Home அதிகம் வாசிக்கப்பட்டவை குருப் 4 தேர்வில் பாஸ் ஆகனுமா..?’’ இலவச பயிற்சியில் உடனே சேருங்கள்

குருப் 4 தேர்வில் பாஸ் ஆகனுமா..?’’ இலவச பயிற்சியில் உடனே சேருங்கள்

0
குருப் 4 தேர்வில் பாஸ் ஆகனுமா..?’’ இலவச பயிற்சியில் உடனே சேருங்கள்

”மத்திய மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையில் சேர தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கலாம்” என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும் , சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது .

இந்தப் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக 29.01.2024 முதல் 12.02.2024 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட்டு செலக்‌ஷன் லிஸ்ட் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் இணையதளத்தில் வெளியிடப்படும். மார்ச் மாத முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகிறது. என்ற யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து விடியோக்களை பார்த்து படித்து தேர்வில் வெற்றி பெறலாம்

குருப் 4 தேர்வு இலவச விடியோக்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குருப் 4 தேர்விற்கு புதுவாழ்வு அறக்கட்டளையின் சார்பில் இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. புதுவாழ்வு அறக்கட்டளையின் மெட்ராஸ் முரசு யூடியூப் சேனலில் குருப் 4 தேர்வுக்கு போட்டித்தேர்வு பாடம் அடிப்படையில் விடியோக்கள் உள்ளன. அதை இலவசமாக பெற்று குருப் 4 தேர்வில் எளிதில் பாஸ் ஆகலாம். www.youtube.com/@MadrasMurasu  என்ற யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து விடியோக்களை பார்த்து படித்து தேர்வில் வெற்றி பெறலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here