acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’தோனி விரும்பிச் சாப்பிட்ட உணவு..!’’ கேரள சமையல் கலைஞர் சுரேஷ் பிள்ளை first appeared on Madras Murasu.
]]>ஐபிஎல் 2023 சாம்பியன் கோப்பை போட்டி முடிவடைந்ததும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை, நினைவுகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஐ.பி.எல் தொடரில் அதிமானோர் தோனியை பற்றியே பேசியும் எழுதியும் வருகிறார்கள். இந்நிலையில், ‘ரெஸ்டாரென்ட் செப் பிள்ளை’ என்ற உணவகத்தை கேரளாவில் நடத்தி வரும் சுரேஷ் பிள்ளை தனது டுவிட்டர் பக்கத்தில் தோனி-யை சந்தித்த பசுமையான தருணங்களை எழுதியுள்ளார். அந்தப் பதிவு இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. உலகம் முழுவதும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதன் விபரம்:
‘’ஐபிஎல் 2023 இறுதி ஆட்டத்துக்குப் பிறகு முழு உலகமும் இந்திய கிரிக்கெட்டின் மகத்தான சாதனையாளரான தோனியைக் கொண்டாடும் போது, 5 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு உணவு பரிமாறும் பாக்கியம் எனக்கு கிடைத்ததைப் பிரமிப்போடு நினைத்துப் பார்க்கிறேன். அக்டோபர் 31, 2018. இந்தியா – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

நான் பணிபுரிந்து வந்த ஹோட்டலில் தான் வீரர்கள் தங்கியிருந்தனர். பேருந்திலிருந்து வீரர்கள் இறங்கியபோது எனது கண்கள் அவரைத் தான் தேடின. தனக்கே உரித்தான புன்னகையுடன் எங்களைக் கடந்து தனது அறைக்குச் சென்றார் தோனி. தனது ஹீரோவைப் பார்த்த குழந்தை போல மாறியிருந்தேன் நான். தோனியைப் பார்த்த யாருக்குத்தான் அப்படி இருக்காது?
ஓய்வுக்குப் பிறகு வீரர்கள் இரவு 7 மணி முதல் தங்களுக்கான உணவு ஆர்டர்களை அளித்தனர். பெரும்பாலும் கடல்சார் உணவுகளைக் கேட்டிருந்தார்கள். இரவு 9.30 மணிக்குள் கிட்டத்தட்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ஆனால் நான் காத்திருந்த அழைப்பு 10 மணிக்கு வந்தது. தோனி அறையில் எனக்காகக் காத்திருப்பதாக என்னிடம் கூறப்பட்டது.
ஒரு கணம் உறைந்து போனேன். தொலைக்காட்சியில் அவரைப் பார்த்து சந்தோஷப்படும் என்னைத் தனது அறைக்கு அழைத்தார் தோனி. லிஃப்ட்டுக்குக் கூடக் காத்திராமல் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு மூன்றாவது மாடியில் இருந்த அவரது அறைக்கு ஓடினேன். என்னை அமைதிப்படுத்திக் கொள்ள ஒரு கணம் எடுத்துக்கொண்ட பிறகு, கதவைத் தட்டினேன்.

ஹாய், எப்படி இருக்கிறீர்கள், சாப்பிட என்ன இருக்கிறது என ஹிந்தி கலந்த தமிழில் கேட்டார். கடல் உணவு வகைகளை அவருக்கு விளக்கினேன். அப்போது, என்னால் கடல் உணவு சாப்பிட முடியாது. எனக்கு அதில் ஒவ்வாமை உண்டு. சிக்கன் குழம்பும் சாதமும் கிடைக்குமா? எனக்குத் தொண்டை வலி இருப்பதால் காரமான ரசம் வேண்டும் என்றார். பூண்டு ரசம் கிடைக்குமா எனத் தமிழில் கேட்டார்.
சுமார் 20 நிமிடங்களில் அறை எண் 302-க்கு உணவுடன் திரும்பினேன். செட்டிநாடு சிக்கன், பாசுமதி அரிசி, அப்பளம், ரசம் ஆகியவை பரிமாறப்பட்டன. மறுநாள் காலை, ஜிம்முக்குச் செல்லும் வழியில், என்னைப் பார்த்து இரவு உணவு பிடித்திருந்ததாகக் கூறினார். நான் விண்வெளியில் இருப்பதைப் போல உணர்ந்தேன். அந்த உணர்வை விவரிக்கவே முடியாது.
நான்கு நாள்கள் தான் என்றாலும், நான் பெரிதும் மதிக்கும் என்னுடைய நாயகனுக்கு உணவு பரிமாறவும் அதன்மூலம் அவரை மகிழ்ச்சியடையச் செய்யவும் முடிந்தது. இது என்னுடைய சமையல் வாழ்க்கையில் என்றென்றைக்குமான சிறப்பம்சமாக இருக்கும். நேற்று இன்று மட்டுமல்ல என்றும் எங்களுடைய தல நீங்கள். உங்களுக்கு வாழ்த்துகள். மீண்டும் உங்களுக்கு உணவு பரிமாறக் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தல தோனியை விரும்பாதவர்கள் யாருமுண்டோ..!
The post ’’தோனி விரும்பிச் சாப்பிட்ட உணவு..!’’ கேரள சமையல் கலைஞர் சுரேஷ் பிள்ளை first appeared on Madras Murasu.
]]>The post “ருதுராஜ் கெய்க்வாட் – உத்கர்ஷா பவார் திருமணம்..!” first appeared on Madras Murasu.
]]>ருதுராஜ் கெய்க்வாட், மகாராஷ்டிரா ஆல்-ரவுண்டர் உத்கர்ஷா பவாரை திருமணம் செய்துள்ளார். இதனால், ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்ட போதிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.
புதுமண தம்பதியரின் திருமணத்துக்கு முந்தைய, மெஹந்தி விழா ஜூன் 1, வியாழன் அன்று நடைபெற்றது. கெய்க்வாட், மகாராஷ்டிர மகளிர் கிரிக்கெட் வீராங்கனை உத்கரை காதலித்து வந்தார். அவர் தனது காதலியையும் ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்காக குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு அழைத்து வந்தார். கேப்டன் தோனியிடம் அறிமுகம் செய்து வாழ்த்து பெற்றார்.
உத்கர்ஷா பவார் யார்?
ருதுராஜ் மற்றும் உத்கர்ஷா பவார் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், அவர்களது காதல் பற்றிய விவரங்கள் குறைவாகவே உள்ளன. உத்கர்ஷாவும் மகாராஷ்டிராவுக்காக விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரர். அவரது முழு பெயர் உத்கர்ஷா அமர் பவார். அவர் 24 வயது வேகப்பந்து வீச்சாளர். உத்கர்ஷா பவார் அக்டோபர் 13, 1998 அன்று மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிறந்தார்.
The post “ருதுராஜ் கெய்க்வாட் – உத்கர்ஷா பவார் திருமணம்..!” first appeared on Madras Murasu.
]]>The post “நாடே கொண்டாடும் தோனி..!” நியூசிலாந்தில் கான்வே first appeared on Madras Murasu.
]]>குஜராத்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று சிஎஸ்கே அணி 5-வது முறையாக்க் கோப்பையைப் பெற்றது. ஆட்டநாயகன் விருதை கான்வே வென்றார். இதனையடுத்து சொந்த ஊருக்குத் திரும்பிய கான்வே சென்ஸ் மார்னிங்கிடம் தோனி மற்றும் சிஎஸ்கே அணி குறித்துப் பேசினார்.
ரசிகர்களுக்கு மத்தியில் தோனிக்கு உள்ள ஆதரவு குறித்துப் பேசியுள்ள அவர், “இந்தியாவில் தோனிக்கு உள்ள ஆதரவு நம்ப முடியாதது. அது வேறு மாதிரியான உலகம். அவருக்காக ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ரசிகர்கள் வெவ்வேறு மைதானங்களுக்குப் பயணிக்கின்றனர். இதனால் வெளியே ஆட்டம் நடந்தாலும் எங்களுக்கு சேப்பாக்கத்தில் நடப்பது போலவே இருந்தது. வீரர்களுக்கு மத்தியிலும் அவர்மீது பெரும் மரியாதை இருக்கிறது. மக்களுக்கு மத்தியில் தோனிக்கு உள்ள வரவேற்பைப் பார்க்கும்போது அவர் ஹோட்டலுக்கு வெளியே செல்வது அவ்வளவு எளிதானதல்ல எனத் தோன்றுகிறது” என்றார்.
சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் குறித்து கான்வே பேசுகையில், “அணிக்குள் அவர் நல்ல பிணைப்பை ஏற்படுத்தியுள்ளார். தோனி மற்றும் அணியின் உரிமையாளர்களுடன் அவருக்கு நல்ல உறவு உள்ளது. அவருடைய ஒத்துழைப்பு என்பது தனி நபர் மற்றும் குழுவாக எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது” எனத் கூறினார்.
The post “நாடே கொண்டாடும் தோனி..!” நியூசிலாந்தில் கான்வே first appeared on Madras Murasu.
]]>The post ’’தோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை ..!’’ சிஎஸ்கே நிர்வாகம் தகவல் first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து, பிடிஐ-யிடம் பேசியிருந்த சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் முழங்கால் காயம் குறித்து தோனி மருத்துவரிடம் ஆலோசனை பெறுவார் எனவும் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டால் தோனியே அதுகுறித்து முடிவெடுப்பார் எனவும் தெரிவித்திருந்தார். இறுதி ஆட்டத்துக்குப் பிறகு மும்பை திரும்பிய தோனி புகழ்பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் பிசிசிஐ மருத்துவக் குழுவின் உறுப்பினருமான டாக்டர். தின்ஷா பர்திவாலாவைச் சந்தித்தார்.
இந்நிலையில், மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் தோனிக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருக்கிறது. இதுகுறித்து சிஎஸ்கே அணி தரப்பிலிருந்து பிடிஐ-யிடம் தெரிவிக்கப்பட்ட தகவலில்,” மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை நிறைவடைந்தது. அவர் நலமுடன் உள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். அவரது மறுவாழ்வுப் பயிற்சி தொடங்குவதற்கு முன்பு அவர் சில நாட்கள் ஓய்வெடுப்பார். அடுத்த ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியைப் பெற அவருக்கு போதுமான நேரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post ’’தோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை ..!’’ சிஎஸ்கே நிர்வாகம் தகவல் first appeared on Madras Murasu.
]]>The post சென்னை சூப்பர் கிங்ஸ்’ன் வெற்றி படங்கள் first appeared on Madras Murasu.
]]>










The post சென்னை சூப்பர் கிங்ஸ்’ன் வெற்றி படங்கள் first appeared on Madras Murasu.
]]>The post குப்பையை புதையலாக மாற்றும் வித்தை தெரிந்தவர் தோனி: ஹைடன் புகழாரம்! first appeared on Madras Murasu.
]]>The post குப்பையை புதையலாக மாற்றும் வித்தை தெரிந்தவர் தோனி: ஹைடன் புகழாரம்! first appeared on Madras Murasu.
]]>The post தோனி ஐந்தாவது முறையாக கோப்பையை பெற்றுத்தருவரா? first appeared on Madras Murasu.
]]>2022 ஐபிஎல்-லில் சிஎஸ்கே அணி புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.”அடுத்த ஆண்டு கடினமாக உழைத்து மீண்டு வருவோம்” என்று தோனி கூறினார். சொல்லி வைத்தது போலவே இந்த ஆண்டு குஜராத்தை முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு சிஎஸ்கே முன்னேறியுள்ளது. 14 பருவங்களில் 10 முறை இறுதிச்சுற்றுக்கு சென்றது என்பது உண்மையில் அசாத்திய சாதனை!
இந்த வருடம் தோல்வியுடன்தான் ஆரம்பித்தது சிஎஸ்கே. பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே தலையைக் காட்டினார். மொயீன் அலி, ஜடேஜா, ராயுடு போன்றவர்கள் பேட்டிங்கில் கைகொடுக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மர்ம சுழலர் தீக்ஷனா இந்தப் பருவம் முழுக்கவே ஃபார்ம் இல்லாமல் தடுமாறினார்.
காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஹங்கர்கேகர் இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். பதிரனா, தேஷ்பாண்டே போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக் கொண்டே விளையாட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் தோனி. இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தோனி சிஎஸ்கேவை இறுதிச்சுற்றுக்கு எப்படி அழைத்துச் சென்றார்?
இந்தப் பருவத்தில் முதல் சில ஆட்டங்களில் அணித் தேர்வில் சில பரீட்சார்த்த முயற்சிகளை தோனி மேற்கொண்டார். ஆனால் அதற்குப் பிறகு கடைசி 9 ஆட்டங்களில் அவர் அணியில் மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. ஒரு கேப்டனாக தோனியின் வெற்றிக்கு காரணம் அணி வீரர்கள் மீது அவர் வைக்கும் முழு நம்பிக்கை. உதாரணமாக தீபக் சஹாரை எடுத்துக் கொள்வோம். முதல் நான்கு ஆட்டங்களில் அவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அவருடைய எகானமி ரேட் 10.38. ஆனாலும் தோனி அவரைக் கைவிடவில்லை.
அதன்பிறகு நடைபெற்ற ஆட்டங்களில் ஓவருக்கு 7.21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் சஹார். வேறு எந்தவொரு அணியாக இருந்தாலும் நான்கு ஆட்டங்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காதவரை அணியில் வைத்திருக்காது. அம்பதி ராயுடுவும் தீக்ஷனாவும் ஃபார்மில் இல்லாத போதும் தொடர்ந்து வாய்ப்பளித்தார் தோனி. குஜராத்துக்கு எதிரான குவாலிஃபையரில் இருவருமே அணியின் வெற்றிக்குப் பங்களித்தார்கள்.
எந்தவொரு சூழ்நிலையிலும் பதற்றப்படாமல் ஆட்டத்தை நிதானமாக அணுகுவது தோனியின் இன்னொரு வெற்றி ரகசியம். லீக் சுற்றில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலக்கை விரட்டும்போது தோனி விளையாடிய விதம் ஒரு நல்ல உதாரணம். கடைசி ஐந்து ஓவர்களில் கூட தாறுமாறாக ஆட முற்படாமல் யாரைக் குறிவைத்து தாக்கவேண்டும் என்ற திட்டத்துடன் விளையாடினார் அவர். அந்த ஆட்டத்தில் சென்னை வெற்றி பெறமுடியாவிட்டாலும் தோனியின் வியூகமும் விவேகமும் எதிரணி ரசிகர்களையும் கவர்ந்தது.
குஜராத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தையோ எடுத்துக்கொள்வோம். கான்வே ஆரம்பம் முதலே சரியான டைமிங் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். வேறொரு கேப்டனாக இருந்திருந்தால் “ரிஸ்க் எடுத்து விளையாடு” என்று பேட்டருக்குத் தகவல் அனுப்பியிருப்பார். ஆனால் தோனி அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் கான்வேவை அவர் போக்கில் விளையாடுவதற்கு அனுமதித்தார். சுழலுக்குச் சாதகமான ஆடுகளத்தில் கான்வேவின் அந்த 40 ரன்கள் எவ்வளவு முக்கியம் என்பது ஆட்டத்துக்குப் பிறகுதான் தெரிந்தது.
தோனியின் வெற்றி ரகசியங்களில் முக்கியமானது, அணி வீரர்கள் மீது அவர் செலுத்துகின்ற அக்கறை. குஜராத்துக்கு எதிராக குவாலிஃபையர் ஆட்டத்தைப் பார்ப்பதற்காக சிஎஸ்கே சீருடையில் வந்திருந்தார் ராபின் உத்தப்பா. கேகேஆர், ராஜஸ்தான் போன்ற அணிகளில் விளையாடியிருந்தாலும் அவர் தன்னை ஒரு சிஎஸ்கே வீரராகவே இன்றும் உணர்கிறார். உத்தப்பா மட்டுமல்ல ஃபாப் டு ப்ளஸி தன்னுடைய சுயசரிதையில் தன் மகள் உடல் நலமில்லாமல் இருந்த சமயத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் எப்படித் தனக்கு உறுதுணையாக இருந்தது என்று எழுதியிருக்கிறார்.
சிஎஸ்கேவின் வெற்றிக்கு முக்கியக் காரணம் தோனி வீரர்களுக்கு கொடுக்கும் தெளிவான ரோல் டெஃபனிசன் (Role definition) என்கிறார் கிரிக்கெட் அனலிஸ்ட் ஃபிரெடி வைல்ட். இந்த ஆண்டில் ஸ்பின் ஹிட்டராக துபேவை அவர் பயன்படுத்திய விதம் ஒரு நல்ல உதாரணம். ‘டெத் ஓவர்’ ஸ்பெஷலிஸ்டாக பதிரனாவை அவர் கையாண்ட விதம் உண்மையிலேயே தோனியின் மாஸ்டர்கிளாஸ்!
ஐபிஎல் போன்ற பரபரப்பான கிரிக்கெட் போட்டியில் ஒரு கேப்டன் சமயோஜிதமாகச் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். நேற்றைய ஆட்டத்தில் பாண்டியா பேட்டிங் செய்தபோது லெக் சைடில் இருந்த ஜடேஜாவை பாயிண்ட் திசையில் நிற்கவைத்தார் தோனி. கைமேல் பலனாக அதே ஃபீல்டரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் பாண்டியா. பதிரனா, போதிய நேரம் களத்தில் இல்லை என்பதால் அவர் பந்துவீச முடியாது என்று நடுவர் கூறியபோது, தோனி கையாண்ட தந்திரம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.
பரிசளிப்பு விழாவில் தோனி கூறியதுபோல ஐபிஎல்-லில் இறுதிச் சுற்றுக்கு செல்வது என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் பத்தாவது முறையாக! இன்னும் ஓர் ஆட்டம்தான் மீதமுள்ளது. ஐந்தாவது முறையாக கோப்பையைக் கையில் ஏந்துவாரா தோனி?
The post தோனி ஐந்தாவது முறையாக கோப்பையை பெற்றுத்தருவரா? first appeared on Madras Murasu.
]]>The post தில்லியை வீழ்த்தி பிளேஆஃப்பில் நுழைந்த சிஎஸ்கே! first appeared on Madras Murasu.
]]>சிஎஸ்கே கட்டாயமாக வெல்லவேண்டிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதிரடியான தொடக்கத்துக்கு அடித்தளம் போட்டார் கான்வே. அவர் இடக்கை பேட்டர் என்பதால், இரண்டாவது ஓவரிலேயே லலித் யாதவை அழைத்தார் டேவிட் வார்னர். பலனில்லை. ஐபிஎல்-ன் 1000-வது சிக்ஸரை கான்வே இந்த ஓவரில்தான் அடித்தார்.
பிறகு, வலதுகை பேட்டர் ருதுராஜுக்காக அக்ஷர் படேலைக் கொண்டு வந்தார். இந்த ஓவரில் ருதுராஜும் எக்ஸ்ட்ரா கவர் பக்கம் அழகான ஒரு சிக்ஸர் அடித்தார். இருவரும் டேவிட் வார்னரின் திட்டத்துக்குக் கட்டுப்பட மாட்டார்கள் என்பது பவர்பிளேயிலேயே தெரிந்தது. 5-வது ஓவரிலேயே சென்னை 50 ரன்களை எடுத்தது.
பவர்பிளேயின் கடைசி ஓவரில் சகாரியா 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். பவர்பிளேயில் பவுண்டரி செல்லாத ஒரே ஓவர் இது. பவர்பிளேவுக்குப் பிறகு, இருவருமே சுழற்பந்துவீச்சுக்குக் கட்டுப்பட்டு நிதானம் காண்பித்தார்கள்.
அக்ஷர் படேல் வீசிய 10-வது ஓவரில்தான் ருதுராஜ் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் அடித்தார். நடப்பு ஐபிஎல் பருவத்தின் மூன்றாவது அரை சதத்தை எட்டினார். 10 ஓவர்களில் சென்னை 87 ரன்கள் எடுத்தது.
ஆட்டம் மீண்டும் விறுவிறுப்படைந்தது குல்தீப் யாதவ் வீசிய 12-வது ஓவரில்தான். தொடர்ச்சியாக மூன்று பந்துகளைத் தூக்கி வீசினார். இந்த மூன்று பந்துகளையுமே லாங் ஆன், லாங் ஆஃப், பந்துவீச்சாளர் தலைக்கு மேல் என மூன்று சிக்ஸர்கள் அடித்தார் ருதுராஜ். ருதுராஜ்-கான்வே கூட்டணி 100 ரன்களைத் தாண்டியது.
கான்வே 14-வது ஓவரில் சிக்ஸர் அடித்து 33 பந்துகளில் அரை சதம் அடித்தார். சதமடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ், சகாரியாவின் குறைவேகப்பந்தில் வீழ்ந்தார். 50 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு ருதுராஜ்-கான்வே இணை 141 ரன்கள் சேர்த்தது. இவர்களது ஆட்டம் அதிரடியாக இருந்தாலும், அபாயகரமான ஷாட்கள் எதுவும் இல்லாமல் டைமிங் மற்றும் இடைவெளிகளைப் பயன்படுத்தி மட்டுமே பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.

ஷிவம் துபே களமிறங்கினார். களத்தில் இரு இடக்கை பேட்டர்கள். 2-வது ஓவருக்குப் பிறகு மீண்டும் லலித் யாதவை அழைத்தார் வார்னர். நடப்பு ஐபிஎல் பருவத்தில் சிக்ஸர் அடிப்பதில் கில்லியாக உள்ள துபே, 3-வது பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். 5-வது பந்தை கான்வே பவுண்டரிக்கு அனுப்பினார்.
கலீல் அஹமது ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்த துபே, இதே ஓவரில் ஆட்டமிழந்தார். இந்தப் பருவத்தில் மட்டும் அவர் 33 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ஷேன் வாட்சன் 35 சிக்ஸர்கள் அடித்ததே, சிஎஸ்கேவுக்காக ஒரு ஐபிஎல் பருவத்தில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள். இந்த சாதனையை துபேவால் இன்றைய ஆட்டத்தில் முறியடிக்க முடியவில்லை.
துபே ஆட்டமிழந்தவுடன் ரஹானே, ஜடேஜா, மொயீன் அலிக்கு முன்பு எம்எஸ் தோனி களமிறங்கினார். பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தின்போதுதான் கான்வேயால் சதம் அடிக்க முடியவில்லை. இந்த முறை சதத்தைத் தவறவிட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 87 ரன்களுக்கு நோர்கியா பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். அனைவரும் தோனியின் சரவெடிக்காகக் காத்திருந்தபோது, பழைய ஜடேஜாவாக மாறி சிக்ஸரும், பவுண்டரிகளுமாக அடித்தார். 19-வது ஓவரில் சென்னை 200 ரன்களைத் தாண்டியது.
ஓப்பீட்டளவில் நன்கு பந்துவீசி வந்த சகாரியா கடைசி ஓவரை வீசினார். இரு பவுண்டரிகளை அடித்தார் ஜடேஜா. பவுண்டரியே அடிக்காத தோனி கடைசிப் பந்தை எதிர்கொண்டார். நோ-பால், ஃப்ரீ ஹிட், வைட் என வாய்ப்புகள் கிடைத்தும், இவரால் பவுண்டரி அடிக்க முடியவில்லை.
சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் விளாசி மிகப் பெரிய இலக்கை நிர்ணயித்தது.
பேட்டிங்கில் ருதுராஜ்-கான்வே கூட்டணி அசத்தியதுபோல், பந்துவீச்சில் தீபக் சஹார் – துஷார் தேஷ்பாண்டே இணை நல்ல அடித்தளம் அமைத்துத் தந்தது.
இம்பாக்ட் வீரராகக் களமிறங்கிய பிருத்வி ஷா, தேஷ்பாண்டே வீசிய இரண்டாவது ஓவரில் முழு நீளப் பந்தைப் பயன்படுத்தி நேராக அடிக்கப் பார்த்தார். மிட்-ஆஃபிலிருந்த அம்பதி ராயுடு அட்டகாசமான கேட்ச்சைப் பிடித்தார்.
முதல் நான்கு ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னைப் பந்துவீச்சாளர்கள் இடமளிக்கவில்லை. தில்லி அணி நான்கு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தீபக் சஹார் வீசிய 5-வது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் வார்னர், சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து இன்னிங்ஸுக்கு உயிர் கொடுத்தார். ஆனால், இதே ஓவரில் சால்ட் அவுட் ஆனார். கடந்த ஆட்டத்தில் மிரட்டிய ரூசோவ் முதல் பந்திலேயே போல்டாகி டக் அவுட் ஆனார்.
பவர்பிளேயை வார்னர் சிக்ஸருடன் நிறைவு செய்ய தில்லி ஆறு ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 34 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆட்டத்தின் முடிவை அப்போதே யூகிக்க முடிந்தது.
மற்ற பேட்டர்கள் ஒத்துழைப்பு இல்லாமல், வார்னர் மட்டுமே அடித்து விளையாடியதால் ரன்கள் பெரிதளவில் உயரவில்லை. அவர் 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். தில்லி 10 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது.
கீப்பிங்கில் இருந்த தோனி அறிவுரைகளாக வழங்க, யஷ் துல் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார்.
ஜடேஜாவின் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடினார்கள் வார்னரும் அக்ஷர் படேலும். அக்ஷர் சிக்ஸர் அடித்து ஓவரைத் தொடங்க, வார்னர் பவுண்டரி மற்றும் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். ஜடேஜா 4 ஓவர்களிலும் கொடுத்த 50 ரன்களில், இந்த ஓவரில் மட்டுமே கொடுக்கப்பட்டது 23 ரன்கள்!
The post தில்லியை வீழ்த்தி பிளேஆஃப்பில் நுழைந்த சிஎஸ்கே! first appeared on Madras Murasu.
]]>The post கிரிக்கெட்டின் 9 வகையான டக் அவுட் first appeared on Madras Murasu.
]]>இருப்பினும், சில நேரங்களில் அதே தவிர்க்க முடியாதது. ஒரு பந்தில் வெளியேறுவது எவ்வளவு மோசமானது, விளையாட்டில் பல வகையான டக் அவுட் உள்ளன.
குறிப்பாக, கிரிக்கெட்டில் ஒன்பது வகையான வெவ்வேறு டக் அவுட் உள்ளன. வீணாக வெளியேறுவது டக் அவுட் என்று அழைக்கப்படுகிறது, மேலும் ‘0’ என்ற எண் வாத்து முட்டையை ஒத்திருப்பதால் அது அழைக்கப்படுகிறது. இந்த கட்டுரையில், கிரிக்கெட்டில் உள்ள பல்வேறு வகையான டக் அவுட் முறைகளை பார்ப்போம்.
1. Golden Duck (கோல்டன் டக்)
அனேகமாக இதுவே எல்லாவற்றிலும் மிகவும் பிரபலமான டக் அவுட், கோல்டன் டக், பேட்டர் தனது இன்னிங்ஸில் அவர் எதிர்கொள்ளும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தால் அது கோல்டன் டக். கோல்டன் டக்கை நேரடியாக அனுபவித்த பல துரதிர்ஷ்டவசமான பேட்டர்கள் உள்ளனர்.
2. Silver Duck (சில்வர் டக்)
சில்வர் டக் என்பது விளையாட்டில் மிகவும் பிரபலமான சொற்களில் ஒன்றாகும். பேட்டர் பூஜ்ஜிய ரன்களுக்கு பெவிலியனுக்கு திருப்பி அனுப்பப்பட்டு, அவர் எதிர்கொள்ளும் இரண்டாவது பந்தில் வெளியேறுவதை இது குறிக்கிறது.
3. Bronze Duck (வெண்கல டக்)
பெயரில் குறிப்பிடுவது போல, அவர் தனது இன்னிங்ஸில் எதிர்கொள்ளும் மூன்றாவது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தவர் வெண்கல டக். கோல்டன் அல்லது சில்வர் டக் மோசமாக இருந்தால், வெண்கல டக் மிக மோசமானதாக இருக்கும்.
4. Diamond Duck (வைர டக் அவுட்)
இது ஒரு தனித்துவமான வகை டக் அவுட், மேலும் அவை அனைத்திலும் மிகவும் மோசமானது. டயமண்ட் டக் என்பது ஒரு பேட்டர் ரன் அவுட்ஆவதை குறிக்கும். சட்டப்பூர்வமாக பந்தை எதிர்கொள்ளாமல் எதிர்முனையில் ரன்னராகவே இருந்து வெளியேறுவது வைர டக் அவுட் என்று அழைக்கப்படுகிறது.
5. Royal Duck
கிரிக்கெட்டில் ராயல் டக் விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய டெஸ்ட் தொடர்களில் ஒன்றான ஆஷஸ் உடன் தொடர்புடையது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மார்கியூ தொடரில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த தொடக்க வீரர்களுக்கான ராயல் டக் லேபிள்.
6. Laughing Duck (சிரிக்கும் டக் அவுட்)
கிரிக்கெட்டில் சிரிக்கும் டக் அவுட் என்பது துடுப்பாட்ட வீரர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து, அவரது விக்கெட்டுடன் இன்னிங்ஸ் முடிவடையும் போது. இத்தகைய தனித்துவமான சூழ்நிலையை சிரிக்கும் டக் அவுட் என்று குறிப்பிடுவார்கள்.
7. A Pair (இணை டக் அவுட்)
அதே ஆட்டத்தின் இரண்டு இன்னிங்ஸிலும் எந்த விதமான ரன்களையும் எடுக்காமல் பேட்டரை பெவிலியனுக்குத் திருப்பி அனுப்பும் டக் அவுட், கிரிக்கெட்டில் ‘இணை டக் அவுட்’ என்று குறிப்பிடப்படுகிறது.
8. King Pair (இணை கோல்டன் டக்)
ஒரு இணை கோல்டன் டக் என்பது மிகவும் அசாதாரணமான சூழ்நிலையாகும், அதே ஆட்டத்தின் இரண்டு இன்னிங்ஸிலும் பேட்டர் முதலில் ஒப்பேனர்ஆக இறங்கி றன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழப்பது.
9. Batting Hattrick (ஹாட்ரிக் டக் அவுட்)
அனேகமாக இவற்றில் அரிதானது பேட்டிங் ஹாட்ரிக். எந்தவொரு தொடர்ச்சியான டெஸ்ட் இன்னிங்ஸிலும் மூன்று பந்துகளில் மூன்று பேட்டர்கள் தொடர்ந்து ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆவது தொகுப்பு ஹாட்ரிக் டக் அவுட் என்று குறிப்பிடப்படுகிறது.
The post கிரிக்கெட்டின் 9 வகையான டக் அவுட் first appeared on Madras Murasu.
]]>The post “ஒன் & ஓன்லி சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த் first appeared on Madras Murasu.
]]>இது தொடர்பாக வரு மற்றும் வெங்கடேஷ் இருவரும் அவர்களது த்விட்டேர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்

வானில் தினமும் இரவு ஒரு மில்லியன் நட்சத்திரங்களை பார்க்கலாம். ஆனால் இந்த சூப்பர் ஸ்டாரை பார்ப்பது என்பது வாழ்நாளில் ஒருமுறையாவது நடக்குமா என்று பேராசைப்பட்டோம்.
.ஆமாம்!!! அது நடந்தது !!!
“ஒன் & ஓன்லி சூப்பர் ஸ்டார்” உடன் “!!!
அவர் எங்களிடம் பேசிய விதம் ஒரு குடும்ப உறுப்பினராக தீவிரமாக உணர்ந்தேன். லவ் யூ தலைவா.
வருண் சக்கரவர்த்தி

15 மே, 2023 – என் இதயத்திலும் நினைவுகளிலும் என்றென்றும் பதிந்துவிட்டது
சிறுவயதில் என் கனவுகள் அனைத்தையும் வடிவமைத்த @rajinikanth ஐ சந்தித்தேன். என்ன ஒரு மென்மையான அனுபவம். அவருடன் பேசும்போது பல வருடங்களாக ஒருவரையொருவர் அறிந்தது போல் உணர்ந்தோம்.
அடுத்த முறை அவரை மீண்டும் சந்திக்கும் வரை , நம்பிக்கையுடன்

வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் அவரது பக்கத்தில் பெரும்பாலான ரஜினிகாந்த் செய்திகளை பகிர்ந்துள்ளார்
The post “ஒன் & ஓன்லி சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த் first appeared on Madras Murasu.
]]>