Madras Murasu

தங்க மோதிரம் திட்டம் மாற்றி அமைக்க கோரிக்கை

’வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பொற்கொல்லர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மாற்றி அமைக்குமாறு லட்சக்கணக்கான பொற்கொல்லர்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று ஆசீர்வாதம் ஆச்சாரி என்று வலியுறுத்தியுள்ளார்.
பாஜக தேசிய நிர்வாகி பேராசிரியர் (முனைவர்) ஆசீர்வாதம் ஆச்சாரி வெளியிட்டுள்ள அறிக்கை :
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது சில கேள்விகள் மற்றும் வேண்டுகோள்:
1. தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டர் அரசின் வெளிப்படையான ஆட்சி முறைப்படி செல்லுமா?
2. ⁠தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்த புள்ளி சட்டம் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா, இல்லையா?
3. ⁠இந்த திட்டத்தை தீட்டும்போது தமிழ்நாடு வாழ் பொற்கொல்லர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் கருத்தில் கொள்ளப்பட்டதா, இல்லையா?
4. ⁠டெண்டரின் செயல்பாட்டை நிறுத்தி வைத்து, வழங்கப்பட்ட வேலை அனுமதியை (work order) ஒத்திவைக்க முடியுமா?
5. ⁠பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டத்தை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் அப்படியே தமிழ்நாட்டில் செயல்படுத்த என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும்?
முதல்வர் அவர்களே, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பொற்கொல்லர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் திட்டத்தை மாற்றி அமைக்குமாறு லட்சக்கணக்கான பொற்கொல்லர்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் (முனைவர்) ஆசீர்வாதம் ஆச்சாரி கூறியுள்ளார்.
’’தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஜாய் அலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகியோருக்கு டெண்டர் வழங்கியது குறித்து எடுக்கப்பட்ட முடிவுகளை தெரிவிக்குமாறு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. பதில் கிடைத்தவுடன் முழு விவரம் இங்கு பதிவிடப்படும்’’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Scroll to Top