் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதை கொண்டே அளவிட வேண்டும் என்றார். தனிப்பட்ட முறையில் 2005 ஆம் ஆண்டில், தேசிய விவசாயிகள் ஆணையத் தலைவராக இருந்தபோது அவரை விதர்பாவுக்கு வரும்படி அழைத்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. அப்பகுதியில் நாளொன்றில் 6-8 விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை இருந்தது. நிலவரம் கடுமையாக இருந்தது. அவற்றை பற்றி உங்களின் ஊடகங்களில் நீங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை.

2006 ஆம் ஆண்டில், விவசாயம் நொடித்துப் போன ஆறு மாவட்டங்களில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தற்கொலைகள் நேர்ந்து கொண்டிருந்தபோது ஆறு பேரளவுக்குதான் விதர்பாவை தாண்டி அச்செய்திகளை எழுதிக் கொண்டிருந்தனர். அதே சமயத்தில் மும்பையில் நடந்த லாக்மே ஃபேஷன் நிகழ்ச்சியை 512 முன்னணி பத்திரிகையாளர்கள் 100 தினசரி டிக்கெட்டுகளை கொண்டு செய்திகளாக்கிக் கொண்டிருந்தனர். ஃபேஷன் நிகழ்ச்சியின் கருப்பொருள் பருத்தி என்பது தான் முரண்நகை. மாடல்கள் ஒய்யாரமாக பருத்தி ஆடைகளில் நடந்து வரும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில், அதை விளைவிக்கும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஒரு மணி நேர விமானப் பயண தூரத்தில் அளவில்லா எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.

அதாவது, 2005 ஆம் ஆண்டில் விதர்பா நிலவரத்தை செய்தியாக்கிக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களாகிய நாங்கள் முன் வைத்த அழைப்பை, எங்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி வேகமாக ஏற்று, தேசிய விவசாயிகள் ஆணைய குழுவுடன் அங்கு வந்து சேர்ந்தார் பேராசிரியர் சுவாமிநாதன். விலாஸ்ராவ் தேஷ்முக் அரசாங்கம் எச்சரிக்கை அடைந்தது. அதிகாரிகளுடன் கலந்துரையாடல், விவசாயக் கல்லூரி விழாக்கள் போன்ற தங்களின் வழி காட்டுதலுடன் கூடிய பயணத் திட்டத்தில் அவரை உள்ளடக்கக் கடுமையாக முயன்றது. ஆனால் பணிவான ஆளுமையான அவர், மகாராஷ்டிரா அரசாங்கம் விரும்பும் இடங்களுக்கு செல்வதாக ஒப்புக் கொண்ட அதே நேரம், நானும் ஜெய்தீப் ஹர்திகர் போன்ற சகபத்திரிகையாளர்களும் விடுத்த அழைப்பின்படி களத்துக்கும் செல்லவிருப்பதாகக் கூறி விட்டார்.

வார்தாவில் நாங்கள் அவரை ஷ்யாம்ராவ் கடாலே வின் வீட்டுக்கு அழைத்துச் சென்றோம். அவரின் இரு மகன்கள் தற்கொலை செய்து கொண்டிருந்தார்கள். பசியால் வாடி, மகன்களின் இழப்பால் துயருற்று, உடல் நலம் குன்றி சற்று முன்தான் ஷ்யாம்ராவும் இறந்திருந்த விஷயம் தெரியவந்தது. அவரின் இறப்பை சொல்லி, பயணத் திட்டத்தை மாற்ற அரசாங்கம் முயற்சித்தது. ஆனால் சுவாமிநாதன் இறுதி மரியாதை செலுத்த வேண்டுமெனச் சொல்லி, அங்கு சென்று அஞ்சலி செலுத்தவும் செய்தார். அடுத்தடுத்துச் சென்ற வீடுகளில், தற்கொலை செய்தவர்களின் குடும்பத்தினர் சொல்வதை கேட்டு அவர் கண்ணீர் விட்டார்.

விவசாய நெருக்கடியில் இருந்த விவசாயிகள் வார்தாவின் வைஃபதில் ஒருங்கி ணைத்த கூட்டத்துக்கும் அவர் சென்றார். அக்கூட்டத்தை சந்தேகமே இன்றி நம் விஜய் ஜவாந்தியாதான் ஒருங்கிணைத்திருந்தார். விவசாயப் பிரச்சனைகள் சார்ந்து இயங்கும் முக்கியமான அறிஞர் அவர். ஒரு கட்டத்தில், கூட்டத்திலிருந்து ஒரு மூத்த விவசாயி கோ பத்துடன் எழுந்து, ஏன் அரசாங்கம் அவர்களை வெறுக் கிறது என கேள்வி கேட்டார். நாங்கள் சொல்வதை கேட்க வேண்டுமென்பதற்காக தீவிரவாதிகளாக வேண்டுமா என்றார். மனம் நொடிந்திருந்த பேராசிரியர் அவருடனும் அவரின் நண்பர்களுடனும் பொறுமையாகப் பேசினார். அப்போது சுவாமிநாதன் 80 வயதுகளில் இருந்தார். அவரிடம் இருந்த உறுதியும் நிதானமும் அமைதியும் என்னை ஆச்சரியப்படுத்தின. அவரின் பணி மற்றும் கருத்துகளை விமர்சித்தவர்களுடன் எவ்வளவு உண் மையாக அவர் பேசினார் என்பதையும் நாங்கள் கண்டோம்.

எத்தனை பொறுமையாக கவனித்தார், சமயங்களில் சில விமர்சனங்களுடன் கூட உடன்பட்டார் என்பதையும் நாங்கள் கண்டோம். அவரைத் தவிர, எனக்குத் தெரிந்த வேறு எவரும் தன்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்த விமர்சகர்களை அழைத்து தன்னுடைய பயிற்சி வகுப்புகளிலோ நிகழ்ச்சிகளிலோ நேரடியாக அந்த விமர்சனங்களை கூறச் சொன்னதில்லை. தன்னுடைய பணியில் எடுத்த முக்கியமான முடிவு கள், தற்போது அடைந்திருக்கும் தோல்விகளையும் ஏற் படுத்தியிருக்கும் பாதிப்புகளையும் ஒப்புக்கொள்ளுதல் என்பது மிக முக்கியமான குணம். அது அவரிடம் இருந்தது.

பசுமைப் புரட்சிக்கு பிறகு, ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லிகளும் ஏற்படுத்திய பாதிப்பு, கற்பனை செய்திராதளவு கட்டுப்பாட்டை மீறிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி கொண்டதாகக் கூறினார். கடந்த சில பத்தாண்டுகளில் அவர் சுற்றுச்சூழல் மீதும் நீராதார பாதுகாப்பு மீதும் அதிக அக்கறை செலுத்தினார். கடந்த சில வருடங்களில், வரம்பு மீறி பயன்படுத்தப்படுகிற பிடி மற்றும் மரபணு மாற்றப் பயிர்கள் குறித்தும் அவர் அதிகம் விமர்சித்திருக்கிறார். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதனின் மறைவால், முன்னணி வேளாண் விஞ்ஞானியை மட்டுமின்றி, ஒரு சிறந்த மனதையும் நல்ல மனிதரையும் இந்தியா இழந்திருக்கிறது.

கட்டுரையாளர்: இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்,

நன்றி: தீக்கதிர்

The post ’’விவசாயிகளின் மனங்களில் வாழ்கிறார் எம்.எஸ்.சுவாமிநாதன..!’’ மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/feed/ 0