Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#India - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Mon, 09 Oct 2023 05:02:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 இந்தியா, சவுதி அரேபியா இடையே மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..! https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%87%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%87%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be-%25e0%25ae%259a%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be-%25e0%25ae%2587%25e0%25ae%259f https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%87%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%87%e0%ae%9f/#respond Mon, 09 Oct 2023 05:02:47 +0000 https://madrasmurasu.com/?p=6684 இந்தியாவும் சவுதி அரேபியாவும் இன்று பிற்பகல் ரியாத்தில் மின்சார தொடர்புகள், பசுமை , சுத்தமான ஹைட்ரஜன் மற்றும் விநியோக சங்கிலிகள் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ரியாத்தில் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மற்றும் சவூதி அரேபிய அரசின் எரிசக்தி துறை அமைச்சர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் அல்-சவுத் ஆகியோர் இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மின்சார தொடர்புகள் துறையில் இரு […]

The post இந்தியா, சவுதி அரேபியா இடையே மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..! first appeared on Madras Murasu.

]]>
இந்தியாவும் சவுதி அரேபியாவும் இன்று பிற்பகல் ரியாத்தில் மின்சார தொடர்புகள், பசுமை , சுத்தமான ஹைட்ரஜன் மற்றும் விநியோக சங்கிலிகள் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ரியாத்தில் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மற்றும் சவூதி அரேபிய அரசின் எரிசக்தி துறை அமைச்சர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் அல்-சவுத் ஆகியோர் இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மின்சார தொடர்புகள் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பசுமை , சுத்தமான ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் இணை உற்பத்தி, மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நெகிழ்வான விநியோக சங்கிலிகளை நிறுவுதல் ஆகியவற்றையும் நோக்கமாக கொண்டிருக்கிறது. .

முன்னதாக, சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் காலநிலை வாரம் 2023 இல் இந்திய அரசின் மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையிலான இந்திய தூதுக்குழு பங்கேற்றது.

The post இந்தியா, சவுதி அரேபியா இடையே மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..! first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%87%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%87%e0%ae%9f/feed/ 0
’’இந்தியா டூ இலங்கை தரைப்பாலம் அமைக்க சாத்தியக்கூறு..!’’ பிரதமர் மோடி – அதிபர் ரணில் ஆலோசனை https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9f%e0%af%82-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be-%25e0%25ae%259f%25e0%25af%2582-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588-%25e0%25ae%25a4%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25aa https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9f%e0%af%82-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa/#respond Sat, 22 Jul 2023 06:53:52 +0000 https://madrasmurasu.com/?p=5543 இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, இந்தியப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை:  அதிபர் விக்கிரமசிங்க மற்றும் அவரது தூதுக்குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபர் விக்கிரமசிங்க பதவியேற்று ஓராண்டு இன்று நிறைவு பெறுகிறது. இந்த தருணத்தில், நம் அனைவரின் சார்பிலும், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஓராண்டு இலங்கை மக்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருந்தது. ஒரு நெருங்கிய நண்பர் என்ற முறையில் எப்போதும் போல, இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கை […]

The post ’’இந்தியா டூ இலங்கை தரைப்பாலம் அமைக்க சாத்தியக்கூறு..!’’ பிரதமர் மோடி – அதிபர் ரணில் ஆலோசனை first appeared on Madras Murasu.

]]>
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, இந்தியப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை: 

அதிபர் விக்கிரமசிங்க மற்றும் அவரது தூதுக்குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபர் விக்கிரமசிங்க பதவியேற்று ஓராண்டு இன்று நிறைவு பெறுகிறது. இந்த தருணத்தில், நம் அனைவரின் சார்பிலும், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஓராண்டு இலங்கை மக்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருந்தது. ஒரு நெருங்கிய நண்பர் என்ற முறையில் எப்போதும் போல, இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுடன் தோளோடு தோள் நிற்கிறோம். இந்த சவாலான சூழ்நிலைகளை தைரியமாக எதிர்கொண்ட இலங்கை மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு

நமது உறவுகள் நமது நாகரிகங்களைப் போலவே தொன்மையானவை மற்றும் விரிவானவை. இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” கொள்கை, “சாகர்” தொலைநோக்கு ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. இன்று இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்த எங்கள் கருத்துக்களை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு நலன்களும் வளர்ச்சியும் பின்னிப் பிணைந்தவை என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, ஒருவருக்கொருவர் பாதுகாப்பு மற்றும் உணர்திறன்களை மனதில் கொண்டு நாம் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.

தொலைநோக்குப் பார்வை

இன்று நமது பொருளாதார கூட்டாண்மைக்கான தொலைநோக்கு ஆவணத்தை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்த தொலைநோக்கு இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான கடல்சார், வான், எரிசக்தி மற்றும் மக்களுக்கு இடையிலான இணைப்பை வலுப்படுத்துவதாகும். சுற்றுலா, மின்சாரம், வர்த்தகம், உயர்கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதே இதன் நோக்கமாகும். இதுதான் தொலைநோக்குப் பார்வை – இலங்கை மீதான இந்தியாவின் நீண்டகால அர்ப்பணிப்பு.

தரைப்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க முடிவு செய்துள்ளோம். இது இரு நாடுகளுக்கும் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை மேம்படுத்தவும் வர்த்தகம் மற்றும் மக்கள் நடமாட்டத்தை அதிகரிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளோம், தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன் துறைக்கும் இடையே பயணிகள் படகு சேவைகளைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான மின் கட்டமைப்பை இணைக்கும் பணிகளை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளோம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பெட்ரோலியக் குழாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும். இது தவிர, தரைப்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் சரிபார்க்க முடிவு செய்யப்பட்டது. இலங்கையில் யுபிஐயை அறிமுகப்படுத்த இன்று கையெழுத்தான உடன்படிக்கையால் ஃபின்டெக் இணைப்பும் அதிகரிக்கும்.

தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றும்

மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் இன்று விவாதித்தோம். இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இலங்கையில் புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் குறித்தும் நாங்கள் பேசினோம். அதிபர் விக்கிரமசிங்க தனது அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை குறித்து என்னிடம் கூறினார்.

இலங்கை அரசு தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். சமத்துவம், நீதி மற்றும் அமைதிக்கான மறுகட்டமைப்பு செயல்முறையை முன்னெடுக்கும் பதின்மூன்றாவது திருத்தத்தை அமல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குமான அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதுடன், இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு மரியாதையும் கண்ணியமும் நிறைந்த வாழ்வை இலங்கை உறுதி செய்யும்.

வடக்கு & கிழக்கு பிராந்தியங்களில் வளர்ச்சி

இருதரப்பு உறவுகளுக்கு இந்த ஆண்டு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நமது தூதரக உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவை நாங்கள் கொண்டாடுகிறோம். மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் சமூகம் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் குடிமக்களுக்காக ரூ.75 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியாவும் பங்களிக்கும்.

மீண்டும் உறுதி

ஒரு நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான இலங்கை இந்தியாவின் நலனுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் நலனுக்காகவும் உள்ளது. இந்தப் போராட்ட நேரத்தில் இந்திய மக்கள் இலங்கை மக்களுடன் இருக்கிறார்கள் என்பதை நான் மீண்டும் உறுதியளிக்கிறேன்.

மிக்க நன்றி.

The post ’’இந்தியா டூ இலங்கை தரைப்பாலம் அமைக்க சாத்தியக்கூறு..!’’ பிரதமர் மோடி – அதிபர் ரணில் ஆலோசனை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9f%e0%af%82-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa/feed/ 0
“ஹெட் 146, ஸ்மித் 95 ரன்கள் – இந்திய ரசிகர்களுக்கு முதல் நாள் ஏமாற்றம்..!” https://madrasmurasu.com/%e0%ae%b9%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-146-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-95-%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b9%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d-146-%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d-95-%25e0%25ae%25b0%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%b9%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-146-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-95-%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/#respond Thu, 08 Jun 2023 01:49:54 +0000 https://madrasmurasu.com/?p=3601   ஹெட் 146, ஸ்மித் 95 ரன்கள்: முதல் நாளில் ஆஸ்திரேலியா ஆதிக்கம்! இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் முதல் நாள் மிகவும் ஏமாற்றமாக அமைந்துள்ளது டெஸ்ட் ஆட்டங்களுக்கான தரவரிசையில் முதலிரண்டு இடங்களில் உள்ள இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விளையாடுகின்றன. ஓவல் மைதானத்தின் புற்கள் நிரம்பிய ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் எனக் கூறப்பட்டது. அதன்படியே, டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார் (இந்த […]

The post “ஹெட் 146, ஸ்மித் 95 ரன்கள் – இந்திய ரசிகர்களுக்கு முதல் நாள் ஏமாற்றம்..!” first appeared on Madras Murasu.

]]>
 

ஹெட் 146, ஸ்மித் 95 ரன்கள்: முதல் நாளில் ஆஸ்திரேலியா ஆதிக்கம்!
இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் முதல் நாள் மிகவும் ஏமாற்றமாக அமைந்துள்ளது

டெஸ்ட் ஆட்டங்களுக்கான தரவரிசையில் முதலிரண்டு இடங்களில் உள்ள இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விளையாடுகின்றன. ஓவல் மைதானத்தின் புற்கள் நிரம்பிய ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் எனக் கூறப்பட்டது. அதன்படியே, டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார் (இந்த முடிவே முதல் நாள் இறுதியில் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது என்பது வேறு விஷயம்).

4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்குவதாக ரோஹித் தெரிவித்தார். அணியில் அஸ்வின் தேர்வாகவில்லை. ஒடிசா ரயில் விபத்துத் துயரத்தை முன்னிட்டு இரு அணி வீரர்களும் கருப்பு நிறப் பட்டையுடன் களமிறங்கினார்கள். ஷமி, சிராஜின் முதலிரண்டு ஓவர்களில் ஆஸ்திரேலியத் தொடக்க வீரர்கள் சற்றே தடுமாறினார்கள்.

சிராஜின் அட்டகாசமான வாபிள் ஸீமில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டனார் உஸ்மான் கவாஜா. முதல் 13 ஓவர்களில் ஷமியும் சிராஜும் 60 சதவீத பந்துகளை குட் லெங்தில் வீசினார்கள். இதனால் சொற்பமாகவே ஆஸி வீரர்களால் ரன் எடுக்க முடிந்தது. இதன் காரணமாக உமேஷ் யாதவைக் குறிவைத்து அடிக்கத் தொடங்கினார்கள் வார்னரும் லபுஷேனும்.

உமேஷ் வீசிய 15-வது ஓவரில் நான்கு பவுண்டரிகளைப் பறக்கவிட்டார் வார்னர். ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளுக்குக் காத்திருந்த வார்னருக்கு அதிர்ச்சி கொடுத்தார் தாக்குர். 60 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த வார்னர், லெக் சைடில் கீப்பர் கே.எஸ். பரத்தின் அற்புதமான கேட்சில் ஆட்டமிழந்தார். முதல் பகுதியில், இரு விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா.

உணவு இடைவெளிக்குப் பிறகு நம்பிக்கையுடன் ஆட்டத்தைத் தொடங்கியது இந்தியா. 2 எல்பிடபிள்யூ ரெவ்யூக்களில் தப்பித்த லபுஷேன் 26 ரன்கள் எடுத்து ஷமி வீசிய கச்சிதமான ஸ்விங்கில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். தொடக்கத்தில் வானிலை மேகமூட்டத்துடன் இருந்தாலும் சில மணி நேரங்களில் நல்ல வெயில் அடிக்கத் தொடங்கியது. இது பேட்டர்களுக்கு சாதகமாக அமைந்தது. இதனால் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த ரோஹித் சர்மா, முதல் நாளிலேயே விமர்சனங்களை எதிர்கொண்டார்.

டிராவிஸ் ஹெட் வேகமாக ரன்களைச் சேர்த்தார். ஸ்மித்துடனான கூட்டணிக்கு நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். நிறைய பந்துகள் பேட்டின் விளிம்பில் பட்டாலும், அவை நேரடியாக ஃபீல்டரிடம் செல்லவில்லை. ரன் குவிப்புக்கு மத்தியில் ஆடுகளம் இன்னும் பந்துவீச்சாளர்களுக்கு உதவுகிறது என்பதை இவை உணர்த்தின. ஆனால் ஹெட் – ஸ்மித் கூட்டணி முதல் நாள் ஆட்டத்தை முழுவதுமாக ஆஸ்திரேலியா பக்கம் திருப்பியது.

39-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா அறிமுகமானார். இது ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஒருநாள் ஆட்டம் போல விளையாடிய ஹெட் தனது 60-வது பந்தில் அரை சதத்தை அடித்தார்.

தேநீர் இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு 97 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியாவுக்கு இது சிறப்பான பகுதியாக அமைந்தது.

ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக மாறுவதை உணர்ந்த ஹெட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 99 ரன்களில் இருந்த போது ஷமி மற்றும் சிராஜ் ஆகிய இருவரும் பவுன்சர்களாக வீசினர். சமாளித்து விளையாடிய ஹெட் 106 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

இருவரது திட்டமும் தெளிவாக இருந்தது. தவறான பந்துகளுக்குக் காத்திருந்து அடித்தனர். ரோஹித் சர்மா பந்து வீச்சாளர்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தார். ஆனால், ஸ்மித் – ஹெட் இணை நங்கூரமிட்டது போல நிலைத்து நின்றது.

முதல் நாள் ஆட்டத்தைப் பொறுத்தவரையில் டாஸைத் தவிர ஆஸ்திரேலிய அணி வேறு எதிலும் சரிவை சந்திக்கவில்லை என வர்ணனையில் தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டார். ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 327 ரன்களைக் குவித்தது. ஸ்மித் 95 ரன்களுடனும் டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் முதல் நாள் மிகவும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஆனால் டி20 பவர்பிளேயில் முடிவு செய்யப்படுவது போல டெஸ்ட் கிரிக்கெட்டைக் கருத முடியாது. முதல் நாளில் மோசமாக விளையாடிய அணிகள், அடுத்தடுத்த நாள்களில் புதுவேகம் பெற்று வெற்றிகளைப் பெற்றுள்ளன. முதல் நாளில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் 109 தவறான ஷாட்களை ஏற்படுத்தியுள்ளார்கள். அவற்றில் மூன்று மட்டுமே விக்கெட்டுகளாகக் கிடைத்துள்ளன.

முதல் 77 பந்துகளில் 17 பந்துகளைச் சரியாக விளையாடவில்லை ஹெட். கடைசிப் பகுதியில் தான் இந்தியப் பந்துவீச்சாளர்கள் நிறைய ரன்களைக் கொடுத்தார்கள். ஷமியும் சிராஜும் நன்குப் பந்துவீசினார்கள். இந்திய அணி புதிய நம்பிக்கையுடன் 2-ம் நாளில் களமிறங்க வேண்டும்.

The post “ஹெட் 146, ஸ்மித் 95 ரன்கள் – இந்திய ரசிகர்களுக்கு முதல் நாள் ஏமாற்றம்..!” first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b9%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-146-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-95-%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/feed/ 0