Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#stalin - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Wed, 08 Nov 2023 12:31:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’துப்பு இல்­லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25a4-%25e0%25ae%25aa%25e0%25ae%25be-%25e0%25ae%259c-%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95/#respond Wed, 08 Nov 2023 12:29:39 +0000 https://madrasmurasu.com/?p=7456 மலையகத் தமிழர் 200  இலங்­கை­யில் மலை­ய­கத்­தில் தமி­ழர் குடி­யேறி -– அந்த மண்ணை வாழ்­வித்து 200 ஆண்­டு­கள் ஆகி­விட்­டது. இந்த நிலை­யில் மலை­ய­கத் தமிழ் மக்­க­ளுக்கு தனது மன­மார்ந்த வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக் கொண்­டுள்­ளார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். இத­யத்­தின் அடி­யா­ழத்­தில் இருந்து அன்­பு­ட­னும் அக்­க­றை­யு­ட­னும் தெரி­வித்த வாழ்த்­து­கள் ஆகும் இவை. *மனி­தன் வாழ்ந்­தி­ராத மலைக்­கா­டு­களை மலை­ய­கத் தோட்­டங்­­களாக மாற்­றி­ய­வர்­கள் மலை­ய­கத் தமி­ழர்­கள் ஆவார்­கள். மலை­ய­கத் தமிழ்த் தொழி­லா­ளர்­க­ளின் வர­லாறு இலங்­கை­யில் காப்பி பயிர் செய்­யப்­பட்ட ஆரம்­ப­கட்­டத்­தில் […]

The post ’’துப்பு இல்­லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.

]]>
மலையகத் தமிழர் 200 

இலங்­கை­யில் மலை­ய­கத்­தில் தமி­ழர் குடி­யேறி -– அந்த மண்ணை வாழ்­வித்து 200 ஆண்­டு­கள் ஆகி­விட்­டது. இந்த நிலை­யில் மலை­ய­கத் தமிழ் மக்­க­ளுக்கு தனது மன­மார்ந்த வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக் கொண்­டுள்­ளார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். இத­யத்­தின் அடி­யா­ழத்­தில் இருந்து அன்­பு­ட­னும் அக்­க­றை­யு­ட­னும் தெரி­வித்த வாழ்த்­து­கள் ஆகும் இவை.

*மனி­தன் வாழ்ந்­தி­ராத மலைக்­கா­டு­களை மலை­ய­கத் தோட்­டங்­­களாக மாற்­றி­ய­வர்­கள் மலை­ய­கத் தமி­ழர்­கள் ஆவார்­கள்.

மலை­ய­கத் தமிழ்த் தொழி­லா­ளர்­க­ளின் வர­லாறு இலங்­கை­யில் காப்பி பயிர் செய்­யப்­பட்ட ஆரம்­ப­கட்­டத்­தில் இருந்து தொடங்­கு­கி­றது.

*இது இலங்­கைப் பொரு­ளா­தா­ரத்­தில் மகத்­தான மாற்­றத்தை உரு­வாக்­கி­யது. பின்­னர், ரப்­பர், தென்னை என அனைத்­துப் பணப் பயிர்­களது உற்­பத்­தி­யும் மலை­ய­கத் தமி­ழர்­க­ளது உழைப்­பால் உரு­வா­ன­து­தான்.

*பயி­ரி­டப்­ப­டாத நிலத்தை பயி­ரிட்­டும் -– காடு­க­ளாக இருந்த நிலத்தை காசுப் பயிர்­க­ளாக விளை­வித்­தும் பின் தங்­கிய பொரு­ளா­தா­ரத்தை முன்­னணி பொரு­ளா­தா­ர­மாக ஆக்­கி­ய­வர்­கள் மலை­ய­கத் தோட்­டத் தொழி­லா­ளர்­கள் ஆவார்­கள்.

*இலங்கை நாட்­டுக்­காக தங்­க­ளது உழைப்பை வழங்­கி­ய­வர்­கள் மலை­ய­கத் தமி­ழர்­கள். இலங்கை நாடு உயர உழைத்­த­வர்­கள். தங்­க­ளது ரத்­தத்­தை­யும் வியர்­வை­யை­யும் காலத்­தை­யும் கட­மை­யை­யும் அந்த நாட்­டுக்­கா­கவே ஒப்­ப­டைத்­த­வர்­கள்.

– – என்று அந்த மக்­க­ளின் மகத்­தான உழைப்­பைப் பாராட்டி இருந்­தார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

“இத்­த­கைய மலை­யக மக்­க­ளின் நீதி­யும் உரி­மை­யும் நிலை­நாட்­டப்­பட வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன். கல்வி, சுகா­தா­ரம், வாழிட உரி­மை­கள், பொரு­ளா­தார உத­வி­கள், சமூக உரி­மை­கள் அனைத்­தும் வழங்­கப்­பட வேண்­டும்.”என்­ப­தை­யும் வலி­யு­றுத்தி இருந்­தார் முத­ல­மைச்­சர் அவர்­கள். ஏனென்­றால் அம்­மக்­க­ளின் நிலைமை என்­பது பெரி­தாக மாறி­வி­ட­வில்லை. இலங்­கையை உயர்த்­திய, மேம்­ப­டுத்­திய அவர்­க­ளது வாழ்க்கை மேலும் முன்­னேற வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தும் வித­மாக முதல்­வர் அவர்­கள் வலி­யு­றுத்தி இருந்­தார்.

முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் உரை, இலங்­கை­யில் நடை­பெ­றும் விழா­வுக்­காக தயா­ரிக்­கப்­பட்­டது ஆகும். இலங்­கை­யில் குடி­ய­மர்த்­தப்­பட்ட மலை­ய­கத் தமி­ழர்­க­ளது 200 ஆவது ஆண்­டு­வி­ழாவை முன்­னிட்டு ஒரு விழா ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.“நாம் 200 – – ஒற்­றுமை, பன்­மு­கத்­தன்மை மற்­றும் பாரம்­பர்­யத்­தின் முழக்­கம்”என்­பது இந்த நிகழ்ச்­சி­யின் பெயர். இந்த நிகழ்ச்­சியை இலங்கை மலை­ய­கத் தமி­ழர்­க­ளுக்­காக இலங்­கை­யின் உள்­நாட்டு தோட்­டத் தொழில் துறை மற்­றும் அரசு தொழில் துறை அமைச்­ச­கம் முன்­னெ­டுத்­தது. அந்த விழா ஏற்­பாட்­டா­ளர்­கள் கேட்­டுக் கொண்­ட­தால் தயா­ரிக்­கப்­பட்ட உரை இது. ஆனால் அந்த உரை, விழா­வில் ஒளி­ப­ரப்­பப்­ப­ட­வில்லை.

இது குறித்து ‘தி இந்து’ ஆங்­கில நாளி­தழ் வெளி­யிட்­டுள்ள செய்­தி­யில்,‘தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரின் உரையை ஒளி­ப­ரப்­பக் கூடாது என்று இந்­திய பா.ஜ.க. அரசு தடை போட்­டு­விட்­டது’என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதை விட ஜன­நா­யக மறுப்பு, தமி­ழர் விரோ­தச் செய்கை இருக்க முடி­யாது.

முத­ல­மைச்­சர் உரை­யைத் தடை செய்­வ­தன் மூல­மாக, மலை­ய­கத் தமி­ழர்­கள் மீதான தி.மு.க.வின் பற்­று­தலை மறைக்­கும் சதிச் செயலை ஒன்­றிய பா.ஜ.க. அரசு செய்­துள்­ளது.

இதே நிகழ்­வில் இன்­னொரு சதி­யை­யும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு செய்­துள்­ளதை தமிழ்­நாடு நிதி அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு அவர்­கள் அம்­ப­லப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள்.

“அந்த விழா­வில் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் கலந்­து­கொள்ள வேண்­டும் என்­றும் முறை­யான அழைப்பு தமிழ்­நாடு அர­சிற்கு அனுப்­பப்­­ பட்டது. முத­ல­மைச்­சர் அவர்­கள் அந்த நிகழ்­வில் கலந்து கொள்ள இய­லாத நிலை­யில், என்னை அந்த விழா­வில் கலந்து கொள்­ளு­மாறு அவர்­கள் பணித்­தி­ருந்­தார்­கள். இலங்கை பய­ணம் மேற்­கொள்­வ­தற்­காக ஒன்­றிய அர­சின் வெளி­வி­வ­கா­ரத் துறை­யி­லி­ருந்து உரிய அனு­ம­தி­யினை பெறு­ வ­தற்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி உரிய வழி­மு­றைப்­படி விண்­ணப்­பம் நம்­மு­டைய பொதுத்­து­றை­யால் அனுப்­பப்­பட்­டு­விட்­டது. political clearance என்று சொல்­லக்­கூ­டிய வெளி­வி­வ­கா­ரத்­தின் அனு­மதி கிடைப்­ப­தற்­காக நான் காத்­துக் கொண்­டி­ருந்­தேன்,

அக்­டோ­பர் 28 ஆம் தேதி அன்று பொதுத் துறை­யின் வாயி­லாக ஒன்­றிய அர­சிற்கு அனுப்­பப்­பட்­டது. விழா நவம்­பர் 2-ஆம் தேதி மதி­யம். ஆனால் 1-ஆம் தேதி இரவு எட்­டரை மணி வரை வர­வில்லை. ஒன்­றிய அர­சி­ட­மி­ருந்து அனு­மதி இது­வரை வராத கார­ணத்­தால் நான் பய­ணத்தை மேற்­கொள்ள இய­லாத நிலை­யில் இருப்­பதை சுட்­டிக்­காட்டி, என்­னு­டைய பயண ஏற்­பா­டு­களை நான் இரத்து செய்­து­விட்டு வீடு திரும்­பி­னேன். அதற்­குப்­பி­றகு ஒன்­ப­தரை மணிக்கு மேல் அனு­மதி வந்­தி­ருக்­கி­றது. ஆனால் அதற்கு முன்­ன­தாக நான் பயண ஏற்­பா­டு­களை எல்­லாம் இரத்து செய்­து­விட்ட கார­ணத்­தி­னால், இரவு 8.30 மணிக்கு மேல் அத்­த­கைய அனு­மதி கிடைப்­ப­தற்கு வாய்ப்பு இல்லை என்று கருதி, முறைப்­படி விழா ஏற்­பாட்­டா­ளர்­க­ளி­டம் இதனை தெரி­வித்­து­விட்டு பயண ஏற்­பா­டு­களை எல்­லாம் இரத்து செய்­து­விட்­டோம்.”என்று சொல்லி இருக்­கி­றார் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு.

வெளி­நாட்­டில் நடை­பெ­றும் விழா­வுக்கு அனு­மதி தரு­வ­தில் ஒன்­றிய அரசு எப்­படி நடந்து கொண்­டுள்­ளது என்­ப­தன் மூல­மாக – எத­னால் இப்­படி நடந்து கொண்­டது என்­ப­தை­யும் தெரிந்து கொள்­ள­லாம்.

குடி­யு­ரி­மைச் சட்­டத்­தின் மூல­மாக இலங்­கைத் தமி­ழர்­களை குடி­யு­ரிமை அற்­ற­வர்­க­ளாக ஆக்­கிய பா.ஜ.க., இப்­போது மலை­ய­கத் தமி­ழர்­கள் விழா­வில் எத்­த­கைய சதிச்­செ­யல்­க­ளில் ஈடு­ப­டு­கி­றது என்­பது புரி­கி­றது. இந்த நிலை­யில் மலை­ய­கத் தமி­ழர் மாநாட்­டில் கலந்து கொள்ள பா.ஜ.க. அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் இலங்கை சென்­றி­ருக்­கி­றார்.

இன்­ன­மும் இந்­திய மீன­வர்­கள், படும் துன்ப துய­ரங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளிவைக்­கத் துப்பு இல்­லாத பா.ஜ.க. இலங்­கைக்­குப் போய் மலை­யக மக்­களை ஏமாற்­ற­லாம் என்று நினைப்­பது காலக் கொடு­மையே ஆகும்.

The post ’’துப்பு இல்­லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95/feed/ 0
’’இலங்கை மலையகத் தமிழர் விழாவில் மு.க.ஸ்டாலின் காணொளி உரையை ஒளிபரப்ப தடை..!’’ ஒன்றிய அரசுக்கு வைகோ கடும் கண்டனம் https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25ae%25b0%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d/#respond Mon, 06 Nov 2023 10:41:43 +0000 https://madrasmurasu.com/?p=7412 இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி உரையை ஒளிபரப்ப தடை செய்யப்பட்டதற்கு ஒன்றிய அரசுக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு அவர்களுக்கு தேவையான தேயிலை காபி ரப்பர் தோட்டங்கள் ஏராளமாக பயிரிடப்பட்டது. அதில் குறைந்த கூலிக்கு வேலை செய்யவும் அங்கு இருந்த வனம் சார்ந்த இடங்களை விவசாயத்திற்கு ஏற்ப பண்படுத்தி பிரிட்டிசாருக்குத் தேவையான விவசாயம் […]

The post ’’இலங்கை மலையகத் தமிழர் விழாவில் மு.க.ஸ்டாலின் காணொளி உரையை ஒளிபரப்ப தடை..!’’ ஒன்றிய அரசுக்கு வைகோ கடும் கண்டனம் first appeared on Madras Murasu.

]]>
இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி உரையை ஒளிபரப்ப தடை செய்யப்பட்டதற்கு ஒன்றிய அரசுக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு அவர்களுக்கு தேவையான தேயிலை காபி ரப்பர் தோட்டங்கள் ஏராளமாக பயிரிடப்பட்டது. அதில் குறைந்த கூலிக்கு வேலை செய்யவும் அங்கு இருந்த வனம் சார்ந்த இடங்களை விவசாயத்திற்கு ஏற்ப பண்படுத்தி பிரிட்டிசாருக்குத் தேவையான விவசாயம் உற்பத்தி சார்ந்த துறைகளில் உழைப்பதற்காகவும் தமிழ்நாட்டு மக்கள் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு கொண்டு போகப் பட்டார்கள்.

தென் தமிழகத்தில் இருந்த அப்பாவி மக்களை வலு கட்டாயமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தியது பிரிட்டிஷ் அரசு. அவர்கள் இலங்கை மலையகத் தமிழர்கள் என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டார்கள். பிரிட்டிஷாரால் வலுக்கட்டாயமாக கொண்டு போகப்பட்டு இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்கள் புலம்பெயர்ந்த 200 வது ஆண்டு தற்போது அனுசரிக்கப்படுகிறது. “நாம் 200 ஒற்றுமை பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்” என்ற பெயரில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சியை இலங்கை மலையக தமிழர்களுக்காக இலங்கையின் உள்நாட்டு தோட்ட தொழில் துறை மற்றும் அரசு தொழில்துறை அமைச்சகம் முன்னெடுத்தது.

இலங்கையில் உள்ள மலையக தமிழர்களின் உறவு பாலமாக இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்னெடுத்த, இந்த நிகழ்ச்சியில் மலையக தமிழர்கள் அவர்களின் பூர்வீக தமிழ் பூமி சார்ந்த அரசியல் பிரதிநிதிகளாக தமிழ்நாட்டிலிருந்தும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார் .

இலங்கை அரசின் பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக மலைகத் தமிழர்களின் நாம் 200 விழாவிற்கு வாழ்த்துரை வழங்கி அனுப்பியிருந்தார்.

அந்த உரையில், “மனிதன் வாழ்ந்திராத மலைக் காடுகளை மலையகத் தோட்டங்களாக மாற்றியவர்கள் மலையகத் தமிழர்கள்! மலையகத் தமிழ்த் தொழிலாளர்களின் வரலாறு – இலங்கையில் காப்பி பயிர் செய்யப்பட்ட ஆரம்பகாலம் முதல் தொடங்குகிறது. 1823-ஆம் ஆண்டு கம்பளைக்கு அருகே உள்ள சிங்கபிட்டிய என்ற கிராமத்தில் கேப்டன் ஹென்றி பேட் என்ற பிரிட்டிஷ்காரர், 14 இந்தியத் தொழிலாளர்களையும் சில சிங்களத் தொழிலாளர்களையும் வைத்து காப்பித் தோட்டம் தொடங்கினார். இது இலங்கைப் பொருளாதாரத்தில் மகத்தான மாற்றத்தை உருவாக்கியது.

காப்பித் தோட்டங்கள் பெருகப்பெருக இந்தியத் தொழிலாளர்கள் ஏராளமாக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காப்பி தோட்டத்தையடுத்து தேயிலைத் தோட்டங்கள் அதிகமானது. அதனையும் மலையகத் தமிழர்கள் வளப்படுத்தினார்கள். பின்னர் ரப்பர், தென்னை என அனைத்துப் பணப் பயிர்களது உற்பத்தியும் மலையகத் தமிழர்களது உழைப்பால் உருவானதுதான். இலங்கை நாட்டுக்காக தங்களது உழைப்பை வழங்கியவர்கள் மலையகத் தமிழர்கள். இலங்கை நாடு உயர உழைத்தவர்கள். தங்களது ரத்தத்தையும் வியர்வையையும் காலத்தையும் கடமையையும் அந்த நாட்டுக்காகவே ஒப்படைத்தவர்கள்.

“கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்? அது கடல் கடந்த தமிழர்களின் கண்ணீரால்!” என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா அவர்கள். மலையகத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு திரும்பியபோது அவர்களை அரவணைத்து தமிழக மலைப்பகுதிகளில் குடியமர்த்தி, அரசு ரப்பர் தோட்டங்கள் மூலம் அவர்கள் வாழ்வில் உயர வழிவகை செய்தோம். அந்த உணர்வோடுதான் அனைத்துப் பிரச்சினைகளையும் அணுகி துயர் துடைக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். உரிமை காக்கவும் உதவிகள் செய்து வருகிறோம். அந்த வகையில், மலையக தமிழ் மக்களின் நீதியும் உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மலையக தமிழர்களின் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் அனைத்து மக்களையும் போல கல்வியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் அவர்கள் மேலெழும்பும் காலத்தை எதிர்நோக்கி தமிழ்நாடு காத்திருக்கிறது. கல்வி, சுகாதாரம், வாழிட உரிமைகள், பொருளாதார உதவிகள், சமூக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும். நாட்டை வாழ வைத்த மக்களை வாழ வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அதற்காக தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உரையில் குறிப்பிட்டிருந்தார்.

முதல்வரின் உரை ஊடகங்கள் மற்றும் ஏடுகளுக்கும் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் நவம்பர் 3 ஆம் தேதி கொழும்பில் நடைபெற்ற மேற்கண்ட விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் காணொலி உரையை ஒளிபரப்ப கூடாது என்று ஒன்றிய பாஜக அரசு தடை போட்டு விட்டது என இன்று வெளியான இந்து ஆங்கில நாளேடு (06.11.2023)விரிவாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் இந்திய அரசின் சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு பாஜக தலைவரும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்துரை வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுப்பிய காணொலி உரையை அந்த விழாவில் ஒளிபரப்ப தடை விதித்ததன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சிறுமைப்படுத்துவதற்கு முயன்றுள்ள ஒன்றிய பாஜக அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது கடும் கண்டனத்துக்குரியது.

 

The post ’’இலங்கை மலையகத் தமிழர் விழாவில் மு.க.ஸ்டாலின் காணொளி உரையை ஒளிபரப்ப தடை..!’’ ஒன்றிய அரசுக்கு வைகோ கடும் கண்டனம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
’’இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4/#respond Mon, 11 Sep 2023 05:06:15 +0000 https://madrasmurasu.com/?p=6231 ’’தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் அந்த அறிவிப்பில் மேலும் கூறியுள்ளதாவது: தியாகி இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், இம்மானுவேல் சேகரனாரின் மகள் சூரிய சுந்தரி பிரபா […]

The post ’’இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
’’தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சரின் அந்த அறிவிப்பில் மேலும் கூறியுள்ளதாவது:

தியாகி இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், இம்மானுவேல் சேகரனாரின் மகள் சூரிய சுந்தரி பிரபா ராணி மற்றும் அன்னாரது பேரன் சக்கரவர்த்தி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இக்கோரிக்கையினை வலியுறுத்தினர்.

தியாகி இம்மானுவேல் சேகரனார் 1924-ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942-இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும், ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், தியாகி இம்மானுவேல் சேகரனார் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

The post ’’இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4/feed/ 0
’’ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும்..!’’ முதல்வர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2592%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b1 https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1/#respond Sat, 09 Sep 2023 06:47:21 +0000 https://madrasmurasu.com/?p=6203 ’’தமிழ்நாடும் கேரளமும் நாட்டைக் காக்கின்ற முயற்சியில் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும்’’ என்று சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 8.9.2023 அன்று சென்னையில் நடைபெற்ற கேரள மீடியா அகாடமியின் “மீடியா மீட் 2023” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது: என்ட பிரியப்பட்ட மலையாள சகோதரர்களுக்கு ஸ்டாலின்ட சிநேகம் நிறைஞ்ச நமஸ்காரம். சில நாட்களுக்கு முன்பு, ஓணம் திருநாளைக் கொண்டாடிய நமது மலையாள மொழிச் […]

The post ’’ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும்..!’’ முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
’’தமிழ்நாடும் கேரளமும் நாட்டைக் காக்கின்ற முயற்சியில் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும்’’ என்று சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 8.9.2023 அன்று சென்னையில் நடைபெற்ற கேரள மீடியா அகாடமியின் “மீடியா மீட் 2023” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:

என்ட பிரியப்பட்ட மலையாள சகோதரர்களுக்கு ஸ்டாலின்ட சிநேகம் நிறைஞ்ச நமஸ்காரம். சில நாட்களுக்கு முன்பு, ஓணம் திருநாளைக் கொண்டாடிய நமது மலையாள மொழிச் சொந்தங்களுக்கு, மலையாளத்தில் என்னுடைய வாழ்த்துகளைச் சொன்னேன். இதற்கு முன்பு கேரளாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் நான் மலையாளத்தில் பேசியிருக்கிறேன்.

நாம் ஒரே மொழி குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அதாவது திராவிட மொழி குடும்பத்தை சார்ந்தவர்கள். சமத்துவத்திற்கு எதிராக இருக்கக்கூடியவர்களுக்கு இன்றைக்கு ‘திராவிடம்’ என்று சொல் ஒரு எரிச்சலாகவே இருக்கிறது.

கேரள அரசின் கீழ் இயங்கக்கூடிய தன்னாட்சி பெற்ற நிறுவனமாக கேரளா மீடியா அகாடமி செயல்பட்டு வருகிறது. சார்புத் தன்மை இல்லாத மதச்சார்பின்மையை போற்றுகின்ற ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்கு இந்த அகாடமி பங்காற்றி வருகிறது. இன்றைய நிலைமையில் இது மிகவும் தேவையான ஒன்று. ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும். அந்த வகையில் மிக சிறப்பான நீண்ட அனுபவம் மிக்க ஊடகவியலாளர்களால் நிர்வகிக்கப்படும் இந்த அகாடமி எதிர்காலத்திலும் அத்தகைய ஊடகவியலாளர்களை உருவாக்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கேரள மீடியா அகாடமி சார்பில் நடைபெறும் இந்த சிறப்பான விழாவில் பங்கெடுத்து உங்களை எல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்கு நான் பெருமை அடைகிறேன்.

இந்த விழாவில் பங்கெடுக்க வேண்டும் என்று, அருமை நண்பர் அருண்ராம் என்னை அழைத்தார்கள். தலைவர் கலைஞர் -க்கும் நெருக்கமான பத்திரிக்கையாளர்களில் ஒருவராக இருந்தவர் நம்முடைய அருமையான நண்பர் அருண்ராம். அதேபோல் என் மீதும் அன்பு காட்டக் கூடியவர்தான் அருண்ராம். அந்த வகையில் அவரது அழைப்பை ஏற்று இங்கு நான் வருகை தந்துள்ளேன்.

ஏசியாநெட்டின் நிறுவனர் சஷி குமார் இங்கு வருகை தந்துள்ளார். நடிப்பு – திரைப்படத் தயாரிப்பு – திரைக்கதை எழுதுதல் எனப் பன்முக ஆற்றலைப் பெற்றவர் இவர், இப்போது சென்னை ஆசிய இதழியல் கல்லூரியின் தலைவராக இருக்கிறார்.
மரியாதைக்குரிய மூத்த பத்திரிக்கையாளர் பி.ஆர்.பி.பாஸ்கர் எழுதிய ‘THE CHANGING MEDIASCAPE’ என்ற முக்கியமான நூலை வெளியிடுவதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன். அவருக்கு வயது 91.

70 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் செயல்பட்டு வருவதைப் பார்க்கும் போது எழுத்தின் மீதும், ஊடகத் துறையின் மீதும், அதையும் தாண்டி இந்த நாட்டு மக்கள் மீதும் அவர் கொண்டுள்ள உண்மையான அக்கறையை நமக்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது. தி இந்து பத்திரிக்கையில் 1952-ஆம் ஆண்டு சேர்ந்து அங்கு ஆறு ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.

* தி ஸ்டேட்ஸ்மேன் –
* பேட்ரியாட்-
* யு.என்.ஐ செய்தி நிறுவனம்
* தி டெக்கான் ஹெரால்டு
* ஏசியா நெட் – எனப் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

செய்தி நிறுவனங்களுக்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அவர் பணியாற்றி இருக்கிறார். உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்றும் இருக்கிறார். எனவே இந்த நூலை படித்துப் பார்த்தால் உலகம் முழுக்க பயணம் செய்யும் அனுபவம் நமக்கு ஏற்படும்.

அச்சு ஊடக காலம் தொட்டு ஊடகங்களின் இன்றைய மாற்றம் வரை அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை இந்த நூலில் பதிவு செய்துள்ளார் பாஸ்கர். அவருடைய கட்டுரைகள், செய்திகளுக்கு பின்னால் இருக்கும் ஆர்வம், அணுகுமுறை, தெளிவான சிந்தனை ஆகியவை இன்றைய பத்திரிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய பாடமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

அவசர நிலைக்காலம் குறித்த அவரது பதிவுகள் மிக முக்கியமானதாக உள்ளது. மிசாவில் கைதாகி ஓராண்டு காலம் சென்னை சிறையில் இருந்தவன் நான். எனவே அந்த உரிமையோடு இதை நான் இங்கே குறிப்பிட்டு காட்டியிருக்கிறேன்.
மனித உரிமைகள் மீதான பாஸ்கர் ஆர்வம் இதன்மூலம் வெளிப்படுகிறது. இந்த துறைக்கு தான் வந்த காலத்தில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறைவாக இருந்தது குறித்து பதிவு செய்துள்ளார். ஆனால் இன்று ஏராளமான பெண் பத்திரிக்கையாளர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதையும் பார்க்கிறோம்.

மேலும், தலித் பத்திரிக்கையாளர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருக்கிறது என்ற அவரது ஆதங்கமானது சமூகநீதிக் குரலாக வெளிப்பட்டுள்ளது. இது ஓரளவு உண்மைதான்.

இதனை உணர்ந்துதான் ஒடுக்கப்பட்ட சமூகத்து இளைஞர்கள், அரசுப் பள்ளிகளில் படித்தவர்களில் இதழியல் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவசமாக இதழியல் பயிற்சியை லயோலா கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு அரசு வழங்கியது.
‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சியின் நோக்கத்தை நான் சொல்லி வருகிறேன் என்றார். சமூகநீதி எந்தளவுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் – மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அமல்படுத்திய பிறகும் சமூகநீதிக்கு எத்தகைய தடைகள் விழுந்தன என்பதையும் இந்நூலில் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

இத்தகைய சமூக நீதிக்காகத்தான் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை நான் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த நூலில் திராவிட முன்னேற்றக் கழகம் பற்றி ஏதாவது வருகிறதா என்பதை ஆர்வத்துடன் தேடிப் பார்த்தேன். பத்திரிக்கையாளர் பாஸ்கரிடம் 1957-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி கேட்டுள்ளார்…

“நீங்கள் தென்னகத்தில் இருந்து வருகிறீர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.

“1957 தேர்தலில் திமுக சிறப்பாக செயல்பட்டது. அவர்களது பணி தேர்தலோடு நின்றுவிடவில்லை. அதன் தொண்டர்கள் இப்போதும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். இந்த வேகத்தில் தொடர்ந்து செயல்பட்டால், இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று சொல்லி இருக்கிறார் பாஸ்கர்.

அவர் சொன்னது போல பத்து ஆண்டுகளில் – அதாவது 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. திமுக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று பாஸ்கர் சொன்னதை அந்த அதிகாரி ரசிக்கவில்லையாம். பேரறிஞர் அண்ணா, திராவிட நாடு கேட்டுக் கொண்டிருந்த காலம் அது. அதனை மனதில் வைத்து, ‘தெற்கு பிரிந்து விடும் என்று சொல்கிறீர்களா?” என்று அவர் கேட்டிருக்கிறார். அந்த சிந்தனையிலும் மாறுதல் வரும் என்றும் பாஸ்கர் சொல்லி இருக்கிறார்கள். அவரது தொலைநோக்கு சிந்தனையை இதன் மூலமாக அறியலாம்.

இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக, இந்தியாவின் பாதுகாப்பே முக்கியம் எனப் பேரறிஞர் அண்ணா, திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டார்கள்.
அந்நிய நாட்டால் இந்தியாவுக்கு ஆபத்து வந்த காலம் அது. வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும் என்று விளக்கம் அளித்து இந்த நிலைப்பாட்டை எடுத்தார் பேரறிஞர் அண்ணா. இதே போன்றுதான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு இன்று ஆபத்து வந்திருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது. மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்திருக்கிறது. சமூகநீதியை சிதைக்கப் பார்க்கிறார்கள். இவை அனைத்தையும் சிதைப்பதன் மூலமாக இந்தியாவை சிதைக்கப் பார்க்கிறார்கள். இதனை அரசியல் தளத்தில் அரசியல் இயக்கங்களாகிய நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

இந்தியாவைக் காப்பாற்றும் பணியில் ஊடகங்களும் தங்களது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தபிறகு ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் என்னுடைய வேதம்’ என்று சொல்லி நாடாளுமன்றத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் வணங்கியவர் பிரதமர். இப்போது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்கிறார். இதனை நாட்டிலுள்ள அனைத்து மக்களும் உணர்ந்து இந்த போக்கை எதிர்க்க வேண்டும்.

இங்கு கூடியிருக்கும் எனது மலையாள சொந்தங்களுக்கும் கேரளத்தில் வாழக்கூடிய சொந்தங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது, தமிழ்நாடும் கேரளமும் நாட்டைக் காக்கின்ற முயற்சியில் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும். அதேபோல் ஊடகங்களும், பொய்பரப்புரைகளுக்கும் திசை திருப்புபவர்களுக்கும் முக்கியத்துவம் தராமல் விடுதலைப் போராட்டக் காலத்தில் செயல்பட்டதைப் போல மீண்டும் செயல்பட வேண்டும் என்று கேட்டு இந்த சிறப்பான நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்கின்ற வாய்ப்பினை பெற்றமைக்காக நான் மீண்டும் ஒருமுறை எனது இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தை தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்.

The post ’’ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும்..!’’ முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1/feed/ 0
’’ஆவின் சில்லறை விற்பனை நிலையம் தொடங்கலாம்..!” உடனே விண்ணப்பிக்கலாம் https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b1%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25b1%25e0%25af%2588-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a9%25e0%25af%2588 https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b1%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88/#respond Tue, 05 Sep 2023 08:41:33 +0000 https://madrasmurasu.com/?p=6127 தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 30 லட்சம் லிட்டரும் மற்றும் பால் உபபொருட்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 50 கோடி ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும் மற்றும் புதிய தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய ஆவின் பாலகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. • ஆவின் சில்லறை விற்பனை நிலைய பாலகம் என்பது ஆவின் பால் மற்றும் பால் […]

The post ’’ஆவின் சில்லறை விற்பனை நிலையம் தொடங்கலாம்..!” உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 30 லட்சம் லிட்டரும் மற்றும் பால் உபபொருட்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 50 கோடி ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும் மற்றும் புதிய தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய ஆவின் பாலகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

• ஆவின் சில்லறை விற்பனை நிலைய பாலகம் என்பது ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்வதோடு இதர மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யக்கூடிய ஆவின் விற்பனை நிலையமாகும். இவ்வகையான பாலகம் அமைக்க குறைந்தபட்சம் 64 சதுர அடி முதல் 225 சதுர அடி வரையிலான இடம் மட்டுமே போதுமானது.

• புதிய சில்லறை விற்பனை நிலைய பாலகம் அமைப்பதற்கு அதன் பரப்பளவு மற்றும் வடிவமைப்புக்கு ஏற்றார்போல் சுமார் 1.50 இலட்சம் முதல் 6 இலட்சம் வரை முதலீடு தேவை. மேலும் ஆவின் நிறுவனத்திற்கு ரூ.30,000/- மட்டுமே வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

• மக்கள் நடமாட்டமும் மற்றும் பாலகம் அமைக்கும் இடத்தை பொறுத்து மாதந்தோறும் சுமார் 5 இலட்சம் முதல் 10 இலட்சம் வரை விற்பனையை எதிர்பார்க்கலாம்.

• பாலகத்திற்கு தேவைப்படும் பொருட்கள் 48 மணி நேரத்திற்கு முன்பே ஆவின் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும் பதிவு செய்யப்பட்ட பொருட்கள் ஆவின் நிறுவன வாகனம் அல்லது மொத்த விற்பனையாளர் மூலம் விநியோகம் செய்யப்படும்.

• ஆவின் நிறுவன பால் உபபொருட்களுக்கு குறைந்தபட்சம் 8% முதல் 18% வரை கமிஷன் வழங்கப்படும்.

• இப்பாலகத்தில் ஆவின் பால் உபபொருட்களை கொண்டு மில்க்‌ஷேக், லஸ்ஸி, சுடுபால் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்யப்படலாம்.

எனவே, ஆவின் சில்லறை விற்பனை நிலைய பாலகம் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொண்டு பயன்பெறவும்.

பொது மேலாளர்(விற்பனை),

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்,

கூட்டாண்மை அலுவலகம், விற்பனை பிரிவு, நந்தனம், சென்னை-35

தொலைபேசி எண் – 9043099905, 9790773955, 9566860286

The post ’’ஆவின் சில்லறை விற்பனை நிலையம் தொடங்கலாம்..!” உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b1%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88/feed/ 0
’’அதற்காக முதலில் இந்தியாவுக்காகப் பேசுவோம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%2595-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/#respond Tue, 05 Sep 2023 04:59:38 +0000 https://madrasmurasu.com/?p=6108 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ‘வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம்!’ என்ற தலைப்பில் 04-09-2023 அன்று வெளியிட்டுள்ள Speaking for India பாட்காஸ்ட் சீரிசின் முதல் அத்தியாயம்: தமிழ்நாட்டின் முதலமைச்சராக – இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், உங்களில் ஒருவனாக, இந்தியாவிற்காகப் பேசப் போவதுதான் இந்த ‘பாட்காஸ்ட் சீரிசின்’ நோக்கம். இந்தியாவிற்காக எல்லோரும் பேசியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் […]

The post ’’அதற்காக முதலில் இந்தியாவுக்காகப் பேசுவோம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ‘வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம்!’ என்ற தலைப்பில் 04-09-2023 அன்று வெளியிட்டுள்ள Speaking for India பாட்காஸ்ட் சீரிசின் முதல் அத்தியாயம்:

தமிழ்நாட்டின் முதலமைச்சராக – இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், உங்களில் ஒருவனாக, இந்தியாவிற்காகப் பேசப் போவதுதான் இந்த ‘பாட்காஸ்ட் சீரிசின்’ நோக்கம்.

இந்தியாவிற்காக எல்லோரும் பேசியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். காலம் காலமாக, இந்திய மக்கள் அனைவரும் போற்றிப் பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தை சிதைத்து, இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பையே சிதைக்க பாரதீய ஜனதா கட்சி முயற்சி செய்கிறது.

2014-ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாரதீய ஜனதா கட்சி – தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த மக்கள் நல வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
* வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தருவோம்.

* ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு.
* உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம்.
* சொந்த வீடு இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்.
* இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும்.

இப்படி எல்லாம் வாயால் வடை சுட்டார்கள். பத்து ஆண்டு ஆகப் போகிறது. ஆனால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ‘குஜராத் மாடல்’ என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி மாடல் – இப்போது என்ன ‘மாடல்’ என்றே தெரியாமல் முடியப் போகிறது!

திராவிட மாடல் என்னென்ன சாதனைகளைத் தமிழ்நாட்டில் செய்திருக்கிறார்கள் என்று நாம் புள்ளிவிவரத்தோடு அடுக்கிய பிறகு, அவர்கள் பெருமையாகப் பேசிவந்த ‘குஜராத் மாடல்’ பற்றி, இப்போது மறந்தும் கூட பேசுவதில்லை.

இது ஒரு பக்கம் என்றால் – இன்னொரு பக்கம், நன்றாக இருந்த இந்தியாவின் பொதுத்துறை கட்டமைப்பையும் சீரழித்து, சின்னாபின்னமாக்கிவிட்டார்கள். தங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு அதை மடைமாற்றும் செயலை மட்டுமே செய்துகொண்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன் என்பது – சிலரின் நலனாக சுருங்கிவிட்டது. அரசுக்குச் சொந்தமான ‘ஏர் இந்தியா’ நிறுவனம், இப்போது தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டது.

இந்தியா முழுவதும் இருக்கும் விமான நிலையங்களும், துறைமுகங்களும் தனியார் கைக்குப் போகிறது. பிரதமர் மோடி சொன்னதுபோல், உழவர்களின் வருமானமும் இரண்டு மடங்கு ஆகவில்லை; ஏழை பாழைகளின் வாழ்க்கைத்தரமும் உயரவில்லை. இதை எல்லாம் மறைப்பதற்காகத்தான் மதவாதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி, அதில் குளிர் காயப் பார்க்கிறார்கள்.

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. விதைத்த வன்முறை, வெறுப்பு விதையானது, 2023-ஆம் ஆண்டு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைப் பற்றி எரிய வைத்திருக்கிறது. ஹரியானாவில் மூட்டிவிடப்பட்ட மதவெறித் தீ, இன்றைக்கு அப்பாவி மக்களின் உயிரையும் சொத்துகளையும் காவு வாங்குகிறது. இதற்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு – கூட்டாட்சித் தத்துவத்திற்கு – மக்களாட்சி மாண்புக்கு எப்போதெல்லாம் ஆபத்து வந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் முன்னணிப் படையாக தி.மு.க. நின்றிருக்கிறது. இதைத்தான் “You should take the DMK as the spearhead of the opposition to the unitary nature…” என்று பேரறிஞர் அண்ணா மாநிலங்களவையில் முழங்கி இருக்கிறார்..

“தமிழ்நாட்டில் கால் பதித்து நின்று இந்தியாவிற்காகப் பேசும் கட்சியாக நமது இயக்கம் இயங்க வேண்டும்” என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், ஆட்சி மாற்றங்களையே உருவாக்கிக் காட்டி இருக்கிறார் தமிழினத் தலைவர் கலைஞர். பிரதமர்களை – குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய இயக்கம் தி.மு.க. இப்போது மீண்டும் ஒரு வரலாற்றுக் கடமை நம்மை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது.
2024 தேர்தல் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட – யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தீர்மானிக்க வேண்டிய தேர்தல். 9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில், மாநிலங்களை அழிக்கின்ற படுபாதகமான பல மோசடிகள் செய்யப்பட்டிருக்கிறது.

மாநிலங்களின் நிதி உரிமையை முழுவதுமாக பறித்துவிட்டது ஜி.எஸ்.டி. இதனால், தமிழ்நாட்டிற்கு நிதி சுயாட்சி உரிமை பறிபோனதுதான் மிச்சம். ஜி.எஸ்.டி இழப்பீட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் ஒன்றிய அரசு அதை ஏற்கவில்லை.
ஒன்றிய அரசுக்கு வரியாக, தமிழ்நாடு ஏராளமான நிதியை ஆண்டுதோறும் தருகிறது. அதே நேரத்தில், தமிழ்நாடு ஒன்றிய அரசிற்கு வரி வருவாயாக செலுத்துகிற ஒவ்வொரு ரூபாய்க்கும் ஈடாக, 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது.

2014 முதல் கடந்த ஆண்டு வரை நம் மாநிலம் ஒன்றிய அரசுக்கு கொடுத்த வரி 5 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், வரிப் பகிர்வாக, நமக்குத் திரும்ப கிடைத்தது என்னவோ, வெறும் 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய்தான்.
பெற்றதை முழுவதுமாகத் தர முடியாது என்று சொன்னால் – பா.ஜ.க. ஆளுகிற மாநிலத்திற்கு மட்டும் எப்படி கொடுக்க முடிகிறது? பா.ஜ.க. ஆளும் ஒரு மாநிலம் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய்தான் வரியாகக் கொடுத்திருக்கிறது. ஆனால் வரிப் பகிர்வாக, 9 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றிருக்கிறது. இதைத்தான் ஓரவஞ்சனை என்று சொல்கிறோம். இவ்வாறு எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் ஆட்சியாக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது.

ஒன்றிய நிதிக்குழு ஒதுக்கீட்டில் தமிழ்நாடு தொடர்ந்து பெரும் நிதி இழப்பைச் சந்தித்து வருகிறது. 12-ஆவது நிதிக்குழுவில் 5.305 விழுக்காடாக இருந்த நிதி ஒதுக்கிடு, 15-ஆவது நிதிக் குழுவில் 4.079 விழுக்காடாக குறைந்திருக்கிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு இழக்கின்ற நிதி கொஞ்சம் நஞ்சமல்ல. நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய 72,311 கோடி ரூபாயை நாம் இழந்திருக்கிறோம்.

பல திட்டங்களுக்கான பெரும் பங்கு மாநில அரசால்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கான பெயர் மட்டும் ஒன்றிய அரசுக்கு வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு முத்திரைத் திட்டங்கள் என்று ஒன்று கூட இந்த 9 வருடங்களில் தரவில்லை. மாநிலங்களைப் பழிவாங்குகிற அரசாக இப்போதைய ஒன்றிய பா.ஜ.க. அரசு இருக்கிறது.

மக்களுக்கு நேரடியாக நன்மை செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிற மாநில அரசுகளை சிதைப்பதையே நோக்கமாக வைத்திருக்கிறார்கள். இது மூலமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் சிதைக்கப் பார்க்கிறார்கள்.
Social justice, Secular politics, Socialism, Equity, Social harmony, State autonomy, Federalism, Unity in diversity – இவை உயிர்வாழும் இந்தியாதான் உண்மையான இந்தியா! இணையற்ற இந்தியா! அப்படிப்பட்ட இந்தியாவை மீட்டெடுக்கத்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றப் போவது இந்த INDIA கூட்டணிதான்.

பா.ஜ.க.வின் வகுப்புவாத – வெறுப்பு அரசியலுக்கு மணிப்பூரும் ஹரியானாவும் பலியானதைப்போல மொத்த இந்தியாவும் பலியாகிவிடாமல் தடுக்க வேண்டும் என்றால், INDIA கூட்டணி வெல்ல வேண்டும்.

இதற்கான ஆரம்பகட்ட ஆலோசனைக் கூட்டங்கள் பாட்னாவிலும், பெங்களூரிலும், மும்பையிலும் நடந்துள்ளன. பன்முகத்தன்மை கொண்ட பண்பட்ட இந்தியாவைச் செதுக்குவோம்! இந்தியாவைக் காப்போம். அதற்காக முதலில் இந்தியாவுக்காகப் பேசுவோம்!

இனி இது M.K.STALIN குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலாக அமையும். எனது குரலை இந்தியாவின் குரலாக எல்லோரிடத்திலும் எடுத்துச் செல்லுங்கள்! வெல்க இந்தியா! நன்றி! வணக்கம்!

The post ’’அதற்காக முதலில் இந்தியாவுக்காகப் பேசுவோம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
வெற்றிப் பாதையில் நாம் பயணித்து வருகிறோம்..!” மும்பையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/#respond Fri, 01 Sep 2023 12:10:32 +0000 https://madrasmurasu.com/?p=6105 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. மேலும் தேர்தலுக்கான வியூகத்தையும் வகுத்து வருகின்றனர். இவர்களின் முதல் வெற்றியாக தங்களது கூட்டணிக்கு “இந்தியா” என பெயர் வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் “இந்தியா” என வைத்துள்ளது பா.ஜ.கவிற்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடித்தே தீரவேண்டும் என்ற ஒரே கருத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது பா.ஜ.கவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் முதல் இரண்டு கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்ற […]

The post வெற்றிப் பாதையில் நாம் பயணித்து வருகிறோம்..!” மும்பையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>

“வெற்றி உறுதி.. இப்போதே எனது வாழ்த்து!” - மும்பை இந்தியா கூட்டணி  கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் !

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. மேலும் தேர்தலுக்கான வியூகத்தையும் வகுத்து வருகின்றனர். இவர்களின் முதல் வெற்றியாக தங்களது கூட்டணிக்கு “இந்தியா” என பெயர் வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் “இந்தியா” என வைத்துள்ளது பா.ஜ.கவிற்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடித்தே தீரவேண்டும் என்ற ஒரே கருத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது பா.ஜ.கவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் முதல் இரண்டு கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், மும்பையில் நேற்று “இந்தியா” கூட்டணியின் கூட்டம் தொடங்கியது.

பாட்னாவில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், பெங்களுருவில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில் கூட்டணிக்கான பெயர் அறிவிக்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில் இதன் இலச்சினை (LOGO) வெளியிடப்படும். ல்லாக் கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலும், நாட்டின் பன்னோக்கை பிரதிபலிக்கும் வகையிலும் இந்த இலச்சினை அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

“வெற்றி உறுதி.. இப்போதே எனது வாழ்த்து!” - மும்பை இந்தியா கூட்டணி  கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் !

இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பேசிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் “ஒரு கட்சி ஆட்சி முடிந்து இன்னொரு கட்சியின் ஆட்சி என்பதாக இல்லாமல், எதேச்சாதிகார ஆட்சி முடிந்து, மக்களாட்சி மலரத் தேவையான கொள்கையின் மூலமாக மக்களிடையே நாம் நம்மை அடையாளப்படுத்த வேண்டும். நம்முடைய கூட்டணிக்கு இத்தகைய கொள்கைகள் தலைமை தாங்க வேண்டும்.” என்றுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மும்பை நகரில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம் பின்வருமாறு:

பாட்னா, பெங்களூரு ஆகிய இரண்டு இடங்களைத் தொடர்ந்து, மூன்றாவது கூட்டமாக மும்பையில் இந்தக் கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றி!

“வெற்றி உறுதி.. இப்போதே எனது வாழ்த்து!” - மும்பை இந்தியா கூட்டணி  கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் !

இந்தியாவைக் காக்கப் போகும் இந்த இந்தியா கூட்டணியானது கடந்த மூன்று மாதங்களாக மிகுந்த ஒற்றுமையுடனும் கட்டுக்கோப்புடனும் செயல்பட்டு வருகிறது. நமது கூட்டணியின் பலத்தைவிட, ‘இந்தியா’ என்ற பெயரே பாரதிய ஜனதா கட்சிக்குப் பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது. அதனால்தான், நம் கூட்டணியைக் கொச்சைப்படுத்திப் பேசுவதையே பா.ஜ.க.வினர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் ஒன்று சேரமாட்டார்கள்; ஒரே கூட்டத்தில் பிரிந்து விடுவார்கள் என பா.ஜ.க. நினைத்தது. ஆனால், கூட்டணியாக இணைந்து – அதற்குப் பெயரும் சூட்டி மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தை நடத்திவிட்டோம் என்பது நம்முடைய உறுதியைக் காட்டுகிறது. வெற்றிப் பாதையில் நாம் பயணித்து வருகிறோம் என்பதன் அடையாளம் இது.

பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தி மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளின் அரசை ஒன்றியத்தில் அமைப்பதே நமது அணியின் முழுமுதல் நோக்கமாகும். பா.ஜ.க.வைத் தனிமைப்படுத்தும் வகையில் – பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை முடிந்தவரை இந்த அணியில் சேர்த்தாக வேண்டும். இதனை மனதில் வைத்து அனைத்துத் தலைவர்களும் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

“வெற்றி உறுதி.. இப்போதே எனது வாழ்த்து!” - மும்பை இந்தியா கூட்டணி  கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் !

நமது கூட்டணி, இந்தியா முழுமைக்குமான கூட்டணி என்பதால் இதற்கு ஒருங்கிணைப்புக் குழுவையும் குறைந்தபட்ச செயல் திட்டத்தையும் உடனடியாக உருவாக்க வேண்டும். இந்தியா கூட்டணியின் முகமாக அந்த அறிக்கைதான் அமையும். நமது நாட்டை பா.ஜ.க ஆட்சி பல்வேறு வகைகளில் சீரழித்துள்ளது. அதனை எப்படிச் சரிசெய்யப் போகிறோம் என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்வதற்கான அறிக்கையாக அது அமைய வேண்டும்.

ஒரு கட்சி ஆட்சி முடிந்து இன்னொரு கட்சியின் ஆட்சி என்பதாக இல்லாமல், எதேச்சாதிகார ஆட்சி முடிந்து, மக்களாட்சி மலரத் தேவையான கொள்கையின் மூலமாக மக்களிடையே நாம் நம்மை அடையாளப்படுத்த வேண்டும். நம்முடைய கூட்டணிக்கு இத்தகைய கொள்கைகள் தலைமை தாங்க வேண்டும்.

இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன்பு, நிச்சயமாக பா.ஜ.க. தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கூட்டணி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவும் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கான ஒளிமயமான ஆண்டாக அமையவும் இப்போதே எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post வெற்றிப் பாதையில் நாம் பயணித்து வருகிறோம்..!” மும்பையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/feed/ 0
“சீமான் நன்றி சொன்ன அந்த இருவர்..!” https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2580%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25bf-%25e0%25ae%259a%25e0%25af%258a%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9-%25e0%25ae%2585%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2587 https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87/#respond Fri, 02 Jun 2023 02:55:11 +0000 https://madrasmurasu.com/?p=3172 நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டர் கணக்கு  மே 31- ம் தேதி முடக்கப்பட்டது. அது, சமூக வலைதளங்களில் பரபரப்பு ஆனது.  இந்நிலையில், டுவிட்டரில் சீமான் ஜூன் 1 -ம் தேதி புதுக்கணக்கை தொடங்கினார். அவரை பலர் பின் தொடர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சீமான், தனது டுவிட்டர் பக்கத்தில இரண்டு பதிவுகளை போட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு: “கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது […]

The post “சீமான் நன்றி சொன்ன அந்த இருவர்..!” first appeared on Madras Murasu.

]]>
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டர் கணக்கு  மே 31- ம் தேதி முடக்கப்பட்டது. அது, சமூக வலைதளங்களில் பரபரப்பு ஆனது.  இந்நிலையில், டுவிட்டரில் சீமான் ஜூன் 1 -ம் தேதி புதுக்கணக்கை தொடங்கினார். அவரை பலர் பின் தொடர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சீமான், தனது டுவிட்டர் பக்கத்தில இரண்டு பதிவுகளை போட்டுள்ளார்.

அதன் விபரம் வருமாறு:

“கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி!

மறுத்துப் பேசுவதற்கு மறு கருத்தில்லாதவர்கள் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் எதேச்சதிகாரக் கொடுமை கண்டு பொறுக்க வியலா கோபம் தெறிக்கும் பொங்கி எழுந்த எழுத்தைக் கொண்டு விற்போர் புரியும் தமிழ்ச் சொற்கோ கவிப்பேரரசிற்கு அன்பு நிறைந்த நன்றி!

இவ்வாறு சீமான் பதிவிட்டுள்ளார்.

சீமான் டுவிட்டர் புதுக்கணக்கை பலர் பின் தொடர்ந்தாலும் டுவிட்டர் உரிமையாளர் எலான் மாஸ்கை மட்டுமே சீமான் பின் தொடர்கிறார்.

The post “சீமான் நன்றி சொன்ன அந்த இருவர்..!” first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87/feed/ 0
’’மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசை செயல்பட விடாமல் மத்திய அரசு தடுத்து வருகிறது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d/#respond Thu, 01 Jun 2023 13:36:14 +0000 https://madrasmurasu.com/?p=3136 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (01.06.2023) முகாம் அலுவலகத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கெஜ்ரிவால்-ஐ பொறுத்தவரையில், நான் டெல்லிக்கு செல்லுகிற போதெல்லாம் அடிக்கடி அவரை சந்திக்கிற வாய்ப்பைப் பெறுவது உண்டு. டெல்லியில், மாடல் ஸ்கூல், மாடல் கிளாஸ் ரூம்ஸ் என்ற ஒரு அற்புதமான திட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதை அறிந்து, அதுபோல் தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த வேண்டும் என்று கருதி அந்த மாடல் […]

The post ’’மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசை செயல்பட விடாமல் மத்திய அரசு தடுத்து வருகிறது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (01.06.2023) முகாம் அலுவலகத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கெஜ்ரிவால்-ஐ பொறுத்தவரையில், நான் டெல்லிக்கு செல்லுகிற போதெல்லாம் அடிக்கடி அவரை சந்திக்கிற வாய்ப்பைப் பெறுவது உண்டு. டெல்லியில், மாடல் ஸ்கூல், மாடல் கிளாஸ் ரூம்ஸ் என்ற ஒரு அற்புதமான திட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதை அறிந்து, அதுபோல் தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த வேண்டும் என்று கருதி அந்த மாடல் பள்ளிகளை, மாடல் கிளாஸ் ரூம்களையெல்லாம் நானும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருடன் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தினோம்.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது, அதுவும் பெண்களுக்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது என்று உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். அந்த திட்டத்தில் ஒன்றாக மாணவியர்கள், பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குள் நுழைகிறபோது, அவர்களது கல்விக்கு உதவி செய்ய வேண்டும், நிதி உதவி வழங்கிட வேண்டும் என்று முடிவெடுத்து, ‘புதுமைப்பெண்’ என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி அதன் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு வழங்கக்கூடிய ஒரு திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.

அந்தத் திட்டத்தை டெல்லி முதலமைச்சர் நேரடியாக வந்து சிறப்பிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரும் ஒப்புதல் தந்து, வருகை தந்து அதை சிறப்பித்தார்கள். அப்படி வந்த நேரத்தில், கோட்டூர்புரத்தில் அமைந்திருக்கக்கூடிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் பார்வையிட்டு பாராட்டி மகிழ்ந்தார்கள்.

கெஜ்ரிவால், ஒரு நல்ல நண்பராக என்னோடு பழகிக் கொண்டிருக்கக்கூடியவர். நானும் அவரிடத்திலே நல்ல நண்பராக பழகிக் கொண்டிருக்கிறேன்.
டெல்லி முதலமைச்சருக்கு அதேபோல் அவர் சார்ந்திருக்கக்கூடிய அவர் தலைவராக இருக்கக்கூடிய ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து, மோடி தலைமையில் இருக்கக்கூடிய பிஜேபி ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய ஆட்சியை சுதந்திரமாக செயல்படவிடாமல் பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் தில்லி துணைநிலை ஆளுநர் மூலமாகத் பல்வேறு தொல்லைகளெல்லாம் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. “பணியாளர்கள்” தொடர்பாக 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் டெல்லி அரசுக்கு சாதகமான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆனால் அது நிறைவேறக்கூடாது என்ற ஒரு எண்ணத்தோடு பிஜேபி ஆட்சி, அதை எதிர்த்து ஒன்றிய அரசு இன்றைக்கு ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பித்து இருக்கிறது.

இந்த அவசரச் சட்டத்தை நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்க்கும், அதில் எந்த மாற்றமும் கிடையாது. எனவே, இதுகுறித்து இரு முதலமைச்சர்களும் இன்று எங்களோடு கலந்து பேசி, மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர்களும் பல்வேறு கட்சியினுடைய தலைவர்களும் என்னென்ன நிலையில் இருக்கிறார்கள் என்ற அந்த சூழ்நிலையைப் குறித்து நாங்கள் கலந்து பேசினோம்.

ஆகவே, அந்த வகையில் இந்தக் கூட்டம் நடந்திருக்கிறது. நிச்சயமாக, எல்லா மாநிலத்தினுடைய முதலமைச்சர்களும் அகில இந்திய அளவிலுள்ள கட்சியின் தலைவர்களும் இதற்கு ஆதரவு தரவேண்டும் என்று நான் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அவர்களையெல்லாம் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த சந்திப்பு என்பது கடந்த வாரமே நடந்திருக்க வேண்டும். சென்ற வாரம் டெல்லியினுடைய முதலமைச்சர் கெஜ்ரிவால் என்னோடு தொடர்பு கொண்டு நேரம் கேட்ட நேரத்தில் அப்போது நான் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்லுகிறேன், வந்தவுடன் தேதி தருகிறேன் என்று சொன்னேன்.

நேற்று இரவு தான் நான் சென்னைக்கு வந்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். வந்தவுடனே அவரை சந்திக்க நேரம் கொடுத்து, அந்த வகையில்தான் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. மிக ஆரோக்கியமாக, நாட்டிலே ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அந்த உணர்வோடு இந்தக் கூட்டம் நடந்திருப்பது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. ஆகவே இது தொடர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்’’.

இதன் பின்னர், செய்தியாளர்கள் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

12-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் பற்றி பேசியிருக்கிறீர்களா?

அது பற்றியும் பேசியிருக்கிறோம். அது சூழ்நிலை வருகிறபோது சொல்கிறோம். 12-ஆம் தேதி திரு. நிதிஷ்குமார் அவர்கள் கூட்டத்தைக் கூட்டுவதாக முடிவு செய்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் அதில் கலந்துகொள்ள முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது, காரணம், ராகுல் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிற காரணத்தால்.

அதேபோல் 12 ஆம் தேதி என்னைப் பொறுத்தவரையில், நானும் கலந்துகொள்ள முடியாத நிலை. காரணம், ஒவ்வொரு வருடமும் மேட்டூர் அணையை திறந்துவைக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. ஆகவே, தேதியை மாற்றி வையுங்கள் என்று நானும் சொல்லியிருக்கிறேன், கார்கே சொல்லியிருக்கிறார். இப்போது கெஜ்ரிவாலிடம் நாங்கள் சொல்லியிருக்கிறோம். அவரும் தேதி மாற்றுவதற்கான முயற்சியில் நான் ஈடுபடுகிறேன், கட்டாயமாக மாற்றி வைக்கப்படும் என்ற உறுதியை தந்திருக்கிறார்.

ஒன்றிய அரசு, மாநில அரசினுடைய அதிகாரங்களை தொடர்ந்து பறித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இப்படியான ஒரு ஒன்றிணைப்பு என்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ஜனநாயகத்தைக் காப்பதற்கு இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பு அவசியம் தேவை. இது தொடர வேண்டும். இது நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டுமல்ல, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இது தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம், அது தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

The post ’’மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசை செயல்பட விடாமல் மத்திய அரசு தடுத்து வருகிறது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d/feed/ 0
முதலமைச்சரின் டைரிக் குறிப்பு “சிங்கப்பூர், ஜப்பான் பயணம்..!” https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25af%25e0%25ae%25a3%25e0%25ae%25ae%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/#respond Wed, 31 May 2023 14:41:49 +0000 https://madrasmurasu.com/?p=3058 முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்திட சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு நான் மேற்கொண்ட 9 நாள் பயணத்தை நிறைவுசெய்து தாயகம் திரும்புகிறேன். என் பயண அனுபவங்களைச் சிறு டைரி குறிப்பு போல் உங்களுடன் பகிர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கை குலுக்கிய சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகள்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் அயல்நாட்டிலிருந்து எழுதும் அன்பு மடல். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இப்போது இரவு 1.30 மணி. இந்திய நேரத்தைவிட ஜப்பான் நேரம் மூன்றரை மணி […]

The post முதலமைச்சரின் டைரிக் குறிப்பு “சிங்கப்பூர், ஜப்பான் பயணம்..!” first appeared on Madras Murasu.

]]>
முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்திட சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு நான் மேற்கொண்ட 9 நாள் பயணத்தை நிறைவுசெய்து தாயகம் திரும்புகிறேன்.

என் பயண அனுபவங்களைச் சிறு டைரி குறிப்பு போல் உங்களுடன் பகிர்கிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கை குலுக்கிய
சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகள்!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் அயல்நாட்டிலிருந்து எழுதும் அன்பு மடல்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இப்போது இரவு 1.30 மணி. இந்திய நேரத்தைவிட ஜப்பான் நேரம் மூன்றரை மணி நேரம் முன்கூட்டியே இருக்கும். அதாவது, உடன்பிறப்புகளாகிய உங்களுக்கு இப்போது இரவு 10 மணி. கழகத்தின் சார்பிலான பொதுக்கூட்டங்கள், ஆலோசனைகள், நம் உயிர்நிகர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டுத் தொடக்க விழாவை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் கொண்டாடி மகிழ்வதற்கான ஆயத்த வேலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான இயக்கப் பணிகளை முடித்துவிட்டு, குடும்பத்தினர் முகம் கண்டு சற்று மகிழலாம் என்ற நினைப்புடன் வீடு திரும்பிக் கொண்டிருப்பீர்கள். உடன்பிறப்புகளாம் உங்கள் முகத்தை நான் நேரில் பார்த்து 9 நாட்களாகிறது. கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை என் தோளில் சுமத்தி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பையும் சுமக்கும்படி கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கு உழைத்தீர்கள். அன்பிற்கினிய தமிழ்நாட்டு மக்களும், நெஞ்சிற்கினிய உடன்பிறப்புகளாகிய நீங்களும் அளித்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாட்டை முன்னேற்றிட எல்லா வகையிலும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

பத்தாண்டுகால இருட்டை ஒவ்வொரு பகுதியாக விரட்டி, விடியலைத் தந்து கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. இன்னும் சில பகுதிகளில் இருட்டு ஒளிந்து கொண்டிருக்கிறது. அதையும் விரட்டி, ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே நம் இலக்கு. அதனால்தான் கடந்த இரண்டாண்டுகளில் தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள், முதலீடுகள் தொடர்பான நிகழ்வுகளில் அதிகமாகவும் ஆர்வமாகவும் பங்கேற்று வருகிறேன். தொழில்வளம் பெருக வேண்டும், வேலை வாய்ப்புகள் உயர வேண்டும். உற்பத்தி அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார முன்னேற்றம் காண முடியும். அதற்காக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை திராவிட மாடல் அரசிற்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார வல்லுநர்கள் எடுத்துரைத்திருந்தனர்.

தொழில்துறை அமைச்சராகத் தன் பணியை சிறப்பாக நிறைவேற்றி, நிதியமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக ஏற்கனவே வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டபோது, “அடுத்த முறை உங்கள் மாநில முதலமைச்சரை அழைத்து வாருங்கள்” என அங்குள்ளவர்கள் சொன்னதைத் தெரிவித்து, இந்தப் பயணம் குறித்து வலியுறுத்தியிருந்தார். தொழில்துறைக்குப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்களும் இதனைக் குறிப்பிட்டுக் காட்டினார். சிங்கப்பூரின் போக்குவரத்துத் துறை அமைச்சரும் நண்பருமான திரு.ஈஸ்வரன் ஏற்கனவே எனக்கு அழைப்பு விடுத்திருந்ததும் நினைவுக்கு வந்தது. ஜப்பான் நாட்டுடன் தமிழ்நாட்டுக்கு நல்லுறவு இருப்பதையும் உணர்ந்திருக்கிறேன். இந்த நிலையில்தான் கடல் கடந்து, சிங்கப்பூர் – ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணச் சிறகுகளை விரித்தேன். 9 நாட்கள் வெளிநாட்டுப் பயணமா, இவ்வளவு நாட்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்ததில்லையே என நான் தயங்கினாலும், இந்தப் பயணம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது என்பதால் பயணச் சிறகுகள் விரிந்தன.

சிங்கப்பூரிலும் ஜப்பானிலும் நாம் நினைத்தபடி, வெற்றிகரமாக பயணம் அமைந்த நிலையில், தாய்மடியாம் தமிழ்நாட்டை நோக்கிப் பயணிக்க ஆயத்தமாகும் சூழலில், உடன்பிறப்புகளிடம் இந்தப் பயணத்தின் நோக்கத்தையும், பயண நிகழ்வுகளையும், அவை ஏற்படுத்தவிருக்கும் விளைவுகளையும் விளக்கமாகச் சொல்லிட வேண்டும் என்கிற என் மனதின் விருப்பமே இந்தக் கடிதம். ஒரு டைரி போல இதனை எழுதுகிறேன்.

அடுத்தவர் டைரியைப் படிக்கலாமா என்ற தயக்கம் தேவையில்லை. நாம் யாரும் அடுத்தவர்களல்ல. கழகம் எனும் கொள்கைக் குடும்பத்தில் எல்லாரும் கலைஞரின் உடன்பிறப்புகள். அதனால் பயணத்தின் நாட்குறிப்பை உங்களிடம் பதிவிடுகிறேன்.

மே 23-செவ்வாய்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்படும் முன் செய்தியாளர்களைச் சந்தித்தேன். இந்தப் பயணத்தின் மூலமாக எவ்வளவு முதலீடு கிடைக்கும் என்ற கேள்வி அவர்களிடமிருந்து வெளிப்பட்டது. “எவ்வளவு முதலீடு என்பதைவிட, 2024 ஜனவரியில் சென்னையில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு சிங்கப்பூர் – ஜப்பான் நாட்டின் நிறுவனங்களை அழைப்பதுதான் பயணத்தின் முதன்மையான நோக்கம்” என்பதைத் தெரிவித்தேன். கடந்த ஆண்டு துபாய்க்குப் பயணம் செய்தபோது, ஒப்பந்தமான முதலீடுகள் எந்தளவு வந்திருக்கிறது என்ற கேள்வியையும் செய்தியாளர்கள் கேட்டபோது, எந்தெந்த நிறுவனங்களிலிருந்து எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்ற விவரத்தையும் ஆதாரத்துடன் அவர்களிடம் தெரிவித்தேன். மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளைத் தெரிவித்து வழியனுப்பினார்கள் செய்தியாளர்கள். விமான நிலையம் வரை வந்திருந்த மாண்புமிகு அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரிடமும் அன்புடன் விடைபெற்றேன். இயந்திரப் பறவை எனப்படும் விமானம் தன் சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்கியது.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம். நம்மைவிட முன்கூட்டியே அவர்களுக்கு நேரம் ஓடும். இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் சிங்கப்பூரில் தரையிறங்கினேன். சிங்கப்பூர் நேரம், இரவு 7 மணி. சிங்கப்பூர் பயணத்தில் என்னுடன் தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ், தொழில் – முதலீட்டு ஊக்குவிப்பு – வணிகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ஆகியோர் உடனிருந்தனர். எனக்கான உணவு, என் உடல்நலன் ஆகியவற்றை கவனித்துக்கொள்ளும் பொருட்டு என் துணைவியாரும் உடன்வந்தார்.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்தியத் தூதர் திரு.குமரன் அவர்கள் வரவேற்றார். திருமதி.அமுதா ஐ.ஏ.எஸ். அவர்களின் சகோதரர். நல்வரவேற்புடன், நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டலுக்குப் புறப்பட்டோம். இரவு நேரமானபோதும், சிங்கப்பூர் வாழ் தமிழ்ச் சொந்தங்கள் ஹோட்டல் வரவேற்பரங்கில் காத்திருந்து, அன்பைப் பொழிந்து வரவேற்பளித்தனர். டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த சுதர்சன் சீனிவாசன் அவர்களும் வரவேற்றார். ஹோட்டல் அறைக்குச் சென்றபிறகும் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் சிங்கப்பூர் பயணத் திட்டம் குறித்த ஆலோசனைகள் நீடித்தன. சிங்கப்பூரில் நம் வீட்டு சமையல் போன்ற உணவை அருமை நண்பர் சிங்கப்பூர் ராம் தனது இல்லத்திலிருந்து கொண்டு வந்து பரிமாறினார். அதில் அன்பும் சுவையும் மிகுந்திருந்தது.

மே 24-புதன்

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று முக்கிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் தனித்தனியான சந்திப்புடன் அன்றைய நாள் தொடங்கியது. டெமாசெக் நிறுவனத்தின் சேர்மனும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு. தில்லான் பிள்ளை சந்திரசேகரா, செம்ப்கார்ப் நிறுவனத்தின் சேர்மனும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு.கிம்யின் வாங், கேபிட்டாலேண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான திரு.சஞ்சீவ் தாஸ்குப்தா ஆகியோருடனான சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சென்னையில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அவர்களுக்கு அழைப்பு விடுத்தேன்.

மாலையில் சிங்கப்பூரின் தொழில் – வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரான தமிழர் திரு.ஈஸ்வரன் அவர்களைச் சந்தித்து உரையாடினேன். அவர் என் இனிய நண்பர். சென்னையின் மேயராகவும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகவும் நான் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டபோது அவரைச் சந்தித்திருக்கிறேன். அவரும் சென்னை வரும்போது என்னைச் சந்திப்பது வழக்கம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்ற பிறகு, சென்னையில் என்னைச் சந்தித்த திரு.ஈஸ்வரன் அவர்கள் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளைப் பாராட்டியதுடன், சிங்கப்பூருக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.

சிங்கப்பூர் அரசு செயல்படுத்தும் திட்டங்களைப் போல தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும் என்பது அவரது விருப்பம். அவரைச் சந்தித்து உரையாடியபோது, முன்பு சிங்கப்பூர் வந்த போது இருந்ததைவிட இப்போது அதிக பசுமையாக இருக்கிறதே, நகரக் கட்டமைப்பை எப்படி சிறப்பாகக் கையாள்கிறீர்கள், சாலையோர நடைபாதைகளை மக்கள் எப்படி இவ்வளவு சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என்பவை குறித்தெல்லாம் பேசிவிட்டு, சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டுக்கான தொழில் வாய்ப்புகள் குறித்தும் ஆலோசித்தோம்.

திரு.ஈஸ்வரன் அவர்களுடன் புறப்பட்டு, சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடனான கருத்தரங்கில் பங்கேற்றேன். சிங்கப்பூரில் உள்ள தொழில் கூட்டமைப்பினர் அன்புடன் வரவேற்றனர். கருத்தரங்கில், தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் ஆகியோர் பேசியபிறகு, முதலீட்டாளர்களுடன் நான் உரையாடினேன். தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள நீண்டகால உறவை எடுத்துக்கூறி, வந்தாரை வாழவைக்கும் சிங்கப்பூர், இனி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் கை கொடுக்கும் என்று நான் நம்புவதாகச் சொன்னபோது அனைவரும் கை தட்டல்களால் வரவேற்றனர். முதலீட்டாளர் மாநாட்டுக்கான அழைப்பினை விடுத்து அவர்களிடமிருந்து விடைபெற்றேன்.

தொழில் முதலீடுகள் சார்ந்த தொடர்ச்சியான சந்திப்புகளையடுத்து, மனது சற்று இளைப்பாறும் வகையில் சிங்கப்பூர்வாழ் தமிழ் நெஞ்சங்கள் கலாச்சார-பண்பாட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சரான தமிழர் சண்முகம் அவர்களை அந்த விழாவில் சந்தித்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சி பற்றிய அழைப்பிதழை அவரிடம் சிங்கப்பூர் தமிழர்கள் நேரில் கொடுத்தபோது, தமிழ்நாட்டு முதலமைச்சரை வரவேற்க நானும் விழாவுக்கு வருகிறேன் என மனப்பூர்வமான அன்புடன் அவர் வருகை தந்திருந்தார். சிங்கப்பூர் பிரதமருக்கு அடுத்த நிலையில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கக்கூடிய தமிழரான திரு.சண்முகம், அந்நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறார்.

சிந்தனை வளமும் செயல்பாட்டுத் திறமும் கொண்ட சிங்கப்பூர் நாட்டின் திரு.சண்முகம் அவர்கள், தமிழ்நாட்டில் நடைபெறும் நமது திராவிட மாடல் ஆட்சியை எந்தளவு கவனிக்கிறார் என்பதை அவரது பேச்சில் உணர முடிந்தது. ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வழங்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை சிறப்பாக எடுத்துரைத்தார். பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், காலைச் சிற்றுண்டித் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கான மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் பாராட்டினார்.

கலாச்சார-பண்பாட்டு விழாவில், சிங்கப்பூரில் வாழும் தமிழின் இளந்தலைமுறையினர் அரங்கேற்றிய மயிலாட்டம்-ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக இருந்தன. கடல் கடந்த நாட்டில் இருந்தாலும், சிங்கப்பூர் தமிழர்களிடம் தமிழ் மண்ணின் மணம் வீசுவதையும், தமிழர் என்ற உணர்வு ஆழமாக வேரோடி இருப்பதையும் உணர்ந்தேன். மகிழ்ந்தேன். இந்தப் பண்பாட்டுத் தொடர்பு என்றென்றும் நீடிக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., அவர்கள் தனது பேச்சில் சிறப்பான முறையில் எடுத்துக்காட்டினார். சிங்கைவாழ் தமிழர்களின் உணர்வையும் உழைப்பையும், சிங்கப்பூர் நாட்டின் வளர்ச்சிக்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் என்னுடைய பேச்சில் எடுத்துரைத்தேன்.

தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியில் அவர்கள் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். பரப்பளவில் சிறிய நாடான சிங்கப்பூர் உலகளவில் இன்று உயர்ந்து நிற்கக் காரணமான அதன் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ அவர்கள். சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் உழைப்பை மதித்துப் போற்றியதுடன், சிங்கப்பூரின் அரசு நிர்வாக மொழிகளில் ஒன்றாகத் தமிழையும் இடம்பெறச் செய்த மாண்பாளரான லீ குவான் யூ அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் பெருமை சேர்க்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்படும் என்றும், மன்னார்குடியில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டு, அங்கே அவரது சிலை நிறுவப்படும் என்றும், பண்பாட்டு விழாவில் அறிவித்த போது, வரவேற்பும் ஆரவாரமும் நெடுநேரம் நீடித்தன. தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தாய் மண்ணில் பெருமை சேர்க்கப்படுகிறது என்ற உணர்வே சிங்கை தமிழர்களிடமிருந்து வெளிப்பட்டது.

சிங்கப்பூரில் வாழும் தமிழர்களில் பலர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அதனால்தான், மன்னார்குடியில் நினைவுச் சின்னம் என அறிவித்தேன். விழாவில் கலந்துகொண்ட நம் தொழில்துறை அமைச்சரும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கு அது கூடுதல் மகிழ்வைத் தந்திருக்கும். டெல்டாகாரன் என்பதை என்றும் மறவாத எனக்கு அவரைவிட கூடுதல் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு.

மலேயா என்ற பெயரில் இன்றைய மலேசியாவும் சிங்கப்பூரும் ஒன்றாக இருந்த காலத்திலேயே அங்கு வாழ்ந்த நம் தமிழர்களின் நலனுக்காகப் பரப்புரைப் பயணம் மேற்கொண்டவர் தந்தை பெரியார். அவரது இயக்கத்தின் தளபதியாக விளங்கிய, நம் கழகத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் கோலாலம்பூர் சென்று உரையாற்றியபோது, அவரது பேச்சைக் கேட்கும் ஆவலுடன் அந்த மேடையில் அமர்ந்திருந்தவர் லீ குவான் யூ. அண்ணா அவர்களின் பேச்சாற்றலையும், தமிழர்கள் வாழ்வின் மீதான அவரது அக்கறையையும், உலகளாவிய சிந்தனைகளையும் அறிந்து அவரை தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சிறப்பித்தவர் லீ குவான் யூ. பேரறிஞர் அண்ணாவைத் தனது மூத்த சகோதரன் என்று சொன்னார். லீ குவான் யூ அவர்கள் மீது நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் பெரும் மதிப்பு உண்டு என்பதை, லீ குவான் யூ மரணத்தின்போது, அவரை ‘சிங்கப்பூரின் நாயகர்’ எனப் போற்றிய கலைஞரின் இரங்கல் அறிக்கை வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். முதலமைச்சராக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சிங்கப்பூர் வருகை தந்தபோது, லீ குவான் யூ அவர்களின் நிர்வாகத் திறனைப் பாராட்டியதுடன், தமிழர்களின் உழைப்பையும் போற்றினார். என்றும் தொடரும் இந்தத் தமிழுணர்வின் அடையாளமாகத்தான் உங்களில் ஒருவனான நானும் சிங்கைவாழ் தமிழர்களிடம் உரையாற்றினேன்.

மே 25-வியாழன்

உதயசூரியனின் கதிர்க் கைகள் ஹோட்டல் அறைக்குள் நுழைந்து, பணிகளை நினைவுபடுத்தி எழுப்பின. காலைப் பொழுதில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் திரு.சண்முகம் அவர்களைச் சந்தித்தேன். இங்குள்ள தமிழர்கள் தாய்த்தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் வந்து பண்பாட்டுப் பெருமையை அறிந்து கொள்ளவும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உதவிடவும் ஆர்வமாக இருப்பதை எடுத்துக்கூறிய அவர், மதுரைக்கும் சிங்கப்பூருக்குமிடையே நேரடி விமானச் சேவை போதுமான அளவில் அமைந்தால் அவர்களின் ஆர்வம், செயல்பாடாக நிறைவேறும் என்பதைத் தெரிவித்தார். இந்திய ஒன்றிய அரசிடம் இதனை வலியுறுத்தி, விரைவில் உரிய அளவில் விமானச் சேவைக்கு ஏற்பாடு செய்வதாக அவரிடம் தெரிவித்து, அவரையும் முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைத்தேன். சிங்கப்பூரின் முன்னாள் அதிபரான தமிழர் எஸ்.ஆர்.நாதன் அவர்களுக்குத் தமிழ்ப் பாடம் நடத்தியவர் முனைவர் சுப.திண்ணப்பன். தான் தமிழ் மேல் கொண்ட பற்றுக்குக் காரணமே, திருவாரூரில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பேச்சுதான் எனப் பூரிப்பாகச் சொன்னார். சிங்கையில் தமிழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து தொண்டாற்றி வருபவர். அவரது தமிழ்ச் சேவையைப் பாராட்டி அவருக்குச் சிறப்பு செய்தேன். கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டதை அவர் பாராட்டி, தமிழர் பெருமைக்கு இது ஒன்று போதும் என்று மனதாரப் புகழ்ந்தார்.

சிங்கப்பூர் ‘தமிழ் முரசு’ நாளிதழ் அந்நாட்டுத் தமிழர்களின் குரலாக 1935 முதல் ஒலித்து வருகிறது. திருவாரூரில் பிறந்து, சிங்கப்பூரில் வளர்ந்து, அந்நாட்டு அரசுடன் இணைந்து தொண்டாற்றிய தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களால் வார ஏடாகத் தொடங்கப்பட்ட இந்த இதழ் இன்று நாளேடாக சிங்கப்பூர்-மலேசியா தமிழர்களிடம் தனி இடம் பிடித்துள்ளது. சிங்கப்பூர் பயணம் பற்றி ‘தமிழ் முரசு’ இதழுக்கு ஒரு நேர்காணல் அளித்தேன்.

தமிழர்கள் நிறைந்துள்ள சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்று, அங்கு தமிழர்களுடன் தேநீர் அருந்தியும், அவர்களுடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தேன். சிங்கப்பூர் பயணம் முழுவதுமே சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது. அந்த உணர்வுடன், சிங்கப்பூரிலிருந்து ஜப்பான் நாட்டின் ஒசாகா நகருக்கு விமானத்தில் புறப்பட்டோம். 7 மணி நேரப் பயணம். பல ஆயிரம் மைல்கள் கடந்திருந்தாலும் மனது தமிழ்நாட்டையே சுற்றி வந்தது. வெளிநாட்டில் இருநதாலும், டி.வி. சேனல்கள், சமூக வலைத்தளங்கள், வாட்ஸ்அப், செல்போன் கால்கள் வழியாக தமிழ்நாட்டின் நிலவரத்தை உடனுக்குடன் தெரிந்துகொண்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்கியபடியேதான் இருந்தேன். இரவு 11 மணிக்கு ஜப்பான் நாட்டின் முக்கிய நகரமான ஒசாகா சென்றடைந்தோம். விமான நிலையத்தில், இந்தியத் தூதரகத்தின் கான்சல் ஜெனரல் திரு.நிகிலேஷ் கிரி வரவேற்பளித்தார்.

மே 26 -வெள்ளி

ஜப்பானின் தலைநகரம் டோக்கியோ என்றால் அந்நாட்டின் தொழில் நகரம் ஒசாகா. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி குறித்து இங்குள்ள முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஏற்கனவே என்னிடம் தெரிவித்திருந்தார். அதனால் இந்தப் பயணத்தில் ஒசாகாவுக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவித்திருந்தேன். அங்குள்ள முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஒசாகா பயணத்தில், டைசல் என்ற புகழ் பெற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த நிகழ்வாக, ஒசாகா முதலீட்டாளர்களுடனான கருத்தரங்கம் நடைபெற்றது. ஜப்பானிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில், உற்பத்தி சார்ந்த துறைகளில் நிறைய முதலீடுகளைச் செய்திருக்கின்றன. அதுபோல ஃபின்டெக் சிட்டி உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த துறைகளிலும் முதலீடு செய்ய வேண்டும் என அவர்களிடம் தெரிவித்து, உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தேன்.

சுறுசுறுப்பான உழைப்புக்குப் பெயர் பெற்றவர்களான ஜப்பானியர்களின் நேரம் தவறாமை மிகவும் கவர்ந்தது. திட்டமிட்ட நேரத்திற்கு மேல் ஒரு நிமிடத்தைக்கூட வீணடிக்காமல் மிகச் சரியாகத் தொடங்கி, கூட்டத்தின் நோக்கத்தைச் சரியாக வெளிப்படுத்தி, சரியான நேரத்தில் நிகழ்ச்சிகளை நிறைவு செய்யும் அவர்களின் பண்பு என்னை மிகவும் கவர்ந்தது. பொதுவாக, நானும் நிகழ்ச்சி தொடங்கும் நேரத்திற்கு 5 நிமிடம் முன்பாக அரங்கிற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஜப்பானியர்கள் அதில் மிகவும் அக்கறை செலுத்தி உழைக்கிறார்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்று தமிழ்நாட்டில் நாம் சொல்வதை, ஜப்பானியர்கள் வாழ்க்கையாகவே கடைப்பிடிப்பதைக் கண்டேன்.

முதலீட்டாளர் சந்திப்பு நிறைவடைந்த பிறகு, அவர்களுடன் மதிய உணவு சாப்பிடுவதற்கான வாய்ப்பு அமைந்தது. ஜப்பானில் பாலாஜி பவன் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தும் அன்பர் குறிஞ்சி செல்வன் மற்றும் அவர்களின் துணைவியார், தமிழ்நாட்டு உணவு வகைகளை எங்களுக்கு வழங்கினர். ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் திரு.நோபுஹிகோ யமாகுஜி அவர்களுடனான மரியாதை நிமித்தமான சந்திப்பும் அன்றைய மதிய உணவு வேளையில் நடைபெற்றது. ஒசாகாவில் உள்ள பழமையான கோட்டையைப் பார்க்க வேண்டும் என்று துணை ஆளுநர் கேட்டுக்கொண்டார். திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் நிறைவடைந்ததும் நிச்சயம் கோட்டைக்குச் செல்கிறேன் என்று அவரிடம் தெரிவித்தேன். லஞ்ச் மீட்டிங்கில் தொழில் முதலீடு தொடர்பான உரையாடல்கள் வெற்றிகரமாக அமைந்தன.

அதன் பின்னர், ஒசாகாவில் உள்ள கோமாட்சு என்ற பிரம்மாண்டமான தொழிற்சாலைக்குச் சென்றோம். கட்டமைப்புகளுக்குத் தேவையான நவீன இயந்திரங்களைத் தயாரிக்கும் கோமாட்சு நிறுவனம், முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் நான் அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டின் ஒரகடத்தில் தனது தொழிற்சாலையை அமைத்தது. 2007-ஆம் ஆண்டு நான்தான் அதனைத் திறந்து வைத்தேன். அதன் தலைமை நிறுவனம்தான் ஒசாகாவில் உள்ளது. அதன் இந்திய நிறுவனத்தின் (தமிழ்நாட்டில் உள்ளதன்) தலைவரும் அங்கு வந்திருந்தார். முக்கியப் பொறுப்பில் உள்ள மற்றவர்களும் வந்திருந்தனர். கோமாட்சு தொழிற்சாலையின் வாசலுக்கு கார் செல்லும்போதே, அதன் தொழிலாளர்கள் வரிசையாக நின்று கை தட்டி வரவேற்பளித்தனர். ஜப்பானிய பாரம்பரிய முறைப்படி, இரண்டு கைகளையும் முன்பக்கம் வைத்து, முதுகைச் சற்று சாய்த்து நிமிர்ந்து தங்கள் வணக்கத்தை தெரிவித்தனர். நானும் அவர்கள் அன்பை ஏற்று, அவர்கள் மரபுப்படியே நன்றி தெரிவித்தேன்.

நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு விவசாயியால் தொடங்கப்பட்டது கோமாட்சு நிறுவனம். தன்னுடைய நிலத்திற்கேற்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கருவிகளை உருவாக்கத் தொடங்கி, இன்று உலகளவில் பெயர் பெற்றுள்ளது. ஒவ்வொரு இயந்திரமும் எப்படி தயாரிக்கப்படுகிறது, அதனுடைய உதிரி பாகங்கள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன, எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் பணி எப்படி நடைபெறுகிறது என்பதை எங்களுக்கு விளக்கினர். தமிழ்நாட்டில் ஒரகடத்தில் உள்ள கோமாட்சு நிறுவனத்தில் மாதந்தோறும் 300-க்கும் அதிகமான இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் முதலீடு செய்ய வேண்டும் என ஒசாகாவில் உள்ள தலைமை நிறுவனத்தாரிடம் தெரிவித்து, முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தேன்.

மே 27- சனிக்கிழமை

மன்னராட்சியின் அடையாளங்களை இன்றளவும் கொண்டுள்ள நாடுகளில் ஜப்பானும் ஒன்று. போர்ச் சூழல் காரணமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ அரசர்கள் தங்கள் தலைநகர்களை மாற்றுவது உண்டு. நம் நாட்டில் சோழர்கள், பாண்டியர்கள் ஆகியோரின் தலைநகரங்கள் பற்றி பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அதுபோலவே, ஜப்பான் நாட்டில் ஒசாகாவும் ஒரு காலத்தில் தலைநகராக இருந்துள்ளது. அதன் அடையாளம்தான் பழமையான கோட்டை. அதனைப் பார்க்கச் சென்றபோது, பல நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தனர். ஜப்பான் நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களும் கோட்டையின் வரலாற்றை அறிந்து கொள்வதற்காக வந்திருந்தனர். எங்களைப் பார்த்ததும், எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள்.

“இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன். அந்த மாநிலத்தின் முதலமைச்சர்” என்று அந்த மாணவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். என் துணைவியாரிடமும் மாணவ-மாணவியர் அன்பைப் பொழிந்தனர். “உங்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளலாமா?” என்றும் கேட்டனர். மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களுடன் படம் எடுத்து மகிழ்ந்தோம். மாணவ-மாணவியரின் ஆனந்தக் கூக்குரல், மற்ற சுற்றுலாப் பயணிகளின் பார்வையையும் எங்களை நோக்கித் திருப்பிவிட்டது.

ஒசாகா கோட்டைக்குள் ஜப்பானிய அரசர்கள் பற்றிய குறிப்புகள், மன்னர்களின் உடைகள், அவர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், சந்தித்த போர்க்களங்கள், ராஜமுத்திரை பதித்த கடிதங்கள், எதிரிகளாலும் இயற்கைச் சீற்றத்தாலும் கோட்டை தாக்கப்பட்டு உருமாற்றங்கள் அடைந்த விவரம் எனப் பலவும் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. ஜப்பானைச் சுற்றிலும் கடல் என்பதால் பழங்காலத்திலேயே பிறநாடுகளுடன் வாணிபத் தொடர்பு இருந்துள்ளது. பண்டமாற்று முறையைக் கடைப்பிடித்துள்ளனர். தொல்லியல் ஆய்வுகள் – வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியாவுடன் நிறைய அளவில் பண்டமாற்று வாணிபம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்பதையும் கோட்டையில் இருந்தவர்கள் விளக்கினர். கீழ்த்திசை நாடுகள் நோக்கி கடல் வழியே சோழ மன்னர்கள் பயணித்தது நினைவில் நிழலாடியது.

கோட்டையை சுற்றிப் பார்த்தபிறகு, ஒசாகாவில் உள்ள ‘தி இந்தியன் கிளப்’ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பண்பாட்டு விழாவுக்குப் புறப்பட்டோம். ஒரு மணி நேரப் பயணத்தில் விழா அரங்கிற்குச் சென்றோம். ஒசாகாவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து அளித்த வரவேற்பு மகிழ்வைத் தந்தது. விழாவில், தமிழர் கலை வடிவமான பரதநாட்டியம் அரங்கேற்றப்பட்டது. ஜப்பான் நாட்டில் பரதநாட்டியக் கலையை முதன்முதலில் கற்றுக் கொண்டவரான அகிமி சகுராய், அதனை ஜப்பானிய மாணவியர் பலருக்கும் கற்றுத் தந்திருக்கிறார். அவர்கள் மிகச் சிறப்பாக ஆடினர். விழாவுக்கு வந்திருந்த அகிமி சகுராய் அவர்களை வாழ்த்தினேன். இந்தியன் கிளப் நிகழ்வில் குழுமியிருந்தவர்களிடம், அவர்களின் உழைப்பை, வளர்ச்சியைப் பாராட்டி, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் எடுத்துக்கூறுங்கள் எனத் தெரிவித்தேன். எங்கு சென்றாலும், யாரைச் சந்தித்தாலும் அது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய வாய்ப்பாக அமைய வேண்டும் என்பதே என் முதன்மை நோக்கமாக இருந்தது.

மே 28-ஞாயிறு

ஒசாகாவில் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்த பணியாளர்கள் மிகுந்த அன்புடன் வழியனுப்பினர். ஒசாகா கான்சல் ஜெனரல் திரு.நிகிலேஷ் கிரி அவர்களும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் உடனிருந்து வழியனுப்பினார். அங்கிருந்து டோக்கியோவுக்கு அதிவேக புல்லட் ரயிலில் பயணித்தோம். வரும் வழியில் உள்ள ஊர்களில் உள்ள வீடுகளையும் மக்களையும் பார்த்தபடியே பயணம் தொடர்ந்தது. ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் உள்ள இடைவெளியில்கூட, தோட்டம் அமைத்து விவசாயம் செய்கிறார்கள். அதனால் எந்தப் பக்கம் பார்த்தாலும் பசுமை கண்களை நிறைத்தது. ஜப்பானில் உள்ள மலைகளில் உயரமான ப்யூஜி மலையை பயண வழியில் காண முடிந்தது. இந்தியாவில் உயரமான இமயமலை, பனிமலையாகும். ஜப்பானின் ப்யூஜி எரிமலையாகும். ஜப்பானியர்கள் இந்த மலையைப் புனிதமாகக் கருதுகிறார்கள். பயண வழியெங்கும் பல ஊர்களை இணைப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள பாலங்களைத் தொடர்ந்து காண முடிந்தது.

ஒசாகா-டோக்கியோ இரண்டு நகரங்களுக்கும் இடைப்பட்ட தூரம், ஏறத்தாழ 500 கிலோ மீட்டர். சென்னைக்கும் கோவைக்கும் உள்ள தொலைவு. புல்லட் ரயில் பயணத்தில் இரண்டரை மணிநேரத்தில் 500 கிலோமீட்டரை கடந்து டோக்கியோ வந்தடைந்தோம். நம் நாட்டின் நினைவு வந்தது. இப்போதுதான், 5 மணி நேரம் 50 நிமிட நேரப் பயணத்தில் 500 கிலோ மீட்டரைக் கடக்கும் ‘வந்தேபாரத்’ ரயில் அறிமுகமாகியிருக்கிறது. ஜப்பானில் பொதுப் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது, ரயில்தான். பேருந்துகள் குறைவு. எந்த இடத்திற்கும் ரயிலில் பயணிக்கும் வசதி ஜப்பான் மக்களுக்கு வாய்த்திருக்கிறது. நம் நாட்டில் நிறைவேற்றப்படாத ரயில்வே திட்டங்கள் நிறைய உள்ளன. அதிலும் குறிப்பாக நம் தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்படுவதையும், அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாக இருப்பதையும் ஒன்றிய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நத்தை வேகத்திலான ரயில்வே திட்டங்கள் வேகம் பெற்று, இந்தியாவிலும் அதிவேக புல்லட் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். டோக்கியோ சென்றடைந்ததும், இந்தியாவில் புல்லட் ரயில் ஏழை-எளியவர்களும் பயணம் செய்யும் வகையில் அமைய வேண்டும் என சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன்.

டோக்கியோவில் இந்தியாவுக்கான தூதர் திரு.சிபி ஜார்ஜ் அவர்கள் வரவேற்பு அளித்தார். ஜப்பான் தலைநகரில் உள்ள தமிழர்களும் அன்புடன் வரவேற்றனர். தமிழ்ச் சங்கங்கள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் அமைப்பினர் திரளாகத் திரண்டு, இந்த நிகழ்வை சிறப்பான முறையில் நடத்தினர். பண்பாட்டு விழாவை அருமையான தமிழ்ப்பாடலுடன் தொடங்கினர். பறை இசையால் அரங்கம் அதிர்ந்தது. நடனங்கள், தற்காப்புப் பயிற்சிகள் எனத் தமிழர் கலைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். ஜப்பான் தமிழர்களின் கலையார்வத்தால் ஈர்க்கப்பட்டு, அந்த நிகழ்ச்சிகளை என் செல்போனில் ஆர்வத்துடன் வீடியோ எடுத்தேன்.

அரசு நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி என்று பரபரப்பாகவும் நேர நெருக்கடியுடனும் இருந்து வரும் எனக்கு, இந்தக் கலை நிகழ்ச்சிகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதை என்னுடைய பேச்சில் குறிப்பிட்டேன். ஜப்பான் நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்புகளை எடுத்துக்கூறி, டோக்கியோவில் வாழும் தமிழர்கள் கீழடி அருங்காட்சியகத்தையும், விரைவில் அமையவிருக்கும் பொருநை அருங்காட்சியகத்தையும் காண்பதற்குத் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். விழா ஏற்பாட்டாளர்கள், “பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜப்பானுக்கு வந்தது நீங்கள்தான்” என்றனர். தமிழர்களின் அன்பு மழையில் நனைந்து, செல்ஃபி எடுத்துக் கொண்டபோது, டோக்கியோவில் ஒரு தமிழ்நாடு என்ற உணர்வு ஏற்பட்டது.

மே-29 திங்கள்

ஜப்பானில் உள்ள தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் அரசு நிறுவனமான ‘ஜெட்ரோ’வின் சேர்மனுடனான சந்திப்புடன் காலைப் பொழுது தொடங்கியது. தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியையும் நமது அரசின் முயற்சிகளையும் ஜெட்ரோ சேர்மன் பாராட்டினார். ஜப்பான் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் பாலமாக விளங்கும் ஜெட்ரோ நிறுவனத்தை முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தேன். அதன் சேர்மனுடன், டோக்கியோவில் முதலீட்டாளர் கருத்தரங்கத்திற்குச் சென்றேன். ஏறத்தாழ 250 தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பங்கேற்றிருந்தனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா பேசினார். அவர் டோக்கியோவில் மட்டுமல்ல, அதற்கு முன்பாக சிங்கப்பூர், ஒசாகா ஆகிய இடங்களில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்புகள், கருத்தரங்குகளில் பேசியதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். எல்லா இடங்களிலும் அவர் பேசும்போது, “தமிழ்நாட்டில் தொழில்தொடங்க வாருங்கள். அதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ள மாநிலம், தமிழ்நாடு. முதலமைச்சர் அவர்கள் அத்தகைய கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார். தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் தொழில்வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பது முதலமைச்சரின் எதிர்பார்ப்பு. அதற்கேற்ற வகையில் முதலீடு செய்யுங்கள். பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புத் தரும் தொழில் நிறுவனங்களை நாங்கள் ஊக்குவிக்கத் தயாராக இருக்கிறோம். தமிழ்நாட்டில் நான் காவிரி டெல்டாவைச் சேர்ந்தவன். முதலமைச்சர் அவர்களும் டெல்டாவிலிருந்து வந்தவர்கள். அதனால், வேளாண்மை சார்ந்த தொழில் வளர்ச்சிக்கு நீங்கள் முதலீடு செய்து ஊக்குவிக்க வேண்டும். நீண்ட கடற்கரையைக் கொண்டது தமிழ்நாடு. ஆழ்கடல் மீன்பிடி தொடர்பான முதலீடுகளுக்கும் முன்வரவேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.

டோக்கியோ முதலீட்டாளர் கருத்தரங்கில் நான் பேசுகையில், “உள்கட்டமைப்பு சார்ந்த துறைகளில் உங்கள் முதலீடுகளைச் செய்யுங்கள். அதுபோல ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த துறைகளுக்காக சென்னையில் உங்கள் நிறுவனங்களின் அலுவலகம் அமைய வேண்டும். எங்களிடம் மனித வளம் நிறைய உள்ளது” எனக் கேட்டுக்கொண்டு, முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தேன். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற லஞ்ச் மீட்டில், முதலீட்டாளர்கள் பலரும் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

அவர்களிடம் நான், “மேயர்கள் மாநாட்டிற்கு சென்னை மேயராக ஜப்பானுக்கு வந்திருக்கிறேன். துணை முதலமைச்சராக இருந்தபோது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்காக வந்திருக்கிறேன். அப்போது ஜப்பான் செய்த நிதியுதவிதான், பாதுகாப்பான குடிநீரைப் பல மாவட்ட மக்களுக்கு வழங்கியது. அவர்கள் இன்னமும் உங்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறார்கள். அதுபோலவே, சென்னையின் பொதுப் போக்குவரத்தில் முக்கியப் பங்காற்றும் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறியதிலும் ஜப்பானின் உதவியை மறக்க முடியாது.

ஜப்பானுக்கு நான் வந்தபோதெல்லாம், நான் என்ன கேட்டேனோ அதை ஜப்பான் நிறைவேற்றியிருக்கிறது. எனக்கு மிக நெருக்கமான நாடு ஜப்பான். சென்னையில் என் வீட்டுக்குப் பக்கத்து கட்டடத்தில்தான் ஜப்பான் நாட்டின் தூதரகம் உள்ளது” என்றேன்.

திங்கள் மாலையில் ஜப்பான் தொழில்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நேரடிச் சந்திப்பு நடைபெற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

மே 30- செவ்வாய்

காலையில் என்.இ.சி. எனப்படும் எதிர்காலத் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளின் முன்னணி நிறுவனத்தைப் பார்வையிடச் சென்றோம். அந்தமான் தீவுகள் உள்பட உலகின் பல நாடுகளிலும் கடலுக்கடியில் கேபிள் பதிக்கும் தொழில்நுட்பத்தையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள் எந்தளவில் பயன்படுத்தப்படுகின்றன, எதிர்காலத்தில் அவை எந்தெந்த வகையில் உதவும் என்பதை என்.இ.சி. நிறுவனத்தினர் விளக்கிக் கூறினர். உதாரணமாக, தற்போது பயோ-மெட்ரிக் முறையில் நாம் கைரேகையைப் பதிவு செய்து அலுவலகத்திற்குச் செல்கிறோம். இதன் அடுத்தகட்டமாக, மனிதர்களின் முகத்தை அடையாளம் கண்டு அனுமதிக்கும் தொழில்நுட்பம் உருவாகியுள்ளது. விமான நிலைய கவுண்ட்டர்களில் மக்கள் கூட்டமாகக் காத்திருக்கும் பொழுதுகளில், கொரோனா போன்ற கட்டுப்பாடுகள் நிலவும் நேரங்களில், விமானத்திற்கான போர்டிங் பாஸ் பரிசோதனை, பாதுகாப்பு பரிசோதனை உள்பட எல்லாவற்றிலுமே ஒருவரின் முகத்தை அடையாளமாக வைத்து விரைவாக முடித்துவிடலாம். உரிய அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாதவர்களை எந்த இடத்திலும் உள்ளே விடாமல் தடுத்து விட முடியும்.

இந்தியாவில் ஐ.ஐ.டி. உள்ளிட்ட நிறுவனங்கள் ஜப்பானின் என்.இ.சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு இத்தகைய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க என்.இ.சி. முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். இந்தியாவில் உள்ள தங்கள் அலுவலகத்துடன் இதுகுறித்துப் பேசி, நல்ல முடிவைத் தெரிவிப்பதாக என்.இ.சி. நிறுவனத்தினர் கூறினர்.

மாலையில் ஓம்ரான் என்ற நிறுவனத்துடன் சந்திப்பு நடந்தது. மருத்துவப் பரிசோதனைகள் சார்ந்த கருவிகள் தயாரிக்கும் நிறுவனமான ஓம்ரான், இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிகழ்வு நிறைவடைந்தவுடன், டோக்கியோவில் உள்ள உலகின் மூன்றாவது உயரமாக கட்டடமான ஸ்கை ட்ரீ என்ற கட்டடத்திற்குச் சென்றோம். அதன் உச்சியில் இருந்து பார்த்தபோது, டோக்கியோ நகரத்தின் பேரழகை ரசிக்க முடிந்தது. நகரக் கட்டுமானம் எப்படி இருக்கிறது என்பதையும் காண முடிந்தது. உயரமான கட்டடத்தில் நான் நிற்பதைவிட, தமிழ்நாட்டை இந்திய அளவில், உலக அளவில் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற உன்னத இலட்சியமே மனதில் தோன்றியது.

நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களின் ஆதரவுடன்தான் கழகம் ஒவ்வொரு உயரத்தையும் எட்டுகிறது. அதனால்தான், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகவும் அதனடிப்படையிலான பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் மேற்கொண்ட பயணத்தை விரிவான கடிதமாக எழுதியிருக்கிறேன்.

சூரியன் உதிக்கும் நாடு என்று ஜப்பானுக்குப் பெயர் உண்டு. நாம் உதயசூரியனின் ஒளியால் விடியல் கண்ட தமிழ்நாட்டுக்காரர்கள். இன்னும் சிறிது நேரத்தில், இங்கே பொழுது புலரும். தாய்த் தமிழ்நாட்டை நோக்கிய பயணம் தொடங்கும். கடல் கடந்த பயணத்தால், தமிழ்நாட்டின் நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன் வருகிறேன்.

தமிழ்நாட்டின் மீதும் – தமிழ்நாடு அரசின் மீதும் – தமிழ்நாட்டு மக்களின் மீதும் மிகப்பெரிய நம்பிக்கையை ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டில் ஜனவரி 2024-இல் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு “வருக வருக” என அனைவரையும் அழைத்து, “கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி போலன்றித் தமிழ்நாடு மாறியிருக்கிறது. தமிழ்நாடு அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது” என்ற நம்பிக்கையை தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திய மனமகிழ்வுடன், வெற்றிகரமாக சென்னை திரும்புகிறேன்.

உடன்பிறப்புகளின் முகம் காண உங்களில் ஒருவனான நான் ஆவலுடன் இருக்கிறேன். நமக்கான பணிகள் காத்திருக்கின்றன. முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம். அவர் உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டை, முதன்மை மாநிலமாக உயர்த்திக் காட்டுவோம்.

அன்புடன்,
மு.க.ஸ்டாலின்
திருவள்ளுவர் ஆண்டு 2054,
வைகாசி 17
31-05-2023

The post முதலமைச்சரின் டைரிக் குறிப்பு “சிங்கப்பூர், ஜப்பான் பயணம்..!” first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/feed/ 0