Home அறிந்துகொள்வோம் ’’ஜெகத்ரட்சகன் வீட்டில் ரெய்டு ஏன்..?’’ ஆளுநர் டாக்டர் தமிழிசை

’’ஜெகத்ரட்சகன் வீட்டில் ரெய்டு ஏன்..?’’ ஆளுநர் டாக்டர் தமிழிசை

0
’’ஜெகத்ரட்சகன் வீட்டில் ரெய்டு ஏன்..?’’ ஆளுநர் டாக்டர் தமிழிசை

’’மத்திய அரசின் பழிவாங்கும் நோக்கம் என்றால் ஏன் கட்டு கட்டாக பெட்டி பெட்டியாக பணம் சிக்குகிறது? அவர்கள் சரியாக வருமான வரி செலுத்தியிருந்தால் ஏன் இப்போது இவ்வளவு பணம் சிக்கியிருக்கிறது” என்று டாக்டர் தமிழிசை கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர்.திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர் சந்திப்பு:

கேள்வி : ‘’திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானத்துறை வரித்துறை சோதனை நடைபெறுகிறதே? மத்திய அரசின் பழிவாங்கும் நோக்கம் தானே இந்த வருமான வரி சோதனை என்ற திமுக குற்றம் சாட்டுகிறதே அதை பற்றி உங்களது கருத்து?’’

டாக்டர் தமிழிசை:  ‘’மத்திய அரசின் பழிவாங்கும் நோக்கம் என்றால் ஏன் கட்டு கட்டாக பெட்டி பெட்டியாக பணம் சிக்குகிறது? அவர்கள் சரியாக வருமான வரி செலுத்தியிருந்தால் ஏன் இப்போது இவ்வளவு பணம் சிக்கியிருக்கிறது. வருமானவரித்துறைக்கு வருமான வரி சம்பந்தமான ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஒருவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமான வரி சோதனை நடத்துவது இயல்புதான் அவர்கள் சரியாக வருமான வரி செலுத்தி இருந்தால் அக்கணக்கை சமர்ப்பிக்க வேண்டியது தானே? இதில் மத்திய அரசின் பழிவாங்கும் நோக்கம் என்றால் கணக்கு சரியாக வைத்திருந்தால் ஏன் அவர்கள் பயப்பட வேண்டும்.

கணக்கு காட்டாமல் கணக்கில்லாமல் பணம் வைத்திருந்தால் தானே பயப்பட வேண்டும். எவ்வளவு பணம் பிடிப்பட்டது என்பதை அனைவரும் செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்தானே இருக்கிறோம்.
இது மக்களுடைய படம் தானே? வருமான வரியை முறையாக செலுத்தி இருந்தால் ஏன் இவ்வளவு பணம் சிக்குகிறது? இந்த வருமான வரி சோதனைக்கும் மத்திய அரசிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. வருமான வரி துறையினருக்கு எங்கெல்லாம் சந்தேகம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் வருமான வரி சோதனை நடப்பது வழக்கமான ஒன்றுதான்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here