Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#election2024 - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Thu, 21 Sep 2023 11:53:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ”இப்போதுதான் புரிகிறதா..?” வெளுத்து வாங்கிய ’முரசொலி’ https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25ae%25a4%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%ae%be/#respond Thu, 21 Sep 2023 11:37:48 +0000 https://madrasmurasu.com/?p=6461 ’’இப்போதுதான் புரிகிறதா..?” என்ற தலைப்பில் இன்றைய முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.  இந்­தி­யா­வின் முதல் தலைமை அமைச்­சர் ஜவ­ஹர்­லால் நேரு­வைப் பற்றி இன்­றைய தலைமை அமைச்­சர் மோடி அவர்­க­ளுக்கு இப்­போ­து­தான் புரி­கி­றது. பத்­தாண்டு காலம் நேரு எதிர்ப்பு பிரச்­சா­ரத்­தைச் செய்து வந்த மோடி அவர்­கள், புதிய நாடா­ளு­மன்­றத்­துக்­குப் புறப்­ப­டு­ வ­தற்கு முன்­னால் ஆற்­றிய உரை­யில் நேரு­வைப் புகழ்ந்­து­விட்­டார். அதற்­கா­கவே அவரை பாராட்­டத்­தான் வேண்­டும். ஒன்­றிய கல்­வித் துறை அமைச்­ச­கத்­தின் கீழ் உள்ள அமைப்பு இந்­திய வர­லாற்று ஆராய்ச்­சிக் கவுன்­சில். […]

The post ”இப்போதுதான் புரிகிறதா..?” வெளுத்து வாங்கிய ’முரசொலி’ first appeared on Madras Murasu.

]]>
’’இப்போதுதான் புரிகிறதா..?” என்ற தலைப்பில் இன்றைய முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது. 

இந்­தி­யா­வின் முதல் தலைமை அமைச்­சர் ஜவ­ஹர்­லால் நேரு­வைப் பற்றி இன்­றைய தலைமை அமைச்­சர் மோடி அவர்­க­ளுக்கு இப்­போ­து­தான் புரி­கி­றது. பத்­தாண்டு காலம் நேரு எதிர்ப்பு பிரச்­சா­ரத்­தைச் செய்து வந்த மோடி அவர்­கள், புதிய நாடா­ளு­மன்­றத்­துக்­குப் புறப்­ப­டு­ வ­தற்கு முன்­னால் ஆற்­றிய உரை­யில் நேரு­வைப் புகழ்ந்­து­விட்­டார். அதற்­கா­கவே அவரை பாராட்­டத்­தான் வேண்­டும்.

ஒன்­றிய கல்­வித் துறை அமைச்­ச­கத்­தின் கீழ் உள்ள அமைப்பு இந்­திய வர­லாற்று ஆராய்ச்­சிக் கவுன்­சில். 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்த அமைப்பு வெளி­யிட்ட பதா­கை­யில் ஜவ­ஹர்­லால் நேரு­வின் பட­மும் இல்லை, மெள­லானா அபுல் கலாம் ஆசாத் பட­மும் இல்லை. சுதந்­தி­ரப் போராட்­டத்­தில் பங்­கெ­டுத்து 9 ஆண்­டு­கள் சிறை­யில் இருந்த நேரு­வின் படமே மறைக்­கப்­பட்­டது. நேரு­வின் பெயரை 2022ஆம் ஆண்டு சுதந்­திர தின உரை­யில் பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி குறிப்­பி­ட­வில்லை.

டெல்­லி­யில் நேரு நினைவு அருங்­காட்­சி­ய­கம் மற்­றும் நூல­கம் இருக்­கி­றது. இதன் பெய­ரையே பிர­த­மர் அருங்­காட்­சி­ய­கம் மற்­றும் நூல­கச் சங்­கம் என்று மாற்றி விட்­டார்­கள். முன்­னாள் பிர­த­மர் லால் பக­தூர் சாஸ்­திரி அவர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்­டது இது. இதனை முன்­னாள் துணை குடி­ய­ர­சுத் தலை­வர் ராதா­கி­ருஷ்­ணன் திறந்து வைத்­தார். அத்­த­கைய புக­ழுக்­கு­ரி­யது இது. இதன் பெய­ராக இருந்த நேரு பெயரை கடந்த ஆகஸ்ட் 14 அன்­று­தான் தூக்­கி­னார்­கள்.

கோவா பிரச்­சி­னை­யில் பிர­த­மர் நேரு சரி­யாக நடந்து கொள்­ள­வில்லை, தனது உல­க­ளா­விய இமேஜை காப்­பாற்­றிக் கொள்­வ­தில்­தான் அக்­கறை செலுத்­தி­னார் என்று நாடா­ளு­மன்­றத்­தில் 2022 பிப்­ரவரி மாதம் பேசி­னார் பிர­த­மர் மோடி.

“காந்தி, நேரு என குடும்­பப் பெயர்­க­ளில் 600 திட்­டங்­கள் இருந்­த­தா­கச் செய்தி படித்­தேன். அவர்­க­ளு­டைய தலை­மு­றை­யைச் சேர்ந்­த­வர்­கள் ஏன் நேரு­வின் பெயரை குடும்­பப் பெய­ராக வைப்­பது இல்லை? நேரு­வின் பெயரை எங்­கா­வது நாங்­கள் குறிப்­பிட மறந்­து­விட்­டால் காங்­கி­ர­சார் அப்­செட் ஆகி­றார்­கள். நேரு மிகப்­பெ­ரிய

மனி­தர். பிறகு ஏன் அவ­ரது பெயரை யாரும் குடும்­பப் பெய­ரா­கப் பயன்­படுத்­து­வது இல்லை? நேரு பெயரை பயன்­ப­டுத்­து­வ­தில் உங்­களுக்கு என்ன அவ­மா­னம்? பயம்?” என்று கடந்த பிப்­ர­வரி மாதம் மாநி­லங்­கள­வை­யில் பேசி­னார் பிர­த­மர் மோடி.

பெரோஸ் காந்தி –- என்ற பெயரை வைத்தே இந்­திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி எனச் சொல்­லப்­பட்­டது. இதனை தான் ‘நேரு’ என்று ஏன் வைக்­க­வில்லை என்று நாடா­ளு­மன்­றத்­தில் கேட்­டார் பிரத­மர்.

காஷ்­மீர் விவ­கா­ரத்­தில் நேரு சரி­யாக நடந்து கொள்­ள­வில்லை என்று விமர்­சித்­தார் ( 2022 அக்­டோ­பர்) பிர­த­மர் நேரு­வுக்­கும் இந்­திய ஜன­நா­ய­கத்­துக்­கும் எந்த சம்­பந்­த­மும் இல்லை என்று (2018 பிப்­ர­வரி) நாடா­ளு­மன்­றத்­தி­லேயே குற்­றம் சாட்­டி­னார் பிர­த­மர் மோடி. இப்­படி எல்­லாம் தொடர்ந்து நேருவை அவ­மா­னப்­ப­டுத்தி வந்­த­வர் தான் பிர­த­மர் மோடி. ஆனால் இப்­போது நாக்கை அப்­ப­டியே திருப்­பிப் போட்­டு­விட்­டார்.” ‘உல­கம் உறங்­கிக் கொண்­டி­ருக்­கும் போது இந்­தி­யாவே விழித்­துக் கொண்­டி­ருக்­கி­றது’ என்ற பிர­த­மர் நேரு­வின் பேச்சு தான் உல­க­மெங்­கும் பெரும் பாராட்­டைப் பெற்­றது. அந்­தப் பேச்சு தற்­போது நமக்கு உற்­சா­கத்தை அளிக்­கி­றது” என்று சொல்லி இருக்­கிறார் பிர­த­மர் மோடி. நேரு,சாஸ்­திரி, இந்­திரா, நர­சிம்­ம­ராவ், வாஜ்­பாய் என்று பல்­வேறு பிர­த­மர்­கள் தங்­கள் சிறப்­பான தலை­மையை வெளிப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள் என்­றும் குறிப்­பிட்டு இருக்­கி­றார்.

இந்­திரா காந்தி காலத்­தில் வங்க தேசம் உரு­வா­ன­தை­யும் நினை­வூட்டி இருக்­கி­றார் பிர­த­மர். இரா­ஜேந்­திர பிர­சாத், அண்­ணல் அம்­பேத்­கர், மாவீ­ரன் பகத்­சிங் ஆகி­யோ­ரை­யும் நினைவு கூர்ந்­துள்­ளார் பிர­த­மர்.

இந்­திய நாடா­ளு­மன்ற ஜன­நா­யக வர­லாற்றை இப்­போ­து­தான் அவர் படிக்க ஆரம்­பித்து பேசு­கி­றார் என்­பதை இதன் மூல­மாக உணர முடி­கி­றது. இதற்கே ஒன்­பது ஆண்­டு­கள் ஆகி­விட்­டது!

ஒன்­பது ஆண்­டு­கள் -– ஒன்­பது முறை –- ஒன்­பது சிறை­க­ளில் இந்­தி­யா­வின் விடு­த­லைக்­காக அடைக்­கப்­பட்டு இருந்­த­வர் நேரு. ‘என்­னு­டைய அர­சி­யல் வாரிசு நேரு­தான்’ என்று காந்தி சொன்­னார். ‘விடு­தலை பெற்ற இந்­தி­யா­வின் தலைமை மகு­டம் நேரு­வுக்­குத்­தான் போக­வேண்­டும், ஏனென்­றால் அவர்­தான் முழு­மை­யான இந்­தி­யர்’ என்­றும் காந்தி சொன்­னார். அத்­த­கைய ஆட்­சியை தான் நேரு­வும் வழங்­கி­னார்.
பல்­வேறு மொழி பேசும் மக்­கள் ஒற்­று­மை­யாக வாழ மொழி வாரி மாகா­ணங்­களை உரு­வாக்­கிக் கொடுத்­தார். இந்தி பேசாத மக்­கள் விரும்­பும் வரை இந்தி அவர்­கள் மீது திணிக்­கப்­பட மாட்­டாது என்று உறுதி அளித்­தார். ஐந்­தாண்­டுத் திட்­டங்­க­ளைக் கொண்­டு­வந்து -– அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் பல்­வேறு திட்­டங்­களை உரு­வாக்­கிக் கொடுத்­தார். வறுமை ஒழிப்­புத் திட்­டங்­களை செயல்­ப­டுத்­தி­னார். அனைத்து மாநி­லங்­க­ளி­லும் பொதுத்­துறை நிறு­வ­னங்­களை உரு­வாக்­கித் தந்­தார். மதச்­சார்­பற்ற மனி­த­ராக அவர் இருந்­தார். சகோ­த­ரத்­து­வத்தை வலி­யு­றுத்­தி­னார். நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்­துக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்­தார். அனைத்து தரப்­பும் விவா­தம் செய்­யும் கள­மாக நாடா­ளு­மன்­றத்தை நடத்­திக் காட்­டி­னார். மதச்­சார்­பின்­மை­யின் இலக்­க­ண­மா­கத் திகழ்ந்­தார். கூட்­டாட்சி நெறி­மு­றை­களை அவர் அடிக்­கடி பேசி­னார். அணி­சே­ராக் கொள்­கையை கடைப்­பி­டித்­தார். அத­னால் உல­கத் தலை­வர்­கள் அனை­வ­ரும் அவரை வணங்­கி­னார்­கள்.

இத்­த­கைய நேரு­வின் பெரு­மையை மறைக்­கப் பார்த்­தார்­கள். முடி­ய­வில்லை. பாராட்­டத் தொடங்­கி­விட்­டார்­கள். நல்ல மாற்­றம் தான்!

The post ”இப்போதுதான் புரிகிறதா..?” வெளுத்து வாங்கிய ’முரசொலி’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%ae%be/feed/ 0
’’இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25af-%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%2589%25e0%25ae%25b0 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0/#respond Mon, 18 Sep 2023 05:33:13 +0000 https://madrasmurasu.com/?p=6353 ’’இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. இந்தியாவைக் காக்க இந்தியா கூட்டணியை வெல்ல வைக்க வேண்டியது நம்முடைய அரசியல் கடமை மட்டுமல்ல! கொள்கைக் கடமையும்தான்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் விருதுகளை வழங்கி, முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவின் முதல் விடுதலைப் போர் நடப்பதற்கு 50 ஆண்டுக்கு முன்பே, இங்கு நம்முடைய பொதுச்செயலாளரும், பொருளாளரும் குறிப்பிட்டதைப்போல, விடுதலைக் கனல் தெறித்த ஊர் இந்த வேலூர். […]

The post ’’இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
’’இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. இந்தியாவைக் காக்க இந்தியா கூட்டணியை வெல்ல வைக்க வேண்டியது நம்முடைய அரசியல் கடமை மட்டுமல்ல! கொள்கைக் கடமையும்தான்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் விருதுகளை வழங்கி, முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் நடப்பதற்கு 50 ஆண்டுக்கு முன்பே, இங்கு நம்முடைய பொதுச்செயலாளரும், பொருளாளரும் குறிப்பிட்டதைப்போல, விடுதலைக் கனல் தெறித்த ஊர் இந்த வேலூர். இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் என்று 1857-இல் நடந்த சிப்பாய்க் கலகத்தைச் சொல்வார்கள். ஆனால், 1806-ஆம் ஆண்டு, ஜூலை 10-ஆம் நாள் வேலூர் கோட்டையில் நிகழ்ந்த புரட்சியின் தொடக்கம்தான் இந்தியர்கள் இனியும் அடிமையாக வாழத் தயாராக இல்லை என்பதை பிரிட்டிஷ் ஆட்சிக்கு உணர்த்தியது. அத்தகைய வீரம் விளைந்த ஊரில் இந்த ஆண்டுக்கான கழக முப்பெரும் விழா நடைபெறுகிறது.

இங்கு சிப்பாய்க் கலகத்தின் நினைவுத் தூணைக் கலைஞர் நிறுவினார். வேலூர் நகராட்சியை மாநகராட்சி ஆக்கினார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு மிகப் பெரிய கட்டடம் கட்டித் தந்ததும், வேலூர் மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வந்ததும் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்! அத்தகைய தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் வேலூரில் முப்பெரும் விழாவை நடத்துவது மிகமிக பொருத்தமானது.
அதிலும் குறிப்பாக, நம்முடைய பொதுச் செயலாளர் – அருமை அண்ணன் துரைமுருகன் அவர்களின் சொந்த மாவட்டம் இந்த வேலூர்! காந்தி இருக்கிறார். ஜெகத்ரட்சகன் இருக்கிறார். அவர்களுக்கும் அந்த உரிமை உண்டு. அதேபோல பல முன்னோடிகளும் அந்த உரிமையை கொண்டாட முடியும். ஆனால் அதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததுபோல அண்ணன் துரைமுருகன் அவர்கள் இந்த மாவட்டத்தோடு எவ்வாறு ஒன்றி, பிணைந்து, இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை எல்லோரும் அறிவார்கள். அவரே மேடைகளில் சொல்வார்… என்னைக் கால்சட்டைப் பையனாக பார்த்தேன்… இன்று தலைவராக பார்க்கிறேன் என்று சொல்வார். அப்படிப்பட்ட நான் இப்போது கழகத் தலைவராவும் – அவர் கழகத்தின் பொதுச் செயலாளராவும் இருப்பது பெருமைக்குரியது. இருவருமே தலைவர் கலைஞரால் வளர்க்கப்பட்டவர்கள் – வார்ப்பிக்கப்பட்டவர்கள் என்பதுதான் எங்களுக்குக் கிடைத்த பெருமை!

தலைவர் கலைஞர் அவர்களும் – இனமானப் பேராசிரியர் அவர்களும் அடுத்தடுத்து நம்மை விட்டுப் பிரிந்த நேரத்தில் – இருவருமாக இருந்து எனக்கு அறிவுத் துணையாகவும் – அருமைத் துணையாகவும் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டு இருக்கக் கூடியவர்தான் அண்ணன் துரைமுருகன் அவர்கள். அனுபவத்தைவிட சிறந்த பாடப்புத்தகம் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட அனுபவப் பாடத்தை அவர் எனக்கு தொடர்ந்து வழங்கிக்கொண்டு வருகிறார். மிக முக்கியமான பிரச்சினை எதுவாக இருந்தாலும் – பழைய செய்தி அல்லது பழைய நிகழ்ச்சியை அவர் நினைவூட்டி வழிநடத்துவார். அப்படிப்பட்ட கழகப் பொதுச்செயலாளரின் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா மாநாடுபோல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதைச் சீரோடும் – சிறப்போடும் – எழுச்சியோடும் – பிரம்மாண்டமாகவும் ஏற்பாடு செய்திருக்கும் வேலூர் மாவட்டக் கழகச் செயலாளர் நம்முடைய அருமை நண்பர் நந்தகுமார் அவர்களையும் – அவருக்குத் துணை நின்றிருக்கும் மாவட்டக் கழக நிர்வாகிகளையும் நான் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். நந்தகுமார் சுறுசுறுப்பாகவும், துறுதுறு என்றும் பணியாற்றுபவர். சிரித்த முகத்தோடு சீரிய பணிகளை ஆற்றக் கூடியவர்.

அதேபோல நம்முடைய மாநகரச் செயலாளர் கார்த்திகேயன் இல்லாமல் இங்கு மட்டுமில்லை, எங்கேயும் நாம் மாநாடு நடத்த முடியாது. அந்தளவுக்கு அவரது ஒலிபெருக்கிதான் கழகத்தின் குரலை கம்பீரமாக கொண்டு சேர்த்துக்கொண்டு இருக்கிறது. வேலூர் இரட்டையர்களாக இருந்து இருவண்ணக் கொடியைக் கட்டிக் காத்துக்கொண்டு வருகிற நந்தகுமார் – கார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் உங்கள் அனைவரின் சார்பில் கழகத் தலைவர் பொறுப்பை நான் ஏற்றிருக்கின்ற காரணத்தால் என்னுடைய நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் – காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா – ஆகியோர் பிறந்த நாளையும் – தமிழினத்தின் விடிவெள்ளியாக உதித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க நாளையும் இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாட வேண்டும் என்று 1985-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அறிவித்தார். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நாம் இந்த விழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்திக்கொண்டு வருகிறோம்.

இந்த ஆண்டுக்கு இன்னும் இரண்டு கூடுதல் சிறப்புகள் இருக்கிறது. நம்மையெல்லாம் ஆளாக்கிய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். அதேபோல இந்த மாபெரும் இயக்கத்தின் பவளவிழா இன்றிலிருந்து தொடங்குகிறது.

”நான் சாமானியன் – மிகமிகச் சாமானியன். எனக்கடுத்த தளநாயகர்கள் எத்தனை பேர் வேண்டும்? இதோ எண்ணிக் கொள்!” – என்று சொல்லி தனது தம்பிமார்கள் பட்டாளத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா அவர்கள். கொட்டும் மழையில் பிறந்ததால் என்னவோ, உடனே வளர்ந்தது கழகம். இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கும் கழகத்தின் பவளவிழாவை வரும் ஓராண்டுக்கு நாம் கொண்டாடப்போகிறோம். அந்த வகையில் பார்த்தால், இது ஐம்பெரும் விழா என்று சொல்லத்தக்க வகையில் சிறப்பாக இன்றைக்கு நடந்துக்கொண்டு இருக்கிறது.

ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டு காலம் நின்று நிலைத்திருப்பது சாதாரணமானது இல்லை. பெரிய பெரிய தலைவர்கள் உருவாக்கிய இயக்கமெல்லாம் அவர்கள் மறைந்தபோது – அவர்களோடு சேர்ந்து மறைந்த எத்தனையோ வரலாறுகளை நாம் படித்திருக்கிறோம். ஆனால், தோன்றிய காலத்தில் எப்படி இருந்ததோ – அதே இளமையோடு – அதே வேகத்தோடு – அதே விவேகத்தோடு – அதே உழைப்போடு – அதே உணர்வோடு இன்று வரை – இந்த 75-ஆவது ஆண்டிலும் கழகம் செழிப்போடு இருக்கக் காரணம் – எதிரே அமர்ந்திருக்கும் நீங்களும், தமிழ்நாடெங்கும் இருக்கும் கோடிக்கணக்கான கழகத் தொண்டர்களும்தான்! இந்த வேலூர் கோட்டை முதல் – குமரிக் கடல் வரைக்கும் இந்தக் கழகத்தைக் கட்டி ஆள்பவர்கள் தொண்டர்கள்தான்.
உங்கள் எல்லோரையும் ‘தம்பி‘ என்று அழைத்தார் பேரறிஞர் அண்ணா.

‘உடன்பிறப்பே‘ என்று அழைத்தார் கலைஞர். நான் உங்களில் ஒருவன். நான் வேறு – நீங்க வேறு இல்லை. உங்களால் உருவாக்கப்பட்டவன் நான். தொண்டர்களால் தலைவனாவும் – தொண்டர்களால் முதலமைச்சராவும் ஆக்கப்பட்டவன் நான். கழகத்தின் எந்தப் பொறுப்புக்கும் ஆசைப்படாமல் – அதிகாரத்தின் எந்தப் பதவியையும் அனுபவிக்காமல் – கருப்புச் சிவப்புக் கொடியைப் பிடித்திருந்தால் போதும் – கருப்பு சிவப்பு வேட்டியைக் கட்டியிருந்தால் போதும் – என்ற உணர்வோடு உயிர்வாழும் தொண்டர்கள் இருக்கும் திசைநோக்கி நான் வணங்குகிறேன்.

இந்த இயக்கத்தை நீங்களும், உங்கள் குடும்பமும் சேர்ந்துதான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் நாம் கம்பீரத்தோடு இன்றைக்கு பவள விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சிறப்பாக நூற்றாண்டு விழாவையும் நாம் கொண்டாடுவோம். அதில் எந்த மாற்றம் இல்லை. எந்தக் கட்டடமும் கட்டுவதுக்கு முன்பு எடுத்து வைக்கப்படுவது செங்கல்தான். நான் சொல்லும் செங்கல் வேறு, நீங்கள் வேறு எதையும் நினைத்துவிடாதீர்கள். ஆனால், அது திறப்பு விழாவின்போது வெளியில் தெரியாது. மலர் மாலைகள்தான் தெரியும். அந்த மாலைகள் உதிர்ந்திடும். ஆனால், செங்கல்கள்தான் கடைசி வரையிலும் காப்பாற்றும். அத்தகைய அடித்தளம்தான் கழகத்தின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள். அடித்தளத்தை நானும் மறக்க மாட்டேன். யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால்தான் மூத்த முன்னோடிகளுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு செய்துகொண்டே இருக்கிறோம்.

ஒரு குடும்பத்துக்குத் தாய் – தகப்பனைப் போன்றவர்கள்தான் இந்த இயக்கத்தின் மூத்த முன்னோடிகளும். அவர்களை இந்த பவள விழா ஆண்டில் போற்றுங்கள் – பாராட்டுங்கள் என்று எல்லா மாவட்டக் கழகச் செயலாளர்களையும் நான் இந்த விழாவின் மூலமாக கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களின் கடந்த காலத் தொண்டுக்கு இணையாக நாம் எதையும் கொடுத்துவிட முடியாது. அவர்களைப் பாராட்டுவது மூலமாக நாம் நன்றிக்குரியவர்களாக ஆகிறோம். அவர்களைப் பாராட்டுவது மூலமாக நம்முடைய மதிப்பு உயரும் என்பதை மறந்துவிடாதீர்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன தளநாயகர்கள் அவர்கள்தான். தலைவர் கலைஞர் அவர்கள் சொன்ன ரத்தநாளங்கள் அவர்கள்தான்.

இவர்களைப் பார்த்துப் புதிய புதிய தளநாயகர்கள் உருவாக வேண்டும். உருவாக்க வேண்டும். இந்த பவளவிழா ஆண்டில் இயக்கத்தின் தலைவராக நான் இருக்கிறேன். இன்று இரண்டு கோடி உறுப்பினர்கள் இயக்கத்தில் இருக்கிறார்கள் என்றால், இரண்டு கோடிப் பேர் என்ற எண்ணிக்கை தேவையில்லை. இரண்டு கோடி கொள்கைவாதிகள் நிரம்பிய கோட்டை திராவிட முன்னேற்றக் கழகம். இதைவிட எனக்கு என்ன பெருமை வேண்டும்? இது கனவுகள் நிறைவேறும் காலம். அதனால்தான் நான் கம்பீரமாக நிற்கிறேன். மகிழ்ச்சியுடன் – மனநிறைவுடன் நிற்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகவரியாவும் – முகமாகவும் இருக்கிறவர்கள் தந்தை பெரியார்! பேரறிஞர் அண்ணா! தலைவர் கலைஞர்! இனமானப் பேராசிரியர்! பாவேந்தர் பாரதிதாசன்! ஆகிய ஐம்பெரும் ஆளுமைகள்! இவர்கள் தனிமனிதர்கள் இல்லை! தத்துவத்தின் அடையாளங்கள்! தந்தை பெரியாரின் சமூகநீதியும் – பேரறிஞர் அண்ணாவின் மாநில உரிமையும் – முத்தமிழறிஞர் கலைஞரின் ஒடுக்கப்பட்டோர் உரிமையும் – இனமானப் பேராசிரியரின் இனமானமும் – பாவேந்தரின் மொழிப்பற்றும்தான் நம்மை வழிநடத்துகிறது. அவர்கள் கொள்கையை நாம் பின்பற்றுவதும் – அவர்கள் வழிநடக்கும் தளகர்த்தர்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் விருதுகள் வழங்குவதும் நம்முடைய இயக்கத்தின் மாபெரும் கடமை!
இந்த ஆண்டுக்கான பெரியார் விருது – கி.சத்தியசீலன் அவர்களுக்கும், அண்ணா விருது – முன்னாள் அமைச்சர் சுந்தரம் அவர்களுக்கும், கலைஞர் விருது – துணைப் பொதுச் செயலாளர், இந்நாள் அமைச்சர் மாண்புமிகு ஐ. பெரியசாமி அவர்களுக்கும், பேராசிரியர் விருது – ந.ராமசாமி அவர்களுக்கும், பாவேந்தர் விருது – திருமதி. மலிகா கதிரவன் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. விருதுகள் பெற்ற ஐந்து பேரையும் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், போற்றுகிறேன்!

பெரியார் விருது பெற்றிருக்கும் மயிலாடுதுறை கி.சத்தியசீலன் அவர்கள் 1956-ஆம் ஆண்டு முதல் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தொடர்ந்து இன்றுவரை பணியாற்றிக் கொண்டிருப்பவர். கிளைக் கழகச் செயலாளர் முதல் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் வரை உயர்ந்தவர். இப்போது அவருக்கு 85 வயது. ஆனாலும் நெஞ்சுறுதியோடு காட்சி அளிக்கிறார் என்றால் கலைஞர் அவருக்கு அளித்த பாராட்டுப் பத்திரம்தான் காரணம். “சத்தியம் தவறாத சத்தியசீலன்” என்று கலைஞர் இவருக்கு மகுடம் சூட்டி இருக்கிறார். தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளை உதட்டளவில் இல்லாமல், உள்ளார்ந்த ஈடுபாட்டோடு கடைப்பிடித்த சத்தியசீலன் இந்த ஆண்டுக்கான பெரியார் விருதை பெறுகிறார்.
முன்னாள் அமைச்சர் மீஞ்சூர் க.சுந்தரம் அவர்கள் அண்ணா பெயரிலான விருதை பெற்றிருக்கிறார். அமைதியாக பணியாற்றுபவர்களுக்கு எடுத்துக்காட்டு வேண்டும் என்றால் அது க.சுந்தரம் அவர்கள்தான். எந்தப் பொறுப்பை வகித்தாலும் அதில் அமைதியாவும் – ஆக்கபூர்வமாவும் செயல்படக் கூடியவர் அவர். அவரை நான் பாராட்டுகிறேன்.

கலைஞர் பெயரிலான விருதை தலைவர் கலைஞர் நூற்றாண்டில் பெற்றிருப்பவர் நம்முடைய அன்புக்குரிய அமைச்சர் – கழகத் துணைப் பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி அவர்கள். 1980-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கருப்பு மீசையோடு கம்பீரமாக அவரை பார்த்தேன். இப்போது வெள்ளை மீசையோடு கம்பீரமாகப் பார்க்கிறேன். அன்று முதல் இன்று வரை உற்சாகம் குறையாமல் கழகத்துக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறவர் நம்முடைய ஐ.பி. அவர்கள். நானும் அவரும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள். என்னைவிட இரண்டு மாதம் மூத்தவர் அவர். கல்லூரி மாணவராக இருந்தபோதே கழகச் செயல்வீரராக செயல்பட்டவர். 20 ஆண்டுகாலமாக மாவட்டச் செயலாளராக இருந்து திண்டுக்கல் மாவட்டத்தை மட்டுமல்ல, தென் மாவட்டங்களையே கழகக் கோட்டையாக மாற்றி அமைத்தவர் அமைச்சர் ஐ.பி. அவர்கள். 7 முறை சட்டமன்ற உறுப்பினர் – 3-ஆவது முறையாக அமைச்சர் என்று அசைக்க முடியாத சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் ஐ.பி. ‘லட்சியவாதி என் தம்பி ஐ.பி.’ என்று தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்டவர். கலைஞர் பெயரிலான விருது பெற்றிருக்க கூடிய இவரை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், ’இவர் கலைஞரின் வெறியர்’ என்பதுதான்.

அடுத்து, பாவேந்தர் பெயரிலான விருதை திருமதி. மலிகா கதிரவன் அவர்கள் பெறுகிறார். கதிரவனும் – மலிகாவும் இணைந்து கழகப் பணியாற்றியவர்கள் என்று தென்காசி வட்டாரத்து மக்களுக்கு நன்றாக தெரியும். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டச் செயலாளராக பணியாற்றிய கதிரவன் அவர்கள் மறைந்த பிறகும் – தன்னுடைய கழகப் பணிகளை தொடர்ந்து ஆற்றி, பாவேந்தர் வழிகாட்டிய புரட்சிப் பெண்ணாக திகழ்பவர்தான் மலிகா அவர்கள். கழக குடும்பத்து மகளிர்களுக்கு ஒரு எடுத்துகாட்டாய்ச் செயல்பட்டு வருகிறவர் தென்காசி மலிகா அவர்கள்.
பேராசிரியர் அவர்கள் பெயரிலான விருதை பெங்களூரைச் சேர்ந்த ராமசாமி அவர்களுக்கு வழங்கி இருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநாடு 1951-ஆம் ஆண்டு சென்னையில் நடந்தபோது அதில் கலந்து கொள்வதற்காக பெங்களூரில் இருந்து வந்தவர் என்ற பெருமைக்கு உரியவர் இவர். கர்நாடக மாநில தி.மு.க.வை வளர்த்தெடுக்க பாடுபட்டவர், பணியாற்றியவர். இன்னும் பணியாற்றிக் கொண்டிருப்பவர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவரையும் அழைத்து கர்நாடக மாநிலத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தி, கழகப் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டவர். இன்னொரு மாநிலத்தில் கழகம் வளர்ப்பது எவ்வளவு சிரமம் என்று எல்லோருக்கும் தெரியும். அதை சிரமமாக நினைக்காமல் சிறப்பாக செய்து காட்டியவர் ராமசாமி அவர்கள்.

விருதுகள் பெற்றுள்ள அனைவரையும் தலைமைக் கழகத்தின் சார்பில் மட்டுமில்ல, தனிப்பட்ட முறையிலும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன், போற்றுகிறேன். உங்களது ரத்தத்தால், வியர்வையால், தியாகத்தால், தொண்டால் வளர்ந்த இயக்கம் இது. உங்களுக்கு விருதுகள் தருவது மூலமாக நாங்கள் எங்கள் நன்றியை காட்டுகிறோமே தவிர – உங்கள் தொண்டுக்கு பரிசு வழங்குகிறோம் என்று பொருள் இல்லை. உங்கள் உழைப்பு விலைமதிக்க முடியாதது. உங்கள் தொண்டு அளவிட முடியாதது. இத்தோடு உங்கள் பொறுப்பும், கடமையும் முடிந்துவிடவில்லை. எங்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டுங்கள். இன்றைய இளைஞர்களை வழிநடத்துங்கள் என்று விருதாளர்கள் அனைவரையும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
ஏன் என்றால், மிக மிக முக்கியமான காலக்கட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தியாவில் ஜனநாயகத்தைக் காக்கின்ற போர்க்களத்தை நோக்கிய பயணத்திற்கிடையே இந்த முப்பெரும் விழாவை நாம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.

1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் உதயம் ஆனது. 75 ஆண்டுகளாக தமிழ்ச் சமுதாயத்தின் காவல் அரணாக கழகம் செயல்பட்டு வருகிறது. 1967-ஆம் ஆண்டு முதன் முதலாக நாம் ஆட்சிக்கு வந்தோம். 1971, 1989, 1996, 2006, 2021-என்று மொத்தம் ஆறு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வருகிறோம்.

ஒரு பக்கம் ஆட்சி – இன்னொரு பக்கம் கட்சி இரண்டின் மூலமாகவும் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களைவிட தலைசிறந்த மாநிலமாக மாற்றிக்கொண்டு வருகிறோம். அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம். இடையிடையே கொள்கையற்ற அ.தி.மு.க. கூட்டத்தின் ஆட்சி வந்து தமிழ்நாட்டைச் சீரழித்தாலும் – அதையும் திருத்தி – தமிழ்நாட்டை வளர்த்தெடுத்து வருகிறோம்.
இன்றைக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி – தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி – தமிழினத்தின் வளர்ச்சி – பலருக்கும் பொறாமை ஏற்படுத்தும் வளர்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாடு என்ற மாநிலத்தை – அதற்கான உரிமைகளை சிதைப்பது மூலமாக, நம்முடைய மாநில மக்களின் வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார்கள். அதைத்தான் பட்டவர்த்தனமாக பாரதீய ஜனதா கட்சி செய்துகொண்டு வருகிறது.

ஜி.எஸ்.டி. மூலமாக மாநில உரிமையை பறித்தார்கள். ஒரு மாநில அரசை நடத்துவதற்கு மிக முக்கியமான நிதி ஆதாரம் என்பது வரி வருவாய்தான். அந்த வரி வருவாயைக் கபளீகரம் செய்ததன் மூலமாக மாநில அரசை செயல்பட விடாமல் முடக்குகிறார்கள். மக்களுடன் நேரடியான தொடர்பைக் கொண்டது மாநில அரசுகள்தான். மக்களுக்கு தேவையான கல்வி – சுகாதாரம் – குடிநீர் – சாலை வசதிகள் – கடன்கள் – மானியங்கள் – பெண்கள் முன்னேற்றம் – விளிம்புநிலை மக்களுக்கான உதவிகள் – இவை எல்லாவற்றையும் வழங்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது. இதை செய்து தருவதற்கு நிதி வேண்டாமா? அப்படிப்பட்ட நிதி ஆதாரங்களை கிடைக்கவிடாமல் செய்வதற்காகவே ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்து நிதி வருவாய் வாசல்களை அடைத்தார்கள். நான் கேட்பது, நிதியை வசூல் செய்கிறீர்களே, அதை முறையாகப் பிரித்துக் கொடுக்கிறீர்களா அதுவும் இல்லை.

அதேபோல கல்வி மிக முக்கியமான ஒரு துறை. ஒவ்வொரு மாநில அரசும் – அங்கு வாழும் பெரும்பான்மை மக்களின் பண்பாடு, அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியை வழங்கும். புதிய கல்விக் கொள்கை – என்று சொல்லி, பொதுவான கல்வி முறை என்ற பெயரில், நமது மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள். ஒன்றிய அரசாங்கம் சொல்லும் கல்வி வளர்ச்சியை – தமிழ்நாடு எப்போதோ எட்டிவிட்டது. கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்குவதற்கான முயற்சிதான் அவர்கள் கொண்டு வரும் கல்விக் கொள்கை.

நீட் தேர்வைப் பற்றி சொல்லவே அவசியமில்லை. மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவைச் சிதைப்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் நீட் தேர்வு. லட்சக்கணக்கில் செலவு செய்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். சில தனியார் கோச்சிங் செண்டர்களின் லாபத்துக்காகவே இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அனிதா முதல் ஜெகதீஸ்வரன் வரை ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்திருக்கிறார்கள். இத்தகைய உயிரிழப்புகள் இப்போது வட மாநிலங்களிலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த 14-ஆம் தேதி ஜார்கண்டைச் சேர்ந்த மாணவி, ராஜஸ்தானில் தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வுக்கு படிப்பதற்காக வந்தவர் அவர். ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் கடந்த ஆண்டு, 22 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இத்தனை தற்கொலைகள் நடக்கிறதே, இதற்கான காரணத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆராய்ந்ததா? இரக்கமற்ற அரசாகத்தானே மோடி அரசு இருக்கிறது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் எத்தளை வாக்குறுதி கொடுத்தார்கள்? நிறைவேற்றினார்களா? நேற்று ஒரு தாய்மார் கேட்கிற மாதிரி, போனில் மீம்ஸ் பார்த்தேன். ”எங்கள் முதல்வர் சொன்ன 1000 ரூபாய் வந்தாச்சு… பிரதமர் சொன்ன 15 லட்சம் என்னாச்சு?” – இது வைரல் ஆகிவிட்டது.

நாம் பிரதமரைப் பார்த்து என்ன கேட்கிறோம்? இதைச் செய்யுங்கள் என்று… அதைச் செய்யுங்கள் என்று புதிதாக எந்த வாக்குறுதியையும் கேட்கவில்லை. புதிதாக எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியிருக்கீர்களா? இல்லையா என்றுதான் கேட்கிறேன்.
தமிழ்நாட்டுக்கு வந்து பல வாக்குறுதிகளை கொடுத்தார். அந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றினாரா? இல்லை. உதாரணத்துக்கு ஒன்று கேட்கிறேன். மதுரையில எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்போம் என்று 2015-ஆம் ஆண்டு சொன்னார்கள். இப்போதுதான் டெண்டரே விட்டிருக்கிறார்கள். இவை அனைத்தையும் யாரும் நினைவுபடுத்திவிடக் கூடாது என்றுதான் மற்ற பிரச்சினைகளைக் கிளப்பிக் குளிர்காயப் பார்க்கிறார்கள்.

சரி என்ன சாதனை இந்த ஒன்பது வருடத்தில் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால், 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது சமையல் சிலிண்டர் விலை 420 ரூபாய். இதை 1100 ரூபாய்க்கு உயர்த்தியதுதான் மோடியின் சாதனை. மூன்று மடங்கு உயர்த்தினார்கள். தேர்தல் வருவதால் கண்துடைப்பு நாடகமாக இப்போது 200 ரூபாயை மட்டும் குறைத்திருக்கிறார்கள். இதை மக்கள் நம்புவார்களா? 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வரும்போது பெட்ரோல் ஒரு லிட்டர் 71 ரூபாய். இப்போது ஒரு லிட்டர் 102 ரூபாய். ஒன்றிய அரசின் வரியை மூன்று மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வரும்போது டீசல் ஒரு லிட்டர் 55 ரூபாய். இப்போது ஒரு லிட்டர் 94 ரூபாய். ஒன்றிய அரசின் வரியை ஏழு மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 100 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறது பா.ஜ.க. அரசு. இவர்கள் ஆட்சிக்கு வரும்போது இந்தியாவுக்கு இருந்த கடன் 55 லட்சம் கோடி ரூபாய்தான். அது, இந்த 9 ஆண்டுகாலத்தில் 155 லட்சம் கோடி ரூபாய் ஆகிவிட்டது. பெரிய நிறுவனங்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் பணத்தை வாராக் கடன் என்று சொல்லி தள்ளுபடி செய்திருக்கிறது பா.ஜ.க. அரசு. பணவீக்கம் அதிகமாகி இருக்கிறது. இப்படி வேதனையை மட்டுமே மக்களுக்குத் தந்த பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

அண்மையில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கையின்படி மட்டும் 7.50 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் அதிகம் சிக்கி இருப்பது சி.பி.ஐ. அதிகாரிகள்தான் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமே புள்ளிவிவரம் கொடுத்திருக்கிறது. இத்தகைய ஊழல் முகத்தை மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த ஊழல் முகத்தைக் கிழித்தெறிய வேண்டும். இதுதான் நம் முன் இருக்கும் முக்கியக் கடமை. பா.ஜ.க.வின் ஊழல் முகத்தைப் பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி ஆக வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நமது கூட்டணிதான் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறப்போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் சந்தேகமே இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் நாம் வெற்றி பெற்றால் போதாது. இந்தியா முழுமைக்கும் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால் 15 மாதத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டி எழுப்ப முடியுமா? முடியாதா? நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா? முடியாதா? தமிழ்நாட்டுக்குத் தேவையான ரயில்வே திட்டங்களை ஏராளமாகக் கொண்டு வர நம்மால் முடியும். புதிய விமான நிலையங்கள் – மெட்ரோ ரயில்களை இயக்க முடியும். இவை எல்லாமே நம்முடைய இந்தியா கூட்டணி ஆட்சி அமையுமானால் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியும். இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித் தர நம்மால் முடியும்.
இங்கு நாம் அமல்படுத்தி வரும் திராவிட மாடல் திட்டங்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும். இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. இந்தியாவைக் காக்க இந்தியா கூட்டணியை வெல்ல வைக்க வேண்டியது நம்முடைய அரசியல் கடமை மட்டுமல்ல! கொள்கைக் கடமையும்தான்!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி என்பது நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 இடங்களையும் வெற்றி பெற்றே தீருவோம் என்பதுதான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா ஆண்டில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி என்பது இந்திய நாடாளுமன்றத்தில் ஆட்சி அதிகாரத்தை செலுத்தும் கூட்டணிக் கட்சியாக நம்முடைய இயக்கத்தை உயர்த்துவோம் என்பதுதான்.

அன்பு உடன்பிறப்புகளே! உங்களின் ஒருவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அழைக்கிறேன். நாற்பதுக்கு நாற்பது வெல்வோம்! இந்தியாவைக் காப்போம்! இந்தியா கூட்டணி வெற்றிக்கு முழுமையாகப் பாடுபடுவோம்! என்று இந்த வேலூர் மண்ணில் நடைபெறும் முப்பெரும் விழாவில் உறுதியேற்போம்… உறுதியேற்போம்… உறுதியேற்போம்… நன்றி, வணக்கம்!

The post ’’இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0/feed/ 0
’’அண்ணா பற்றிய ஆச்சர்யமான தகவல்கள்..!’’ #115அண்ணா ஸ்பெஷல் https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25be-%25e0%25ae%25aa%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2586%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be/#respond Fri, 15 Sep 2023 03:58:09 +0000 https://madrasmurasu.com/?p=6299 அப்பாவியாகத் தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன்! ♦ சி.என்.ஏ. என்ற மூன்றெழுத்தால் அறிமுகமான அண்ணாதான், தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் ‘தளபதி’. பெரியாரின் சீடராக வலம் வந்தபோது அப்படித்தான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு எல்லோருக்கும் அவர் ‘அண்ணா’தான்! ♦ பள்ளியில் படிக்கும்போது பொடி போட்டுப் படித்தார். கல்லூரிக் காலத்தில் வெற்றிலை, பாக்கு பயின்றார். வெளியில் எச்சில் துப்ப, வகுப்பில் ஜன்னல் ஓரத்து இருக்கையில் இருப்பார். இந்தத் தொட்டில் […]

The post ’’அண்ணா பற்றிய ஆச்சர்யமான தகவல்கள்..!’’ #115அண்ணா ஸ்பெஷல் first appeared on Madras Murasu.

]]>
அப்பாவியாகத் தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன்!
♦
சி.என்.ஏ. என்ற மூன்றெழுத்தால் அறிமுகமான அண்ணாதான், தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் ‘தளபதி’. பெரியாரின் சீடராக வலம் வந்தபோது அப்படித்தான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு எல்லோருக்கும் அவர் ‘அண்ணா’தான்!
♦
பள்ளியில் படிக்கும்போது பொடி போட்டுப் படித்தார். கல்லூரிக் காலத்தில் வெற்றிலை, பாக்கு பயின்றார். வெளியில் எச்சில் துப்ப, வகுப்பில் ஜன்னல் ஓரத்து இருக்கையில் இருப்பார். இந்தத் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை இருந்தது!
♦
”என் வாழ்க்கையில் நான் கண்டதும்கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்” என்று அறிவித்திருந்தார். அவரைவிட்டுப் பிரிந்து, தனிக் கட்சி கண்டபோதும் தலைமை நாற்காலியை பெரியாருக்காகக் காலியாகவே வைத்திருந்தார். அண்ணா காலமானது வரை தி.மு.க-வுக்குத் தலைவர் அறிவிக்கப்படவே இல்லை!
♦
இரண்டு மயில்கள், இரண்டு மான்கள், புறாக்கள், நாய் ஆகியவற்றைக் கடைசி வரை விரும்பி வளர்த்தார். அவர் இறந்த ஒரு வாரம் கழித்து அவரது படுக்கையைச் சுற்றி வந்து அந்த நாய் இறந்தது. பிற விலங்குகளைப் பராமரிக்கக் கொடுத்துவிட்டார்கள்!
♦
அண்ணா – ராணி தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, தனது அக்கா மகள் சௌந்தரியின் மகன்களான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகிய நால்வரையும் தத்து எடுத்து வளர்த்தார்!
♦
தினமும் துவைத்துச் சுத்தப்படுத்திய வேட்டி – சட்டை அணிய வேண்டும் என்று நினைக்க மாட்டார். ஒரே சட்டையை இரண்டு மூன்று நாட்கள் போடுவார். முதலமைச்சரான பிறகுதான் ‘வெள்ளையான சட்டை’ அணிந்தார்!
♦
தலை சீவ மாட்டார். கண்ணாடி பார்க்க மாட்டார். மோதிரம் அணிந்தது இல்லை. கைக்கடிகாரம் அணிய மாட்டார். ”என்னை காலண்டர் பார்க்கவைத்து, கடிகாரம் பார்க்கவைத்து சூழ்நிலைக் கைதியாக்கிவிட்டதே இந்த முதலமைச்சர் பதவி” என்று சொல்லிக்கொண்டார்!
♦
காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம், காஞ்சிபுரத்தில் ஒரு வீடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு – மூன்றும்தான் அண்ணா வைத்துவிட்டுப் போன சொத்துக்கள்!
♦
முதலமைச்சராக இருந்து அவர் இறந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய், மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் அவரது கணக்கில் இருந்தன!
♦
நெசவு மற்றும் தையல் தொழில் நன்றாகத் தெரியும். ”என்னுடைய அளவுக்கு மீறிய பொறுமைக்கு இதுதான் காரணம். நூல் அறுந்துவிடக் கூடாது என்பதற்காக நெசவாளியானவன் எப்போதும் இப்படித்தான் கவனமாகவும் பொறுமையாகவும் இருப்பான்” என்பார்!
♦
புற்றுநோய் பாதிப்பில் இருந்தபோது, சென்னை மருத்துவமனையில் இருந்து வேலூர் சி.எம்.சி-க்கு அவரைக் கொண்டுசெல்லும்போது தடுத்தார். ”நாமே அரசாங்க மருத்துவமனையை மதிக்காததுபோல ஆகிவிடும்” என்றார்!
♦
அண்ணா பல மணி நேரங்கள் பேசிய கூட்டத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. ஒரு கூட்டத்தில் ஐந்து நொடிகள்தான் பேசினார். ”காலமோ சித்திரை… நேரமோ பத்தரை… உங்களுக்கோ நித்திரை… போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை” என்பதே அந்தப் பேச்சு!
♦
நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது, சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழித் திட்டத்தை சட்டமாக்கியது… இவை மூன்றும் அண்ணாவின் சாதனைகள்!
♦
தி.மு.க ஆட்சியைப் பிடித்தால் தான் தான் முதலைமைச்சர் என்ற யோசனைகூட இல்லாமல், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குப் போடியிட்டவர் அண்ணா!
♦
உலகம் பழையதும் புதியதும், நிலையும் நினைப்பும், நாடும் ஏடும், நல்ல தீர்ப்பு, ஆற்றங்கரையோரம் என்று தலைப்பு கொடுத்து அதிகம் பேசியது இவர்தான். மைக் முன்னால் நின்றதும் தலைப்பு கொடுப்பார்கள். அப்படியும் பேசியிருக்கிறார். இரண்டு அணா டிக்கெட் வசூலும் இவரது பேச்சைக் கேட்க வசூலித்திருக்கிறார்கள்!
♦
‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’, ‘கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு’, ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’, ‘கடமை-கண்ணியம் -கட்டுப்பாடு’, ‘எங்கிருந்தாலும் வாழ்க’, ‘மறப்போம் மன்னிப்போம்’, ‘வாழ்க வசவாளர்கள்’, ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’, ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ ஆகிய பிரபலமான வாசகங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை!
♦
தனக்குக் கீழ் இருந்தவர்களை நாவலர், கலைஞர், பேராசிரியர், சொல்லின் செல்வர், சிந்தனைச் சிற்பி, தத்துவ மேதை என்ற பட்டம் சொல்லி அழைத்து வளர்த்துவிடுவார்!
♦
மூர்மார்க்கெட் யுனிவர்ஸல் புக்ஷாப், சென்னை ஹிக்கின்பாதம்ஸ் ஆகிய இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கிலப் புத்தகங்களையும் வாங்கிவிடுவார். ஹிக்கின்பாதம்ஸ் எடுத்த கணக்கெடுப்பின்படி மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ் உடையாரும், அண்ணாவும்தான் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்களாம் அந்தக் காலத்தில்!
♦
பூட்டிய அறைக்குள் தனியாகப் படுக்கப் பயப்படுவார். யாராவது துணைக்கு இருக்க வேண்டும். தூங்கும்போதும் விளக்கு எரிய வேண்டும். காஞ்சிபுரத்தில் குரங்குகள் அதிகமாக இருந்ததால், தன்னைக் குரங்கு கடித்துவிடுமோ என்ற பயம் எப்போதும் இருந்திருக்கிறது!
♦
முதலமைச்சர் ஆனதும், அதுவரை தன்னை எதிர்த்து வந்த பெரியார், காமராஜ், பக்தவத்சலம் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனைகள் பெற்றார்!
♦
தான் வகித்த தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியைச் சுற்று முறையில் பலருக்கும் போக வேண்டும் என்று நினைத்தார். ”தலைமையிடம் அதிகாரம் குவியக் கூடாது. எந்தத் தனி நபரின் செல்வாக்கிலும் இயக்கம் இருக்கக் கூடாது” என்றார்!
♦
‘ஓர் இரவு’ திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் (அதாவது 360 பக்கங்கள்) ஒரே நாள் இரவிலேயே எழுதி முடித்தார்!
♦
எப்போதும் தான் பேச இருக்கும் கூட்டத்துக்குத் தாமதமாகத்தான் வருவார். ”முன்னால் வந்தால் அடுத்தவரைப் பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள். அதனால், ஊருக்கு வெளியில் நின்று, அனைவர் பேச்சையும் கேட்டுவிட்டுக் கடைசியில் வருகிறேன்” என்பார்!
♦
அண்ணா மறைவின்போது திரண்ட கூட்டம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம். 1806 பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன், 1907 எகிப்து குடியரசுத் தலைவர் கமால் அப்துல் நாசர் ஆகியோருக்குக் கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது கின்னஸ்!
♦
போப்பாண்டவரைச் சந்தித்த அண்ணா, கோவா விடுதலைக்குப் போராடி போர்ச்சுக்கல் சிறையில் இருக்கும் மோகன் ரானடேவை விடுதலை செய்யக் கேட்டார். விடுதலையான ரானடே, அண்ணாவுக்கு நன்றி சொல்ல சென்னை வந்தார். ஆனால், அண்ணா இறந்துபோயிருந்தார். இப்படி அண்ணாவின் வாழ்க்கை, தூரத்தில் இருப்பவர்களுக்காகப் பிரதிபலன் பார்க்காததாகவே இருந்தது!

The post ’’அண்ணா பற்றிய ஆச்சர்யமான தகவல்கள்..!’’ #115அண்ணா ஸ்பெஷல் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be/feed/ 0
’’இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4/#respond Mon, 11 Sep 2023 05:06:15 +0000 https://madrasmurasu.com/?p=6231 ’’தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் அந்த அறிவிப்பில் மேலும் கூறியுள்ளதாவது: தியாகி இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், இம்மானுவேல் சேகரனாரின் மகள் சூரிய சுந்தரி பிரபா […]

The post ’’இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
’’தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சரின் அந்த அறிவிப்பில் மேலும் கூறியுள்ளதாவது:

தியாகி இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், இம்மானுவேல் சேகரனாரின் மகள் சூரிய சுந்தரி பிரபா ராணி மற்றும் அன்னாரது பேரன் சக்கரவர்த்தி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இக்கோரிக்கையினை வலியுறுத்தினர்.

தியாகி இம்மானுவேல் சேகரனார் 1924-ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942-இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும், ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், தியாகி இம்மானுவேல் சேகரனார் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

The post ’’இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4/feed/ 0
”காந்தியின் லட்சியத்தை பின்பற்றுவது முக்கியம்..!” ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b2%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%25aa https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa/#respond Sat, 09 Sep 2023 09:04:03 +0000 https://madrasmurasu.com/?p=6209 ஜி20 உச்சிமாநாடு மனித நேயத்தை மையமாகக் கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் ஒரு புதிய பாதையை வகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், லட்சியமிக்கதாகவும், தீர்க்கமானதாகவும், உலகளாவிய தெற்கின் வளர்ச்சி, கவலைகளுக்கு தீவிரமாக குரல் கொடுக்கும் செயல் சார்ந்ததாகவும் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார். அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காந்தியின் நோக்கத்தை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான மனித […]

The post ”காந்தியின் லட்சியத்தை பின்பற்றுவது முக்கியம்..!” ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
ஜி20 உச்சிமாநாடு மனித நேயத்தை மையமாகக் கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் ஒரு புதிய பாதையை வகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், லட்சியமிக்கதாகவும், தீர்க்கமானதாகவும், உலகளாவிய தெற்கின் வளர்ச்சி, கவலைகளுக்கு தீவிரமாக குரல் கொடுக்கும் செயல் சார்ந்ததாகவும் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காந்தியின் நோக்கத்தை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான மனித நேயத்தை மையமாகக் கொண்ட வழிக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறினார்.

‘ஒரே பூமி’, ‘ஒரே குடும்பம்’ மற்றும் ‘ஒரே எதிர்காலம்’ குறித்த அமர்வுகளுக்குத் தலைமை தாங்குவதாகவும், வலுவான, நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சீரான வளர்ச்சியை மேம்படுத்துவது உள்பட உலக சமூகத்திற்கு முக்கிய அக்கறை கொண்ட பல பிரச்சினைகளை உள்ளடக்குவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்காக பல தலைவர்கள் மற்றும் தூதுக்குழுத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவதையும் அவர் குறிப்பிட்டார்.

குடியரசுத்தலைவர் செப்டம்பர் 9 ஆம் தேதி தலைவர்களுக்கு இரவு விருந்து அளிப்பார் என்று பிரதமர் மேலும் கூறினார். செப்டம்பர் 10 அன்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்துவார்கள். அதே நாளில் நிறைவு விழாவில், ஜி 20 தலைவர்கள் ஆரோக்கியமான ‘ஒரே பூமி’ க்கான ‘ஒரே குடும்பம்’ போன்ற நிலையான மற்றும் சமத்துவமான ‘ஒரே எதிர்காலத்திற்கான’ தங்கள் கூட்டு பார்வையை பகிர்ந்து கொள்வார்கள்.

சமூக ஊடகத்தில் இதனைப் பகிர்ந்து, பிரதமர் கூறியிருப்பதாவது:

“2023 செப்டம்பர் 09-10 தேதிகளில் புது தில்லியின் புகழ்பெற்ற பாரத மண்டபத்தில் 18 வது ஜி20 உச்சிமாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. இந்தியா நடத்தும் முதல் ஜி20 உச்சி மாநாடு இதுவாகும். அடுத்த இரண்டு நாட்களில் உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்க்கிறேன்.

புதுதில்லி ஜி20 உச்சி மாநாடு மனித நேயத்தை மையமாகக் கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் ஒரு புதிய பாதையை வகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது என் உறுதியான நம்பிக்கை.

The post ”காந்தியின் லட்சியத்தை பின்பற்றுவது முக்கியம்..!” ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa/feed/ 0
’’ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும்..!’’ முதல்வர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2592%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b1 https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1/#respond Sat, 09 Sep 2023 06:47:21 +0000 https://madrasmurasu.com/?p=6203 ’’தமிழ்நாடும் கேரளமும் நாட்டைக் காக்கின்ற முயற்சியில் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும்’’ என்று சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 8.9.2023 அன்று சென்னையில் நடைபெற்ற கேரள மீடியா அகாடமியின் “மீடியா மீட் 2023” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது: என்ட பிரியப்பட்ட மலையாள சகோதரர்களுக்கு ஸ்டாலின்ட சிநேகம் நிறைஞ்ச நமஸ்காரம். சில நாட்களுக்கு முன்பு, ஓணம் திருநாளைக் கொண்டாடிய நமது மலையாள மொழிச் […]

The post ’’ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும்..!’’ முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
’’தமிழ்நாடும் கேரளமும் நாட்டைக் காக்கின்ற முயற்சியில் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும்’’ என்று சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 8.9.2023 அன்று சென்னையில் நடைபெற்ற கேரள மீடியா அகாடமியின் “மீடியா மீட் 2023” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:

என்ட பிரியப்பட்ட மலையாள சகோதரர்களுக்கு ஸ்டாலின்ட சிநேகம் நிறைஞ்ச நமஸ்காரம். சில நாட்களுக்கு முன்பு, ஓணம் திருநாளைக் கொண்டாடிய நமது மலையாள மொழிச் சொந்தங்களுக்கு, மலையாளத்தில் என்னுடைய வாழ்த்துகளைச் சொன்னேன். இதற்கு முன்பு கேரளாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் நான் மலையாளத்தில் பேசியிருக்கிறேன்.

நாம் ஒரே மொழி குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அதாவது திராவிட மொழி குடும்பத்தை சார்ந்தவர்கள். சமத்துவத்திற்கு எதிராக இருக்கக்கூடியவர்களுக்கு இன்றைக்கு ‘திராவிடம்’ என்று சொல் ஒரு எரிச்சலாகவே இருக்கிறது.

கேரள அரசின் கீழ் இயங்கக்கூடிய தன்னாட்சி பெற்ற நிறுவனமாக கேரளா மீடியா அகாடமி செயல்பட்டு வருகிறது. சார்புத் தன்மை இல்லாத மதச்சார்பின்மையை போற்றுகின்ற ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்கு இந்த அகாடமி பங்காற்றி வருகிறது. இன்றைய நிலைமையில் இது மிகவும் தேவையான ஒன்று. ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும். அந்த வகையில் மிக சிறப்பான நீண்ட அனுபவம் மிக்க ஊடகவியலாளர்களால் நிர்வகிக்கப்படும் இந்த அகாடமி எதிர்காலத்திலும் அத்தகைய ஊடகவியலாளர்களை உருவாக்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கேரள மீடியா அகாடமி சார்பில் நடைபெறும் இந்த சிறப்பான விழாவில் பங்கெடுத்து உங்களை எல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்கு நான் பெருமை அடைகிறேன்.

இந்த விழாவில் பங்கெடுக்க வேண்டும் என்று, அருமை நண்பர் அருண்ராம் என்னை அழைத்தார்கள். தலைவர் கலைஞர் -க்கும் நெருக்கமான பத்திரிக்கையாளர்களில் ஒருவராக இருந்தவர் நம்முடைய அருமையான நண்பர் அருண்ராம். அதேபோல் என் மீதும் அன்பு காட்டக் கூடியவர்தான் அருண்ராம். அந்த வகையில் அவரது அழைப்பை ஏற்று இங்கு நான் வருகை தந்துள்ளேன்.

ஏசியாநெட்டின் நிறுவனர் சஷி குமார் இங்கு வருகை தந்துள்ளார். நடிப்பு – திரைப்படத் தயாரிப்பு – திரைக்கதை எழுதுதல் எனப் பன்முக ஆற்றலைப் பெற்றவர் இவர், இப்போது சென்னை ஆசிய இதழியல் கல்லூரியின் தலைவராக இருக்கிறார்.
மரியாதைக்குரிய மூத்த பத்திரிக்கையாளர் பி.ஆர்.பி.பாஸ்கர் எழுதிய ‘THE CHANGING MEDIASCAPE’ என்ற முக்கியமான நூலை வெளியிடுவதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன். அவருக்கு வயது 91.

70 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் செயல்பட்டு வருவதைப் பார்க்கும் போது எழுத்தின் மீதும், ஊடகத் துறையின் மீதும், அதையும் தாண்டி இந்த நாட்டு மக்கள் மீதும் அவர் கொண்டுள்ள உண்மையான அக்கறையை நமக்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது. தி இந்து பத்திரிக்கையில் 1952-ஆம் ஆண்டு சேர்ந்து அங்கு ஆறு ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.

* தி ஸ்டேட்ஸ்மேன் –
* பேட்ரியாட்-
* யு.என்.ஐ செய்தி நிறுவனம்
* தி டெக்கான் ஹெரால்டு
* ஏசியா நெட் – எனப் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

செய்தி நிறுவனங்களுக்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அவர் பணியாற்றி இருக்கிறார். உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்றும் இருக்கிறார். எனவே இந்த நூலை படித்துப் பார்த்தால் உலகம் முழுக்க பயணம் செய்யும் அனுபவம் நமக்கு ஏற்படும்.

அச்சு ஊடக காலம் தொட்டு ஊடகங்களின் இன்றைய மாற்றம் வரை அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை இந்த நூலில் பதிவு செய்துள்ளார் பாஸ்கர். அவருடைய கட்டுரைகள், செய்திகளுக்கு பின்னால் இருக்கும் ஆர்வம், அணுகுமுறை, தெளிவான சிந்தனை ஆகியவை இன்றைய பத்திரிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய பாடமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

அவசர நிலைக்காலம் குறித்த அவரது பதிவுகள் மிக முக்கியமானதாக உள்ளது. மிசாவில் கைதாகி ஓராண்டு காலம் சென்னை சிறையில் இருந்தவன் நான். எனவே அந்த உரிமையோடு இதை நான் இங்கே குறிப்பிட்டு காட்டியிருக்கிறேன்.
மனித உரிமைகள் மீதான பாஸ்கர் ஆர்வம் இதன்மூலம் வெளிப்படுகிறது. இந்த துறைக்கு தான் வந்த காலத்தில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறைவாக இருந்தது குறித்து பதிவு செய்துள்ளார். ஆனால் இன்று ஏராளமான பெண் பத்திரிக்கையாளர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதையும் பார்க்கிறோம்.

மேலும், தலித் பத்திரிக்கையாளர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருக்கிறது என்ற அவரது ஆதங்கமானது சமூகநீதிக் குரலாக வெளிப்பட்டுள்ளது. இது ஓரளவு உண்மைதான்.

இதனை உணர்ந்துதான் ஒடுக்கப்பட்ட சமூகத்து இளைஞர்கள், அரசுப் பள்ளிகளில் படித்தவர்களில் இதழியல் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவசமாக இதழியல் பயிற்சியை லயோலா கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு அரசு வழங்கியது.
‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சியின் நோக்கத்தை நான் சொல்லி வருகிறேன் என்றார். சமூகநீதி எந்தளவுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் – மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அமல்படுத்திய பிறகும் சமூகநீதிக்கு எத்தகைய தடைகள் விழுந்தன என்பதையும் இந்நூலில் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

இத்தகைய சமூக நீதிக்காகத்தான் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை நான் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த நூலில் திராவிட முன்னேற்றக் கழகம் பற்றி ஏதாவது வருகிறதா என்பதை ஆர்வத்துடன் தேடிப் பார்த்தேன். பத்திரிக்கையாளர் பாஸ்கரிடம் 1957-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி கேட்டுள்ளார்…

“நீங்கள் தென்னகத்தில் இருந்து வருகிறீர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.

“1957 தேர்தலில் திமுக சிறப்பாக செயல்பட்டது. அவர்களது பணி தேர்தலோடு நின்றுவிடவில்லை. அதன் தொண்டர்கள் இப்போதும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். இந்த வேகத்தில் தொடர்ந்து செயல்பட்டால், இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று சொல்லி இருக்கிறார் பாஸ்கர்.

அவர் சொன்னது போல பத்து ஆண்டுகளில் – அதாவது 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. திமுக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று பாஸ்கர் சொன்னதை அந்த அதிகாரி ரசிக்கவில்லையாம். பேரறிஞர் அண்ணா, திராவிட நாடு கேட்டுக் கொண்டிருந்த காலம் அது. அதனை மனதில் வைத்து, ‘தெற்கு பிரிந்து விடும் என்று சொல்கிறீர்களா?” என்று அவர் கேட்டிருக்கிறார். அந்த சிந்தனையிலும் மாறுதல் வரும் என்றும் பாஸ்கர் சொல்லி இருக்கிறார்கள். அவரது தொலைநோக்கு சிந்தனையை இதன் மூலமாக அறியலாம்.

இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக, இந்தியாவின் பாதுகாப்பே முக்கியம் எனப் பேரறிஞர் அண்ணா, திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டார்கள்.
அந்நிய நாட்டால் இந்தியாவுக்கு ஆபத்து வந்த காலம் அது. வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும் என்று விளக்கம் அளித்து இந்த நிலைப்பாட்டை எடுத்தார் பேரறிஞர் அண்ணா. இதே போன்றுதான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு இன்று ஆபத்து வந்திருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது. மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்திருக்கிறது. சமூகநீதியை சிதைக்கப் பார்க்கிறார்கள். இவை அனைத்தையும் சிதைப்பதன் மூலமாக இந்தியாவை சிதைக்கப் பார்க்கிறார்கள். இதனை அரசியல் தளத்தில் அரசியல் இயக்கங்களாகிய நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

இந்தியாவைக் காப்பாற்றும் பணியில் ஊடகங்களும் தங்களது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தபிறகு ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் என்னுடைய வேதம்’ என்று சொல்லி நாடாளுமன்றத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் வணங்கியவர் பிரதமர். இப்போது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்கிறார். இதனை நாட்டிலுள்ள அனைத்து மக்களும் உணர்ந்து இந்த போக்கை எதிர்க்க வேண்டும்.

இங்கு கூடியிருக்கும் எனது மலையாள சொந்தங்களுக்கும் கேரளத்தில் வாழக்கூடிய சொந்தங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது, தமிழ்நாடும் கேரளமும் நாட்டைக் காக்கின்ற முயற்சியில் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும். அதேபோல் ஊடகங்களும், பொய்பரப்புரைகளுக்கும் திசை திருப்புபவர்களுக்கும் முக்கியத்துவம் தராமல் விடுதலைப் போராட்டக் காலத்தில் செயல்பட்டதைப் போல மீண்டும் செயல்பட வேண்டும் என்று கேட்டு இந்த சிறப்பான நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்கின்ற வாய்ப்பினை பெற்றமைக்காக நான் மீண்டும் ஒருமுறை எனது இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தை தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்.

The post ’’ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும்..!’’ முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1/feed/ 0
’’மோடி கேள்விக்கு மோகன் பகவத் பதில்..!” முரசொலி https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%2595%25e0%25af%2587%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/#respond Sat, 09 Sep 2023 04:51:39 +0000 https://madrasmurasu.com/?p=6195 மோடி கேள்விக்கு மோகன் பகவத் பதில் என்று முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது. மணிப்பூருக்கு போய் பார்க்காத -– அதானி ஊழல்கள் பற்றி பதில் சொல்லாத -– 7.5. லட்சம் கோடி ரூபாய் முறைகேடுகள் பற்றி விளக்கம் அளிக்காத -–- பிரதமர் நரேந்திரமோடி, சனாதனம் பற்றி வாயைத் திறந்துள்ளார். ஒன்றிய அமைச்சர்களுக்கு சனாதன கதாகாலட்சேபம் நடத்த உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அமைச்சர்கள் பேசுவதற்கு தமிழில் நிறைய வீடியோக்கள் இருக்கிறது. அதனை யாராவது மொழி பெயர்த்து அனுப்பி வைக்கலாம். சனாதனம் குறித்து […]

The post ’’மோடி கேள்விக்கு மோகன் பகவத் பதில்..!” முரசொலி first appeared on Madras Murasu.

]]>
மோடி கேள்விக்கு மோகன் பகவத் பதில் என்று முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

மணிப்பூருக்கு போய் பார்க்காத -– அதானி ஊழல்கள் பற்றி பதில் சொல்லாத -– 7.5. லட்சம் கோடி ரூபாய் முறைகேடுகள் பற்றி விளக்கம் அளிக்காத -–- பிரதமர் நரேந்திரமோடி, சனாதனம் பற்றி வாயைத் திறந்துள்ளார். ஒன்றிய அமைச்சர்களுக்கு சனாதன கதாகாலட்சேபம் நடத்த உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அமைச்சர்கள் பேசுவதற்கு தமிழில் நிறைய வீடியோக்கள் இருக்கிறது. அதனை யாராவது மொழி பெயர்த்து அனுப்பி வைக்கலாம்.

சனாதனம் குறித்து பிரதமர் மோடி எழுப்பும் கேள்விகளுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் விரிவாக விளக்கமாக பதில் அளித்துவிட்டார். “இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி ரீதியிலான பாகுபாடு இருக்கிறது” என்பதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஒப்புக்கொண்டு விட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசும் போது, “சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த நிலை தொடர்கிறது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும்வரை, இட ஒதுக்கீடு போன்ற சில சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். எனவே, இத்தகைய பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதனை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும்” என்றும் மோகன் பகவத் சொல்லி விட்டார். ஒன்றிய அமைச்சர்கள், மோகன் பகவத் பேச்சைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

On reservations, RSS chief Mohan Bhagwat says, “We kept our own fellow human beings behind in the social system…We did not care for them, and this continued for almost 2,000 years…Until we provide them equality, some special remedies have to be done…Reservations are one of them. Reservations should continue till there is such discrimination. The Sangh gives complete support to the reservations provided in the Constitution.” – ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மோகன் பகவத் இப்படி பேசியதும் அவரை இணையத் தளங்களில் திட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ‘நீங்களே இப்படிப் பேசலாமா?’ என்று சனாதனத்தை மறைக்கும் சக்திகள் அவரை விமர்சித்து பதிவுகள் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்கள் பேசியதைத் திரித்தும், ‘சனாதனம் என்றால் ஒற்றுமைதான்’ என்றும் பொய் சொன்ன கூட்டம், இப்போது மோகன் பகவத்தும் அதைச் சொன்னதும் அவரையும் திட்டத் தொடங்கி இருக்கிறது.

இந்தக் கருத்தை மோகன் பகவத் தொடர்ந்து சொல்லி வருகிறார்.

மும்பை ரவீந்தர் மந்திர் வளாகத்தில் நடந்த புனிதர் சிரோன்மணி ரோஹிதாஸின் 647 ஆவது பிறந்த நாளில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சொன்னார்:

“இந்து மதத்தில் சாதிகள் கிடையாது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி வேறுபாடுகள் கிடையாது. மேல் சாதி, கீழ் சாதி என்ற அடிப்படை அற்ற பழக்கத்தை உருவாக்கியவர்கள் பண்டிட்டுகளே” (6.2.2023) என்று பேசினார். உடனே மோகன் பகவத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவரது பேச்சை பூரி சங்கராச்சாரியார் கண்டித்தார். பீகார் மாநிலம் முசாபர்பாத் நீதிமன்றத்தில் மோகன் பகவத் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விளக்க அறிக்கை கொடுத்தது. “பண்டிட்டுகள் என்று மோகன் பகவத் குறிப்பிட்டது எந்த ஒரு பிரிவினரையும் அல்ல. ஜாதி படி நிலைகளை ஏற்றுக் கொண்டவர்களைத்தான் அப்படிச் சொன்னார்” என்று விளக்கம் அளித்தார்கள். இவரது பேச்சு முக்கிய இணைய தளங்களிலும் வீடியோவாக உள்ளது.

“நாட்டில் அனைவரும் சாதி வர்ண பேதங்களை மறந்து விட வேண்டும். யாரேனும் இதைப்பற்றிக் கேட்டால் சமுதாய நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் வர்ண மற்றும் சாதி அமைப்புகள் கடந்த கால விஷயம் எனவும், அதை அனைவரும் மறந்து விட வேண்டும்” என்று 8.10.2022 அன்று மோகன் பகவத் பேசி இருக்கிறார். ( தந்தி டி.வி.)

டாக்டர் மதன் குல்கர்னி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் ரேணுகா போகரே ஆகியோர் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நாக்பூரில் நடந்தது. அப்போது பேசிய மோகன் பகவத், “இப்போது யாராவது சாதி, வர்ணம் குறித்து கேள்வி கேட்டால் அவை கடந்து போனவை, அவைகள் மறக்கப்பட வேண்டும் என்று சொல்லுங்கள். பாகுபாடுகளை உருவாக்கும் அனைத்தும் மறுக்கப்பட்டு, தடுக்கப்பட வேண்டும். பாகுபாடு செய்பவை அனைத்தும் பூட்டப்பட வேண்டும். உலகின் எல்லா இடங்களிலும் முன்னோர்கள் தவறு செய்திருக்கிறார்கள். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல” என்று பேசினார். (8.10.2022)

அகமதாபாத் ஜி.எம்.டி.சி. மைதானத்தில் சமாஜ் சக்தி சங்கம் விழாவில் கலந்து கொண்டு மோகன் பகவத் பேசினார். “நியாயமான மற்றும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்காமல் அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்தை இந்தியா அடைய முடியாது என்று அம்பேத்கர் சொன்னார். அதை அடைய நம் சமூகத்தில் இருக்கும் வேறுபாடுகளை அகற்ற வேண்டும். நாம் கடந்த காலத்தில் ஒற்றுமையான சமூகமாக இருந்தோம். பின்னர் இந்த சாதிகள் மற்றும் வகுப்புகளை உருவாக்கினோம். இது நமக்குள் வேறுபாடுகளை உருவாக்கியது. இந்தச் சூழலை அன்னிய சக்திகள் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த தீய சுழற்சியில் இருந்து நாம் முழுமையாக வெளியே வந்து ஒன்றுபட வேண்டும்” என்று வெளிப்படையாகவே பேசினார் மோகன் பகவத். (14.4.2023)

வர்ண -– சாதி அமைப்புகள் குறித்து மோகன் பகவத் சொன்னதுதான், பிரதமர் மோடிக்கு நமது பதில்கள் ஆகும். இந்த விளக்கத்தை ஒன்றிய அமைச்சர்கள் அனைவரும் உள்வாங்கிக் கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம்.

The post ’’மோடி கேள்விக்கு மோகன் பகவத் பதில்..!” முரசொலி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
’’சனாதன ஒழிப்பு மாநாட்டில் தலைவர்கள் பேசியது என்ன..?’’ https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25a9-%25e0%25ae%2592%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/#respond Thu, 07 Sep 2023 10:17:51 +0000 https://madrasmurasu.com/?p=6182 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2.9.2023 அன்று சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. காலை நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி மாநாட்டைத் தொடங்கிவைத்து எழுச்சியுரையாற்றினார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை ஆற்றினார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சனாதனத்தை ‘அரசியல் களத்தில் முறியடித்தல்’ எனும் தலைப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு: அமைச்சர் க.பொன்முடி தமிழ்நாடு […]

The post ’’சனாதன ஒழிப்பு மாநாட்டில் தலைவர்கள் பேசியது என்ன..?’’ first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2.9.2023 அன்று சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. காலை நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி மாநாட்டைத் தொடங்கிவைத்து எழுச்சியுரையாற்றினார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை ஆற்றினார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சனாதனத்தை ‘அரசியல் களத்தில் முறியடித்தல்’ எனும் தலைப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு:

அமைச்சர் க.பொன்முடி

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி பேசுகையில், “பார்ப்பனர்களை அல்ல, பார்ப்பனி யத்தைதான் எதிர்க்கிறோம். சனாதனத்தை நிலை நிறுத்த ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் குலக்கல்வியை புகுத்துகின்றனர். சனாதனத்திற்கு எதிராகத்தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகலாம் என்ற சட்டம்கொண்டு வரப்பட்டது. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சமத்துவம் ஏற்பட வேண்டும். ஜாதியின் தாக்கம் அனைத்து இடங்களிலும் பரவி இருப்பதை அகற்ற வேண்டும். இளந்தலை முறையினரிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்துள்ளது. சனாதன ஒழிப்பு கருத்துகளை மாணவர்கள், இளைஞர்களிடம் படைப்பாளிகள் கொண்டு சேர்க்க வேண்டும். சனா தனத்தை எதிர்க்க ‘இந்தியா’ அணி வெல்ல வேண்டும். என்றார்.

கே.பாலகிருஷ்ணன்ன் (மார்க்சிஸ்ட்)

மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக பிரதமரும், ஒன்றிய அரசும் செயல்படுவதை சுட்டிக்காட்டிப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘இந்தியா’ கூட்டணியின் செயல்பாடுகளால் பதற்றமடைந்துள்ள ஒன்றிய பாஜக அரசு, நவம்பர் மாதம் நடத்த வேண்டிய குளிர் காலக் கூட்டத் தொடரை செப்டம்பர் மாதத்தில் நடத்துகிறது. “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை கொண்டு வந்து எதிர்க் கட்சிகளிடம் உள்ள மாநில ஆட்சிகளை பறிக்க நினைக்கிறது. அதனை அதிமுக ஆதரிக்கிறது. சனாதனம் எங்கும் பரவி நிற் கிறது” என்றார்.

“மார்க்சிய இயக்கங்கள், பெரி யாரிய, அம்பேத்கரிய இயக்கங் களின் தொடர் போராட்டத்தால் ஓரளவு சனாதனம் கட்டுப்படுத் தப்படடுள்ளது. சனாதனம் இட ஒதுக்கீடு, மாநில உரிமைகளை பறி க்கிறது. முதலாளித்துவத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. முதலாளித்துவம் சனாதனத்தை பாதுகாக்கிறது. எனவே, சனாதனத்தை கருத்தியல் ரீதியாக மட்டும் ஒழிக்க முடியாது. பொருளாதார கொள்கைகளோடும் இணைத்து நடத்த வேண் டும். அதுதான் இந்தியாவின் அனுபவமாக உள்ளது” என்றும் அவர் கூறினார்.

“வர்ணாசிரமம், சனாதனம் மக்களை ஜாதி ரீதியாக பிரித்து சொத்துடமையை பாதுகாக்கிறது. இதற்கெதிராக உழைப்பாளி மக்களை ஒன்று சேர்த்து போராடுகிறோம். ஜாதிய, சமூக ஒடுக்கு முறை, பொருளாதார சுரண்டல் ஆகியவற்றை ஒன்றிணைத்து போராட வேண்டும். பாஜகவின் பாசிச கொள்கைகளை எதிர்த்த ‘இந்தியா’ அணி வெற்றி பெற வேண்டும். மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள் செயல்படுத்த களத்தில் மார்க்சிஸ்ட் கட்சி நிற்கும்” என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.

தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்)

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மக்களவை உறுப் பினர் தொல்.திருமாவளன் பேசுகையில், “பிறப்பின் அடிப் படையில் உயர்வு தாழ்வு என்ற ஜாதிய கட்டமைப்பு நிலையானது, மாறாதது என்பதுதான் சனாதனம். உழைப்புச்சுரண்டல், அதி காரம், ஆதிக்கம், ஒடுக்கு முறை கூடாது என்கிறது கம்யூனிசம். கம்யூனிசத்திற்கு நேர் விரோதமானது சனாதனம். சனாதன கருத்தியலை பார்ப்பனர்கள் கைக்கொண்டுள்ளதால் அதை பார்ப்பனீயம் என்கி றோம்.

“இந்தியாவில் ஜாதியும் வர்க்க மும் ஒன்றோடு ஒன்றாக பின்னி பிணைந்துள்ளது. உயர் பொறுப்புகள், அதிகாரங்களை பறித்துக் கொண்டுள்ள பார்ப்பனியத்தின் மீது பிற்படுத்தப்பட்ட சமூகம் கோபப்பட வேண்டும். மாறாக, கீழ்நிலையில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களை எதிரியாக பார்க்கின்றனர். இதுதான் சனாதனத்தின் சூழ்ச்சி. பார்ப்பனியத்திற்கு எதிராக பிற்படுத்தப் பட்ட மக்கள் நகரும் போதுதான் சனாதனத்தை ஒழிக்க முடியும். காலங்காலமாக பிராமனியத்திற்கு எதிரான குரல் ஒலித்து வருகிறது. அதை இந்துத்துவா நீர்த்துப்போகச் செய்கிறது. சனா தனத்தை காப்பாற்றி வரும் பாஜக விற்கு எதிராக மக்கள் திரும்ப வேண்டும். இதனை புரிந்து கொள்வதில் உள்ள தேக்கத்தை படைப்பாளிகள் உடைக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

எஸ்.பீட்டர் அல்போன்ஸ் (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)

“சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவற்றிற்கு விரோதமான அனைத்தும் சனாதனம்தான். வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் போப்பாண்டவர், சவுதி மன்னரை கட்டிப் பிடித்து அணைத்துக்கொள்கிறார். இந்தியாவில் ஒரு சங்கராச் சாரியாரை அவரால் கட்டிப்பிடிக்க முடியுமா? அதுதான் சனாதனம்” என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார் “சனாதனத்திற்கு எதிராக பல நூற்றாண்டுகளாக போராடினாலும் ஒழிக்க முடிய வில்லை. சனாதனத்தின் வேர் அறுபடாமல் உள்ளது. சனாத னத்தை அமல்படுத்துகிறவராக பிரதமர் உள்ளார். சனாதனத்தில் அடையாளமாக உள்ள மோடியை வீழ்த்த வேண்டும். அரசியல் களத்தில் சனாதனத்தின் பிம்பங்களை, தத்துவங்களை கூறி பாஜகவை வீழ்த்த வேண்டும்.” என்றும் அவர் கூறி னார்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் குறிப்பிடுகையில், “ஜாதி, உயர்ஜாதி என் போருக்கு சொர்க்கமாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நரகமா கவும் உள்ளது. ஜாதி, மதங்களை கேள்விக்குள்ளாக்காமல் கல்லூ ரிகள், பல் கலைக் கழகங்கள் கடந்து செல்கின்றன. கல்வித்துறை யில், மாணவர்களிடத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றார். “சனாதனவாதிகளுக்கு இந்திய அரசமைப்பு சட்டம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, அதை நீர்த்துப்போகச் செய்கின்றனர். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க நினைக்கும் பாஜகவை, ‘இந்தியா’ அணி வீழ்த்தும். ஜனநாய கத்தை காக்கும் பெரும்போரில் கூட்டாக செயல்படுவோம்” என்றார்.

மதுக்கூர் ராமலிங்கம் (தமுஎகச மாநிலத் தலைவர்)

இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி பேசிய தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், “சனாதனத்திற்கு எதிராக பெரும் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இது தலைமுறை கடந்து தொடரும். பெண்ணடிமைத்தனம், ஜாதிய பாகுபாடு, மூடநம் பிக்கை, சடங்கு என்ற பெயரில் மக்கள் சுரண்டப்படுகிறார்கள். இவை யெல்லாம்தான் சனாதன கலாச்சாரம் என்றால், அதை எதிர்ப்போம்” என்றார். மநுநீதியில் கூட குற்றங்களுக்கு அனை வருக்கும் ஒரே மாதிரி தண்டனை இல்லை. ஆனால், பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள். ஒரேநாடு, ஒரேமதம் என்றெல்லாம் கூறி ஒரே தேர்தல் என்பதில் வந்து நிற்கிறார்கள். சனாதன எதிர்ப்பின் உச்ச நட்சத்திரமாக வள்ளலார் இருந்தார். “யாதும் ஊரே யாரும் கேளிர்”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க் கும்” என்பவை எல்லாம் சனாதனத்திற்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.

சனாதன எதிர்ப்பில் கலைஞர்கள்தான் எப்போதும் முன் னின்று இருக்கிறார்கள். நாடகத்தில் முருகன் வேடம் ஏற்று விஸ்வநாததாஸ் நடித்தார். அவருடன் நடிக்க பலரும் மறுத்த போது, கம்யூனிஸ்ட் தலைவர் கே.பி.ஜானகி அம்மாள்தான் சேர்ந்து நடித்தார். மீனவரான சிந்தனை சிற்பி சிங்கார வேலர் வழக்குரைஞர் ஆனதை சக வழக்குரைஞர்கள் எள்ளி நகையாடினர்.

மறுநாள், வலைக்குள் சட்டப் புத்தகங்களை கட்டிக்கொண்டு நீதிமன்றம் சென்றார். அந்த சட்டம் உனக்கு மட்டுமல்ல, எனது வலைக்கும் சிக்கும் எனக் கூறியது போன்றவற்றை அவர் நினைவுகூர்ந்தார். அரசியல், ஆன்மிகம், அறிவியல், பண்பாடு, கலை என அனைத்து தளங்களிலும் சனாதனத்திற்கு எதிரான போரை தொடர்ந்து நடத்துவோம்.

The post ’’சனாதன ஒழிப்பு மாநாட்டில் தலைவர்கள் பேசியது என்ன..?’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/feed/ 0
’ஒரே நாட்டில் ஒரே மோடியா?’ முரசொலி விளாசல்  https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2587-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2587-%25e0%25ae%25ae%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/#respond Thu, 07 Sep 2023 05:10:38 +0000 https://madrasmurasu.com/?p=6169 ’ஒரே நாட்டில் ஒரே மோடியா?’ என்று திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.  கடைசி நேரத்தில் அனைத்துத் தவறுகளையும் வரிசையாகச் செய்யத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி! இந்தியாவையே ‘பாரத்’ ஆக்க நினைப்பதும் – ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு குழு போட்டிருப்பதும் – -நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை போட்டு ஏதேதோ செய்யத் திட்டமிட்டு இருப்பதும் – – பதவிக்காலம் முடியும் நேரத்தில் அள்ளித்தெளிக்கும் அவசரக் கோலங்கள் ஆகும். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று […]

The post ’ஒரே நாட்டில் ஒரே மோடியா?’ முரசொலி விளாசல்  first appeared on Madras Murasu.

]]>
’ஒரே நாட்டில் ஒரே மோடியா?’ என்று திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது. 

கடைசி நேரத்தில் அனைத்துத் தவறுகளையும் வரிசையாகச் செய்யத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!

இந்தியாவையே ‘பாரத்’ ஆக்க நினைப்பதும் – ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு குழு போட்டிருப்பதும் – -நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை போட்டு ஏதேதோ செய்யத் திட்டமிட்டு இருப்பதும் – – பதவிக்காலம் முடியும் நேரத்தில் அள்ளித்தெளிக்கும் அவசரக் கோலங்கள் ஆகும். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் அனைத்து மாத்திரைகளையும் அள்ளிப் போடுவது ஆகும்.

ஒரே நாடு -– ஒரே தேர்தல் என்பது மோடி என்ற தனிமனிதர் நீங்கலாக அனைவருக்குமே ஆபத்தானது ஆகும். பின்னர் அவருக்கே ஆபத்தும் அதுதான். மோடியை இன்னொருவர் வீழ்த்துவதற்கும் வசதியான வாசல் ஆகும் அது. இந்த ஆபத்து தெரியாமல் தான் அதனைக் கையில் எடுத்துள்ளார்.

ஒரே நாடு -– ஒரே தேர்தல் வந்தால் தி.மு.க. ஆட்சி கலைக்கப்படுவதாகவும் -– தேர்தல் நடப்பதாகவும் –- அனைத்து பாரத அண்ணா தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டதாகவும் -– தான் முதலமைச்சர் ஆகிவிட்டதாகவும் கனவு கண்டு சிரிக்கிறார் பழனிசாமி. அவரிடம் இருக்கும் 60 தொகுதியும் பறி போய் மொத்த சட்டமன்றத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றிவிடும் என்பதே

பகல் கனவு பழனிசாமிக்கு தெரியவில்லை. 60 எம்.எல்.ஏ.க்களுடன் தானும் ஒரு தலைவராக வலம் வரும் பழனிசாமி, சொந்த தொகுதியில் தோற்று –- தரையில் ஊர்ந்து கொண்டிருப்பார் என்பதே யதார்த்தம்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் –- பா.ஜ.க. கொல்லைப் புறமாக ஆளும் மாநிலங்கள் -– எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் –- என இருக்கும் அனைத்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியும் பறி போய்விடும். இது எதையும் அறியும் சுய மூளை கூட இல்லாத ஒரு கூட்டம் தான், ஒரே நாடு – -ஒரே தேர்தல் என்பதைப் பார்த்து பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

‘இனி எனக்கு பா.ஜ.க. என்ற கட்சியும் வேண்டாம் -– ஆர்.எஸ். எஸ்ஸும் வேண்டாம் –- வி.எச்.பி.யும் வேண்டாம் -– எவரும் வேண்டாம்’ என்பதை சொல்லாமல் சொல்லப் போகிறார் நரேந்திரமோடி. அதற்காக அவர் தயார் ஆகிக் கொண்டிருக்கிறார். அவர்கள் விரலால் அவர்களையே குத்தப் போகிறார். அதற்கு தயார் ஆவதற்கான நாடகங்களும் –- ஒத்திகைகளும் தான் இவை.

பத்து ஆண்டுகளாக தான் ஒருவரே என்ற கோதாவில் செயல்பட்டு வந்தார் பிரதமர் மோடி. வெளிநாடு செல்வார். வெளியுறவுத் துறை அமைச்சரை அழைத்துச் செல்ல மாட்டார். ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவார். நிதி அமைச்சர் இருக்க மாட்டார். நாடாளுமன்றத்துக்கு வரமாட்டார். வந்தாலும் பேச மாட்டார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட மாட்டார். சொந்தக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திலேயே அவர் பேச்சை மற்றவர்கள் கேட்பார்கள். மற்றவர் பேச்சை அவர் கேட்க மாட்டார். அத்வானியும் ஜோஷியும் அடக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் தன்னை நோக்கி பிரதமர் வரும் போது மூத்த அமைச்சரான நிதின் கட்கரி முகத்தை திருப்பிக் கொண்டார்.

உலகம் முழுக்கப் போனார் பிரதமர். ஆனால் அவரை உலக நாடுகள் மத்தியில் தலைகுனிய வைத்தது அதானி விவகாரமும் மணிப்பூர் விஷமத்தனங்களும்!

இந்த ஆட்சிக்கு மிகப்பெரிய தலைகுனிவு அதானி விவகாரத்தில் வந்தது. பிரதமரின் நண்பர் என்பதால் அனைவருமே அமைதியாக இருந்தார்கள். மணிப்பூர் பற்றி எரியும் போது பிரதமர் ஏன் போகவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் போது பா.ஜ.க. உறுப்பினர்களே தலைகவிழ்ந்து உட்கார்ந்து இருந்தார்கள். அவர்களால் என்ன செய்ய முடியும்? ‘பிரதமரே செல்லுங்கள்’ என்று சொல்ல முடியுமா?

‘நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் பேசினார். அவரே வராமல் போனதை அக்கட்சி உறுப்பினர்களால் எப்படி கேட்க முடியும்?

20 ஆயிரம் கோடி போட்டு புதிய நாடாளுமன்றக் கட்டடம் எதற்காக கட்டப்பட்டது? அப்படி கட்டப்பட்ட கட்டடத்தில் எதற்காக கூட்டம் நடத்த முடியவில்லை? என்பதை எதிர்க்கட்சிகளைப் போலவே, பா.ஜ.க.

எம்.பி.கள் சிந்திக்க மாட்டார்களா?

தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்குவதும் –- அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் குறிப்பிட்ட நபர் தான் இருக்க வேண்டும் என்று அரசு சொல்வதை உச்சநீதிமன்றம் நிராகரிப்பதுமான நடத்தைகள் குழப்பமான நாட்டில் தான் நடக்கும். சீரான நிர்வாகம் நடக்கும் நாட்டில் நடைபெறவே நடைபெறாது.

தேர்தல் ஆணையத்தை அரசியல் கட்சி அலுவலகமாக மாற்றுவதும் – உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் குலைப்பதும் இந்தியாவின் அரசிய லமைப்பு சட்டத்துக்கு ஏற்படுத்தப்பட்ட கரும்புள்ளிகள் ஆகும்.

‘ஒற்றை மனிதரால் எல்லாம் மாறிவிடும் என்று நினைப்பது தவறு’ என்று திரும்பத் திரும்ப ஆர்.எஸ்.எஸ். சொல்வது யாரை நோக்கிய அம்பு?

இவை அனைத்தும் பிரதமர் நரேந்திரமோடியை சிக்கலுக்கு மேல் சிக்கலுக்கு உள்ளாக்கி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இதில் இருந்து மீள நினைத்தும் -– திசை திருப்பவும் -– புதிய வியூகம் என நினைத்து அவர் உருவாக்கும் சக்கரத்தில் அவரே சிக்கிக் கொள்ளப் போகிறார். இப்போதைக்கு இந்த படுகுழி பா.ஜ.க.வுக்குப் பிரகாசமாகத் தெரிகிறது.

The post ’ஒரே நாட்டில் ஒரே மோடியா?’ முரசொலி விளாசல்  first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/feed/ 0
’’இந்த நேரத்தில் சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை..!’’ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%25a8%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b2-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b7 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7/#respond Thu, 07 Sep 2023 04:59:49 +0000 https://madrasmurasu.com/?p=6166 ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், தான் பேசிய கருத்துகளை பா.ஜ.கவினர் திரித்து அவதூறு பரப்பி வருவது, அதற்கு கழகத்தினர் பலர் ஆங்காங்கே வழக்கு, உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து திமுக இளைஞர் அணிச் செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது: டிசம்பர் 17-ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கு […]

The post ’’இந்த நேரத்தில் சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை..!’’ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை first appeared on Madras Murasu.

]]>
‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், தான் பேசிய கருத்துகளை பா.ஜ.கவினர் திரித்து அவதூறு பரப்பி வருவது, அதற்கு கழகத்தினர் பலர் ஆங்காங்கே வழக்கு, உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து திமுக இளைஞர் அணிச் செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

டிசம்பர் 17-ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கு இளைஞர்களைத் தயார்படுத்தும் வகையில் வருவாய் மாவட்டந்தோறும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது, கழக மூத்த முன்னோடிகளுக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் பொற்கிழி வழங்குவது, மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் அரசின் நலத்திட்டப் பணிகள் குறித்து, ஆய்வுக் கூட்டத்தை நடத்துவது… இந்த மூன்று விஷயங்களை மையமாகக் கொண்டே என் சமீபகால மாவட்டச் சுற்றுப்பயணங்களை அமைத்துக்கொள்கிறேன்.

அந்த வகையில், இந்த மாதம் 4-ஆம் தேதி மதியத்துக்கு மேல் தூத்துக்குடி, 5-ஆம் தேதி தென்காசி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்ல முடிவு செய்தோம். 4-ஆம் தேதி காலை தலைமைச் செயலகத்தில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கடந்த ஆண்டு சாதனை படைத்த வீரர்-வீராங்கனையர்கள் 134 பேருக்கு உயரிய ஊக்கத்தொகையாக 2 கோடியே 24 லட்சம் ரூபாயை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்றோம்.

அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி வீரர்-வீராங்கனையர் 52 பேருக்கு உயரிய ஊக்கத் தொகையாக ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினோம். ‘தேசிய அளவில் சாதனை படைக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உயரிய ஊக்கத் தொகைகளை வழங்க வேண்டும்’ என்பது, அவர்களின் 20 ஆண்டுகாலக் கோரிக்கை. அதன் தீர்வாக, ‘சீனியர்-ஜூனியர் பிரிவுகளில் தேசிய அளவில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெறுபவர்களுக்கு முறையே தலா 5, 3, 2 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்படும்’ என்று வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு, சென்னையில் இருந்து தூத்துக்குடி பயணமானோம். தூத்துக்குடி விமான நிலையத்தில் கழகத்தினரின் வரவேற்பை பெற்றுக்கொண்டு வெளியே வரும்போது சகோதரர் ஜஸ்டின் என்னை சந்தித்து இளைஞர் அணி மாநாட்டு நிதியாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். ஜஸ்டினைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வது அவசியம். ஜஸ்டின் ஒரு மாற்றுத்திறனாளி. தன்னுடைய வாழ்க்கையைத் தானே மாற்றும் வல்லமை படைத்த ஒரு திறனாளி. அவருக்குத் தேவை ஓர் உந்துதல். அதற்காக என்னைக் காண இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்திருந்தார். அவருக்கு தூத்துக்குடி மாநகரில் பழச்சாறு விற்கும் கடையை இளைஞர் அணியின் சார்பில் அமைத்துத் தந்தோம். இன்று அவர் பிறருக்கு உதவி செய்யும் இடத்துக்கு வந்ததில் மகிழ்ந்தேன்.

விமான நிலையம் அருகிலேயே புதுக்கோட்டை நல்லமலைப் பகுதியில் அமைந்துள்ள கழக இளைஞர் அணியின் துணைச் செயலாளர் ஜோயல் அவர்களின் இல்லத்தில் கழகக் கொடியை ஏற்றிவைத்தோம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சூழ்ந்து நின்று வரவேற்றனர். அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றோம். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினோம். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் ஆய்வுக் கூட்டம்.
ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்படும் மக்கள் நலப் பணிகள், அதன் தற்போதைய நிலை… எனத் தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு துறையாகப் பார்த்து அதற்கான விளக்கங்களை அதிகாரிகளிடம் பெறுவது, என மிக விரிவாக மூன்று மணி நேரம் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் செயல்படும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தீட்டும் மக்கள் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்கள் வரை சென்று சேரவேண்டும் என்றால், இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் அவசியம்.

அதை முடித்துக்கொண்டு, `மாணிக்கம் மஹால்’ திருமண மண்டபத்தில் நடைபெற்ற கழக மூத்த முன்னோடிகளுக்கு, பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோம். இந்தப் பொற்கிழி நிகழ்ச்சி என் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. நம் கழக முன்னோடிகள் என்னைப் பார்த்ததும் கைகளைப் பிடித்துக்கொண்டு தங்களின் கழகப் பணிகள் அத்தனையையும் என்னிடம் சொல்லிவிடவேண்டும் என்ற தவிப்பு, அவர்களிடம் தெரியும். அப்படி அன்று தூத்துக்குடி வடக்கு-தெற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில், மொத்தம் 1,000 கழக முன்னோடிகளுக்குத் தலா ரூ.10 ஆயிரம் வழங்கி வாழ்த்து பெற்றோம்.

“இந்தக் கழகத்தின் அச்சாணியே நீங்கள்தான். பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியர் ஆகியோரின் மறு உருவாகத்தான் உங்களைப் பார்க்கிறேன். உங்களுக்குப் பொற்கிழி வழங்குவது என்பது எங்கள் கடமை” என்று அவர்களின் மீதான என் அன்பை உரையாகப் பேசி முடித்தேன்.

அடுத்து தூத்துக்குடியில் புதுக்கோட்டைப் பகுதியில் நடைபெற்ற இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம். பிரம்மாண்டமான ஏற்பாடு. கூட்டம் நடந்த இடத்தின் வாசலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வரவேற்றனர். “கடந்த மாதம் 20-ஆம் தேதி மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அக்கட்சியின் கொள்கை குறித்தோ, தமிழ்நாட்டின் நலன் குறித்தோ ஏதாவது பேசப்பட்டதா? விவாதிக்கப்பட்டதா? ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கான உதாரணம்தான் அந்த மாநாடு. ஆனால், நூற்றாண்டு வரலாறு கொண்ட ஒரு இயக்கத்தின் இளைஞர் அணி நடத்தக்கூடிய நம் மாநாடு, ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும், எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்க வேண்டும். அதற்கு உங்களின் வருகையை உறுதி செய்வது அவசியம்” என்று உரையாற்றி அவர்களை மாநாட்டுக்கு அழைத்தேன்.

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்ததுடன் மாநாட்டுக்கு நிதியும் வழங்கிய மாண்புமிகு அமைச்சர்கள் அக்கா கீதாஜீவன், அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் துணைச் செயலாளர்கள் ஜோயல், இன்பா ரகு-வுக்கும், நிதியளித்த மாவட்ட இளைஞர் அணியினருக்கும் என் அன்பும் வாழ்த்தும்.

மறுநாள், தென்காசி மாவட்ட நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்துச் செல்ல மாண்புமிகு அமைச்சர்கள் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களும் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களும் தூத்துக்குடி வந்திருந்தனர். இரவு 10.30 மணி ஆனபோதும் ஆலங்குளத்தில் ஆயிரக்கணக்கானோருடன் காத்திருந்து, என்னை வரவேற்ற தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அண்ணன் ஜெயபாலன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்த நாள் 5-ம் தேதி காலை தென்காசி மாவட்டத் தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டோம். நோயாளிகளைக் கனிவுடன் நடத்தி, அவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதையும், மருத்துவமனையைச் சுகாதாரமாகப் பராமரிப்பதையும் உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தினோம்.

அதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினோம். அதன்பிறகு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். கூட்டத்தின் நிறைவாக, “மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான இந்தத் திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பலன்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்துக்குள் மக்களுக்குச் சென்று சேரும் வகையில் உழைத்து, இந்த அரசுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து, அரசுக்கு நற்பெயரை பெற்றுத்தரவேண்டும்” என்று அரசு அலுவலர்களைக் கேட்டுக்கொண்டேன்.

அதைத்தொடர்ந்து, சிவந்தி நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தென்காசி தெற்கு மாவட்டக் கழகத்துக்கான அலுவலக வாசலில் அமைக்கப்பட்டுள்ள கழகக் கொடியை ஏற்றிவைத்து மகிழ்ந்தேன். மதிய உணவுக்குப் பிறகு, தென்காசி, `இசக்கி மஹால்’வளாகத்தில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி. தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டக் கழகங்களில் உள்ள முன்னோடிகளில் ஆயிரத்து 500 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பொற்கிழியாக வழங்கி மகிழ்ந்தோம். இதுவரை தமிழ்நாடு முழுவதும் கழக முன்னோடிகளுக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் 40 கோடி ரூபாய்க்கும் மேல் பொற்கிழியாக வழங்கப்பட்டுள்ளதைத் தெரிவித்து, இளைஞர் அணி அறக்கட்டளை சார்பிலும் உதவக் காத்திருக்கிறோம். கோரிக்கைகளை அன்பகத்துக்கு அனுப்பலாம் என்பதையும் சொல்லி விடைபெற்றோம்.

அடுத்து இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம். திரும்பிய திசையெங்கும் எழுச்சி என்று சொல்லும் அளவுக்குக் கட்டுக்கடங்காத இளைஞர்கள் கூட்டம். “9 ஆண்டுகளாக நாங்கள் இதெல்லாம் சாதனைகளைச் செய்துள்ளோம் என்று சொல்வதற்குக்கூட எதுவும் செய்யாத ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசு, சனாதன ஒழிப்பு மாநாட்டில் நான் பேசியதைத் திரித்து அரசியல் செய்கிறது. 28 எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்குப் பயந்து நாட்டின் பெயரையே ‘பாரத்’ என்று மாற்றி, தான் செய்த ஊழலையும், மணிப்பூரில் செய்த இனக்கலவரத்தையும் மறைக்க முயலும் ஒன்றிய பா.ஜ.க.வையும், மோடியையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓடஓட விரட்ட வேண்டும். அதற்கான முதல் படியாக நம் இளைஞர் அணி மாநில மாநாடு அமையவேண்டும். அதற்கு, உங்கள் ஒவ்வொருவரின் வருகையும் அவசியம்” என்பதை எடுத்துரைத்து உரையாற்றினேன்.

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த மாவட்டச் செயலாளர் சகோதரர் ராஜா, மாவட்டப் பொறுப்பாளர் அண்ணன் ஜெயபாலன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இளைஞர் அணி துணைச் செயலாளர் சகோதரர் ஜி.பி.ராஜா, கூட்டத்துக்கு இளைஞர்களைத் திரட்டி, நிதி வழங்கிய மாவட்ட அமைப்பாளர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும். மாவட்ட ஆய்வுப் பணிகளை ஒருங்கிணைத்த சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் செயலாளர் மருத்துவர் தாரேஷ் அகமது ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் நன்றி.

தூத்துக்குடி, தென்காசியையும் சேர்த்து, இதுவரை 23 மாவட்டக் கழகங்களுக்கான இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம். தென்காசியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதுரைக்கு வந்து, விமானம் மூலம் நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்தோம்.

அடுத்தடுத்த சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும். இந்த நேரத்தில் கழகத்தினருக்கும், இளைஞர் அணி நிர்வாகிகளுக்கும் ஒரு வேண்டுகோள். கழக நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது, சால்வை – பொன்னாடை அணிவிப்பதை அறவே தவிர்க்கவும். இவற்றுக்குப் பதிலாக புத்தகங்களையோ, கழகத்தின் கருப்பு-சிவப்பு கரை வேட்டிகளையோ, இளைஞர் அணி வளர்ச்சி நிதியோ தாருங்கள். அவை மற்றவர்களுக்குப் பயன்படும்.

இந்த நேரத்தில் சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்’கடந்த 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்.

‘கடந்த 9 ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறீர்களே. எங்களின் நலனுக்காகச் செய்த திட்டங்கள் என்ன’ என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுதபாணியாக நிற்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசைக் கேள்வி கேட்க தொடங்கியுள்ள நிலையில், த.மு.எ.க.ச மாநாட்டில் நான் பேசிய பேச்சை, ‘இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்’ என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அமித்ஷா போன்ற ஒன்றிய அரசின் அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் என யார்யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
நியாயமாகப் பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்துகொண்டு அவதூறு பரப்பும் இவர்கள் மீது நான்தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத் தொடுக்க வேண்டும். ஆனால், இவர்களுக்குப் பிழைப்பே இதுதான், இதைவிட்டால், பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால், ‘பிழைத்துப் போகட்டும்’ என்று விட்டுவிட்டேன்.

தந்தை பெரியாரிடம் இருந்து வந்த பேரறிஞர் அண்ணாவால் நிறுவப்பட்ட தி.மு.கழகத்தின் இரண்டு கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரி இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.
மதங்களைப் பற்றி அண்ணா அவர்கள் கூறியது இன்றும் பொருத்தமாக இருப்பதால் அதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “எப்போது ஒரு மதம் மக்களை சமத்துவத்தை நோக்கி வழிநடத்துகிறதோ, அவர்களுக்கு சகோதரத்துவத்தை கற்பிக்கிறதோ, அப்போது நானும் ஆன்மிகவாதிதான். எப்போது ஒரு மதம் சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறதோ, அவர்களுக்கு தீண்டாமையையும் அடிமைத்தனத்தையும் கற்பிக்கிறதோ, அப்போது அந்த மதத்தை எதிர்த்து நிற்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்” என்றார் அண்ணா.
`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.

ஆனால், இவை எதையும் புரிந்துகொள்ள விரும்பாமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட் கோவை பார்க்கும்போது ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது. ‘சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா’ என திரைப்பட நடிகர் அண்ணன் வடிவேலு அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்திடம் போட்டி போடும் அளவுக்கு மோடி அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார். இடையிடையே பணத்தை மதிப்பிழக்கச் செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது, அங்கு செங்கோல் நடுவது, நாட்டின் பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில் நின்றபடி வெள்ளைக்கொடிக்கு வேலை வைப்பது… என வடிவேலு அண்ணனின் `23-ஆம் புலிகேசி’ கதாபாத்திரத்தோடு போட்டிபோட்டு நகைச்சுவை செய்துகொண்டுள்ளார்.

திரையில் வடிவேலு அண்ணனை ரசிக்க முடிந்தது. நிஜத்தில் இவர்களை… மக்களின் வாக்குகளைப் பெற எந்தளவுக்கும் சென்று, இவர்கள் நாடக அரசியலைச் செய்வார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

நான் இதை நகைச்சுவைக்காக மட்டும் சொல்லவில்லை, ஏழை எளிய மக்களின் வாழ்வை உயர்த்தும் ‘புதுமைப்பெண்’ திட்டம் போன்றோ, முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் போன்றோ, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்றோ ஏதாவது ஒரு முற்போக்குத் திட்டம் கடந்த 9 ஆண்டுகால ஒன்றிய அரசிடம் இருந்து வந்திருக்கிறதா? மதுரை எய்ம்ஸை கட்டினார்களா? கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் போன்று ஏதாவது அறிவியக்கத்தை முன்னெடுத்தார்களா?
‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை-கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

‘என்ன வாய் மட்டும் வேலை செய்யுது’ என்பது போல, மீடியாவை சந்திப்பது மட்டுமே மக்கள் பணி என நினைக்கும் சிலர் நான் பேசாததைப் பேசியதாகத் திரிக்கும் அவதூறுகளை வைத்து, வாயை வாடகைக்கு விட்டுப் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களின் பிழைப்பில் நான் மண் அள்ளிப்போட விரும்பவில்லை, பிழைத்துப்போகட்டும்.

நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா காலத்தில் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நலத்திட்ட உதவியாக வழங்க வீடு வீடாக ஏறிக்கொண்டிருந்தோமே அப்போது அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் என்ன செய்தன? மணி அடித்தபடியும், விளக்கு பிடித்தபடியும் கொரோனா கிருமியை ஒழிக்கப் போராடிக் கொண்டு இருந்தன.

இன்று நாம் ஆளுங்கட்சி. இன்றும் நாம் கலைஞரின் நூற்றாண்டை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாட, நலத்திட்ட உதவிகளை வழங்க வீடு வீடாக ஏறி இறங்கிக்கொண்டு இருக்கிறோம். அ.தி.மு.க.வோ ஆடலும் பாடலும் பின்னணியில், புளி சாத மாநாடுகளை நடத்திக்கொண்டு, விழுவதற்குக் கால்கள் கிடைக்காதா, ஊர்ந்து போக ஏதாவது ஃபர்னிச்சர் கிடைக்காதா எனத் தேடிக் கொண்டிருக்கிறது.
ஒன்றிய பிரதமர் மோடியோ கொரோனா நிதியாகத் திரட்டிய ‘பி.எம். கேர்ஸ்’க்கு கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றபடி, 7.5 லட்சம் கோடி ரூபாய் என்ன ஆனது என்ற சி.ஏ.ஜி. கேள்விக்குப் பதிலளிக்காமல், ஊரில் இருந்தால், மணிப்பூர் பற்றிக் கேள்வி கேட்பார்களே என்று பயந்து நண்பர் அதானியை அழைத்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு இருக்கிறார். உண்மையைச் சொல்வது என்றால், மக்களின் அறியாமைதான் இவர்களின் நாடக அரசியலுக்கான மூலதனம்.

மணிப்பூர் கலவரத்தைத் தூண்டிவிட்டு 250-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்தது, 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல்… போன்றவற்றைத் திசை திருப்பத்தான் மோடி அண்ட் கோ இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது. இவர்களின் கைகளில் தான் மொத்தமாக சிக்கியுள்ளதால், ‘ஒரே நாடு ஒரே தேர்தலா… நடத்திடுவோம் எஜமான்’, ‘பாரதம்னு மாத்துறீங்களா… மாத்திடுங்க ஓனர்’ என்று மோடியின் நாடகத்தையே இங்கே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.
சாமியார்களுக்குத்தான் இந்தக் காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு சாமியார் இடையில் புகுந்து என் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். என் தலையைவிட ‘முற்றும் துறந்தவரிடம் எப்படி 10 கோடி’ என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. தவிர பலர் என் மீது நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களிலும், மாண்பமை நீதிமன்றங்களிலும் புகார் அளித்து வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ‘கொலை மிரட்டல் விடுத்த அந்தச் சாமியாரை கைது செய்ய வேண்டும்’ என்று கோரி நம் கழகத்தினர் தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருவதாகவும், அந்தச் சாமியாரின் உருவ பொம்மையை எரிப்பது, அவரின் படத்தைக் கொளுத்துவது, கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது.
நாம் பிறருக்கு நாகரிகம் கற்றுத் தருபவர்கள். நம் தலைவர்கள் நம்மை அப்படித்தான் வளர்த்தெடுத்துள்ளனர். எனவே, அதுபோன்ற காரியங்களை நம் இயக்கத் தோழர்கள் அறவே தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தவிர, நமக்கு இயக்கப் பணி, மக்கள் பணி என எண்ணிலடங்கா பணிகள் காத்திருக்கின்றன.
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு அரசின் சார்பிலும், கழகத்தின் சார்பிலும் பல பணிகளை நம் மாண்புமிகு முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கான பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள்… என ஏராளமான பணிகள் நமக்கு முன் உள்ளன.

இவ்வளவு வேலைகள் இருக்கும்போது சாமியாரின் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது.. போன்ற, நேரத்தை வீணடிக்கக்கூடிய பணிகளில் நம் கழகத்தினர் எவரும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை, கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலும், தலைமைக் கழகத்தின் ஆலோசனையைப் பெற்று சட்டத்துறையின் உதவியுடன் சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பகிர்ந்த தோழமை கட்சியின் தலைவர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ‘சனாதன தர்மம்’ எதை வலியுறுத்துகிறது, அதில் அப்படி என்னதான் சொல்லப்பட்டுள்ளது’ என்பதை நாடு தழுவிய அளவில் ஒரு பேசுபொருளாக மாற்ற காரணமாக அமைந்த ‘சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு’ம், அதை ஒருங்கிணைத்த த.மு.எ.க.ச தோழர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அம்மாநாட்டுக்கு நான் செல்ல காரணமாக இருந்த அண்ணன் ‘புதுகை பூபாளம்’ பிரகதீஸ்வரன் அவர்களுக்கு என் அன்பு.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் புகழ் ஓங்கட்டும். தொடர்ந்து அவர்களின் கொள்கை வழியில் நடக்க உறுதியேற்போம்.

நன்றி, வணக்கம்.
உங்கள்
உதயநிதி

The post ’’இந்த நேரத்தில் சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை..!’’ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7/feed/ 0