acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ”அன்பு சகோதரி குஷ்பு அவர்களுக்கு வணக்கம்..!” ஜனநாயக மாதர் சங்கம் first appeared on Madras Murasu.
]]>அன்பு சகோதரி குஷ்பு அவர்களுக்கு வணக்கம்…
உங்கள் ஊடகப் பேட்டியை பார்த்தேன். தங்களை மிக மோசமாக விமர்சித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் சிவாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய உங்கள் கோபம் மிக நியாயமானது.
பொதுவெளியில் இயங்கும் பெண்களை அவதூறாகப் பேசுவதையோ இழிவுபடுத்துவதையோ ஒருபோதும் அனுமதிக்கக் முடியாது. அப்படிப்பட்ட கயவர்களுக்கு சட்ட ரீதியாக அவர் சார்ந்திருக்கிற கட்சியின் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாதர் சங்கமும் வலியுறுத்தி வருகிறது.
இன்னும் கூட ஒரு விஷயத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
கற்பு குறித்து நீங்கள் தெரிவித்த ஒரு கருத்திற்காக தமிழகம் முழுவதும் சங்கிகள் குறிப்பாக பாஜக தலைவர் எச்.ராஜா உங்கள் மீது சேற்றை வாரி இறைத்தது போல விஷமத்தை கக்கியபோது அதற்கு எதிராக முதல் எதிர்ப்புக்குரல் கொடுத்ததும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.
துரதிஷ்டம் பாருங்கள் இப்போது அக்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கிறீர்கள்.
ஆனால் அன்றும் இன்றும் என்றும் பெண்களை இழிவுபடுத்த ஆபாசமாக பேசும் எந்த ஒரு செயலையும் யார் செய்தாலும் எந்த சமரமும் இன்றி முதல் எதிர்ப்புக் குரலை கொடுப்பது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்பதை நாடறியும்.
ஆனால் உங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய அதேவேகத்தில் உங்களிடம் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறேன்.
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் பயிலும் மாணவிகள் பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்ட செய்தி தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய போது அமைதியாகவே கடந்து போனீர்கள்.
டெல்லியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் நீங்கள் பொறுப்பு வகிக்கும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூசன் சரண் சிங் என்ற கயவனால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பெண்கள் அமைப்புகள் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தபோதும் நீங்கள் இது குறித்து பேச மறுத்துவிட்டீர்கள்.
தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் என்ற முறையில் தமிழகத்தில் முன்னெடுத்த பெண்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் என்ன?
மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் உங்களிடம் பதில் இருக்காது என்பது நன்கு தெரியும்.
ஏனென்றால் நீங்கள் சாந்திருக்கும் பாஜக எந்தக் காலத்திலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் கட்சி அல்ல.
எல்லாவற்றிலும் சுய லாபம் தேடும் பாஜகவில் அங்கம் வகிக்கும் உங்களைப் போன்றோரின் நாடக அரசியலை மக்கள் நன்கு அடையாளம் கண்டு வைத்துள்ளனர்.

The post ”அன்பு சகோதரி குஷ்பு அவர்களுக்கு வணக்கம்..!” ஜனநாயக மாதர் சங்கம் first appeared on Madras Murasu.
]]>The post “அண்ணாமலை பிறந்தநாள் – பொன்னார், ஹச்.ராஜா, வானதி வாழ்த்து..!” first appeared on Madras Murasu.
]]>வானதி சீனிவாசன் எம் .எல்.ஏ., தனது வாழ்த்து செய்தியில், “தமிழக பாஜக தலைவர் அன்பு சகோதரர் கே.அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று வாழ்த்தி இருக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் மாநில தலைவரும் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழக பாஜக மாநில தலைவர் அன்பு தம்பி கே.அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நீண்ட ஆயுளுடன் எல்லா வளங்களும் பெற்று தொடர்ந்து மக்கள் பணியாற்றிட எல்லாம் வல்ல அன்னை சக்தியைப் பிரார்த்திக்கின்றேன்” என்று வாழ்த்தினார்.

மூத்த தலைவர் ஹச்.ராஜா, “தமிழக பாஜக தலைவர் சகோதரர் அண்ணாமலை Ex.IPS அவர்களின் பிறந்த நாளில் நீண்ட ஆயுளோடும் ஆரோக்யத்தோடும் தேசப்பணியோடு எதிரிகளையும் துவம்சம் செய்ய வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.
The post “அண்ணாமலை பிறந்தநாள் – பொன்னார், ஹச்.ராஜா, வானதி வாழ்த்து..!” first appeared on Madras Murasu.
]]>The post ’’பா.ஜ.க-வை வளர்ப்பதற்காக அற்பத்தனமான கருத்துகளை கூறுவதா..?’’ அண்ணாமலையை எச்சரிக்கும் கோபண்ணா first appeared on Madras Murasu.
]]>’காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கண்டிப்பாக கட்டப்படும் என கர்நாடக காங்கிரஸ் அரசு கூறியதற்கு தமிழக காங்கிரசை தேவை இல்லாமல் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சீண்டிப் பார்த்திருக்கிறார். இதற்கு உள்நோக்கம் கற்பித்து காங்கிரஸ் கட்சியை பற்றி கடுமையாக விமர்சிக்கிறார். கடந்த காலத்தில் கர்நாடகத்திலே முதலமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை 2022 – 2023 நிதியாண்டிலே ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதை அண்ணாமலையால் மறுக்க முடியுமா ?
அன்றைக்கு நிதி ஒதுக்கப்பட்ட போது விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்காக இந்த தொகை பயன்படுத்தப்படும் என்று கூறினார். அப்படி நிதி ஒதுக்கிய போது இதே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எங்கே இருந்தார் ? அன்று வாய் மூடி மௌனியாக இருந்த அண்ணாமலை இன்றைக்கு பூமிக்கும் வானத்திற்கும் எகிறி குதிக்கிறார்.
தமிழக காங்கிரசை பொறுத்தவரை நடுவர் மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாதகமாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரின் அளவிற்கு பாதிப்பு ஏற்படுகிற வகையில் மேகதாதுவில் அணை கட்டப்படுவதை கடுமையாக நாங்கள் எதிர்க்கிறோம். மேகதாது அணை கட்டுவதற்கு ரூபாய் 9000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அந்த அணை கட்டப்படுமேயானால் காவேரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

நமது உரிமையின்படி நாம் பெற வேண்டிய தண்ணீரை தடுக்கிற வகையில் காவேரியின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழே தமிழக எல்லையிலே இருக்கிற பிலி குண்டுலு நீர் அளவை நிலையத்திற்கு மேலே அணை கட்டப்பட்டு நீர் தேக்கப்பட்டால் தமிழகத்தின் நீர் வரத்து கடுமையாக பாதிக்கப்படும். இதை எந்த நிலையிலும் அனுமதிக்க முடியாது. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வெளிவருகிற நீர் தமிழகத்திற்கு இயல்பாக வர வேண்டியதாகும். அந்த நீரை தடுப்பது தான் மேகதாது அணையின் நோக்கமாகும். இந்த அடிப்படையில் தான் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருக்கிறோம்.
கர்நாடகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவதற்காக ஆதரவாக ஒரே குரலாக பேசுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் தமிழக அரசு எடுக்கிற முடிவுகளுக்கு எதிராக அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பேசி வருவது கர்நாடகத்திற்கு சாதகமாகவே கருதப்படும். தமிழக காங்கிரசை விமர்சிக்கிற அண்ணாமலை கர்நாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக இருக்கிற பா.ஜ.க.வை விமர்சிப்பாரா ? ஆனால், தமிழக காங்கிரசை பொறுத்தவரை கர்நாடகத்தில் யார் ஆட்சி செய்தாலும் தமிழ்நாட்டின் நலனை காப்பதற்காக தமிழக அரசு எடுக்கிற அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பா.ஜ.க. காலூன்ற முடியாமல் திண்டாடி திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பா.ஜ.க.வை வளர்ப்பதற்காக அரைவேக்காட்டுத்தனமாக ஊடகங்களில் வெளிச்சம் பெறுவதற்காக அற்பத்தனமான கருத்துகளை அண்ணாமலை கூறி வருகிறார். இதன்மூலம் மலிவான அரசியல் நடத்தி, தமிழக பா.ஜ.க-வை வளர்க்கலாம் என்ற அண்ணாமலையின் கனவு பகல் கனவாகத் தான் முடியும்.
இவ்வாறு கோபண்ணா கூறியுள்ளார்.
The post ’’பா.ஜ.க-வை வளர்ப்பதற்காக அற்பத்தனமான கருத்துகளை கூறுவதா..?’’ அண்ணாமலையை எச்சரிக்கும் கோபண்ணா first appeared on Madras Murasu.
]]>