Home செய்திகள் ’’நடிகை ஷகிலா ஒப்பன் டாக்..!’’ மலையாள டிவி நிகழ்ச்சியில் அசத்தல்

’’நடிகை ஷகிலா ஒப்பன் டாக்..!’’ மலையாள டிவி நிகழ்ச்சியில் அசத்தல்

0
’’நடிகை ஷகிலா ஒப்பன் டாக்..!’’ மலையாள டிவி நிகழ்ச்சியில் அசத்தல்

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய படங்களில் ஒரு காலத்தில் கலக்கியவர் நடிகை ஷகீலா. இவர் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அடுக்கடுக்காக ‘ஏ’கப்பட்ட படங்களில் நடித்தவர். ஒரு காலகட்டத்தில் மலையாளத்தில் பிரபல நடிகர்கள் நடித்த படங்களையே இவரது படம் வசூலில் தோற்கடித்த சம்பவங்களும் உண்டு. ஷகிலா படங்களுக்கு தடை போடும் அளவுக்கு நிலைமை போனதும் உண்டு.

அந்த, ‘ஏ’ படங்களில் நடிப்பதில் இருந்து இப்போது ஒதுங்கி இருந்தாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். தனியார் விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், ஷகீலா ஸ்டார் மேஜிக் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஷகீலா தனது வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்து பேசினார்.

அதில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றது. அதன் விபரம் வருமாறு: பொதுதகவல் களஞ்சியமான விக்கிபீடியாவில் தன்னைப் பற்றி எழுதப்பட்டு உள்ளதில் பல விஷயங்கள் தவறாகவே உள்ளது. அதில் எனக்கு சொந்தமாக வீடும், பிஎம்டபிள்யூ காரும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் நான் வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன். 40 வருடங்களாக அதே வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறேன்.

ஒரு நாளைக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் காலம் இருந்தது.  நடிப்பின் மூலம் நிறைய சம்பாதித்துள்ளேன். ஆனால் என் சகோதரி எல்லாவற்றையும் எடுத்துவிட்டார். வீட்டில் பணத்தை வைத்தால் வருமான வரித்துறையினர் வருவார்கள். பத்திரமாக வைத்துக் கொள்வதாக கூறினார். இதனால் மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கினேன்.

எந்த இளைஞர்களும் எனது படத்தை கண்டிப்பாக பார்க்கும்படி நான் கூறவில்லை. 18+ கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னால், ஏன் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். நீங்கள்தான் தப்பு செய்தீர்கள். மஞ்சு வாரியர் தனக்கு மிகவும் பிடித்த நடிகை. அவர் தனது படங்களை பார்ப்பது வழக்கம்.

மோகன்லாலைப் பற்றி நினைக்கும் போது, சோட்டா மும்பையில் நடித்தது தான் நினைவுக்கு வருகிறது. அதே சமயம் தற்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வந்தேன். நான் சுமார் ஆறு பள்ளிகளில் படித்தேன். அதனால் எனக்கு ஆங்கிலம் நன்றாக பேசத் தெரியும். அம்மா தெலுங்கு பேசுவார். அப்பா உருது பேசுவார்.

சென்னையில் பிறந்து வளர்ந்ததால் தமிழும் தெரியும். மலையாள படங்களில் நடிக்க வந்ததும் மலையாளம் கற்றுக்கொண்டேன். எனக்கு கேரள உணவு பிடிக்கும். கிடைக்கும் போதெல்லாம் கஞ்சி, சம்மந்தி, பருப்பு சாப்பிடுவேன். கின்னார தும்பி என் வாழ்க்கையை மாற்றிய படம். இப்போது அந்த சீரியலில் ஊர்மிளாவாக சுரபியும் சுஹாசினியும் நடிக்கிறார்கள். அதையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று உற்சாகமாக பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here