Madras Murasu

காசி தமிழ் சங்கமம்: ‘திருக்குறள் பயில்வோம்’ திட்டம்! ரூ.10,000 உதவித்தொகை

மத்திய கல்வி அமைச்சகத்தின் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ‘திருக்குறள் பயில்வோம்’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழின் செம்மொழி இலக்கியமான திருக்குறளின் அறநெறி, சமூக மற்றும் தத்துவக் கருத்துகளைப் பல்வேறு மொழிகளில் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் உயர்கல்வி மாணவர்களுக்கு 1,000 பயிற்சிப் பணி வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பயிற்சிப் பணிக்கும் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகள் பதிவு செய்ய கடைசி நாள்: 18.11.2026
நிகழ்வு கடைசித் தேதி
உயர்கல்வி நிறுவனங்கள் பதிவு 18.11.2026
நிறுவனங்கள் தேர்வு 19.11.2026
மாணவர்களுக்கான திருக்குறள் மதிப்பீடு 23.11.2026
தேர்வு செய்யப்பட்ட மாணவர் பெயர் பதிவு 24.11.2026
தொடக்க நிகழ்ச்சி 28.11.2026
நிறைவு நிகழ்ச்சி 12.12.2026
பயிற்சி மற்றும் ஆய்வுப் பணி 15.12.2026 – 14.01.2027
Kashi Tamil Sangamam 2.0:बनारस घराने और दक्षिण के संगीत का संगम, कलाकारों के स्वर ताल से तरंगित हो उठा घाट - Kashi Tamil Sangamam 2023 Fourth Evening Highlight Of Banaras Gharana And South Indian Music - Amar Ujala Hindi News Liveயாரெல்லாம் பங்கேற்கலாம்?
  • இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் பங்கேற்கலாம்.

  • ஒவ்வொரு மாநிலத்திலும் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு நிறுவனம் பங்கேற்கும் கல்லூரிகளைத் தேர்வு செய்யும்.

  • தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு கல்லூரியும் மாணவர்களிடம் திருக்குறள் தொடர்பான மதிப்பீடு நடத்தும்.

  • தகுதி மற்றும் திறமை அடிப்படையில் ஒரு மாணவர் தேர்வு செய்யப்படுவார்.

  • தேர்வு செய்யப்படும் மாணவருக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்.

முக்கியக் குறிப்பு: மாணவர்கள் நேரடியாகத் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்கும் திட்டம் அல்ல. கல்லூரி மூலமாகவே மாணவர் தேர்வு செய்யப்படுவார்.

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு என்ன பணி?
  1. திருக்குறளைத் தங்களுக்குத் தெரிந்த மொழியில் படித்தல்.

  2. இணையவழி கல்வி வழிகாட்டுதல் வகுப்புகளில் பங்கேற்றல்.

  3. திருக்குறள் தொடர்பாக 4 முதல் 10 பக்கங்கள் கொண்ட ஆய்வுக் கட்டுரை அல்லது ஆய்வுக் குறிப்பைத் தயாரித்தல்.

  4. கல்லூரியில் ஒரு மணி நேரம் திருக்குறள் தொடர்பான விளக்க உரை நிகழ்த்துதல்.

  5. ஆய்வுப் பணியை 14.01.2027-க்குள் சமர்ப்பித்தல்.

இதற்கான தகுதியான மாணவர்களுக்கு விதிமுறைகளின்படி ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்.

22 இந்திய மொழிகளில் திருக்குறள்!

இந்தத் திட்டத்தில் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் திருக்குறளைக் கற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பயிற்சிப் பணிக்குத் தேர்வு செய்யப்படாத மற்ற மாணவர்களும் இணையவழி திருக்குறள் வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

https://www.kts.cict.in/ https://cict.in/cict2023/

திருக்குறளின் பெருமையை இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் இந்த முயற்சியில் கல்லூரிகள் உடனடியாகப் பதிவு செய்வது அவசியம். குறிப்பாக நவம்பர் 18-ம் தேதி நிறுவனங்களின் பதிவுக்கான கடைசி நாள் என்பதால் கல்லூரி நிர்வாகங்கள் விரைந்து செயல்பட வேண்டும்.

Scroll to Top