Home விளையாட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி தொடருமா? – ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி தொடருமா? – ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்

0
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி தொடருமா? – ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோதும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை எதிர்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here