Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#Yoga - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Fri, 19 Jul 2024 14:05:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’ எம். டி. யோகா ; இயற்கை மருத்துவம் !’’ சேர்க்கை அறிவிப்பு வெளியானது https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%be-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%25af%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25ae%25be-%25e0%25ae%2587%25e0%25ae%25af%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%be-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4/#respond Fri, 19 Jul 2024 14:05:25 +0000 https://madrasmurasu.com/?p=9352 ’’யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு படிக்க (எம்.டி) ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்’’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டிலுள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி, சென்னை மற்றும் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம், செங்கல்பட்டு கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு, 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான எம். டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ […]

The post ’’ எம். டி. யோகா ; இயற்கை மருத்துவம் !’’ சேர்க்கை அறிவிப்பு வெளியானது first appeared on Madras Murasu.

]]>
’’யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு படிக்க (எம்.டி) ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்’’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டிலுள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி, சென்னை மற்றும் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம், செங்கல்பட்டு கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு, 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான எம். டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை ”www.tnhealth.tn.gov.in”  என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
விண்ணப்பங்கள் இவ்வியக்குநரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்படமாட்டாது. மேலும், அடிப்படைத்தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு ”www.tnhealth.tn.gov.in” என்ற வலைதள முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 21.07.2024 முதல் 05.08.2024 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள்: 05.08.2024 மாலை 05.30 மணி வரை.
விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிக்கவேண்டிய முகவரி: ”செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600 106.”
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகத்தின் தேர்வுக்குழுவால், நடத்தப்படும் நுழைவு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்   மட்டுமே எம். டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான சேர்க்கை நடைபெறும்.
தற்காலிக நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், சென்னை – 600 106 அவர்களால் www.tnhealth.tn.gov.in” என்ற வலைதள முகவரியின் மூலமாக பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும் மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வர வேண்டும்.
கலந்தாய்வு தேதி, இடம் மற்றும் அனைத்து விவரங்களும் வலைதள முகவரி மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும். கலந்தாய்வு அன்று நேரில் வரத்தவறியவர்கள் தங்களது வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: 3000/- ரூபாய்.  விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை எஸ். பி. ஐ. இ-சேவை வாயிலாக மட்டுமே செலுத்தவேண்டும்.
கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், தபால்/கூரியர் சேவையினால் ஏற்படும் காலதாமதத்திற்கு தேர்வுக்குழு பொறுப்பாகாது.

The post ’’ எம். டி. யோகா ; இயற்கை மருத்துவம் !’’ சேர்க்கை அறிவிப்பு வெளியானது first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%be-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4/feed/ 0
”ஆரோக்கியமான  குடிமக்கள், வலுவான தேசம்..!” – இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b0%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond Thu, 22 Jun 2023 03:35:45 +0000 https://madrasmurasu.com/?p=4325 ”பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை காரணமாக யோகாவிற்கு  உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறியுள்ளார்.   அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டாக்டர் எல்.முருகன், இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு போர்ட்ப்ளேரில் யோகா தொடர்பான முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், காஷ்மீர் முதல் லட்சத்தீவுகள் வரை இன்று அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொள்கிறார்கள் […]

The post ”ஆரோக்கியமான  குடிமக்கள், வலுவான தேசம்..!” – இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் first appeared on Madras Murasu.

]]>
”பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை காரணமாக யோகாவிற்கு  உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறியுள்ளார்.

 

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டாக்டர் எல்.முருகன், இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு போர்ட்ப்ளேரில் யோகா தொடர்பான முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், காஷ்மீர் முதல் லட்சத்தீவுகள் வரை இன்று அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொள்கிறார்கள் என்றால் அது பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சியால் தான் என்று குறிப்பிட்டார்.

அந்தமான் நிகோபார் தீவுகளிலும் நாம் யோகாவை கடைபிடித்து வருகிறோம், இது யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பொருள்படக் கூடிய வசுதைவ குடும்பகம் என்ற உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று அமைச்சர் கூறினார். யோகா என்பது நமது நாட்டின் பெருமிதம் என்றும், நமது நாட்டிற்கு புகழ் சேர்க்கக் கூடிய இயக்கமாக அது மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.     

யோகாசனங்கள் மூலமாக நமது மனதையும் உடலையும் ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் வைத்துக் கொள்ள இயலும் என்று குறிப்பிட்ட அமைச்சர், அனைவரும் யோகாவை  கடைபிடித்து அன்றாட வாழ்வில் உடலைக் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமானதாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  ஆரோக்கியமான  குடிமக்கள், வலுவான தேசத்திற்கு வழி வகுக்கிறார்கள் என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

போர்ட் ப்ளேரில் உள்ள  மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஆயுஷ் துறையினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், அந்தப் பகுதியின் துணை நிலை ஆளுநர்  அட்மிரல் டி கே ஜோஷி மற்றும் அந்தமான் நிகோபார் நிர்வாக அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். அந்தமான் நிகோபார் தீவுகளில் 42 இடங்களி்ல் யோகா தினக் கொண்டாட்டங்கள் உற்சாகத்துடன் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து போர்ட் ப்ளேரில் உள்ள தொழில்துறை பிரதிநிதிகளை டாக்டர் எல்.முருகன் சந்தித்துப் பேசினார்.  இந்த தீவுப் பகுதியில் வர்த்தகத்துறையின் வளர்ச்சிக் குறித்து அவர்கள், தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்த கொண்டதோடு பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

     

மத்திய அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், அரசின் சாதனைகள் குறித்து அமைச்சர் எடுத்துரைத்தார். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை என்ற குறிக்கோளின் அடிப்படையில் அரசு முன்னேறிச் செல்வதாக   அமைச்சர் அப்போது கூறினார்.

வளர்ச்சி என்பது பெருநகரங்களுக்கு மட்டுமானது அல்ல என்றும், தொலைதூரப் பகுதிகளுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு மத்திய அரசு அனைத்துவிதமான ஆதரவையும் அளித்து வருவதாக கூறிய அமைச்சர், இந்த தீவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் முன்னேற்றமும் சாட்சிகளாக அமைந்துள்ளன என்றார்.

     

மாவட்ட அளவிலான மருத்துவமனைக் கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாகவும், விரைவில் அதன் பணிகள் முடிவடைந்து மருத்துவமனை செயல்பாட்டிற்கு வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச விமான நிலைய முனையம் இங்கே சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இது போன்ற வளர்ச்சிப் பணிகள் தென்கிழக்கு நாடுகளுடன் சமூக பொருளாதார உறவுகளை மேம்படுத்த உதவும் என்றும் கூறினார்.

இதற்கிடையே, உள்ளூர் மீனவர்களை சுவராஜ்தீப்பில் (ஹேவ்லாக்) சந்தித்த அமைச்சர், அந்தப் பகுதியில், பனிக்கட்டி தொழிற்சாலையை ஏற்படுத்தவும், குளிர்பதன வசதிகள் கொண்ட சேமிப்புக் கிடங்கை ஏற்படுத்தவும் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்று டாக்டர் எல்.முருகன் தெரிவித்தார்.

The post ”ஆரோக்கியமான  குடிமக்கள், வலுவான தேசம்..!” – இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
’’அமெரிக்கா செல்வது ஏன்..?’’ பிரதமர் மோடி வெளியிட்ட தகவல் https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%258f%25e0%25ae%25a9%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d/#respond Tue, 20 Jun 2023 08:37:12 +0000 https://madrasmurasu.com/?p=4240 அமெரிக்கா, எகிப்து பயணத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அவரின் புறப்பாடு அறிக்கை:  அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன், முதல் பெண்மணி டாக்டர். ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். இந்த சிறப்பு அழைப்பு, நமது ஜனநாயக நாடுகளுக்கிடையிலான வீரியமான உயிர்ப்புமிக்க கூட்டாண்மையின் பிரதிபலிப்பாகும். நான் நியூயார்க்கில் இருந்து எனது பயணத்தைத் தொடங்குகிறேன், அங்கு நான் ஜூன் 21 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில், ஐ.நா தலைவர்கள் […]

The post ’’அமெரிக்கா செல்வது ஏன்..?’’ பிரதமர் மோடி வெளியிட்ட தகவல் first appeared on Madras Murasu.

]]>
அமெரிக்கா, எகிப்து பயணத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அவரின் புறப்பாடு அறிக்கை: 

அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன், முதல் பெண்மணி டாக்டர். ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். இந்த சிறப்பு அழைப்பு, நமது ஜனநாயக நாடுகளுக்கிடையிலான வீரியமான உயிர்ப்புமிக்க கூட்டாண்மையின் பிரதிபலிப்பாகும்.

நான் நியூயார்க்கில் இருந்து எனது பயணத்தைத் தொடங்குகிறேன், அங்கு நான் ஜூன் 21 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில், ஐ.நா தலைவர்கள் மற்றும் சர்வதேச சமுதாயத்தினருடன் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறேன். 2014 டிசம்பர் மாதம் சர்வதேச யோகா தினத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் முன்மொழிவை ஆதரித்த இடத்தில் இந்த சிறப்பு கொண்டாட்டத்தை நான் எதிர்நோக்கியுள்ளேன்.

அதன்பிறகு நான் வாஷிங்டன் டி.சி.க்கு பயணம் செய்யவுள்ளேன். 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு நான் மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பின்னர் பலமுறை அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தப் பயணம் எங்கள் கூட்டாண்மையின் வலிமையையும், பன்முகத்தன்மையையும் வளப்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இந்தியா-அமெரிக்க உறவுகள், துறைகள் தோறும் ஆழமான ஈடுபாடுகளுடன் கூடிய பன்முகத்தன்மை கொண்டவை ஆகும். பொருட்கள் மற்றும் சேவைகளில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு துறைகளில் நாம் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறோம். சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மீதான முயற்சியானது பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு, விண்வெளி, தொலைத்தொடர்பு, குவாண்டம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பயோடெக் துறைகளில் புதிய பரிமாணங்களையும் விரிவுபடுத்தப்பட்ட ஒத்துழைப்பையும் சேர்த்துள்ளது. தடையற்ற, வெளிப்படையான, உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியம் பற்றிய நமது பகிரப்பட்ட பார்வையை மேலும் மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஒத்துழைத்து வருகின்றன.

அதிபர் பைடன் மற்றும் பிற மூத்த அமெரிக்க தலைவர்களுடனான எனது கலந்துரையாடல்கள், நமது இருதரப்பு ஒத்துழைப்பை, ஜி20, குவாட் மற்றும் ஐபிஈஎஃப் போன்ற பலதரப்பு மன்றங்களிலும் ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பை வழங்கும்.

அதிபர் பைடன் மற்றும் முதல் பெண்மணி டாக்டர். ஜில் பைடன், முக்கிய விருந்தினர்கள் ஆகியோருடன் அரசு விருந்தில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு கட்சிகளும் எப்போதும் வலுவான ஆதரவை வழங்கி வருகின்றன. எனது பயணத்தின் போது, ​​நாடாளுமன்றத்தின் தலைமையின் அழைப்பின் பேரில் அமெரிக்க ​நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வில் நான் உரையாற்றவுள்ளேன்.

நமது இருநாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கையை வளர்ப்பதில் வலுவான மக்களுக்கு இடையிலான இணைப்புகள் கருவியாக உள்ளன. நமது சிறந்த சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் துடிப்பான இந்திய-அமெரிக்க சமூகத்தைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவை மேம்படுத்துவதற்கும், நெகிழ்வுத்தன்மை கொண்ட உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதற்குமான வாய்ப்புகள் குறித்து விவாதிக்க சில முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளை நான் சந்திக்கவிருக்கிறேன்.

எனது அமெரிக்கப் பயணம் ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் சுதந்திரத்தின் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் நமது உறவுகளை வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். பகிரப்பட்ட உலகளாவிய சவால்களை சந்திப்பதில் இரு நாடுகளும் ஒன்றாக வலுவாக நிற்கின்றன.

அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியின் அழைப்பின் பேரில் நான் வாஷிங்டன் டி.சி.யிலிருந்து கெய்ரோவுக்குச் செல்லவிருக்கிறேன். முதன்முறையாக நெருக்கமான மற்றும் நட்பு நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பிரதம விருந்தினராக அதிபர் சிசியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைந்தோம். சில மாத கால இடைவெளியிலான இந்த இரண்டு பயணங்களும் எகிப்து உடனான நமது வேகமாக வளர்ந்து வரும் கூட்டாண்மையின் பிரதிபலிப்பாகும், இது அதிபர் சிசியின் பயணத்தின் போது பாதுகாப்புத் தொடர்பான ஒத்துழைப்பாக உயர்த்தப்பட்டது.

நமது நாகரிக மற்றும் பன்முகக் கூட்டாண்மைக்கு மேலும் உத்வேகத்தை அளிக்க அதிபர் சிசி மற்றும் எகிப்திய அரசின் மூத்த உறுப்பினர்களுடனான எனது கலந்துரையாடல்களை எதிர்நோக்கியுள்ளேன். எகிப்தில் உள்ள துடிப்பான இந்திய வம்சாவளி மக்களுடன் உரையாடும் வாய்ப்பும் எனக்கு கிடைக்கவுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி அறிக்கையில் கூறியுள்ளார்.

The post ’’அமெரிக்கா செல்வது ஏன்..?’’ பிரதமர் மோடி வெளியிட்ட தகவல் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
’’யோகா தினம் – ஊடகங்களுக்கு 33 விருதுகள்..!’’ தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் https://madrasmurasu.com/%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25af%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25ae%25be-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%258a%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/#respond Sat, 10 Jun 2023 10:15:08 +0000 https://madrasmurasu.com/?p=3676 ’’சர்வதேச யோகா தினத்தையொட்டி ஊடக விருதுகள் வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் யோகாவை பரப்புவதில் ஊடகங்கள் வகிக்கும் முக்கியப் பங்கை இந்த விருது அங்கீகரித்துப் பாராட்டுகிறது’’ என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார். மொத்தம் 33 விருதுகள் : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இரண்டாவது ஊடகத் துறை விருதுகள் தொடர்பான அறிவிப்பை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 09.06.2023 அன்று வெளியிட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான விருதுகளில், 22 இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் செயல்படும் அச்சு, தொலைக்காட்சி […]

The post ’’யோகா தினம் – ஊடகங்களுக்கு 33 விருதுகள்..!’’ தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் first appeared on Madras Murasu.

]]>
’’சர்வதேச யோகா தினத்தையொட்டி ஊடக விருதுகள் வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் யோகாவை பரப்புவதில் ஊடகங்கள் வகிக்கும் முக்கியப் பங்கை இந்த விருது அங்கீகரித்துப் பாராட்டுகிறது’’ என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

மொத்தம் 33 விருதுகள் :

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இரண்டாவது ஊடகத் துறை விருதுகள் தொடர்பான அறிவிப்பை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 09.06.2023 அன்று வெளியிட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான விருதுகளில், 22 இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் செயல்படும் அச்சு, தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகிய மூன்று பிரிவுகளில் 33 விருதுகள் வழங்கப்படுகின்றன.

1) செய்தித்தாள்களில் யோகா தொடர்பாக சிறப்பாக வெளியிடப்படும் தகவல்களுக்காக செய்தித் தாள் பிரிவின் கீழ் 22 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும் செய்தித் தாள்களுக்கு 11 விருதுகள் வழங்கப்படுகிறது.

2) மின்னணு ஊடகங்களில் (தொலைக்காட்சி) யோகா தொடர்பாக சிறப்பாக வெளியிடப்படும் தகவல்களுக்காக தொலைக்காட்சிப் பிரிவின் கீழ் 22 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு 11 விருதுகள் வழங்கப்படுகிறது.

3) மின்னணு ஊடகங்களில் (வானொலி) யோகா தொடர்பாக சிறப்பாக வெளியிடப்படும் தகவல்களுக்காக வானொலிப் பிரிவின் கீழ் 22 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும் வானொலி நிறுவனங்களுக்கு 11 விருதுகள் வழங்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டிற்கான விருதுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி அன்று கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினம், உலகம் முழுவதும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்றும் இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

தேசங்களின் எல்லைகள் மற்றும் கலாச்சாரங்களைத் தாண்டி, யோகா கோடிக் கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கான அணுகுமுறை காரணமாக யோகா பலரது ஆர்வத்தை ஈர்த்து, உலகளாவிய நிகழ்வாக இந்த யோகா தினம் மாறியுள்ளது என்று அவர் கூறினார்.

யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதிலும், யோகாவின் திறன்களை வெளிப்படுத்துவதிலும் ஊடகங்களின் பங்கு முக்கியமானது என்றும் அவற்றின் முயற்சி இல்லாமல் யோகா தொடர்பான தகவல்களை பெரிய அளவில் பிரபலப்படுத்தி இருக்கும் இந்த முயற்சி சாத்தியமாகியிருக்காது என்றும் அவர் தெரிவித்தார். இதை அங்கீகரிக்கும் வகையில், சர்வதேச யோகா தின விருதுகளை இரண்டாவது முறையாக வழங்கத் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் யோகா தொடர்பான தகவல்களைப் பரப்புவதில் ஊடகங்கள் வகிக்கும் பங்கை இந்த விருது அங்கீகரித்துப் பாராட்டுவதாக அவர் கூறினார். யோகா என்ற பழமையான கலையையும் அதன் பல நன்மைகளையும் ஊக்குவிப்பதில் ஊடகங்களுக்கு உள்ள மகத்தான சக்தியையும் பொறுப்பையும் அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

யோகா தொடர்பான புரிதலை ஏற்படுத்தவும், அதை ஊக்குவிக்கவும், ஊடகங்கள் ஒரு ஊக்க சக்தியாக விளங்குவதாகவும் அவர் கூறினார். அனைத்து வயதினரும், எல்லா பின்னணி கொண்டவர்களும், பின்பற்றக் கூடிய உலகளாவிய நடைமுறையாக யோகாவைக் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் வெற்றி பெற்றுள்ளன என்று திரு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

இந்த விருதுகள் ஒரு சுதந்திரமான நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

10.06.2023 முதல் 25.06.2023 வரையில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் யோகா தொடர்பான கட்டுரைகள் அல்லது ஒளிபரப்பப்படவுள்ள ஆடியோ/வீடியோ உள்ளடக்கங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். விருதுக்கு விணன்ணப்பிக்கும்போது அவை தொடர்பான காட்சிகள் மற்றும் விவரங்களை, குறிப்பிட்ட வடிவத்தில் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும். விருது தொடர்பான படைப்புகளைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கக் கடைசி தேதி 2023 ஜூலை 1 (01.07.2023) ஆகும்.

இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் இணையதளமான https://pib.gov.in/indexd.aspx மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையதளமான https://mib.gov.in/ ஆகியவற்றில் காணலாம்.

சர்வதேச யோகா தின ஊடக விருதுகள்

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் யோகாவை பரப்புவதில் ஊடகங்களின் சிறந்த பங்களிப்பைப் பாராட்டும் வகையில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் 2019-ம் ஆண்டில் முதலாவது சர்வதேச யோகா தின ஊடக விருதுகளை (AYDMS) அறிவித்தது. அந்த விருது 07.01.2020 அன்று வழங்கப்பட்டது. அதன் பின்னர் கொவிட் பெருந்தொற்று பாதிப்புக் காரணமாக இந்த விருதில் இடைவெளி ஏற்பட்டது. தற்போது அந்த விருதுகளை மீண்டும் வழங்க தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

The post ’’யோகா தினம் – ஊடகங்களுக்கு 33 விருதுகள்..!’’ தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/feed/ 0