Home சினிமா ’’துஷ்மன் 25 ஆண்டுகள்; கஜோல் ஸ்பெஷல் போட்டோ..!’’ ரசிகர் கண்களுக்கு விருந்து

’’துஷ்மன் 25 ஆண்டுகள்; கஜோல் ஸ்பெஷல் போட்டோ..!’’ ரசிகர் கண்களுக்கு விருந்து

0
’’துஷ்மன் 25 ஆண்டுகள்; கஜோல் ஸ்பெஷல் போட்டோ..!’’ ரசிகர் கண்களுக்கு விருந்து

இந்தி திரை உலகின் கருப்பழகி. தமிழில் மின்சாரக் கண்ணா படத்தில் பிரபுதேவா, அரவிந்தசாமி கூட்டணியில் நடித்து புகழ் பெற்றவர். ஆனாலும், ஷாருக்கான் – கஜோல் ஜோடிதான் இந்திய திரை உலகின் சூப்பர் ஜோடி என்று அனைவராலும் பாராட்டப்படுகிறது. 1998-ம் ஆண்டு சைக்காலாஜிக்கல் த்திரில்லர் ’துஷ்மன்’ இந்தி படத்தில் கஜோல் புகழ் பெற்றார். அசுதோஷ் ராணா கதாநாயகன். அந்த படம் 1998-ம் ஆண்டு மே 29-ம் தேதி வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இரட்டை சகோதரிகள் வேடத்தில் கஜோல் நடித்தார். சோனியா, நைனா என்று அந்த கதாப்பாத்திரங்களுக்கு பெயர். ஒன்று நீண்ட முடி. இன்னொன்று பாப் கட். இந்த இரண்டுமே வித்தியாசமான தோற்றம் என்று ரசிகர்களால் அப்போது கொண்டாடப்பட்டது. இப்போது 48 வயதை தொட்டிருக்கும் கஜோல், எப்போதுமே பாப் கட் சிகை அலங்காரத்தை தனது மோசமான தோற்றம் என்று விழாக்களில் சொல்வது உண்டு.

முகேஷ் பட் மற்றும் பூஜா பட் தாயாரித்த துஷ்மன் படம், அந்த வருடத்தில் ஏழாவது அதிக வசூல் செய்த இந்தி படம் என்ற பட்டியலில் சேர்ந்து கொண்டது. இந்தப் பட வெற்றியைத் தொடர்ந்து இந்தி பட உலகில் தனக்கென்று தனி இடத்தை இன்று வரை தக்க வைத்துள்ளார் கஜோல். துஷ்மன் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அந்த படத்தின் கதாபாத்திரத்தை நினைவு கூறும் வகையில் இரட்டை வேடம் தரித்த படத்தை அவரே வெளியிட்டுள்ளார். அதைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here