Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#Parliament - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Wed, 27 Sep 2023 04:20:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’உங்களது மூடநம்பிக்கையை தகர்த்து இந்தியாவின் அறிவியல் தலைமுறை முன்னேறும்..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2582%25e0%25ae%259f%25e0%25ae%25a8%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25af https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af/#respond Wed, 27 Sep 2023 04:18:47 +0000 https://madrasmurasu.com/?p=6565 ‘’உங்களது மூடநம்பிக்கையை தகர்த்து இந்தியாவின் அறிவியல் தலைமுறை முன்னேறும் என்பதை சந்திராயன் பறைசாற்றுகிறது’’ என்று புதிய நாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., பேசினார். புதிய நாடாளுமன்றத்தில் தனது கன்னிப்பேச்சின் போது, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது: அவைத் தலைவருக்கு வணக்கம். புதிய நாடாளுமன்றத்தின் முதல் உரை. சந்திராயனுடைய வெற்றிக்கான பாராட்டு உரையாக அமைந்தது மகிழ்வளிக்கிறது. சந்திராயன் 3 வெற்றி பயணத்திலே ஈடுபட்ட இஸ்ரோவினுடைய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி விண்கலத்தின் வேகத்தை […]

The post ’’உங்களது மூடநம்பிக்கையை தகர்த்து இந்தியாவின் அறிவியல் தலைமுறை முன்னேறும்..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.

]]>
‘’உங்களது மூடநம்பிக்கையை தகர்த்து இந்தியாவின் அறிவியல் தலைமுறை முன்னேறும் என்பதை சந்திராயன் பறைசாற்றுகிறது’’ என்று புதிய நாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., பேசினார்.

புதிய நாடாளுமன்றத்தில் தனது கன்னிப்பேச்சின் போது, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது:

அவைத் தலைவருக்கு வணக்கம். புதிய நாடாளுமன்றத்தின் முதல் உரை. சந்திராயனுடைய வெற்றிக்கான பாராட்டு உரையாக அமைந்தது மகிழ்வளிக்கிறது.
சந்திராயன் 3 வெற்றி பயணத்திலே ஈடுபட்ட இஸ்ரோவினுடைய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி விண்கலத்தின் வேகத்தை தீர்மானித்து நிலவின் வழித்தடத்தை துல்லியமாக கணித்து இறங்கியது தொழில்நுட்ப துறையில் நம்முடைய பாய்ச்சல் வேகம் முன்னேற்றத்தினுடைய ஒரு சான்று.

உலகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலவு நோக்கிய பயணம் 7 பயணங்கள் நிகழ முயற்ச்சி நடந்து இருக்கிறது. அதில் நான்கில் தோல்வி அடைந்திருக்கிறது மூன்று வெற்றி ஒன்று இந்தியா இரண்டு சீனா. மிகத் துல்லியமான இடத்தை வெறும் அரை கிலோமீட்டர் நீளம் 2 கிலோ மீட்டர் அகலத்தில் மிகச் சரியாக போய் விண்கலத்தை இறக்கிய நம்முடைய விஞ்ஞானிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் இந்த அவையில் காலையில் இருந்து நடக்கிற விவாதம் உண்மையில் மிகுந்த கவலை அளிக்கிறது. இது விஞ்ஞானத்தைப் பற்றிய ஒரு விவாதமா அல்லது வேத புராணங்களை பற்றிய விவாதமா? என்ற குழப்பம் இருக்கிறது. இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் அவர்கள் புராண இதிகாச கதைகளை அவ்வளவு நேரம் பேசினார் அதை கேட்பதற்கு புதிய பாராளுமன்றத்துக்கு வர வேண்டிய அவசியம் இல்லை ஒரு கோவில் மடத்திலே அமர்ந்தால் நல்ல கதாகாலட்சேபத்தை நான் கேட்க முடியும்.

இப்பொழுது எனக்கு முன்னால் பேசிய ஆளுங்கட்சியினுடைய எம்.பி கூறினார் ’தஞ்சாவூரில் இருக்கிற நூலகத்தில் ஓலைச்சுவடியில் பத்தாயிரம் ஆண்டுக்கு முன்பு விமானத்தை அனுப்பியதற்கான விவரங்கள் அடங்கிய ஏட்டு சுவடிகள் இருக்கிறது’ என்று சொன்னார். நான் இரண்டு விஷயங்களை இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். அதைவிட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட கதைகள் எல்லாம் அங்கே இருக்கிறது. ஆனால் அதெல்லாம் கதைகள். வரலாறு கிடையாது அல்லது அறிவியல் கிடையாது. இரண்டாவது அந்த நூலகத்திற்கு கூட மோடி அரசு கொடுக்க வேண்டிய நிதியை கடந்த சில ஆண்டுகளாக கொடுக்காமல் வைத்திருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

இரண்டாவது கேள்வி ஒரு ஓலைச்சுவடி எப்படி பத்தாயிரம் ஆண்டுகள் இருக்கும் என்பது ஒரு முக்கியமான கேள்வி. அதிகபட்சம், வந்து 1000 ஆண்டுகளுக்குள்ளே தான் எவ்வளவு பாதுகாத்தாலும் இருக்கும் என்பது நமக்கு தெரியும்.

நண்பர்களே, அறிவியல் சூழலில் நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம். இந்தியாவில் 10 லட்சம் பேரில் 262 அறிவியல் ஆய்வாளர்கள் தான் இருக்கிறார்கள். சீனாவில் அது 2500 பேர் இருக்கிறார்கள். பிரிக்ஸ் நாடுகளில் மிகக் குறைவான எண்ணிக்கையில் நாம் தான். அதேபோல ஆய்வுக்கு நாம் ஒதுக்குகிற நிதி ஒருவருக்கு 43 டாலர் தான் நம் ஒதுக்குகிறோம். பிரேசில் 173 டாலர் ஒதுக்குகிறது ரஷ்யா 285 டாலர் ஒதுக்குகிறது. அது மட்டுமல்ல இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை பல்வேறு ஆய்வுகளுக்கு அது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு அறிவியல் துறையில் பணியாற்றுகிற ஆய்வாளர்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஒன்றிய அரசு கொடுத்து இருக்கிற நிதி பூஜ்ஜியம். வெறும் செங்கல்லை வைத்து எய்ம்ஸ் படத்தை காட்டுவதைப் போல வெறும் வாய்ச்சவடாலை வைத்து சந்திராயன் படத்தை காட்டிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு.

இதனுடைய உச்சமாக இரண்டு விஷயங்களை நான் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். ஒன்று எஸ்.எஸ்.எல்.வி கலாம் உருவாக்கிய வகை ராக்கெட். அதற்கான தேவை இன்றைக்கு அதிகமாகி இருக்கிறது. ஒரு ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணிலே அனுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் இன்றைக்கு எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டை தனியாருக்கு கொடுப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருக்கிறது. அதாவது லாபகரமான விஷயங்களை தனியார்க்கு கொடுத்துவிட்டு இஸ்ரோவை நட்டத்திலே காட்டுகிற ஒரு வேலை.

விக்ரம்லேண்டர் போய் நிலவில் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் வைத்த நமது பிரதமர், எஸ்.எஸ்.எல்.வி தனியாருக்கு கொடுக்கிற இந்த மிஷனுக்கு அதானி சக்தி என்று பெயர் வைப்பாரா என்ற கேள்வியை நான் இங்கே கேட்க விரும்புகிறேன்.
அதேபோல இந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ வேத ஆய்வு நிறுவனங்களை ஒன்றிய அரசு துவக்கி இருக்கிறது. ஜோதிட ஆய்வு நிறுவனங்களை துவக்கி இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு அறிவியல் ஆய்வு நிறுவனத்தை கூட ஒன்றிய அரசு துவக்கவில்லை என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்றைக்கு இந்த அவை பாராட்டுகிற இஸ்ரோவுக்கு இதே ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி ஒன்றிய அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது “இஸ்ரோ வாய் திறந்து பேசக்கூடாது” என்று. ஜோதிமத் நிலச்சரிவு விஷயத்தில் இஸ்ரோவும் நிலவியல் துறையும் எதுவும் பேசக்கூடாது என்று ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியது.
எப்படி பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொன்ன கலிலியோவுக்கு வாய்ப்பூட்டு சட்டம் போட்டீர்களோ அதே போல இஸ்ரோவுக்கு நீங்கள் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

நண்பர்களே அறிவியல் என்பதும் விஞ்ஞானம் என்பதும் கேள்வியில் தான் பிறக்கிறது.
இந்தியாவினுடைய அனைத்து முன்னேற்றமும் அறிவியல் பூர்வமான பார்வையிலிருந்து உருவானவை. அவற்றையெல்லாம் மறுதலித்து புராணங்களை வரலாறு என்றும் இதிகாசங்களை அறிவியல் என்றும் மீண்டும் மீண்டும் நீங்கள் நிலைநிறுத்த நினைக்கிறீர்கள். அது உங்களை உங்களுடைய பார்வையை மக்களிடம் வந்து அம்பலப்படுத்துவதற்கு தான் உதவி செய்யும்.

எப்படி ஒரு ராக்கெட் விண்ணிலே போகிற பொழுது அது உதிர்த்து கீழே தள்ளுகிற எரிபொருளைப் போல உங்களது பொய்யும் கதைகளும் கீழே விழுகும்.
இந்தியா வரலாற்று ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் முன்னோக்கி செல்லும். 40, 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சைக்கிளில் ராக்கெட்டை கொண்டு போன இஸ்ரோதான் இன்றைக்கு செவ்வாய் கிரகத்திற்கு தன்னுடைய முயற்சியை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு தொற்று நோயை ஒழிக்க முடியாது என்று உலக நாடுகள் இந்தியாவை சொன்னது.

ஆனால் இன்றைக்கு தொற்று நோயை நாம் முழுமையாக ஒழித்திருக்கிறோம். எருமை பாலிலிருந்து பவுடரை உருவாக்கி இந்த இந்தியாவின் ஊட்டச்சத்தை வளர்த்து இருக்கிறோம். இது அனைத்தும் அறிவியல் பார்வையோடு திடமான ஒரு இந்தியா மூடநம்பிக்கையை தகர்த்து முன்னேறியது. எனவே உங்களது மூடநம்பிக்கையை தகர்த்து இந்தியாவின் அறிவியல் தலைமுறை முன்னேறும் என்பதை சந்திராயன் பறைசாற்றுகிறது என்று சொல்லி முடிக்கிறேன் வணக்கம்.

 

The post ’’உங்களது மூடநம்பிக்கையை தகர்த்து இந்தியாவின் அறிவியல் தலைமுறை முன்னேறும்..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af/feed/ 0
‘’நாடாளுமன்றத்தில் அவமானப்படுத்தப்பட்டது டேனிஸ் அலி மட்டுமல்ல..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b5%25e0%25ae%25ae%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%be/#respond Sat, 23 Sep 2023 09:40:15 +0000 https://madrasmurasu.com/?p=6523 ’’அவமானப்படுத்தப்பட்டது டேனிஸ் அலி மட்டுமல்ல. இந்தியாவின் மாண்பும், நாடாளுமன்றத்தின் மதிப்பும். எனவே விளக்கம் அளிக்க வேண்டியது ரமேஷ் பிதுரி மட்டுமல்ல’’ என்று சு.வெங்கடேசன் எம்.பி., கூறினார். ’’நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு துவங்கியது. சில நிமிடங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி அவைக்கு வந்தார். அவர் வந்து உரிய இடத்தில் நின்றதும் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அவையிலிருந்த எங்கள் எல்லோருக்கும் பேரதிர்ச்சி. ஏனென்றால் சபாநாயகரோ, செக்கரட்டிரி ஜென்ரலோ அவையில் இல்லை. அவர்கள் சரியாக […]

The post ‘’நாடாளுமன்றத்தில் அவமானப்படுத்தப்பட்டது டேனிஸ் அலி மட்டுமல்ல..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.

]]>
’’அவமானப்படுத்தப்பட்டது டேனிஸ் அலி மட்டுமல்ல. இந்தியாவின் மாண்பும், நாடாளுமன்றத்தின் மதிப்பும். எனவே விளக்கம் அளிக்க வேண்டியது ரமேஷ் பிதுரி மட்டுமல்ல’’ என்று சு.வெங்கடேசன் எம்.பி., கூறினார்.

’’நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு துவங்கியது. சில நிமிடங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி அவைக்கு வந்தார். அவர் வந்து உரிய இடத்தில் நின்றதும் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அவையிலிருந்த எங்கள் எல்லோருக்கும் பேரதிர்ச்சி. ஏனென்றால் சபாநாயகரோ, செக்கரட்டிரி ஜென்ரலோ அவையில் இல்லை. அவர்கள் சரியாக 11 மணிக்கு இருக்கைக்கு வருவார்கள். அதன் பின்னர் தான் அவை நடவடிக்கை துவங்க வேண்டும். ஆனால், மோடி வந்ததும் நாட்டுப்பண் இசைக்கப்பட்டு விட்டது. இடையில் அதனை நிறுத்த முடியாது. எனவே முழுமையாக இசைக்கப்பட்ட பின்னர் சபாநாயகரும், செக்கரட்டரி ஜெனரலும் தனது இருக்கைக்கு வந்தார்கள். பின்னர் மீண்டும் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.
நாடாளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் இல்லாமல் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது இதுவே முதல் முறை. அவையின் மாண்பு கருதி இந்த பிரச்சனையை எதிர்கட்சிகள் மிக பக்குவமாக கையாண்டனர். இந்த தவறு குறித்து விசாரிக்க சபாநாயகர் உத்தரவிட்டார்.

மோடி மைய ஆட்சியில் அவர் தான் அடிப்படையே தவிர வேறு எந்த விதிகளும், மரபுகளும் முக்கியமல்ல என்ற கருத்தோட்டத்தின் வெளிப்பாடே இந்த செயல். அதனால், தான் குடியரசு தலைவர் இல்லாமல் புதிய நாடாளுமன்றம் திறக்கப்படுவதையும், சபாநாயகர் இல்லாமல் நாட்டுப்பண் இசைக்கப்படுவதையும் இந்த நாடு பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நிகழ்வென்றால் கடைசி நிகழ்வு இன்னும் மோசமாக நடந்து முடிந்தது.
21 ஆம் தேதி வியாழன் இரவு 10 மணிக்கு பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி பேச ஆரம்பித்தார் அப்போது எதிர் கட்சி எம்.பிக்கள் அதி பட்சம் பத்து பேர் அவையில் இருந்திருப்போம். திருமிகு கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கப்பாண்டியன், கதிர் ஆனந்த், கலாநிதி வீராச்சாமி, மற்றும் நான் , கேரளாவைச் சேர்ந்த திரு. பென்னி. இது தவிர வட இந்திய எம்.பிக்கள் டேனிஷ் அலி உள்ளிட்ட ஒரு சிலர் இருந்தார்கள். எதிர் கட்சி எம்.பிக்கள் பத்து பதினைந்து பேர் தான் இருந்தீர்களா? மற்றவர்கள் ஏன் இல்லை என்ற கேள்வி எழலாம். பாஜக-வின் வெளிப்படையற்ற நிர்வாக முறையே இதற்கு காரணம்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தான் முடிவதாக அறிவிக்கப்பட்டது. அதனால் 21 ஆம் தேதி வியாழன் அன்று மக்களவையில் சந்திராயன்-3 வெற்றி பற்றி விவாத நிகழ்வாக நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டது. பகலில் விவாதம் நடைபெற்றது வழக்கம் போல மோடியை புகழ்ந்தால் தாராளமாக பேசலாம். விமர்சித்தால் உங்களின் நேரம் தானாக சுருக்கப்படும்.

நான் சந்திராயன் வெற்றி பற்றி பேசும் பொழுது. நாலரை நிமிடத்தில் மணியடிக்கப்பட்டது. அதற்கு ஒரு உதாரணம். அவை வழக்கம் போல் ஆறு மணிக்கு முடியும் என்று தான் விவாதங்கள் நடத்தப்பட்டது. ஆனால் பின்னர் நடவடிக்கை நள்ளிரவு வரை நீண்டது. மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவாதம் நடைபெற்று வந்தது. அந்த அவையில் மசோதா நிறை வேற்றப்பட்டு அதன் பின்னர் மக்களவையில் அந்த தகவல் தெரிவிக்கப்பட்ட பின் அவை நடவடிக்கை முடிவுற வேண்டும். இயல்பாக 21 தேதி இரவு சுமார் 10 மணிக்கு மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறும் அதன் பின்னர் 22 ஆம் தேதி அந்த செய்தியை மக்களவையில் பதிவு செய்து பின்னர் நாட்டுப்பண் பாடப்பட்டு கூட்டத்தொடரை முடிப்பார்கள். அது தான் மரபு.

ஆனால் திடீரென நிகழ்சி நிரல் மாற்றமடைந்தது. அன்று இரவே கூட்டதொடரை முடிக்க தயாரானார்கள். அதனால் மாநிலங்களவையில் மசோதா நிறைவேறி வரும் வரை மக்களவையை நடத்த முடிவு செய்தார்கள். கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேர ஒதுக்கீட்டுப்படி அனைவரும் இரவு 7 மணிக்குள் பேசி முடித்தோம். ஆனால் அவையை நடத்த வேண்டும் என்பதற்காக அதன் பிறகு பலருக்கும் பேச வாய்ப்பளித்தனர். விவாதத்தின் குறுக்கீடு என்ற அடிப்படையில் அறிவியல் மற்றும் விண்வெளித்துறைக்கான தனிப்பொறுப்பு வகிக்கும் அமைச்சர் திரு. ஜிஜேந்தர் சிங் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் பேசினார் . ஆனால் மாநிலங்களவையில் ஓட்டெடுப்பு முடிய இன்னும் இரண்டு மணி நேரமாகும் என்று சொன்னார்கள். எனவே அமைச்சரின் பேச்சுக்குப்பின் மீண்டும் விவாதம் தொடர்ந்தது.

பொதுவாக காலையிலிருந்தே சந்திரயான் வெற்றியின் பாராட்டு என்ற பெயரில் பாஜக-வினர் புராணக் கட்டுக்கதைகளை அளவில்லாமல் அள்ளிவிட்டுக் கொண்டிருந்தனர். நான் நண்பகல் சுமார் 3.30 க்கு பேசினேன். அப்பொழுதே நாடாளுமன்றம் கோயில் மடங்களில் நடைபெறும் கதாகாலட்சியம் போல் மாறிவிட்டதை சுட்டிக்காட்டி உரையாற்றினேன். நேரம் செல்ல செல்ல ஆளுங்கட்சியினரின் உரை மிக மோசமடைந்தபடி இருந்தது. சந்திரயானின் வெற்றியை புராணக்கதைகளோடு இணைத்து மோடிக்கு புகழாரம் சூட்ட பெரும்பாடு பட்டனர். எதிர் கட்சிகளின் உரைகளுக்கு மோசமான எதிர்வினைகளை புரிந்து வந்தனர்.

இந்நிலையில் தான் பாஜகவின் ரமேஷ் பிதுரி இரவு சுமார் பத்து மணிக்கு பேசத் துவங்கினார். பொதுவாக அவர் எப்பொழுது பேசினாலும் எதிர்கட்சிகளை மிக மோசமாக, மட்டரகமாக பேசுவதே வழக்கமாக கொண்டவர். அன்றும் மோசமாக பேசினார். எதிர்கட்சி வரிசையில் இருந்தவர்களை பார்த்து பயங்கரவாதிகள் என்றார். நாங்கள் அனைவரும் எழுந்து எங்கள் ஆட்சேபனையை தெரிவித்து குரல் எழுப்பினோம். அப்பொழுது இன்னும் மோசமாக பேச ஆரம்பித்தார். திரு டேனிஸ் அலியைப் பார்த்து வசை பொழிந்தார். அவர் என்ன சொல்கிறார் என்று எங்களுக்கு முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை. ஆனால் அவரின் வசைகேட்டு டேனிஸ் அலி துடித்துப் போனார். அவையில் இவ்வளவு அநாகரீகமாக பேசுவதை எப்படி அனுமதிக்கிறீர்கள் என்று ஆளுங்கட்சியினரைப் பார்த்து பெருங்குரலில் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்து நாங்கள் அனைவரும் வலிமையான எதிர்ப்பை தெரிவித்தோம்.

நான் தான் அவர் அருகில் இருந்தேன். அவரது உடல் நடுங்கியது என்றே சொல்ல வேண்டும். அவர் ஏன் அவ்வளவு பதட்டமாகி குரல் கொடுக்கிறார் என்று எங்களால் முழுமையாக புரிந்துக் கொள்ள முடியவில்லை. நான் அவரை தோள்தொட்டு சமாதான படுத்த முயற்சி செய்தேன். சிறிது நேரத்தில் முன்வரிசையில் இருந்த திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்கள் எங்கள் வரிசைக்கு வந்து சமாதானப்படுத்த முயற்சித்தார். டேனிஸ் அலி தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதில் உறுதியுடன் இருந்தார். நாங்கள் ஒரு பக்கம் அவரை சமாதானப்படுத்தவும் மறுபக்கம் ஆளுங்கட்சியினரின் நடவடிக்கையை கண்டித்து குரல் எழுப்பியப் படியும் இருந்தோம். இந்த நேரத்தில் ஆளுங்கட்சி வரிசையில் இருந்த அமைச்சர் அனுராக் தாக்கூர் எங்களை நோக்கி எதிர்கட்சி வரிசைக்கு வந்து சமாதானப்படுத்த ஓரிரு வார்த்தையை சொன்னார். இவர் தான் டில்லி தேர்தல் கலவரத்தின் பொது “ “கோலி மாரோ” அதாவது எங்கள் எதிரிகளை சுட்டுத்தள்ளுவோம் என்று பேசியவர்.

அதாவது ரமேஷ் பிதுரி வகை பேச்சுகளை அதைவிட மோசமாக பேசியவர். பேசும் முன் இணை அமைச்சராக இருந்தவர் பேசிய பின்னர் கேபினட் அமைச்சரானார். இவர் தான் சமாதானம் பேச வந்தவர். அவரது குரலுக்கு எந்த மதிப்பும் தர நாங்கள் தயாராக இல்லை. வந்தவர் அதே வேகத்தில் திரும்பிப் போய்விட்டார். அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. நாங்கள் 10 பேர் தான் இருந்தோம் ஆனாலும் அவையில் பெரும் போராட்டத்தை டேனிஸ் அலிக்கு ஆதரவாக நடத்திக்கொண்டிருந்தோம். இறுதியாக அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து வருத்தம் தெரிவித்தார். அதன் பின்னரே நாங்கள் அவை நடவடிக்கையை அனுமதித்து இருக்கையில் அமர்ந்தோம். அதன் தொடர்சியாக கூட ரமேஷ் பிதுரி குறைந்த பட்சம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அவை இரவு சுமார் 11.30 க்கு முடிவுற்றது.

மறு நாள் காலை தான் ரமேஷ் பிதுரி பேசியதன் முழு அர்த்தத்தையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர் பயன்படுத்திய வார்த்தைகள் எழுத முடியாத அநாகரீகத்தின் உச்சம். எனவே, அவற்றை இப்பொழுது குறிப்பிடவில்லை. டேனிஸ் அலியின் உடல் ஏன் அவ்வளவு நடுங்கியது? ஏன் அவ்வளவு கொந்தளித்துப் பேசினார் என்பதை அர்த்தம் தெரிந்த பின்னரே புரிந்து கொள்ள முடிந்தது. இது பாஜக ஊட்டி வளர்க்கும் வெறுப்பு அரசியலின் விளைச்சலாகும். பாசிசத்தின் அடிப்படை குணம் வெறுப்பை உமிழ்ந்து கொண்டே இருப்பது. பிரதமர் துவங்கி எல்லோரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறுப்பையும், நஞ்சையும் உமிழ்ந்துக் கொண்டே இருக்கின்றனர். 17 ஆவது நாடாளுமன்றத்தில் எதிர் கட்சி எம்.பி-களைப்பார்த்து தீவிரவாதிகள், பாகிஸ்த்தான் கைகூலிகள், தேச துரோகிகள் என்று எண்ணற்ற முறை சொல்லியிருக்கிறார்கள். இவை எல்லாவற்றின் தொடர்ச்சி மற்றும் உச்சம் தான் ரமேஷ் பிதுரி பேசியது.

சபாநாயகர் உறுதியான நடவடிக்கையாக எடுக்க வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தியுள்ளோம். இந்த நேரத்தில் டேனிஸ் அலியின் கரங்களை இறுகப் பற்றி நிற்போம். ரமேஷ் பிதுரிக்கு எதிராக, பாஜகவுக்கு எதிராக, வெறுப்பை உமிழும் பாசிசத்திற்கு எதிராக மனித மாண்புகளை உயர்த்திப்பிடிப்போம்.

இந்தியா தனது சகோதரத்துவத்தை அடிப்படைவாத கும்பலிடம் ஒரு போதும் இழக்காது.’’

சு.வெங்கடேசன் எம்.பி., முகநூல்

The post ‘’நாடாளுமன்றத்தில் அவமானப்படுத்தப்பட்டது டேனிஸ் அலி மட்டுமல்ல..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%be/feed/ 0