Home செய்திகள் இந்தியா ’’செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு..!’’ அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

’’செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு..!’’ அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

0
’’செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு..!’’ அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, நெஞ்சு வலி ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பைபாஸ் அறு வைச் சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதன்படி செந்தில் பாலாஜிக்கு ஜூன் 21 அன்று அறுவைச் சிகிச்சை செய்வதென காவேரி மருத்துவ மனை திட்டமிட்டுள்ளது. இதற்கு அனு மதி அளித்துள்ள சென்னை உயர் நீதி மன்றம், சிகிச்சைக்கு இடையூறு இல்லாமல், மருத்துவர்களின் ஆலோசனை அடிப்படையில், மருத்துவ மனை வளாகத்திற்கு உள்ளேயே செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

ஆனால், செந்தில் பாலாஜியை தங்கள் இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யவும் வலியுறுத்தி, அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு, மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜென ரல் துஷார் மேத்தா, இம்மனுவை உட னடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

“சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது தவறு. அவர் ஓர் அதிகாரமிக்க அமைச்சர் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி யிருந்தோம். அது நிராகரிக்கப்பட்டது.

மேலும், அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் 8 நாட்கள் மருத்துவ மனைக்கு வெளியே அழைத்து செல் லாமல் அங்கேயே வைத்து விசா ரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்றா கும். எனவே, செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்.

மேலும், உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு இன்றே விசாரிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். ஆனால், இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறை கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், ‘அமலாக்கத்துறை மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். ஆனால், இது கோடைக்கால சிறப்பு அமர்வு என்பதால், அவசர வழக்காக எடுத்து உடனே விசாரிக்க முடியாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசனை பெற்று, நாளை அல்லது நாளை மறுநாள் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று நீதிபதிகள் கூறி விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here