Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
சினிமா - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Fri, 02 Aug 2024 11:22:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ” கவிஞர் வைரமுத்துவுக்கு முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம் ..!’’ தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259e%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2588%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#respond Fri, 02 Aug 2024 11:22:52 +0000 https://madrasmurasu.com/?p=9529 கவிஞர் வைரமுத்துவுக்கு முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம் தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் விழாவில், விருது வழங்கப்படுகிறது. மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டமானது 1 லட்சம் ரூபாய், பொற்கிழி, பதக்கம் மற்றும் பட்டயம் கொண்டது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி […]

The post ” கவிஞர் வைரமுத்துவுக்கு முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம் ..!’’ தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது first appeared on Madras Murasu.

]]>
கவிஞர் வைரமுத்துவுக்கு முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம் தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் விழாவில், விருது வழங்கப்படுகிறது.

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது.

இந்தப் பட்டமானது 1 லட்சம் ரூபாய், பொற்கிழி, பதக்கம் மற்றும் பட்டயம் கொண்டது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் விழாவில், அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைத் தமிழ் இசைச் சங்கத் தலைவர் ஏ.சி.முத்தையா, தேவகி முத்தையா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். கர்நாடக இசைப் பாடகியும் சமயச் சொற்பொழிவாளருமான விசாகா ஹரி பொற்கிழி பெறுகிறார்.

கவிஞர் வைரமுத்து வாழ்க்கைக் குறிப்பு:

பழைய மதுரை மாவட்டமாய் விளங்கிய இன்றைய தேனி மாவட்டத்தில் வைகை அணையை ஒட்டியுள்ள மெட்டூரில் 1953ஆம் ஆண்டு கவிஞர் வைரமுத்து பிறந்தார். தந்தை ராமசாமித் தேவர்; தாயார் அங்கம்மாள்.

உயர்நிலைப் பள்ளிப்படிப்பை வடுகபட்டியில் முடித்த வைரமுத்து சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ படித்துத் தங்கப்பதக்கம் பெற்றார். இவர் எழுதிய ‘வைகறை மேகங்கள்’ என்ற கவிதை நூல் இவர் கல்லூரியில் படிக்கும்போதே ஒரு மகளிர் கல்லூரிக்குப் பாடமாக விளங்கியது. கல்லூரிப் படிப்பை முடித்த கவிஞர் வைரமுத்து தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தில் மொழிபெயர்ப்பாளராகச் சிறிதுகாலம் பணியாற்றினார்.

1980ஆம் ஆண்டு பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் ‘பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை 8000 பாடல்கள் எழுதியுள்ள கவிஞர் வைரமுத்து, இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்காக 7முறை தேசிய விருது பெற்றிருக்கிறார்.

திரைப்பாட்டு – இலக்கியம் என்று இரண்டு துறைகளிலும் சிகரம்தொட்ட வைரமுத்து தனது கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். அது 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

அந்நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் இவரைக் ‘காப்பியக் கவிஞர்’ என்று கொண்டாடினார். அந்நாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இவரைக் ‘கவிசாம்ராட்’ என்று பாராட்டியிருக்கிறார். தமிழ்நாட்டின் அந்நாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி இவருக்குக் ‘கவிப்பேரரசு’ என்று பட்டம் தந்திருக்கிறார்.

உலகின் 5 கண்டங்களிலும் தமிழ் இலக்கியப் பயணம் செய்தவர். அண்மையில் இவர் எழுதிய ‘மகாகவிதை’ என்னும் பெருங்கவிதை நூலுக்கு மலேசியன் இந்தியக் காங்கிரஸ் மற்றும் தமிழ்ப்பேராயம் இணைந்து ஒரு லட்சம் ரிங்கிட் ( இந்திய மதிப்பில் 17 லட்சம்) பரிசு வழங்கின.

இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து மூன்று பல்கலைக் கழகங்களின் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றவராவார். இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்து 40-க்கும் மேற்பட்டவர்கள் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இப்போது தமிழ் இசைச் சங்கம் முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டத்தை வழங்கியுள்ளது.

The post ” கவிஞர் வைரமுத்துவுக்கு முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம் ..!’’ தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/ 0
’’ யோகி பாபு நடிக்கும் ‘போட்’ திரைப்படத்தின் கதை என்ன ?’’ இயக்குநர் சிம்புதேவன் விவரிக்கிறார் https://madrasmurasu.com/%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25af%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25a8%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%258b https://madrasmurasu.com/%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b/#respond Tue, 30 Jul 2024 06:18:53 +0000 https://madrasmurasu.com/?p=9466 தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான ’யோகி பாபு’ நாயகனாக நடிக்கும் ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  ‘போட்’ திரைப்படத்தின் கதை என்ன ?’’ என்பதையும் சூட்டிங்கில் நடந்த ’ கடல்’ அனுபவங்களையும் இயக்குநர் சிம்புதேவன் விவரித்தார்.  சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் […]

The post ’’ யோகி பாபு நடிக்கும் ‘போட்’ திரைப்படத்தின் கதை என்ன ?’’ இயக்குநர் சிம்புதேவன் விவரிக்கிறார் first appeared on Madras Murasu.

]]>
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான ’யோகி பாபு’ நாயகனாக நடிக்கும் ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  ‘போட்’ திரைப்படத்தின் கதை என்ன ?’’ என்பதையும் சூட்டிங்கில் நடந்த ’ கடல்’ அனுபவங்களையும் இயக்குநர் சிம்புதேவன் விவரித்தார். 

சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நில கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் டீசர், இரண்டு பாடல்கள், ப்ரோமோ பாடல், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி படத்தைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நிர்வாக தயாரிப்பாளர் ஜிதேந்திரன், இயக்குநர் சிம்பு தேவன், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா, நடிகர்கள் யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மாஸ்டர் அக்ஷத் தாஸ் , நடிகைகள் மதுமிதா, கௌரி கிஷன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இயக்குநர் சிம்பு தேவன் பேசுகையில், ”கதை எழுதுவது எளிது. அதனை செயல்படுத்தும் போதும் நடைமுறைப்படுத்தும் போதும் தான் அதன் கடினம் தெரியும். எழுதிய கதையை காட்சிப்படுத்துவதற்காக குழுவாக நிறைய மெனக்கடல் இருந்தது. இது கடினம் என்று தெரியும். இருந்தாலும் விரிவாக இதைப்பற்றி சிந்திக்கவில்லை.‌ இந்தப் படத்தின் கலை இயக்குநராக பணியாற்றிய சந்தானம் இன்று நம்மிடம் இல்லை. மறைந்துவிட்டார். இருந்தாலும் அவர்தான் இந்த கதைக்கான காட்சிப்படுத்துதலின் அடித்தளத்தை உருவாக்கினார்.‌

படத்தொகுப்பு பணிகளை தினேஷ் பொன்ராஜ் கவனித்துக் கொண்டார்.‌ இப்படி ஒரு திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் குழு எனக்கு பக்க பலமாக இருந்து செயல்பட்டனர். கதைப்படி போட் மூன்று நாள் கடலுக்குள் இருக்கும். இதனால் நடிகர்களுக்கு உடை பற்றிய கவலை இல்லை. அனைவருக்கும் ஒரே உடை தான். ஆனாலும் படப்பிடிப்பின் போது நடிகர்கள் அணிந்திருந்த ஆடை பாழானது. இந்த விஷயத்தில் நட்சத்திரங்கள் கஷ்டப்பட்டனர்.‌

இந்தப் படத்தின் திரைக்கதைக்கு 1943 ஆம் ஆண்டு காலகட்டத்திய பின்னணியை அமைத்திருந்தோம்.‌ ஏனெனில் பொதுவாகவே வரலாற்றில் நம் விஷயங்கள் மறைக்கப்படுகிறது என்ற ஆதங்கம் என்னுள் இருக்கிறது. சுதந்திர போராட்டத்தை பொறுத்தவரை மும்பையையும், டெல்லியையும் முதன்மைப்படுத்தும் அளவிற்கு சென்னையையும், கொல்கத்தாவையும் கண்டு கொள்வதில்லை.‌ ஆனாலும்
பரவாயில்லை, இது தொடர்பாக நம் வரலாறு குறித்து ஆய்வு செய்ய தொடங்கினேன். குறிப்பாக இரண்டாம் உலக போர்.‌

1943 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் குறித்த விவரங்களையும், ஆவணங்களையும் பார்வையிட தொடங்கினேன்.‌ இதில் திரைப்படங்களையும் இணைத்துக் கொண்டேன். டொரண்டீனோவின் ஆங்கில திரைப்படத்திலிருந்து பல திரைப்படங்கள் வரை இரண்டாம் உலகப்போர் குறித்த குறிப்புகளில் எதிலும் இந்தியர்கள் இடம்பெறவில்லை. ஆனால் சரித்திரத்தின்படி இரண்டாம் உலகப்போரில் 25 லட்சம் இந்தியர்கள் இறந்திருக்கிறார்கள். இதுதான் எனக்கு கிடைத்த முதல் தகவல். இதிலிருந்து உந்துதலை பெற்று இரண்டாம் உலக போர் பற்றிய ஒரு கதை கருவினை உருவாக்கி, அதனை படைப்பாக்க வேண்டும் என திட்டமிட்டேன்.‌

அந்த காலகட்டத்தில் சென்னை மீது ஜப்பான் குண்டு வீச தயாராக இருந்திருக்கிறது. இதற்கான எச்சரிக்கை வெளியாகி ஆறு மாத காலம் வரை மக்கள் கடும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக லண்டனில் உள்ள என்னுடைய நண்பர் ஸ்ரீ கணேஷ் மற்றும் பெங்களூரூவில் உள்ள நண்பர் ஜெயராஜ் ஆகியோருடன் விவாதிக்கத் தொடங்கி, தகவல்களை சேகரிக்கத் தொடங்கினோம்.

அந்தத் தருணத்தில் சென்னையிலிருந்து ஐந்து லட்சம் மக்கள் வெளியேறி இருக்கிறார்கள். சென்னையிலிருந்து எழுபது சத மக்கள் வெளியேறி விட்டார்கள். மீதமிருந்த மக்கள் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி பதுங்கு குழிகளில் பதுங்கியபடி வாழ பழகியிருந்தார்கள். இது தொடர்பாக மக்களுக்கு போலீசார் பயிற்சி அளித்து இருந்தனர். எந்த அரசு அலுவலகமும் செயல்படவில்லை. உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் இவை அனைத்தும் ஒரு பொது இடத்தில் வைத்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு மக்கள் கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார்கள்.

இந்த தகவல்களை எல்லாம் சேகரித்து, விவாதித்து அதன் பிறகு இது தொடர்பாக படைப்பை உருவாக்கலாம் என திட்டமிட்டோம். அந்த காலகட்டத்தில் துடுப்பு படகு தான் இருந்தது. 1980-களுக்கு முன்னர் வரை துடுப்பு படகைத் தான் மீனவர்கள் பயன்படுத்தினார்கள். துடுப்பு படகை உருவாக்குவதற்கு கலை இயக்குநர் சந்தானம் கேரளா, ராமேஸ்வரம் என பல இடங்களுக்கு அலைந்து திரிந்து படத்தில் இடம்பெற்ற துடுப்பு படகை வடிவமைத்தார். இந்தக் கதையை எழுதும் போது நன்றாக இருந்தது. ஒரு படகில் பத்து பேர் அமர்ந்திருக்கிறார்கள் என எழுதினேன். ஆனால் இதனை படமாக்கும் போது என்னைவிட நடிகர்கள் சிரமப்பட்டார்கள். நாங்கள் வடிவமைத்த ‘போட்’டில் நடிகர்கள் அமர்ந்து விடுவார்கள். ஆனால் அவர்களால் நகரவோ.. அசையவோ இயலாது. அந்த அளவிற்கு நெருக்கடியாக இருந்தது.

அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தை தேடி தமிழக கடற்கரையோரம் முழுவதும் பயணித்தோம். இறுதியாக திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள உவரியை தேர்ந்தெடுத்தோம். இங்குதான் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கினோம். அடர்ந்த வனப் பகுதியில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம், உயர்ந்த மலைப் பகுதியில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். இங்கெல்லாம் கடினம் இருந்தாலும், பிறகு பழகிவிடும். ஆனால் கடல் என்பது ஒவ்வொரு நிமிடமும் புதிராக இருந்தது. எதையுமே தீர்மானிக்க இயலாது. முதலில் எங்களுக்கு எதுவும் புரியவில்லை.

மாதேஷ் ஒரு காட்சியை படமாக்க தொடங்குவார். அதை காட்சிப்படுத்துவதற்குள் கடல் அலையின் காரணமாக நட்சத்திரங்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் நிறைவு செய்ய இயலாது. எங்களுக்கும், கடலுக்கும் இடையேயான ஒரு ரிதம் கிடைப்பதற்கு நான்கு நாட்கள் ஆனது. நடிகர்களுக்கு நீச்சல் தெரியாது.‌ தொழில்நுட்ப குழுவினர்களில் பலருக்கும் நீச்சல் தெரியாது. அதனால் அந்த மீனவ கிராமத்தில் உள்ள இளைஞர்களை எங்களுக்கு உதவியாக அமர்த்திக் கொண்டோம். அவர்கள் எங்களுக்கு உதவி செய்வதற்காக தொடர்ச்சியாக தண்ணீரில் இருந்ததால் அவர்களின் கை கால்கள் எல்லாம் ஊதி வெளுத்து விட்டன. ஏராளமான தருணங்களில் படப்பிடிப்பிற்கான உபகரணங்கள் வீணாகி இருக்கின்றன. இப்படி தொழில்நுட்ப ரீதியாக பல சவால்களை எதிர்கொண்டோம்.

ஒரு அலை வந்தால் எங்களுடைய எல்லா உழைப்பும் வீணாகிவிடும். ஒரு காட்சியை நிறைவு செய்வதற்குள் சூரிய ஒளியில் நிறைய மாறுபாடு ஏற்படும். நடிகர்களுக்கு இது மிகப்பெரும் சவாலாக இருந்தது. எனக்கு கடலுக்குள் இறங்கினாலே தலை சுற்றி விடும். ஆனால் நடிகர்கள் இவற்றையெல்லாம் கடந்து, படகில் அமர்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த படம் கடின உழைப்பால் உருவாகி இருக்கிறது. நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த குழுவினரும் வியர்வை சிந்தி உழைத்திருக்கிறார்கள்.‌

இப்படத்தின் படப்பிடிப்பு பெரிய அனுபவமாக இருந்தது. ஏனெனில் என்னைப் பொருத்தவரை கடல் என்பதை தனி உயிரினமாகத் தான் பார்க்கிறேன். சில நேரங்களில் கோபமாக இருக்கும். சில நேரங்களில் அமைதியாக இருக்கும். கடலின் வண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். காலையில் தொடங்கி மாலைக்குள் இருபது வண்ணங்களை காணலாம். நாங்கள் எதை எல்லாம் சந்தித்தோமோ எங்களது அனுபவம் என்னவாக இருந்ததோ.. அவற்றை எல்லாம் காட்சிப்படுத்தி இருக்கிறோம். அதனால் இந்த திரைப்படம் சுவாரசியமாக இருக்கும். அனைத்து வகையிலும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.

நடுக் கடலுக்கு சென்று படம் எடுத்தால் யார் வேண்டுமானாலும் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். நாங்கள் மட்டும்தான் கஷ்டப்பட்டு படமாக்கினோம் என்று சொல்ல வரவில்லை. கடல் என்று சென்றாலே கஷ்டம் தான்.‌

நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உருவாக்கியது ஒரு பாதி தான். மீதி பாதியை சென்னையில் ஒரு அரங்கத்தில் அமர்ந்து இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கினார். தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் அளித்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு, யோகி பாபு நடிக்க ஒப்புக்கொண்டு, அவருடன் இத்தனை நட்சத்திரங்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து பணியாற்றி நல்லதொரு படைப்பாக ‘போட்’டை உருவாக்கி இருக்கிறோம்.” என்றார்.

நிர்வாக தயாரிப்பாளர் ஜிதேந்திரன் பேசுகையில், ”போட் திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது.‌ இயக்குநர் சிம்பு தேவன் அற்புதமாக இயக்கி இருக்கிறார். ஜிப்ரானின் இசையில் படம் நேர்த்தியாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் , பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குநர் சிம்பு தேவன் உள்ளிட்ட அனைவருக்கும் தயாரிப்பாளர் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் இரண்டாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது திரையரங்கிற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் எம். எஸ். பாஸ்கர் பேசுகையில், ”சிம்பு தேவனின் இயக்கத்தில் பல படங்களில் நடித்திருக்கிறேன்.‌ இதில் ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ படத்தில் நடிக்கும் போது கஷ்டப்பட்டேன். இந்த படத்திலும் நடிக்கும் போது கஷ்டப்பட்டேன். அந்தப் படத்தில் குதிரை என்றால் இந்த படத்தில் போட்.‌

தம்பி சிம்பு தேவன் சொன்னது போல் கடலை கணிக்க முடியவில்லை. திடீரென்று தண்ணீர் உள்வாங்குகிறது. திடீரென்று தண்ணீர் அதிகரிக்கிறது. திடீரென்று அலை அடிக்கிறது. போட்டில் அமர்ந்து நடிக்கும் போது முதுகு வலியும் ஏற்பட்டது.

சிம்பு தேவன் பேசும் போது, ‘எழுதுவது எளிதாக இருந்தது’ எனக் குறிப்பிட்டார். ஆனால் இப்படி எழுத வேண்டும் என்று மனதிற்குள் தோன்ற வேண்டும் அல்லவா, அது கடினம் தானே. கற்பனையில் உதித்ததை எழுதி, அதற்காக படப்பிடிப்பு தளத்தை தேடி பயணித்து தேர்வு செய்து அதில் படபிடிப்பு நடத்தி நாங்கள் கொடுக்கும் தொல்லைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு படமாக்கினார். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் இன்பச் சுற்றுலா சென்றது போல் தான் இருந்தது.‌ என்னுடன் நடித்த சக நடிகர்கள் அனைவரும் அதே போட்டில் தான் இருக்க வேண்டும். யாரும் எங்கும் செல்ல முடியாது.

இந்தப் படத்தில் அவர் எனக்கு கொடுத்த வேடத்தில் நடிக்கும் போது, நான் யாரை குருவாக மனதிற்குள் நினைத்திருக்கிறேனோ.. அவருடைய சீடனாகவே நடிக்க கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அது என்ன கதாபாத்திரம் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நான் ரசித்து ரசித்து செய்து கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று,” என்றார்.

நாயகி கௌரி கிஷன் பேசுகையில், ”நல்ல படங்களில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற வளரும் கலைஞர்களின் கனவாக இருக்கும். இந்தப் படத்தில் நடித்ததை பெருமிதமாக கருதுகிறேன். இந்தப் படத்தில் நடிக்கும் போது கஷ்டங்களும் சவால்களும் இருந்தன. இருந்தாலும் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டே படத்தின் பணிகளை நிறைவு செய்து இருக்கிறோம். இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் காத்திருந்தோம்.

படத்தின் மேக்கிங் வீடியோவை பார்க்கும் போது அந்த தருணங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் சிம்பு தேவனுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் லட்சுமி என்ற இளம் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த வேடத்தை ஏற்று நடிக்க முடியும் என்று என் மீது நம்பிக்கை வைத்தது பெரிய விஷயம். நான் தமிழ் பெண் அல்ல.‌ கேரளாவில் பிறந்து தமிழ்நாட்டில் வளர்ந்த பெண். அதனால் ஓரளவிற்கு தான் தமிழ் பேசுவேன்.‌ இந்தப் படத்தில் செந்தமிழை பார்ப்பனர்களின் பேச்சு மொழியுடன் பேசி இருக்கிறேன். இதனை பேசும் போது எனக்குள் தயக்கம் இருந்தது. இருந்தாலும் இயக்குநர் அதனை உடைத்து உன்னால் முடியும் என்று நம்பிக்கை அளித்தார்.‌

படப்பிடிப்பு நடைபெற்ற படகுக்குள் நான் பாதுகாப்பாக இருந்தேன். படத்தில் நடித்திருக்கும் சக கலைஞர்களுடன் இதற்கு முன் நான் பணியாற்றியதில்லை. இருந்தாலும் அவர்களுடைய எனர்ஜி, மேஜிக்கை நிகழ்த்தியது.‌ இந்தப் படத்தின் மூலம் மதுமிதா எனக்கு சொந்த சகோதரி போல் ஆகிவிட்டார்.

படப்பிடிப்புக்காக படகிற்குள் அமர்ந்து விட்டால் அவ்வளவுதான். அதன் பிறகு படப்பிடிப்பு நிறைவு என்று சொன்ன பிறகுதான் படகிலிருந்து இறங்கி கரைக்கு வருவோம். அதுவரை எங்களுடைய மேக்கப்பை சீராக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்காது. என்னைப் பொருத்தவரை ஒரு நடிகைக்கு அழகான தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். ஆனால் இந்த படத்தில் தோற்றத்தை விட ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் மூலம் நடிப்பை வெளிப்படுத்துவது தான் சிறந்தது என்ற எண்ணம் உதித்தது. இந்த ஒரு விஷயத்தை இந்த படத்தில் கற்றுக் கொண்டேன்.

மாலி & மான்வி பட தயாரிப்பு நிறுவனத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம். அவர்கள் தயாரிப்பில் நான் நடித்த முதல் படமான ‘அடியே’ திரைப்படமும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் வெளியானது. அந்த வகையில் இந்தப் பட நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்திலும் பாடகியாக தான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் ஜிப்ரானின் இசை அற்புதமாக இருக்கிறது. நானும் அவரின் தீவிர ரசிகை. இந்தப் படத்தில் கானா பாடல் கலந்த ஒரு நாட்டுப்புற பாட்டு இருக்கிறது. அந்த பாடல் காட்சியை நான் நன்றாக ரசித்து அனுபவித்து நடித்தேன்.

இந்தப் படத்தில் நடித்த ஜெஸ்ஸி ஒரு ஆஸ்திரேலிய நடிகர். எனக்கு கிடைத்த சிறந்த நண்பர்.‌ படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு சில விஷயங்களை மொழிபெயர்ப்பதில் உதவியிருக்கிறேன்.

இந்தப் படத்தில் என்னை தவிர்த்து என்னுடன் நடித்தவர்கள் அனைவரும் நகைச்சுவை கலைஞர்கள். அதனால் படப்பிடிப்பு தருணத்தின் போது அனைவரும் பேசி காட்சிகளை மேம்படுத்துவார்கள். அதை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன்.‌ எனக்கு அவர்களைப் போல் உடனடியாக காமெடியாக பேச முடியாது, பேசவும் தெரியாது. இது தொடர்பாக இயக்குநரிடம் பேசும் போது, அவர் ‘லட்சுமி என்கிற கதாபாத்திரம் ரசிகர்களிடம் நிறைய பேசும்’ என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை பொருத்தவரை எனக்கு ஒரு பயிற்சி பட்டறை போல் தான். தினமும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொண்டே இருந்தேன்.

இந்தத் திரைப்படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்கும் போது பிரமிப்பை ஏற்படுத்தும். அந்த அளவிற்கு விஷுவல் ட்ரீட் இருக்கிறது. கடல் பேரழகு. அதனைக் காண ஆகஸ்ட் இரண்டாம் தேதி திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள்,” என்றார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில், ”சிம்பு தேவனுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படைப்பு இது.‌ ’24ம் புலிகேசி’ படத்தில் இணைந்தோம். அதற்காக விவாதித்து பாடல்களையும் உருவாக்கினோம். அவருடன் பணிபுரிந்த அனுபவம் இனிமையாக இருந்தது. அதன் பிறகு அவருடன் ஒரு குறும்படத்தில் இணைந்தேன். அதன் பிறகு இந்தப் படத்தின் கதையை விவரித்தார். கேட்கும்போதே எனக்கு ஆவலாக இருந்தது. முழுவதும் கடல் தானா..! என கேட்டேன். அவர் ஆமாம் என்றார். அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் கடலுக்குள் சென்று தான் நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றார். ஆனால் அதன் பின்னணியில் இவ்வளவு கடினமான உழைப்பு இருக்கும் என்று எனக்குத் தெரியாது.

பாடலை உருவாக்கும்போது அவருக்குள் எப்போதும் இருக்கும் கவிதைத்தனம் எட்டிப் பார்க்கும். பார்த்திபன் சார் ஒரு விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் பார்ப்பது போல் சிம்பு தேவன் ஒரு விஷயத்தை வித்தியாசமான கோணங்களில் பார்ப்பார். முதலில் கர்நாடக இசை பாணியில் ஒரு பாடல் என்றார். உடனே நல்லதொரு ராகத்தின் பின்னணியில் நேர்த்தியாக உருவாக்கலாம் என மனதிற்குள் நினைத்தேன். ஆனால் பாடல் வரிகள் சென்னை மக்களின் பேச்சு மொழியில் இருக்க வேண்டும் என்றார். அப்படித்தான் ‘சோக்கா..’ எனும் பாடல் உருவானது.

அடுத்த பாடலை உருவாக்கலாம் என பேச தொடங்கிய போது.. சென்னையில் இசை மொழியான கானா பாடலை உருவாக்குவோம் என்றார். ஆனால் இந்தப் பாடல் கர்நாடக இசையில் பயன்படுத்தும் ‘சரிகம’ என்ற சொல்லாடலை பயன்படுத்த வேண்டும் என்றார். சிம்பு தேவனின் இந்த முரண்பாட்டை ரசித்தேன். இது சவாலாகவும் இருந்தது. ஏனெனில் இந்தப் பாடலை ‘பத்ம பூஷன்’ சுதா ரகுநாதன் பாடினார்கள். முதலில் அவரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறிய பிறகு அவர்கள் பாட சம்மதிப்பார்களா என்ற தயக்கம் எங்களுக்குள் இருந்தது. ஆனால் பாடலைக் கேட்டுவிட்டு, இந்த பாடல் ராகத்தில் அழகாக அமைந்திருக்கிறது, நான் பாடுகிறேன் என்றார். அப்போதுதான் எங்களுக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது.

இரண்டாவதாக கானா பாடல். கானா என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கு வருவது இசையமைப்பாளர் தேவா தான். அவரை தொடர்பு கொண்டு விவரத்தை சொன்ன போது, அவரும் பாடலை கேட்டு விட்டு, மகிழ்ச்சியுடன் பாட ஒப்புக்கொண்டார்.

இந்த ரெண்டு பாடலில் பணியாற்றிய அனுபவம் தனித்துவமாக இருந்தது. சுதா ரகுநாதனின் பாடலுக்கு நடிகை கௌரி கிஷன் பொருத்தமாக இருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் எங்களை வியக்க வைத்தார்.

பின்னணி இசைக்காக படத்தின் காட்சிகள் என்னிடம் வந்தன. இதில் எதிர்பாராத விதமாக மிகப்பெரும் சவால் ஒன்று இருந்தது. படத்தின் தொடக்கத்தில் பத்து நிமிடம் வரை காட்சிகள் நிலத்தில் நடைபெறும். அதன் பிறகு கடலுக்குள் சென்று விடும். பிறகு கடலிலிருந்து கடைசி பத்து நிமிடத்தில் மீண்டும் கரைக்கு திரும்புவார்கள். மீதமுள்ள பெரும்பாலான காட்சிகள் கடலில் தான் இருக்கும். அதை பார்க்கும் போது எங்கே முற்றுப்புள்ளி வைப்பது, எங்கே தொடர் புள்ளி வைப்பது என்று தெரியாமல், சிம்பு தேவனை தொடர்பு கொண்டேன். பொதுவாக மாற்றங்கள் இசையமைப்பாளருக்கு உதவி புரியும்.‌ ஏதேனும் ஒரு இடையூறு இருக்கும் அல்லது பின்னணியில் மாற்றம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் எங்கு தொடங்குவது எங்கு முடிப்பது என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் படத்தில் உணர்வு என்பது தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கும். அதிலும் அதில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் திறமையாக நடித்திருப்பார்கள். ஒருவருடைய நடிப்பிலிருந்து மற்றவர்கள் அதை புரிந்து கொண்டு பேசுவார்கள். அதை துல்லியமாக உணர்ந்து கொண்டு இதற்கு பின்னணி இசை அமைக்க வேண்டியதாக இருந்தது.

இந்த படத்தில் இயக்குநர் சிம்பு தேவனை ஒரு தயாரிப்பாளராகவும் பார்த்திருக்கிறேன். கடும் போராட்டத்திற்கு இடையே அனைவரையும் ஒருங்கிணைத்து தன்னுடைய கற்பனையை சாத்தியமாக்கி இருக்கிறார். அவரிடம் இருந்த பாசிட்டிவிட்டி பாராட்டத்தக்கது,” என்றார்.

நடிகர் யோகி பாபு பேசுகையில், “போட் திரைப்படம் இந்த அளவுக்கு சிறப்பாக உருவாகி உள்ளதற்கு இயக்குநர் சிம்பு தேவன் தான் காரணம், அவருக்கு எனது நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர், என்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இங்கு வருகை தந்திருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. கடின உழைப்போடு இப்படம் உருவாகியுள்ளது. நீங்கள் அனைவரும் உங்கள் மேலான ஆதரவை ‘போட்’ திரைப்படத்திற்கு வழங்க வேண்டும். மிக்க நன்றி,” என்று கூறினார்.

The post ’’ யோகி பாபு நடிக்கும் ‘போட்’ திரைப்படத்தின் கதை என்ன ?’’ இயக்குநர் சிம்புதேவன் விவரிக்கிறார் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b/feed/ 0
கவிஞர் வைரமுத்து மலேசியாவில், ‘பெருந்தமிழ்’ விருது பெற்றார் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259e%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2588%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25af%2587%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/#respond Sat, 09 Mar 2024 08:02:32 +0000 https://madrasmurasu.com/?p=8861 வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’ நூலுக்காக மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) வழங்கின.  கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகாகவிதை’ நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது. மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு வைரமுத்துவின் சாதனை படைப்பான ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ […]

The post கவிஞர் வைரமுத்து மலேசியாவில், ‘பெருந்தமிழ்’ விருது பெற்றார் first appeared on Madras Murasu.

]]>
வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’ நூலுக்காக மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) வழங்கின. 

கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகாகவிதை’ நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு வைரமுத்துவின் சாதனை படைப்பான ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ மற்றும் 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) மலேசியாவில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கின.

தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் கோலாலம்பூரில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது மற்றும் பரிசுத் தொகை கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது. பஞ்சபூதங்களை பற்றி விரிவாக பேசும் ‘மகாகவிதை’ நூலை படித்து மகிழ்ந்த மலேசிய பல்கலைக்கழக தமிழ் அறிஞர்கள் ஐந்து பேர் நூல் குறித்து சிறப்புரை வழங்கினார்கள்.

நீர் குறித்து இஸ்லாமிய கல்விக் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ இஃபாலும், காற்று குறித்து மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை பேராசிரியர் முனைவர் இராஜேந்திரனும், தீ குறித்து சுலுத்தான் இதுரீசு கல்வியல் பல்கலைக்கழகம் தலைவர், மலேசியத் தமிழ்ப் புலவர் சங்கத்தை சேர்ந்த முனைவர் மனோன்மண தேவி அண்ணாமலையும், பூமி பற்றி மேனாள் காவல்துறை ஆணையர் புலவனின் புவி காக்கும் வேட்கை மதிப்புமிகு டத்தோ ஶ்ரீ தெய்வீகன் ஆறுமுகமும், ஆகாயம் குறித்து மலேசியத் தமிழ்நெறிக் கழகம் தேசியத் தலைவர் தமிழ்ப்பெருந்தகை இரா திருமாவளவனும் விரிவாக பேசி கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்பை பாராட்டினர்.

இவ்விழாவில் தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்புரை ஆற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, மலேசிய தமிழ் இலக்கிய காப்பகம் மற்றும் தமிழ் பேராயத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியவர்களுக்கும் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்காக மலேசியா வந்தடைந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு ‘டத்தோ’ ஶ்ரீ எம் சரவணன் தலைமையில் விமான நிலையம் முதல் தங்கி இருக்கும் ஹோட்டல் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post கவிஞர் வைரமுத்து மலேசியாவில், ‘பெருந்தமிழ்’ விருது பெற்றார் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/feed/ 0
’’ஞானவேலை பொதுவெளியில் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும் சிவக்குமார்..!’’ கரு பழனியப்பன் https://madrasmurasu.com/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259e%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585 https://madrasmurasu.com/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85/#respond Tue, 28 Nov 2023 10:58:52 +0000 https://madrasmurasu.com/?p=7649 ’’ஞானவேலை பொதுவெளியில் இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும். திரு.சிவக்குமார் சொல்லுவார் என்று நம்புகிறேன்’’ என்று இயக்குநர் கரு பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து கரு பழனியப்பன் வெளியிட்ட அறிக்கை. ஊடகத்துறையினருக்கு வணக்கம். பருத்திவீரன் படம் பற்றியும் அமீர் பற்றியும் திரு ஞானவேல் பேசிய பிறகு அந்தப் படம் தொடர்புடைய சசிகுமார் தயாரிப்பாளர் கணேஷ்ரகு சமுத்திரக்கனி பொன்வண்ணன் சுதா கொங்குரா என ஒவ்வொருவராக அமீர் பக்கம் வந்து நிற்கிறார்கள்.. சில நாட்களில் மற்றவர்களும் அமீர் […]

The post ’’ஞானவேலை பொதுவெளியில் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும் சிவக்குமார்..!’’ கரு பழனியப்பன் first appeared on Madras Murasu.

]]>
’’ஞானவேலை பொதுவெளியில் இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும். திரு.சிவக்குமார் சொல்லுவார் என்று நம்புகிறேன்’’ என்று இயக்குநர் கரு பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுகுறித்து கரு பழனியப்பன் வெளியிட்ட அறிக்கை.

ஊடகத்துறையினருக்கு வணக்கம்.

பருத்திவீரன் படம் பற்றியும் அமீர் பற்றியும் திரு ஞானவேல் பேசிய பிறகு அந்தப் படம் தொடர்புடைய சசிகுமார் தயாரிப்பாளர் கணேஷ்ரகு சமுத்திரக்கனி பொன்வண்ணன் சுதா கொங்குரா என ஒவ்வொருவராக அமீர் பக்கம் வந்து நிற்கிறார்கள்..

சில நாட்களில் மற்றவர்களும் அமீர் பக்கம் நிற்பார்கள்…

நிற்க.

இந்த அறிக்கை பருத்தி வீரன் படம் பற்றி அல்ல.
ஞானவேலின் பொய்க் குற்றச்சாட்டு பற்றி.!

பொன்வண்ணன் மொழியில் சொல்வதானால் ஞானவேலின் வக்கிரமான உடல் மொழி பற்றி.! எகத்தாளமாய் எப்படி ஒருவரால் இத்தனை பொய் சொல்ல முடிகிறது? அமீரை திருடன் என்றும் பொய் கணக்கு எழுதுபவர் என்றும் சொல்லுகிறாரே,
நான் சொல்லுகிறேன் .

ஆறு ஆண்டு காலம் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் செயலாளராகவும், தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவராகவும், தயாரிப்பாளர் தொழிலாளர் இடையே சுமூகம் ஏற்பட உருவாக்கப்பட்ட ஊதியக்குழுவின் தலைமையிலும் பணியாற்றிய அமீரை பக்கத்தில் இருந்து பார்த்த நான் சொல்லுகிறேன்.

இத்தனை ஆண்டுகளில் ஒரு வேளை உணவு கூட இந்த சங்கங்களின் பணத்தில் அமீர் உண்டதில்லை. அன்று உடனிருந்த நானும் ஜனநாதனுமே சாட்சி.
இந்நாள் முன்னாள் சங்க நிர்வாகிகளைக் கேட்டாலும் இதையே சொல்வார்கள் .
பருத்திவீரன் தயாரிப்பில் நூறு முரண்பாடு இருக்கலாம் ஆனால் பொதுவெளியில் ஒரு இயக்குனரை திருடன் என்றும் ஒன்றும் தெரியாதவன் என்றும் என் காசில் தொழில் பழகியவன் என்றும் character assassination செய்வது அயோக்கியத்தனம். ஞானவேலின் எள்ளல் எகத்தாள திமிர் பேட்டியில்,
நானும் கார்த்தியும் பருத்தி வீரனுக்கு பிறகு நிறைய படம் எடுத்து விட்டோம் 25 படங்களை கடந்து விட்டோம் ஆனால் அமீர் ஓடாத குதிரை தோற்றுப் போனவர் என்கிறார்.

அமீர் உங்களிடம் பணத்தில் தோற்றுப் போய் இருக்கலாம் ஆனால் உங்களுடைய படம் என்று நீங்கள் சொல்லும் பருத்தி வீரனை காலமும் உடன் களத்தில் பணியாற்றியவர்களும் ரசிகர்களும் அமீரின் பருத்தி வீரன் அமீரின் பருத்திவீரன் என்று சொல்லச் சொல்ல அவர் ஜெயித்துக் கொண்டிருக்கிறார் என்று பொருள். பருத்திவீரன் படத்தின் உயரத்தைத் தொட ஒவ்வொரு படமாக எடுத்து எடுத்து ஞானவேலும் அவரைச் சார்ந்தவர்களும் இன்று வரை தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். காலம் அப்படித்தான் கணக்கில் வைத்துக் கொள்ளும்.
இப்படி பேச ஞானவேலுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? என்று கேட்டிருந்தார் சமுத்திரக்கனி.

இந்தக்கேள்வி எழும்போதே ஞானவேலின் பின்னால் திரு.சிவக்குமாரும் அவர் பிள்ளைகளும் இருப்பார்களோ என்று சந்தேகத்தின் நிழல் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நூறு குறள்கள் படித்த திரு.சிவக்குமார்
தன் மகனுக்கு உலகத் தரத்தில் மாபெரும் வெற்றி படத்தைக் கொடுத்து திரை உலகில் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த இயக்குனர் அமீருக்கு, திரு சிவக்குமாரும் அவரைச் சார்ந்தவர்களும் திருப்பிக் கொடுத்தது என்ன? 18 ஆண்டுகால மன உளைச்சலும் திருட்டு பட்டமுமா?? நூறு குறள்கள் படித்த திரு.சிவக்குமார்
“அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை ”
என்ற குறளையும் படித்து இருப்பார்.

வள்ளுவர் வாக்கு பொய்க்காது என்று அறிந்த அவர்,
ஞானவேலை பொதுவெளியில் இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும் .

திரு.சிவக்குமார் சொல்லுவார் என்று நம்புகிறேன் .!

அறத்தை நம்பி செயலாற்றும்
ஊடக நண்பர்களுக்கு
நன்றியும் அன்பும்
கரு பழனியப்பன்
28 நவ 2023

The post ’’ஞானவேலை பொதுவெளியில் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும் சிவக்குமார்..!’’ கரு பழனியப்பன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85/feed/ 0
’’போலந்து திரைப்பட விழா, முதல் இந்திய ஜூரி ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன்..!’’ திரைத்துறையினர் வாழ்த்து https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b2%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be/#respond Wed, 08 Nov 2023 07:51:08 +0000 https://madrasmurasu.com/?p=7435 ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் சர்வதேச எனர்கா கேமரிமேஜ் விழாவின் முதல் இந்திய ஜூரியாக ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். போலந்தில் நடைபெறும் இவ்விழாவின் 31-வது பதிப்பில் ரவி.கே.சந்திரன் ஜூரியாக பங்காற்றுவார். நாற்பது வருடங்களாக ஒளிப்பதிவில் ஈடுபட்டுள்ள ரவி.கே.சந்திரன், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘பிளாக்’, ‘மை நேம் இஸ் கான்’ உள்ளிட்ட பல மாபெரும் வெற்றி பெற்ற மற்றும் விருதுகளை குவித்த பன்மொழி திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர். “கேமரிமேஜ்“ என்பது சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாவாகும். ஒளிப்பதிவு கலையை இது கொண்டாடுகிறது. […]

The post ’’போலந்து திரைப்பட விழா, முதல் இந்திய ஜூரி ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன்..!’’ திரைத்துறையினர் வாழ்த்து first appeared on Madras Murasu.

]]>
ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் சர்வதேச எனர்கா கேமரிமேஜ் விழாவின் முதல் இந்திய ஜூரியாக ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். போலந்தில் நடைபெறும் இவ்விழாவின் 31-வது பதிப்பில் ரவி.கே.சந்திரன் ஜூரியாக பங்காற்றுவார்.

நாற்பது வருடங்களாக ஒளிப்பதிவில் ஈடுபட்டுள்ள ரவி.கே.சந்திரன், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘பிளாக்’, ‘மை நேம் இஸ் கான்’ உள்ளிட்ட பல மாபெரும் வெற்றி பெற்ற மற்றும் விருதுகளை குவித்த பன்மொழி திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர்.

“கேமரிமேஜ்“ என்பது சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாவாகும். ஒளிப்பதிவு கலையை இது கொண்டாடுகிறது. உலகெங்கிலும் உள்ள திரை கலைஞர்களால் ஆஸ்கருக்கு சமமாக கருதப்படும் இந்த விழா, விருது பெறும் திரைப்படங்களையும் கலைஞர்களையும் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதற்காக புகழ் பெற்று விளங்குகிறது. ஆஸ்கரை போல் இல்லாமல், குறிப்பிட்ட பிரிவுகளில் விருதுகளை வழங்கி திரைப்பட உருவாக்க கலை மீது தனக்குள்ள அர்ப்பணிப்பை இது பறைசாற்றுகிறது.

‘மை நேம் இஸ் கான்’ படத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக
2010ம் ஆண்டில் எனர்கா கேமரிமேஜால் கோல்டன் ஃபிராக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் ஆவார்.

இந்த வருடத்தின் எனர்கா கேமரிமேஜ் விழா நவம்பர் 11 முதல் 18 வரை போலந்தில் உள்ள டோரன் நகரில் நடைபெறுகிறது. டேரன் அரோனோஃப்ஸ்கி, ரோஜர் டீக்கின்ஸ் மற்றும் ரால்ப் ஃபியன்னெஸ் உள்ளிட்ட சர்வதேச புகழ் பெற்ற பல கலைஞர்கள் இவ்விழாவுக்கு இதற்கு முன்னர் அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ்.சி என்று அழைக்கப்படும் இந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தையும் எனர்கா கேமரிமேஜ் விழாவில் ரவி கே சந்திரன் பிரதிநிதித்துவப்படுத்துவார். கேமரிமேஜ் ஜூரியாக மூத்த கலைஞர் ரவி கே சந்திரன் நியமிக்கப்பட்டிருப்பது இந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கு பெருமை என்று கருதப்படுகிறது.

இந்தியத் திரைப்படத் துறை சர்வதேச அரங்கில் அதற்குரிய அங்கீகாரத்தை பெறுவதற்கான ஒரு படியாகவும் இந்த நியமனம் பார்க்கப்படுகிறது. அவருக்கு திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

The post ’’போலந்து திரைப்பட விழா, முதல் இந்திய ஜூரி ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன்..!’’ திரைத்துறையினர் வாழ்த்து first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be/feed/ 0
”எனக்குப் பிடித்த கமல்…!” வீரசோழன்.க.சோ. திருமாவளவன் https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2595%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5 https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5/#respond Tue, 07 Nov 2023 05:47:51 +0000 https://madrasmurasu.com/?p=7419 எப்போதும் எனக்கு கார்த்திக்கையே பிடிக்கும். அபூர்வ சகோதரர்கள் எங்களது பள்ளியின் மைதானத்தில் பிரமாண்ட வெள்ளித் திரையில் எப்போது பார்த்தேனோ அன்றிலிருந்து கமல் நமது நெஞ்சை ஊடுறுவ ஆரம்பித்தார். படம் அப்போதைய இருந்த இளம் பிராயத்து மனசு என்னவெல்லாமோ இருந்ததோ அப்படியே இருந்தார் கமல். அதனால் என்னவோ பிடித்துப் போனது. பொதுவாக காரத்திக் படங்கள் என்றால் வருசம் 16, பாண்டிய நாட்டுத் தங்கம், பெரியவீட்டுப் பண்ணக்காரன் இப்படியாய் ஆசைதீர பார்த்த கண்கள் கமலை ஏனோ கொண்டாடியது. படத்தில் ரூபிணியைக் […]

The post ”எனக்குப் பிடித்த கமல்…!” வீரசோழன்.க.சோ. திருமாவளவன் first appeared on Madras Murasu.

]]>
எப்போதும் எனக்கு கார்த்திக்கையே பிடிக்கும். அபூர்வ சகோதரர்கள் எங்களது பள்ளியின் மைதானத்தில் பிரமாண்ட வெள்ளித் திரையில் எப்போது பார்த்தேனோ அன்றிலிருந்து கமல் நமது நெஞ்சை ஊடுறுவ ஆரம்பித்தார்.

படம் அப்போதைய இருந்த இளம் பிராயத்து மனசு என்னவெல்லாமோ இருந்ததோ அப்படியே இருந்தார் கமல். அதனால் என்னவோ பிடித்துப் போனது. பொதுவாக காரத்திக் படங்கள் என்றால் வருசம் 16, பாண்டிய நாட்டுத் தங்கம், பெரியவீட்டுப் பண்ணக்காரன் இப்படியாய் ஆசைதீர பார்த்த கண்கள் கமலை ஏனோ கொண்டாடியது.

படத்தில் ரூபிணியைக் காதலிப்பார். ஆனால் அவர் வேறொரு ஆண் மகனை மணந்துவிடுவார். அந்த நேரத்தில் ஒலிக்கும் பாடல் டைமிங்கில் கமலின் முக பாவனைகள் சும்மா பிச்சு உதறுவார். அவர் அழுகையில் வரமால் இருந்து விடமா அழுகை நமக்கு…?

“ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்
கொட்டும் மழை காலம் உப்பு விற்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன்
தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு”

இந்தப் பாடல் வரிகளில் நம்மையே அழுக வைத்துவிடுவார். இப்படி பொன்னான நேரங்களில் எல்லாம் நம் மனசை காதலி மட்டுமல்ல கமலும் காயம் செய்துவிடுகிறார்.

படமெங்கும் மாற்றுத் திறனாளியாக (குள்ளமாக) வரும் கமல் இந்தப் படத்தையே தாங்கிப் பிடித்து இருப்பார். காதல், குரோதம், பழிக்குப்பழி, நகைச்சுவை, பஞ்ச் டயலாக் என ரவுண்டு கட்டி அடித்து இருப்பார்.

படம் முடிந்து வருகையிலும் அந்தக் கமலே நம் நெஞ்சங்களில் அனாசயம் செய்திருப்பார். அவர் ஆடும் நடனம் இன்னும் சிறப்பாக நம்மை ஆட்டிப்படைக்கும். ஒரு தசாப்த காலத்திலும் கிராமங்களின் நடுநிசியிலும் எங்குமே வியாபித்திருந்தார்.
எத்தனையோ படங்களில் விருதோ அட்டகாசமாக நடித்திருந்தாலும் அபூர்வசகோதரர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவில் முதன்முதலில் வெளி வந்த குள்ளமான தோற்றம் கொண்ட அற்புதமான படம்.

நிற்க…

இதில் எங்களது ஊரில் எங்கள் மாமா ஒருவர் ரேடியோ செட் வைத்திருந்தார். அவர் பெயர் முனியாண்டி. ஆனால் கமல்மேல் உள்ள ப்ரியத்தினால் கமலஹாசன் என்றே மாற்றிக் கொண்டார். ஊரில் திருவிழாக்களில் ரேடியோ பாடி முடித்ததும் சாந்தி இசையகம் உரிமையாளர் “கமலஹாசன்” என்றே ஒலிக்கும். நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் 42 வருடங்களாக….!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்♥

The post ”எனக்குப் பிடித்த கமல்…!” வீரசோழன்.க.சோ. திருமாவளவன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5/feed/ 0
”ஒரு இரவில் நடக்கும் கதை ‘மாயவலை’ திரைப்படம்..!’’ இயக்குநர் அமீர் https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%25ae https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae/#respond Mon, 06 Nov 2023 09:49:52 +0000 https://madrasmurasu.com/?p=7406 அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ‘மாயவலை’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் ஞாயிறு (நவம்பர் 5) அன்று நடைபெற்றது. சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் ‘தயா’ செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜேந்திரன் (வாபோ), ஏ.ஆர். ஜாஃபர் சாதிக் (ஜே எஸ் எம் பிக்சர்ஸ்) […]

The post ”ஒரு இரவில் நடக்கும் கதை ‘மாயவலை’ திரைப்படம்..!’’ இயக்குநர் அமீர் first appeared on Madras Murasu.

]]>
அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ‘மாயவலை’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் ஞாயிறு (நவம்பர் 5) அன்று நடைபெற்றது.

சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் ‘தயா’ செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜேந்திரன் (வாபோ), ஏ.ஆர். ஜாஃபர் சாதிக் (ஜே எஸ் எம் பிக்சர்ஸ்) மற்றும் சர்தார் ஆவர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில், எஸ்.பி. அஹ‌மதின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘மாயவலை’ திரைப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுத, வீரமணி கணேசன் கலை இயக்கத்தை கையாண்டுள்ளார். சண்டை பயிற்சிக்கு பிரதீப் தினேஷும், வடிவமைப்புக்கு கோபி பிரசன்னாவும் பொறுப்பேற்றுள்ளனர்.

இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

இணை தயாரிப்பாளர் ராஜேந்திரன்: 

என் முதல் மேடை இது, இந்த வாய்ப்பை தந்த அமீர் அண்ணனுக்கு நன்றி. அமீர் அண்ணாவும் நானும் தீவிரமான கமல் ரசிகர்கள். எப்போதும் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம், அமீர் அண்ணனிடமும் கமல் சாரிடமும் என்னைக் கொண்டு சேர்த்த சினேகனுக்கு நன்றி. இந்தப்படம் பற்றி எனக்குத் தெரியாது. அமீர் அண்ணனுடன் பயணிக்க வேண்டும், அவ்வளவுதான். அமீர் அண்ணனும் வெற்றிமாறன் அண்ணனும் இணைந்து ‘நார்கோஸ்’ மாதிரி ஒரு சீரிஸ் எடுக்க வேண்டும், அதில் நாங்களும் இருக்க வேண்டும். அது நடக்கும் என நம்புகிறேன், அனைவருக்கும் நன்றி.

நடிகர் தீனா:

நான் நிறையப்படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு சீன், இரண்டு சீன் தான் நடிப்பேன், வெற்றிமாறன் அண்ணன் தான் அதை மாற்றினார். அவருடன் ‘வட சென்னை’யில் நிறைய கற்றுக்கொண்டேன். நான் ஸ்டண்ட் மேன் கிடையாது, துணை நடிகர் தான், எனக்கு நடிப்பு கற்றுக்கொள்ள ஆசை. கூத்துப்பட்டறை போன்ற இடங்களில் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் வெற்றிமாறன் சார் படத்தில் நடித்ததே பெரிய அனுபவமாக இருந்தது. அதே போல் தான் அமீர் அண்ணன். இருவரும் எனக்கு நிறைய சொல்லித் தந்தார்கள். உண்மையாகவே அமீர் எனக்கு அண்ணன் தான். என்னைக் குடும்ப உறுப்பினர் போல‌ பார்த்துக்கொள்வார். இந்தப்படத்தில் பணியாற்றிய எல்லோரும் நண்பர்கள் தான். மிக நன்றாக படம் வந்துள்ளது, அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி.

நடிகர் வின்செண்ட் அசோகன்:

அமீர் அண்ணனை சந்தித்ததே பெரிய விஷ‌யம். அவருக்கு சினிமா மேல் இருக்கும் காதல் தான் எங்கள் இருவருக்கும் பொதுவானது. அவர் என்னை எப்போதும் மதிப்பவர். வெற்றிமாறன் சாரின் ‘வட சென்னை’ படத்தில் அமீர் அண்ணனுடன் நடித்தது அனைவருக்கும் இன்றும் பிடித்த காட்சியாக உள்ளது. அமீர் அன்ணணுடன் இப்போது வரை நடித்தது எல்லாமே அடிதடி காட்சி தான். இந்தப்படம் வித்தியாசமானதாக அமைந்தது. வெற்றிமாறன் இப்படத்தில் வந்தது மகிழ்ச்சி, நன்றி.

தயாரிப்பாளர் ஜாஃபர்:

அமீர் அண்ணனுடன் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது இந்தப்படம் ஆரம்பித்தது. அமீர் அண்ணன் வாழ்க்கையிலேயே ஆரம்பித்த 40 நாட்களில் ஷூட்டிங் முடித்த படம் இது மட்டும் தான். அடுத்து அவர் இயக்கும் படமும் எங்களுடையது தான். எங்கள் உரையாடல் எப்போதும் கலகலப்பாக‌ இருக்கும். சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்போம். அவருடன் இணைந்து பயணிப்பது பெருமை. நன்றி.

நடிகர் சரண்:

எல்லோர் மத்தியில் இந்த மேடையை பகிர்வது பெருமை. என் முதல் நன்றி வெற்றிமாறன் சாருக்கு தான். ‘வட சென்னை’ படம் தான் என் வாழ்க்கையை மாற்றியது. என்னை காஸ்ட் செய்யும் அனைவரும் ‘வட சென்னை’ பற்றி சொல்வார்கள். அந்த‌ வாய்ப்பு தந்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி. ‘வட சென்னை’யில் பார்த்த பல நண்பர்களின் ரீயூனியன் மாதிரி இந்தப்படம் இருந்தது. இந்தப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு ரமேஷ் அண்ணாவிற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.

நடிகை சஞ்சிதா ஷெட்டி:

எல்லோருக்கும் வணக்கம், பத்திரிக்கையாளர் நண்பர்களின் ஆதரவு ‘மாயவலை’க்கு தேவை. சமுத்திரக்கனி சார் தான் ‘விநோதய சித்தம்’ பார்த்து அமீர் சார் கூப்பிடுகிறார். போய்ப்பார் என்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படம் கோவிட் காலத்தில் உருவானது. என்னை மிக நன்றாக பார்த்துக்கொண்டார்கள். மிக போல்டாக நடித்திருக்கிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள். ஆர்யாவின் தம்பி சத்யா என்னுடன் இணைந்து நடித்திருக்கிறார். மிக அழகாக நடித்துள்ளார். அமீர் சாருடன் இணைந்து நடிக்கும் போது நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. அவரும் மிக அற்புதமாக நடித்துள்ளார். ராம்ஜி எங்கள் எல்லோரையும் நன்றாக காட்டியுள்ளார். வெற்றிமாறன் சாருக்கு நன்றி. அவர் இந்தப்படத்தில் இணைந்தது பெருமை. மொத்தக் குழுவிற்கும் என் நன்றிகள்.

பாடலாசிரியர் சினேகன்:

நானும் அமீர் சாரும் இணைந்து பணிபுரிந்து பல நாட்கள் ஆகி விட்டது, நாங்கள் இணைந்த அனைத்து பாடல்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன‌, இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன், எங்கள் படம் என்பதற்காக சொல்லவில்லை, இப்படம் பெரிய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். அமீர் சார் இந்தப் படத்தில் அழகாய் நடித்தது மட்டுமில்லாமல் மிக அழகாகவும் இருக்கிறார். பல ஆண்டுகள் அவருடன் பணியாற்றி வருகிறேன், இந்த பந்தம் மென்மேலும் தொடரும் என்று நம்புகிறேன். இயக்குநர் வெற்றிமாறன் இங்கு இணைந்துள்ளது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய பலம், அவரது ஆசீர்வாதம் எங்களுக்கு மிக முக்கியம், அவருக்கு எங்களது நன்றி. இந்தப் படம் மக்களிடையே ஒரு ஆழமான விதையை விதைக்கும் என்று நம்புகிறேன். உங்கள் ஆதரவை இந்தப் படத்திற்கு கொடுங்கள், நன்றி.

நடிகர் சத்யா:

இடையில் எனக்கு பெரிய பிரேக். நடுவில் ‘சந்தனதேவன்’ படத்தின் நடித்தேன், அதுவும் இடையில் நின்றுவிட்டது. என்ன செய்வது என்று தெரியாத போது தினமும் அமீர் சார் ஆபிஸ் போய்விடுவேன். பின் அவர் ரமேஷ் சாரிடம் எனக்கு இந்த வாய்ப்பை வாங்கித்தந்தார். இது என் ஆரம்பமாக இருக்குமென்று நம்புகிறேன். ஆதரவு தாருங்கள், அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி:

தாழ்வு மனப்பான்மை யாரிடமும் இருக்க கூடாது. உங்கள் திறமை பேசட்டும், பேசும். அமீர் நடிப்பிற்கு எப்போதும் எதிரி நான் தான். ஒரு நல்ல இயக்குநர் நடிக்கக்கூடாது என்றேன், ஆனால் வெற்றிமாறன் ‘வட சென்னை’ மூலம் மாற்றிவிட்டார். இந்தப்படத்திலும் அமீர் அருமையாக நடித்துள்ளார். வெற்றிமாறனுக்கு ஒரு வேண்டுகோள், நீங்கள் நடிக்க போய்விடாதீர்கள். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன்:

மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு படம் செய்துள்ளேன், வாய்ப்பு தந்த அமீருக்கு நன்றி. வெற்றிமாறன் அமீரை ராஜனாக காட்டினார். இதில் இன்னொரு விதமான ராஜனை காட்டியுள்ளேன். நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள், அவரது நடிப்பு அருமையாக இருக்கும். வெற்றிமாறன் போன்ற தீவிரமான படைப்பாளி இந்தப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. எல்லோருக்கும் நன்றி

இயக்குநர் அமீர்:

‘மாயவலை’ தொடங்கியதன் நோக்கம் ஒன்று தான். இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் தான் இதன் மூல காரணம். மூத்த பத்திரிகையாளர்களுக்கு அவரைத் தெரியும். ‘அதர்மம்’ எனும் அற்புதமான படத்தை தந்தவர். பல முன்னணி நடிகர்களை இயக்கிய‌வர். எனக்கு அவருக்குமான நட்பு நீண்டது. அவர் படத்தின் ஷூட்டிங்கில் அவரை வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். நான் அவரிடம் உதவியாளனாக வேலைப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் அவரது சினிமா பயணம் மாறிவிட்டது. அவர் டிவி பக்கம் ஒதுங்கி விட்டார். பல வேலைகள் பார்த்தாலும் அவருக்கு சினிமா செய்ய வேண்டும் என்பது தான் ஆசை. சரி வாருங்கள் பண்ணலாம் என்றேன். ஒரு கதை சொன்னார் அதைப் பண்ணலாம் என பல ஹீரோக்களிடம் கதை சொன்னோம். ஆனால் நடக்கவில்லை. கடைசியில் நீயே நடி என்றார். சரிண்ணே என்று சொல்லி ஆரம்பித்தது தான் இந்தப்படம்.

நாங்கள் ஆரம்பித்த போது ஒரு பட்ஜெட் இருந்தது. ஆனால் அது கை மீறிப்போய்விட்டது. எனக்கு பலர் உதவிக்கு வந்தார்கள். முதல் முறையாக ஒரு படத்தை ஷீட்டிங் எல்லாம் முடித்துவிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி முடித்துவிட்டு உங்களைச் சந்திக்கிறேன். எனக்கே இதுப் புதிது தான். இந்தப்படம் ஆரம்பித்த போது வெற்றிமாறனிடம் சொன்னேன். செய்யுங்கள் நன்றாக வருமென்றார். படம் முடிந்து அவருக்கு காட்டினேன். நானே ரிலீஸ் செய்கிறேன் என்றார். இன்றைய சினிமா வியாபாரம் தெரிந்த வெற்றிமாறன் போன்ற படைப்பாளி எங்கள் படத்தை ரிலீஸ் செய்வது, எங்களுக்குப் பெருமை.

என் அனைத்துப் படங்களுக்கும் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்திறகும் இசை. முதலில் பாடலில்லாமல் இருந்தது. இறுதியில் மூன்று பாடல்கள் வந்துவிட்டன‌. அதை அட்டகாசமாக யுவன் செய்து தந்தார். சஞ்சிதா ஷெட்டி என்னைப்பற்றி எப்போதும் நல்லவிதமாக சொல்லமாட்டீர்களா என்பார். மிகத் திறமைசாலி அவர். இந்தப்படத்தில் இரவில் தான் ஷீட்டிங், ஆனால் முகம் சுளிக்காமல், அற்புதமாக உழைத்துத் தந்தார். நாயகனுக்கு இந்தப்படம் பெயர் சொல்லும் படமாக இருக்கும். வின்செண்ட் என் முதல் படத்தில் நடிக்க வேண்டியவர். ஆனால் அவரை தொடர்பு கொள்ளும் சிக்கல்களில் அவரை நடிக்க வைக்க முடியவில்லை. பின் ‘யோகி’ படத்தில் நடித்தார். இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஒரு சிலருக்கு முகம் பார்க்க பயமாக இருக்கும். ஆனால் உண்மையில் அவர்கள் குழந்தையாக இருப்பார்கள். தீனா அப்படியானவர். எப்போதும் அண்ணா அண்ணா என்று அன்பைப் பொழிபவர். போலீஸாக அருமையாக‌ நடித்திருக்கிறார். ‘வட சென்னை’ படத்தில் தான் அவரை சந்தித்தேன். எனக்கு அவர் நடிப்பு பிடித்திருந்தது. இந்தப்படத்தில் எல்லா நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டு விட்டார். உண்மையில் அட்டகாசமாக செய்துள்ளார். பிரதீப் அருமையாக சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார். ‘விக்ரம்’ எடுத்த இடத்தில் தான் இப்படத்தை எடுத்தோம். அந்த இடம் என்று தெரியாத வண்ணம் கலை இயக்குநர் வீரமணி அருமையாக செய்து தந்தார். என் ஐந்து படங்களுக்கும் ராம்ஜி தான் கேமராமேன். ஒரு இரவில் நடக்கும் கதையை அருமையாக படம்பிடித்துக் காட்டியுள்ளார். எடிட்டர் அஹமது, மறைந்த நண்பர் ஜனநாதன் அறிமுகப்படுத்திய அருமையான கலைஞர். என்னுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். படம் அருமையாக வந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள். வெற்றியை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும். அதுவும் அவரை ஹீரோவாக வைத்து எடுக்க வேண்டும் என்பது என் ஆசை.

இயக்குநர் வெற்றிமாறன்:

நடிப்பது, இயக்குவது இரண்டும் வேறு வேறு சவாரி. இரண்டையும் ஒரு சிலரால் தான் சமாளிக்க முடியும். அது என்னிடம் இல்லை. அதனால் இப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை. ‘வட சென்னை’ ராஜன் ரோல் பலர் நடிப்பதாக இருந்து தள்ளிப்போனது. கடைசியாக அமீரைப் போய்ச் சந்தித்தேன். கேரக்டர் சொல்லாமலே எனக்காக நடிக்கிறேன் என்றார். ஆனால் கேரக்டர் சொன்ன பிறகு இந்தக் கேரக்டருக்கு சரியாக இருக்கமாட்டேன் என்று நினைத்தார். ஆனால் எனக்காக நடிக்க வந்தார். அப்போதிலிருந்து இப்போது வரை எங்கள் நட்பு தொடர்கிறது. எல்லாவற்றைப் பற்றியும் நிறையப் பேசுவோம்.

மனித உணர்வுகள் குறித்து ஒரு அருமையான விஷ‌யத்தை இந்தப்படம் பேசுகிறது. தீனா சிறந்த நடிகர். கேமராவிற்கு முன்னாலும் பின்னாலும் அவராகவே இருக்கிறார். அது அவரது பலம். இந்தப்படத்தில் எல்லோருமே நன்றாக செய்துள்ளார்கள். ரமேஷ், அமீர் எப்போதும் ஒன்றாகவே வருவார்கள். என் படங்கள் பற்றி ரமேஷின் கருத்து மிக உதவியாக இருக்கும். இந்தப்படத்தை நன்றாக செய்துள்ளார். எனக்கு திருப்தியான படமாக இப்படம் வந்துள்ளது. இந்தப்படம் எனக்குப் பிடித்திருக்கிறது.

The post ”ஒரு இரவில் நடக்கும் கதை ‘மாயவலை’ திரைப்படம்..!’’ இயக்குநர் அமீர் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae/feed/ 0
‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வேடியப்பன் தயாரிப்பில் ‘வடக்கன்’ திரைப்படம்..! ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகிறது https://madrasmurasu.com/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2587 https://madrasmurasu.com/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87/#respond Sat, 04 Nov 2023 10:51:59 +0000 https://madrasmurasu.com/?p=7388 ”எழுத்தாளர் பாஸ்கர்சக்தி இயக்கத்தில், ‘வடக்கன்’ இசையமைப்பாளர் ஜனனியின் இசையமைப்பில் ‘தேனிசைத் தென்றல்‘ தேவா பாடினார்”  ‘வடக்கன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசை வெளியீட்டுக்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். எம்டன் மகன், வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களின் வசனத்தை எழுதிய, திரைக்கதை அமைப்பில் பங்களித்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதல் முறையாக எழுதி இயக்கும் திரைப்படம் `வடக்கன்’ தமிழ்நாடு முழுவதும் பல்வேறு […]

The post ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வேடியப்பன் தயாரிப்பில் ‘வடக்கன்’ திரைப்படம்..! ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகிறது first appeared on Madras Murasu.

]]>
”எழுத்தாளர் பாஸ்கர்சக்தி இயக்கத்தில், ‘வடக்கன்’ இசையமைப்பாளர் ஜனனியின் இசையமைப்பில் ‘தேனிசைத் தென்றல்‘ தேவா பாடினார்”  ‘வடக்கன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசை வெளியீட்டுக்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

எம்டன் மகன், வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களின் வசனத்தை எழுதிய, திரைக்கதை அமைப்பில் பங்களித்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதல் முறையாக எழுதி இயக்கும் திரைப்படம் `வடக்கன்’

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில், பெரு நகரம் துவங்கி குக்கிராமங்கள் வரை வட இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இன்றைய சூழலைப் பின்னணியாகக் கொண்டு நிகழும் ஒரு உணர்வு மயமான, நகைச்சுவை கலந்த, பொழுது போக்குத் திரைப்படமாக ‘வடக்கன்’ உருவாகியுள்ளது.

அழகர்சாமியின் குதிரை, மேற்குத் தொடர்ச்சி மலை, தரமணி, பேரன்பு, கர்ணன், நண்பகல் நேரத்து மயக்கம், மாமன்னன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முன்னணி ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் வடக்கன் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

புத்தகப் பதிப்புத் துறையில் புகழ் பெற்று விளங்கும், முன்னணிப் பதிப்பாளர் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வேடியப்பன் முதல் முறையாக வடக்கன் திரைப்படத்தை தயாரித்து வழங்குகிறார்.

கூத்துப் பட்டறை மாணவரான தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் குங்குமராஜ் கதாநாயகனாகவும், ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா கண்டுபிடிப்பான வைரமாலா கதாநாயகியாகவும், இன்னும் பல புதுமுகங்களின் சிறந்த நடிப்பில் உருவாகி இருக்கிறது ‘வடக்கன்’

கர்நாடக இசைத் துறையில் தனி இடத்தைப் பிடித்தவரும், இந்துஸ்தானி, வெஸ்டர்ன், வெஸ்டர்ன் க்ளாஸிக் முதலிய பல்வேறு இசைப் பிரிவுகளை கற்றுத் தேர்ந்தவரும், தனிப் பாடல்கள் மற்றும் இசைஆல்பங்களை வெளியிட்டு பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றவருமான S.J. ஜனனி ‘வடக்கன் ‘ திரைப்படத்துக்கு இசை அமைக்கிறார்.

படத்தில் பிரதானமாக இடம் பெறும் முக்கியமானதொரு பாடலை கவிஞர் ரமேஷ் வைத்யா எழுத, “தேனிசைத் தென்றல்’ தேவா பாடினார். பாடலைப் பாடி முடித்ததும் தேவா காட்சியின் ஆன்மாவைக் கடத்தும் இசையையும், அதற்கு ஒத்திசைந்து உயிரூட்டும் பாடல் வரிகளையும் உருவாக்கிய இசையமைப்பாளர் ஜனனியையும், கவிஞர் ரமேஷ் வைத்யாவையும் மனதாரப் பாராட்டினார்.

‘வடக்கன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும்

இசை வெளியீட்டுக்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்.

The post ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வேடியப்பன் தயாரிப்பில் ‘வடக்கன்’ திரைப்படம்..! ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகிறது first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87/feed/ 0
‘ஸ்கந்தா’ திரைப்படம்..! கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் கதையை எழுதி வைத்திருக்கிறார் https://madrasmurasu.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9e/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%259e https://madrasmurasu.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9e/#respond Fri, 03 Nov 2023 10:41:35 +0000 https://madrasmurasu.com/?p=7365 தெலுங்குப் பட இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனுவின் முந்தைய படமான ‘அகண்டா’ ஒரு அட்டகாசமான ஆக்ஷன் த்ரில்லர். பாலய்யாவின் நடிப்பில் ஒவ்வொரு சண்டைக் காட்சியையும் வித்தியாசமாகச் செய்திருப்பார்கள். இதற்கு முன்பு பாலய்யாவை வைத்து இவர் இயக்கிய ‘லெஜண்ட்’ படமும் ஒரு சிறப்பான பொழுதுபோக்குச் சித்திரம். ‘அகண்டா’ வுக்குப் பிறகு ராம் பொத்தினேனியை வைத்து, ‘ஸ்கந்தா’ இயக்கியிருக்கிறார் பொய்யபடி ஸ்ரீனு. இந்தியாவில் யாருமே யோசிக்க முடியாத ஒரு கதையை இந்தப் படத்தில் வைத்திருக்கிறார் இயக்குநர். ஆந்திரப் பிரதேச முதல்வரின் மகளுக்கு […]

The post ‘ஸ்கந்தா’ திரைப்படம்..! கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் கதையை எழுதி வைத்திருக்கிறார் first appeared on Madras Murasu.

]]>
தெலுங்குப் பட இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனுவின் முந்தைய படமான ‘அகண்டா’ ஒரு அட்டகாசமான ஆக்ஷன் த்ரில்லர். பாலய்யாவின் நடிப்பில் ஒவ்வொரு சண்டைக் காட்சியையும் வித்தியாசமாகச் செய்திருப்பார்கள். இதற்கு முன்பு பாலய்யாவை வைத்து இவர் இயக்கிய ‘லெஜண்ட்’ படமும் ஒரு சிறப்பான பொழுதுபோக்குச் சித்திரம்.

‘அகண்டா’ வுக்குப் பிறகு ராம் பொத்தினேனியை வைத்து, ‘ஸ்கந்தா’ இயக்கியிருக்கிறார் பொய்யபடி ஸ்ரீனு. இந்தியாவில் யாருமே யோசிக்க முடியாத ஒரு கதையை இந்தப் படத்தில் வைத்திருக்கிறார் இயக்குநர்.

ஆந்திரப் பிரதேச முதல்வரின் மகளுக்கு கல்யாணம் ஆகவிருக்கும் நேரத்தில், அந்தப் பெண்ணை தெலுங்கானா முதலமைச்சரின் மகன் கடத்திக்கொண்டு போய்விடுகிறார். இதனால், தெலுங்கானா முதலமைச்சரைப் பழிவாங்க அடியாட்களை அனுப்புகிறார் ஆந்திர முதல்வர். அப்படி வரும் அடியாள், இரண்டு முதல்வர்களின் மகளையும் கடத்திக்கொண்டு தனது கிராமத்திற்குப் போய்விடுகிறார்.

இதற்கு நடுவில், ஒரு மிகப் பெரிய கம்யூட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.
இந்த இரண்டு கதைகளுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் மீதிக் கதை.

கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் கதையை எழுதி வைத்திருக்கிறார். இரண்டு மாநில முதல்வர்களும் முழு நேரமும் அடிதடி வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கதாநாயகனானவர், போலீஸ், என்.எஸ்.ஜி கமாண்டோக்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் முதல்வர் வீட்டிற்குள் புகுந்து ஒரு ஐம்பது பேரைக் கொல்கிறார்.

தமிழ்ப் படங்களில் அமைதியாக வந்துபோன ராஜா, இந்தப் படத்தில் நாயகனுக்குத் தந்தை. கிராமத்தில் இருந்தபடி இரு மாநில முதல்வர்களுக்கும் சவால் விடுகிறார்.
கதாநாயகன் இரு மாநில முதல்வர்களின் பெண்களையும் கடத்தி வந்து விடுகிறார் அல்லவா, அதில் தெலுங்கானா மாநில முதல்வரின் பெண், கடத்தியவனையே காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார். ஸ்டாக்ஹோம் சின்ரோம் போலிருக்கிறது.
முந்தைய படத்தில் சண்டைக் காட்சிகளைச் சிறப்பாக அமைத்திருந்தார் ஸ்ரீனு. இந்தப் படத்தில் சில சண்டைக் காட்சிகளைத் தவிர, மற்றவையெல்லாம் வெகு சாதாரணமாக இருக்கின்றன.

இந்தப் படத்தில் நாயகனுக்கு இரண்டு ரோல்கள். ஒரு ரோலை கடைசியில்தான் யோசித்திருப்பார்கள் போலிருக்கிறது. சர்வதேச நாடுகள் தேடும் ஒரு போதைக் கும்பல் தலைவனை மெக்ஸிகோவில் கொன்றுவிட்டு நேரடியாக ஆந்திராவில் வந்து சண்டை போடுகிறாராம்.

அந்தக் கதையைச் சொல்ல அடுத்த பாகம் வரும் என்று லீட் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிசில் ஊத்திக் கொண்டதால், அடுத்த பாகம் வருமா என்பது சந்தேகம்தான்.

”ஸ்கந்தா” – டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் தமிழிலும் ஸ்ட்ரீமாகிறது.

The post ‘ஸ்கந்தா’ திரைப்படம்..! கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் கதையை எழுதி வைத்திருக்கிறார் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9e/feed/ 0
’ஹரா’ திரைப்படத்தில் மோகன் ஜோடியை மாற்றியது ஏன்..? https://madrasmurasu.com/%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b9%25e0%25ae%25b0%25e0%25ae%25be-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%258b%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95/#respond Tue, 31 Oct 2023 08:41:18 +0000 https://madrasmurasu.com/?p=7266 ‘ஹரா’ திரைப்படத்தில் மோகன் ஜோடியாக கேரள நடிகை அனுமோல் மாற்றப்பட்டது ஏன்? என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.  பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ திரைப்படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது சிகிச்சையின் காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, ‘ஹரா’ திரைப்படத்தின் அதிரடி முதல் […]

The post ’ஹரா’ திரைப்படத்தில் மோகன் ஜோடியை மாற்றியது ஏன்..? first appeared on Madras Murasu.

]]>
‘ஹரா’ திரைப்படத்தில் மோகன் ஜோடியாக கேரள நடிகை அனுமோல் மாற்றப்பட்டது ஏன்? என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 

பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ திரைப்படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது சிகிச்சையின் காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையே, ‘ஹரா’ திரைப்படத்தின் அதிரடி முதல் பார்வை மற்றும் டீசர் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ திரைப்படத்தில் எதிர் நாயகனாக நடிக்க மோகன் ஒப்பந்தமானார்.

இதன் காரணமாக, ‘ஹரா’ படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கிய போது தேதிகள் ஒத்துழைக்காததால் ஏற்கனவே ஒப்பந்தமான பிரபல நடிகைக்கு பதில் மோகன் ஜோடியாக அனுமோல் நடித்துள்ளார். சிறப்பான பங்களிப்பை அனுமோல் வழங்கி உள்ளதாகவும் அவரது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “கோத்தகிரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இறுதி கட்ட படபிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பண்டிகை வெளியீடாக விரைவில் திரையரங்குகளில் ‘ஹரா’ வெளியாகும் என்று கூறினார்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஐபிசி சட்டங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘ஹரா’ திரைப்படத்தை கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிக்கிறார்.

‘ஹரா’ திரைப்படத்தில் யோகி பாபு, ‘பவுடர்’ நாயகி அனித்ரா நாயர், சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

The post ’ஹரா’ திரைப்படத்தில் மோகன் ஜோடியை மாற்றியது ஏன்..? first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95/feed/ 0