acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை மீட்கும் ‘மரைன் ஆம்புலன்ஸ்’..!’’ கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் உறுதி first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சாகர் பரிக்ரமா எனும் கடலோரப் பயணத்தின் எட்டாவது கட்டத்தினை மத்திய அமைச்சர்கள் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல். முருகன் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காப்பட்டனம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதி அன்று தொடங்கினர். இந்தப் பயணம் மீனவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட பயணமாகும்.
இந்த எட்டாவது கட்ட கடலோரப் பயணத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மூன்று நாட்கள் மீனவ மக்களை சந்திக்கின்றனர். இந்நிகழ்ச்சிகளின் தொடக்கமாக தேங்காப்பட்டனம் மீன்பிடித் துறைமுகத்தில் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் மீனவச் சங்கங்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றனர்.
கடல்சார் அவசர மருத்துவ ஊர்தி (மரைன் ஆம்புலன்ஸ்), ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை மீட்கும் வசதி, மீனவர்களுக்கான காப்பீட்டை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், மீன்பிடிப்புக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர்களிடம் மீனவர்கள் வலியுறுத்தினர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சர் ரூபாலா, ’’மீனவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேங்காப்பட்டனம் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே நேரடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் சாகர் பரிக்ரமா பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2019-இல் தேர்தல் பிரச்சாரத்தின் போது மங்களூரில் பிரதமர் பேசிய போது, மீனவர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்படும் எனக் கூறினார். அதன்படி இரண்டாவது முறையாக பிஜேபி ஆட்சி அமைந்ததும், இந்த அமைச்சகம் அமைக்கப்பட்டது.
கடந்த 9 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்காக மத்திய அரசு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சுதந்திர தின விழாவில் பங்கேற்க, முதல் முறையாக நாடு முழுவதிலுமிருந்து 60 மீனவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

நாட்டின் வளர்ச்சிக்கு மீன்வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி 8 சதவீதம் பங்களிப்பு அளிக்கிறது. கடல்சார் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் நாம் 4-இடத்தில் உள்ளோம் என்றும் மீனவர் நலனுக்காக தமிழகத்திற்கு மட்டும் 1800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காசிமேடு உள்ளிட்ட பல்வேறு மீன்பிடித் துறைமுகங்கள் நவீனமயமாக்கப்படும் என்றும் மீனவர்களுக்கான உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் எல். முருகன் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, தூத்தூர், வள்ளவளை, குளச்சல், முட்டம் ஆகிய மீனவக் கிராமங்களில் மீனவர்களுடன் மத்திய அமைச்சர்கள் கலந்துரையாடினர். இப்பகுதி மீனவர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர்களிடம் முன்வைத்தனர்.
The post ’’ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை மீட்கும் ‘மரைன் ஆம்புலன்ஸ்’..!’’ கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் உறுதி first appeared on Madras Murasu.
]]>The post ”ஆரோக்கியமான குடிமக்கள், வலுவான தேசம்..!” – இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் first appeared on Madras Murasu.
]]>
அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டாக்டர் எல்.முருகன், இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு போர்ட்ப்ளேரில் யோகா தொடர்பான முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், காஷ்மீர் முதல் லட்சத்தீவுகள் வரை இன்று அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொள்கிறார்கள் என்றால் அது பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சியால் தான் என்று குறிப்பிட்டார்.
அந்தமான் நிகோபார் தீவுகளிலும் நாம் யோகாவை கடைபிடித்து வருகிறோம், இது யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பொருள்படக் கூடிய வசுதைவ குடும்பகம் என்ற உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று அமைச்சர் கூறினார். யோகா என்பது நமது நாட்டின் பெருமிதம் என்றும், நமது நாட்டிற்கு புகழ் சேர்க்கக் கூடிய இயக்கமாக அது மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார். 
யோகாசனங்கள் மூலமாக நமது மனதையும் உடலையும் ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் வைத்துக் கொள்ள இயலும் என்று குறிப்பிட்ட அமைச்சர், அனைவரும் யோகாவை கடைபிடித்து அன்றாட வாழ்வில் உடலைக் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமானதாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆரோக்கியமான குடிமக்கள், வலுவான தேசத்திற்கு வழி வகுக்கிறார்கள் என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
போர்ட் ப்ளேரில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஆயுஷ் துறையினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், அந்தப் பகுதியின் துணை நிலை ஆளுநர் அட்மிரல் டி கே ஜோஷி மற்றும் அந்தமான் நிகோபார் நிர்வாக அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். அந்தமான் நிகோபார் தீவுகளில் 42 இடங்களி்ல் யோகா தினக் கொண்டாட்டங்கள் உற்சாகத்துடன் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து போர்ட் ப்ளேரில் உள்ள தொழில்துறை பிரதிநிதிகளை டாக்டர் எல்.முருகன் சந்தித்துப் பேசினார். இந்த தீவுப் பகுதியில் வர்த்தகத்துறையின் வளர்ச்சிக் குறித்து அவர்கள், தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்த கொண்டதோடு பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

மத்திய அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், அரசின் சாதனைகள் குறித்து அமைச்சர் எடுத்துரைத்தார். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை என்ற குறிக்கோளின் அடிப்படையில் அரசு முன்னேறிச் செல்வதாக அமைச்சர் அப்போது கூறினார்.
வளர்ச்சி என்பது பெருநகரங்களுக்கு மட்டுமானது அல்ல என்றும், தொலைதூரப் பகுதிகளுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு மத்திய அரசு அனைத்துவிதமான ஆதரவையும் அளித்து வருவதாக கூறிய அமைச்சர், இந்த தீவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் முன்னேற்றமும் சாட்சிகளாக அமைந்துள்ளன என்றார்.

மாவட்ட அளவிலான மருத்துவமனைக் கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாகவும், விரைவில் அதன் பணிகள் முடிவடைந்து மருத்துவமனை செயல்பாட்டிற்கு வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச விமான நிலைய முனையம் இங்கே சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இது போன்ற வளர்ச்சிப் பணிகள் தென்கிழக்கு நாடுகளுடன் சமூக பொருளாதார உறவுகளை மேம்படுத்த உதவும் என்றும் கூறினார்.
இதற்கிடையே, உள்ளூர் மீனவர்களை சுவராஜ்தீப்பில் (ஹேவ்லாக்) சந்தித்த அமைச்சர், அந்தப் பகுதியில், பனிக்கட்டி தொழிற்சாலையை ஏற்படுத்தவும், குளிர்பதன வசதிகள் கொண்ட சேமிப்புக் கிடங்கை ஏற்படுத்தவும் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்று டாக்டர் எல்.முருகன் தெரிவித்தார்.
The post ”ஆரோக்கியமான குடிமக்கள், வலுவான தேசம்..!” – இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் first appeared on Madras Murasu.
]]>