Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
கல்விக்கடன் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Thu, 10 Aug 2023 05:06:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!’’ https://madrasmurasu.com/5895-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5895-2 https://madrasmurasu.com/5895-2/#respond Wed, 09 Aug 2023 10:15:07 +0000 https://madrasmurasu.com/?p=5895 நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (9.8.2023) பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில், அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் […]

The post ’’அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!’’ first appeared on Madras Murasu.

]]>
நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (9.8.2023) பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில், அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்தினார்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணையதள வசதிகள், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட “இல்லம் தேடி கல்வி”, “நம் பள்ளி நம் பெருமை”, “எண்ணும் எழுத்தும்”, “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்”, “அனைவருக்கும் ஐஐடி” போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திறன் வகுப்பறைகள் அமைத்தல், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும் என்றும் 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்” என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், நாட்டின் முதன்மை உயர்கல்வி நிலையங்களான இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT), தேசிய தொழில்நுட்ப கழகம் (NIT), தேசிய பேஷன் தொழில்நுட்ப கழகம் (NIFT), இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU), தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (NLU), தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களில் கல்வி பயின்றிட JEE, CUET, National Aptitude Test in Architecture போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ள அரசு பள்ளிகளைச் சார்ந்த சுமார் 225 மாணவ, மாணவியர்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் அவர்களின் கல்விச் செலவினத் தொகை முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது. இதன்மூலம் அம்மாணவ, மாணவியர் உயர்கல்வியை எவ்வித தடையுமின்றி பயில இயலும்.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக கடந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் 25 மாதிரிப் பள்ளிகள் (Model Schools) தொடங்கப்பட்டது. இம்மாதிரிப் பள்ளிகள் அனைத்தும் உண்டு உறைவிடப் பள்ளிகளாக செயல்பட்டு வருகிறது. இம்மாதிரிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில், முதன்மைக் கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயில விருப்பமுள்ள மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தக் கல்வியாண்டில், மேலும் 13 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு, தற்போது 38 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மாதிரிப் பள்ளிகளில் அளிக்கப்பட்ட சிறப்புப் பயிற்சிகளின் காரணமாக இன்றைக்கு சுமார் 225 அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம், தனியார் பள்ளி மாணவர்களால் மட்டும்தான் நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பயில முடியும் என்ற எண்ணத்தை உடைத்து, அரசுப் பள்ளி மாணவர்களாலும் அத்தகைய முன்னோடி கல்வி நிலையங்களில் சேர்ந்து பயில முடியும் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில், தைவான் நாட்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ள கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவி ஜெயஸ்ரீ பேசியபோது, தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி பெற்று தைவான் நாட்டின் குன் ஷான் (Kun Shan) பல்கலைக்கழகத்தில் இளங்கலை இயந்திர பொறியியல் படிக்க தேர்வாகியுள்ளதாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்தூர் என்ற குக்கிராமத்தில் பிறந்து கடல் கடந்து வேறொரு நாட்டிற்கு கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றும், “நான் முதல்வன்”, “இல்லம் தேடி கல்வி”, “புதுமைப் பெண்”, “வானவில் மன்றம்” போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி தன்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் -க்கு, மாணவச் சமுதாயத்தின் சார்பில் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

The post ’’அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/5895-2/feed/ 0
’’வெளிநாட்டு கல்வி.. முழு விபரம்…!’’ பிளஸ் டூ மாணவர்கள்-பெற்றோர்களுக்கு வழிகாட்டி https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b4%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81/#respond Sun, 30 Apr 2023 07:25:53 +0000 https://madrasmurasu.com/?p=782 யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலகமெங்கும் பேசுபொருளாக உள்ள நிலையில், இந்தியாவில் இவ்வளவு கல்வி நிறுவனங்கள் இருக்கும்போது, மாணவர்கள் ஏன் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும்? என்ற கேள்வியை இந்தியாவை சேர்ந்த பலரும் சமூக ஊடகங்களில் முன்வைத்தனர். ஊடகங்களும் அதை வைத்து விவாதங்களை நடத்துகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை ஆவலுடன் ஏதிர்பாத்து இருக்கின்றனர்.  அவர்களில் பலருக்கும் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பது கனவாக […]

The post ’’வெளிநாட்டு கல்வி.. முழு விபரம்…!’’ பிளஸ் டூ மாணவர்கள்-பெற்றோர்களுக்கு வழிகாட்டி first appeared on Madras Murasu.

]]>
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலகமெங்கும் பேசுபொருளாக உள்ள நிலையில், இந்தியாவில் இவ்வளவு கல்வி நிறுவனங்கள் இருக்கும்போது, மாணவர்கள் ஏன் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும்? என்ற கேள்வியை இந்தியாவை சேர்ந்த பலரும் சமூக ஊடகங்களில் முன்வைத்தனர். ஊடகங்களும் அதை வைத்து விவாதங்களை நடத்துகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை ஆவலுடன் ஏதிர்பாத்து இருக்கின்றனர்.  அவர்களில் பலருக்கும் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பது கனவாக இருக்கலாம்.

எனவே, வெளிநாடுகளுக்கு சென்று மாணவர்கள் உயர்கல்வி பயில விரும்புவது ஏன்? அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு உண்மையில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறதா? அதை மாணவர்கள் திட்டமிட்டு எட்டிப்பிடிப்பது எப்படி? என்பது குறித்து இந்த கட்டுரை அலசுகிறது.

இந்தியாவின் உயர் கல்வி அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளி விபரப்படி, ஏறத்தாழ 3.85 கோடி மாணவர்கள் உயர்கல்வித் துறையில் பயில்கின்றனர். தேசிய அளவிலான சராசரி மொத்தப் பதிவு விகிதம் 27.1, அதாவது 18-23 வயதுடைய நபர்களில் 100 பேரில் 27.1 நபர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். வளர்ந்த நாடுகளான அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மற்றும் கனடா நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் உயர்கல்விக்கான வருடாந்திர கட்டணம் என்பது 5 முதல் பத்து மடங்கு வரை குறைவு. இருப்பினும், வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2019ஆம் ஆண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஏறத்தாழ 8 லட்சம் மாணவர்கள் இந்தியாவில் இருந்து உயர்கல்வி பெறுவதற்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. வளர்ந்த நாடுகளில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பு பயிலச் செல்லும் போது அந்த நாடுகளிலேயே வேலைவாய்ப்பு பெற்று நிரந்தரமாக குடியுரிமை கிடைத்திட வாய்ப்புள்ளது அல்லது வெளிநாடுகளில் பயின்று விட்டு இந்தியா திரும்பும் போது முன்னோடி தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் நல்ல சம்பளம் கிடைக்கிறது.

வெளிநாடுகளில் ப‌ல்கலாசாரச் சூழலில் (Multicultural) மாறுபட்ட கல்வித் திட்டத்தில் பயிலும் போது மாணவர்களுக்கான கற்றலின் நோக்கத்தில் (Learning outcomes) நல்ல பலனைப் பெற இயலும் என மாணவர்கள் திடமாக நம்புகின்றனர். உதாரணத்திற்கு பிரிட்டனில் ஓராண்டு காலத்திற்குள் முதுநிலை கல்வி பயிலவும் வாய்ப்புண்டு, மேலும் ஆய்வு சார் பாடத்திட்டங்கள் (Research led curriculum) நேரடியாக தொழில்துறை நிறுவனங்களோடு இணைந்து கற்கும் வாய்ப்பையும் தருகிறது. இதுபோன்று இன்ன பிற காரணங்களுக்காகவும் வெளிநாடுகளுக்கு சென்று பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இனி வரும் வருடங்களில் அதிகரிக்கவே செய்யும். அவ்வாறு அதிகரிப்பின் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பயில்வதற்கு ஆகும் செலவினம் 2024ஆம் ஆண்டில் 80 பில்லியன் டாலர்களைத் தொடும் என RedSeer நிறுவனம் கணிக்கிறது.

வெளிநாடுகளுக்கு சென்று பயிலும் மாணவர்களில் ஆந்திரா, பஞ்சாப், மகாராஷ்டிரா வரிசையில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது ஏறத்தாழ 7% மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பயில ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலும் உள்ள மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு சென்று பயில்வதற்கான விழிப்புணர்வு அல்லது அதற்கான வாய்ப்புகளை தெரிந்து கொள்வதில் பல சிரமங்கள் உள்ளன.

குறிப்பாக, வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரம், மற்றும் எங்கு என்ன படிப்புகளை எடுத்து பயிலலாம்? என்ன மாதிரியான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்?, நுழைவுத் தேர்வு அல்லது தகுதித் தேர்வுகள் எழுத வேண்டுமா? உயர்கல்வி ஆராய்ச்சி வாய்ப்புகளை எப்படி அறிந்து கொள்வது, அதற்கான உத்திகள் என்ன? என பல்வேறு ஐயங்கள் நம் மாணவர்களுக்கு உள்ளது. இவை குறித்த தகவல்களை சற்றே விரிவாக இங்கே பார்ப்போம்.

ஒவ்வொரு நாடும் அவர்களது கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலை வெளியிடுகிறது, அவை அரசு அல்லது அரசு அல்லாத தனியார் அமைப்புகள் (பத்திரிக்கை இதழ்கள், புள்ளி விபர நிறுவனங்கள், இதரவை) மூலம் வெளியிடப்படுகிறது. உலக அளவிலான கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் QS World University Ranking எனப்படும் Quacquarelli Symonds மற்றும் “Elsevier” நிறுவனமும் இணைந்து வெளியிடும் உயர்கல்வி நிறுவனங்களுங்கான தரவரிசைப் பட்டியல் அதிக கவனம் பெற்றவை.

இந்த‌ தர வரிசை தேர்வானது 5 முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியது. 

  1. கல்வி சக மதிப்பாய்வு, 2. ஆசிரியர்/மாணவர் விகிதம், 3. ஆசிரியர்களுக்கான மேற்கோள்கள் (ஆய்வு கட்டுரைகள்), 4. நிறுவனத்தின் நன்மதிப்பு, 5. சர்வதேச மாணவர் விகிதம், 6. சர்வதேச பணியாளர் விகிதம்.

வெளிநாடுகளில் பயில வேண்டும் என திட்டமிடும் மாணவர்களுக்கு இந்த தரவரிசைப்பட்டியல் மிக உதவியாக இருக்கும்.

குறிப்பாக 5 மற்றும் 6 வது அம்சங்களில் மதிப்பிடப்பட்டிருக்கும் சர்வதேச மாணவர் மற்றும் பணியாளர் விகிதத்தைக் கொண்டு ஒரு பல்கலைக்கழகம் எந்த அளவிற்கு பரந்து பட்ட சர்வதேச கட்டமைப்பை தங்கள் வளாகத்திற்குள் கொண்டிருக்கிறது என விளங்கி கொள்ள இயலும். அதே போல பிரிட்டனில் இருந்து வெளிவரும் கார்டியன் (Guardian) இதழ் மற்றும் thecompleteuniversityguide.co.uk இணையதளங்களின் தர வரிசைப் பட்டியலை ஓரளவிற்கு நம்பகத் தன்மை வாய்ந்தது. கனடா நாட்டில் இருந்து வெளிவரும் டைம்ஸ் இதழ் வெளியிடும் அந்நாட்டிற்கான‌ தர வரிசைப் பட்டியலையும் நல் உதாரணமாகக் கொள்ளலாம். ஆகவே ஒரு மாணவர் அந்தந்த நாடுகளில் இருந்து வெளிவரும் இதுபோன்ற நம்பகத்தன்மை வாய்ந்த தர வரிசைப் பட்டியலை முன் கள ஆய்வு செய்து கொள்வது சிறந்தது.

இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் இரண்டிற்குமே மதிப்பெண் விகிதம் ஒரு அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்திய உயர்கல்விச் சூழல் என்பது மாணவர்களின் மதிப்பெண்களை அடிப்படையாக மட்டுமே கொண்டிருக்கும் என்பதால் இது குறித்த விழிப்புணர்வு எல்லா மாணவர்களுக்கும் இருக்கும். ஆனால் அத்துடன் ஒரு சில நாடுகளுக்கு மொழியறிவுச் சான்றிதழ் மிக முக்கியமானது. அது குறித்து தகவலை முதலில் விரிவாக பார்ப்போம்.

ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் ஆங்கில மொழிப் புலமையில் அவர்கள் பரிந்துரைக்கும் தகுதித் தேர்வில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகள் IELTS (International English Language Testing System) எனப்படும் ஆங்கில மொழிப்புலமைத் தகுதித் தேர்வில் இளநிலை படிப்புகளுக்கு குறைந்த பட்சம் 6.0 மற்றும் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு குறைந்த பட்சம் 6.5 புள்ளிகளை (Band) பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வானது ஆங்கிலத்தை கேட்பது, படித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் என்ற பிரிவுகளில் மதிப்படுப்படுவது. இந்த தேர்விற்கு கட்டணம் உண்டு, மேலும் இந்த தேர்விற்கான சான்றிதழ் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால் அதற்கேற்ப மாணவர்கள் இத்தேர்வை திட்டமிடுவது நல்லது. IELTS போலவே மற்றொரு ஆங்கில புலமை தேர்வான TOEFL (Test of English as a Foreign Language) சான்றிதழை 119 நாடுகளில் உள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மொழித் தகுதியாக ஏற்றுக் கொள்கிறது. ஆகவே எந்த நாட்டிற்கு எந்த மொழிப் புலமைத் தேர்வு எழுத வேண்டும் என்று சரிப் பார்த்துக் கொள்வது மிக அவசியம்.

இளநிலை படிப்புகளுக்கு மதிப்பெண்களைப் பொறுத்து தகுதி அடிப்படை என்பது ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் மாறுபடும். இந்தியாவில் சிபிஎஸ்சி மற்றும் சர்வதேச பாடத்திட்டத்தில் (CBSE/ISC Standard) பனிரெண்டாம் வகுப்பு பயின்றவர்கள் பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயில குறைந்த பட்சம் பன்னிரெண்டாம் வகுப்பில் 80-95% எடுத்திருக்க வேண்டும். இந்த விழுக்காடு ஒவ்வொரு துறைக்கும் (Department) மாறுபடும். இந்தியாவின் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள‌ மாநிலப் பாடத்திட்டத்தின் (State board) கீழ் பயிலும் மாணவர்களும் பிரிட்டனில் நேரடியாக நுழைவுத் தேர்வு இல்லாமல் இளநிலை படிப்புகளை பயிலலாம். ஆனால் இவர்கள் மருத்துவத்துறையில் சேர இயலாது. ஆகவே ஒவ்வொருத் துறைக்கும் தேவையான குறைந்த பட்ச மதிப்பெண் விழுக்காடு குறித்த தகவலை பெறுவது மிக முக்கியமானது. இத்தகவலை ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும்/ கல்வி நிறுவனத்திலும் உள்ள‌ சர்வதேச அலுவலகம் (International Office) வாயிலாக மின்னஞ்சல் முலம் பெறலாம்.

முதுநிலை படிப்புகளுக்கு இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது என்பது ஒப்பீட்டளவில் இளம்நிலை படிப்புகளை விட மிக அதிகம். குறிப்பாக அறிவியல் மற்றும் பொறியியல், கணிப்பொறி நுட்பம், மேலாண்மை, செவிலியர் மற்றும் மருத்துவ பிரிவுகளில் சிறப்பு படிப்புகள் (Specialized courses) பயிலவே பெரும்பாலும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இந்த எண்ணிக்கை உள்நாட்டில் சிறப்பு படிப்புகளை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது 60% அதிகம். இவற்றில் சில பாடப் பிரிவுகளுக்கு கல்வி பயில உதவித் தொகை கிடைக்கும்.

உதாரணத்திற்கு வெளிநாட்டு மாணவர்கள் ஜப்பான் நாட்டில் முதுநிலை ஆய்வு படிப்பு பயில Monbukagakusho (MEXT) Scholarship திட்டம் மூலம் மாதம் 1,44,000 யென் (90 ஆயிரம் ரூபாய்) வழங்குகிறது. மேலும் கல்விக் கட்டணத்தை இத்திட்டம் நேரடியாகவே கல்வி நிறுவனங்களில் செலுத்தி விடுகிறது. இதற்கான விண்ணப் படிவத்தை அந்தந்த நாடுகளில் உள்ள ஜப்பானிய தூதரகம் மூலம் தருகிறார்கள், அல்லது இணையதளம் வாயிலாகவும் பெறலாம். இதே போல தென்கொரியா நாட்டு அரசு அங்கு முதுநிலைப் படிப்புகளுக்கு உதவித் தொகை (Global Korea Scholarship) வழங்குகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் (Europe Union) தனது உறுப்பு நாடுகளில் முதுநிலைப் படிப்புகள் பயில Erasmus Mundus Scholarship திட்டம் மூலம் உதவுகிறது. இந்த திட்டத்தின் சிறப்பே முதுநிலை மாணவர்கள் ஒவ்வொரு பருவ பாடத்திட்டத்தையும் (Semester) ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள உறுப்பு நாடுகளில் பயில முடியும். குறைந்த பட்சம் முதுநிலை படிப்பினை 3 நாடுகளில் பயிலும் வாய்ப்பை இத்திட்டம் தருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு திறன் அறிவு (Skills) மற்றும் பயிற்சியினை (Training) பெற முடியும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்புகிறது. இவை தவிர ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, செக் குடியரசு, பிரான்ஸ், கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் வெளிநாட்டு மாணவர்களுக்கென்று தனித்த உதவித் தொகை திட்டங்களை முதுநிலை மாணவர்களுக்கு தருகிறது.

பொதுவாக இரண்டு வழிகளில் முதுநிலை படிப்புகளை வெளிநாடுகளில் உதவித் தொகையுடன் பயிலலாம்.

  1. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் உள்ள உதவித் தொகை திட்டத்திற்கு (Scholarship) விண்ணபித்து அதன் வாயிலாக செல்வது.
  1. சுயநிதி (Self financing) மூலம் வெளிநாடுகளுக்கு சென்று பயில்வது. 2,000 முதல் 5,000 டாலர் வரை சிறிய‌ உதவித் தொகைகளை பல்கலைக்கழகம் அல்லது தன்னார்வலர் அமைப்புகள் வழங்குகின்றன. இவை ஓரளவிற்கு சுயநிதி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

பல்வேறு நாடுகளில் முதுநிலை கல்விக்கான உதவித் தொகை குறித்த தகவல்கள் www.findamasters.com போன்ற‌ இணையத் தளங்களில் எளிதாக கிடைக்கிறது. அதே நேரம் குறிப்பிட்ட‌ உதவித் தொகை திட்டங்கள் தொடர்ந்து சமகாலத்தில் நடைபெறுகிறதா என்பதை ஒரு முறை சரிபார்த்துக் கொள்வது நல்லது. ஆங்கில மொழி அல்லாத பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட நாடுகள் தங்கள் தாய்மொழியை முதல் பருவத்தில் ஒரு சில மாதங்களுக்கு புதுமுக பயிற்சியாக‌ இலவசமாக கற்றுத் தருகிறது. ஆகவே மொழி தெரியவில்லை என்ற கவலை வேண்டாம். தென் கொரியா போன்ற நாடுகள் முதுநிலை படிப்புகளுக்கான உதவித் தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது அடிப்படை அளவில் கொரிய மொழி (Test of Proficiency in Korean – TOPIK) அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறது. ஆகவே முதுநிலை படிப்பிற்கு செல்லும் மாணவர்கள் பிற மொழி கற்கும் சூழல் அமைந்தால் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வெளிநாடுகளுக்கு உயர்கல்விக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் எந்த நாட்டிற்கு போக வேண்டும் என முடிவெடுத்த பின் செய்ய வேண்டிய முதல் பணி, அந்த நாட்டின் குடியேற்றத்திற்கு (Visa) தேவையான ஆவணங்கள் குறித்த தகவல்களை தூதரக (Embassy) இணைய தளம் மூலம் தெரிந்து கொள்வது அத்தியாவசியமானது. குறிப்பாக, பிரிட்டன் போன்ற நாடுகள் விண்ணப்பதாரர் குறைந்தது ஆறு மாதம் நடப்பில் உள்ள வங்கி கணக்கை ஒரு ஆவணமாக சமர்பிக்குமாறு கேட்பார்கள். எனவே இதுபோன்ற தகவல்களை முன் கூட்டியே தெரிந்து வைத்திருந்தால் தேவையற்ற சிரமங்களை தவிர்க்கலாம். மேலும், கல்விச் சான்றிதழ்களை (Testimonial) உரிய நேரத்தில் பெற்று வைத்திருத்தல் அவசியம். பெரும்பாலான வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் இளநிலை பட்டய படிப்பின் மொத்த‌ மதிப்பெண் பட்டியலை அவர்கள் பயின்ற கல்வி நிறுவனத்தின் அதிகாரபூர்வ அலுவலகத்தின் முத்திரை பதித்த மூடிய உறைக்குள் சீலிட்டு (Transcripts) கேட்பார்கள். ஆகவே இது போன்ற ஆவணங்களை முன் கூட்டியே பெற்று வைத்துக் கொள்ளுதல் மிக அவசியம்.

சில நாடுகள் இந்திய மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களின் நம்பகத் தன்மை (Creditability) அல்லது தங்கள் நாட்டின் கல்வித் திட்டத்திற்கு இணையாக (Equivalent certificate) மாணவரின் கல்விச் சான்றிதழ் உள்ளதா எனவும் கேட்பார்கள். இதற்கான சான்றளிப்பை (Attestation) இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட நாட்டின் தூதரக அலுவலகம் மூலம் பெற்று கொள்ளலாம். நாம் கல்விக் கட்டணத்தை உரிய நேரத்தில் ஒவ்வொரு பருவத்திற்கும் செலுத்த இயலும் என்பதற்கான வங்கி கணக்கு ஆதாரத்தை விசா பெறும் போது சமர்பிக்க வேண்டும். ஆகவே வங்கிக் கடன் மூலம் செல்லும் சுயநிதி (Self financing) மாணவர்கள் முன் கூட்டியே வங்கி இருப்பில் இருக்க வேண்டிய சேமிப்பு தொகை குறித்து திட்டமிடுதல் அவசியம். உதவித் தொகை (Scholarship) மூலம் வெளிநாடு செல்பவர்களுக்கு அந்த கல்வி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட அனுமதிச் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். விசா பெறுவதில் சுயநிதி மாணவர்களைப் போல இவர்களுக்கு அதிக சிரமம் இருக்காது.

ஒவ்வொரு நாட்டின் தூதரகங்கள் அவ்வப்போது தங்களது குடியேற்றத்திற்கான விதிமுறைகளை (Visa regulations) மாற்றிக் கொண்டே இருப்பர். ஆகவே இத்தகவலை தொடர்ந்து கண்காணித்து மேம்படுத்திக் கொள்வது நல்லது.

பெரும்பாலான மாணவர்கள், விசா வாங்குவதற்கு தனியார் நிறுவனங்களை அணுகுகின்றனர். இயன்ற வரை நீங்கள் விண்ணப்பிக்கும் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் (Authorised agency) வாயிலாக விண்ணப்பிப்பது பாதுகாப்பானது.

வெளிநாடுகளில் உயர்கல்வி பயில்வது குறித்த பல்வேறு தகவல்களை இந்த கட்டுரையில் அறிந்திருப்பீர்கள். இதைத்தொடர்ந்து, வெளிநாடுகளில் உயர்கல்வி ஆராய்ச்சிக்கான‌ வாய்ப்பு எப்படி உள்ளது? அதனை எப்படி அறிந்து கொள்வது? வெளிநாடுகளில் உயர்கல்வி ஆராய்ச்சி கல்விக்கு உதவித் தொகை கிடைக்குமா? போன்ற மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விரிவாக பதிலளிக்கும் அடுத்த கட்டுரை, பிபிசி தமிழின் இதே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடரில் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வெளியாகும்.

(இக்கட்டுரையின் ஆசிரியர் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து, தற்போது பிரிட்டனில் உள்ள கெரியட் வாட் பல்கலைக் கழகத்தில் (Heriot-Watt University) உள்ள நுட்பம் மற்றும் இயல் அறிவியல் (School of Engineering and Physical Sciences) பள்ளியில் இணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். சூரிய ஆற்றல் மூலம் நானோ அளவிலான குறைகடத்தி வினையூக்கிகள் உதவியுடன் எவ்வாறு மின் உற்பத்தி மற்றும் ஹைட்ரஜன் வாயுவை தயாரிப்பது என்ற ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வுக் குழுவின் தலைவராக உள்ளார். நானோ நுட்பம் சார்ந்த ஆற்றல் கருவிகள் வடிவமைப்பில் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பன்னாட்டு ஆய்விதழ்களில் பிரசுரித்துள்ளார். ஐப்பானிய அரசின் JSPS Fellowship விருதையும், ஐரோப்பிய பிராந்திய‌ வளர்ச்சி நல நிதி மூலம் வேல்சு அரசிற்கான Ser-Cymru II Rising Star விருதையும் பெற்றவர். நானோ நுட்பம் மற்றும் உயர்கல்வி ஆராய்ச்சி வாய்ப்புகள் குறித்து தொடர்ந்து சமூக வலை தளங்களில் தமிழில் எழுதியும், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு கருத்தரங்குகளில் பேசியும் வருகிறார்.)

தயாரிப்பு: சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ் – நன்றி

The post ’’வெளிநாட்டு கல்வி.. முழு விபரம்…!’’ பிளஸ் டூ மாணவர்கள்-பெற்றோர்களுக்கு வழிகாட்டி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81/feed/ 0
’’கல்விக் கடன் – மானியத் திட்டங்கள்..!’’ இந்தியன் வங்கியின் அறிவிப்பு https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4/#respond Sun, 30 Apr 2023 06:36:44 +0000 https://madrasmurasu.com/?p=774 இந்தியன் வங்கி கல்விக் கடனுக்கு மூன்று மானியத் திட்டங்கள் உள்ளன, அவை கீழே விவரிக்கப்பட்டுள்ளன: கல்விக் கடனுக்கு (CSIS) வட்டி மானியம் வழங்கும் மத்திய திட்டம்  இந்தத் திட்டம் “இந்தியாவில் படிக்க” மட்டுமே பொருந்தும். ஒரு படிப்பை ஓரளவு இந்தியாவிலும், ஓரளவு வெளிநாட்டிலும் தொடர்ந்தால், அது மானியத்திற்கு தகுதியற்றது. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தொடர இந்தத் திட்டம் பொருந்தும். இத்திட்டத்தின்படி, அனைத்து மூலங்களிலிருந்தும் […]

The post ’’கல்விக் கடன் – மானியத் திட்டங்கள்..!’’ இந்தியன் வங்கியின் அறிவிப்பு first appeared on Madras Murasu.

]]>
இந்தியன் வங்கி கல்விக் கடனுக்கு மூன்று மானியத் திட்டங்கள் உள்ளன, அவை கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

கல்விக் கடனுக்கு (CSIS) வட்டி மானியம் வழங்கும் மத்திய திட்டம் 

இந்தத் திட்டம் “இந்தியாவில் படிக்க” மட்டுமே பொருந்தும்.

ஒரு படிப்பை ஓரளவு இந்தியாவிலும், ஓரளவு வெளிநாட்டிலும் தொடர்ந்தால், அது மானியத்திற்கு தகுதியற்றது.

இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தொடர இந்தத் திட்டம் பொருந்தும்.

இத்திட்டத்தின்படி, அனைத்து மூலங்களிலிருந்தும் பெற்றோர்/குடும்பத்தின் ஆண்டு மொத்த வருமானம் ரூ.4.50 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது. 

இந்த நோக்கத்திற்காக அந்தந்த மாநில அரசு / யூனியன் பிரதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வருமானச் சான்று பெறப்பட வேண்டும் (எ.கா. தமிழகத்திற்கு மண்டல துணை தாசில்தாரிடமிருந்து) மற்றும் கடன் வழங்கும் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்விக் கடன் விண்ணப்பித்த தேதியில் உள்ள குடும்பத்தின் வருமானம் வருவதற்குத் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும். வருமானத்தில் அடுத்தடுத்த அதிகரிப்பு அல்லது குறைவு தகுதியில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

ரூ.10.00 லட்சம் வரையிலான கல்விக் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டித் தொகைக்கு வட்டி மானியம் கிடைக்கும். ரூ.10.00 லட்சத்திற்கு மேல் கல்விக் கடன் அனுமதிக்கப்பட்டால், ரூ.10.00 லட்சம் வரையிலான வரம்பிற்கு விதிக்கப்படும் வட்டிக்கு மட்டுமே வட்டி மானியம் கிடைக்கும்.

ரூ.7.50 லட்சம் வரை அனுமதிக்கப்படும் கடனுக்கு பிணைய பாதுகாப்பு அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதம் தேவையில்லை. எவ்வாறாயினும், கடனின் இந்தப் பகுதியானது கல்விக் கடனுக்கான கிரெடிட் கேரண்டி ஃபண்ட் திட்டத்தின் (CGFSEL) கீழ் உத்தரவாதத்தைப் பெறத் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தடைக்காலம் வரை வட்டி மானியம் கிடைக்கும்.

தடை காலம் வரை வசூலிக்கப்படும் வட்டி இந்திய அரசால் ஏற்கப்படும். கால அவகாசம் முடிந்த பிறகு, நிலுவையில் உள்ள கடன் தொகைக்கான வட்டியை, தற்போதுள்ள கல்விக் கடன் திட்டத்தின்படி, அவ்வப்போது திருத்தப்படும்படி மாணவர் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் முதன்மை தவணை மற்றும் தடைக்காலத்திற்கு அப்பாற்பட்ட வட்டியை ஏற்றுக்கொள்வார்.

வட்டி மானியம் இந்தியாவில் முதல் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டப்படிப்புகள் / டிப்ளமோக்களுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும்.

மேலாண்மை ஒதுக்கீட்டின் கீழ் பெறப்பட்ட படிப்புகளுக்கான சேர்க்கைகள் தகுதியற்றவை.

பதோபர்தேஷ் மானியம்

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதுநிலை/ எம்.பில்/ பிஎச்.டி. படிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட கல்விக் கடன்களுக்கு தடை காலம் (பாட காலம் + விடுமுறை காலம்) வரை வழங்கப்படும் கல்விக் கடன்களுக்கு வட்டி மானியம் கிடைக்கிறது. வெளிநாடுகளில் படிப்புகள்.

குடும்பம்/பெற்றோரின் ஆண்டு வருமானம் தற்போது ரூ.6.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் (அவை அவ்வப்போது திருத்தப்படலாம்) திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள்.

மாநில/யூனியன் பிரதேசத்தில் அறிவிக்கப்பட்ட அதிகாரியிடமிருந்து வருமானச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ரூ.20.00 லட்சம் வரையிலான கல்விக் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டித் தொகைக்கு வட்டி மானியம் கிடைக்கும். ரூ.20.00 லட்சத்திற்கு மேல் கல்விக்கடன் அனுமதிக்கப்பட்டால், ரூ.20.00 லட்சம் வரையிலான வரம்பிற்கு விதிக்கப்படும் வட்டிக்கு மட்டுமே வட்டி மானியம் கிடைக்கும்.

தடைக் காலத்தின் போது வட்டியை முன்கூட்டியே செலுத்துவதில் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தில் 1% வட்டி குறைப்பின் பலன் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள், கடனின் காலத்தில் இந்திய குடியுரிமையை துறந்தால் அவர்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படாது.

தடை காலம் வரை வசூலிக்கப்படும் வட்டி இந்திய அரசால் ஏற்கப்படும். கால அவகாசம் முடிந்த பிறகு, நிலுவையில் உள்ள கடன் தொகைக்கான வட்டியை, தற்போதுள்ள கல்விக் கடன் திட்டத்தின்படி, அவ்வப்போது திருத்தப்படும்படி மாணவர் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் முதன்மை தவணை மற்றும் தடைக்காலத்திற்கு அப்பாற்பட்ட வட்டியை ஏற்றுக்கொள்வார்.

மாணவர்கள் படிப்பின் 1 ஆம் ஆண்டிலேயே திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க வேண்டும். 2ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் பெறப்படும் புதிய விண்ணப்பங்கள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

ஐபிஏ அறிவித்தபடி 2022-23 முதல் இந்தத் திட்டம் நிறுத்தப்படும். எவ்வாறாயினும், 31.03.2022 நிலவரப்படி தற்போதுள்ள பயனாளிகள், தற்போதுள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்க, கடனுக்கான தடைக் காலத்தின்போது வட்டி மானியத்தைத் தொடர்ந்து பெறுவார்கள்.

ACSISOBCEBC மானியம்

IBA திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட வெளிநாடுகளில் உயர் படிப்புக்கான கல்விக் கடன்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும்.

இத்திட்டத்தின் கீழ் வட்டி மானியம் முதுநிலை அல்லது பிஎச்.டி நிலைகளுக்கு தகுதியான மாணவர்களுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எந்தவொரு காரணத்திற்காகவும் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களுக்கு அல்லது ஒழுக்கம் அல்லது கல்வி அடிப்படையில் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களுக்கு வட்டி மானியம் கிடைக்காது.

தடைக் காலம் (பாடகாலம் + விடுமுறை காலம்) காலத்தில் கல்விக் கடன்களுக்கு வசூலிக்கப்படும் வட்டி மானியமாக வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர் முதன்மைத் தவணைகளையும், தடைக்காலத்திற்கு அப்பாற்பட்ட வட்டியையும் செலுத்துவார்.

கல்விக் கடன் ரூ.20.00 லட்சத்திற்கு மேல் அனுமதிக்கப்பட்டால், வட்டி மானியக் கோரிக்கைக்காக மட்டுமே தகுதியான கடன் கூறு ரூ.20.00 லட்சமாக கணக்கிடப்படும்.

இத்திட்டம் முதுகலை (PG டிப்ளமோ உட்பட), M.Phil மற்றும் Ph.D படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.

மாணவர் தொடரும் படிப்பு ஓரளவு இந்தியாவிலும், ஒரு பகுதி வெளிநாட்டிலும் இருந்தால், வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் பட்டம் வழங்கினால், அந்த படிப்பு வட்டி மானியத்திற்கு தகுதியுடையதாக இருக்கும்.

இரண்டு இலக்கு குழுக்களுக்கு வட்டி மானியம் வழங்க திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது; ஓபிசி மற்றும் ஈபிசி.

ஓபிசியினருக்கான வருமான உச்சவரம்பு ரூ.8.00 லட்சம் பா, மற்றும் ஈபிசிகளுக்கு ரூ.5.00 லட்சம் பா தற்போது அவ்வப்போது திருத்தப்படலாம்.

வருமான உச்சவரம்பை நிர்ணயிக்க மாநில அரசு/ஐடிஆர் படிவங்கள்/படிவம் 16/தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் ஆகியவற்றால் நியமிக்கப்பட்ட தகுந்த அதிகாரத்தால் வழங்கப்படும் வருமானச் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படும். கடன் விண்ணப்பத்தின் போது சமர்ப்பிக்கப்பட்ட வருமானச் சான்றிதழானது ஆண்டு வருமானச் சான்றாகக் கருதப்படும். அடுத்தடுத்த அதிகரிப்பு/குறைவு தகுதியில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

OBC களுக்கான திட்டத்திற்கு, OBC களின் மத்திய பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் (அந்தந்த மாநில பட்டியல்கள் பின்பற்றப்படாது). தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட புரோஃபார்மாவில் OBC சான்றிதழைப் பெற வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள், கடனின் காலத்தில் இந்தியக் குடியுரிமையை விட்டுக்கொடுத்தால், அவர்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படாது.

The post ’’கல்விக் கடன் – மானியத் திட்டங்கள்..!’’ இந்தியன் வங்கியின் அறிவிப்பு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4/feed/ 0