Home செய்திகள் இந்தியா ’’வேலைவாய்ப்பை அள்ளித்தரும் படிப்புகள் – புதுவை சமுதாயக் கல்லுரியில் மாணவர் சேர்க்கை..!’’ ஜூன் 30 கடைசி நாள்

’’வேலைவாய்ப்பை அள்ளித்தரும் படிப்புகள் – புதுவை சமுதாயக் கல்லுரியில் மாணவர் சேர்க்கை..!’’ ஜூன் 30 கடைசி நாள்

0
’’வேலைவாய்ப்பை அள்ளித்தரும் படிப்புகள் – புதுவை சமுதாயக் கல்லுரியில் மாணவர் சேர்க்கை..!’’ ஜூன் 30 கடைசி நாள்

புதுவைப் பல்கலைக்கழகச் சமுதாயக் கல்லுரியில் 2023-24 – ஆம் கல்வி ஆண்டு இளங்கலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விண்ணப்பிக்க ஜுன் 30 கடைசி நாள் ஆகும்.

லாஸ்பேட்டையில் உள்ள புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் 2023-24 -ஆம் கல்வி ஆண்டிற்க்கான இளங்கலை, முதுநிலை பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி (01-06-2023) வியாழக்கிழமை முதல் ஜூன் மாதம் முப்பதாம் தேதி வெள்ளிக்கிழமை (30-06-2023) வரை சமுதாயக் கல்லூரியின் இணையதளமான http://pucc.edu.in மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுவைப் பல்கலைக்கழகச் சமுதாயக் கல்லூரியில் படித்து பயன்பெற விரும்புபவர்கள் புதுவைப் பல்கலைக்கழகச் சமுதாயக் கல்லூரியின் இணையதளமான http://pucc.edu.in மூலமாக விண்ணப்பித்து ஜூலை மாதம் நடைபெறவிருக்கின்ற மாணவர் சேர்க்கையில் கலந்து கொண்டு பயன் பெறலாம். புதுவைப் பல்கலைக்கழகச் சமுதாயக் கல்லூரியில் கற்றுக் கொடுக்கப்படும் இளங்கலை, முதுநிலை பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் பற்றிய விவரங்கள் சமுதாயக்கல்லூரியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்டும், புதுவை மாநில இளைஞர்களின் எதிர்கால நலனில் மிகுந்த அக்கறை கொண்டும் செயல்பட்டு வரும் புதுவைப் பல்கலைக்கழகச் சமுதாயக்கல்லூரியில் இளங்கலை கணினி பயன்பாடுகள், வணிகநிர்வாகம், உயிர் வேதியியல், ஊடகவியல், வணிகவியல், உடற்கல்வியியல் மற்றும் இளங்கலை மருத்துவத் தொழில்நுட்பப் படிப்புகளான இருதய பரிசோதனை தொழில்நுட்பம், கதிர்வீச்சு மற்றும் நிழற்பட தொழில்நுட்பம், கண் பார்வை தொடர்பான மருத்துவத் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் சேவைத்தொழில்நுட்பம், கணினி மென்பொருள் மேம்பாட்டுத்தொழில்நுட்பம் போன்ற படிப்புகளும் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம், மருத்துவமனை செவிலியர், சுகாதார ஆய்வாளர், நோய்த்தொற்று அறிவியல், பத்திர எழுத்தர், யோகா, நாடகக்கலை,

திரைப்பட நடிப்புக்கலை, இந்திய இசைக்கலை, கர்நாடக இசை (பாட்டு), பரதநாட்டியக் கலை, வரைகலை, ஓவியக்கலை, நுண்கலை மற்றும் நிகழ்த்துக்கலை ஆசிரியர் பயிற்சி, ஹிந்தி, பிரெஞ்சு, சமஸ்கிருதம், ஆங்கிலம், ஜோதிடவியல், தோட்டக்கலை, ஆடை அலங்கார வடிவமைப்பு, இயற்கை அழகு சாதனக்கலை, உடற்பயிற்சி மேலாண்மை, ஆயுர்வேத உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து, இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல், போன்றவற்றில் ஒரு வருடப்பட்டயம் மற்றும் ஆறுமாதம் சான்றிதழ் படிப்புகளும் மிகச்சிறந்த அனுபவமிக்க கல்வியாளர்களால் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

புதுவைப் பல்கலைக்கழகச் சமுதாயக் கல்லூரியில் பயின்று தேர்ச்சியடைந்த மாணவர்களில் பெரும்பாலானோர் புதுவை மற்றும் தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் தனியார் துறைகளிலும் மிக உயரிய ஊதியத்துடன் பணியாற்றி வருகின்றனர். ஏழை எளிய மாணவர்களின் கல்வித்தர உயர்வையும் அடுத்த தலைமுறைக்கான வாழ்வாதாரத்தையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புதுவைப் பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சியும் முதுநிலைப் பட்டயப்படிப்புகளில் சேர்வதற்கு இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிவதற்கு லாஸ்பேட்டையில் உள்ள புதுவைப் பல்கலைக்கழக சமுதாயக்கல்லூரியில் செயல்படும் மாணவர் சேர்க்கை உதவிமையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here