acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post “ஐஐடி மெட்ராஸ் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தொடக்கம்..!” மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய படிப்புகள் first appeared on Madras Murasu.
]]>சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற துறையை (https://mst.iitm.ac.in/) புதிதாகத் தொடங்கியுள்ளது. மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் பாடத்திட்டத்தில் நான்காண்டு பிஎஸ் பட்டப்படிப்பு (B.S. Program in Medical Sciences and Engineering) அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப் பாடத் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாகும்.
காக்னிசன்ட் இணை நிறுவனர் லட்சுமி நாராயணன், ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, துறையின் வழிகாட்டும் குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவ நிபுணர்கள் மற்றும் தொடர்புடையோர் முன்னிலையில் இந்தத் துறை இன்று (11 மே 2023) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
உயிர்காக்கும் மருத்துவ சாதனங்கள், மருந்து கண்டுபிடிப்பு, மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு, அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றை மாணவர்கள் வடிவமைக்கும் வகையில் அவர்களைத் தயார்படுத்தும் இடைநிலை அணுகுமுறையை இப்பாடத்திட்டம் வழங்குகிறது. மருத்துவ நடைமுறைகளில் தொழில்நுட்பத்தை திறம்படப் பயன்படுத்த ஏதுவாக மருத்துவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், இந்தியாவில் மருத்துவர்-விஞ்ஞானிகளுக்கான அடித்தளத்தை அமைக்கும் பணியினை இந்தத் துறை மேற்கொள்ளும்.
இப்பாடத் திட்டத்திற்கான மேம்பாட்டுப் பணிகளை கவனிக்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளின் உயர்மட்ட மருத்துவ நிபுணர்கள், இத்துறையின் ‘நடைமுறை பேராசிரியர்களாக’ இருப்பார்கள். இந்தியாவில் உள்ள முதன்மை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுடன் இத்துறை ஏற்கனவே தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய காக்னிசண்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் லட்சுமி நாராயணன் கூறும்போது, “மருத்துவ அறிவியலில் கூட்டு ஆராய்ச்சி இந்தியாவை மருத்துவ ரீதியான பயன்பாட்டில் உலகளவில் முன்னிலைக்கு எடுத்துச் செல்லும். விண்வெளி, அணுசக்தி, டிஜிட்டல் மற்றும் உயிரிதொழில்நுட்பம் ஆகியவற்றில் எங்களது நிறுவனம் முன்னணியில் திகழ்வதுடன், ஆராய்ச்சித் திறன் மற்றும் ஆற்றல் ஆகியவற்றையும் நிரூபித்துள்ளது. இத்திறனை மருத்துவத்திற்கும் விரிவுபடுத்துவது இயற்கையான அடுத்த கட்டப் பணியாகும்” என்றார்.
‘மருத்துவர்- விஞ்ஞானிகள்’ மற்றும் பொறியியல் உடலியல் நிபுணர்கள் தங்கள் துறைகளில் எதிர்காலத்தில் சிறந்து விளங்கும் வகையில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தனிச்சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சி வசதியை உருவாக்குவதும், பயிற்சியை அளிப்பதும் இதன் குறிக்கோளாகும். பல்வேறு மருத்துவத் துறைகளை இணைக்கும் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சித் திட்டங்களை இந்த புதிய துறை மேற்கொள்ளும்.
தேவைப்படும் வளங்கள் மற்றும் தளங்களை அளிப்பதன் மூலம், பல தலைமுறைகளுக்கு நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவ முடியும் என ஐஐடி மெட்ராஸ் உறுதியாக நம்புகிறது. மருத்துவர்- விஞ்ஞானிகள், பொறியியல் உடலியல் நிபுணர்கள் தங்கள் துறைகளில் எதிர்காலத்தில் சிறந்து விளங்கும் வகையில், மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்காக தனிச்சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சி வசதியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
பல்வேறு மருத்துவத் துறைகளை இணைக்கும் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சித் திட்டங்களை இக்கல்வி நிறுவனம் மேற்கொள்ளும். தேவையான வளங்கள் மற்றும் தளங்களை அளிப்பதன் மூலம் பல தலைமுறைகளுக்கு நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்க எமது ஆராய்ச்சியாளர்களுக்கு உதவ முடியும் என உறுதியாக நம்புகிறோம்.
தொடக்க விழாவில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “இந்தியாவில் கோவிட் பரவல் இருந்த சமயத்தில், இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்காலத்தில் திறம்படக் கையாள வேண்டுமெனில் நாடு தழுவிய அளவில் தொழில்நுட்பத்தை மருத்துவத்துடன் இணைக்க வேண்டும் என்பது வெளிப்படையாகத் தெரிய வந்தது. இவ்வாறான சவால்கள் மீண்டும் எழாது என உறுதியாக நம்பும் அதே நேரத்தில், நமது பொறுப்புணர்வை வரையறுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமாகிறது” என்றார்.
பேராசிரியர் வி.காமகோடி மேலும் கூறும்போது, “தீர்க்க முடியாமல் இருந்து வந்த மருத்துவப் பிரச்சனைகளுக்கு அதிநவீன முறையில் தீர்வுகளை உருவாக்க மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒருங்கிணைப்பதுதான் எங்கள் இலக்காகும். சிகிச்சை வாய்ப்புகளை மேம்படுத்தி, சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். அனைவருக்கும் ஐஐடிஎம் என்ற பணியைத் தொடர்வதன் மூலம், மருத்துவத் துறையில் உரிய பங்களிப்பை வழங்க விரும்புகிறோம். அதன் மூலம் நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தரமான மற்றும் குறைந்த செலவிலான மருத்துவ சேவையை வழங்க முடியும்” என்றார்.
மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மூலம் தொடங்கப்பட உள்ள பாடத்திட்டங்கள்:
1. பிஎஸ் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் என்ஜினியரிங் (4 ஆண்டுக் கல்வி)2
2. பிஎச்.டி. புரோகிராம் ஃபார் டாக்டர்ஸ்
3. எம்எஸ் பை ரிசர்ச் ஃபார் டாக்டர்ஸ்
4. எம்எஸ் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் என்ஜினியரிங்
5.பிஎச்.டி புரோகிராம் ஃபார் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங் கிராஜுவேட்ஸ்
இப்பாடத் திட்டத்தின் தனித்துவ அம்சங்களை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைத் தலைவர் பேராசிரியர் போபி ஜார்ஜ் கூறும்போது, “இந்த இடைநிலை அணுகுமுறை வாயிலாக பொறியியல் மற்றும் மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, சுகாதாரத் துறையை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் முடியும். பல்வேறு உறுப்புகளின் முக்கிய அளவுகளைக் கண்காணித்தல், நோயின் அறிகுறிகளைக் கண்டறிந்து தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான விருப்பங்களை அளிக்க உதவுதல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள முடியும். பொறியியல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகள் தொடர்ந்து ஒன்றிணைவதால் பெறக்கூடிய பயன்கள் எண்ணற்றவை” எனத் தெரிவித்தார்.
இப்பாடத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் ஐஐடி பேராசிரியருமான பேரா. ஆர்.கிருஷ்ணகுமார் கூறுகையில், “ஐஐஎஸ்இஆர் ஆப்டிடியூட் தேர்வு (IISER-IAT) மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பதாரர்கள் இந்திய கல்வித் துறை வாரிய கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு வாரியத்தில், 2022 அல்லது 2023-ம் ஆண்டுகளில் அறிவியல் பாடத்துடன் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
கூடுதல் தகவல்கள் மற்றும் புதுப்பிக்கப்படும் விவரங்களை துறையின் இணையதளத்தில் காணலாம்- https://mst.iitm.ac.in/
பேராசிரியர் ஆர்.கிருஷ்ணகுமார் மேலும் கூறும்போது, “நோயாளி ஒருவரை டிஜிட்டல் முறையில் இருவராகக் கருதி வெவ்வேறு சிகிச்சை விருப்பங்கள் அல்லது அறுவை சிகிச்சை நடைமுறைகளை மேற்கொள்வதாக கற்பனை செய்து பாருங்கள். அந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கோ, அறுவை சிகிச்சை நிபுணருக்கோ உங்களது சிகிச்சை ஆலோசனைகள் முக்கிய உள்ளீடாக இருப்பதுடன், விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கவும் முடியும். எதிர்காலத்தில் மருத்துவப் பணியாற்றும் உங்களுக்கு முக்கிய இணைப்பை ஏற்படுத்தும் விதமாக இந்தப் பாடத்திட்டம் அமைந்திருக்கும்” எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “கோட்பாடு, செய்முறைப் பயிற்சி ஆகியவற்றை இணைக்கும் வகையில் மருத்துவமனையில் உள்ளிருப்புப் பயிற்சியையும் (internship) இப்பாடத்திட்டம் உள்ளடக்கியதாகும். பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை மருத்துவம் மற்றும் பொறியியல் ஆசிரியர்கள் கற்பிப்பார்கள். அந்த வகுப்புகள் மாணவர்களுக்கு வலுவான ஆராய்ச்சித் தளத்தை வழங்குவதாக அமைந்திருக்கும்” என்றார்.
நோய் வளர்ச்சியைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் நோய்க்கான சிகிச்சைகள், மருத்துவ உபகரணங்கள், தொழில்நுட்பங்கள் போன்றவை மருத்துவர்- விஞ்ஞானிகளை சார்ந்தே உள்ளன. இதற்கான ஆதாரங்க
DOCTORS INVOLVED IN THE IIT MADRAS BS PROGRAMளைக் கூற வேண்டுமெனில் வரலாற்றுப் பூர்வமான உதாரணங்களும் உண்டு. மருத்துவர்- விஞ்ஞானிகளை அதிகளவில் உருவாக்கும் வகையில், எங்களது துறை சார்பில் எம்.எஸ்.(பை ரிசர்ச்), பி.எச்டி என இரு முக்கிய பாடத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
மருத்துவர்கள், பொறியாளர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இரட்டை பிஎச்டி பாடத்திட்டத்தையும் நாங்கள் வழங்குகிறோம். மருத்துவ உபகரணங்கள் மற்றும் தரவுப் பகுப்பாய்வு வளர்ச்சியை இப்பாடத்திட்டம் ஊக்குவிக்கும். மருத்துவர்கள் புதிய சிந்தனைகளுடன் முனைவர் பட்டத்திற்கு பதிவு செய்யும் போது, அவர்கள் பொறியியல் முனைவர் பட்டத்திற்கான மாணவர்களுடன் இணைந்து செயல்படுவார்கள். மருத்துவரும் பொறியாளரும் இணைந்து, கருத்தாக்கங்களை சந்தைப்படுத்தும் பொருளாக மாற்றுவதற்கான கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபடுவார்கள். சந்தைக்கான தயாரிப்பாக மாற்றுவதற்கான சோதனைகளை மருத்துவர் மேற்கொள்வார்.
தொழில்முனைவில் மருத்துவர் பட்டம் எனப்படும் மருத்துவர்களுக்கான பிரத்யேக பாடத்திட்டத்தையும் இந்தத் துறை அறிமுகப்படுத்துகிறது. இப்பாடத்திட்டத்தின் வாயிலாக மருத்துவர்கள் ஒரு தயாரிப்பை உருவாக்க முடியும். அவர்களின் தொழில் முனைவு முயற்சிகளுக்கான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு ஐஐடி அமைப்பின் மூலம் வழங்கப்படும்”
ஐஐடி மெட்ராஸ் தொடங்கியுள்ள புதிய துறை, மருத்துவ உலகில் புரட்சியை ஏற்படுத்துமா..?
The post “ஐஐடி மெட்ராஸ் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தொடக்கம்..!” மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய படிப்புகள் first appeared on Madras Murasu.
]]>