Madras Murasu

ஒரு போதும் மன்னிக்காது CM sir..! மு.அப்பாவு

’’கேரளா, ஆந்திரா, கர்நாடகா கைக்கூலிகள் தமிழக முதல்வரை “ஜோக்கராக” வழிநடத்தி பரந்தூர் விமான நிலையப்பணியை சின்னாபின்னமாக்கி, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டை 50 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளி தமிழக இளைஞர்களுக்கு துரோகம் செய்த உங்களை தமிழ்நாடு ஒரு போதும் மன்னிக்காது CM sir !’’ என்று முன்னாள் சபாநாயகர் மு.அப்பாவு கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் மு.அப்பாவு அறிக்கை:

மறைந்த தலைவர் கலைஞர் ஆட்சியில் சேது சமுத்திரத் திட்டம், மதுரவாயில் மேம்பால பணிகள் திட்டம், புதிய தலைமைச் செயலகம் மற்றும் சென்னை அருகே செயற்கைக்கோள் நகரம் போன்ற திட்டங்களை கொண்டு வந்த போதும் அப்பணிகளை நிறைவேற்ற விடாமல் தடுத்த துரோக வரலாற்றை தமிழகம் இன்றும் மறக்கவில்லை.

2006-ல் மீண்டும் கலைஞர் முதல்வரானதும் சென்னை, ஶ்ரீ பெரும்புதூர், ஓசூர் ஆகிய பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் மற்றும் டைடல்(Tidel) பார்க் உருவாக்கப்பட்டு படித்த பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியதோடு பரந்தூரில் விமான நிலையம் அமையவும் வித்திட்டவர் கலைஞர்.

கலைஞரின் கனவு திட்டத்தை முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் 2021-ல் முன்னெடுத்து நிலம் கையகப்படுத்துதல், சென்னை முதல் பரந்தூர் வரை மெட்ரோ விரிவாக்கம், பரந்தூர் முதல் பெங்களூர் வரை 8 வழி பசுமைச் சாலை மற்றும் ஒன்றிய அரசின் அனுமதியுடன் 90% பணிகள் முடிவடைந்த நிலையில், “வெண்ணெய் திரண்டு வந்த போது பால் பானையை உடைத்தது போல்” பரந்தூர் விமான நிலையத்தை உடைத்து விட்டீர்களே CM sir ?

தற்போது கேரளா, ஆந்திரா, கர்நாடகா கைக்கூலிகள் தமிழக முதல்வரை “ஜோக்கராக” வழிநடத்தி பரந்தூர் விமான நிலையப்பணியை சின்னாபின்னமாக்கி, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டை 50 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளி தமிழக இளைஞர்களுக்கு துரோகம் செய்த உங்களை தமிழ்நாடு ஒரு போதும் மன்னிக்காது CM sir !

Scroll to Top