Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#madurai - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Tue, 17 Oct 2023 09:43:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’ரூ.1200 கோடி மதிப்பு ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சி..! சு.வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு https://madrasmurasu.com/%e0%ae%b0%e0%af%82-1200-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b0%25e0%25af%2582-1200-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25b0%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5 https://madrasmurasu.com/%e0%ae%b0%e0%af%82-1200-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5/#respond Tue, 17 Oct 2023 09:43:48 +0000 https://madrasmurasu.com/?p=6938 மதுரையில் சுமார் 1200 கோடி மதிப்பிலான ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடக்கிறது. ரயில்வே நிர்வாகம் உடனடியாக இம்முயற்சியை கைவிட வேண்டும்’’ என்று – சு.வெங்கடேசன், எம்.பி., வலியுறுத்தியுள்ளார். சு.வெங்கடேசன், எம்.பி., மதுரையில் அளித்த பேட்டி: இந்திய ரயில்வேக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் இரயில்வே நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் முக்கியமான நகரங்களில் எல்லாம் மையமான இடங்களில் இருக்கும் ரயில்வே நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் […]

The post ’’ரூ.1200 கோடி மதிப்பு ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சி..! சு.வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.

]]>
மதுரையில் சுமார் 1200 கோடி மதிப்பிலான ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடக்கிறது. ரயில்வே நிர்வாகம் உடனடியாக இம்முயற்சியை கைவிட வேண்டும்’’ என்று – சு.வெங்கடேசன், எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

சு.வெங்கடேசன், எம்.பி., மதுரையில் அளித்த பேட்டி:

இந்திய ரயில்வேக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் இரயில்வே நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் முக்கியமான நகரங்களில் எல்லாம் மையமான இடங்களில் இருக்கும் ரயில்வே நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் இந்த முடிவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். இந்நிலையில் இப்பொழுது மதுரையில் உள்ள ரயில்வே நிலத்திற்கு ஆபத்து வந்துள்ளது. அரசரடியில் உள்ள ரயில்வே மைதானத்திற்கும், ரயில்வே காலனியில் உள்ள நிலத்திற்கும் ஆபத்து வந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்காக தனியாருக்கு வழங்க இந்நிலங்களை தங்கள் வசம் ஒப்படைக்குமாறு “ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம்” (RLDA) மதுரை ரயில்வே கோட்டத்தை கேட்டுக் கொண்டுள்ளது. அதனடிப்படையில் இரண்டு கட்டங்களாக ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

முதல் கட்டமாக அரசரடி ரயில்வே மைதானம், இதன் அளவும் 11.45 ஏக்கர். இரண்டாவது கட்டமாக ரயில்வே காலனியில் உள்ள மூன்று பகுதி நிலம். இதன் அளவு 29.16 ஏக்கர். மொத்தம் 40.61 ஏக்கர். இதன் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 1200 கோடியாகும். இவ்வளவு பெரும் சொத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இரயில்வேயின் சொத்து மக்களின் சொத்து, தேசத்தின் சொத்து. அதனை தனி நபர்களுக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க மாட்டோம். அரசரடி ரயில்வே மைதானம் மதுரையில் பல்லாயிரம் வீரர்களை உருவாக்கிய மைதானம், விளையாட்டு வீரர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் நாள் தோறும் பயன்படுத்தும் மைதானம். இந்த மைதானமும், ரயில்வே காலனியும் மதுரையின் மிக முக்கிய பகுதிகளாகும்.
அதேப்போல மதுரை நகரத்திற்குள் சுமார் 1550 மரங்கள் இருக்கிற இடம் ரயில்வே காலனி, இன்னும் கூடுதலாக சொல்வதானால் மதுரையினுடைய நுரையீரல் மதுரை ரயில்வே காலனி.

இவற்றை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை இரயில்வே நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன். இம்முடிவினை கைவிட இரயில்வே நிர்வாகம் மறுத்தால் இந்நிலத்தை பாதுகாக்க மதுரை மக்கள் மாபெரும் போராட்ட இயக்கத்தை முன்னெடுப்பார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி., கூறினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் உடன் துணை மேயர் டி.நாகராஜன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்ட செயலாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.

The post ’’ரூ.1200 கோடி மதிப்பு ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சி..! சு.வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b0%e0%af%82-1200-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5/feed/ 0
’’உங்களது மூடநம்பிக்கையை தகர்த்து இந்தியாவின் அறிவியல் தலைமுறை முன்னேறும்..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2582%25e0%25ae%259f%25e0%25ae%25a8%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25af https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af/#respond Wed, 27 Sep 2023 04:18:47 +0000 https://madrasmurasu.com/?p=6565 ‘’உங்களது மூடநம்பிக்கையை தகர்த்து இந்தியாவின் அறிவியல் தலைமுறை முன்னேறும் என்பதை சந்திராயன் பறைசாற்றுகிறது’’ என்று புதிய நாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., பேசினார். புதிய நாடாளுமன்றத்தில் தனது கன்னிப்பேச்சின் போது, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது: அவைத் தலைவருக்கு வணக்கம். புதிய நாடாளுமன்றத்தின் முதல் உரை. சந்திராயனுடைய வெற்றிக்கான பாராட்டு உரையாக அமைந்தது மகிழ்வளிக்கிறது. சந்திராயன் 3 வெற்றி பயணத்திலே ஈடுபட்ட இஸ்ரோவினுடைய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி விண்கலத்தின் வேகத்தை […]

The post ’’உங்களது மூடநம்பிக்கையை தகர்த்து இந்தியாவின் அறிவியல் தலைமுறை முன்னேறும்..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.

]]>
‘’உங்களது மூடநம்பிக்கையை தகர்த்து இந்தியாவின் அறிவியல் தலைமுறை முன்னேறும் என்பதை சந்திராயன் பறைசாற்றுகிறது’’ என்று புதிய நாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., பேசினார்.

புதிய நாடாளுமன்றத்தில் தனது கன்னிப்பேச்சின் போது, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது:

அவைத் தலைவருக்கு வணக்கம். புதிய நாடாளுமன்றத்தின் முதல் உரை. சந்திராயனுடைய வெற்றிக்கான பாராட்டு உரையாக அமைந்தது மகிழ்வளிக்கிறது.
சந்திராயன் 3 வெற்றி பயணத்திலே ஈடுபட்ட இஸ்ரோவினுடைய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி விண்கலத்தின் வேகத்தை தீர்மானித்து நிலவின் வழித்தடத்தை துல்லியமாக கணித்து இறங்கியது தொழில்நுட்ப துறையில் நம்முடைய பாய்ச்சல் வேகம் முன்னேற்றத்தினுடைய ஒரு சான்று.

உலகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலவு நோக்கிய பயணம் 7 பயணங்கள் நிகழ முயற்ச்சி நடந்து இருக்கிறது. அதில் நான்கில் தோல்வி அடைந்திருக்கிறது மூன்று வெற்றி ஒன்று இந்தியா இரண்டு சீனா. மிகத் துல்லியமான இடத்தை வெறும் அரை கிலோமீட்டர் நீளம் 2 கிலோ மீட்டர் அகலத்தில் மிகச் சரியாக போய் விண்கலத்தை இறக்கிய நம்முடைய விஞ்ஞானிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் இந்த அவையில் காலையில் இருந்து நடக்கிற விவாதம் உண்மையில் மிகுந்த கவலை அளிக்கிறது. இது விஞ்ஞானத்தைப் பற்றிய ஒரு விவாதமா அல்லது வேத புராணங்களை பற்றிய விவாதமா? என்ற குழப்பம் இருக்கிறது. இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் அவர்கள் புராண இதிகாச கதைகளை அவ்வளவு நேரம் பேசினார் அதை கேட்பதற்கு புதிய பாராளுமன்றத்துக்கு வர வேண்டிய அவசியம் இல்லை ஒரு கோவில் மடத்திலே அமர்ந்தால் நல்ல கதாகாலட்சேபத்தை நான் கேட்க முடியும்.

இப்பொழுது எனக்கு முன்னால் பேசிய ஆளுங்கட்சியினுடைய எம்.பி கூறினார் ’தஞ்சாவூரில் இருக்கிற நூலகத்தில் ஓலைச்சுவடியில் பத்தாயிரம் ஆண்டுக்கு முன்பு விமானத்தை அனுப்பியதற்கான விவரங்கள் அடங்கிய ஏட்டு சுவடிகள் இருக்கிறது’ என்று சொன்னார். நான் இரண்டு விஷயங்களை இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். அதைவிட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட கதைகள் எல்லாம் அங்கே இருக்கிறது. ஆனால் அதெல்லாம் கதைகள். வரலாறு கிடையாது அல்லது அறிவியல் கிடையாது. இரண்டாவது அந்த நூலகத்திற்கு கூட மோடி அரசு கொடுக்க வேண்டிய நிதியை கடந்த சில ஆண்டுகளாக கொடுக்காமல் வைத்திருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

இரண்டாவது கேள்வி ஒரு ஓலைச்சுவடி எப்படி பத்தாயிரம் ஆண்டுகள் இருக்கும் என்பது ஒரு முக்கியமான கேள்வி. அதிகபட்சம், வந்து 1000 ஆண்டுகளுக்குள்ளே தான் எவ்வளவு பாதுகாத்தாலும் இருக்கும் என்பது நமக்கு தெரியும்.

நண்பர்களே, அறிவியல் சூழலில் நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம். இந்தியாவில் 10 லட்சம் பேரில் 262 அறிவியல் ஆய்வாளர்கள் தான் இருக்கிறார்கள். சீனாவில் அது 2500 பேர் இருக்கிறார்கள். பிரிக்ஸ் நாடுகளில் மிகக் குறைவான எண்ணிக்கையில் நாம் தான். அதேபோல ஆய்வுக்கு நாம் ஒதுக்குகிற நிதி ஒருவருக்கு 43 டாலர் தான் நம் ஒதுக்குகிறோம். பிரேசில் 173 டாலர் ஒதுக்குகிறது ரஷ்யா 285 டாலர் ஒதுக்குகிறது. அது மட்டுமல்ல இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை பல்வேறு ஆய்வுகளுக்கு அது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு அறிவியல் துறையில் பணியாற்றுகிற ஆய்வாளர்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஒன்றிய அரசு கொடுத்து இருக்கிற நிதி பூஜ்ஜியம். வெறும் செங்கல்லை வைத்து எய்ம்ஸ் படத்தை காட்டுவதைப் போல வெறும் வாய்ச்சவடாலை வைத்து சந்திராயன் படத்தை காட்டிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு.

இதனுடைய உச்சமாக இரண்டு விஷயங்களை நான் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். ஒன்று எஸ்.எஸ்.எல்.வி கலாம் உருவாக்கிய வகை ராக்கெட். அதற்கான தேவை இன்றைக்கு அதிகமாகி இருக்கிறது. ஒரு ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணிலே அனுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் இன்றைக்கு எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டை தனியாருக்கு கொடுப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருக்கிறது. அதாவது லாபகரமான விஷயங்களை தனியார்க்கு கொடுத்துவிட்டு இஸ்ரோவை நட்டத்திலே காட்டுகிற ஒரு வேலை.

விக்ரம்லேண்டர் போய் நிலவில் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் வைத்த நமது பிரதமர், எஸ்.எஸ்.எல்.வி தனியாருக்கு கொடுக்கிற இந்த மிஷனுக்கு அதானி சக்தி என்று பெயர் வைப்பாரா என்ற கேள்வியை நான் இங்கே கேட்க விரும்புகிறேன்.
அதேபோல இந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ வேத ஆய்வு நிறுவனங்களை ஒன்றிய அரசு துவக்கி இருக்கிறது. ஜோதிட ஆய்வு நிறுவனங்களை துவக்கி இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு அறிவியல் ஆய்வு நிறுவனத்தை கூட ஒன்றிய அரசு துவக்கவில்லை என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்றைக்கு இந்த அவை பாராட்டுகிற இஸ்ரோவுக்கு இதே ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி ஒன்றிய அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது “இஸ்ரோ வாய் திறந்து பேசக்கூடாது” என்று. ஜோதிமத் நிலச்சரிவு விஷயத்தில் இஸ்ரோவும் நிலவியல் துறையும் எதுவும் பேசக்கூடாது என்று ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியது.
எப்படி பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொன்ன கலிலியோவுக்கு வாய்ப்பூட்டு சட்டம் போட்டீர்களோ அதே போல இஸ்ரோவுக்கு நீங்கள் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

நண்பர்களே அறிவியல் என்பதும் விஞ்ஞானம் என்பதும் கேள்வியில் தான் பிறக்கிறது.
இந்தியாவினுடைய அனைத்து முன்னேற்றமும் அறிவியல் பூர்வமான பார்வையிலிருந்து உருவானவை. அவற்றையெல்லாம் மறுதலித்து புராணங்களை வரலாறு என்றும் இதிகாசங்களை அறிவியல் என்றும் மீண்டும் மீண்டும் நீங்கள் நிலைநிறுத்த நினைக்கிறீர்கள். அது உங்களை உங்களுடைய பார்வையை மக்களிடம் வந்து அம்பலப்படுத்துவதற்கு தான் உதவி செய்யும்.

எப்படி ஒரு ராக்கெட் விண்ணிலே போகிற பொழுது அது உதிர்த்து கீழே தள்ளுகிற எரிபொருளைப் போல உங்களது பொய்யும் கதைகளும் கீழே விழுகும்.
இந்தியா வரலாற்று ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் முன்னோக்கி செல்லும். 40, 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சைக்கிளில் ராக்கெட்டை கொண்டு போன இஸ்ரோதான் இன்றைக்கு செவ்வாய் கிரகத்திற்கு தன்னுடைய முயற்சியை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு தொற்று நோயை ஒழிக்க முடியாது என்று உலக நாடுகள் இந்தியாவை சொன்னது.

ஆனால் இன்றைக்கு தொற்று நோயை நாம் முழுமையாக ஒழித்திருக்கிறோம். எருமை பாலிலிருந்து பவுடரை உருவாக்கி இந்த இந்தியாவின் ஊட்டச்சத்தை வளர்த்து இருக்கிறோம். இது அனைத்தும் அறிவியல் பார்வையோடு திடமான ஒரு இந்தியா மூடநம்பிக்கையை தகர்த்து முன்னேறியது. எனவே உங்களது மூடநம்பிக்கையை தகர்த்து இந்தியாவின் அறிவியல் தலைமுறை முன்னேறும் என்பதை சந்திராயன் பறைசாற்றுகிறது என்று சொல்லி முடிக்கிறேன் வணக்கம்.

 

The post ’’உங்களது மூடநம்பிக்கையை தகர்த்து இந்தியாவின் அறிவியல் தலைமுறை முன்னேறும்..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af/feed/ 0
“மதுரையில் சாதிய வன்கொடுமை; கைது செய்க..!” தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25b5%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81/#respond Sun, 04 Jun 2023 05:30:58 +0000 https://madrasmurasu.com/?p=3351 விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், “மதுரை அருகே திருமோகூரில் சாதி வெறியாட்டம். ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழாவின் போது, குடிபோதையில் சாதிவெறிப் பித்தர்கள் இவ்வாறு ஆதி திராவிடர்களின் குடியிருப்பிற்குள்ளே நுழைந்து கொலை வெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். சொத்துக்கள் சூறை. ஏராளமானோர் காயம். மணிமுத்து, பழநிக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் சிலர் மதுரை அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சாதிஆதிக்க வெறியாட்டத்தை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. சாதிய வன்கொடுமைகளில் ஈடுபட்ட அனைவரையும் உடனே கைது செய்ய […]

The post “மதுரையில் சாதிய வன்கொடுமை; கைது செய்க..!” தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் first appeared on Madras Murasu.

]]>
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், “மதுரை அருகே திருமோகூரில் சாதி வெறியாட்டம். ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழாவின் போது, குடிபோதையில் சாதிவெறிப் பித்தர்கள் இவ்வாறு ஆதி திராவிடர்களின் குடியிருப்பிற்குள்ளே நுழைந்து கொலை வெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சொத்துக்கள் சூறை. ஏராளமானோர் காயம். மணிமுத்து, பழநிக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் சிலர் மதுரை அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சாதிஆதிக்க வெறியாட்டத்தை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது.

சாதிய வன்கொடுமைகளில் ஈடுபட்ட அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டுமெ தமிழக அரசுக்கு விசிக வேண்டுகோள் விடுக்கிறது” என்று வலியுறுத்தியுள்ளார்.

The post “மதுரையில் சாதிய வன்கொடுமை; கைது செய்க..!” தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81/feed/ 0