Madras Murasu

India achieves a major milestone at the Codex Alimentarius Commission with global standards approved for large cardamom, coriander, and vanilla.

கோடெக்ஸ் ஆணையத்தில் இந்தியா புதிய மைல்கல்: 3 மசாலாப் பொருட்களுக்கு உலகத் தரநிலைகள் அங்கீகாரம்

மசாலாப் பொருட்களுக்கான மூன்று உலகளாவிய தரநிலைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம், கோடெக்ஸ் ஆணையத்தில் இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது

2026 ஜூலை 6 முதல் 10 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் ஆணையத்தின் 49 -வது அமர்வில், பெரிய ஏலக்காய், கொத்தமல்லி, வெனிலா ஆகியவற்றுக்கான மூன்று கோடெக்ஸ் தரநிலைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம், சர்வதேச உணவுத் தர நிர்ணயத்தில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. மேலும், புதிய உணவுப் பொருட்களுக்கான இடர் பகுப்பாய்வு குறித்து புதிதாக அமைக்கப்பட்ட மின் பணிக்குழுவின் இணைத் தலைவராகப் பணியாற்றுவதற்கான இந்தியாவின் கோரிக்கையையும் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இது, சர்வதேச உணவுத் தரநிலைகளின் வளர்ச்சியில் நாட்டின் வளர்ந்து வரும் தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.

ஐநா உணவு- விவசாய அமைப்பு, உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றால் கூட்டாக நிறுவப்பட்ட கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் ஆணையம் நுகர்வோர் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் உணவு வர்த்தகத்தில் நியாயமான நடைமுறைகளை உறுதி செய்வதற்கும், அறிவியல் அடிப்படையிலான உணவுப் பாதுகாப்புத் தர நிலைகளை உருவாக்குவதற்குப் பொறுப்பான சர்வதேச அமைப்பாகும்.

ஐந்து கோடெக்ஸ் பண்டக் குழுக்களில் ஒன்றான, நறுமணப் பொருட்கள், சமையல் மூலிகைகள் மீதான கோடெக்ஸ் குழுவை நடத்துவதன் மூலம் கோடெக்ஸ் நடவடிக்கைகளில் இந்தியா ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் செயலகமாக நறுமணப் பொருட்கள் வாரியம் செயல்படுகிறது. பெரிய ஏலக்காய், கொத்தமல்லி, வெனிலாவுக்கான தரநிலைகள், அக்டோபர் 2025-ல் குவஹாத்தியில் நடைபெற்ற அமர்வின் போது இறுதி செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு, பகுப்பாய்வு, மாதிரி எடுத்தல் முறைகள் மீதான கோடெக்ஸ் குழுவால் தத்தமது அதிகார வரம்புகளில் அவை அங்கீகரிக்கப்பட்டன.

புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகள், இந்த மசாலாப் பொருட்களுக்கான சர்வதேச தர அளவுகோல்களை நிறுவுவதோடு, உலகளாவிய சந்தைகளில் தரத் தேவைகளில் நிலைத்தன்மையை ஊக்குவிப்பதன் மூலம், சுமூகமான வர்த்தகத்திற்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் முன்னணி ஏலக்காய் மற்றும் கொத்தமல்லி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களில் ஒன்றான இந்தியாவிற்கு, இந்தத் தரநிலைகள் சந்தை அணுகலை மேம்படுத்தவும், நியாயமான வர்த்தக நடைமுறைகளை ஊக்குவிக்கவும், ஏற்றுமதிப் போட்டித்திறனை அதிகரிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top