வளர்ச்சியடைந்த இந்தியா கட்டுரை போட்டிக்கு கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 22 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்ச்சியில், மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளையோர் பங்கேற்கும் முதன்மை நிகழ்ச்சி, நாடு முழுவதிலும் இருந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
தேர்வு நடைமுறையின் ஒரு பகுதியாக, வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த வினாடி வினா போட்டியில் 1,45,26,013 பதிவுகள் இடம்பெற்றுள்ளன. வினாடி வினாச் சுற்றில் தகுதி பெற்ற 5.7 லட்சம் இளைஞர்கள் அடுத்த கட்டமான வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த கட்டுரைப் போட்டியில் பங்கேற்கின்றனர். இப்போட்டியில், தங்களது பகுதிக்கான கருப்பொருளில் 500 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை மை பாரத் https://mybharat.gov.in/vbyld-2027 இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வளர்ச்சியடைந்த இந்தியா கட்டுரைப் போட்டியின் இரண்டாம் நிலைக்கான சமர்ப்பிப்பு காலக்கெடுவை மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், அக்டோபர் 22, 2026 வரை நீட்டித்துள்ளது. தகுதியுள்ள இளைஞர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக தங்களது கட்டுரைகளைச் சமர்ப்பிக்கக் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வயது 15 முதல் 29 க்குள் இருப்போர் விண்ணப்பிக்கலாம். Youth in the age group of 15-29 years would be eligible for participation in various tracks of VBYLD-2027. பதிவு செய்ய https://mybharat.gov.in/yuva_register இந்த இணைய தளத்தை பார்க்கலாம்.