Home வேலை வாய்ப்பு அரசு வேலை வாய்ப்பு “மத்திய அரசு பள்ளியில் 6,329 காலிப் பணியிடம்..! ஆகஸ்ட் 18 கடைசி நாள்

“மத்திய அரசு பள்ளியில் 6,329 காலிப் பணியிடம்..! ஆகஸ்ட் 18 கடைசி நாள்

0
“மத்திய அரசு பள்ளியில் 6,329 காலிப் பணியிடம்..! ஆகஸ்ட் 18 கடைசி நாள்

பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான பழங்குடி மாணவர்களுக்கான தேசியக் கல்வி சங்கம் (நெஸ்ட்) ஈ.எம்.ஆர்.எஸ்-களுக்கான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு ஆட்சேர்ப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது.

டி.ஜி.டி மற்றும் விடுதி காப்பாளர் பதவிக்கான 6329 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஈ.எம்.ஆர்.எஸ் பணியாளர் தெரிவுத் தேர்வு (ஈ.எஸ்.எஸ்.இ) -2023 க்கான அறிவிப்பை நெஸ்ட்ஸ் வெளியிட்டுள்ளது. ( ஏகலைவா உறைவிடப்பள்ளி)

இதன் மூலம் ஈ.எம்.ஆர்.எஸ்.களில் தரமான மனித வளம் நிலைநிறுத்தப்பட்டு, ஈ.எம்.ஆர்.எஸ்.களில் கல்வித் தரத்தை உயர்த்த இந்த சிறப்பு பள்ளி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதற்கான விண்ணப்ப நடைமுறை 19.07.2023-ல் தொடங்கியது.

சி.பி.எஸ்.இ.யுடன் இணைந்து நெஸ்ட்ஸ் இ.எஸ்.இ -2023-ஐ “ஓ.எம்.ஆர் அடிப்படையிலான (கொள்குறி வகை)” முறையில் நடத்துகிறது, இது ஈ.எம்.ஆர்.எஸ்ஸில் ஆசிரியர் (டி.ஜி.டி) மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் (விடுதிக் காப்பாளர்) காலிப் பணியிடங்களை நிரப்புகிறது:

பதவி காலியிடங்கள்

டி ஜி டி 5,660

விடுதிக் காப்பாளர் 669

மொத்தம் 6,329

இணையதள விண்ணப்பங்களின் விரிவான நடைமுறை, தகுதி அளவுகோல்கள் மற்றும் ஒவ்வொரு பதவிக்கும் பாடத்திட்டத்துடன் பிற விவரங்கள் www.emrs.tribal.gov.in. என்ற வலைதளத்தில் கிடைக்கின்றன.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள ஈ.எம்.ஆர்.எஸ்.களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்பு நடைமுறை அறிவிப்பு வெளியாகி விட்டது.

விண்ணப்பங்களைப் ஆன்லைனில் பதிவு செய்யும் இணையதளம் 19.07.2023 முதல் 18.08.2023 வரை செயல்பாட்டில் இருக்கும்.

ஈ.எம்.ஆர்.எஸ் என்பது பழங்குடியின மாணவர்களுக்குக் குடியிருப்பு அமைப்பில் தரமான கல்வியை வழங்குவதற்கான பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் முக்கியத் திட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here