acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post அமெரிக்கன் ”சயின்ஸ்” இதழில் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி கட்டுரை..!’’ முதலாவது ஆய்வுக் கட்டுரை இது first appeared on Madras Murasu.
]]>சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் பொதுவான கனிமங்களை நீர் நுண்திவலைகளால் உடைக்கச் செய்து நானோ துகள்களை உருவாக்கிட முடியும் என நிரூபித்துள்ளனர். மதிப்புவாய்ந்த ‘சயின்ஸ்’ இதழில் வெளியிடப்படும் ஐஐடி மெட்ராஸ்-ன் முதலாவது ஆய்வுக் கட்டுரை இதுவாகும்.
மேகங்கள், மூடுபனி போன்ற வளிமண்டல நீர்த்துளிகளில் உள்ள அயனி இனங்கள் மற்றும் தொடர்பு மின்மயமாக்கல் மூலம் சார்ஜ் செய்யப்படலாம். தாதுக்களின் சிதைவு புதிய மூலக்கூறுகளை உருவாக்கி புதிய மேற்பரப்புகளை உருவாக்குகிறது. அத்தகைய மேற்பரப்புகளில் பல்வேறு வகையான வினையூக்கங்களும் ஏற்படக்கூடும். இந்த செயல்முறைகள் உயிர்வழித் தோற்றத்தில் முக்கியமானதாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

பூமியில் விழக்கூடிய நானோ துகள்கள், மூலக்கூறுகளால் ஆன ‘நுண்ணிய நீர்த்துளிகள் விழுதல்’ (microdroplet showers) என்பது கிரகத்தின் வேதியியல் மற்றும் உயிரியல் பரிணாம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
சயின்ஸ் இதழானது அமெரிக்கன் அசோசியேஷன் ஃபார் தி அட்வான்ஸ்மெண்ட் ஆஃப் சயின்ஸ் எனப்படும் உலகின் மிகப் பழமையானதும், மிகப்பெரிய பொது அறிவியல் அமைப்பால் மதிப்பாய்வு செய்யப்படுவதாகும். பிரபல கண்டுபிடிப்பாளர் தாமஸ் எடிசன் வழங்கிய மூலதனத்துடன் 1880-ல் தொடங்கப்பட்ட பின்னர், முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் மையமாக இந்த அமைப்பு விளங்கி வருகிறது. அதிகளவில் மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரைகளில் தொடர்ந்து தரவரிசையில் இருக்கும் கட்டுரைகளைக் கொண்ட உலகின் தலைசிறந்த கல்வி இதழ்களில் ஒன்றாக சயின்ஸ் கருதப்படுகிறது.
பத்மஸ்ரீ விருதுபெற்றவரும் ஐஐடி மெட்ராஸ் வேதியியல் துறையின் நிறுவனப் பேராசிரியருமான தாளப்பில் பிரதீப், ஐஐடி மெட்ராஸ்-ல் பிஎச்டி முடித்த ஆராய்ச்சிக் கட்டுரையின் முதல் ஆசிரியரான செல்வி பி.கே.ஸ்பூர்த்தி ஆகியோர் தலைமையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

பெங்களூரு ஜவஹர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும், இந்திய அறிவியல் அகாடமியின் தலைவருமான உமேஷ் வி.வாக்மேரின் அறிவுரையின் கீழ், செல்வி கோயேன்ட்ரிலா தேப்நாத் கணக்கீட்டுப் பணிகளை மேற்கொண்டார். கண்டுபிடிப்புகள் அனைத்தும் 31 மே 2024 தேதியிட்ட சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. (DOI: 10.1126/science.adl3364)
இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் வேதியியல் துறையின் நிறுவனப் பேராசிரியர் தாளப்பில் பிரதீப், “நுண்துளிகள் ரசாயன எதிர்வினைகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதும், அதன் விளைவாக புதிய ரசாயனப் பிணைப்புகள் உருவாவதும் நாம் அறிந்ததுதான். மைக்ரோ துளிகளால் ரசாயன பிணைப்புகளை உடைக்க முடியும் என்று எங்கள் எண்ணத்தில் தோன்றியதன் விளைவுதான் இந்த கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது” எனக் குறிப்பிட்டார்.
இந்த ஆராய்ச்சியின் அடுத்தகட்டம் குறித்து விவரித்த அவர், “பாறைகளை இயற்கையான சிறுதுகள்களாக்கி மணலாக மாற்றுவது இயற்கையாக நடைபெறுகிறது. வெளிப்படையாகக் கூறினால், மண்ணுக்கு மணலை உருவாக்குவதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளோம். எதிர்காலத்தில் போதிய வளங்களுடன் பாலைவனங்களிலும் பசுமையாக்க முடியும்” என்றார்.
ஐஐடி மெட்ராஸில் பிஎச்டி ஆராய்ச்சிக் கட்டுரையை அண்மையில் முடித்த முதல் ஆசிரியரான செல்வி பி.கே.ஸ்பூர்த்தி இந்த ஆராய்ச்சியின் பயன்பாடுகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

இதன் செயல்பாடு குறித்து பேராசிரியர் உமேஷ் வி. வாக்மேர், “நீர் நுண்துளிகளுக்கு உள்ளார்ந்த சிக்கலான செயல்முறைகளை இந்த நிகழ்வு உள்ளடக்கியதாகும், அதன் செயல்முறையைப் புரிந்துகொள்வதன் மூலம் பல அடிப்படை அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்” என்றார்.
The post அமெரிக்கன் ”சயின்ஸ்” இதழில் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி கட்டுரை..!’’ முதலாவது ஆய்வுக் கட்டுரை இது first appeared on Madras Murasu.
]]>The post ’’சென்னை ஐஐடி-யின் பிஎஸ் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்..! கடைசி நாள் மே 26 first appeared on Madras Murasu.
]]>இந்த இரு படிப்புகளும் சென்னை ஐஐடி-யில் பட்டம்பெற விரும்புபவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் உயர்தரக் கல்வியை வழங்குகின்றன.டேட்டா சயின்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆகிய இரண்டும் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளைக் கொண்ட துறைகளாகும். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 26.05.2024 கடைசி தேசி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவ – மாணவிகள் https://study.iitm.ac.in/ds மற்றும் https://study.iitm.ac.in/es என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சேர்க்கை முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இரு வழிகளில் இப்படிப்புகளில் சேர்ந்து கொள்ளலாம். மாணவர்கள் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை (JEE) எழுதாமலேயே சுயமாகத் தகுதிபெறும் நடைமுறை மூலம் இப்பாடத்திட்டத்தில் சேர முடியும். இரண்டாவதாக, ஜேஇஇ அட்வான்ஸ்டு 2023 அல்லது 2024 தேர்வுகளில் பங்கேற்றத் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு நேரடி சேர்க்கை உண்டு. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவீதம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பிஎஸ் பாடத்திட்டத்தின் தனித்துவமான அம்சங்கள் குறித்து டேட்டா சயின்ஸ் துறை பொறுப்பு பேராசிரியரான பேரா.விக்னேஷ் முத்துவிஜயன் கூறுகையில், “தரவுகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், திறமையான தரவு விஞ்ஞானிகளுக்கான தேவையும் அதிகரிக்கும். இத்துறையில் நேரடியாகவும் இணையதளம் மூலமும் கற்றலை ஒருங்கிணைப்பதன் வாயிலாக மாணவர்களுக்கு வசதியான மற்றும் விரிவான கற்றல் அனுபவம் கிடைக்கிறது.” எனக் குறிப்பிட்டார்.
எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை அது, பாடத்திட்ட வகுப்புகள் மற்றும் ஆய்வகப் பயிற்சி ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.
இதுபற்றி எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் துறை பொறுப்பு பேராசிரியரான பேரா. அனிருத்தன் கூறுகையில், “ஸ்மார்ட்போன்கள், கணினிகள் தொடங்கி மருத்துவ சாதனங்கள், வாகன அமைப்புகள் வரை அனைத்து இடங்களிலும் மின்னணு சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. மின்னணு சாதன அமைப்புகளை வடிவமைத்தல், மேம்படுத்தல் மற்றும் சோதனை செய்வதில் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் இப்படிப்பை படிப்பதன் மூலம் அண்மைக்காலத் தொழில்நுட்பங்கள், அவற்றின் முன்னேற்றங்கள் குறித்த திறன்களைப் பெற்ற முடியும். இது தொடர்பான வேலை வாய்ப்புகளுக்கும் அவர்கள் சிறந்த முறையில் தயாராகின்றனர்” எனத் தெரிவித்தார்.
பொறியியல், மானுடவியல், வணிகம், பொருளாதாரம், அறிவியல், சட்டம், மருத்துவம் போன்ற அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பி.எஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். அதே சமயம் பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் படித்தவர்கள் பிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும்.
ஞாயிற்றுக்கிழமை நேரடித் தேர்வு
இப்படிப்பிற்கான தகுதித் தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்கள், அடிப்படை நிலைக்காக முதல் நான்கு பாடத்திட்ட உள்ளடக்கங்களை நான்கு வாரங்களில் படிக்க வேண்டியிருக்கும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ – மாணவிகள் அடிப்படைநிலையில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.
தற்போது, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 25,000-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் இப்பாடத்திட்டத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர். பாடங்கள் இணையதளம் மூலம் விநியோகிக்கப்படும். நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாதந்தோறும் நேரடித் தேர்வு நடைபெறும். இதனால் பணிபுரியும் வல்லுநர்கள், கல்லூரிக்குச் செல்லும் மாணவ – மாணவிகள் தங்கள் வழக்கமான பணிகள் மற்றும் பட்டப்படிப்புடன் இதனைத் தொடர முடியும்.
The post ’’சென்னை ஐஐடி-யின் பிஎஸ் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்..! கடைசி நாள் மே 26 first appeared on Madras Murasu.
]]>The post ”சென்னை ஐஐடி-யில் நிலைத்தன்மைக்கான பள்ளி..!” first appeared on Madras Murasu.
]]>நிலைத்தன்மை, ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு தொடர்பான இடைநிலைப் பாடங்களை ‘நிலைத்தன்மைக்கான பள்ளி’ புதிதாகக் கற்றுக் கொடுக்கும். அத்துடன் நடைமுறையிலும், கொள்கை அளவிலும் இயக்க உதவும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தவும், நிகழ்ச்சிகளை நடத்தவும் ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
நாடாளுமன்ற உறுப்பினரும், நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவருமான ஜெயந்த் சின்ஹா, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, நிலைத்தன்மைக்கான பள்ளியின் தலைவர் பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் முன்னிலையில் இப்பள்ளியின் தொடக்கவிழா 7 அக்டோபர் 2023 அன்று நடைபெற்றது.
தொடக்க விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரைநிகழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினரும், நிதித்துறை நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவருமான ஜெயந்த் சின்ஹா கூறுகையில், ”இன்று உலகம் பற்றி எரிகிறது… 2023 ஆம் ஆண்டில் மிக வெப்பமான ஆண்டை நாம் அனுபவித்து வருகிறோம். கனடாவில் ஏற்பட்ட தீ விபத்து முதல் சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் வரை இந்த ஆண்டு உலகை உலுக்கிய தீவிர வானிலை நிகழ்வுகளில் நாம் பார்த்தோம். எனவே, நிலைத்தன்மை குறித்த பாடத்தில் ஒரு பல்துறை முதுகலை திட்டத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கும் ஆன்லைனிலும் நேரிலும் பல்வேறு நிலைத்தன்மை தொடர்பான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை வழங்கவும் பள்ளி திட்டமிட்டுள்ளது,” எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, “ஐ.நா.சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது உலகம் முழுமைக்குமான கூட்டுப் பொறுப்பாகும். இப்பள்ளியின் மூலம் நிலையான வளர்ச்சியை இலக்காக கொண்டு தீர்வுகள் குறித்து கலந்தாலோசிக்க, விவாதிக்க, மேம்படுத்த, தீர்வுகளை உருவாக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறையினரைக் கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம். நிலைத்தன்மை தொடர்பான மனிதத் திறன் மேம்பாட்டைக் கட்டமைப்பது இப்பள்ளியின் முதன்மை நோக்கமாக இருக்கும்” என்றார்.
The post ”சென்னை ஐஐடி-யில் நிலைத்தன்மைக்கான பள்ளி..!” first appeared on Madras Murasu.
]]>The post ’’எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ படிப்பு மாணவர் சேர்க்கை..!’’ அக்டோபர் 19 கடைசிநாள்- ஐ.ஐ.டி மெட்ராஸ் அறிவிப்பு first appeared on Madras Murasu.
]]>சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) மேலாண்மைக் கல்வித்துறையின் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கான எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ பாடத்திட்டத்தில் ‘சர்வதேச ஆழ்ந்த கற்றல்’ என்ற பாடத் தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது. கற்றல் ஆழமாக இருப்பின், அந்தக் கற்றல் மிகவும் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
உலகளாவிய தலைமைத்துவம், கலாச்சார நுண்ணறிவு ஆகியவை தான் சர்வதேச ஆழ்ந்த கற்றல் பாடத்திட்டத்தின் மையக் குறிக்கோளாகும். இந்த முன் முயற்சியின் ஒரு பகுதியாக, எக்சிகியூட்டிவ் எம்பிஏ பாடத்திட்டத்தின் ’23 மற்றும் ’24 பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் 9 நாள் ஆழ்ந்த கற்றல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரிலும், ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸ், லில்லே ஆகிய நகரங்களிலும் IESEG ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் என்ற கல்வி நிறுவனத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
உலகளாவிய கலாச்சாரங்களை அறிந்து கொள்ளவும், ஐரோப்பா போன்ற சிக்கலான சமூக-கலாச்சார அமைப்பைக் கொண்ட பிராந்தியத்தில் எவ்வாறு வணிகம் நடைபெறுகிறது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளவும் இந்த வகுப்பறை அமர்வு ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது.
ஐரோப்பாவில் புத்தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டு மையமாகத் திகழும் புகழ் வாய்ந்த டெகத்லானில் உள்ள கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தைப் பற்றி மாணவர்கள் பார்வையிட்டனர். அதே போன்று பிரான்சின் போக்குவரத்து கட்டமைப்புக் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் போர்ட்ஸ்-டி-லில்லே (பிரான்சின் மிகப் பெரிய உள்நாட்டு நதித்துறை முகம்) பற்றிய ஒருபார்வையும் அறிய முடிந்தது. அதே போன்று ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் ஐரோப்பிய நிர்வாகத்தின் சிக்கலான இயக்கவியல் பற்றிய புரிதல் மாணவர்களுக்கு தெரியவந்தது. சமூக-கலாச்சார அனுபவத்தைப் பெறும் வகையில் சொய்ரி எனப்படும் பிரெஞ்சு குடும்பங்களில் நடைபெறக் கூடிய விருந்துடன் இந்த நிகழ்வு நிறைவடைந்தது.
மேலாண்மைக் கல்வித்துறை அடுத்த பிரிவுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக் கடைசி நாள் 19 அக்டோபர் 2023. விருப்பமுள்ள மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். https://doms.iitm.ac.in/emba/
இப்பாடத் திட்டத்தின் தனித்துவ அம்சங்களை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் மேலாண்மைக் கல்வித்துறைத் தலைவர் பேராசிரியை எம்.தேன்மொழி கூறும் போது, “நவீன பாடத்திட்டம், செயல்திட்டம், டிஜிட்டல் முறையில் கவனம் செலுத்துதல், வலுவான குழுக் கற்றல் ஆகியவை தொழில் வல்லுநர்களை புதிய மாற்றத்தையும், நிறுவனங்களில் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் தலைவர்களாக மேம்படுத்துகின்றன” எனக் குறிப்பிட்டார்.
வணிகப் பிரச்சனைகளுக்கு கோட்பாடு கருத்துகளை பயன்படுத்தும் மூன்று திட்டங்கள் உள்பட கடுமையான, நடைமுறை சார்ந்த பாட நெறிமுறைகளை இந்த இரண்டாண்டு பாடத்திட்டம் உள்ளடக்கியதாகும். டிஜிட்டல் பொருளாதாரம், உலகளாவிய உத்திகள், தொழில்துறையின் 4.0 தொழில்நுட்பங்கள் போன்ற தொழில் துறைக்கு தேவையான களங்களில் அதிநவீன அறிவை வழங்குவது எக்சிகியூட்டிவ் எம்பிஏ பாடத்திட்டத்தின் தனித்துவ விற்பனைப்புள்ளியாகும் (USP).
முக்கிய மேலாண்மைக் கருத்துகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள், நிஜ உலகின் சவால்கள், வணிகக்களங்களுக்கான ஒருங்கிணைந்த சிந்தனைகள், உலகளாவிய முன்னோக்குகள், முடிவெடுத்தலில் பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உட்பொதித்தல் போன்ற பல்வேறு அம்சங்களில் எக்சிகியூட்டிவ் எம்பிஏ பாடத்திட்டம் கவனம் செலுத்துகிறது.
இத்திட்டம் குறித்து விவரித்த ஐஐடி மெட்ராஸ் மேலாண்மைக் கல்வித்துறை EMBA திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்டி ஜே. கமலநாபன் கூறுகையில், “கிளாசிக்ஸ் தவிர இப்பாடத்திட்டத்தில் இணையப் பாதுகாப்பு மற்றும் அதன் பயன்பாடுகள், நிச்சயமற்ற சூழலில் முடிவெடுத்தல், நிறுவனத் தலைமை மற்றும் மாற்றம், முதலீட்டு மேலாண்மை போன்ற சமகால வணிகத்திற்கு அவசியமான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன” எனக்குறிப்பிட்டார்.
ஐஐடி மெட்ராஸ் மேலாண்மைக் கல்வித்துறை EMBA திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை வி.விஜயலட்சுமி கூறும் போது, “வணிகத்தில் செயற்கை நுண்ணறிவு, வடிவமைப்பு சிந்தனை, தொழில் முனைவு, வணிகத்தில் நிலைத்தன்மை, நவீன உற்பத்தி செயல்முறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மாணவர்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ளமுடியும்” என்றார்.
பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் இடைக்கால பணியில் தகுதி சேர்க்கும் வகையில் பாடநெறியின் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
ஆழ்ந்த செயல்பாட்டு மற்றும் பரந்த தொழில் துறைகள் அறிவு
வரைமுறைக்கு உட்பட்டு வணிக முடிவு எடுக்க ஏதுவாக
ஒருங்கிணைந்த முன்னோக்கு
உலகளாவியவணிக அமைப்பிற்குபங்களிப்பைவழங்கும்வகையில்
தலைமைத்துவப் பண்புகள்
ஜனவரி 2024 முதல், மாற்று வார இறுதி நாட்களில் நேரடி வகுப்புகள் நடைபெறும்.
மாணவர் சேர்க்கைக்கு தகுதியாக, ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பில் 60% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். குறைந்தபட்சம் 3 வருட பணிஅனுபவம் அவசியம். நுழைவுத் தேர்வு மற்றும் மேலாண்மை கல்வித்துறையால் காணொலி வாயிலாக நடத்தப்படும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
The post ’’எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ படிப்பு மாணவர் சேர்க்கை..!’’ அக்டோபர் 19 கடைசிநாள்- ஐ.ஐ.டி மெட்ராஸ் அறிவிப்பு first appeared on Madras Murasu.
]]>The post ’’சென்னை ஐஐடி, பி.எஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்..!’’ ஆகஸ்ட் 27 கடைசிநாள் first appeared on Madras Murasu.
]]>இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 27 ஆகஸ்ட் 2023 அன்று கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் இந்த இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் https://study.iitm.ac.in/es/
இந்தப் பாடத்திட்டத்தில் சேர ஜேஇஇ அவசியம் இல்லை. பாடத்திட்டம் இணையதள முறையில் வழங்கப்படும். எனவே, இது அனைத்து மாணவர்களுக்குமானது. இயற்பியல் மற்றும் கணிதத்துடன் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிஎஸ் பாடத் திட்டத்துக்கு 25 ஜூன் 2023 அன்று முதல் சுற்று விண்ணப்பப் பதிவு நிறைவடைந்தது. அது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் நாடு முழுவதிலும் இருந்து 1800-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்தத் திட்டம் குறித்து சென்னை ஐஐடியின் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியரும், சென்னை ஐஐடியின் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் எஸ்.அனிருத்தன் கூறுகையில், இந்தப் பாடத் திட்டம் கடினமானது என்றாலும் நெகிழ்வுத் தன்மையுடன் கூடியது என்றார்.
இந்த திட்டத்தில் பட்டம் பெறும் மாணவர்கள் ஆட்டோமோட்டிவ், செமிகண்டக்டர் மற்றும் பாதுகாப்பு போன்ற தொழில் துறைகளில் \ வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.
The post ’’சென்னை ஐஐடி, பி.எஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்..!’’ ஆகஸ்ட் 27 கடைசிநாள் first appeared on Madras Murasu.
]]>The post ”கட்டுமானத் தொழில்நுட்பம் & மேலாண்மை பற்றி ஆன்லைன் படிப்பு..!’’ ஐஐடி மெட்ராஸ் அறிவிப்பு first appeared on Madras Murasu.
]]>வடிவமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் வல்லுநர்கள் மட்டுமின்றி, பொறியியல் கல்லூரிகளின் ஆசிரியர்கள், கட்டுமானத் தொழிலில் பணியாற்ற விரும்பும் மாணவர்கள் ஆகியோரையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்தில், அதிநவீன கட்டுமான மேலாண்மையின் நுட்பங்களும் நடைமுறைகளும் இடம்பெற்றுள்ளன.
ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி அவர்களின் ‘அனைவருக்கும் ஐஐடிஎம்’ (IITM for all) இலக்கை எட்டும் வகையில் அனைத்துத் தரப்பினருக்கும் ஐஐடி தரத்துடன் கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு பொறியாளருக்கும், ஆர்வமுள்ள தொழில் வல்லுநர்களுக்கும், மாணவர்களுக்கும் இந்த பாடத்திட்டத்தை எடுத்துச் செல்ல இக்கல்வி நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான படிப்புகள் வடிவமைப்பு அடிப்படைகளை உள்ளடக்கி இருந்தாலும், இந்தத் துறையில் எதிர்பார்ப்புகள் என்னென்ன? கட்டுமானம் நடைபெறும் இடங்களை திறமையுடன் நிர்வகிப்பது எப்படி? என்பது பற்றிய அறிவை பெரும்பாலும் எவரும் வழங்குவதில்லை. திட்டப் பணிகளை சரியான நேரத்தில், குறைந்த செலவில் அதே நேரத்தில் உயர்தரத்தில் முடிக்க இத்திறமை அவசியமாகும். அந்த இடைவெளியை துல்லியமாகப் பூர்த்தி செய்யும் வண்ணம் இப்பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய, சிறந்த கல்வியாளர்கள் ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ளனர். தொழில்நுட்ப நிபுணத்துவமும், சவாலான திட்டங்களில் தொழில் துறையினருடன் பணிபுரிந்த அனுபவமும் கொண்ட ஐஐடி மெட்ராஸ்-ன் மூத்த ஆசிரியர் குழுவினர் இப்பாடத்திட்டத்தை கற்பிப்பார்கள்.
126 மணி நேரத்திற்கு பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்புகள், 42 மணி நேரம் ஆசிரிய நிபுணர்களுடன் ஆன்லைன் நேரடி கலந்துரையாடல் ஆகியவற்றுடன் இணைய வாயிலாகவே வகுப்புகள் நடைபெறும்.
முதலாவது பேட்ச் செப்டம்பர் 1, 2023 அன்று தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20, 2023 கடைசி நாளாகும். விண்ணப்பிக்க குறிப்பிட்ட தகுதிகள் எதுவும் இல்லை என்ற போதிலும், கட்டடக்கலை, சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அல்லது மேலாண்மை போன்ற பின்னணி இருந்தால் விருப்பமுடையதாகும். ஆர்வம் உள்ளவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்: https://code.iitm.ac.in/construction-technology-and-management
பாடத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்த பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளரும், ஐஐடி மெட்ராஸ் சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியருமான அஸ்வின் மகாலிங்கம் கூறுகையில், “வரும் ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மற்றும் கட்டிடங்களை மேம்படுத்துவதில் இந்தியா கணிசமான அளவுக்கு முதலீடு செய்யும். குறைந்த செலவில் உரிய நேரத்தில் கட்டி முடித்தல், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், மிக உயர்ந்த தரத்தைப் பேணுதல் (கட்டுமான செயல்முறை, வேலைப்பாடு, நிறைவு செய்தல், இயந்திர/ நீடித்த செயல்திறன் போன்றவை) அவசியமாகிறது. பொறியாளருக்கான பயிற்சி பெறுவோர், பொறியாளராக விரும்புவோர் அனைவரும் அணுகக்கூடியதாக இப்பாடத்திட்டம் அமைந்துள்ளது. அவர்களின் திறன்களை மேம்படுத்தக்கூடிய குறிப்பிட்ட கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை இதில் உள்ள அம்சங்கள் சரியாக வழங்கும்” என்றார்.
இத்துறையில் ஈடுபட்டிருப்போரின் தொழில் வாய்ப்புகளை இது எவ்வாறு மேம்படுத்தும் என்பது குறித்து மேலும் எடுத்துரைத்த பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம், “வடிவமைப்பு அல்லது கட்டுமான நிறுவனத்தில் நீங்கள் பணியாற்ற நீங்கள் ஆர்வமுடையவர் எனில், கட்டுமானத்தில் தொழில்நுட்பம், மேலாண்மை நடைமுறைகள் தொடர்பான அண்மைக்கால முன்னேற்றங்களை அறிந்துகொள்வது அவசியம். அவை அனைத்தையும் இந்த பாடத்திட்டம் உங்களுக்கு வழங்கும். பயிற்சியில் ஈடுபட்டுள்ள பொறியாளருக்கான பாடநெறி வடிவமைக்கப்பட்டு, இத்துறையில் சரியான விஷயங்களைப் பெறுவது எப்படி என்பதில் கவனம் செலுத்தப்படும். மெட்ராஸ் ஐஐடி-யின் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர்களால் இப்பாடத்திட்டம் கற்பிக்கப்பட உள்ளது. இதில் பல்வேறு நடைமுறை எடுத்துக்காட்டுகளும் இடம்பெறும்” எனக் குறிப்பிட்டார்.
இப்பாடத் திட்டம் 10 தொகுதிகளைக் கொண்டது. அவை வருமாறு:
1. பொறியியல் பொருளாதாரம்
2. கான்கிரீட் தொழில்நுட்பம்
3. சாலை மற்றும் நடைபாதை தொழில்நுட்பம்
4. கட்டுமானத் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு
5. கட்டுமான செயல்முறைகள் – உற்பத்தித்திறன்
6. தரம்
7. ஆயுட்காலம் மற்றும் பழுதுகள்
8. பாதுகாப்பு
9. கட்டுமான காண்ட்ராக்ட்கள்
10. குறைந்த வளத்திற்கு ஏற்ப திட்டமிடலை செம்மையாக்குதல்
கோடு (CODE)
பாடநெறிகள் அனைத்தும் CODE மையத்தின் மூலம் வழங்கப்படும். 1986-ல் நிறுவப்பட்ட தொடர் கல்வி மையம் (CCE) தற்போது ஐஐடி மெட்ராஸ்-ன் சேவை மற்றும் ஆன்லைன் பாடத்திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் சென்டர் ஃபார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன்’ (CODE) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இணையம் மூலம் நடத்தப்படும் எம்.டெக் பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்தல், என்பிடெல் மற்றும் GIAN படிப்புகளை ஒருங்கிணைத்தல், ஐஐடி மெட்ராஸ்-ன் பிஎஸ் பட்டப்படிப்பு பாடத்திட்டங்களை ஒருங்கிணைத்தல், தொழில்துறை மற்றும் தரமேம்பாட்டுக்கான குறுகிய காலத் திறன் வளர்ப்பு பாடத்திட்டங்கள், தரமேம்பாட்டு பாடத்திட்டங்கள், மாநாடுகளுக்கு ஆதரவு அளித்தல், புத்தகங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலம் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான தர மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகிய பணிகளை இந்த மையம் மேற்கொண்டு வருகிறது.
The post ”கட்டுமானத் தொழில்நுட்பம் & மேலாண்மை பற்றி ஆன்லைன் படிப்பு..!’’ ஐஐடி மெட்ராஸ் அறிவிப்பு first appeared on Madras Murasu.
]]>The post ’’ஐஐடிமெட்ராஸ் 2022-23ம் ஆண்டில் ரூ.231 கோடி நன்கொடை திரட்டியது..!’’ நிதி திரட்டும் குழுவை வலுப்படுத்த நடவடிக்கை first appeared on Madras Murasu.
]]>சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), அதனுடன் இணைந்து செயல்படும் முன்னாள் மாணவர்கள், தொழில்துறையினர், தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஆகியோரிடம் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.231 கோடியை 2022-23ம் ஆண்டில் திரட்டியுள்ளது. சமூகம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்த ஒரே நிதியாண்டில் திரட்டப்பட்ட அதிகபட்சத் தொகை இதுவாகும்.
நிதி திரட்டலைப் பொறுத்தவரை 2022-ல் திரட்டப்பட்ட ரூ.131 கோடியுடன் ஒப்பிடுகையில் 76 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ரூ.1 கோடிக்கு மேல் இக்கல்வி நிறுவனத்திற்கு நிதி வழங்கிய நன்கொடையாளர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 64 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு திரட்டப்பட்ட மொத்த நிதியின் வளர்ச்சி விகிதம், கடந்த 10 ஆண்டுகளில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தத் தொகை அனைத்தும் முன்னாள் மாணவர்களிடம் இருந்தும், தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்தும் பெறப்பட்டவையாகும். இதுதவிர உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம், மானியங்கள் ஆகியவற்றின் வாயிலாகவும் நிதி திரட்டப்பட்டது.

இக்கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இந்தியா மற்றும் உலகளவில் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் மட்டும் ஏறத்தாழ ரூ.96 கோடி அளவுக்கு தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, குறிப்பிட்ட பொருள் குறித்த ஆய்வுக்கான ஆராய்ச்சிப் பேராசிரியர்களை நியமித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில்துறையினரின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா கூறுகையில், ’ஒவ்வோர் ஆண்டும் முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நன்கொடையாளர்கள் அளித்து வரும் ஆதரவு சர்வதேச அரங்கில் நமது வெற்றிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது, என்றார்.
சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 56 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 40 புதிய நிறுவனங்கள் கூட்டு முயற்சியில் கைகோர்த்துள்ளன. ஐஐடி மெட்ராஸ் நிதி திரட்டும் பணிகளை மேற்கொள்வதற்காக “இன்ஸ்டிடியூஷனல் அட்வான்ஸ்மெண்ட்” அலுவலகத்தில் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு குழு தொழில்ரீதியாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
சுகாதாரம், பருவநிலை மாற்றம், ஆற்றல், திறன் மேம்பாடு, விவசாயம் போன்ற சமூகம் தொடர்பான துறைகளில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், வரிசைப்படுத்தவும் கவனம் செலுத்தும் வகையில் எங்களது பயனர்கள் பல்துறைசார் சிறப்பு மையங்களை உருவாக்க எங்களுக்கு உதவுகின்றனர். உதவித்தொகை மற்றும் ஃபெல்லோஷிப் மூலம் மாணவர்களுக்குத் தேவைப்படும் நிதியுதவியையும் வழங்குகின்றனர்’ என்றார்.
சென்னை ஐஐடியுடன் தொடர்புடைய உலகத்தரம் வாய்ந்த ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முன்னாள் மாணவர்களுடன் பரந்த அளவில் பணியாற்றி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
2023-24 ம் நிதியாண்டிற்கான இக்கல்வி நிறுவனத்தின் முக்கிய நிதி திரட்டும் இலக்குகளாக, முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும், அமெரிக்காவிலும் முன்னாள் மாணவர்களிடையே நிதி திரட்டும் குழுவை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
The post ’’ஐஐடிமெட்ராஸ் 2022-23ம் ஆண்டில் ரூ.231 கோடி நன்கொடை திரட்டியது..!’’ நிதி திரட்டும் குழுவை வலுப்படுத்த நடவடிக்கை first appeared on Madras Murasu.
]]>