acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post “நவீன் பட்நாயக் முதல்வர் நாற்காலி சாதனை..!” பிரமச்சாரியின் பிரமாண்ட வரலாறு first appeared on Madras Murasu.
]]>குடும்ப வாழ்க்கை:
நவீன் பட்நாயக் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி 1946 ஆம் ஆண்டு கட்டக் நகரில் ஒடிசாவில் பிறந்தார். இவர் 7 வயதில் தேராதூளில் உள்ள வெல்காம் சிறுவர் பள்ளியில் பயின்றார். தன்னுடைய 17 ஆவது வயதில் டூன் பள்ளியில் சீனியர் கேம்பிரிட்ஜின் சான்றிதழை பெற்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் இருந்து கலைகளில் இளங்கலை பட்டத்தையும் பெற்றார்.
திருமணம் புரியாத இவர் தனது தந்தை மறைவிற்குப் பிறகு அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டார். இவர் எழுத்தாளரும் ஆவார். இவர் அண்ணன் பிரேம் பட்நாயக் ஒரு வணிகர் மற்றும் சகோதரி கீதா மேத்தா ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார்.
அரசியல் வாழ்க்கை:
கடந்த 20 ஆண்டுகளில் ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இவர் 2019ல் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசாவின் முதலமைச்சர் ஆனார்.
கொரோனா தொற்று காலத்திலும் இவரது தலைமையிலான அரசாங்கம் மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றியது.
இவரது ஆட்சியில் மோர் சர்க்கார் எனும் திட்டத்தின் மூலம் கல்வி, சுகாதாரம் ,சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
கல்வி திட்டங்கள்:
உயர்நிலை பள்ளி மாற்று திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகள் போன்று இயங்கும் அதன் தரமும் உயர்த்தப்படும். கல்வி துறைகளில் திறமையான மனித வளத்தை உருவாக்குவது தான் இவரது நோக்கமும் ஆகும்.
சுகாதாரம்:
மேலும் சுகாதாரத் துறையில் இவர் ஏற்படுத்திய மாற்றங்கள் பல எஸ்சிபி மருத்துவ கல்லூரி , எய்ம்ஸ் பிளஸ் வகை மருத்துவமனையாக மாற்றுவது. பிஜு ஸ்வஸ்தயா கல்யாண் யோஜனா ஸ்மார்ட் ஹெல்த் அட்டைகள் மூலம் இலவசமாக மருத்துவ சேவையை பெறுவது, முக்யா மந்திரி பாயு ஸ்வஸ்தய சேவா, அமா மருத்துவமனை போன்றவை.
BSKY திட்டமானது மருத்துவ அட்டையை 3.3 கோடி பேருக்கு வழங்கியுள்ளது. 96.5 லட்சம் குடும்பங்கள் இதன் மூலம் பயனடையும். தனியார் மருத்துவமனைககளிலும் இலவசமாக இந்த அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
விளையாட்டுத்துறை:
விளையாட்டு துறையிலும் இவர் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார் எஃப் ஐ எச் ஹாக்கி ஆண்கள் உலக கோப்பை 2023 போட்டியானது ஒடிசாவில் நடைபெற்றது இதன் மூலம் நாட்டின் முக்கிய இடமாக ஒடிசாவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான முன்னேற்றம்:
மிஷன் சக்தி திட்டத்தின் மூலம் 70 லட்சம் பெண்களின் வாழ்க்கை உயர்ந்திருக்கிறது. 6 லட்சம் சுய உதவிக் குழுக்களும் உருவாகியுள்ளன.
இவரது தலைமையிலான பிஜூ ஜனதா தளம் ஒவ்வொரு தேர்தலிலும் பெண்கள் முன்னேற்றத்திற்கும், வேட்பாளருக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
ஆண்களை விட கிராம பஞ்சாயத்தில் 60% பெண் வேட்பாளர்களே.
நீண்ட கால முதல்வர் பதவியில் சிக்கி முன்னாள் முதல்வர் பவன்குமார் சம்லிங் இருந்திருந்த நிலையில் அவரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் ஜோதிபாசு 23 ஆண்டுகள் 137 நாட்கள் பதவி வகித்த நிலையில் தற்போது ஐந்தாவது முறை ஆட்சியில் நவீன் பட்நாயக் 23 ஆண்டுகள் 138 நாட்களை எட்டியுள்ளார். மற்றும் நீண்ட கால முதல்வர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
– தே. சுகன்யா
The post “நவீன் பட்நாயக் முதல்வர் நாற்காலி சாதனை..!” பிரமச்சாரியின் பிரமாண்ட வரலாறு first appeared on Madras Murasu.
]]>The post ’’ஒடிசாவில் 14 ஆண்டுகளுக்கு பிறகு அதே வெள்ளிக்கிழமை கோர ரெயில் விபத்து..!’’ தொடரும் ரெயில் பலிகள் first appeared on Madras Murasu.
]]>ஒடிசா, தமிழ்நாட்டில் துக்கம் ஒரு நாள் அனுசரிக்க, இரு மாநில அரசுகளும் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து மீட்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

2009 இல் என்ன நடந்தது?
அதிவேகமாக ஓடிக் கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் ஜாஜ்பூர் சாலை ரயில் நிலையத்தைக் கடந்து தண்டவாளத்தை மாற்றிக் கொண்டிருந்தபோது தடம் புரண்டன. ”பெட்டிகள் தடம் புரண்டு ரயிலில் இருந்து பிரிந்தது. 13 பெட்டிகளில் ஒன்று மற்றொன்றில் ஏறியது. தடம் புரண்ட 13 பெட்டிகளில் 11 ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் இரண்டு ஜெனரல். இரவு 7.30 மணி முதல் 7.40 மணி அளவில் விபத்து நடந்தது” என்று அதனை நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள்.
’இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழில் அப்போது வந்த செய்தியின் தமிழ் ஆக்கம்:
ஹவுரா-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் உள்ள ஜாஜ்பூர் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை தடம் புரண்டதில் குறைந்தது 16 பயணிகள் பலியானார்கள். மற்றும் 161 பேர் காயமடைந்தனர். ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், 2003-ம் ஆண்டுக்குப் பிறகு, விபத்துகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், தனது பதவிக் காலத்தில் இந்திய ரயில்வேயின் தலையெழுத்தை மாற்றியுள்ளதாகவும், இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நாளில், நடந்த இந்த ரெயில் தடம்புரண்ட அசம்பாவிதம் அதிர்ச்சி அளிக்கிறது.
புவனேஸ்வரில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 13 பெட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு தடம் புரண்டதில் 16 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 161 பேர் காயமடைந்தனர்.

’’ஜாஜ்பூர் சாலை ரயில் நிலையம் அருகே அதிவேகமாக ஓடிக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டதில் 16 பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 161 பேர் காயமடைந்ததாக கிழக்கு கடற்கரை ரயில்வே பொது மேலாளர் அஜய் குமார் கோயல் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த கோயல், ’’13 பெட்டிகளில் 11 ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் இரண்டு ஜெனரல் பெட்டிகள். ரயிலின் என்ஜின் கவிழ்ந்து போனது. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை’’ என்றார்.
இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தனது இரயில்வே பட்ஜெட்டில் ரயில்வேயின் பாதுகாப்பு சாதனை மற்றும் ரயில் விபத்துகள் குறைவதை எடுத்துக்காட்டிய ஒரே நாளில், இரவு 8:00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. ‘’விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும்’ என்றார் லல்லு பிரசாத் யாதவ்.
’ஐந்து லட்சமும், இறந்தவர்களின் உறவினர்களுக்கு வேலையும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு 10,000 ரூபாயும் வழங்கப்படும்’’ என அறிவித்தார்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post ’’ஒடிசாவில் 14 ஆண்டுகளுக்கு பிறகு அதே வெள்ளிக்கிழமை கோர ரெயில் விபத்து..!’’ தொடரும் ரெயில் பலிகள் first appeared on Madras Murasu.
]]>