Home செய்திகள் உதயசந்திரன் ஐஏஎஸ் புதிய பதவி கிடைத்தது..!

உதயசந்திரன் ஐஏஎஸ் புதிய பதவி கிடைத்தது..!

0
உதயசந்திரன் ஐஏஎஸ் புதிய பதவி கிடைத்தது..!

தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலாளராக இருந்த உதயசந்திரன், இடத்துக்கு சில தினங்களுக்கு முன்பு, சித்திக் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார். அப்போது, உதயசந்திரனுக்கு அடுத்து என்ன பொறுப்பு என்று அறிவிக்கப்படவில்லை. இன்று, புதிய பதவி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

டாக்டர் தாரேஷ் அகமது IAS சுகாதாரத் துறை செயலாளராக நியமனம். அனு ஜார்ஜ் IAS கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத்துறை செயலாளராக நியமனம். இவர் கடந்த ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஸ்டாலினின் செயலாளராக (-3) பதவி வகித்தவர்.

மரியம் பல்லவி பல்தேவ் IAS சமூக நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதயச் சந்திரன் IAS TIDCO தமிழ்நாடு தொழில் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் திமுக அரசில் முதலமைச்சரின் செயலாளர் (1), நிதித்துறை செயலாளர் ஆகிய பதவிகளை வகித்தார்.

குமார் ஜயந்த் IAS தமிழ்நாடு செய்தித் தாள் காகித நிறுவனத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குமார் ஜயந்த் உடல் நிலை காரணமாக முக்கிய பணி ஒதுக்கீடு செய்யப்பட வில்லை

கடந்த திமுக அரசில் அதிமுக CM office அதிகாரிகள் கோட்டைக்குள் நியமனம் ஆகாமல் தவிர்க்கப் பட்டார்கள். ஆனால் இம்முறை அனு ஜார்ஜ் கோட்டையிலேயே நியமனம் பெற்றுள்ளார்.

டாக்டர் தாரேஷ் அகமது IAS பெரம்பலூர் கலெக்டராக இருந்த போது மாவட்ட சுகாதர திட்டங்களை சிறப்பாக செயல் படுத்தியவர். இதனால் த நா எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பில் இளம் வயதிலேயே நியமனம் பெற்றவர். MBBS பட்டதாரி சுகாதார துறை செயலாளராவது குறிப்பிடத்தக்கது.

ஆழ்வார்க்கடியான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here