acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’‘ஆரிய’ விகடனின் ‘சனாதன’ அலறல்.!” ’முரசொலி’ விளாசல் first appeared on Madras Murasu.
]]>திராவிட மாடலின் சமூக (அ)நீதி’ என்ற தலைப்பில் ‘ஆரிய’ விகடன் அலறி இருக்கிறது. திடீரென பட்டியலின சமூகத்தவர்மீது இவர்களுக்குப் பாசம் பொங்கி வழிகிறது. ‘என்னவாக இருக்கும்’ என்று பார்த்தால், அவர்களால் ‘கொண்டையை’ மறைக்க முடியாதது அந்தத் தலையங்கத்திலேயே இருக்கிறது.
தமிழ்நாட்டில் நடந்த மூன்று சம்பவங்களை விவரிக்கும் அந்தத் தலையங்கத்தின் உள்நோக்கம் என்ன தெரியுமா?
மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனக் கோட்பாட்டுக்கு எதிராக வலிமையான வாதங்களை எடுத்து வைக்கிறார் அல்லவா? அது விகட ஆரியக் கூட்டத்தை கோபம் கொள்ள வைக்கிறது. “மனிதத் தன்மையற்ற இந்த தாக்குதல்களையும் வன்கொடுமைகளையும் கண்டும் காணாமல் மெளனம் சாதித்து வேடிக்கை பார்க்கிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. இது இப்படி இருக்க ‘சனாதன தர்மத்தை ஒழிப்போம்’ என்று உதயநிதி ஸ்டாலின் பேசுவது வெட்டி அரசியல் பேச்சு. பெரியார், அறிஞர் அண்ணா கோரிய சமூகநீதிக்கு திமுக அரசு செய்யும் துரோகம் இது” என்று ஆரிய விகடன் அலறுகிறது.
மக்களைப் பிளவுபடுத்தும் வர்ண சனாதனக் கோட்பாடுகளுக்கு எதிராகப் பேசியது மட்டுமல்ல; அதைத் திரும்பப் பெற மாட்டேன் என்று துணிச்சலாக நிற்கிறாரே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ற வன்மத்தை ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மீது காட்டுகிறது விகடன்.
‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்யும் ‘திராவிட மாடல்’ ஆட்சியால் அலறிக் கொண்டிருக்கிறது ஆரியக் கும்பல். அதனுடைய அலறலைத் தான் ஆளுநர் ரவியின் குரலில் நாம் காண்கிறோம். சில நாட்களுக்கு முன்னால் ரவி என்ன சொன்னாரோ, அதையேதான் விகடனும் ‘தலையங்கம்’ என்ற பெயரால் வாந்தி எடுத்துள்ளது. இந்தக் கும்பலுக்கு ஒட்டுமொத்தமாக ‘ஒரே கண்டெண்ட் எடிட்டர்’ இருக்கிறார் என்பது நமக்குத் தெரியாதா என்ன?
பட்டியலின மக்கள் மீது நடந்த சில சம்பவங்களை எடுத்துப் போட்டு, தாங்கள் ஏதோ ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்கைப் போல விகடன் காட்டிக் கொள்கிறது. இந்தச் சம்பவங்களின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை மறைத்து, இவை எதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குகிறது அந்தத் தலையங்கம்.
• நெல்லை தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குள், குளித்து விட்டு வந்தவர்களிடம், பணத்தைக் கேட்டும், சாதியைக் கேட்டும் தகராறு செய்து இருவரைத் தாக்கிய சம்பவத்தில் ஆறுபேர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்கள். கொடும் காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் தாக்கிக் காயம் ஏற்படுத்துதல், வழிப்பறியில் ஈடுபடுதல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வழங்கப்படும் முதல்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது.
• நாங்குநேரியில் மாணவரும், அவரது சகோதரியும் வெட்டப்பட்டார்கள். 3 சிறுவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். 11 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாய் உடனடியாகத் தரப்பட்டது. உடனடியாக சபாநாயகரும் அமைச்சர்களும் சென்று பார்த்தார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அந்த இருவரையும் சமீபத்தில் பார்த்து ஆறுதல் கூறினார்.
• கிருஷ்ணகிரி அருகே சோக்காடியில் நடந்த சம்பவத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்துக்குக் காரணமான அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் தலைமறைவாக இருக்கிறார். பிரச்சினையே இவரால் வந்தது தான். இவரது பெயரையே சொல்லாமல் தலையங்கம் தீட்டியதுதான் ‘விகடனின்’ பத்திரிக்கா தர்மம்!
• புதுக்கோட்டை கொப்பம்பட்டி மாணவர் தற்கொலையில் வன்கொடுமைச் சட்டப்படி வழக்குப் பதியப்பட்டுள்ளது.
• வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக நீதிபதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதுகுறித்து இங்கு எழுதுவது சரியாக இருக்காது.
• பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் சாதிப்பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தகுந்த பரிந்துரைகளை வழங்க, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்படி அனைத்துக் குற்றச் சம்பவங்களிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யவில்லை என்றாலோ, அல்லது குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டு இருந்தாலோ அதுகுறித்து தலையங்கம் எழுதி அரசுக்கு அறிவுறுத்தலாம். செய்திகளை வரிசைப்படுத்தி, அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தந்திரமாக மறைக்கிறது ‘விகடன்’ தலையங்கம்.
உண்மையில் இவர்களுக்கு சமூகநீதியில் அக்கறை இருக்குமானால், ‘சாதியை ஆதரித்தும் மற்ற சாதிகளை இழிவுபடுத்தியும்’ பேசும் ‘திருச்சி கல்யாணராமன் போன்றவர்களை ஏன் கைது செய்யவில்லை?’ என்று கேட்க முடியுமா? ‘சனாதனம்’ என்ற பெயரால்தான் இந்த சாதிவன்ம வார்த்தைகள் கொட்டப்படுகின்றன. இதுபோல பல நூறு வீடியோக்கள் இணையத்தளங்களில் வலம் வருகின்றன. ‘திராவிட மாடல் ஆட்சி இந்தச் சாதி வன்மப் பேர்வழிகளை ஏன் கைது செய்யவில்லை?’ என்று கேட்கும் ‘சமூக நீதி உள்ளம்’ விகடனுக்கு உண்டா? கலைஞர் கேட்பாரே; ‘உள்ளம் இருக்கிறதா? உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருக்கிறதா?’ என்று!
‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு யாரும் சமூகநீதிப் பாடம் எடுக்கத் தேவையில்லை. யார் சொல்லியும் அல்ல; அவராகவே செய்யும் அக்கறையும், கொள்கைப் பற்றும் அவருக்கு உண்டு.
• ஆட்சிக்கு வந்ததும் ஆதிதிராவிடர் – பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தவர் முதலமைச்சர் அவர்கள்.
• அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டப்படாத மாநில விழிப்புணர்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து கூட்டி வருபவர் முதலமைச்சர் அவர்கள்.
• அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14 ஆம் தேதியை ‘சமத்துவ நாளாக’ அறிவித்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.
• அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில், அவரின் முழு அளவு வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
• அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக அவரின் படைப்புகளை தமிழில் மொழி பெயர்க்க இந்த நிதியாண்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
• அண்ணல் அம்பேத்கர் விருதுத் தொகை ரூ.5 லட்சமாக ஆக்கப்பட்டுள்ளது.
• வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தீருதவித் தொகை குறைந்தபட்சம் 85,000 ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும் அதிகபட்சம் 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகவும் உ யர்த்தப்பட்டது.
• வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தைச் சார்ந்த 723 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம், கல்வி உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா ஆகிய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
• வன்முறையால் பாதிக்கப்பட்டோரைச் சமூகக் கண்ணோட்டத்துடன் அணுகி, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கப் பட்டு வருகின்றன.
• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீருதவிகள் மற்றும் மறுவாழ்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க கூடுதலாக நான்கு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
• சாதி வேறுபாடுகளற்ற மயானங்களை பயன்பாட்டில் கொண்டிருக்கும் முன்மாதிரிச் சிற்றூர்களில், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஊக்கத் தொகையாக தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 70 சிற்றூர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளன.
• தீண்டாமையைக் கடைபிடிக்கப்படாமல் பொதுமக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடும் பொருட்டு ரூ.10 இலட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 37 கிராமங்கள் பயனடைந்துள்ளன.
• பொதுமக்களிடையே தீண்டாமைக்கெதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24––ஆம் தேதி முதல் 30-–ஆம் தேதி வரை “மனிதநேய வார விழா” நடத்தப்படுகிறது.
• ஆண்டுதோறும் ஜனவரி 26, ஆகஸ்டு 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களிலும், அந்தந்த மாவட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் விடுமுறை நாட்களிலும் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.
• ஆதிதிராவிட மக்களின் கல்வியறிவு விகிதம் (73.26%) ஒப்பீட்டளவில் பொதுப் பிரிவினரின் கல்வியறிவு விகிதத்தினை ( 80.09%) விட குறைவாக உள்ளது. எனவே இத்துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடான ரூ.3,512.85 கோடியில்; கல்விசார்ந்த திட்டங்களுக்காக மட்டும் ரூ.2,206.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
• ஆதிதிராவிடர் நலத் துறையால் 1138 ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மேம்பாட்டுக்காக ரூ.120 கோடி சென்ற ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
• இத்துறையால் நடத்தப்படும் விடுதிகளைப் பழுது பார்க்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
• எம்.சி.இராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் 10 தளங்களுடன் நவீன வசதியில் புதிய விடுதிக் கட்டடம் கட்ட முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி இருக்கிறார்கள்.
• முனைவர் பட்டப்படிப்பிற்கான உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் இதுவரை 2,954 மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ருபாய் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
• வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ.8 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு, 18 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
• தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் பயனடைவதற்கான வருமான உச்சவரம்பு மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
• ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்னும் புதிய திட்டம் ரூ.100 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
• ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த “அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.
• புதிரை வண்ணார் நல வாரியத்திற்குப் புத்துயிர் அளித்து, வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நிதியாண்டில் ரூ.10.00 கோடி கூடுதல் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
• இந்த நிதியாண்டில் மாநில திட்ட ஒதுக்கீடான ரூ.77,930.30 கோடியில், ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்காக ரூ.17,075.70 கோடி(21.91%) மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்காக ரூ.1595.89 கோடி (2.05%) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் (20.01%) மற்றும் பழங்குடியின மக்கள் தொகை (1.17%) விகிதாச்சாரத்தை விட அதிகமானதாகும்.
இதுதான் ‘திராவிட மாடல் ஆட்சி’யின் சமூக நீதி ஆகும்.
முதலமைச்சர் அவர்களே குறிப்பிட்டுள்ளதைப் போல, ‘சுயமரியாதைச் சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்’ என்பதும் உண்மைதான். அதற்கான சட்டங்களையும் முதலமைச்சர் தீட்டி வருகிறார்கள். மனமாற்றப் பரப்புரைகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை ‘ஆரிய’ விகடக் கும்பலால்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது போன்ற சட்டங்களாலும் -– மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனத்துக்கு எதிரான யுத்தங்களாலும் -– நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் ஆரியக் கும்பல், பட்டியலின வேஷம் போடுகிறது. காலம் காலமாக போடப்பட்டு வரும் இந்தக் கபடவேடங்களை உண்மைத் தமிழ் மக்கள் உணர்வார்கள். பார்த்துப் பார்த்து பழகிய ஆரியக் கூத்துகளை நிறுத்தி திருந்தப் பார்க்கவும்.
The post ’‘ஆரிய’ விகடனின் ‘சனாதன’ அலறல்.!” ’முரசொலி’ விளாசல் first appeared on Madras Murasu.
]]>The post ’’இந்த நேரத்தில் சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை..!’’ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை first appeared on Madras Murasu.
]]>அந்த அறிக்கையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
டிசம்பர் 17-ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கு இளைஞர்களைத் தயார்படுத்தும் வகையில் வருவாய் மாவட்டந்தோறும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது, கழக மூத்த முன்னோடிகளுக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் பொற்கிழி வழங்குவது, மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் அரசின் நலத்திட்டப் பணிகள் குறித்து, ஆய்வுக் கூட்டத்தை நடத்துவது… இந்த மூன்று விஷயங்களை மையமாகக் கொண்டே என் சமீபகால மாவட்டச் சுற்றுப்பயணங்களை அமைத்துக்கொள்கிறேன்.
அந்த வகையில், இந்த மாதம் 4-ஆம் தேதி மதியத்துக்கு மேல் தூத்துக்குடி, 5-ஆம் தேதி தென்காசி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்ல முடிவு செய்தோம். 4-ஆம் தேதி காலை தலைமைச் செயலகத்தில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கடந்த ஆண்டு சாதனை படைத்த வீரர்-வீராங்கனையர்கள் 134 பேருக்கு உயரிய ஊக்கத்தொகையாக 2 கோடியே 24 லட்சம் ரூபாயை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்றோம்.
அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி வீரர்-வீராங்கனையர் 52 பேருக்கு உயரிய ஊக்கத் தொகையாக ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினோம். ‘தேசிய அளவில் சாதனை படைக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உயரிய ஊக்கத் தொகைகளை வழங்க வேண்டும்’ என்பது, அவர்களின் 20 ஆண்டுகாலக் கோரிக்கை. அதன் தீர்வாக, ‘சீனியர்-ஜூனியர் பிரிவுகளில் தேசிய அளவில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெறுபவர்களுக்கு முறையே தலா 5, 3, 2 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்படும்’ என்று வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு, சென்னையில் இருந்து தூத்துக்குடி பயணமானோம். தூத்துக்குடி விமான நிலையத்தில் கழகத்தினரின் வரவேற்பை பெற்றுக்கொண்டு வெளியே வரும்போது சகோதரர் ஜஸ்டின் என்னை சந்தித்து இளைஞர் அணி மாநாட்டு நிதியாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். ஜஸ்டினைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வது அவசியம். ஜஸ்டின் ஒரு மாற்றுத்திறனாளி. தன்னுடைய வாழ்க்கையைத் தானே மாற்றும் வல்லமை படைத்த ஒரு திறனாளி. அவருக்குத் தேவை ஓர் உந்துதல். அதற்காக என்னைக் காண இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்திருந்தார். அவருக்கு தூத்துக்குடி மாநகரில் பழச்சாறு விற்கும் கடையை இளைஞர் அணியின் சார்பில் அமைத்துத் தந்தோம். இன்று அவர் பிறருக்கு உதவி செய்யும் இடத்துக்கு வந்ததில் மகிழ்ந்தேன்.
விமான நிலையம் அருகிலேயே புதுக்கோட்டை நல்லமலைப் பகுதியில் அமைந்துள்ள கழக இளைஞர் அணியின் துணைச் செயலாளர் ஜோயல் அவர்களின் இல்லத்தில் கழகக் கொடியை ஏற்றிவைத்தோம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சூழ்ந்து நின்று வரவேற்றனர். அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றோம். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினோம். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் ஆய்வுக் கூட்டம்.
ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்படும் மக்கள் நலப் பணிகள், அதன் தற்போதைய நிலை… எனத் தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு துறையாகப் பார்த்து அதற்கான விளக்கங்களை அதிகாரிகளிடம் பெறுவது, என மிக விரிவாக மூன்று மணி நேரம் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் செயல்படும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தீட்டும் மக்கள் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்கள் வரை சென்று சேரவேண்டும் என்றால், இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் அவசியம்.
அதை முடித்துக்கொண்டு, `மாணிக்கம் மஹால்’ திருமண மண்டபத்தில் நடைபெற்ற கழக மூத்த முன்னோடிகளுக்கு, பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோம். இந்தப் பொற்கிழி நிகழ்ச்சி என் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. நம் கழக முன்னோடிகள் என்னைப் பார்த்ததும் கைகளைப் பிடித்துக்கொண்டு தங்களின் கழகப் பணிகள் அத்தனையையும் என்னிடம் சொல்லிவிடவேண்டும் என்ற தவிப்பு, அவர்களிடம் தெரியும். அப்படி அன்று தூத்துக்குடி வடக்கு-தெற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில், மொத்தம் 1,000 கழக முன்னோடிகளுக்குத் தலா ரூ.10 ஆயிரம் வழங்கி வாழ்த்து பெற்றோம்.
“இந்தக் கழகத்தின் அச்சாணியே நீங்கள்தான். பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியர் ஆகியோரின் மறு உருவாகத்தான் உங்களைப் பார்க்கிறேன். உங்களுக்குப் பொற்கிழி வழங்குவது என்பது எங்கள் கடமை” என்று அவர்களின் மீதான என் அன்பை உரையாகப் பேசி முடித்தேன்.
அடுத்து தூத்துக்குடியில் புதுக்கோட்டைப் பகுதியில் நடைபெற்ற இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம். பிரம்மாண்டமான ஏற்பாடு. கூட்டம் நடந்த இடத்தின் வாசலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வரவேற்றனர். “கடந்த மாதம் 20-ஆம் தேதி மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அக்கட்சியின் கொள்கை குறித்தோ, தமிழ்நாட்டின் நலன் குறித்தோ ஏதாவது பேசப்பட்டதா? விவாதிக்கப்பட்டதா? ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கான உதாரணம்தான் அந்த மாநாடு. ஆனால், நூற்றாண்டு வரலாறு கொண்ட ஒரு இயக்கத்தின் இளைஞர் அணி நடத்தக்கூடிய நம் மாநாடு, ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும், எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்க வேண்டும். அதற்கு உங்களின் வருகையை உறுதி செய்வது அவசியம்” என்று உரையாற்றி அவர்களை மாநாட்டுக்கு அழைத்தேன்.
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்ததுடன் மாநாட்டுக்கு நிதியும் வழங்கிய மாண்புமிகு அமைச்சர்கள் அக்கா கீதாஜீவன், அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் துணைச் செயலாளர்கள் ஜோயல், இன்பா ரகு-வுக்கும், நிதியளித்த மாவட்ட இளைஞர் அணியினருக்கும் என் அன்பும் வாழ்த்தும்.
மறுநாள், தென்காசி மாவட்ட நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்துச் செல்ல மாண்புமிகு அமைச்சர்கள் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களும் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களும் தூத்துக்குடி வந்திருந்தனர். இரவு 10.30 மணி ஆனபோதும் ஆலங்குளத்தில் ஆயிரக்கணக்கானோருடன் காத்திருந்து, என்னை வரவேற்ற தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அண்ணன் ஜெயபாலன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்த நாள் 5-ம் தேதி காலை தென்காசி மாவட்டத் தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டோம். நோயாளிகளைக் கனிவுடன் நடத்தி, அவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதையும், மருத்துவமனையைச் சுகாதாரமாகப் பராமரிப்பதையும் உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தினோம்.
அதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினோம். அதன்பிறகு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். கூட்டத்தின் நிறைவாக, “மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான இந்தத் திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பலன்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்துக்குள் மக்களுக்குச் சென்று சேரும் வகையில் உழைத்து, இந்த அரசுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து, அரசுக்கு நற்பெயரை பெற்றுத்தரவேண்டும்” என்று அரசு அலுவலர்களைக் கேட்டுக்கொண்டேன்.
அதைத்தொடர்ந்து, சிவந்தி நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தென்காசி தெற்கு மாவட்டக் கழகத்துக்கான அலுவலக வாசலில் அமைக்கப்பட்டுள்ள கழகக் கொடியை ஏற்றிவைத்து மகிழ்ந்தேன். மதிய உணவுக்குப் பிறகு, தென்காசி, `இசக்கி மஹால்’வளாகத்தில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி. தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டக் கழகங்களில் உள்ள முன்னோடிகளில் ஆயிரத்து 500 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பொற்கிழியாக வழங்கி மகிழ்ந்தோம். இதுவரை தமிழ்நாடு முழுவதும் கழக முன்னோடிகளுக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் 40 கோடி ரூபாய்க்கும் மேல் பொற்கிழியாக வழங்கப்பட்டுள்ளதைத் தெரிவித்து, இளைஞர் அணி அறக்கட்டளை சார்பிலும் உதவக் காத்திருக்கிறோம். கோரிக்கைகளை அன்பகத்துக்கு அனுப்பலாம் என்பதையும் சொல்லி விடைபெற்றோம்.
அடுத்து இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம். திரும்பிய திசையெங்கும் எழுச்சி என்று சொல்லும் அளவுக்குக் கட்டுக்கடங்காத இளைஞர்கள் கூட்டம். “9 ஆண்டுகளாக நாங்கள் இதெல்லாம் சாதனைகளைச் செய்துள்ளோம் என்று சொல்வதற்குக்கூட எதுவும் செய்யாத ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசு, சனாதன ஒழிப்பு மாநாட்டில் நான் பேசியதைத் திரித்து அரசியல் செய்கிறது. 28 எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்குப் பயந்து நாட்டின் பெயரையே ‘பாரத்’ என்று மாற்றி, தான் செய்த ஊழலையும், மணிப்பூரில் செய்த இனக்கலவரத்தையும் மறைக்க முயலும் ஒன்றிய பா.ஜ.க.வையும், மோடியையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓடஓட விரட்ட வேண்டும். அதற்கான முதல் படியாக நம் இளைஞர் அணி மாநில மாநாடு அமையவேண்டும். அதற்கு, உங்கள் ஒவ்வொருவரின் வருகையும் அவசியம்” என்பதை எடுத்துரைத்து உரையாற்றினேன்.
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த மாவட்டச் செயலாளர் சகோதரர் ராஜா, மாவட்டப் பொறுப்பாளர் அண்ணன் ஜெயபாலன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இளைஞர் அணி துணைச் செயலாளர் சகோதரர் ஜி.பி.ராஜா, கூட்டத்துக்கு இளைஞர்களைத் திரட்டி, நிதி வழங்கிய மாவட்ட அமைப்பாளர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும். மாவட்ட ஆய்வுப் பணிகளை ஒருங்கிணைத்த சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் செயலாளர் மருத்துவர் தாரேஷ் அகமது ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் நன்றி.
தூத்துக்குடி, தென்காசியையும் சேர்த்து, இதுவரை 23 மாவட்டக் கழகங்களுக்கான இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம். தென்காசியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதுரைக்கு வந்து, விமானம் மூலம் நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்தோம்.
அடுத்தடுத்த சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும். இந்த நேரத்தில் கழகத்தினருக்கும், இளைஞர் அணி நிர்வாகிகளுக்கும் ஒரு வேண்டுகோள். கழக நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது, சால்வை – பொன்னாடை அணிவிப்பதை அறவே தவிர்க்கவும். இவற்றுக்குப் பதிலாக புத்தகங்களையோ, கழகத்தின் கருப்பு-சிவப்பு கரை வேட்டிகளையோ, இளைஞர் அணி வளர்ச்சி நிதியோ தாருங்கள். அவை மற்றவர்களுக்குப் பயன்படும்.
இந்த நேரத்தில் சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்’கடந்த 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்.
‘கடந்த 9 ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறீர்களே. எங்களின் நலனுக்காகச் செய்த திட்டங்கள் என்ன’ என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுதபாணியாக நிற்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசைக் கேள்வி கேட்க தொடங்கியுள்ள நிலையில், த.மு.எ.க.ச மாநாட்டில் நான் பேசிய பேச்சை, ‘இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்’ என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அமித்ஷா போன்ற ஒன்றிய அரசின் அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் என யார்யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
நியாயமாகப் பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்துகொண்டு அவதூறு பரப்பும் இவர்கள் மீது நான்தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத் தொடுக்க வேண்டும். ஆனால், இவர்களுக்குப் பிழைப்பே இதுதான், இதைவிட்டால், பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால், ‘பிழைத்துப் போகட்டும்’ என்று விட்டுவிட்டேன்.
தந்தை பெரியாரிடம் இருந்து வந்த பேரறிஞர் அண்ணாவால் நிறுவப்பட்ட தி.மு.கழகத்தின் இரண்டு கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரி இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.
மதங்களைப் பற்றி அண்ணா அவர்கள் கூறியது இன்றும் பொருத்தமாக இருப்பதால் அதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “எப்போது ஒரு மதம் மக்களை சமத்துவத்தை நோக்கி வழிநடத்துகிறதோ, அவர்களுக்கு சகோதரத்துவத்தை கற்பிக்கிறதோ, அப்போது நானும் ஆன்மிகவாதிதான். எப்போது ஒரு மதம் சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறதோ, அவர்களுக்கு தீண்டாமையையும் அடிமைத்தனத்தையும் கற்பிக்கிறதோ, அப்போது அந்த மதத்தை எதிர்த்து நிற்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்” என்றார் அண்ணா.
`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இவை எதையும் புரிந்துகொள்ள விரும்பாமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட் கோவை பார்க்கும்போது ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது. ‘சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா’ என திரைப்பட நடிகர் அண்ணன் வடிவேலு அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்திடம் போட்டி போடும் அளவுக்கு மோடி அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார். இடையிடையே பணத்தை மதிப்பிழக்கச் செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது, அங்கு செங்கோல் நடுவது, நாட்டின் பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில் நின்றபடி வெள்ளைக்கொடிக்கு வேலை வைப்பது… என வடிவேலு அண்ணனின் `23-ஆம் புலிகேசி’ கதாபாத்திரத்தோடு போட்டிபோட்டு நகைச்சுவை செய்துகொண்டுள்ளார்.
திரையில் வடிவேலு அண்ணனை ரசிக்க முடிந்தது. நிஜத்தில் இவர்களை… மக்களின் வாக்குகளைப் பெற எந்தளவுக்கும் சென்று, இவர்கள் நாடக அரசியலைச் செய்வார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
நான் இதை நகைச்சுவைக்காக மட்டும் சொல்லவில்லை, ஏழை எளிய மக்களின் வாழ்வை உயர்த்தும் ‘புதுமைப்பெண்’ திட்டம் போன்றோ, முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் போன்றோ, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்றோ ஏதாவது ஒரு முற்போக்குத் திட்டம் கடந்த 9 ஆண்டுகால ஒன்றிய அரசிடம் இருந்து வந்திருக்கிறதா? மதுரை எய்ம்ஸை கட்டினார்களா? கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் போன்று ஏதாவது அறிவியக்கத்தை முன்னெடுத்தார்களா?
‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை-கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
‘என்ன வாய் மட்டும் வேலை செய்யுது’ என்பது போல, மீடியாவை சந்திப்பது மட்டுமே மக்கள் பணி என நினைக்கும் சிலர் நான் பேசாததைப் பேசியதாகத் திரிக்கும் அவதூறுகளை வைத்து, வாயை வாடகைக்கு விட்டுப் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களின் பிழைப்பில் நான் மண் அள்ளிப்போட விரும்பவில்லை, பிழைத்துப்போகட்டும்.
நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா காலத்தில் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நலத்திட்ட உதவியாக வழங்க வீடு வீடாக ஏறிக்கொண்டிருந்தோமே அப்போது அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் என்ன செய்தன? மணி அடித்தபடியும், விளக்கு பிடித்தபடியும் கொரோனா கிருமியை ஒழிக்கப் போராடிக் கொண்டு இருந்தன.
இன்று நாம் ஆளுங்கட்சி. இன்றும் நாம் கலைஞரின் நூற்றாண்டை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாட, நலத்திட்ட உதவிகளை வழங்க வீடு வீடாக ஏறி இறங்கிக்கொண்டு இருக்கிறோம். அ.தி.மு.க.வோ ஆடலும் பாடலும் பின்னணியில், புளி சாத மாநாடுகளை நடத்திக்கொண்டு, விழுவதற்குக் கால்கள் கிடைக்காதா, ஊர்ந்து போக ஏதாவது ஃபர்னிச்சர் கிடைக்காதா எனத் தேடிக் கொண்டிருக்கிறது.
ஒன்றிய பிரதமர் மோடியோ கொரோனா நிதியாகத் திரட்டிய ‘பி.எம். கேர்ஸ்’க்கு கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றபடி, 7.5 லட்சம் கோடி ரூபாய் என்ன ஆனது என்ற சி.ஏ.ஜி. கேள்விக்குப் பதிலளிக்காமல், ஊரில் இருந்தால், மணிப்பூர் பற்றிக் கேள்வி கேட்பார்களே என்று பயந்து நண்பர் அதானியை அழைத்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு இருக்கிறார். உண்மையைச் சொல்வது என்றால், மக்களின் அறியாமைதான் இவர்களின் நாடக அரசியலுக்கான மூலதனம்.
மணிப்பூர் கலவரத்தைத் தூண்டிவிட்டு 250-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்தது, 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல்… போன்றவற்றைத் திசை திருப்பத்தான் மோடி அண்ட் கோ இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது. இவர்களின் கைகளில் தான் மொத்தமாக சிக்கியுள்ளதால், ‘ஒரே நாடு ஒரே தேர்தலா… நடத்திடுவோம் எஜமான்’, ‘பாரதம்னு மாத்துறீங்களா… மாத்திடுங்க ஓனர்’ என்று மோடியின் நாடகத்தையே இங்கே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.
சாமியார்களுக்குத்தான் இந்தக் காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு சாமியார் இடையில் புகுந்து என் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். என் தலையைவிட ‘முற்றும் துறந்தவரிடம் எப்படி 10 கோடி’ என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. தவிர பலர் என் மீது நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களிலும், மாண்பமை நீதிமன்றங்களிலும் புகார் அளித்து வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ‘கொலை மிரட்டல் விடுத்த அந்தச் சாமியாரை கைது செய்ய வேண்டும்’ என்று கோரி நம் கழகத்தினர் தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருவதாகவும், அந்தச் சாமியாரின் உருவ பொம்மையை எரிப்பது, அவரின் படத்தைக் கொளுத்துவது, கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது.
நாம் பிறருக்கு நாகரிகம் கற்றுத் தருபவர்கள். நம் தலைவர்கள் நம்மை அப்படித்தான் வளர்த்தெடுத்துள்ளனர். எனவே, அதுபோன்ற காரியங்களை நம் இயக்கத் தோழர்கள் அறவே தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தவிர, நமக்கு இயக்கப் பணி, மக்கள் பணி என எண்ணிலடங்கா பணிகள் காத்திருக்கின்றன.
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு அரசின் சார்பிலும், கழகத்தின் சார்பிலும் பல பணிகளை நம் மாண்புமிகு முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கான பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள்… என ஏராளமான பணிகள் நமக்கு முன் உள்ளன.
இவ்வளவு வேலைகள் இருக்கும்போது சாமியாரின் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது.. போன்ற, நேரத்தை வீணடிக்கக்கூடிய பணிகளில் நம் கழகத்தினர் எவரும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை, கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலும், தலைமைக் கழகத்தின் ஆலோசனையைப் பெற்று சட்டத்துறையின் உதவியுடன் சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பகிர்ந்த தோழமை கட்சியின் தலைவர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ‘சனாதன தர்மம்’ எதை வலியுறுத்துகிறது, அதில் அப்படி என்னதான் சொல்லப்பட்டுள்ளது’ என்பதை நாடு தழுவிய அளவில் ஒரு பேசுபொருளாக மாற்ற காரணமாக அமைந்த ‘சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு’ம், அதை ஒருங்கிணைத்த த.மு.எ.க.ச தோழர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அம்மாநாட்டுக்கு நான் செல்ல காரணமாக இருந்த அண்ணன் ‘புதுகை பூபாளம்’ பிரகதீஸ்வரன் அவர்களுக்கு என் அன்பு.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் புகழ் ஓங்கட்டும். தொடர்ந்து அவர்களின் கொள்கை வழியில் நடக்க உறுதியேற்போம்.
நன்றி, வணக்கம்.
உங்கள்
உதயநிதி
The post ’’இந்த நேரத்தில் சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை..!’’ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை first appeared on Madras Murasu.
]]>The post ’’சனாதனமும் சனாதனிகளும்..!’’ முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>சனாதனம் – என்பது என்ன? வேறுபாடும் – பாகுபாடும் காட்டுவதுதான் சனாதனம். உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி என்ற பேதத்தை உருவாக்குவது சனாதனம். ஜாதியில் மட்டுமல்ல ஆண் உயர்ந்தவன் – பெண் தாழ்ந்தவள் என்ற பேதத்தை உருவாக்குவதுதான் சனாதனம்.
சனாதனிகள் – என்பவர்கள் யார்? இந்த பாகுபாட்டையும் வேற்றுமையையும் காப்பாற்றுபவர்கள். அவர்களது மொழியில் தாழ்ந்தவர்களாக அடையாளம் காட்டப்படுபவர்களையும் – பெண்களையும் முன்னேறவிடாமல் தடுப்பவர்கள்தான் சனாதனிகள். ஒட்டுமொத்த இந்துப் பெண்களையும், பெரும்பான்மைஇந்து ஆண்களையும் இழிவுபடுத்தும் கொள்கைதான் சனாதனம். மனுஸ்மிருதியின் ஒவ்வொரு சூத்திரமும் இதனைத்தான் சொல்கிறது.
இத்தகைய சனாதனத்துக்கும் – சனாதனிகளுக்கும் எதிரான போராட்டம் தமிழ்ச் சமூகத்தில் பல்லாண்டுகளாக நடந்து வருகிறது. அதில் முதலாமவர் வான்புகழ் வள்ளுவர். அடுத்து வருகிறார் அருட்பிரகாச வள்ளலார். இதனை அரசியல் இயக்கமாக ஆக்கியவர் தந்தை பெரியார். இதுதான் இன்றுவரை ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
சங்க காலத்திலேயே துளிர் விட்டு – நிலப்பிரபுத்துவ காலத்தில் வேர் பதித்து – அன்னியப் படையெடுப்புகளால் ஆதிக்க சக்தியாகவே மாறி – காலனியக் காலத்திலும் அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்தும் அச்சுறுத்தியும் பணிய வைத்து – விடுதலை பெற்ற இந்தியாவிலும் அந்தச் சிந்தனைகளைமுழுக்க முழுக்க விதைத்து சனாதனமும் – சனாதனிகளும் தங்களது ஆட்டத்தைநிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.
இத்தகைய சனாதனத்தையும் – சனாதனிகளையும் தொடக்கக் காலத்தில் இருந்து அம்பலப்படுத்தியதில் பெரும் பங்கு வகித்தது திராவிட இயக்கம். அதனால்தான் திராவிட இயக்கத்தின் மீது அவர்களுக்கு அடங்காத கோபம். ‘சனாதன – வர்ணாசிரமத்தில்’ மட்டும் கை வைக்காமல் இருந்திருந்தால்மற்ற இயக்கத்துக்குள் ஊடுருவியதைப் போல திராவிட இயக்கத்துக்குள்ளும் அவர்கள் ஊடுருவி இருப்பார்கள். இயக்கத்தையே அழித்திருப்பார்கள். சிதைத்திருப்பார்கள்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கு ஆறறிவும் கடந்த பகுத்தறிவுஇருந்தது. பட்டறிவு இருந்தது. அதனால்தான் இயக்கத்தின் நோக்கத்தைச் சரியாக வரையறுத்தார். மேல் கட்டுமானத்தை மாற்றினால் போதாது, அடிக்கட்டுமானத்தை சரியாக உருவாக்க வேண்டும் என்றார். அவரால் உருவாக்கப்பட்ட இயக்கத்துக்குள் ஆரிய சக்திகள் – சனாதன சக்திகளால் ஊடுருவ முடியவில்லை.
அரசியல் இயக்கம் கண்டாலும், ‘ஆரிய மாயை’ உணர்ந்தவராக பேரறிஞர்அண்ணா அவர்கள் இருந்தார்கள். ‘நான் மிக மிக மிக பிற்படுத்தப்பட்டவன், எத்தனை மிக மிக மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள்’ என்றார் தமிழினத் தலைவர் கலைஞர். ‘ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள்’ என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லி வருகிறார் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். ‘சனாதனத்தை எதிர்க்க முடியாது, ஒழிக்கத்தான் முடியும்’ என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவர் வாக்கின் இன்றைய வடிவம்தான் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உரையாகும். ஈராயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் போராட்டத்தின் இன்றைய வடிவம் இது.
‘ஒழித்தல்’ என்றால் சனாதன எண்ணங்களை ஒழித்தலே தவிர, சனாதனிகளை ஒழித்தல் ஆகாது. 100 ஆண்டுகளாக இயக்கம் நடத்திய பெரியார் அவர்கள் எந்தக் கோவிலையும் இடிக்கவில்லை. எந்த எதிரியையும் அழிக்கவில்லை. பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் எழுதியதற்காக – பேசியதற்காக கைது செய்யப்பட்டு சிறை இருந்திருக்கிறார்களே தவிர வன்முறைகளில் அல்ல. அது திராவிட இயக்கத்தின் பாணியும் அல்ல. கொள்கை வரலாறு உண்டே தவிர, கொலை வரலாறுகள் கிடையாது.
‘அழித்தொழித்தலின் வரலாறு’ சுதந்திர இந்தியாவில் மகாத்மா காந்தியில் தொடங்குகிறது. அதனைச் செய்தது யார்? ‘இனப்படுகொலையின் வரலாறு’ 2002 குஜராத்தில் நடந்தது. அதனைச் செய்தது யார்? மசூதியை கடப்பாரையைக் கொண்டு தகர்த்தது யார்? குடியுரிமைச் சட்டத்தின் நோக்கமும்,பொது சிவில் சட்டத்தின் நோக்கமும் இனச் சுத்திகரிப்பு அல்லாமல் வேறென்ன?
“சனாதனக் கோட்பாட்டைத்தான் நான் விமர்சித்தேன். எதுவுமே மாறக் கூடாது என்று சனாதனிகள் சொல்கிறார்கள். எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது நமது நோக்கம்” என்று மிகமிகச் சரியாக தீர்மானப் பதிலளித்து விட்டார் கொள்கை வாரிசான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள். இதற்கு பதிலளிக்க நினைப்பவர்கள், சனாதனம் என்பது அனைவருக்கும்பொதுவானதுதான் என்று வாதிட்டால் வரவேற்கலாம். அது அவர்களால் முடியாது.
‘சனாதனத்தை’ வரிவரியாய் உரித்து தொங்க விட்டவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.‘சமூக உரிமைச் சட்டங்களிலேயே மிகக் கொடூரமான சட்டமே மனுதான்’ என்றவர் அவர். “இந்த சதுர்வர்ண முறையை நான் அறவே வெறுக்கிறேன். எனது முழு இயற்கையும் அதை எதிர்த்து எழுகிறது. வெறும் உணர்ச்சியின் அடிப்படையில் மட்டும் நான் இதனை எதிர்க்கவில்லை. ஒரு சமூக அமைப்பு என்ற முறையில் சதுர்வர்ணம் நடைமுறை சாத்தியமற்றது. தீமை நிறைந்தது. இழிந்த தோல்வியை கண்டது. சதுர்வர்ண முறை என்பது மிகக் கொடூரமான முறையாகும்”என்றார் அண்ணல் அம்பேத்கர். எனவே சனாதனத்துக்கு பொய் புனுகு பூசி எடுத்து வர சனாதனிகள் முயற்சிக்கிறார்கள்.
பத்தாண்டு கால ஆட்சியில் சொல்லிக் கொள்வதற்கு எந்தச் சாதனையும் செய்யாத பா.ஜ.க., எதிர்க்கட்சிகள் சொல்லும் கருத்துகளில் இருந்து ஏதாவது ஒரு வார்த்தையை எடுத்து – திரித்து அதன் மூலமாக திசை திருப்பப் பார்க்கிறது. ‘சனாதனத்தை ஒழித்தல்’ என்பதை இன அழிப்பு என்று அவர்களாக – அவர்களது புத்திக்கு ஏற்ப திரித்துக் கொள்கிறார்கள்.
வோட்டு வாங்க பா.ஜ.க.விடம் சொல்வதற்கு எதுவும் இல்லை. அதனால் பொய்யை எடுத்து வருகிறார்கள். ‘பேச நா இரண்டுடையாய் போற்றி போற்றி’ என்று எழுதியவர் பேரறிஞர் அண்ணா!
The post ’’சனாதனமும் சனாதனிகளும்..!’’ முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>