acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’சென்னை ஐஐடி – இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நீரின் தரம் குறித்த படிப்பு..!’’ first appeared on Madras Murasu.
]]>இந்த நான்கு மாத காலப் பாடவகுப்பு அறிவியல், பொறியியல் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கும், நீர் தரத்தில் ஆர்வம்கொண்ட தொழில்நுட்பப் பின்னணி உடையவர்களுக்கும் ஏற்றதாகும்.
இந்திய அளவிலும், உலக அளவிலும் நீர் வரைபடத்தை மாணவர்களைக் கொண்டு உருவாக்கும் பணியில் பாடத்திட்ட அமைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நீரின் தரம் குறித்த அடிப்படை அம்சங்களின் விரிவான அறிமுகத்திற்குப் பின், ஆய்வுகள் உள்பட நடைமுறை சோதனைகளை மாணவர்கள் நடத்துவார்கள். பாடத்திட்ட காலம் நிறைவடைந்ததும் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். கல்வி நிறுவனங்கள் தங்களது பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக இந்த சான்றிதழையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு 2024, ஜூலை 20 அன்று முடிவடையும். ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணைப்பின் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் https://bit.ly/3zgpkMy பாடவகுப்பு 2024 ஜூலை 29 அன்று தொடங்கும்.

சென்னை ஐஐடி பேராசிரியர்களான டி.பிரதீப், லிகி பிலிப், டெல் அவிவ் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் ஃபிஷ்மேன், கேஎம்சிஎச் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் டாக்டர் ஜி.வேல்முருகன் ஆகியோர் இப்பாடத்திட்டத்தின் பயிற்றுநர்களாக செயல்படுவார்கள். இவர்கள் தவிர சென்னை ஐஐடி, பிஏஆர்சி, பர்டியூ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விருந்தினர் பேராசிரியர்களும் பணியாற்றுவார்கள்.
நீரின் தரத்தைப் பாதுகாப்பதில் ஆர்வமுள்ள அனைவரையும் இந்தப் பாடத்திட்டத்தில் சேர வரவேற்றுள்ள, சென்னை ஐஐடி வேதியியல் துறையின் நிறுவனப் பேராசிரியர் தாளப்பில் பிரதீப் கூறும் போது, “ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது, அதற்கான காரணங்களை மக்கள் புரிந்துகொள்ளும்போதுதான் சாத்தியமாகும். அத்தகைய அம்சங்களில் நீரின் தரத்தை அறிந்து கொள்வதும் ஒன்று. மக்களுக்கு நம்பிக்கையான நீர் தரம் குறித்த தரவை இந்தப் பாடநெறி உருவாக்கும் என்றார்.
நீரின் தரம் பற்றிய இணையவழிப் படிப்பு மக்களின் நீர் தரவுக்கான அணுகுமுறை எனத் தலைப்பிடப்பட்ட இந்தப் பாடவகுப்பு, நீரின் தரம், முக்கிய அளவுருக்கள் பற்றிய பகுப்பாய்வு, மனித ஆரோக்கியத்தில் அவற்றின் தாக்கம் பற்றிய விரிவான புரிதலை வழங்கும். வீடுகள், ஆறுகள், ஆழ்துளை கிணறுகள், நிலத்தடி நீர் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து நீரின் தரத்தின் தரவுத்தளத்தையும் இதனால் நிறுவ முடியும்.
இப்படிப்பிற்கான விரிவுரை வகுப்புகளைப் பொறுத்தவரை இணைய வழி அல்லது நேரடியாக அல்லது பதிவு செய்யப்பட்ட வடிவில் மாணவர்கள் பங்கேற்கலாம். பாடத்திட்டத்தை எந்த அளவுக்கு புரிந்திருக்கிறார்கள் என்பது இணையவழி தேர்வு முறைகள், கேள்வி – பதில்கள் மூலம் கண்டறியப்பட்டு மதிப்பிடப்படும். செய்முறை அமர்வுக்கு பதிவு செய்பவர்கள் கையடக்க கருவிகள் மற்றும் கள சோதனைக் கருவிகள் போன்றவற்றுடன் களத்திலும் ஆய்வகத்திலும் அளவீடுகளை மேற்கொள்வார்கள். ஆய்வு செய்யப்பட்ட நீரின் தர அளவுருக்களில் குளோரின் இன்மை, மொத்த குளோரின், காரத்தன்மை, ஆக்சிஜனேற்றம் – குறைப்பு திறன், கடத்துத்திறன், மொத்தம் கரைந்த திடப்பொருள்கள், வெப்பநிலை போன்ற விவரங்களை அறிய முடியும்.

கடந்த கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் (சென்னை மற்றும் ஈரோடு போன்றவை) கல்லூரி மாணவர்களை உள்ளடக்கிய ஒரு முன்னோடி ஆய்வின் அடிப்படையில் இந்தப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் தரவு, இடம் சார்ந்த ஒருங்கிணைப்புகள், கணக்கெடுப்புகளின் உள்ளீடுகளுடன் நீரின் தரம் குறித்த இணையத தரவை உருவாக்குவதற்காக ஒருங்கிணைக்கப்பட்டதாகும்.
பல்வேறு நகரங்களிலும், கிராமங்களிலும் செய்முறை அமர்வுகள் நடைபெறுவதால், குறிப்பிட்ட இடத்திலிருந்து பல்வேறு பங்கேற்பாளர்கள் பதிவுசெய்து, மக்களின் நீர் தரவை உருவாக்குவதில் பங்களிப்பது அவசியமாகிறது. செய்முறை அமர்வுக்கான மையமாக மாறுவதற்கு பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் கைகோர்க்க ஊக்குவிக்கப்படுகின்றன.
பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர்களான டாக்டர் ரம்யா திவேதி, மின்னஞ்சல் – ramya_coe@icsrpis.iitm.ac.in (IITM) அல்லது செல்வி சூசன் ககன், மின்னஞ்சல் – suzankagan@gmail.com (டெல் அவிவ் பல்கலைக்கழகம்) ஆகியோரிடம் இருந்து மேலும் விவரங்களை கேட்டுப் பெறலாம்.
The post ’’சென்னை ஐஐடி – இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நீரின் தரம் குறித்த படிப்பு..!’’ first appeared on Madras Murasu.
]]>The post ”இன்ஜினியரிங் படிப்புகளை இனி ஈசியா தமிழ் வழியில் படிக்கலாம்..!” first appeared on Madras Murasu.
]]>நிரலாக்கம், தரவு அமைப்புகள், பைத்தானைப் பயன்படுத்தி படிமுறைத் தீர்வு போன்ற அதிகளவில் எதிர்பார்க்கப்படும் படிப்புகள் உள்பட 174 தொழில்நுட்பப் படிப்புகளுக்கான பாடங்களை ஐஐடி மெட்ராஸ் என்பிடெல் தமிழில் மொழிபெயர்த்துள்ளது. பல்வேறு துறைகளில் உள்ள பாடங்களை மொழிபெயர்ப்பு செய்வதற்காக 682 மொழிபெயர்ப்பாளர்கள், 51 தரக்கட்டுப்பாடு நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டு மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர, மொத்தம் 159 தமிழ் இ-புத்தகங்கள் என்பிடெல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் தமிழில் கற்போருக்கு கூடுதல் பாடத்தொகுதிகள் கிடைக்கின்றன. மேலும், 906 மணி நேரத்திற்கு வீடியோ உள்ளடக்கத்திற்கான ஆடியோ உட்பொதிகளும் கிடைக்கின்றன. மொழிபெயர்க்கப்பட்ட பாடங்களை அணுகுதல் மற்றும் புரிதல் குறித்து கற்போரிடம் இருந்து சாதகமான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
என்பிடெல் பாடங்கள் அசாமிய, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய 11 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. பிராந்திய மொழிகளில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, தொழில்நுட்பக் கல்விக்காக ஆங்கிலத்திற்கு மாறும் மாணவர்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.
இதுகுறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் என்பிடெல்லின் மொழிபெயர்க்கப்பட்ட பாடங்கள் பற்றிய விவரங்களை கீழ்க்காணும் இணையப்பக்கத்தில் காணலாம் – https://nptel.ac.in/translation
தொழில்நுட்பப் பாடங்களை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சி குறித்து எடுத்துரைத்த என்பிடெல் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளரும், ஐஐடி மெட்ராஸ் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையின் பேராசிரியருமான ராஜேஷ்குமார் கூறும்போது, “ஒவ்வொரு மொழிக்கும் அதற்கென தனி உலகம் உண்டு. மொழிபெயர்ப்பு இல்லாவிடில் என் உலகத்தின் எல்லைக்குள்ளேயே முடங்கி விடுவேன். அந்தத் தடையைத் தகர்த்தெறிவதற்கான முயற்சியில் என்பிடெல் ஈடுபட்டுள்ளது” என்றார்.
என்பிடெல் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளரும், ஐஐடி மெட்ராஸ் ரசாயனப் பொறியியல் துறையின் ஆசிரியருமான பேராசிரியர் அபிஜித் பி.தேஷ்பாண்டே, “மொழிபெயர்க்கப்பட்ட பாடங்கள் இந்தியாவில் கல்வி கற்போருக்கு கிடைக்க என்பிடெல்-ஐஐடி மெட்ராஸ் புதுமையான வழிகளைப் பின்பற்றியுள்ளது.” எனத் தெரிவித்தார்.
என்பிடெல் ((தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம்) என்பது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நிதியுதவியுடன் கடந்த 2003-ம் ஆண்டு ஐஐடிக்கள், ஐஐஎஸ்சிக்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டதாகும்.
என்பிடெல் தனது நோக்கத்தை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் எல்லோருக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஒவ்வொரு செமஸ்டருக்கும் 22 வெவ்வேறு துறைகளில் 700-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கான சான்றிதழ்களை என்பிடெல் வழங்கி வருகிறது.
தற்போது வரை, 163 பொறியியல் படிப்புகள் உள்பட 244 என்பிடெல் படிப்புகளில் 20,000 மணி நேர வீடியோ உள்ளடக்கம் வெற்றிகரமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. துல்லியத்தை உறுதி செய்வதற்கும் ஒட்டுமொத்த கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பச் சொற்கள் ஆங்கிலத்தில் (ஒலிமாற்றம் செய்யப்பட்டவை) இடம்பெற்றுள்ளன. மொழிபெயர்க்கப்பட்ட இந்த டிரான்ஸ்க்ரிப்ட்கள் எளிதான குறிப்புகளுக்காக புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. என்பிடெல் இணையதளத்தில், மொழிபெயர்ப்பு புத்தகங்கள் பக்கத்திலும், ஸ்வயம் இணைய முகவரியிலும் தற்போது பல்வேறு பிராந்திய மொழிகளில் 980 புத்தகங்கள் கிடைக்கின்றன.
என்பிடெல்லின் முயற்சியால் ஏற்படும் தாக்கம் குறித்துப் பேசிய மின்சாரப் பொறியியல் துறையின் நான்காமாண்டு மாணவர் திரு. டி.மாதவன் கூறும்போது, “என்பிடெல்லின் தமிழ்மொழி உரைப் பிரதிகளின் ஒருங்கிணைப்பு, தமிழ் பேசும் மாணவர்களுக்கான அணுகலையும் புரிதலையும் கணிசமான அளவுக்கு மேம்படுத்தியுள்ளது. தொழில்நுட்பக் கல்வியில் உள்ள மொழிப் பிரச்சனையைக் குறைக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
The post ”இன்ஜினியரிங் படிப்புகளை இனி ஈசியா தமிழ் வழியில் படிக்கலாம்..!” first appeared on Madras Murasu.
]]>