Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#icc - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Mon, 16 Oct 2023 06:24:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ”உலகக் கோப்பையையும் வெல்லுமா இங்கிலாந்து அணி..?”  https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b2%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d/#respond Mon, 16 Oct 2023 06:24:49 +0000 https://madrasmurasu.com/?p=6887 உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றுக்குள் நுழையும் நான்கு அணிகளைக் கணிக்கச் சொன்னால், அனைத்துக் கணிப்புகளிலும் தவறாது இடம்பெறக்கூடிய அணி இங்கிலாந்து. ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து, கடந்தாண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது. இதே முனைப்புடன் உலகக் கோப்பையையும் வெல்லுமா?  1992-க்குப் பிறகு, 2015 வரை இரு முறை மட்டுமே உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது. 1996, 2011 என இரண்டு முறையும் காலிறுதிச் சுற்றில் தோல்வியடைந்தது. 2015-ல் லீக் சுற்றுடன் […]

The post ”உலகக் கோப்பையையும் வெல்லுமா இங்கிலாந்து அணி..?”  first appeared on Madras Murasu.

]]>
உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றுக்குள் நுழையும் நான்கு அணிகளைக் கணிக்கச் சொன்னால், அனைத்துக் கணிப்புகளிலும் தவறாது இடம்பெறக்கூடிய அணி இங்கிலாந்து. ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து, கடந்தாண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது. இதே முனைப்புடன் உலகக் கோப்பையையும் வெல்லுமா? 

1992-க்குப் பிறகு, 2015 வரை இரு முறை மட்டுமே உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது. 1996, 2011 என இரண்டு முறையும் காலிறுதிச் சுற்றில் தோல்வியடைந்தது. 2015-ல் லீக் சுற்றுடன் வெளியேறியது.

2015 படுதோல்வி இங்கிலாந்தைப் பெரிதளவில் பாதித்தது. இதன் எதிரொலியாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் புரட்சியை உண்டாக்கிய இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து, 2019-ல் லார்ட்ஸில் உலகக் கோப்பையை ஏந்தியது. வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்புகளை அளித்தது, ஸ்டிரைக் ரேட்டை அதிகரித்தது, நிறைய வெள்ளைப் பந்து ஆட்டங்கள் விளையாடியது என இயான் மார்கன் தலைமையில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டன. இதற்கான பலனையும் இங்கிலாந்து அனுபவித்தது.

இயான் மார்கன் ஓய்வுக்குப் பிறகும் இதே பாணியைக் கடைப்பிடித்து வரும் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து, கடந்தாண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது. இதே முனைப்புடன் உலகக் கோப்பையையும் வெல்லுமா?

கடந்த உலகக் கோப்பைக்குத் தயார் ஆனதைப்போல இந்த முறை இங்கிலாந்து தயாராகவில்லையோ என்கிற எண்ணம் வருகிறது. மற்ற அணிகள் உலகக் கோப்பைக்காக 50 ஓவர் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தபோது இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடத் திட்டமிட்டது. பிறகு உலகக் கோப்பைக்காக ஒரு டி20 ஆட்டம் குறைக்கப்பட்டு, ஒருநாள் தொடரில் கூடுதலாக ஒரு ஆட்டம் சேர்க்கப்பட்டது.

இங்கிலாந்தின் வெள்ளைப் பந்து அணிகளின் பயிற்சியாளராக மேத்யூ மாட் நியமிக்கப்பட்டதிலிருந்து இருநாடுகளுக்கு இடையிலான தொடர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.

ஆஸ்திரேலிய அணி கடந்த இரு மாதங்களில் மட்டும் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராக 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியது. நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கும், வங்கதேசத்துக்கும் எதிராக 7 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் ஆசியக் கோப்பையை விளையாடிவிட்டு வருகின்றன.

இங்கிலாந்தோ கடந்த 13 மாதங்களில் வெறும் 9 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளது.

காயம் காரணமாக இடைவெளி எடுத்துக்கொண்ட ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் உள்ளிட்டோர் கடந்தாண்டு ஜூலையில் தென்னாப்பிரிக்காவுடனான தொடருக்குப் பிறகு, நியூசிலாந்து தொடரில்தான் ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார்கள். ஓய்விலிருந்து திரும்பி வந்துள்ள பென் ஸ்டோக்ஸும் கடைசியாக கடந்தாண்டு ஜூலையில் நடைபெற்ற அதே தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்குப் பிறகு நியூசிலாந்து தொடரில் தான் விளையாடினார்.

2015 – 2019 உலகக் கோப்பைகள் இடையே 88 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்து, 2019 – 2023 உலகக் கோப்பைகள் இடையே வெறும் 43 ஒருநாள் ஆட்டங்களில்தான் விளையாடியுள்ளது. கடைசியாக நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட அயர்லாந்துக்கு எதிரான தொடரில் உலகக் கோப்பைக்குத் தேர்வான வீரர்கள் விளையாடவில்லை.

கடந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்த ஜோ ரூட் 2015 – 2019 உலகக் கோப்பைகள் இடையே 78 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடினார். இதே ஜோ ரூட் 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு வெறும் 19 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார்.

இந்த மாற்றம் வீரர்களின் செயல்பாடுகளிலும் வெளிப்பட்டுள்ளது. நியூசிலாந்து தொடரில் 3 ஆட்டங்களில் விளையாடிய பேர்ஸ்டோ மொத்தம் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜோ ரூட் 4 ஆட்டங்களில் 39 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒருநாள் போட்டியில் பழைய ஃபார்மை மீட்டெடுப்பதற்காக, அயர்லாந்துக்கு எதிரான தொடரின் முதல் ஆட்டத்தில் மட்டும் சேர்த்துக்கொள்ளும்படி தாமாக கேட்டுக்கொண்டார் ஜோ ரூட். ஆனால், மழை காரணமாக அந்த ஆட்டமும் கைவிடப்பட்டது. இந்தியாவுடனான பயிற்சி ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. வங்கதேசத்துக்கு எதிராக களத்தில் நேரத்தை செலவிட்ட ரூட், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

இருந்தபோதிலும் பென் ஸ்டோக்ஸ் வருகை, மிக நீண்ட பேட்டிங் வரிசை, வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள், சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் எனப் பெரும் படையை வைத்துள்ளதால் இங்கிலாந்தும் அபாயகரமான அணியாகவே உள்ளது.

டேவிட் மலான் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 92.33 சராசரியில் 277 ரன்கள் குவித்துள்ளார். தொடக்க பேட்டிங்கில் சிக்கல் ஏற்பட்டால் கடைசி நேரத்தில் ஜேசன் ராய்-க்குப் பதில் மாற்று வீரராக சேர்க்கப்பட்ட இங்கிலாந்தின் புதிய நட்சத்திரம் ஹாரி புரூக் அதிரடி காட்ட உள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் ஓய்விலிருந்து திரும்பி வந்ததுபோல் அல்லாமல் நியூசிலாந்துடனான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 182 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அவர் முழுநேர பேட்டராக மட்டுமே விளையாடுகிறார். என்றாலும்கூட அணியின் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றிருப்பதே எதிரணிக்கு அழுத்தத்தை உண்டாக்கும்.

மொயீன் அலி, லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் பேட்டிங்கில் கைகொடுப்பது மட்டுமில்லாமல் சுழற்பந்துவீச்சில் ஒத்துழைக்கவுள்ளார்கள். லிவிங்ஸ்டன் சூழலுக்கு ஏற்ப ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின் என இரண்டையும் வீசக் கூடியவர். பேட்டிங்கிலும் இவர் நல்ல ஃபார்மில் உள்ளார்.

இந்தியாவில் நடைபெறவுள்ளதால் பிரதான சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித் இந்த அணியில் மிக முக்கியமான தாக்கத்தை உண்டாக்கப் போகிறார். அனைத்து வகையான ஸ்பின் வகைகளும் இருப்பது இங்கிலாந்துக்குக் கூடுதல் பலம்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி பெரும்பாலும் ஒவ்வொரு பணிக்கும் இருவரை வைத்துள்ளது. வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களாக சாம் கரண், கிறிஸ் வோக்ஸ் இருக்கிறார்கள். இடக்கை வேகப்பந்துவீச்சுக்கு டேவிட் வில்லி, ரீஸ் டாப்லே இருக்கிறார்கள். சூழலுக்கு ஏற்ப வீரர்களைத் தேர்வு செய்துகொள்வதற்கான வாய்ப்புகளைத் தருகிறது.

அதிவேகப்பந்துவீச்சுக்கு மார்க் வுட் இருக்கிறார். இந்தியாவில் நடைபெறுவதால் இவரது வேகம் இங்கிலாந்துக்கு நிச்சயமாக நடு ஓவர்களில் உதவும். உலகக் கோப்பைக்கான அணியில் இல்லாதபட்சத்திலும் ஜோஃப்ரா ஆர்ச்சர் மாற்று வீரராக அணியுடன் பயணிக்கிறார்.

விளையாடிய ஆட்டங்களின் எண்ணிக்கைகளைக் கொண்டு பார்த்தால் தயார் நிலையில் இல்லாத அணியாகத் தோற்றமளித்தாலும், உலகக் கோப்பையை வெல்வதற்குத் தேவையான மிக நீண்ட பேட்டிங் வரிசை, ஆல்-ரவுண்டர்கள் என பலம் வாய்ந்த அணியாகவே இங்கிலாந்து உள்ளது.

இங்கிலாந்து அணி:

ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லியம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வுட், ஹாரி புரூக், டேவிட் வில்லி, ரீஸ் டாப்லே, கஸ் அட்கின்சன்.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக அக்டோபர் 29-ம் தேதி லக்னௌவில் விளையாடுகிறது. இதுதவிர, இங்கிலாந்து விளையாடும் பெரும்பாலான ஆடுகளங்கள் மும்பை, கொல்கத்தா, தரம்சாலா என பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களாகவே உள்ளன.

சூழல்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு உலகக் கோப்பையைத் தக்கவைக்குமா இங்கிலாந்து..?

The post ”உலகக் கோப்பையையும் வெல்லுமா இங்கிலாந்து அணி..?”  first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d/feed/ 0
”ஆடவர் அணிகளுக்கு நிகராக மகளிர் அணிகளுக்குப் பரிசுத்தொகை..!” ஐசிசி https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%259f%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95/#respond Fri, 14 Jul 2023 05:38:32 +0000 https://madrasmurasu.com/?p=5132 ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே கூறியதாவது: ஐசிசி போட்டிகளில் ஆண்களுக்கு நிகரான பரிசுத்தொகை மகளிர் அணிகளுக்கும் வழங்கப்படவுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க தருணம். சம அளவிலான பரிசுத்தொகை வழங்குவதை இலக்காகக் கொண்டு 2017 முதல் ஐசிசி போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டுக்கு ஆண்டுதோறும் பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பைப் போட்டியில் வழங்கப்படும் பரிசுத்தொகையே மகளிர் உலகக் கோப்பைப் போட்டிக்கும் வழங்கப்படும். இந்த நடைமுறை டி20 உலகக் கோப்பை, யு-19 உலகக் கோப்பைக்கும் […]

The post ”ஆடவர் அணிகளுக்கு நிகராக மகளிர் அணிகளுக்குப் பரிசுத்தொகை..!” ஐசிசி first appeared on Madras Murasu.

]]>
ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே கூறியதாவது:

ஐசிசி போட்டிகளில் ஆண்களுக்கு நிகரான பரிசுத்தொகை மகளிர் அணிகளுக்கும் வழங்கப்படவுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க தருணம். சம அளவிலான பரிசுத்தொகை வழங்குவதை இலக்காகக் கொண்டு 2017 முதல் ஐசிசி போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டுக்கு ஆண்டுதோறும் பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பைப் போட்டியில் வழங்கப்படும் பரிசுத்தொகையே மகளிர் உலகக் கோப்பைப் போட்டிக்கும் வழங்கப்படும். இந்த நடைமுறை டி20 உலகக் கோப்பை, யு-19 உலகக் கோப்பைக்கும் பொருந்தும்.

கிரிக்கெட் அனைவருக்குமான விளையாட்டு. கிரிக்கெட்டில் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் சமமாகக் கொண்டாடி, மதிப்பளித்திடுவதற்கு ஐசிசியின் இந்த முடிவு வலுசேர்க்கிறது என்றார். சமீபத்தில் நடைபெற்ற ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ. 13 கோடியும் மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ. 8.20 கோடியும் பரிசுத்தொகையாகக் கிடைத்தன.

இதுதவிர டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசாதபோது விதிக்கப்படும் அபராதங்களிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி ஓவர் வீசும்போது, ஒவ்வொரு வீரருக்கும் ஆட்ட ஊதியத்திலிருந்து ஓவருக்கு 5 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சமாக ஆட்ட ஊதியத்தில் 50 சதவிகிதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலிருந்தே அமலுக்கு வருகிறது.

80 ஓவர்களில் புதிய பந்தை மாற்றிக்கொள்ளும் நடைமுறை இருப்பதால், ஓர் அணி 80 ஓவர்களுக்குள் ஆட்டமிழக்கும்பட்சத்தில் இந்த அபராதம் விதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ”ஆடவர் அணிகளுக்கு நிகராக மகளிர் அணிகளுக்குப் பரிசுத்தொகை..!” ஐசிசி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95/feed/ 0
இந்தியா, விளையாட்டில் அரசியலைக் கொண்டு வருகிறது என்று பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் எசான் மசாரி விமர்சித்துள்ளார். https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b3%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b0 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0/#respond Tue, 11 Jul 2023 13:48:58 +0000 https://madrasmurasu.com/?p=5018 பாகிஸ்தானில் விளையாட இந்திய அணி மறுத்தால் உலகக் கோப்பைப் போட்டியைப் புறக்கணிப்போம் என பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் எசான் மசாரி எச்சரித்துள்ளார். ஆசியக் கோப்பைப் போட்டியை பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை இப்போட்டி நடைபெறவுள்ளது. அரசியல் சூழல் காரணமாக பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா மறுத்துள்ளதால், இந்திய அணி விளையாடும் ஆட்டங்கள் இலங்கையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஆசியக் கோப்பைப் போட்டியின் அட்டவணை இன்னும் […]

The post இந்தியா, விளையாட்டில் அரசியலைக் கொண்டு வருகிறது என்று பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் எசான் மசாரி விமர்சித்துள்ளார். first appeared on Madras Murasu.

]]>
பாகிஸ்தானில் விளையாட இந்திய அணி மறுத்தால் உலகக் கோப்பைப் போட்டியைப் புறக்கணிப்போம் என பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் எசான் மசாரி எச்சரித்துள்ளார்.
ஆசியக் கோப்பைப் போட்டியை பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை இப்போட்டி நடைபெறவுள்ளது. அரசியல் சூழல் காரணமாக பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா மறுத்துள்ளதால், இந்திய அணி விளையாடும் ஆட்டங்கள் இலங்கையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஆசியக் கோப்பைப் போட்டியின் அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் (ACC) பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் எசான் மசாரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குப் பேட்டி அளித்துள்ள எசான் மசாரி, “ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது. எனவே எல்லா ஆட்டங்களும் பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும். அதைத் தான் கிரிக்கெட் ரசிகர்களும் விரும்புகிறார்கள். இலங்கையில் தான் விளையாடுவோம் என்று இந்தியா கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றார்.
உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் குறித்து முடிவெடுக்க ஓர் உயர்மட்டக் குழுவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அமைத்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையிலான இந்தக் குழுவில் விளையாட்டுத் துறை அமைச்சர் எசான் மசாரியும் இடம்பெற்றுள்ளார்.
டர்பனில் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா – பிசிபி தலைவர் ஜகா அஷ்ரஃப் சந்திப்பு நடைபெறவுள்ளது . அப்போது ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை போட்டிகள் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ தலைவரான ஜெய் ஷா தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கும் (ACC) தலைவராக உள்ளார்.
இந்தியா விளையாட்டில் அரசியலைக் கொண்டு வருகிறது என்று எசான் மசாரி விமர்சித்துள்ளார். “நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகள் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளன. அவர்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு வழங்கியது.” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியா நல்ல முடிவைத் தெரிவிக்கும் என்று நம்புகிறோம். பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா கலந்துகொண்டு விளையாட வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்கும் என்றார்.

The post இந்தியா, விளையாட்டில் அரசியலைக் கொண்டு வருகிறது என்று பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் எசான் மசாரி விமர்சித்துள்ளார். first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0/feed/ 0
குப்பையை புதையலாக மாற்றும் வித்தை தெரிந்தவர் தோனி: ஹைடன் புகழாரம்! https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%2595-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/#respond Sat, 27 May 2023 06:52:57 +0000 https://madrasmurasu.com/?p=2652 தோனி அடுத்த வருடம் விளையாடுவாரா மாட்டாரா என்று விவாதிப்பது இப்போது தேவையில்லாதது என்றார் ஹைடன்.

The post குப்பையை புதையலாக மாற்றும் வித்தை தெரிந்தவர் தோனி: ஹைடன் புகழாரம்! first appeared on Madras Murasu.

]]>
சென்னை அணியினை மகேந்திர சிங் தோனி வழிநடத்தும் விதம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பேசியுள்ளார் .
கடந்த ஐபிஎல்-லில் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்த சென்னை அணியை இந்த ஆண்டு இறுதி ஆட்டத்துக்குள் அழைத்துச் சென்றுள்ளார் தோனி. முக்கிய வீரர்களாகக் கருதப்பட்ட பென் ஸ்டோக்ஸ், ஹங்கர்கேகர் ஆகியோர் காயமடைந்த போதிலும் இளம் படையை வைத்துக்கொண்டே இறுதி ஆட்டம் வரை அணியை அழைத்துச் சென்று தனது கேப்டன்சி மாஸ்டர் கிளாஸை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் தோனி.
ஒவ்வொரு பந்துக்கும் ஆட்ட உத்திகளை மாற்றிக்கொண்டே இருக்கும் தோனிக்கு என்று ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவ்வளவு ஏன் கிரிக்கெட் ஜாம்பவான்களே தோனியைப் பாராட்டாமல் இருந்ததில்லை. தில்லிக்கு எதிரான ஆட்டம் முடிந்த பிறகு சென்னை அணி தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது. அப்போது சிறு குழந்தையைப் போல ஓடிச் சென்று தோனியிடம் தான் அணிந்திருந்த சட்டையில் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டார் சுனில் கவாஸ்கர். இப்படி ரசிகர்கள் தொடங்கி கிரிக்கெட்டின் உச்ச நட்சத்திரங்களுமே கூட தங்களை தோனியின் ரசிகர் என அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.
அந்த வகையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும் வர்ணனையாளருமான மேத்யூ ஹைடன் சமீபத்தில் தான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தோனி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அப்போது அவர்,”தோனி ஒரு மாயாஜாலக்காரர். பிறரது குப்பைகளை அவர் பொக்கிஷமாக மாற்றக்கூடியவர். சென்னை அணிக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும் இடையே நல்ல பிணைப்பு உள்ளது. அதன்மூலம் சவாலை எதிர்கொள்ளவும் முடிவுகளை எடுக்கவும் சரியான வழிமுறைகளைக் கொண்டுள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் தோனியே அதற்குக் காரணம். இந்திய அணிக்கு தோனி இதைச் செய்தார்.
தற்போது சென்னை அணிக்கும் அவர் இதையே செய்துகொண்டிருக்கிறார். தோனி அடுத்த வருடம் விளையாடுவாரா மாட்டாரா என்று விவாதிப்பது இப்போது தேவையில்லாதது. தனிப்பட்ட முறையில் அவர் விளையாடமாட்டார் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் தோனியை அவ்வளவு எளிதாக யாரும் கணிக்கமுடியாது” என்றார்.

The post குப்பையை புதையலாக மாற்றும் வித்தை தெரிந்தவர் தோனி: ஹைடன் புகழாரம்! first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/feed/ 0
மும்பைக்கு இனிப்பான வெற்றி-உபயம் சூர்யகுமார் https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b1%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d/#respond Tue, 09 May 2023 19:23:07 +0000 https://madrasmurasu.com/?p=1466 ஐபிஎல் 2023 போட்டியில் மும்பை, பெங்களூர் உள்பட 5 அணிகள் தலா 10 புள்ளிகளுடன் பிளேஆஃப் போட்டியில் உள்ளன. புள்ளிகள் பட்டியலில் ஏற்பட்டுள்ள இந்த நெரிசலில் இருந்து தப்பிக்க வேண்டிய கட்டாயத்துடன் தான் மும்பையும் பெங்களூரும் இந்த ஆட்டத்தில் களமிறங்கின. மும்பையின் வான்கடேவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். காயம் காரணமாக ஆர்ச்சர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலக, அவருக்குப் பதிலாக கிறிஸ் ஜோர்டான் மும்பை அணியில் இணைந்தார். அதேபோல, கரண் […]

The post மும்பைக்கு இனிப்பான வெற்றி-உபயம் சூர்யகுமார் first appeared on Madras Murasu.

]]>
ஐபிஎல் 2023 போட்டியில் மும்பை, பெங்களூர் உள்பட 5 அணிகள் தலா 10 புள்ளிகளுடன் பிளேஆஃப் போட்டியில் உள்ளன. புள்ளிகள் பட்டியலில் ஏற்பட்டுள்ள இந்த நெரிசலில் இருந்து தப்பிக்க வேண்டிய கட்டாயத்துடன் தான் மும்பையும் பெங்களூரும் இந்த ஆட்டத்தில் களமிறங்கின.

மும்பையின் வான்கடேவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். காயம் காரணமாக ஆர்ச்சர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலக, அவருக்குப் பதிலாக கிறிஸ் ஜோர்டான் மும்பை அணியில் இணைந்தார். அதேபோல, கரண் சர்மாவுக்குப் பதிலாக வைஷாக் பெங்களூர் அணிக்குத் திரும்பினார்.

பெஹ்ரன்டார்ஃப் அட்டகாசமாக முதல் ஓவரை வீசினார். நான்காவது பந்திலேயே டு ப்ளஸியின் கேட்ச்சைத் தவறவிட்டார் வதேரா. அதற்கான பலனை மும்பை அணி அனுபவித்தது. எனினும் அதே ஓவரில் ஒரு ரன்னில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கோலி.

சாவ்லா வீசிய 2-வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை டு ப்ளஸி விளாசினார். அதற்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் 3-வது ஓவரில் ராவத்தை ஆட்டமிழக்கச் செய்தார் பெஹ்ரன்டார்ஃப்.

கிரீனின் 4-வது ஓவரில் டு ப்ளஸி 2 பவுண்டரிகளை அடிக்க, பவர்பிளேயில் 56 ரன்களை எட்டியது பெங்களூர். பவர்பிளே முடிந்தாலும் அடுத்தடுத்த ஓவர்களிலும் மேக்ஸ்வெல் – டு பிளஸி இணையின் அதிரடி தொடர்ந்தது. ஜோர்டான் வீசிய 7-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை அடித்தார் மேக்ஸ்வெல். 25 பந்துகளில் மேக்ஸ்வெல் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

10 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 104 ரன்கள் எடுத்தது. டு ப்ளஸி 30 பந்துகளில் அரை சதம் அடித்தார். 62 பந்துகளில் 120 ரன்களைக் குவித்து மும்பை பந்துவீச்சைப் பந்தாடியது இந்தக் கூட்டணி. ஐபிஎல் 2023 போட்டியில் இருவரும் நான்கு முறை 100+ ரன்கள் கூட்டணி அமைத்துள்ளார்கள்.

33 பந்துகளில் 68 ரன்கள் குவித்த மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, கார்த்திகேயா வீசிய 14-வது ஓவரில் 1 ரன்னுடன் விக்கெட்டைப் பறிகொடுத்தார் லோம்ரோர். மற்றொரு பக்கம் நிலைத்து ஆடிய டு ப்ளஸி 65 ரன்களில் கிரீன் ஓவரில் ஆட்டமிழந்தார்.

நீண்ட காலத்துக்குப் பிறகு ஐபிஎல் போட்டிக்குத் திரும்பிய கேதார் ஜாதவ் பவுண்டரியுடன் தனது இன்னிங்ஸை தொடங்கினார். கார்த்திகேயா வீசிய 18-வது ஓவரில் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசிய தினேஷ் கார்த்திக் 30 ரன்களில் அவுட் ஆனார்.

19-வது ஓவரில் ஹஸரங்கா 2 பவுண்டரிகளை அடித்தார். பெங்களூர் 200 ரன்களை எட்டுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி ஓவரை அட்டகாசமாக வீசிய மத்வால் 6 ரன்களை மட்டுமே கொடுத்தார். இறுதியில் 199 ரன்களைக் குவித்தது பெங்களூர்.

சிராஜ் வீசிய முதல் ஓவரை பவுண்டரியுடன் தொடங்கினார் இஷான் கிஷன். கடந்த இரண்டு ஆட்டங்களிலும் டக் அவுட்டான ரோஹித் இந்த ஆட்டத்தில் தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார்.

ஹேசில்வுட் வீசிய ஓவரில் இரண்டு பவுண்டரிகளையும், சிராஜ் வீசிய 3-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களையும் பறக்கவிட்டார் இஷான் கிஷன். 5-வது ஓவரில் இஷான் கிஷன், ரோஹித் சர்மாவின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹஸரங்கா.

அதன் பின்னர் பெங்களூரின் சோதனைக்காலம் தொடங்கியது. சூர்யகுமார் யாதவ் – வதேரா இணை அமர்க்களமாக விளையாடியது. 10 ஓவர்கள் முடிவில் 99 ரன்களை எடுத்தது மும்பை.

ஹஸரங்கா வீசிய 11-வது ஓவரில் ஆளுக்கொரு சிக்ஸரை விளாசினர். அடுத்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். 10 ஓவர்களுக்குப் பிறகு பவுண்டரிகளும் சிக்ஸர்களும் தொடர்ந்து அடிக்கப்பட்டன. சூர்யகுமாரின் அதிரடியைக் கட்டுப்படுத்த முடியாமல் பெங்களூர் பந்துவீச்சாளர்கள் திணறினர். 26 பந்துகளில் அரை சதம் எடுத்தார் சூர்யகுமார்.

11 -16 ஓவர்களில் எடுக்கப்பட்ட ரன்கள்

15, 10, 17, 13, 20, 19 (16-வது ஓவர்).

35 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் மறக்க முடியாத ஐபிஎல் ஆட்டத்தை வழங்கி 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சூர்யகுமார் யாதவ். டிம் டேவிட் டக் அவுட் ஆனாலும் மும்பை அணி, 16.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வதேரா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்துக்கு முன்னேறியது மும்பை. மேலும் கடந்த 4 ஆட்டங்களில் 3 முறை 200+ ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளது.

The post மும்பைக்கு இனிப்பான வெற்றி-உபயம் சூர்யகுமார் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d/feed/ 0