Home செய்திகள் 5 ஆண்டு சட்டப் படிப்பு ஜுன் 6 கடைசி நாள்

5 ஆண்டு சட்டப் படிப்பு ஜுன் 6 கடைசி நாள்

0
5 ஆண்டு சட்டப் படிப்பு ஜுன் 6 கடைசி நாள்

’’ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டக்கல்வி படிக்க, 12 ஆம் வகுப்பு பாஸ் ஆன மாணவ – மாணவியர் விண்ணப்பிக்கலாம் என்று சட்டப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க ஜுன் 6 ஆம் தேதி கடைசி நாள்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பிஏ எல்.எல்.பி, பிபிஏ எல்.எல்.பி, பிகாம் எல்.எல்.பி, பிசிஏ எல்.எல்.பி ஆகிய ஐந்து ஆண்டு (ஹானஸ்) சட்டப்படிப்பில் சேர 12 ஆம் வகுப்பு பாஸ் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி மாணவ-மாணவியர் 60 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். என்ஆர்ஐ உள்ளிட்ட இதர வகுப்பினர் 70 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தரமணியில் உள்ள School of Excellence in Law வளாகத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாக சட்டப் பள்ளியில் படிக்க மேற்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகள், சட்டப் பல்கலைக் கழகத்தின் இணைப்பு பெற்ற தனியார் சட்டக் கல்லூரிகளில் இந்த ஐந்து ஆண்டு சட்டப்படிப்பு படிக்க எஸ்சி / எஸ்டி மாணவர்கள் குறைந்த பட்சம் 40 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதர மாணவர்கள் 45 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இப்படிப்பில் சேர, மே 18 ஆம் தேதியில் இருந்து ஜுன் 6 ஆம் தேதிவரை பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in இணையத்தளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் கலந்தாய்வு முறையில் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here