Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#IITM - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Tue, 16 Jul 2024 05:16:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 செஸ் விளையாட்டில் சாதிக்க ஐடியா கொடுக்கும் மெட்ராஸ் ஐஐடி https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b3%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/#respond Tue, 16 Jul 2024 05:16:29 +0000 https://madrasmurasu.com/?p=9288 ஐஐடி மெட்ராஸ், உலகளவில் செஸ் விளையாட்டில் வல்லமை படைத்த நாடாக இந்தியாவை ஆக்குவதற்கான தொழில்நுட்ப உந்துதல் திட்டங்களை வெளியிட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸின் உயர்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையம் (Center of Excellence in Sports Science and Analytics – CESSA), தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளைப் பயன்படுத்தி உலகளவில் செஸ் விளையாட்டில் வல்லமை படைத்த நாடாக இந்தியாவை ஆக்குவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் விதத்தில் அவை அமைந்துள்ளன. அதுமட்டுமின்றி அடிமட்டத்தில் […]

The post செஸ் விளையாட்டில் சாதிக்க ஐடியா கொடுக்கும் மெட்ராஸ் ஐஐடி first appeared on Madras Murasu.

]]>
ஐஐடி மெட்ராஸ், உலகளவில் செஸ் விளையாட்டில் வல்லமை படைத்த நாடாக இந்தியாவை ஆக்குவதற்கான தொழில்நுட்ப உந்துதல் திட்டங்களை வெளியிட்டுள்ளது.

ஐஐடி மெட்ராஸின் உயர்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையம் (Center of Excellence in Sports Science and Analytics – CESSA), தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளைப் பயன்படுத்தி உலகளவில் செஸ் விளையாட்டில் வல்லமை படைத்த நாடாக இந்தியாவை ஆக்குவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் விதத்தில் அவை அமைந்துள்ளன. அதுமட்டுமின்றி அடிமட்டத்தில் விளையாட்டுகளை மேலும் வளர்ப்பதற்காக ஃபிளாக் சீட் மற்றும் செஸ் பயிற்சித் திட்டங்களுக்கான தீர்வுகளை கூட்டமைப்புகளுக்கு வழங்க உள்ளன.

ஐஐடி மெட்ராஸ் செஸ்ஸா தில்லியில் ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்திருந்த ‘விளையாட்டுத் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் மாநாட்டின்’ இரண்டாவது நாளான இன்று (13 ஜூலை 2024) இந்த அறிவிப்புகளை இக்கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விளையாட்டுக் கல்வியில் இக்கல்வி நிறுவனத்தின் பொறுப்புணர்வை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் உரையாற்றிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “செஸ் மிகவும் சுவாரஸ்யமான- சிந்தனையைத் தூண்டும் விளையாட்டாகும், இதில் பல முறை பொருத்துதல் உள்ளிட்ட உத்திகள் உள்ளன. உயர் செயல்திறன் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை செஸ் வீரர்களுக்கு பயிற்சியின் போது பல காட்சிகள் மற்றும் சிறந்த விளையாட்டுத் திட்டங்களைக் கணக்கிட்டு உதவக்கூடிய மிக முக்கியமான பங்கை வகிக்க முடியும். செஸ் விளையாட்டில் உலகளவில் பாரதத்தை வல்லமை படைத்த நாடாக மாற்றும் நோக்கத்துடன் இத்தகைய தளங்களை உருவாக்க மிகவும் ஆர்வமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

ஐஐடி மெட்ராஸ் செஸ்ஸா தனது விளையாட்டுக் கல்வி முயற்சியின் ஓர் அங்கமாக இந்தியாவில் உள்ள விளையாட்டு மதிப்புச் சங்கிலியில் பல்வேறு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் திறன்களை மேம்படுத்துவதற்கான படிப்புகளை வழங்கவும், குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

விளையாட்டு வீரர்கள், உடற்கல்வி பயிற்றுனர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், பகுப்பாளர்கள், உடலியல் நிபுணர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், நடுவர்கள், விளையாட்டுகளை நடத்துவோர், நிர்வாகப் பணியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும். இதன் ஒரு பகுதியாக வரும் மாதங்களில் என்பிடெல் மூலம் ஐந்து புதிய விளையாட்டுப் படிப்புகளைத் தொடங்க ஐஐடி மெட்ராஸ் செஸ்ஸா திட்டமிட்டுள்ளது.

ஐஐடி மெட்ராஸின் விளையாட்டுக் கல்விக்கான எதிர்காலத் திட்டம் குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்), மற்றும் ஐஐடி மெட்ராஸ் செஸ்ஸாவின் தலைவர் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா கூறுகையில், “புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த முயற்சிகளை ஐஐடி மெட்ராஸ் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. விளையாட்டுக் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தி, செஸ் விளையாட்டுக்கான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை செஸ் கூட்டமைப்புகளுக்கு வழங்குகிறது. விளையாட்டுக் கல்வியை மேம்படுத்துதல், விளையாட்டு சுற்றுச்சூழலின் அனைத்து மட்டங்களிலும் திறமைகளை வளர்த்தல், செஸ் உலகில் இந்தியாவின் இடத்தை மேலும் உயர்த்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் எங்களின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.

விளையாட்டுகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஏஐ/எம்எல், டேட்டா சயின்ஸ் சான்றிதழ் படிப்புகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஐஐடிஎம் எதிர்காலத்தில் இளங்கலை விளையாட்டு அறிவியல் பாடத்தையும், விளையாட்டு மேலாண்மையில் அறிவியல் பாடத்தையும், விளையாட்டு மேலாண்மையில் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளையும் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

ஐஐடிஎம் செஸ்ஸா தொடங்கவிருக்கும் விளையாட்டு தொடர்பான அனைத்து படிப்புகளும் வலுவான தொழில்துறை தொடர்புகள், விளையாட்டு அறிவியல், விளையாட்டு வீரர்கள், விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கான தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் ஐஐடிஎம் செஸ்ஸாவின் பல்வேறு முன்முயற்சிகளுடன் தொடர்பு கொண்டிருக்கும். இவற்றில் சில குறிப்பிட்ட படிப்புகள் முன்னணி விளையாட்டு வீரர்களுடன் இணைந்து உருவாக்கப்படும். இப்படிப்புகளில் ஒரு பகுதியாக ஊடகத் தளங்கள் குறித்தும், தொழில் ஊக்குவிப்பு, பல்வேறு விளையாட்டுத் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் குறித்தும் மாணவர்கள் அறிந்து கொள்வார்கள்.

செஸ் விளையாட்டை மேலும் மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவில் இருந்து செஸ் (உள்ளடக்கம், பயிற்சி) ஒரு கட்டாய டிஜிட்டல் இலக்கை உருவாக்க ஐஐடிஎம் செஸ்ஸா திட்டமிட்டுள்ளது.

மோசடி எதிர்ப்பு நடவடிக்கைக்கு உதவும் தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கி, ஆன்லைன் சதுரங்கத்தை மேலும் கட்டாயப்படுத்துவதற்கும் ரசிகர்களின் ஈடுபாட்டை மேலும் அதிகரிப்பதற்கும் பல்வேறு கருவிகளை உருவாக்குவதன் மூலம் செஸ் விளையாட்டானது நியாயமானதாக இருப்பதை உறுதிசெய்ய தனித்துவமான தொழில்நுட்ப சலுகைகளை செஸ்ஸா உருவாக்கும்.

இதர முன்முயற்சிகள் வருமாறு:

* பல்வேறு தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் செஸ் விளையாட்டை அடிமட்ட அளவில் பிரபலப்படுத்துதல்

* சுற்றுச்சூழலில் உள்ள அனைவருக்கும் நிதி நன்மைகளை உறுதி செய்வதற்காக இந்தக் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் செஸ் வீரர்களை ஈடுபடுத்துவதற்கான திட்டங்கள்

‘தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளால் ஆதரிக்கப்படும் இந்தியாவில் வளரும் இதர விளையாட்டுகள்’ என்ற தலைப்பில் தொழில்துறை தலைவர்களின் உயர் ஆற்றல்மிக்க குழு விவாதங்களும் இந்த மாநாட்டில், இடம்பெற்றன.

பல்வேறு புதுமையான பரிந்துரைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டன. விளையாட்டுக் கூட்டமைப்புகள், தொழில்நுட்ப வீரர்கள், ஊடகத் தளங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவை விளையாட்டுகளை மிகவும் புதுமையானதாகவும் ஈடுபாட்டுடனும் மாற்றுவதற்கான வழிமுறைகளாகும்.

The post செஸ் விளையாட்டில் சாதிக்க ஐடியா கொடுக்கும் மெட்ராஸ் ஐஐடி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/feed/ 0
’’சென்னை ஐஐடி – இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நீரின் தரம் குறித்த படிப்பு..!’’ https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25af%2588-%25e0%25ae%2590%25e0%25ae%2590%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%2587%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/#respond Mon, 08 Jul 2024 11:26:29 +0000 https://madrasmurasu.com/?p=9219 சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகம், கோவையில் உள்ள கேஎம்சிஎச் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து நீரின் தரம் குறித்த படிப்பை இணைய வழியில் வழங்குகிறது. இந்த நான்கு மாத காலப் பாடவகுப்பு அறிவியல், பொறியியல் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கும், நீர் தரத்தில் ஆர்வம்கொண்ட தொழில்நுட்பப் பின்னணி உடையவர்களுக்கும் ஏற்றதாகும். இந்திய அளவிலும், உலக அளவிலும் நீர் வரைபடத்தை மாணவர்களைக் கொண்டு உருவாக்கும் பணியில் பாடத்திட்ட அமைப்பாளர்கள் […]

The post ’’சென்னை ஐஐடி – இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நீரின் தரம் குறித்த படிப்பு..!’’ first appeared on Madras Murasu.

]]>
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகம், கோவையில் உள்ள கேஎம்சிஎச் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து நீரின் தரம் குறித்த படிப்பை இணைய வழியில் வழங்குகிறது.

இந்த நான்கு மாத காலப் பாடவகுப்பு அறிவியல், பொறியியல் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கும், நீர் தரத்தில் ஆர்வம்கொண்ட தொழில்நுட்பப் பின்னணி உடையவர்களுக்கும் ஏற்றதாகும்.

இந்திய அளவிலும், உலக அளவிலும் நீர் வரைபடத்தை மாணவர்களைக் கொண்டு உருவாக்கும் பணியில் பாடத்திட்ட அமைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நீரின் தரம் குறித்த அடிப்படை அம்சங்களின் விரிவான அறிமுகத்திற்குப் பின், ஆய்வுகள் உள்பட நடைமுறை சோதனைகளை மாணவர்கள் நடத்துவார்கள். பாடத்திட்ட காலம் நிறைவடைந்ததும் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். கல்வி நிறுவனங்கள் தங்களது பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக இந்த சான்றிதழையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு 2024, ஜூலை 20 அன்று முடிவடையும். ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணைப்பின் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் https://bit.ly/3zgpkMy பாடவகுப்பு 2024 ஜூலை 29 அன்று தொடங்கும்.

சென்னை ஐஐடி பேராசிரியர்களான டி.பிரதீப், லிகி பிலிப், டெல் அவிவ் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் ஃபிஷ்மேன், கேஎம்சிஎச் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் டாக்டர் ஜி.வேல்முருகன் ஆகியோர் இப்பாடத்திட்டத்தின் பயிற்றுநர்களாக செயல்படுவார்கள். இவர்கள் தவிர சென்னை ஐஐடி, பிஏஆர்சி, பர்டியூ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விருந்தினர் பேராசிரியர்களும் பணியாற்றுவார்கள்.

நீரின் தரத்தைப் பாதுகாப்பதில் ஆர்வமுள்ள அனைவரையும் இந்தப் பாடத்திட்டத்தில் சேர வரவேற்றுள்ள, சென்னை ஐஐடி வேதியியல் துறையின் நிறுவனப் பேராசிரியர் தாளப்பில் பிரதீப் கூறும் போது, “ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது, அதற்கான காரணங்களை மக்கள் புரிந்துகொள்ளும்போதுதான் சாத்தியமாகும். அத்தகைய அம்சங்களில் நீரின் தரத்தை அறிந்து கொள்வதும் ஒன்று. மக்களுக்கு நம்பிக்கையான நீர் தரம் குறித்த தரவை இந்தப் பாடநெறி உருவாக்கும் என்றார்.

நீரின் தரம் பற்றிய இணையவழிப் படிப்பு மக்களின் நீர் தரவுக்கான அணுகுமுறை எனத் தலைப்பிடப்பட்ட இந்தப் பாடவகுப்பு, நீரின் தரம், முக்கிய அளவுருக்கள் பற்றிய பகுப்பாய்வு, மனித ஆரோக்கியத்தில் அவற்றின் தாக்கம் பற்றிய விரிவான புரிதலை வழங்கும். வீடுகள், ஆறுகள், ஆழ்துளை கிணறுகள், நிலத்தடி நீர் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து நீரின் தரத்தின் தரவுத்தளத்தையும் இதனால் நிறுவ முடியும்.

இப்படிப்பிற்கான விரிவுரை வகுப்புகளைப் பொறுத்தவரை இணைய வழி அல்லது நேரடியாக அல்லது பதிவு செய்யப்பட்ட வடிவில் மாணவர்கள் பங்கேற்கலாம். பாடத்திட்டத்தை எந்த அளவுக்கு புரிந்திருக்கிறார்கள் என்பது இணையவழி தேர்வு முறைகள், கேள்வி – பதில்கள் மூலம் கண்டறியப்பட்டு மதிப்பிடப்படும். செய்முறை அமர்வுக்கு பதிவு செய்பவர்கள் கையடக்க கருவிகள் மற்றும் கள சோதனைக் கருவிகள் போன்றவற்றுடன் களத்திலும் ஆய்வகத்திலும் அளவீடுகளை மேற்கொள்வார்கள். ஆய்வு செய்யப்பட்ட நீரின் தர அளவுருக்களில் குளோரின் இன்மை, மொத்த குளோரின், காரத்தன்மை, ஆக்சிஜனேற்றம் – குறைப்பு திறன், கடத்துத்திறன், மொத்தம் கரைந்த திடப்பொருள்கள், வெப்பநிலை போன்ற விவரங்களை அறிய முடியும்.

கடந்த கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் (சென்னை மற்றும் ஈரோடு போன்றவை) கல்லூரி மாணவர்களை உள்ளடக்கிய ஒரு முன்னோடி ஆய்வின் அடிப்படையில் இந்தப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் தரவு, இடம் சார்ந்த ஒருங்கிணைப்புகள், கணக்கெடுப்புகளின் உள்ளீடுகளுடன் நீரின் தரம் குறித்த இணையத தரவை உருவாக்குவதற்காக ஒருங்கிணைக்கப்பட்டதாகும்.

பல்வேறு நகரங்களிலும், கிராமங்களிலும் செய்முறை அமர்வுகள் நடைபெறுவதால், குறிப்பிட்ட இடத்திலிருந்து பல்வேறு பங்கேற்பாளர்கள் பதிவுசெய்து, மக்களின் நீர் தரவை உருவாக்குவதில் பங்களிப்பது அவசியமாகிறது. செய்முறை அமர்வுக்கான மையமாக மாறுவதற்கு பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் கைகோர்க்க ஊக்குவிக்கப்படுகின்றன.

பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர்களான டாக்டர் ரம்யா திவேதி, மின்னஞ்சல் – ramya_coe@icsrpis.iitm.ac.in (IITM) அல்லது செல்வி சூசன் ககன், மின்னஞ்சல் – suzankagan@gmail.com (டெல் அவிவ் பல்கலைக்கழகம்) ஆகியோரிடம் இருந்து மேலும் விவரங்களை கேட்டுப் பெறலாம்.

The post ’’சென்னை ஐஐடி – இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நீரின் தரம் குறித்த படிப்பு..!’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
அமெரிக்கன் ”சயின்ஸ்” இதழில் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி கட்டுரை..!’’ முதலாவது ஆய்வுக் கட்டுரை இது https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a4%25e0%25ae%25b4%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%bf/#respond Wed, 05 Jun 2024 05:36:09 +0000 https://madrasmurasu.com/?p=9049 ”நீர்த்துளிகளால் உடைக்கப்படும் இயற்கை தாதுக்கள் நானோ துகள்களை உருவாக்குவதாக ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்”.  சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் பொதுவான கனிமங்களை நீர் நுண்திவலைகளால் உடைக்கச் செய்து நானோ துகள்களை உருவாக்கிட முடியும் என நிரூபித்துள்ளனர். மதிப்புவாய்ந்த ‘சயின்ஸ்’ இதழில் வெளியிடப்படும் ஐஐடி மெட்ராஸ்-ன் முதலாவது ஆய்வுக் கட்டுரை இதுவாகும். மேகங்கள், மூடுபனி போன்ற வளிமண்டல நீர்த்துளிகளில் உள்ள அயனி இனங்கள் மற்றும் தொடர்பு மின்மயமாக்கல் மூலம் சார்ஜ் செய்யப்படலாம். […]

The post அமெரிக்கன் ”சயின்ஸ்” இதழில் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி கட்டுரை..!’’ முதலாவது ஆய்வுக் கட்டுரை இது first appeared on Madras Murasu.

]]>
”நீர்த்துளிகளால் உடைக்கப்படும் இயற்கை தாதுக்கள் நானோ துகள்களை உருவாக்குவதாக ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்”. 

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் பொதுவான கனிமங்களை நீர் நுண்திவலைகளால் உடைக்கச் செய்து நானோ துகள்களை உருவாக்கிட முடியும் என நிரூபித்துள்ளனர். மதிப்புவாய்ந்த ‘சயின்ஸ்’ இதழில் வெளியிடப்படும் ஐஐடி மெட்ராஸ்-ன் முதலாவது ஆய்வுக் கட்டுரை இதுவாகும்.

மேகங்கள், மூடுபனி போன்ற வளிமண்டல நீர்த்துளிகளில் உள்ள அயனி இனங்கள் மற்றும் தொடர்பு மின்மயமாக்கல் மூலம் சார்ஜ் செய்யப்படலாம். தாதுக்களின் சிதைவு புதிய மூலக்கூறுகளை உருவாக்கி புதிய மேற்பரப்புகளை உருவாக்குகிறது. அத்தகைய மேற்பரப்புகளில் பல்வேறு வகையான வினையூக்கங்களும் ஏற்படக்கூடும். இந்த செயல்முறைகள் உயிர்வழித் தோற்றத்தில் முக்கியமானதாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

பூமியில் விழக்கூடிய நானோ துகள்கள், மூலக்கூறுகளால் ஆன ‘நுண்ணிய நீர்த்துளிகள் விழுதல்’ (microdroplet showers) என்பது கிரகத்தின் வேதியியல் மற்றும் உயிரியல் பரிணாம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சயின்ஸ் இதழானது அமெரிக்கன் அசோசியேஷன் ஃபார் தி அட்வான்ஸ்மெண்ட் ஆஃப் சயின்ஸ் எனப்படும் உலகின் மிகப் பழமையானதும், மிகப்பெரிய பொது அறிவியல் அமைப்பால் மதிப்பாய்வு செய்யப்படுவதாகும். பிரபல கண்டுபிடிப்பாளர் தாமஸ் எடிசன் வழங்கிய மூலதனத்துடன் 1880-ல் தொடங்கப்பட்ட பின்னர், முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் மையமாக இந்த அமைப்பு விளங்கி வருகிறது. அதிகளவில் மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரைகளில் தொடர்ந்து தரவரிசையில் இருக்கும் கட்டுரைகளைக் கொண்ட உலகின் தலைசிறந்த கல்வி இதழ்களில் ஒன்றாக சயின்ஸ் கருதப்படுகிறது.

பத்மஸ்ரீ விருதுபெற்றவரும் ஐஐடி மெட்ராஸ் வேதியியல் துறையின் நிறுவனப் பேராசிரியருமான தாளப்பில் பிரதீப், ஐஐடி மெட்ராஸ்-ல் பிஎச்டி முடித்த ஆராய்ச்சிக் கட்டுரையின் முதல் ஆசிரியரான செல்வி பி.கே.ஸ்பூர்த்தி ஆகியோர் தலைமையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

பெங்களூரு ஜவஹர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும், இந்திய அறிவியல் அகாடமியின் தலைவருமான உமேஷ் வி.வாக்மேரின் அறிவுரையின் கீழ், செல்வி கோயேன்ட்ரிலா தேப்நாத் கணக்கீட்டுப் பணிகளை மேற்கொண்டார். கண்டுபிடிப்புகள் அனைத்தும் 31 மே 2024 தேதியிட்ட சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. (DOI: 10.1126/science.adl3364)

இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் வேதியியல் துறையின் நிறுவனப் பேராசிரியர் தாளப்பில் பிரதீப், “நுண்துளிகள் ரசாயன எதிர்வினைகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதும், அதன் விளைவாக புதிய ரசாயனப் பிணைப்புகள் உருவாவதும் நாம் அறிந்ததுதான். மைக்ரோ துளிகளால் ரசாயன பிணைப்புகளை உடைக்க முடியும் என்று எங்கள் எண்ணத்தில் தோன்றியதன் விளைவுதான் இந்த கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது” எனக் குறிப்பிட்டார்.

இந்த ஆராய்ச்சியின் அடுத்தகட்டம் குறித்து விவரித்த அவர், “பாறைகளை இயற்கையான சிறுதுகள்களாக்கி மணலாக மாற்றுவது இயற்கையாக நடைபெறுகிறது. வெளிப்படையாகக் கூறினால், மண்ணுக்கு மணலை உருவாக்குவதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளோம். எதிர்காலத்தில் போதிய வளங்களுடன் பாலைவனங்களிலும் பசுமையாக்க முடியும்” என்றார்.

ஐஐடி மெட்ராஸில் பிஎச்டி ஆராய்ச்சிக் கட்டுரையை அண்மையில் முடித்த முதல் ஆசிரியரான செல்வி பி.கே.ஸ்பூர்த்தி இந்த ஆராய்ச்சியின் பயன்பாடுகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

இதன் செயல்பாடு குறித்து பேராசிரியர் உமேஷ் வி. வாக்மேர், “நீர் நுண்துளிகளுக்கு உள்ளார்ந்த சிக்கலான செயல்முறைகளை இந்த நிகழ்வு உள்ளடக்கியதாகும், அதன் செயல்முறையைப் புரிந்துகொள்வதன் மூலம் பல அடிப்படை அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்” என்றார்.

The post அமெரிக்கன் ”சயின்ஸ்” இதழில் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி கட்டுரை..!’’ முதலாவது ஆய்வுக் கட்டுரை இது first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%bf/feed/ 0
’’மெட்ராஸ் ஐஐடி-யில் படிக்க வேண்டுமா..?’’ மாணவர்களுக்கு அழைப்பு https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%2590%25e0%25ae%2590%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/#respond Thu, 30 May 2024 10:44:39 +0000 https://madrasmurasu.com/?p=9036 சென்னை ஐஐடி-யின் நேரடி செயல் விளக்க நாள் நிகழ்ச்சி ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறுகிறது. சென்னை ஐஐடி வளாகத்தைப் பார்வையிட்டு அனுபவங்களைப் பெற ஜேஇஇ தேர்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மெட்ராஸ் ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி, 2024 ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் நேரடி ‘செயல் விளக்க நாள்’ நிகழ்வை அதன் நிறுவன வளாகத்தில் நடத்துகிறது. இந்த நிகழ்வின்போது, ஜேஇஇ 2024 தேர்வர்கள் இக்கல்வி நிறுவன வளாகத்தைப் பார்வையிடுவதுடன் ஐஐடி மாணவர்களின் வளாக அனுபவத்தை நேரடியாகப் பெறலாம். தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுடன் கலந்தாலோசிக்கவும், புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கும் இதன் மூலம் வாய்ப்புக் கிடைக்கிறது. சென்னை ஐஐடி-க்கு அன்றைய நாட்களில் நேரடியாக வருகை தர முடியாத மாணவ-மாணவிகள் […]

The post ’’மெட்ராஸ் ஐஐடி-யில் படிக்க வேண்டுமா..?’’ மாணவர்களுக்கு அழைப்பு first appeared on Madras Murasu.

]]>
சென்னை ஐஐடி-யின் நேரடி செயல் விளக்க நாள் நிகழ்ச்சி ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறுகிறது. சென்னை ஐஐடி வளாகத்தைப் பார்வையிட்டு அனுபவங்களைப் பெற ஜேஇஇ தேர்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மெட்ராஸ் ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி, 2024 ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் நேரடி ‘செயல் விளக்க நாள்’ நிகழ்வை அதன் நிறுவன வளாகத்தில் நடத்துகிறது. இந்த நிகழ்வின்போது, ஜேஇஇ 2024 தேர்வர்கள் இக்கல்வி நிறுவன வளாகத்தைப் பார்வையிடுவதுடன் ஐஐடி மாணவர்களின் வளாக அனுபவத்தை நேரடியாகப் பெறலாம்.

தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுடன் கலந்தாலோசிக்கவும், புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கும் இதன் மூலம் வாய்ப்புக் கிடைக்கிறது.

சென்னை ஐஐடி-க்கு அன்றைய நாட்களில் நேரடியாக வருகை தர முடியாத மாணவ-மாணவிகள் 2024 ஜூன் 17-ம் தேதியன்று இணையதள அமர்வில் கலந்து கொள்ளலாம். இந்நிகழ்வின் போது சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி மற்றும் இதர ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் இந்த வளாகத்தின் கல்வி தொடர்பாகவும், கல்வி சாரா வாழ்க்கை பற்றியும் எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள்.

பெங்களூருவைச் சுற்றியுள்ள ஜேஇஇ தேர்வர்கள் 2024 ஜூன் 11 அன்று பெங்களூருவில் உள்ள எஸ்டி ஆடிட்டோரியத்திலும் மற்றும் ஹைதராபாத் பகுதியில் உள்ள ஜேஇஇ தேர்வர்கள் 2024 ஜூன் 12 அன்று ஹைதராபாத்தில் உள்ள டி-ஹப்பிலும்  நடைபெறும் செயல்விளக்க நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.

இந்நிகழ்வுகளில் பங்கேற்க குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே இருப்பதால் ஜேஇஇ தேர்வர்கள் உடனடியாக பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். www.askiitm.com/demo   இந்த நிகழ்வு குறித்துப் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “இளம் மாணவர்கள் தங்களது வாழ்க்கைப் பாதையை முடிவு செய்ய இது ஒரு மிகமுக்கிய தருணமாகும். அவர்கள் எல்லாவற்றையும் நன்கு புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும்.

ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஜேஇஇ தேர்வு எழுதியுள்ளவர்களை, முன்கூட்டியே எங்களது வளாகத்தைப் பார்வையிடச் செய்யும் நிகழ்ச்சி இதுவாகும். இதில் பல்வேறு பொறியியல் மற்றும் பிற துறைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பை அவர்களுக்குச் சென்னை ஐஐடி வழங்குகிறது” எனத் தெரிவித்தார்.

AskIITM என்ற இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் செயல்விளக்க நாள் நிகழ்வை முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள்  வடிவமைத்து நடத்தி வருகிறார்கள். இது தவிர, சென்னை ஐஐடி தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் Instagram மற்றும் YouTube ல் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

The post ’’மெட்ராஸ் ஐஐடி-யில் படிக்க வேண்டுமா..?’’ மாணவர்களுக்கு அழைப்பு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/feed/ 0
”தமிழ்நாட்டில் உயரும் அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் ஆபத்தான அளவை எட்டியுள்ளது…!’’ ஐஐடி மெட்ராஸ் எச்சரிக்கை https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2590%25e0%25ae%2590%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%2586%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a8 https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8/#respond Tue, 02 Apr 2024 12:58:12 +0000 https://madrasmurasu.com/?p=8943 ’’தமிழ்நாட்டில் ஏழைப் பெண்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு அறுவைச் சிகிச்சை பிரசவத்திற்காக செல்லும் சதவீதம் உயர்ந்து ஆபத்தான அளவை எட்டியுள்ளது. இதுபோன்ற அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் மருத்துவ ரீதியாக அவசியமின்றி இருப்பின், அதனை மேலும் பகுப்பாய்வு செய்து முறையான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்’’ என்று ஐஐடி மெட்ராஸ் ஆய்வு முடிவுகளில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.  ஐஐடி மெட்ராஸ் நடத்திய ஆய்வில் இந்தியாவில் 2016 – 2021 ஆண்டுகளுக்கு இடையே அறுவைச் சிகிச்சை பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக […]

The post ”தமிழ்நாட்டில் உயரும் அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் ஆபத்தான அளவை எட்டியுள்ளது…!’’ ஐஐடி மெட்ராஸ் எச்சரிக்கை first appeared on Madras Murasu.

]]>
’’தமிழ்நாட்டில் ஏழைப் பெண்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு அறுவைச் சிகிச்சை பிரசவத்திற்காக செல்லும் சதவீதம் உயர்ந்து ஆபத்தான அளவை எட்டியுள்ளது. இதுபோன்ற அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் மருத்துவ ரீதியாக அவசியமின்றி இருப்பின், அதனை மேலும் பகுப்பாய்வு செய்து முறையான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்’’ என்று ஐஐடி மெட்ராஸ் ஆய்வு முடிவுகளில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. 
ஐஐடி மெட்ராஸ் நடத்திய ஆய்வில் இந்தியாவில் 2016 – 2021 ஆண்டுகளுக்கு இடையே அறுவைச் சிகிச்சை பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே நாடு முழுவதும் நடைபெற்ற அறுவைச் சிகிச்சை முறையிலான பிரசவங்களின் (சி- செக்சன்) எண்ணிக்கை திடீரென கடுமையாக உயர்ந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்களான செல்வி வர்ஷினி நீதிமோகன், டாக்டர் பி.சிரிஷா, டாக்டர் கிரிஜா வைத்தியநாதன், பேராசிரியர் விஆர் முரளிதரன் ஆகியோரை உள்ளடக்கிய ஐஐடி மெட்ராஸ் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் கண்டுபிடிப்புகள் BMC Pregnancy and Childbirth (https://doi.org/10.1186/s12884-023-05928-4) என்ற புகழ்பெற்ற மதிப்பாய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

அறுவைச் சிகிச்சை பிரசவம் என்பது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பிரசவிப்பதற்காக தாயின் வயிற்றில் கீறலை ஏற்படுத்தும் அறுவைச் சிகிச்சை நுட்பமாகும். மருத்துவ ரீதியாக நியாயப்படுத்தப்பட்ட இந்தச் செயல்முறை உயிரையும் காக்கக் கூடியது. அதே நேரத்தில் நிச்சயமாகத் தேவையற்ற வகையில் மேற்கொள்ளும்போது பாதகமான பல்வேறு சுகாதார விளைவுகளை ஏற்படுத்துகிறது. தேவையற்ற செலவுகளுக்கு வழிவகுப்பதுடன் பொதுமக்களின் சுகாதார ஆதாரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது.

பாதகமான பிறப்பு விளைவுகளை ஏற்படுத்துவதுடன், பிரசவ அறுவை சிகிச்சை முறைகளை நியாயப்படுத்தும் காரணிகள் (தாயின் வயது 18-க்கும் குறைவாக அல்லது 34-க்கும் அதிகமாக இருத்தல், குழந்தை பிறப்புக்கான இடைவெளி 24 மாதங்களுக்கும் குறைவாக இருத்தல், நான்கு அல்லது அதற்கும் அதிகமாக குழந்தைகளைப் பெற்ற தாய்) அதிக ஆபத்துள்ள கருவுறுதல் எனக் கருதப்படுகிறது.

தமிழ்நாடுத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விரிவான பகுப்பாய்வு நடத்தப்பட்டது. சத்தீஸ்கரைப் பொறுத்தவரை கர்ப்பகால சிக்கல்கள்அதிக ஆபத்துள்ள கருவுறுதல் ஆகியவை அதிகமாகக் காணப்பட்டன. தமிழ்நாட்டில் அறுவைச் சிகிச்சை முறையிலான பிரசவங்கள் அதிகளவில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். 

ஐஐடி மெட்ராஸ் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை பேராசிரியர் வி.ஆர்.முரளிதரன், ”அறுவைச் சிகிச்சை பிரசவம் அவசியமா என முடிவுசெய்வதில் பிரசவம் நடைபெறும் இடம் (பொது மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை இந்த ஆய்வின் மூலம் கண்டறிய முடிந்தது. ‘மருத்துவ ரீதியான அவசியம்’ இல்லாத சூழலிலும் அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் நடைபெறுகின்றன. த்தீஸ்கர் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வசதியான மக்கள் பெரும்பாலும் அறுவைச் சிகிச்சை மகப்பேறுகளை விரும்புகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஏழைகள் அதிகளவில் தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை பிரசவங்களை மேற்கொள்வது வியப்புக்குரியதாக உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

2021 வரையிலான ஐந்தாண்டுகளில் இந்தியா முழுவதும் அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் பரவலாகி 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனியார் துறையைப் பொருத்தவரை இந்த எண்ணிக்கை 43.1 சதவீதமாகவும் (2016), 49.7 சதவீதமாகவும் (2021) உயர்ந்துள்ளது. அதாவது தனியார் மருத்துவமனைகளில் ஏறத்தாழ பாதிக்கு பாதி பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலம்தான் நடைபெறுகின்றன.

இந்த அதிகரிப்புக்கு பல்வேறு காரணிகள் இருக்க வாய்ப்புள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் நன்கு படித்த பெண்கள் அறுவைச் சிகிச்சை பிரசவம் செய்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இப்பெண்கள் சுதந்திரமாக செயல்படுவதாலும், சிறந்த வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் இருப்பதும் அறுவைச் சிகிச்சை பிரசவம் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளன.

குறைந்த எடையுள்ள பெண்களை விட அதிக எடை கொண்ட பெண்களுக்கு இருமடங்கு அதிகமாக அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் நடக்கின்றன. அதேபோன்று 15-24 வயதுடைய பெண்களுடன் ஒப்பிடுகையில் 35-49 வயதுடைய பெண்கள் இரு மடங்கு அதிகமாக தங்கள் பிரசவங்களை அறுவைச் சிகிச்சை முறையில் நடைபெறவே விரும்புகின்றனர். அதிக எடைகொண்ட பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் விகிதம் 3 சதவீதத்தில் இருந்து 18.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 35-49 வயதுக்கு இடைப்பட்ட வயதுடையவர்கள் குழந்தை பெறுவது 11.1 சதவீதத்தில் இருந்து 10.9 சதவீதமாக குறைந்திருப்பதையும் ஆய்வு கண்டறிந்துள்ளது.

குறிப்பாக, மருத்துவ காரணங்களின்றி அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் அதிகளவில் நடைபெற்று வந்தாலும் கர்ப்பகால சிக்கல்கள் 42.2 சதவீதத்தில் இருந்து 39.5 சதவீதமாகக் குறைந்திருப்பதை உணர முடிகிறது. பெண்களின் சுய விருப்பங்கள், அவர்களின் சமூக- பொருளாதார நிலை, கல்வி, சிக்கலைத் தவிர்க்க பாரம்பரிய மருத்துவத்தைக் கடைபிடிக்கும் மருத்துவர்கள் போன்ற மருத்துவம் சாராத பல்வேறு காரணங்கள் இருக்கக் கூடும்.

மொத்தத்தில், இந்தியாவில் 2016-2021 ஆண்டுகளுக்கிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்ற மகப்பேறுகளில் நான்கு மடங்கு அளவுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் நடைபெற்றுள்ளது. சத்தீஸ்கரில் அறுவைச் சிகிச்சை பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனைகளை நாடும் பெண்கள் எண்ணிக்கை 10 மடங்கும், தமிழ்நாட்டில் 3 மடங்கும் அதிகரித்துள்ளது.

ஆராய்ச்சியாளர்களின்பரிந்துரை : அறுவைச் சிகிச்சை பிரசவங்களை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். ஏனெனில் இதில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. மக்கள் தொகை மேம்பட்ட நிலைகளில் உள்ள மாநிலங்களில் அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் அதிகளவில் நடைபெறுவது பொருத்தமாக இருக்கலாம். தமிழ்நாட்டில் ஏழைப் பெண்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு அறுவைச் சிகிச்சை பிரசவத்திற்காக செல்லும் சதவீதம் உயர்ந்து ஆபத்தான அளவை எட்டியுள்ளது. இதுபோன்ற அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் மருத்துவ ரீதியாக அவசியமின்றி இருப்பின், அதனை மேலும் பகுப்பாய்வு செய்து முறையான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

The post ”தமிழ்நாட்டில் உயரும் அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் ஆபத்தான அளவை எட்டியுள்ளது…!’’ ஐஐடி மெட்ராஸ் எச்சரிக்கை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8/feed/ 0
’’சென்னை ஐஐடி-யின் பிஎஸ் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்..! கடைசி நாள் மே 26 https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25af%2588-%25e0%25ae%2590%25e0%25ae%2590%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%258e%25e0%25ae%25b8%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d/#respond Wed, 27 Mar 2024 05:47:58 +0000 https://madrasmurasu.com/?p=8917 சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி மெட்ராஸ்), பிஎஸ் பட்டப்படிப்பில் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள், மின்னணுவியல் அமைப்புகள் (டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் – BS in Data Science and Applications & Electronic Systems) பிரிவுகளில் நான்காண்டு படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இரு படிப்புகளும் சென்னை ஐஐடி-யில் பட்டம்பெற விரும்புபவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் உயர்தரக் கல்வியை வழங்குகின்றன.டேட்டா சயின்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆகிய இரண்டும் மிகப்பெரிய […]

The post ’’சென்னை ஐஐடி-யின் பிஎஸ் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்..! கடைசி நாள் மே 26 first appeared on Madras Murasu.

]]>
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி மெட்ராஸ்), பிஎஸ் பட்டப்படிப்பில் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள், மின்னணுவியல் அமைப்புகள் (டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் – BS in Data Science and Applications & Electronic Systems) பிரிவுகளில் நான்காண்டு படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த இரு படிப்புகளும் சென்னை ஐஐடி-யில் பட்டம்பெற விரும்புபவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் உயர்தரக் கல்வியை வழங்குகின்றன.டேட்டா சயின்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆகிய இரண்டும் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளைக் கொண்ட துறைகளாகும். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 26.05.2024 கடைசி தேசி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவ – மாணவிகள் https://study.iitm.ac.in/ds மற்றும் https://study.iitm.ac.in/es என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சேர்க்கை முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இரு வழிகளில் இப்படிப்புகளில் சேர்ந்து கொள்ளலாம். மாணவர்கள் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை (JEE) எழுதாமலேயே சுயமாகத் தகுதிபெறும் நடைமுறை மூலம் இப்பாடத்திட்டத்தில் சேர முடியும். இரண்டாவதாக, ஜேஇஇ அட்வான்ஸ்டு 2023 அல்லது 2024 தேர்வுகளில் பங்கேற்றத் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு நேரடி சேர்க்கை உண்டு. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவீதம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

பிஎஸ் பாடத்திட்டத்தின் தனித்துவமான அம்சங்கள் குறித்து டேட்டா சயின்ஸ் துறை பொறுப்பு பேராசிரியரான பேரா.விக்னேஷ் முத்துவிஜயன் கூறுகையில், “தரவுகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், திறமையான தரவு விஞ்ஞானிகளுக்கான தேவையும் அதிகரிக்கும். இத்துறையில் நேரடியாகவும் இணையதளம் மூலமும் கற்றலை ஒருங்கிணைப்பதன் வாயிலாக மாணவர்களுக்கு வசதியான மற்றும் விரிவான கற்றல் அனுபவம் கிடைக்கிறது.” எனக் குறிப்பிட்டார்.

எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை அது, பாடத்திட்ட வகுப்புகள் மற்றும் ஆய்வகப் பயிற்சி ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.

இதுபற்றி எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் துறை பொறுப்பு பேராசிரியரான பேரா. அனிருத்தன் கூறுகையில், “ஸ்மார்ட்போன்கள், கணினிகள் தொடங்கி மருத்துவ சாதனங்கள், வாகன அமைப்புகள் வரை அனைத்து இடங்களிலும் மின்னணு சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. மின்னணு சாதன அமைப்புகளை வடிவமைத்தல், மேம்படுத்தல் மற்றும் சோதனை செய்வதில் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் இப்படிப்பை படிப்பதன் மூலம் அண்மைக்காலத் தொழில்நுட்பங்கள், அவற்றின் முன்னேற்றங்கள் குறித்த திறன்களைப் பெற்ற முடியும். இது தொடர்பான வேலை வாய்ப்புகளுக்கும் அவர்கள் சிறந்த முறையில் தயாராகின்றனர்” எனத் தெரிவித்தார்.

பொறியியல், மானுடவியல், வணிகம், பொருளாதாரம், அறிவியல், சட்டம், மருத்துவம் போன்ற அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பி.எஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். அதே சமயம் பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் படித்தவர்கள் பிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும்.

ஞாயிற்றுக்கிழமை நேரடித் தேர்வு

இப்படிப்பிற்கான தகுதித் தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்கள், அடிப்படை நிலைக்காக முதல் நான்கு பாடத்திட்ட உள்ளடக்கங்களை நான்கு வாரங்களில் படிக்க வேண்டியிருக்கும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ – மாணவிகள் அடிப்படைநிலையில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.

தற்போது, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 25,000-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் இப்பாடத்திட்டத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர். பாடங்கள் இணையதளம் மூலம் விநியோகிக்கப்படும். நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாதந்தோறும் நேரடித் தேர்வு நடைபெறும். இதனால் பணிபுரியும் வல்லுநர்கள், கல்லூரிக்குச் செல்லும் மாணவ – மாணவிகள் தங்கள் வழக்கமான பணிகள் மற்றும் பட்டப்படிப்புடன் இதனைத் தொடர முடியும்.

The post ’’சென்னை ஐஐடி-யின் பிஎஸ் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்..! கடைசி நாள் மே 26 first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d/feed/ 0
’’கழிவுநீரில் இருந்து மாசுபாடுகளை அகற்றும் ஏரோஜெல் உறிஞ்சி..!’’ ஐஐடி மெட்ராஸ் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be/#respond Mon, 30 Oct 2023 12:42:52 +0000 https://madrasmurasu.com/?p=7253 ஐஐடி சென்னை மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கழிவுநீரில் இருந்து மாசுபாடுகளை அகற்றுவதற்கான பயனுள்ள ஏரோஜெல் உறிஞ்சிகளை உருவாக்கியுள்ளனர். சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழகம், இஸ்ரேல் ஆகியவை இணைந்து கழிவுநீரில் இருந்து மாசுபாட்டை அகற்றுவதற்கான ஏரோஜெல் உறிஞ்சியை உருவாக்கியுள்ளனர். கிராஃபீன் மாற்றியமைக்கப்பட்ட சிலிக்கா ஏரோஜெல், தொடர்ச்சியான ஓட்டநிலைகளில் 76 சதவீதத்துக்கும் மேலாக மாசுபாடுகளை (பிபிஎம் நிலை) நீக்கி பெரிய அளவிலான நீர் சுத்திகரிப்புக்கு நிலையான வழிமுறையை […]

The post ’’கழிவுநீரில் இருந்து மாசுபாடுகளை அகற்றும் ஏரோஜெல் உறிஞ்சி..!’’ ஐஐடி மெட்ராஸ் first appeared on Madras Murasu.

]]>
ஐஐடி சென்னை மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கழிவுநீரில் இருந்து மாசுபாடுகளை அகற்றுவதற்கான பயனுள்ள ஏரோஜெல் உறிஞ்சிகளை உருவாக்கியுள்ளனர்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழகம், இஸ்ரேல் ஆகியவை இணைந்து கழிவுநீரில் இருந்து மாசுபாட்டை அகற்றுவதற்கான ஏரோஜெல் உறிஞ்சியை உருவாக்கியுள்ளனர்.

கிராஃபீன் மாற்றியமைக்கப்பட்ட சிலிக்கா ஏரோஜெல், தொடர்ச்சியான ஓட்டநிலைகளில் 76 சதவீதத்துக்கும் மேலாக மாசுபாடுகளை (பிபிஎம் நிலை) நீக்கி பெரிய அளவிலான நீர் சுத்திகரிப்புக்கு நிலையான வழிமுறையை அளிக்கிறது. இந்த முடிவுகளைக் கொண்டு பெரிய அளவில் மேம்படுத்த ஆராய்ச்சிக் குழுவினர் முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

பெரும்பாலும் காற்றுடன் கலந்திருக்கும் மிகமிக இலகுரக திடப் பொருட்களாக ஏரோஜெல்கள் சிறந்த உறிஞ்சிகளாக (மாசுபாடுகளை அகற்றப் பயன்படுத்தும் திடப்பொருள்) செயல்படுகின்றன. அத்துடன், சரிசெய்யக்கூடிய மேற்பரப்பு வேதியியல், குறைந்த அடர்த்தி, அதிக நுண்துளை அமைப்பு போன்ற நன்மைகளும் அவற்றால் கிடைக்கப் பெறுகின்றன. இப் பொருட்கள் ‘திடக் காற்று’, ‘உறைந்த புகை’ என்றெல்லாம் எளிமையாக குறிப்பிடப்படுகின்றன.

உலக மக்கள் தொகையில் 18 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியா, உலகளவிலான நீர்ஆதாரங்களில் வெறும் 4 சதவீத அளவுக்கு மட்டுமே இருப்பதால் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளது. எனவேதான் நீர் மாசுபாட்டை சரிசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக நீர் சார்ந்த தொழில்களான மருந்து மற்றும் ஜவுளி உற்பத்தித் துறைகளில் இந்த முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜவுளி உற்பத்தித் துறையில் மட்டும் ஆண்டுதோறும் ஏறத்தாழ 10 லட்சம் டன் அளவுக்கு நச்சு செயற்கை சாயங்கள் வெளியேற்றப்படுகின்றன. நீர்வாழ் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் இதனால் கடும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு பெற்ற பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் தலைமையிலான ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிக் குழுவில், ஐஐடி மெட்ராஸ் கெமிக்கல் என்ஜினியரிங் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான சுபாஷ் குமார் சர்மா, பி.ரஞ்சனி, டெல் அவிவ் பல்கலைக் கழகத்தின் மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் ஹடாஸ் மாமனே ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழுவினரின் கண்டுபிடிப்புகள் மதிப்புமிக்க இதழான நேச்சர் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் (https://doi.org/10.1038/s41598-023-43613-w)-ல் ஆய்வறிக்கையாக வெளியிடப்பட்டது.

இதுபோன்ற ஆராய்ச்சியின் அவசியம் குறித்து விவரித்த ஐஐடி மெட்ராஸ்-ன் கெமிக்கல் என்ஜினியரிங் துறைப் பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் கூறுகையில், “கழிவுநீர் சுத்திகரிப்புக்கான உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டுமின்றி, நீரின் தரத்தைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், அசுத்தமான தண்ணீருடன் தொடர்புடைய சுகாதாரப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தவும் அவசியமாகிவிட்டன” எனக் குறிப்பிட்டார்.

“வழக்கமான கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளைக் கொண்டு மாசுபாடுத் தடயங்களை அகற்ற முயல்வது அதிலும் குறிப்பாக மருந்து உற்பத்தித் துறையில் மிகக் கடினமாக இருந்து வருகிறது. இதனைச் சமாளிக்கும் வகையில், உறிஞ்சுதல், நவீன ஆக்சிஜனேற்ற முறை, சவ்வு வடிகட்டுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சுற்றுச்சூழலுக்கு இயைந்த இயற்கை முறை, குறைந்த செலவு, மிகத் திறமையாக மாசுக்களை நீக்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக ‘உறிஞ்சுதல் முறை’ விரும்பத்தக்கதாக உள்ளது” என்றார்.

இஸ்ரேலின் டெல்அவிவ் பல்கலைக்கழக மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவு பேராசிரியர் ஹடாஸ் மாமனே கூறும்போது, “எங்களது கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட GO-SA ஏரோஜெல்களின் மேற்பரப்பு வேதியியலை மாற்றியமைத்து, குறிப்பிட்ட மாசுக்களை சுத்திகரிக்கும் வகையில் தனிப்பயனாக்க முடியும். ஏரோஜெல்களை திரும்பவும் உருவாக்கி, மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் கழிவுகள் குறைந்துகொண்டே வருவதுடன், குடிநீரை சுத்திகரிக்க ஆகும் இயக்கச் செலவுகளும் வெகுவாகக் குறையும். நீர் சுத்திகரிப்புக்கு இது நிலையான தீர்வாகவும் அமைகிறது” என்றார்.

The post ’’கழிவுநீரில் இருந்து மாசுபாடுகளை அகற்றும் ஏரோஜெல் உறிஞ்சி..!’’ ஐஐடி மெட்ராஸ் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be/feed/ 0
”சென்னை ஐஐடி-யில் நிலைத்தன்மைக்கான பள்ளி..!” https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25af%2588-%25e0%25ae%2590%25e0%25ae%2590%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#respond Mon, 09 Oct 2023 05:08:16 +0000 https://madrasmurasu.com/?p=6687 சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் நிலைத்தன்மைக்கான பள்ளியைத் தொடங்கியுள்ளது. நிலைத்தன்மை, ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு தொடர்பான இடைநிலைப் பாடங்களை ‘நிலைத்தன்மைக்கான பள்ளி’ புதிதாகக் கற்றுக் கொடுக்கும். அத்துடன் நடைமுறையிலும், கொள்கை அளவிலும் இயக்க உதவும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தவும், நிகழ்ச்சிகளை நடத்தவும் ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். நாடாளுமன்ற உறுப்பினரும், நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவருமான ஜெயந்த் சின்ஹா, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, நிலைத்தன்மைக்கான பள்ளியின் தலைவர் பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் […]

The post ”சென்னை ஐஐடி-யில் நிலைத்தன்மைக்கான பள்ளி..!” first appeared on Madras Murasu.

]]>
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் நிலைத்தன்மைக்கான பள்ளியைத் தொடங்கியுள்ளது.

நிலைத்தன்மை, ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு தொடர்பான இடைநிலைப் பாடங்களை ‘நிலைத்தன்மைக்கான பள்ளி’ புதிதாகக் கற்றுக் கொடுக்கும். அத்துடன் நடைமுறையிலும், கொள்கை அளவிலும் இயக்க உதவும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தவும், நிகழ்ச்சிகளை நடத்தவும் ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

நாடாளுமன்ற உறுப்பினரும், நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவருமான ஜெயந்த் சின்ஹா, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, நிலைத்தன்மைக்கான பள்ளியின் தலைவர் பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் முன்னிலையில் இப்பள்ளியின் தொடக்கவிழா 7 அக்டோபர் 2023 அன்று நடைபெற்றது.

தொடக்க விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரைநிகழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினரும், நிதித்துறை நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவருமான ஜெயந்த் சின்ஹா கூறுகையில், ​”இன்று உலகம் பற்றி எரிகிறது… 2023 ஆம் ஆண்டில் மிக வெப்பமான ஆண்டை நாம் அனுபவித்து வருகிறோம். கனடாவில் ஏற்பட்ட தீ விபத்து முதல் சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் வரை இந்த ஆண்டு உலகை உலுக்கிய தீவிர வானிலை நிகழ்வுகளில் நாம் பார்த்தோம். எனவே, நிலைத்தன்மை குறித்த பாடத்தில் ஒரு பல்துறை முதுகலை திட்டத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கும் ஆன்லைனிலும் நேரிலும் பல்வேறு நிலைத்தன்மை தொடர்பான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை வழங்கவும் பள்ளி திட்டமிட்டுள்ளது,” எனக் குறிப்பிட்டார்.

முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, “ஐ.நா.சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது உலகம் முழுமைக்குமான கூட்டுப் பொறுப்பாகும். இப்பள்ளியின் மூலம் நிலையான வளர்ச்சியை இலக்காக கொண்டு தீர்வுகள் குறித்து கலந்தாலோசிக்க, விவாதிக்க, மேம்படுத்த, தீர்வுகளை உருவாக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறையினரைக் கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம். நிலைத்தன்மை தொடர்பான மனிதத் திறன் மேம்பாட்டைக் கட்டமைப்பது இப்பள்ளியின் முதன்மை நோக்கமாக இருக்கும்” என்றார்.

The post ”சென்னை ஐஐடி-யில் நிலைத்தன்மைக்கான பள்ளி..!” first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/ 0
’’எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ படிப்பு மாணவர் சேர்க்கை..!’’ அக்டோபர் 19 கடைசிநாள்- ஐ.ஐ.டி மெட்ராஸ் அறிவிப்பு https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2582%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/#respond Tue, 05 Sep 2023 08:12:20 +0000 https://madrasmurasu.com/?p=6125 ஐ.ஐ.டி மெட்ராஸ் தனது எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 19 அக்டோபர் 2023 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://doms.iitm.ac.in/emba/ என்ற ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.  சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) மேலாண்மைக் கல்வித்துறையின் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கான எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ பாடத்திட்டத்தில் ‘சர்வதேச ஆழ்ந்த கற்றல்’ என்ற பாடத் தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது. கற்றல் ஆழமாக இருப்பின், அந்தக் கற்றல் மிகவும் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். […]

The post ’’எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ படிப்பு மாணவர் சேர்க்கை..!’’ அக்டோபர் 19 கடைசிநாள்- ஐ.ஐ.டி மெட்ராஸ் அறிவிப்பு first appeared on Madras Murasu.

]]>
ஐ.ஐ.டி மெட்ராஸ் தனது எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 19 அக்டோபர் 2023 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://doms.iitm.ac.in/emba/ என்ற ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) மேலாண்மைக் கல்வித்துறையின் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கான எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ பாடத்திட்டத்தில் ‘சர்வதேச ஆழ்ந்த கற்றல்’ என்ற பாடத் தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது. கற்றல் ஆழமாக இருப்பின், அந்தக் கற்றல் மிகவும் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

உலகளாவிய தலைமைத்துவம், கலாச்சார நுண்ணறிவு ஆகியவை தான் சர்வதேச ஆழ்ந்த கற்றல் பாடத்திட்டத்தின் மையக் குறிக்கோளாகும். இந்த முன் முயற்சியின் ஒரு பகுதியாக, எக்சிகியூட்டிவ் எம்பிஏ பாடத்திட்டத்தின் ’23 மற்றும் ’24 பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் 9 நாள் ஆழ்ந்த கற்றல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரிலும், ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸ், லில்லே ஆகிய நகரங்களிலும் IESEG ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் என்ற கல்வி நிறுவனத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

உலகளாவிய கலாச்சாரங்களை அறிந்து கொள்ளவும், ஐரோப்பா போன்ற சிக்கலான சமூக-கலாச்சார அமைப்பைக் கொண்ட பிராந்தியத்தில் எவ்வாறு வணிகம் நடைபெறுகிறது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளவும் இந்த வகுப்பறை அமர்வு ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது.

ஐரோப்பாவில் புத்தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டு மையமாகத் திகழும் புகழ் வாய்ந்த டெகத்லானில் உள்ள கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தைப் பற்றி மாணவர்கள் பார்வையிட்டனர். அதே போன்று பிரான்சின் போக்குவரத்து கட்டமைப்புக் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் போர்ட்ஸ்-டி-லில்லே (பிரான்சின் மிகப் பெரிய உள்நாட்டு நதித்துறை முகம்) பற்றிய ஒருபார்வையும் அறிய முடிந்தது. அதே போன்று ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் ஐரோப்பிய நிர்வாகத்தின் சிக்கலான இயக்கவியல் பற்றிய புரிதல் மாணவர்களுக்கு தெரியவந்தது. சமூக-கலாச்சார அனுபவத்தைப் பெறும் வகையில் சொய்ரி எனப்படும் பிரெஞ்சு குடும்பங்களில் நடைபெறக் கூடிய விருந்துடன் இந்த நிகழ்வு நிறைவடைந்தது.

மேலாண்மைக் கல்வித்துறை அடுத்த பிரிவுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக் கடைசி நாள் 19 அக்டோபர் 2023. விருப்பமுள்ள மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். https://doms.iitm.ac.in/emba/

இப்பாடத் திட்டத்தின் தனித்துவ அம்சங்களை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் மேலாண்மைக் கல்வித்துறைத் தலைவர் பேராசிரியை எம்.தேன்மொழி கூறும் போது, “நவீன பாடத்திட்டம், செயல்திட்டம், டிஜிட்டல் முறையில் கவனம் செலுத்துதல், வலுவான குழுக் கற்றல் ஆகியவை தொழில் வல்லுநர்களை புதிய மாற்றத்தையும், நிறுவனங்களில் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் தலைவர்களாக மேம்படுத்துகின்றன” எனக் குறிப்பிட்டார்.

வணிகப் பிரச்சனைகளுக்கு கோட்பாடு கருத்துகளை பயன்படுத்தும் மூன்று திட்டங்கள் உள்பட கடுமையான, நடைமுறை சார்ந்த பாட நெறிமுறைகளை இந்த இரண்டாண்டு பாடத்திட்டம் உள்ளடக்கியதாகும். டிஜிட்டல் பொருளாதாரம், உலகளாவிய உத்திகள், தொழில்துறையின் 4.0 தொழில்நுட்பங்கள் போன்ற தொழில் துறைக்கு தேவையான களங்களில் அதிநவீன அறிவை வழங்குவது எக்சிகியூட்டிவ் எம்பிஏ பாடத்திட்டத்தின் தனித்துவ விற்பனைப்புள்ளியாகும் (USP).

முக்கிய மேலாண்மைக் கருத்துகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள், நிஜ உலகின் சவால்கள், வணிகக்களங்களுக்கான ஒருங்கிணைந்த சிந்தனைகள், உலகளாவிய முன்னோக்குகள், முடிவெடுத்தலில் பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உட்பொதித்தல் போன்ற பல்வேறு அம்சங்களில் எக்சிகியூட்டிவ் எம்பிஏ பாடத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

இத்திட்டம் குறித்து விவரித்த ஐஐடி மெட்ராஸ் மேலாண்மைக் கல்வித்துறை EMBA திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்டி ஜே. கமலநாபன் கூறுகையில், “கிளாசிக்ஸ் தவிர இப்பாடத்திட்டத்தில் இணையப் பாதுகாப்பு மற்றும் அதன் பயன்பாடுகள், நிச்சயமற்ற சூழலில் முடிவெடுத்தல், நிறுவனத் தலைமை மற்றும் மாற்றம், முதலீட்டு மேலாண்மை போன்ற சமகால வணிகத்திற்கு அவசியமான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன” எனக்குறிப்பிட்டார்.

ஐஐடி மெட்ராஸ் மேலாண்மைக் கல்வித்துறை EMBA திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை வி.விஜயலட்சுமி கூறும் போது, “வணிகத்தில் செயற்கை நுண்ணறிவு, வடிவமைப்பு சிந்தனை, தொழில் முனைவு, வணிகத்தில் நிலைத்தன்மை, நவீன உற்பத்தி செயல்முறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மாணவர்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ளமுடியும்” என்றார்.

பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் இடைக்கால பணியில் தகுதி சேர்க்கும் வகையில் பாடநெறியின் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஆழ்ந்த செயல்பாட்டு மற்றும் பரந்த தொழில் துறைகள் அறிவு
வரைமுறைக்கு உட்பட்டு வணிக முடிவு எடுக்க ஏதுவாக
ஒருங்கிணைந்த முன்னோக்கு

உலகளாவியவணிக அமைப்பிற்குபங்களிப்பைவழங்கும்வகையில்
தலைமைத்துவப் பண்புகள்

ஜனவரி 2024 முதல், மாற்று வார இறுதி நாட்களில் நேரடி வகுப்புகள் நடைபெறும்.

மாணவர் சேர்க்கைக்கு தகுதியாக, ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பில் 60% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். குறைந்தபட்சம் 3 வருட பணிஅனுபவம் அவசியம். நுழைவுத் தேர்வு மற்றும் மேலாண்மை கல்வித்துறையால் காணொலி வாயிலாக நடத்தப்படும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

The post ’’எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ படிப்பு மாணவர் சேர்க்கை..!’’ அக்டோபர் 19 கடைசிநாள்- ஐ.ஐ.டி மெட்ராஸ் அறிவிப்பு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/feed/ 0
’’அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!’’ https://madrasmurasu.com/5895-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5895-2 https://madrasmurasu.com/5895-2/#respond Wed, 09 Aug 2023 10:15:07 +0000 https://madrasmurasu.com/?p=5895 நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (9.8.2023) பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில், அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் […]

The post ’’அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!’’ first appeared on Madras Murasu.

]]>
நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (9.8.2023) பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில், அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்தினார்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணையதள வசதிகள், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட “இல்லம் தேடி கல்வி”, “நம் பள்ளி நம் பெருமை”, “எண்ணும் எழுத்தும்”, “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்”, “அனைவருக்கும் ஐஐடி” போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திறன் வகுப்பறைகள் அமைத்தல், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும் என்றும் 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்” என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், நாட்டின் முதன்மை உயர்கல்வி நிலையங்களான இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT), தேசிய தொழில்நுட்ப கழகம் (NIT), தேசிய பேஷன் தொழில்நுட்ப கழகம் (NIFT), இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU), தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (NLU), தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களில் கல்வி பயின்றிட JEE, CUET, National Aptitude Test in Architecture போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ள அரசு பள்ளிகளைச் சார்ந்த சுமார் 225 மாணவ, மாணவியர்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் அவர்களின் கல்விச் செலவினத் தொகை முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது. இதன்மூலம் அம்மாணவ, மாணவியர் உயர்கல்வியை எவ்வித தடையுமின்றி பயில இயலும்.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக கடந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் 25 மாதிரிப் பள்ளிகள் (Model Schools) தொடங்கப்பட்டது. இம்மாதிரிப் பள்ளிகள் அனைத்தும் உண்டு உறைவிடப் பள்ளிகளாக செயல்பட்டு வருகிறது. இம்மாதிரிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில், முதன்மைக் கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயில விருப்பமுள்ள மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தக் கல்வியாண்டில், மேலும் 13 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு, தற்போது 38 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மாதிரிப் பள்ளிகளில் அளிக்கப்பட்ட சிறப்புப் பயிற்சிகளின் காரணமாக இன்றைக்கு சுமார் 225 அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம், தனியார் பள்ளி மாணவர்களால் மட்டும்தான் நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பயில முடியும் என்ற எண்ணத்தை உடைத்து, அரசுப் பள்ளி மாணவர்களாலும் அத்தகைய முன்னோடி கல்வி நிலையங்களில் சேர்ந்து பயில முடியும் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில், தைவான் நாட்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ள கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவி ஜெயஸ்ரீ பேசியபோது, தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி பெற்று தைவான் நாட்டின் குன் ஷான் (Kun Shan) பல்கலைக்கழகத்தில் இளங்கலை இயந்திர பொறியியல் படிக்க தேர்வாகியுள்ளதாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்தூர் என்ற குக்கிராமத்தில் பிறந்து கடல் கடந்து வேறொரு நாட்டிற்கு கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றும், “நான் முதல்வன்”, “இல்லம் தேடி கல்வி”, “புதுமைப் பெண்”, “வானவில் மன்றம்” போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி தன்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் -க்கு, மாணவச் சமுதாயத்தின் சார்பில் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

The post ’’அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/5895-2/feed/ 0