தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் இன்று ( 10.07.2024 ) அன்று வெளியானது. இந்த ரேங்க் பட்டியலில் ஏதேனும் தவறு இருப்பதாக கருதும் மாணவ – மாணவிகள் ஜுலை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சேவை மையம் வாயிலாக திருத்தம் செய்து கொள்ளலாம்.
அரசு பள்ளிகளில் பயின்ற சிறப்பு ஒதுக்கீடு (மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர், விளையாட்டு வீரர்) பிரிவினருக்கு ஜுலை 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் ஆன்லைன் மூலமாக கவுன்சலிங் நடைபெறும்.
பொதுப் பிரிவில் சிறப்பு இட ஒதுக்கீடு (மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர், விளையாட்டு வீரர்) பிரிவினருக்கான கலந்தாய்வு 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும்.
பொதுக்கல்வி, தொழில் முறைக் கல்வி, அரசு பள்ளிகளில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு பிரிவு மாணவர்களுக்கான பொதுக்கலந்தாய்வு ஜுலை 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெறும். துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6, 7,8 ஆகிய நாட்களில் நடக்கும்.
எஸ்.சி.ஏ., காலியிடம், எஸ்.சி வகுப்பிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10, 11 ஆகிய நாட்களில் நடக்கும். கலந்தாய்வு இறுதி நாள் செப்டம்பர் 11 ஆம் தேதி ஆகும்.
கலந்தாய்வு அட்டவனை முழுவிபரத்த்தை காண TNEASchedule_2024 இங்கே கிளிக் செய்யவும்.