acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி..!’’ஆர்.என்.ரவி-க்கு கடிதம் எழுதிய சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி first appeared on Madras Murasu.
]]>சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு எழுதியுள்ள கடிதத்தில், ”ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிட இசைவு ஆணைக்காக (Sanction) அனுப்பப்பட்ட கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதையும் குறிப்பிட்டு, விரைவான நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு ஆளுநரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர்களான டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா / மாவா விநியோகிப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சிபிஐ கோரியது. மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐ.-யின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது. ஆனால் துரதிருஷ்டவசமாக இதுவரையில் இந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுவதால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்று இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேப்போன்று, மேலும் இரண்டு நிகழ்வுகளில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், முன்னாள் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி. வீரமணி மற்றும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணை கோரியது. இந்தக் கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்களை முறையே 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கை கடிதங்களும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. முந்தைய அதிமுக அமைச்சர்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்கிட தேவையான இசைவு ஆணையை இதுவரை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கவில்லை என்பதை இக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழல் வழக்குகளில் இசைவு ஆணை நிலுவையில் இருப்பது தவிர, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பதின்மூன்று (13) மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. இவற்றில் இரண்டு மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. எனவே, மேற்குறிப்பிட்டுள்ள முக்கியமான கோப்புகள் மற்றும் மசோதாக்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, இனியும் தாமதிக்காமல் ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணையையும், மசோதாக்களுக்கு ஒப்புதலையும் வழங்குமாறு கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு கடிதம் எழுதியுள்ளார்.
The post ’’அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி..!’’ஆர்.என்.ரவி-க்கு கடிதம் எழுதிய சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி first appeared on Madras Murasu.
]]>The post ’’அமைச்ச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தது சரியா..! தவறா..?’’ தி இந்து நாளேடு தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>கடிதம் அனுப்பிய சில மணி நேரங்களிலேயே மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தான் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் பதிலுக்கு இந்திய அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்கவிருப்பதாகவும் முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினார். அரசியல் சாசன விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் நடக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், தனது அதிரடியான நடவடிக்கைக்கு முன்பு உரிய சட்ட ஆலோசனையை அவர் பெற்றிருப்பார் என்றுதான் ஒருவர் நினைக்கக் கூடும்.
ஆனால் கடந்த கால நிகழ்வுக்கு பொருந்தக் கூடிய சட்ட ஆலோசனை பெற திரு. ரவி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார் என்பது அவரது மோசமான முடிவெடுக்கும் திறனையே காட்டுகிறது. மாநிலத்தின் நிறைவேற்று அதிகாரம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் அவர் செயல்படுவது மற்றும் முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களை நியமிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 153, 163 மற்றும் 164 வது பிரிவுகளை பயன்படுத்தியிருப்பதாக அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்களை நியமிப்பது மற்றும் நீக்குவது தொடர்பான அதிகாரம் முதலமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக இருக்கும் நிலையில், ஆளுநருக்கு இதில் எந்த விருப்புரிமையும் இல்லை என்பதையே அரசியல் சாசன செயல்திட்டம் இந்த பிரிவுகளில் சந்தேகத்திற்கு இடமின்றி சொல்கிறது.
அமைச்சருக்கு எதிரான குற்றசாட்டுகள் மற்றும் சமீபத்திய உத்தரவில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் ஆகியவற்றை குறிப்பிட்டு தனது அசாதாரணமான நடவடிக்கையை நியாயப்படுத்த திரு. ரவி முனைந்திருக்கிறார். ஆனால் ஒரு அமைச்சரை நீக்குவதற்கான கோரிக்கை தார்மீக உணர்வுக்கான வேண்டுகோள்தானே தவிர சட்டரீதியான தேவை இல்லை. ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிற தனது முந்தைய ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்கிற காரணத்தால் தன்னிச்சையாக ஆளுநர் ஒருவரை நீக்குவதென்பது அரசியல் சாசன கெடுநிகழ்வன்றி வேறு எதுவும் இல்லை. குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அமைச்சர்கள் தாமே விலகுவது அல்லது முதலமைச்சர்களால் நீக்கப்படுவதே விரும்பத்தக்கதாக இருக்கும்.
கடந்த காலங்களில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதால் அமைச்சர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது தார்மீக அடிப்படையிலானதே தவிர அரசியல் சாசனத்தின் கட்டாய அம்சம் இல்லை. முந்தைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அவர் பங்கு வகித்த காலகட்டத்தில் திரு. செந்தில் பாலாஜி மீது சுமத்தப்பட்ட லஞ்சப் புகார்களும், அதில் கிடைத்த பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டுகளும், அந்த குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும் வரை பதவி விலகும் அளவுக்கு தீவிரமானவை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
அமைச்சர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக “பதவி என்கிற கேடயத்தை” முதலமைச்சர் வழங்குகிறார் அல்லது அமைச்சரவையில் அமைச்சர் தொடர்வது உரிய சட்ட நடைமுறைக்கு இடையூறாக இருக்கிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்க திரு. ஸ்டாலின் தாமாகவே முன் வந்து செயல்பட்டிருக்கலாம். ஆனால், ஆளுநரின் தவறான செயலை எதுவும் நியாயப்படுத்த முடியாது.
The post ’’அமைச்ச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தது சரியா..! தவறா..?’’ தி இந்து நாளேடு தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>The post ‘தேவையற்ற ஆபத்தை தவிர்க்க வேண்டும்..!’’ கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுரை first appeared on Madras Murasu.
]]>இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சரவையின் பரிந்துரையின்றி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்கி கவர்னர் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியலமைப்பு விதிகளை மீறி கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பட்டதாக திமுக குற்றஞ்சாட்டியுள்ளது. அதேபோல், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகளும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியுன் தன்னிச்சையான நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

அதேவேளை, ’’சட்டவிரோத பண பரிமாற்றம், வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்ற நடவடிக்கைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்கொள்கிறார். அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்துகொண்டு விசாரணைக்கு இடையூறு செய்கிறார். செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சரவையில் நீடித்தால் அவர் மீதான சட்ட நடவடிக்கைகள், நேர்மையான விசாரணை போன்றவற்றை கடுமையாக பாதிக்கும். இவை மாநிலத்தில் அரசியல் சாசன எந்திர முறிவை ஏற்படுத்தும். இதன் காரணமாக செந்தில்பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்குகிறேன்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை சட்டப்படி சந்திப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே தெரிவித்தார். இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்த 5 மணி நேரத்திற்குள் தனது உத்தரவில் இருந்து கவர்னர் பின்வாங்கினார். உள்துறை அமைச்சகத்திடமிருந்து அறிவுத்தல் வந்ததால் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மீண்டும் கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில், ’’செந்தில்பாலாஜி பதவி நீக்க விவகாரத்தில், தேவையற்ற ஆபத்தை தவிர்க்க முடிவு எடுப்பதற்கு முன் (prudent) மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்து கேட்க வேண்டும் என்று உள்துறை மந்திரி எனக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆகையால் நான் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்தை கேட்க உள்ளேன். அதுவரை செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவு அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்கப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ‘தேவையற்ற ஆபத்தை தவிர்க்க வேண்டும்..!’’ கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுரை first appeared on Madras Murasu.
]]>