இதன்படி, ஒரே டாஸ்மாக் கடையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்கள் கட்டாயமாகப் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். இந்தப் புதிய கொள்கை 2026 நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி நடைபெற்ற டாஸ்மாக் இயக்குநர் குழுவின் 224-வது கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என 38 மாவட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும்.
முதற்கட்டமாக நவம்பர் மாதத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒருமுறை பணியாளர் எண்ணிக்கை சீரமைப்பு மேற்கொள்ளப்படும். நவம்பர் 1-ஆம் தேதி நிலவரப்படி ஒரே கடையில் மூன்று ஆண்டுகளைக் கடந்த ஊழியர்கள் பணியிட மாற்றத்துக்கு அடையாளம் காணப்படுவார்கள். நவம்பர் 30-ஆம் தேதிக்குள் புதிய பணியிடத்தில் அவர்கள் சேர வேண்டும்.
மேலும், கடைகளின் தினசரி விற்பனை அடிப்படையில் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
-
A பிரிவு: தினசரி விற்பனை ₹10 லட்சத்துக்கு மேல் – 9 ஊழியர்கள்.
-
B பிரிவு: தினசரி விற்பனை ₹5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை – 8 ஊழியர்கள்.
-
C பிரிவு: தினசரி விற்பனை ₹5 லட்சம் வரை – 5 ஊழியர்கள்.
2028 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் பணியிட மாற்றக் கலந்தாய்வு நடைபெறும். மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ஒரே கடையில் மூன்று ஆண்டுகளைக் கடந்தவர்கள் கட்டாயமாக இந்தக் கலந்தாய்வில் இடம்பெற்று பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள்.
ஊழல் முறைகேடுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கையா அல்லது ஊழியர்களுக்குப் புதிய பணிச்சுமையா? புதிய கொள்கையின் நடைமுறை விளைவுகள் இனிமேல்தான் தெரியவரும்.
