Home செய்திகள் க்ரைம் ”ரசம் அண்டாவுக்குள் விழுந்த கல்லூரி மாணவர்” பகுதி நேர பணிக்கு சென்ற போது பரிதாபம்

”ரசம் அண்டாவுக்குள் விழுந்த கல்லூரி மாணவர்” பகுதி நேர பணிக்கு சென்ற போது பரிதாபம்

0
”ரசம் அண்டாவுக்குள் விழுந்த கல்லூரி மாணவர்”  பகுதி நேர பணிக்கு சென்ற போது பரிதாபம்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது20). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பகுதி நேர வேலையாக கேட்டரிங் சர்வீஸ் சென்டர் ஒன்றில் பணிக்கு சென்று வந்தார். 

கடந்த 23-ந் தேதி மாணவர் சதீஷ், மீஞ்சூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த ஒரு விசேஷ நிகழ்ச்சியில் கேட்டரிங் வேலைக்கு சென்று இருந்தார். அங்கு ஒரு பாத்திரத்தில் இருந்த உணவை பரிமாறுவதற்காக சதீஷ் மற்ற தொழிலாளர்களுடன் தூக்கிச்சென்றார். 

அந்த நேரத்தில் அவர் பின்னோக்கி நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது அருகில் இருந்த கொதிக்கும் ரசம் அண்டாவுக்கும் சதீஷ் நிலை தடுமாறி உள்ளே விழுந்தார். இதில் உடல் வெந்து அலறி துடித்த அவரை தொழிலாளர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி சதீஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here